Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வு நேற்று சனிக்கிழமை கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர். ஜனாதிபதியினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யும் இந்த இப்தார் நிகழ்வு முதற் தடவையாக இந்த வருடம் கண்டியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்:நளின் ஹேவபத்திரன) http://tamil.dailymirror.lk/--main/77571-2013-08-04-06-41-25.html

  2. இராணுவத் தளபதிகள் வரிசையில் இருந்து தூக்கப்பட்டார் பொன்சேகா – ஒளிப்பட ஆதாரங்கள் [ ஞாயிற்றுக்கிழமை, 04 ஓகஸ்ட் 2013, 01:57 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சிறிலங்கா இராணுவத் தளபதிகள் வரிசையில் இருந்தே சரத் பொன்சேகா நீக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதிகளின் ஒளிப்பட வரிசையில் இருந்து சரத் பொன்சேகாவின் படம் நீக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை சிறிலங்கா இராணுவத்தின் 20வது தளபதியாகப் பொறுப்பேற்ற லெப்.ஜெனரல் தயா ரத்னாயக்க, பதவியை விட்டு விலகிச்சென்ற இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவின் ஒளிப்படத்தை திறந்து வைத்தார். ஆனால், அதற்கு முன்னால் இருக்க வேண்டிய, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் படம் …

  3. (மட்டக்களப்பு,ஆகஸ்ட்-4) சிலை உடைப்பை கண்டித்தும் குற்றவாளிகள் கைது செய்யடாததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு பேரணியொன்று, மட்டக்களப்பு குருக்கள்மடம் மாங்காடு பிரதேசத்தில் இன்று காலை நடைபெற்றது. மாங்காடு மாணிக்கம்பிள்ளையார் ஆலயத்திலிருந்து பூசை வழிபாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட குறித்த பேரணி, மூன்று கிலோ மீட்டர் தூரத்திலுள்ள குருக்கள்மடம் ஐயனார் ஆலயம் வரை இடம்பெற்றது. கோவில்கள் உடைக்கப்பட்டமை, கோவில் உடைமைகள் கொள்ளையிடப்பட்டமை ஆகியன தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பவற்றை கண்டித்தே குறித்த கவனயீர்ப்புப் பேரணி இடம்பெற்றது. http://www.radarnews.com

  4. வன்னிப் பெண் சமூக செயற்பாட்டாளருக்கு ஆசிய சமாதான விருது [ சனிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2013, 02:31 GMT ] [ தா.அருணாசலம் ] வன்னியைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாடாளருக்கு ஆசியாவில் மதிப்பு மிக்க அமைதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமிய மட்ட சமூகத்தின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்காக பணியாற்றியுள்ளதற்காகவே தவச்சிறி சாள்ஸ் விஜயரட்ணம் என்ற பெண் ‘என் சமாதான விருது‘க்கு (N Peace Award) தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவருடன் ஆப்கானிஸ்தான், நேபாளம், பிலிப்பைன்ஸ், கிழக்கு திமோர், இந்தானேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மேலும் ஐந்து பெண்கள் இந்த ஆண்டுக்கான சமாதான விருதைப் பெறுகின்றனர். பெண்களின் தலைமைத்துவத்தைக் கௌரவிக்கும் வகையில், இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. தவச்சி…

  5. விடுதலைப்புலிகளையும், தமிழர்களையும் அழித்தது அல்லாதான் என்றால் பொதுபலசேனா போன்ற சிங்கள இனவாத அமைப்புக்களை அல்லாதான் உருவாக்கினாரா என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாருக் விடுதலைப்புலிகளை அல்லாவே அழித்தார் என கடந்த 26ம் திகதி பாராளுமன்றத்தில் பேசியது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில் விடுதலைப்புலிகளை அல்லாவே அழித்தார் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாருக் அவர்கள் கூறியிருப்பது அவமானமாகவுள்ளது. ஏனெனில் விடுதலைப்புலிகள் யார் அவர்கள் எந்த இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதை …

  6. வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தைமலை முருகனாலய வளாகத்தில் உள்ள அறிவித்தல்பலகையில் தமிழ் படும்பாட்டையறிந்து தமிழ் மக்கள் மனம் வருந்துகின்றனர். ஒரு சிங்களப் பிரதேசத்தில் அப்படி நடந்திருந்தால் ஓரளவாவது சில காரணங்களைக்கூறி தப்பிக்கலாம். ஆனால் முழுக்கமுழுக்க இது தமிழர் பிரதேசம் . ஆலய நிருவாகம் தமிழருடையது. அப்படிப்பட்ட உகந்தையில் இப்படியும் ஒரு தமிழ் அறிவித்தலா? பாவிப்போம் எப்படி பவிப்போம் ஆனது ? திருத்துவார்களா? திருந்துவார்களா? http://www.thinakkathir.com/?p=51566#sthash.JzCsN8kJ.dpuf

  7. மாகாணசபைத் தேர்தலுக்காக பாரியளவில் செலவு 04 ஆகஸ்ட் 2013 இம்முறை மாகாணசபைத் தேர்தலுக்காக பாரியளவில் செலவிட வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தலுக்காக ஆயிரத்து ஐநூறு மில்லியன் ரூபா செலவிடப்பட உள்ளதாக தேர்தல் செயலகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதற்கு மேலதிகமாக வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்துவதற்கு மேலும் 20 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறவுள்ள தேர்தல்களை கண்காணிப்பதற்கு 11 சர்வதேச கண்காணிப்பாளர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஏ.எல்.ரட்நாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச கண்காணிப்பாளர்களாக யாரை நியமிப்பது என்பது குறித்து எதிர்வரு…

  8. பிரித்தானியாவில் வசிக்கும் தவராஜா அரச துணைக்குழு EPDP இன் முதன்மை வேட்பாளர் : காணொளி வட மாகாண சபை என்ற இலங்கை அரசின் கண்துடைப்புத் தேர்தலில் இலங்கை இனப்படுகொலை அரசின் துணைக்குழுவான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முதன்மை வேட்பாளராக பிரித்தானியாவில் வசிக்கும் தவராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ர 13 வது திருத்தச்சட்டத்தை அமுலாக்கவும், வட மாகாண சபைக்கு அங்கீகாரம் கோரும் விக்னேஸ்வரன் என்ற கொழும்பு வாழ் தமிழரும் மறுபுறத்தில் பிரித்தானியா வாழ் தவராஜாவும் தேர்தல் நாடகத்தில் பங்குபற்றுகின்றனர். தவராஜா நேரடியாக இலங்கை அரசின் அடியாளாக தேர்தலில் போட்டியிடுகிறார். அதே வேளை வடக்குக் கிழக்கு இணைப்புக் குறித்தும், இலங்கை அரசின் இனச்சுத்திகரிப்புகு…

  9. நவனீதம்பிள்ளைக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் 04 ஆகஸ்ட் 2013 இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த மாத இறுதியில் நவனீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். நவனீதம்பிள்ளையின் விஜயம் தொடர்பிலான இணைப்புப் பணிகளை ஐக்கிய நாடுகள் அமைப்பும், இலங்கை வெளிவிவகார அமைச்சும் இணைந்து மேற்கொள்ளும என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார். சந்திக்கும் தரப்பினர் தொடர்பிலோ அல்லது விஜயம் செய்யும் இடங்கள் தொடர்பிலோ கட்டுப்பாடுகள் விதிக்கப்பட மாட்டாது என குறிப்பிடப்படுகிறது. இதேவேளை, அரச…

  10. சிலை உடைப்பை கண்டித்தும் குற்றவாளிகள் கைது செய்யடாததற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு பேரணியொன்று மட்டக்களப்பு குருக்கள்மடம் மாங்காடு பிரதேசத்தில் இன்று காலை நடைபெற்றது. மாங்காடு மாணிகம்பிள்ளையார் ஆலயத்திலிருந்து பூசை வழிபாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட குறித்த பேரணி மூன்று கிலோ மீற்றர் தூரத்திலுள்ள குருக்கள்மடம் ஐயனார் ஆலயம் வரை இடம்பெற்றது. கோவில்கள் உடைக்கப்பட்டமை, கோவில் உடைமைகள் கொள்ளையிடப்பட்டமை ஆகியன தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பவற்றை கண்டித்தே குறித்த கவனயீர்ப்புப் பேரணி இடம்பெற்றது. "யாரிடம் நோவோம் யார்க்கெடுத்துரைப்போம்" எனும் தொனிப்பொருளில் …

  11. இருள் நிறைந்திருக்கும் பாதையின் ஒளிவீச்சு - ச.ச.முத்து Aug 4, 2013 ஆகஸ்ட் 4, 1987..முன்னறிவித்தல் ஒன்றுடன் அவர் மக்கள்முன் தோன்றியது அன்றுதான்.அதுவும் மிகமுக்கியமான ஒரு காலகட்டத்தில்.தமிழீழத்தின் ஒரு முக்கியபகுதியும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததுமான வடமராச்சி மீது சற்றுமுன் சில வாரங்களுக்குமுன்னர் தான் சிங்களமுப்படைகளும் பாரிய ஒரு இராணுவநடவடிக்கையை நடாத்தி பலபகுதிகளை கைப்பற்றி இருந்தன. பல ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். இது எல்லாவற்றையும்விட இராணுவ நடவடிக்கையில் வெற்றிபெற்றுவிட்டோம் என்று சிங்களபேரினவாதம் நினைத்துக்கொண்டிருந்த பொழுதில் தான் தமிழர்களின் வரலாற்றில் முதன்முறையான தற்கொடைத்தாக்குதல் மில்லரால் நிகழ்த்தப்பட்டு சிங்களபடைகள் முடங்கிகிடந…

  12. மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடைமழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. மேலும் குடியிறுப்புகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நுவரெலியா, கண்டி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் அடைமழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது. இதன் காரணமாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியிலேயே தோட்டங்களில் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் நீரோந்தும் பகுதிகளில் அடைமழை பெய்து வருவதால் காசல்ரீ, மவுசாகலை, கெனியன் போன்ற நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகின்றது. இதனால் மக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டப்பட்டுள்ளனர். http://www.sankathi24.com/news/32059/64//d,fullart.aspx

  13. மாகாணசபை இனப்பிரச்சினைக்குத் தீர்வாகாது ; தமிழர்களின் இறையாண்மைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து போராடும் என்று தமிழ்லீடர் இணையத்தளத்துக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் சிறிதரன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு வருகைதந்த யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், வட மாகாண சபைத் தேர்தலின் வெற்றிவாய்ப்பு, விக்கினேஸ்வரன் தெரிவு, தமிழர்களின் இறையாண்மை, கூட்டமைப்பின் ஒற்றுமை, தமிழ்த்தேசியமக்கள் முன்னணி போன்றவைகளுடன் இன்னும் பலவிடயங்கள் தொடர்பாக தமிழ்லீடரிடம் மனம் திறந்தார். அவர் தமிழ்லீடர் இணையத்திற்கு வழங்கிய முழுமையான நேர்காணல். ஒளிப்பதிவு: கே.எஸ்.கண்ணன் http://tamilleader.com/?p=17218

  14. 77 வீடுகளும், 25 ஏக்கர் காணியும் 18 ஆண்டு ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை [ சனிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2013, 06:57 GMT ] [ யாழ்ப்பாணச் செய்தியாளர் ] யாழ்ப்பாணத்தில் வலிகாமம் பிரதேசத்தில், கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக சிறிலங்காப் படையினரின் பயன்பாட்டில் இருந்து வந்த 77 வீடுகளும், 25 ஏக்கர் காணியும், நேற்று உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன. வலிகாமம் பிரதேசத்தில் அமைந்திருந்த 13 சிறிலங்காப் படை முகாம்களை மூடிவிட்டு, அங்குள்ள படையினரை பலாலிப் பெருந்தளப் பிரதேசத்துக்கு இடம்மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதையடுத்தே, இந்த வீடுகளும் காணிகளும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அச்செழு, ஊரெழு, கொழும்புத்துறை, அரியாலை, அச்சுவேலி போன்ற பகுதிகளில் அமைந்திருந்த காணிகள…

    • 3 replies
    • 283 views
  15. கம்பஹா மாவட்டத்தின் வெலிவெரிய பிரதேசத்தில் குடிநீர் கோரி மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது இராணுவம் நடத்திய மிலேச்சத்தனமான துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களில் மற்றுமொருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கொழும்பு வைத்தியசாலைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. - தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=26300

    • 1 reply
    • 538 views
  16. யாழ்ப்பாணத்தில் சீட்டுப் பணத்தை செலுத்த முடியாமல் எட்டு பிள்ளைகளின் தாய் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதுமலை பகுதியிலுள்ள எட்டு பிள்ளைகளின் தாயான பெண்ணொருவரே இவ்வாறு நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.வீட்டுக்குச் சென்ற சீட்டுக்காரரின் அவமான பேச்சைத் தாங்க முடியாமல் இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது. இவரது சடலம் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் சீட்டு மீற்றர் வட்டி காசோலை மோசடி போன்ற செயற்பாடுகளால் அதிகளவான தற்கொலைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.sankathi24.com/news/32038/64//d,fullart.aspx

  17. மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட சன்னார் கிராமத்தில் உள்ள தமிழ் மக்கள் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக அந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நாட்டில் இடம் பெற்ற யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் கடந்த 4 வருடங்களுக்கு முன் சன்னார் கிராமத்தில் மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர்.அப்போது சன்னார் கிராமத்தில் 150 தமிழ் குடும்பங்கள் மாத்திரமே மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர். இந்த மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க எந்த அரச நிறுவனங்களும் முன்வரவில்லை.இந்த நிலையில் தனியார் நிறுவனங்கள் அவசர தேவைகளை பூர்த்தி செய்து கொடுத்தனர். குறித்த சன்னார் கிராமத்தில் கடந்த 4 …

  18. தந்தை செல்வா வழியில் சாத்வீகப் போராட்டத்தினை ஆரம்பிக்க வேண்டிவரும் என ஹகீம் பேசியுள்ளார். ஆனால் தந்தை செல்வா ஒருபோதும் அரசுடன் ஒட்டுண்ணியாக இருக்கவில்லையே ஹகீம், பதவி பணம் எல்லாமே வேண்டும் கூடவே தந்தை செல்வா போல போராடவேண்டும் என்றால் எப்படி சாத்தியம்? நேற்று மாலை முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெற்ற ரஹூப் ஹக்கீம் தந்தை செல்வா பற்றி ஆற்றிய நினைவு கூரல் நிகழ்வில் தந்தை செல்வா போல் போராடவேண்டிவரும் எனக் கூறியுள்ளார். குறிப்பிட்ட சில இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவத்தை அடக்க முடியாது விட்டாலும் அது பற்றி கண்டிக்கவும் முடியவில்லை. இந்தச் சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இருக்கும் அச்ச உணர்வை அரசுக்கெதிராக பிரயோகிக்க முயற்ச…

  19. இழந்த உயிர்களைத்தவிர எல்லாவற்றையும் தருவேன் என தேவவாக்கு சொல்லும் மஹிந்த ராஜபக்ஸ, தமிழர்களுக்கான தீர்வு திட்டத்தை முன்வைக்க தயங்குவது ஏன்? - சண் மாஸ்டர் [saturday, 2013-08-03 09:55:08] வட பகுதிக்கு விஜயம் செய்யும் போது, வடக்கு மக்களிடம் "இழந்த உயிர்களைத்தவிர மற்ற எல்லாம், எல்லாம் தருவேன்" என திருவாய் மலர்ந்தருளி தேவவாக்கு சொல்லும் ஒரு தேவமகனாக தன்னைக்காட்டிக்கொள்ள முனையும் மஹிந்த ராஜபக்ஸ தமிழர்களுக்கான தீர்வு திட்டத்தை முன்வைக்க தயங்குவது ஏன்? என மனித உரிமை ஆர்வலர் சண் மாஸ்டர் கேள்வி எழுப்பியுள்ளார். யுத்தம் முடிந்து உடுத்த உடைகளுடன் அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்த தமிழ் மக்களுக்கு மஹிந்த ராஜபக்ஸவால் சொல்லப்பட்ட முதல் செய்தி தமிழர்களுக்கான தீர்வை தருவேன்…

  20. வடமாகாண தேர்தலுக்கா படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த வீடுகளை தான் முயற்சி செய்து விடுவித்து மக்களிடம் கையளிக்கும் நடகத்தினை நடத்திவருகின்றார். டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பயனாக வலி.கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் படைத்தரப்பினர் வசமிருந்த ஒருதொகுதி வீடுகளும் காணிகளும் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக யாழில் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றது. இது உண்மைதான் என்றால் ஏன் இவ்வளவு காலமும் செய்யாத வேலையினை டக்களஸ் தற்போது மேற்கொண்டுள்ளார்?வடமாகாண தேர்தலினை இலக்காக கொண்டு இந்த நாடகமாடும் நடவடிக்கையில் அரச ஆதரவு கட்சிகளின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து முற்றுமுழுதாக படையினர் வெளியேறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை ஏன் என்றா…

    • 3 replies
    • 518 views
  21. தமிழகத்தில் உள்ள அணைத்து மதுக்கடைகளை மூடக்கோரி சென்னை சூளைமேட்டில் உள்ள மதுக்கடை முன்னால் தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக இலயோலா கல்லூரி மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதனை அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து அவர்களை கைது செய்து சூளைமேட்டில் உள்ள சமுதாய கூடத்தில் அடைத்து வைத்து பின்னர் விடுதலை செய்தனர். Read More Photo's http://goldtamil.com/?p=3435

  22. யாழில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த 112 இடங்கள் விடுவிப்பு! [saturday, 2013-08-03 08:46:22] யாழ் மாவட்டத்தில் யுத்தத்திற்குப் பின்னரான காலத்தில் இராணுவத்தின் பயன்பாட்டிலிருந்த இடங்களில் 112 இடங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ் பாதுகாப்பு படைத்தலைமையம் அறிவித்துள்ளது. யுத்தத்திற்கு முந்திய காலத்தில்; 43 ஆயிரம் படையினர் யாழ் மாவட்டத்தில நிலைகொண்டிருந்தனர் இவர்கள் யாழ் மாவட்டத்தில் 188 இடங்களில் இருந்தனர். இதில் 112 இடங்களில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளதாகவும் இன்னும் 76 இடங்களில் மட்டுமே இராணுவத்தினர் உள்ளனர் என்று பாதுகாப்பு படைத்தலையகம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு படைத்தலையகம் அமைச்சர் டக்ளஸ் தேவாந்தாவிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட தகவல் …

    • 0 replies
    • 592 views
  23. -எஸ்.கே.பிரசாத் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேட்சைக் குழுவின் வேட்பாளர் ஒருவர் யாழ்.சுன்னாகத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுயேட்சைக் குழுவில் போட்டியிடும் இராமச்சந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக இன்று சனிக்கிழமை கலை மீட்கப்பட்டுள்ளார். சுன்னாகம், ஸ்டேசன் வீதியில் சிறிய கோயில் ஒன்றில் இருந்தே இவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/77487-2013-08-03-07-15-08.html

  24. தனியார் காணிகள் மற்றும் வீடுகளிலிருந்தும் இராணுவத்தினர் விரைவில் வெளியேறுவார்கள் என்று யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். யாழ். அரியாலையில் இடம்பெற்ற இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், பல வருடங்களுக்குப் பின்னர் இந்த வீடுகளை பொது மக்களிடம் கையளிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம். இது அரசியல் நோக்கத்திற்காக நாங்கள் மேற்கொள்ளவில்லை. யுத்தத்திற்குப் பிந்திய காலத்தில் யாழ். நகரில் முக்கிய இடங்களில் இருந்த இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறி அந்த இடங்களை பொதுமக்களிட…

    • 1 reply
    • 376 views
  25. ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. அடக்குமுறைகள் எதுவுமின்றி சுதந்திரமான முறையில் தங்களது கடமைகளை மேற்கொள்ள ஊடகவியலாளர்களுக்கு அனுமதியளிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் மார்டீன் நெசர்கீயிடம் இன்னர் சிற்றி பிரஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஊடக சுதந்திரம் தொடர்பில் பாரியளவில் சர்ச்சைகள் நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார். ஊடக சுதந்திரம் மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெலிவேரிய தாக்குதல் சம்பவம் குறித்து தற்போதைக்கு எதுவும் குறிப்பிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். …

    • 1 reply
    • 324 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.