ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
முதல் தொகுதி புகலிடக் கோரிக்கையாளர்கள் மனுஸ் தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் பபுவா நியூகினித் தீவுகளுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் இவ்வாறு புகலிடக் கோரிக்கையாளர்கள் மனுஸ் தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=24939
-
- 0 replies
- 334 views
-
-
ஆசிரியை ஒருவரை முழந்தாழிட வைத்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வட மேல் மாகாண சபையின் முன்னாள் ஆளும் கட்சி உறுப்பினர் ஆனந்த சரத்குமாரவிற்கு இந்த ஆண்டு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. தொடர்ந்து வாசிக்க.. http://tamilworldtoday.com/?p=24949
-
- 0 replies
- 305 views
-
-
விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டருக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வேட்பு மனு வழங்க வேண்டாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழுத்தம் கொடுத்துள்ளதாக அந்தக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன... தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=24943
-
- 0 replies
- 597 views
-
-
கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட்டு இன்று (29) முற்பகல் 9.30 அளவில் முற்றுகைப் போராட்டமொன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=24923
-
- 0 replies
- 377 views
-
-
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று தரையிறக்கப்படும் போது கடந்த வாரம் சேதமடைந்தமை குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச விமான தளத்தில் கடந்த வாரம் தரையிறக்கப்பட்ட விமான பாதிப்புக்குள்ளானதாக பொது விமான போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் ரொஹான் தலுவத்த தெரிவித்தார். விமானியின் பிழையான செயற்பாடே விபத்துக்கான காரணம் என்று ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். தரையிறக்கப்பட்ட தருணத்தில் சேதம் ஏற்பட்ட விதம் தொடர்பான கணிப்புகளை பிரான்ஸ் மற்றும் சிங்கப்பூருக்கு மேலதிக கணிப்பீட்டுக்காக அனுப்பியுள்ளாதாகவும் தலுவத்த தெரிவித்தார். இதேவேளை, அபுதாபியிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை புறப்பட்ட ஸ்ரீலங்கன் …
-
- 3 replies
- 658 views
-
-
பலத்த இழுபறியின் பின்னர் ஒருவாறு வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்த இலங்கை அரசாங்கம் முன்வந்திருக்கிறது. கூடவே முதலமைச்சர் வேட்பாளரையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்து விட்டது. தமிழர் உரிமைக்காகப் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் உயிரைப் பணயம் வைத்து உழைத்த எத்தனையோ பேர் இருக்கையில்; நீதி நேர்மை தெரிந்த சட்ட நுணுக்கங்களை நன்கறிந்த கல்வியாளரென்ற வகையில் முன்னாள் நீதியரசர் ஒருவர் முதலமைச்சர் வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். அனுபவப்பட்ட அரசியல் தலைமைத்துவத்தைக் காட்டிலும், படித்த, உயர் பதவி வகித்த ஒருவரையே முதலமைச்சர் வேட்பாளராக வைக்க வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கும் முடிவின் சாதக பாதகங்களை இப்போது எதிர்வுகூறுவது அவ்வளவு எளிதானதல்ல. …
-
- 7 replies
- 818 views
-
-
சில முக்கியமான காரியங்கள் மீள்சுழற்சிக்க உட்படுகின்றன போலத் தென்படுகின்றன. மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் இதேகாலப் பகுதியில் இலங்கைத் தீவை உலுக்கிய கறுப்பு ஜுலையோடு ஆரம்பித்த ஈழத்தமிழர்களின் 'ஏதிலி ஓட்டம்' இன்னும் முடிவடையவில்லை என்பதை இந்தோனேசியக் கடலில் சில தினங்களுக்கு முன்னர் மிதந்த உடலங்கள் சாட்சிப்படுத்துகின்றன. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=24916
-
- 0 replies
- 537 views
-
-
வடக்கு தேர்தல்: அரச கூட்டணியில் முன்னாள் புலிகள் இல்லை இலங்கையின் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் மத்தியில் ஆளும் சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆளும் மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் எவரும் இல்லை என்று அக்கட்சி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தது. வெற்றி பெறுவதற்கு தகுதியானவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கியுள்ளதாகவும் ஆளும் மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தமிழோசையிடம் சற்று முன்னர் தெரிவித்தார். http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/07/130728_slfpnorth.shtml
-
- 5 replies
- 740 views
-
-
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு, ஒற்றுமையை குலைக்க விரும்பாததால், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளர் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=24516
-
- 19 replies
- 1.5k views
-
-
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சார்பில் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டம்- புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் முல்லைத்தீவு மாவட்டம்- கந்தையா சிவநேசன் (பவன்) வவுனியா மாவட்டம் - வவுனியா நகரசபை முன்னைநாள் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன் (விசுபாரதி) மற்றும் வவுனியா நகரசபை முன்னாள் உபதலைவர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்) மன்னார் மாவட்டம் - இருதயராஜா சார்ள்ஸ் ஆகியோரே வட மாகாணசபைத் தேர்தலில் புளொட் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.pathivu.com/news/25949/57//d,article_full.aspx
-
- 0 replies
- 459 views
-
-
யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் வலி வடக்கில் மீளக்குடியமர்ந்த மக்களின் படகுகளையும் வலைகளையும் சிறிலங்கா கடற்படையினர் சேதப்படுத்தி வருகின்றனர் என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் திட்ட இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாஸன் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் இரண்டாவது பெரிய மீன்பிடித் துறைமுகமான மயிலிட்டியை ஏன் ? இன்னமும் சிறிலங்கா அரசாங்கம் உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் வைத்திருக்கின்றது என்றும் கேள்வியெழுப்பிய அவர் சிறிலங்காவில் சீனப் படகுகளுக்கு வழங்கப்பட்ட அனுமதிகள் மேலும் சிக்கல் நிலையைத் தோற்றுவிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டமைப்பின் யாழ்.அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்…
-
- 0 replies
- 479 views
-
-
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட் டங்களிலிருந்து சிவில் பாதுகாப்பு படையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படுகின்றமை மோசமான தேர்தல் மோசடி நடைபெறவுள்ளமைக்கான எடுத்துக்காட்டாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்துள்ளார். 2012ம் ஆண்டின் பிற் பகுதியில் மேற்படி மாவட்டங்களிலிருந்து இராணுவத்தினரால் சிவில் பாதுகாப்பு படை(ஊளுனு) அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவர்கள் நடைபெறவுள்ள வடக்கு மாகாணசபை தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு செய்வதற்காக விண்ணப்பங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த விடயம் குறித்து கருத்துத் தெரிவித்தபோதே அவர் மே ற்கண்டவாறு தெரிவித்துள்ளார். விடயம் தொடர்பில…
-
- 0 replies
- 364 views
-
-
-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒழு குழுவினர் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் இன்று நண்பகல் இடம்பெற்றது. வட மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக போட்டியிடுவதற்கு விண்ணப்பித்த எம்.எம்.சீராஸிற்கு வேட்பாளர் பட்டியிலில் உள்ளடக்கப்பட்டாமைக்கு எதிராகவே இந்த போராட்டம் இடம்பெற்றது. இதில் பெருமளவான முஸ்லிம் இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டுள்ளதுடன் புத்தூர், சிறுப்பிட்டி, சுன்னாகம் போன்ற பகுதிகளில் இருந்து மக்கள் பேரூந்துகள் மூலம் ஏற்றி வருப்பட்டு இந்த மறியல் போராட்டத்தில் பங்கு பற்றி வருகின்றனர். இதில் கலந்த…
-
- 2 replies
- 315 views
-
-
வடமாகாண சபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வடக்கின் எல்லை கிராமங்களில் படையினரின் சிங்கறெஜிமன் பிரிவின் உதவியுடன் 500 குடும்பங்களுக்கு அரசாங்கம் காணிகளை வழங்கியுள்ளது. வடக்கில் முல்லைத்தீவு திருகோணமலை எல்லைக்கிராமம்,முல்லைத்தீவு வவுனியா எல்லைக்கிரமாங்களான பதவியா,பராக்கிரமபுரம் கெனியரதென்ன பகுதிகளில் படையினரின் ஆதரவுடன் 500 சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளது. சிறீலங்காப்படையிரின் சிங்கறெஜிமன் பிரிவினரால் அடிப்படை வசதிகள் மற்றும் வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.ஒருகுடும்பத்தின் வாழ்விடம் அமைத்து வசிப்பதற்காக அரைஏக்கரும் விவசாயம் செய்வதற்காக இரண்டு ஏக்கர் காணிகளும் வழக்கப்பட்டுவருவதாக சிறீலங்கா படைத்துறை தெரிவித்துள்ளது. வடக்கில் 1500 ஏக்க…
-
- 7 replies
- 773 views
-
-
பிரித்தானிய சுற்றுலாப் பயணி தங்காலையில் கொலை செய்யப்பட்டதற்காக சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். கடந்த 2011ம் ஆண்டு நத்தார் நாளன்று தங்காலையில் உள்ள விடுதியில், பிரித்தானிய சுற்றுலாப் பயணியான குரம் சேய்க் கொலை செய்யப்பட்டதுடன், அவரது காதலியான ரஸ்யப் பெண், பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டார். இந்தக் குற்றங்களில் ஈடுபட்ட சிறிலங்காவின் ஆளும்கட்சி உள்ளூர் தலைவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொலை தொடர்பாக உரிய காலத்தில் நீதி வழங்கப்படவில்லை என்று பிரித்தானியா குற்றம்சாட்டி வருகின்றது. இது தொடர்பாக, சிறிலங்கா அதிபரை சந்திக்கும் போது பிரச்சினை எழுப்பவுள்ளதாக, ப…
-
- 1 reply
- 438 views
-
-
நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் மூன்று பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இம்மூவரில் இருவர் இன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் மாவை.சேனாதிராசா ஆகியோர் முன்னிலையில் தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட தலைமைச்செயலகத்தில் கையொப்பமிட்டுள்ளனர். இதன்போது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எப் இன் செயலாளர் சுரேஸ் பிறேமச்சந்திரன், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர். 36 பேரைக்கொண்ட வடமாகாண சபைக்கு இலங்கை தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்தில் 51 பேர…
-
- 0 replies
- 528 views
-
-
நட்டத்தில் இயங்கி வரும் இலங்கை அரசிற்கு சொந்தமான மிஹின் லங்கா விமான சேவையானது புதிய விமானங்கள் 3ஐ கொள்வனவு செய்யும் பொருட்டு திறைசேரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் போயிங் விமானமொன்றை குத்தகைக்கு பெறும் திட்டமும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச விமானசேவை நிறுவனங்களுடனான போட்டிக்கு ஈடுகொடுக்கும் வகையில் தமக்கு புதிய விமானங்கள் தேவைப்படுவதாக அந்நிறுவனத்தின் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான நிதியைப் பெறும் பொருட்டு திறைசேரியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் இதற்கு எவ்வளவு தொகை தேவைப்படுகின்றது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை…
-
- 0 replies
- 384 views
-
-
சம்பந்தனால் மேற்கொள்ளப்பட்ட 'சதுரங்க காய்நகர்த்தலானது', கூட்டமைப்பின் தலைவர் பிரச்சினையைத் தீர்ப்பதில் மிகச் சிறந்தவர் என்பதை மட்டுமல்லாது, அரசியல் அரங்கில் 'ஒரு கல்லில் இரண்டு பறவைகளை வீழ்த்தக் கூடிய' 'குறிதவறாத சூட்டாளன்' என்பதையும் நிரூபணமாக்கியுள்ளது. இவ்வாறு கொழும்பை தளமாகக்கொண்ட Ceylon Today ஊடகத்தில் Manekshaw எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளையும் ஒன்றினைத்து ஏகமனதாக உயர் நீதிமன்றின் முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனைத் தேர்ந்தெடுத்ததன் மூலம், தமிழ்த் தேசிய…
-
- 0 replies
- 580 views
-
-
படு கொலைகள் முள்ளிவாய்க்காலியே முடிக்கப்பட்டு அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளை வன்களிலும் அதன் பின் புனர்வாழ்வு பெற்று வந்த முன்னால் புலி உறுப்பினர்களும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கின்ற அந்த சூழ்நிலையிலேயே இந்த படுகொலைகளும்,காணமல் போன சம்பவங்களும் இடம் பெற்று வருகின்றது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். படுகொலைகள் என்பதை விட இன்னொரு பக்கத்திலே இந்த அரசு எங்களை, எங்குளுடைய வாக்கை,பூர்விகமாக வாழ்ந்த எமது வரலாற்றை சிதைக்கின்ற வகைளிலே தங்களுடைய திட்டத்தை வகுத்து இன்றைக்கு செயலாற்றி வருகின்றது என்பதனை நாங்கள் நன்கு அறிவோம். இது அடுத்த கட்ட போருக்கு தயாராக இந்த அரசு துடித்துக்கொண்டிருக்கின்றது. எங்களுடைய க…
-
- 0 replies
- 402 views
-
-
வடக்குத் தேர்தல் இந்தியாவிற்கு தலையிடியை ஏற்படுத்தியுற்றது! வட மாகாணசபைத் தேர்தலினால் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் டெய்லி மெயில் நாளேடு கருத்து வெளியிட்டுள்ளது. வட மாகாணசபைக்கு முழுமையான அதிகாரங்களை பகிர்ந்தளிக்க வேண்டுமென இலங்கையை இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது. எனினும், இதனை ஏற்க இலங்கை மரசு மறுத்து வருகிறது. எதிர்வரும் செப்டம்பரில் வடக்கில் இடம்பெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிகாரத்திற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், 13ஆவது திருத்தச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி, மாகாண முதல்வருக்கு காணி, காவற்துறை அதிகாரங்களை வழங்குவதில்லை என்பதில் இலங்கை அரச உயர்மட்டம் தெளிவாக உள்ளது. …
-
- 0 replies
- 449 views
-
-
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு உடன்பாடில்லாத அரசியல் தீர்வொன்றை அவர்கள் மீது எவ்வாறு திணிக்க முடியாதோ அதேபோன்றே, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்த்துவைக்கப்படவேண்டுமென்பதற்காக இலங்கைக்கு வெளியில் இருந்து கொண்டு ஆதரவுக்குரல் கொடுக்கின்ற சக்திகளும் தீர்வு யோசனை எதையும் திணிக்க முயற்சிக்கக் கூடாது என்று வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடவிருக்கும் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இந்தியாவின் பிரபல ஆங்கில தினசரிகளில் ஒன்றான இந்துஸ்தான் ரைம்ஸுக்கு அண்மையில் பேட்டியொன்றை அளித்திருந்த நீதியரசர் இலங்கைத் தமிழ் மக்கள் தங்களுக்கென்று தீர்வொன்றை வகுத்துக்கொள்வதற்கு தமிழ்நாடு அனுமதிக்க…
-
- 51 replies
- 2.9k views
-
-
விடுதலைப் புலிகள் விட்ட இரு தவறுகள் : ஒரு பிழைப்பு வாதியின் ஓலம் வன்னிப் படுகொலைகளின் வீழ்ந்த பிணங்களின் மேலால் நடந்து சயனைட் குப்பிகளை குப்பையில் வீசியெறிந்துவிட்டு கொலைகாரர்களோடு இணைந்து இன்று வடமாகாணத்தில் வேட்பாளராகியிருக்கும் தயா மாஸ்டர் என்ற வேலாயுதம் தயாநிதி விடுதலை புலிகள் இரண்டு தவறுகள் இழைத்ததாகக் கூறியுள்ளார். இலங்கை, இந்திய உடன்படிக்கையைத் தவறவிட்டமையும், நோர்வே சமாதான முன்னெடுப்பை பயன்படுத்திக் கொள்ளாமையும் கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் இழைத்த இரண்டு தவறுகளாகும்.அதனால்தான் தமிழ் மக்கள் இந்தளவு இழப்பைச் சந்திக்க நேர்ந்தது என தயாமாஸ்டர் தெரிவித்துள்ளார். 30 வருட ஆயுதப் போராட்டத்தையும் அதன் வழிமுறைகளையும் விமர்சிப்பதற்கு தயாமாஸ்டரிலிருந்து எரிக் …
-
- 0 replies
- 642 views
-
-
வடபகுதியில் இராணுவத்தை முகாம்களுள் முடக்க முடியாது; கூட்டமைப்பின் குற்றச்சாட்டு பொய் என்கிறார் படை பேச்சாளர் "வடக்குத் தேர்தல் நடவடிக்கைகளில் இராணுவம் ஒருபோதும் ஈடுபடவுமில்லை. இனிமேலும் ஈடுபடாது. அதுமட்டுமன்றி வடக்கில் இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கவேண்டிய தேவையும் இல்லை.'' இவ்வாறு இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய நேற்றுத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். வடக்கில் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததே இராணுவம்தான். இதற்கமைய அந்தத் தேர்தல் நடவடிக்கைகள் சிவில் அதிகாரிகளாலும் சட்ட நடவடிக்கைகள் பொலிஸாராலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு இராணுவத்தின் தலையீடு ஒருபோதும் இல்லை. இவ்வாறான நிலையிலும் தமிழ்க் கூட்டமைப்பு எம் மீது குற்றச்ச…
-
- 0 replies
- 330 views
-
-
வடக்குத் தேர்தலை எதிர்த்து போராட்டம்; கொழும்பில் சிங்கள மக்களை அணிதிரட்டி களமிறக்க முடிவு பொலிஸ், காணி அதிகாரங்களை நீக்கும் வரை அரசு வட மாகாணசபைத் தேர்தலை நடத்தக்கூடாது என வலியுறுத்தியும், "13' விடயத்தில் இந்தியாவின் தலையீட்டுக்கு எதிராகவும் சிங்கள மக்களை அணிதிரட்டி, கொழும்பில் பெரும் போராட்டத்தை முன்னெடுப்பதற்குச் சிங்கள தேசியவாத அமைப்புகளின் ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இவ்விடயம் குறித்து ஆராய்வதற்கென மேற்படி ஒன்றியத்தின் முக்கிய கூட்டமொன்று இன்று ஞாயிறு மாலை இடம்பெறவுள்ளது என்றும், இதன்போது ஆர்ப்பாட்டத்துக்குரிய திகதி நிர்ணயிக்கப்படும் என்றும் அறிய முடிகின்றது. இந்தத் தகவலை நேற்று உறுதிப்படுத்திய சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் தேசப்பற்று…
-
- 0 replies
- 229 views
-
-
வாக்கு அரசியலை முன்னெடுப்பதாக வன்னியின் முன்பள்ளி ஆசிரியர்கள் குமுறல் - 28 ஜூலை 2013 குளோல் தமிழ் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் வடக்கு மாகாண சபைத் தேர்தலை இலக்கு வைத்து அவசர அவசரமாக நியமனங்கள் வழங்க்கப்பட்ட நிலையில் சுகந்திரக்கூட்டமைப்புக்கு வாக்களிப்பதை முன்பள்ளி ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என கண்டிப்பான உத்ததரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் உறுதிப்படுத்தி உள்ளார். இராணுவதிதின் சிவில் (சி.எஸ்.டி) பாதுகாப்பு பிரிவினராலேயே அனைத்து முன்பள்ளிகளுக்குமான ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டு உள்ளதுடன் அவ் ஆசிரியர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவுகள் இவர்களுக்கூடாகவே வழங்கப்பட்டுவருகின்றன. இந் நிலையில் முன்பள்ளி ஆசிரியர…
-
- 0 replies
- 299 views
-