ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிதாக ஆறு ரயில் சேவைகளை தொடங்கவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் கூறியது. 400 மில்லியன் ரூபா முதலீடு தேவையான இந்த புதிய ஆறு ரயில் சேவைகளும் அடுத்த ஏப்ரலில் அல்லது மே மாதம் தொடங்கலாம் என ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் பீ.ஏ.பி.ஆரியரத்ன தெரிவித்தார். கொழும்பு – ஓமந்தை, மதவாச்சி – மடு ஆகிய இரண்டு ரயில் சேவைகளும் போரின் போது அழிந்த ரயில் பாதைகளை திருத்தி அமைக்கப்பட்டவையாகும். மக்களின் பயண வசதியை அதிகரிக்கவும் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கவும் புதிய ரயில் சேவைகள் அவசியமாகின்றன என பொது முகாமையாளர் மேலும் குறிப்பிட்டார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/75695-----6---.html
-
- 0 replies
- 230 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் நிதி திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்கள் இவ்வாறு நிதி திரட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் குறித்து தொடாந்தும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் சில நாடுகள் வழங்கி வரும் ஒத்துழபை;பு வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர் மக்கள் செறிந்து வாழும் நாடுகளில் தொடர்ந்தும் பல்வேற…
-
- 0 replies
- 285 views
-
-
மஹிந்த அரசாங்கத்தின் புலனாய்வுப் புலியின் புதிய கண்டுபிடிப்பு! மாவை சேனாதிராஜாவை விடுத்து விக்னேஸ்வரனை கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக அறிவித்ததில் இரண்டு வௌிநாட்டுத் தூதரகங்களின் பங்கு காணப்பட்டதாக அமைச்சர் விமல் வீரவன்ச கண்டுபிடித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவிற்கு ராஜதந்திர ரீதியில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜா போட்டியிடக் கூடாது என சில வெளிநாட்டு தூதரகங்கள் உத்தரவிட்டுள்ளதாகக் அவர் குறிப்பிட்டுள்ளார். ஓய்வு பெற்ற நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க வேண்டுமென குறித்த தூதரகங்கள் கோரியுள்ளதாக அவர் கூறியுள்ளார். மாவை…
-
- 0 replies
- 243 views
-
-
இது நீதியா? நியாயமா? - இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் தீர்மானத்திற்கிணங்க கடந்த 01.07.2013 ஆம் திகதி முதல் 2013 டிசம்பர் வரை சகல ஆசிரியர்களது இடமாற்றங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதும் சில வலயங்களில் ஆசிரியர் இடமாற்றங்கள் நடைபெற்று வருவதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கடும் விசனம் தெரிவித்துள்ளது. இவ்விடயம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநருக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கண்டன அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; "வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அடங்கிய கூட்டமொன்றில் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் புஸ்பகுமார இத்தீர்மானத்தை எடுத்து கல்வியமைச்சிலும் மாகாண க…
-
- 0 replies
- 362 views
-
-
Print this தமிழ், முஸ்லிம் மக்கள் கஸ்டத்தில்: மன்னாரில் சிங்கள குடியேற்றம் - செல்வம் எம்பி மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களிலும் அரசாங்கம் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சாட்டியுள்ளார். நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையின் காரணமாக இடம்பெயர்ந்து சென்ற தமிழ், முஸ்ஸிம் மக்களின் மீள் குடியேற்றத்தை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு உரிய முறையில் மேற்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், மன்னார் மாவட்டத்தின் கர…
-
- 0 replies
- 369 views
-
-
பிரித்தானியாவின் பல பகுதிகளிலும் அனல் காற்று தாக்கத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், http://tamilworldtoday.com/?p=23478
-
- 0 replies
- 305 views
-
-
'ஒவ்வொரு இராணுவப் படையணிக்கும் தனித் தனியான முகாம்கள் அமைக்கப்பட உள்ளது: தனியார் காணிகளையும் புடுங்கி எடுப்போம்' 19 ஜூலை 2013 ஒவ்வொரு இராணவப் படையணிக்கும் தனித் தனியான முகாம்கள அமைக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். சகல வகதிகளுடன் கூடிய இராணுவ முகாம்கள் இராணுவத்தின் அனைத்து படைப் பிரிவுகளுக்கும் தனித் தனியாக அமைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு தனித் தனி முகாம்களை அமைப்பதற்கான சகல வசதிகளையும் செய்து கொடுப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். வருடாந்த அடிப்படையில் இவ்வாறு முகாம்கள் அமைக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். முகாம்களை அமைப்பதற்காக ஒவ்வொரு மாதமும் கப்பல்களில…
-
- 4 replies
- 407 views
-
-
சர்வதேச ஊடகங்கள் பல தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற அமைச்சர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் பொதுநலவவாய நாடுகளின் மாநாட்டை நடத்துவதற்கு பல்வேறு எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே பின்னணியில் உள்ளனர். அவர்களால் சர்வதேச ரீதியாக பல ஊடங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. அந்த ஊடங்களும் இலங்கைக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. எனினும் இவற்றுக்கு மத்தியிலும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதாக அனைத்து பொதுநலவாய நாடுகளின் உறுப்பு நாடுகளும் உறுதியளித்திருப்பதாக அமைச்சர் தெரிவித்து…
-
- 4 replies
- 745 views
-
-
புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் புதிய விளம்பரங்களை பிரசூரிக்க ஆரம்பித்துள்ளது. மேலும் http://tamilworldtoday.com/?p=23490
-
- 0 replies
- 401 views
-
-
வடமாகாண சபை தேர்தலை பிற்போடுறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை, அடுத்த மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. மேலும் வாசிக்க.. http://tamilworldtoday.com/?p=23449
-
- 0 replies
- 386 views
-
-
நாங்கள் எதிர்காலத்தில் சுயநிர்ணய உரிமையுடன் எங்களை நாங்களே ஆளக் கூடிய ஆட்சியை வடக்கு, கிழக்கில் அமைப்பதற்கு சுயதொழில் வாய்ப்புகள் மிக முக்கியமானது. ஒவ்வொருவரும் எங்கள் குடும்பங்களை அபிவிருத்தி செய்யப் பழகிக் கொண்டோமானால் எதிர்காலத்தில் எங்கள் பிரதேசத்தை, மாவட்டத்தை , மாகாணத்தை நாங்களே ஆளக் கூடிய சகல உரிமைகளையும் பெற்று வாழக் கூடிய நிலையை உருவாக்கலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். ஏறாவூரில் இடம்பெற்ற சுயதொழில் கடன் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த கருணாகரம் மேலும் கூறுகையில் ; இந்த நாட்டின் அரசாங்கம் வடக்கு, கிழக்கை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் த…
-
- 6 replies
- 731 views
-
-
மங்கள சமரவீர விடுதலைப் புலிகளுக்காக செயற்படுகின்றார் – கெஹலிய 19 ஜூலை 2013 ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக செயற்பட்டு வருவதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மங்கள சமரவீர நாட்டுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களுடன் இணைந்து பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை சீர்குலைக்க மங்கள முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர் தமிழ் மக்களின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மங்கள சமரவீர செயற்பட்டு வருகின்றார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வின் மூலம் நாட்டுக்குக் கிடைக்கப்பெறும் நன்மைகளை மக்கள்…
-
- 3 replies
- 281 views
-
-
ஜக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பினில் ஈபிடிபி மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் ஆகியவையும் இணைந்து வடக்கு மாகாணசபை தேர்தலினில் போட்டியிடுமென அமைச்சரும் பொது செயலாளருமான சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தினில் இன்று சுதந்திரக்கட்சியின் யாழ்.அலுவலகத்தினில் கட்சி வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பினில் அவர் கலந்து கொண்டு உரையாற்றுகையினிலேயே இத்தகவலை வெளியிட்டிருந்தார். இதன் மூலம் தனித்துப்போட்டியிடுவது தொடர்பாக முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் ஈபிடிபி வட்டாரங்களிடையே நிலவி வந்த ஊகங்கள் முடிவுக்கு வந்துள்ளன. இதனிடையே இன்றைய கூட்டத்தினில் ஜக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சார்பினில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.அத்துடன் குடாந…
-
- 5 replies
- 709 views
-
-
1987 இல் இந்தோ-ஶ்ரீலங்கா ஒப்பந்தம் உருவாக்கப்பட்ட பின்னர் இலங்கைத் தீவில் மாகாண சபைகளின் வரலாறு உருவானாலும் எதிர்வரும் செப்டெம்பரில் இடம்பெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலே ஒரு அதீதமான உற்றுநோக்கலை ஏற்படுத்துவற்கான ஆதாரங்கள் வெளிவருகின்றன. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=23429
-
- 0 replies
- 578 views
-
-
ரஸ்யா, சீனா, ஈரான் பாணியில் சிறிலங்கா இராணுவம் [ வெள்ளிக்கிழமை, 19 யூலை 2013, 06:26 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சிறிலங்கா இராணுவத்தின் எல்லா பற்றாலியன்களுக்கும் முழுமையான, நவீன வசதிகளுடன் கூடிய முகாம்களை அமைப்பதற்கான நிலம் தனியாரிடம் இருந்தாலும் சுவீகரிக்கப்படும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார். சிறிலங்கா இராணுவத்தின் ஒவ்வொரு பற்றாலியன்களுக்கும், முழுமையாக நவீன வசதிகள் கொண்ட முகாம்களை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த முகாம்களை அமைக்கும் பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்துக்கு சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அனுமதி அளித்துள்ளார். அதற்காக தெரிவு செய்யப்பட்ட க…
-
- 1 reply
- 1.6k views
-
-
PLOTன்முன்னாள் மத்தியகுழு உறுப்பினரும் நிர்வாகப் பொறுப்பாளருமான குமரன்- பொன்னுத்துரை காலமானார்! 18 ஜூலை 2013 குமரன் என்றும் பொன்னுத்துரை என்றும் அறியப்பட்ட விஸ்வலிங்கம் பொன்னுத்துரை இன்று (யூலை 18 2013) மதியம் காலமானார். கடந்த ஓராண்டு காலமாக சுவாசக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர் யூலை 13, 2013 இல் பிரான்ஸ் சென் லூயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இடதுசாரி செயற்பாட்டாளரும் காந்தியம் அமைப்பின் செயற்பாட்டாளராகவும் அரசியல் பயணத்தை ஆரம்பித்த இவர் காந்தியம் அமைப்பின் யாழ் மாவட்ட பொறுப்பாளராக இருந்தவர். பின்னர் தமிழீழ மக்கள் விடுதலைக் களகம் – (PLOT) அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆரம்பகால உறுப்பினரும் மத்திய க…
-
- 2 replies
- 471 views
-
-
இலங்கையில் 64 வீதமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. இலங்கையில் கிராமப்புற மக்களில் 10 வீதமானவர்களும் நகர்ப்புற மக்களில் 15 வீதமானவர்களும் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.பாடசாலை மாணவர்களில் 10 தொடக்கம் 15 வீதமானவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீரிழிவு நோயினால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் ஆலோசனை வழங்கியுள்ளது. முறையான உணவு பழக்கம், உடற்பயிற்சி இன்மை,அதிக வேலை பளுவால் ஏற்படும் மன அழுத்தம் போன்ற காரணங்களால் நீரிழிவு நோய் ஏற்படலாம் எனவும் அமைச்சு சுட்டிக…
-
- 0 replies
- 490 views
-
-
திருகோணமலையில் சிறிலங்கா ஆயுதப்படைகளின் சிறப்புப் படைப்பிரிவுகளுடன், இணைந்து அமெரிக்க சிறப்புப் படைப்பிரிவினர் நடத்தும் பயிற்சிகள் இன்றுடன் முடிவுக்கு வரவுள்ளது. திருகோணமலை டொக்யார்ட்டில் உள்ள சிறிலங்கா கடற்படையின் சிறப்பு படகு அணியின் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டள்ள இந்தப் பயிற்சி, கடந்த 2ம் நாள் ஆரம்பமானது. அமெரிக்க கடற்படையின் சிறப்புத் தாக்குதல் அணியான சீல் மற்றும் சிறப்பு படகு அணிகள் மற்றும் அமெரிக்க விமானப்படையை சேர்ந்த 10 அதிகாரிகள், பிளாஸ் ஸ்ரைல் என்ற இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கின்றனர். இவர்கள் சிறிலங்கா கடற்படையின் சிறப்பு படகு அணி, அதிவேகத் தாக்குதல் படகு அணி, சுழியோடிகள், துரித நடவடிக்கை மற்றும் மீட்பு அணிகள் மற்றும் ச…
-
- 0 replies
- 426 views
-
-
-எஸ்.கே.பிரசாத் வட மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் போராளிகள் இருவரை போட்டியிடவைப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகவும் இதுதொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றின் சட்டத்தணி ஒருவர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வருகின்றது. இந்த இரண்டு முன்னாள் போராளிகளில்; தமிழரசுகட்சி சார்பாக ஒருவரும் ரெலோ அமைப்பின் சார்பில் ஒருவருமாக யாழ் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாகவும் கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கிறன. ஏற்கெனவே, விடுதலைப்புலிகளின்; ஊடகப்பேச்சாளர் தயாமாஸ்டர் சுதந்திரக்கட்சியில் இணைந்து ஐக்கிய மக்கள் சுத…
-
- 0 replies
- 549 views
-
-
மன்னார் நகர் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடித்திரிந்த இருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து சோதனைகளை மேற்கொண்ட போது அவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. கஞ்சா போதைப்பொருளுடன் நேற்று வியாழக்கிழமை இரவு மன்னார் நகர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட இருவரும் இன்று அதிகாலை மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். http://www.sankathi24.com/news/31571/64//d,fullart.aspx
-
- 0 replies
- 412 views
-
-
வாலியின் சொல்லும் செயலும் ஈழத் தமிழர்களுக்கு உறுதுணையாகவே அமைந்திருந்தன - யாழ் தமிழ் மக்கள் பேரவை கண்ணீர் இரங்கல் ஈழத் தமிழ் மக்களின் அவலம் கண்டு பொங்கியெழுந்த தொப்புள்கொடி உறவான கவிஞர் வாலியின் மறைவு ஈழத்தமிழர்களுக்கு ஈடுசெய்ய முடியாதது என்று தெரிவித்துள்ள யாழ்.குடாநாட்டு தமிழ் மக்கள் பேரவை வாலிக்கு தமது கண்ணீர் அஞ்சலிகளைக் காணிக்கையாக்குவதாகவும் தெரிவித்துள்ளது. அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரின் குடும்பம், குடும்ப நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள், மற்றும் உலகெங்கும் பரந்து வாழும் அவரின் அபிமானிகள் ஆகியோரின் துயரத்தில் தாங்களும் பங்கெடுப்பதாகவும் யாழ்.குடாநாட்டு மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. கவிஞர் வாலியின் மறைவு குறித்து யாழ்.குடாநாட்டு மக்கள் பேரவை …
-
- 0 replies
- 591 views
-
-
நீதி, நேர்மை, இறைபக்தி மிகுந்த ஒருவரது தெரிவை எல்லாம் வல்ல ஆண்டவனும் விரும்பியுள்ளார்: - மன்னார் ஆயர் கருத்து தமிழ்மக்கள் மிகப்பெரிய இன்னல்களை அனுபவித்து வரும் நிலையில் அவர்களின் விடிவிற்காக பாடுபடக்கூடிய ஒருவர் வடமாகாண முதல்வர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளது ஆண்டவனின் தெரிவு என்று மன்னார் ஆயர் வண.இராயப்பு யோசெப் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால், வடக்கு மாகாணசபையின் முதன்மை வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் நிறுத்தப்படவுள்ளது குறித்து கருத்து வெளியிட்டுள்ள போதே அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். "இந்தத் தெரிவு தமிழினத் தலைவர்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்களின் சிந்தனை வல்லமையை காண்பிப்பதுடன் காலத்தை நுணுக்கமாக நோக்கி…
-
- 0 replies
- 663 views
-
-
படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு வரும் அகதிகள் அவுஸ்திரேலியாவில் குடியேற்றப்பட மாட்டார்கள் என அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் ருட் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இந்த நடைமுறை உடனடியாக அமுலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=23357
-
- 0 replies
- 409 views
-
-
தேர்தலில் சமூகவிரோதிகளுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டாம் - ட்ரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் : 19 ஜூலை 2013 எதிர்வரும் வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட ஊழல்வாதிகள், சமூகவிரோதிகளுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டாம் என ட்ரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் அமைப்பு இலங்கையின் அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஒரு வருடகாலத்தில், பிரதேச சபை மற்றும் மாகாண சபைகளில் அங்கம் வகிக்கும் 50 மேற்பட்ட அரசியல்வாதிகள், கொலை, இலஞ்சம், பாலியல் வல்லுறவு, சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இப்படியான குற்றவாளிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், கௌரவமான மக்கள் பிரதிநிதிக…
-
- 1 reply
- 191 views
-
-
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 21 தமிழக மீனவர்களை மீண்டும் ஓகஸ்ட் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தலைமன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக மீனவர்கள் 21 பேரும் கடந்த 6 ஆம் திகதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு இன்று வரை மன்னார் நீதிமன்றத்தில் விளக்கமறியலில் லைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் http://tamilworldtoday.com/?p=23349
-
- 0 replies
- 287 views
-