ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
இலங்கை யாழ்ப்பாணம் நகரில் தமிழ்ப்புத்தக திருவிழா நடத்த போவதில்லை என்று தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் (பபாசி) பதிப்பாளர் களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அக்கடிதத்தில், “தமிழக ஈழத்தமிழர்களின் நலன் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்கள். மேலும் ஈழத்தமிழர் நலனில் அக்கறையும் பற்றும் கொண்ட பலரும் நமது அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். ஈழத்தமிழர்கள் நலனில் அக்கறை கொண்ட நாமும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு புத்தக் காட்சியை நடத்துவதை தவிர்க்கிறோம் என்றும், அது குறித்த 23.7.2013 ஆலோசனைக் கூட்டத்தையும் தவிர்ப்பதாகவும் அக்கடித்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழ்க் கலை இலக்கியப்பேரவ…
-
- 0 replies
- 592 views
-
-
வடக்கில் தேசிய அடையாள அட்டை அல்லது ஏனைய அடையாள ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு அவைகளைப் பெற்றுக் கொள்ளும் முகமாக வசதி செய்துகொடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடமாடும் சேவையின் இரண்டாம் கட்ட நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும், http://tamilworldtoday.com/?p=23105
-
- 0 replies
- 375 views
-
-
கொழும்பு பொதுநலவாய மாநாட்டில் செய்திகளை சேகரிப்பதற்கு வெளிநாட்டுச் செய்தியாளர்கள் எந்த தடைகளுமின்றி அனுமதிக்கப்படுவார்கள் என பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=23094
-
- 0 replies
- 282 views
-
-
படகுப் பயணிகளின் மரணங்கள் கடற்படையினரை பெரிதும் பாதிப்பதாக எல்லைப் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி அட்மிரால் David Johnston தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=23070
-
- 0 replies
- 405 views
-
-
''இந்தியாவில் இருந்து 6,000 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது ஆஸ்திரேலியா. உரிய படகு வசதிகளுடன் புறப்பட்டால்கூட ஆஸ்திரேலியாவை அடைய குறைந்தது 20 நாட்கள் தேவை. மேலும் வாசிக்க... http://tamilworldtoday.com/?p=23008
-
- 0 replies
- 337 views
-
-
மின்சாரக் கட்டணத்தை முழுமையாக செலுத்திய பின்னர் உணவுக்கு பணம் எதுவும் மிஞ்சுவதில்லை என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=23066
-
- 0 replies
- 243 views
-
-
13ஆவது அரசமைப்பை துரிதகதியில் இரத்துச் செய்ய வேண்டும் என மல்வத்து, அஸ்கிரிய மாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர். மேலும்,http://tamilworldtoday.com/?p=23064
-
- 0 replies
- 319 views
-
-
வடக்கும் கிழக்கும் இணைந்திருப்பது நல்லது என்பதே என் கருத்து. 13ஆவது திருத்தச்சட்டத்தின் நோக்கமே வடக்கு, கிழக்கு பிரச்சினைகளை தீர்த்து வைப்பது என்பதே. 1987இல் 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டு இரு மாகாணங்களும் இணைந்ததற்கு காரணம், இரண்டு மாகாணங்களிலுமே பொதுவானதாக தமிழ்மொழி இருந்ததுதான். அந்த நேரத்தில் கிழக்கில் இருந்த முஸ்லிம் மக்கள், தமிழ் பெரும்பான்மையைப் பற்றிய அச்சம் கொண்டிருந்தார்கள். இப்போது அவையெல்லாம் சீர்செய்யப்பட்டு விட்டன. வடக்கிலும் கிழக்கிலும் பாவிக்கப்படுவது ஒரே மொழி. அவர்களது கலாசாரம் தனி. சுவாத்தியம் கூட மற்ற மாகாணங்களில் இருந்து வேறுபட்டது. அதனால் அவர்களை தங்களை தாங்களே தங்கள் மொழியில் ஆட்சி செய்ய அனுமதிப்பது அவசியம். வடக்கில் வந்து வாழ்வதை ஒருவரும் …
-
- 8 replies
- 846 views
-
-
வடமாகாணசபை தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் யார் என்பது நாளையே முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஒவ்வொரு கட்சிகளுக்குமான பங்கீடு மற்றும் பொதுவான வேட்பாளர்கள் எத்தனை பேர் என்பது பற்றி முடிவு செய்யப்பட்டிருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. யாழ். மாவட்டத்தில் தமிழரசுக்கட்சியின் சார்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர் பேரவையின் முன்னாள் செயலாளர் தர்சானந் பரமலிங்கம், ஊடகவியலாளர் வித்தியாதரன், பேராசியர் சிவச்சந்திரன், முன்னாள் யாழ். மாநகரசபை ஆணையாளர் சிவஞானம், ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரனின் சகோதரரும் கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளருமான சர்வேந்திரா, ஐங்கரநேசன், ஆகியோரும்…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முடிவு டக்ளசைப் பாதிக்குமா? [ புதன்கிழமை, 17 யூலை 2013, 01:38 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள தமது கட்சியைச் சேர்ந்த எவரையும் வரும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த முடிவு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையினால் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வடமேல், மத்திய மாகாணசபை முதல்வர் பதவிகளை குறிவைத்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் பரப்புரைகளில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமேல், மத்திய மாகாணசபைத் தேர்தலில் புத…
-
- 0 replies
- 615 views
-
-
சிறிலங்கா: இனங்களுக்கு இடையிலான இயல்புநிலை திரும்புவதற்கு இராணுமயமாக்கல் தடைக்கல் [ புதன்கிழமை, 17 யூலை 2013, 05:41 GMT ] [ நித்தியபாரதி ] ஜனநாயக நாடொன்றில் பொதுமக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலான உறவானது, 'இராணுவத்தை பொதுமக்கள் கட்டுப்படுத்துதல்' என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். அதாவது குறித்த நாட்டு இராணுவத்தை மக்கள் கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையே இந்த உறவு முதன்மைப்படுகிறது. இவ்வாறு கொழும்பை தளமாகக்கொண்ட The Sunday Leader ஆங்கில ஊடகத்தில் Dinesh D. Dodamgoda எழுதியுள்ள பத்தியில் குறிப்பிட்டுள்ளார். அப்பத்தியினை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அண்மையில் சிறிலங்கா இராணுவப் பயிற்சியாளர்களால் இராணுவப் பயிற்சி வழங்கப்பட்…
-
- 0 replies
- 488 views
-
-
மகிந்தவைப் பணிய வைத்த, மேனன் கொடுத்த மன்மோகன்சிங்கின் கடிதம் [ புதன்கிழமை, 17 யூலை 2013, 07:06 GMT ] [ தா.அருணாசலம் ] சிறிலங்காவுக்கு கடந்தவாரம் வந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கின் செய்தி ஒன்றை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் கையளித்துள்ளார். இந்த கடிதத்தில், சிறிலங்கா அரசாங்கம் 13வது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்தவோ அல்லது, ஒழிக்கவோ நடவடிக்கை மேற்கொண்டால், அனைத்துலக அரங்கில் சிறிலங்கா அரசாங்கம் எதிர்கொள்ளும் எந்தப் பிரச்சினையின் போதும், இந்தியா ஆதரவு தராது என்று நேரடியாகவே எச்சரித்துள்ளார். இதன் பின்னரே, சிறிலங்கா அரசாங்கம் 13வது திருத்தச்சட்டம் தொடர்பாக அடக்கி வாசிப்பதாக, ஜேவிபியின் நாடாளுமன்ற உறு…
-
- 0 replies
- 799 views
-
-
ராஜிவ்காந்தி கொலை: விசாரணை அறிக்கைகளை காணவில்லையாம் [ புதன்கிழமை, 17 யூலை 2013, 05:44 GMT ] [ அ.எழிலரசன் ] ராஜிவ்காந்தி கொலை தொடர்பாக விசாரித்த வர்மா குழுவின் அறிக்கை காணாமற்போய் விட்டதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 1991மே 21ம் நாள் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, விசாரிக்க நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையிலான குழு நியமிக்கப்பட்டது. ராஜிவ்காந்தி கொலைக்கு பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாக அமைந்ததா என்பதை ஆராய்வதற்கு இந்த விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இதன் பின்னர், ராஜிவ்காந்தி கொலை தொடர்பாக விசாரண நடத்த நீதிபதி ஜெயின் தலைமையிலான குழு நியமிக்கப்பட்டது. இந்த இரண்டு குழுக்களும் சமர்ப்பித்த அறிக்கைகளை தன்னிடம் தரக் கோரி, இந்த வழக்கில் ம…
-
- 0 replies
- 459 views
-
-
யாழ் புத்தகத் திருவிழா அழைப்பை நிராகரிக்கவேண்டுமென்று நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: யாழ்ப்பாணம் நகரில் தமிழ்ப் புத்தகத் திருவிழா நடத்த வருமாறு அங்கு வாழும் தமிழர்கள் கேட்டுக்கொண்டதாகவும், அதுகுறித்து தங்களது உறுப்பினர்களின் கருத்தறிய வரும் 27ஆம் திகதி சென்னை தியாகராயர் நகரில் ஒரு கூட்டத்தையும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) ஏற்பாடு செய்துள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது. யாழ்ப்பாணத்தில் இந்த புத்தக விழாவை நடத்த தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தருவதற்கு யாழ்ப்பாண மாவட்ட நிர்வாகம், யாழ்ப்பாணம் மாநகராட்சி ஆகியன மட்டுமின்றி, யாழ்ப்பாணத்தில் இயங…
-
- 2 replies
- 526 views
-
-
தமிழர்களுக்காக இறுதிவரை நேர்மையாகப் போராடி வெற்றி கொள்வேன் – சி.வி.விக்னேஸ்வரன் [ செவ்வாய்க்கிழமை, 16 யூலை 2013, 08:04 GMT ] தனக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்பை, தமிழர்களுக்காக முழுமூச்சுடன் நேர்மையாக செய்து முடிப்பேன் என்று வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடவுள்ள முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வீரகேசரி நாளிதழுக்கு வழங்கியுள்ள தனிப்பட்ட செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இயற்கை நிறைந்த அமைதியான வாழ்வை நேசிப்பவன் நான். அவ் வாழ்க்கையே எனது காதலியாகவும் கொள்கின்றேன். தற்போது வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடுமாறு கூட்டமைப்பில் அங…
-
- 8 replies
- 1.5k views
-
-
வடமாகாண முதலமைச்சராக வரவேண்டுமென்ற 'கனவு' தனக்கு 20 வருடங்களாக இருந்ததான ஒரு செய்தியை, Ceylon Today ஊடகருக்கு டக்லஸ் தேவானந்தா வெளியிட்ட சமகாலத்தில்தான் C.V.விக்னேஸ்வரன் என்ற முக்கியமான ஒரு குதிரையை களமிறக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்திருந்தது. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=22946
-
- 0 replies
- 487 views
-
-
(எம். நியூட்டன்) பிரதேச மட்ட சமூகப் பிரதிநிதிகளின் கருத்துக்கள் செவிமடுக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் இன்னும் ஓரிரு தினங்களில் தெரிவு செய்யப்படவுள்ளனர். சமூக மட்டப் பிரதிநிதிகளையே கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளர்களாக பிரதேச, மாவட்ட ரீதியாகத் தெரிவு செய்யவுள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்று தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பான பிரதேச, மாவட்ட மட்ட சமூகப் பிரதிநிதிகளிலிருந்து தெரிவு செய்யவுள்ளோம். இதற்கான கலந…
-
- 0 replies
- 439 views
-
-
ஆடை அணிந்து வாழும் சுரணை உள்ளவர் என்றால் விமல் வீரவன்ச இந்நேரத்துக்குள் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசாங்கத்தை விட்டு வெளியேறி இருக்க வேண்டும். முதலில் இலங்கை பற்றிய விசாரணைக்குழுவை ஐநா சபை கலைக்க வேண்டும் என்று, விமல் வீரவன்ச சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். ஆனால் ஐநா செயலாளர் நாயகம் பான்கி மூன் இந்த கோமாளியை கணக்கில்கூட எடுக்கவில்லை. இவரும் உண்ணாவிரதத்தில் சாகவில்லை. பிறகு போலிஸ், காணி அதிகாரங்களை அகற்றாமல் வடக்கில் தேர்தலுக்கு அரசு செல்லக்கூடாது. அப்படி சென்றால் அரசில் இருந்து அகன்று விடுவேன் என்று சொன்னார். சிவசங்கர் மேனன் வந்து, சொல்ல வேண்டியதை சொன்னவுடன் அரசு தலை வணங்கி, 13ஆம் திருத்தத்தில் கை வைக்காமல் பொலிஸ், காணி அதிகாரங்களுடன் வடக்கு தேர்தலுக்கு செல…
-
- 1 reply
- 475 views
-
-
விடுதலைப் புலிகளின் ஆலோசகரான அன்டன் பாலசிங்கத்தின் மறு அவதாரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் என்றால் சம்பிக்கவின் மறு அவதாரம் தயா மாஸ்டராவென கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி கேள்வி எழுப்பினார். கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு முதலமைச்சராக முன்னாள் உயர் நிதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவுசெய்யப்பட்டமை அனைவரும் விரும்பத்தக்க விடயமாகும். இந்நிலையில், விடுதலைப் புலிகளின் ஆலோசகரான அன்டன் பாலசிங்கத்தின் மறு…
-
- 0 replies
- 679 views
-
-
வவுனியாவில் 24ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள்- தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்றுமாலை 4மணியளவில் ஆரம்பமாகி மாலை 6.30மணிவரையில் நடைபெற்றது. வீரமக்கள் தினமானது கடந்த 13ம்திகதி முதல் நேற்று 16ம் திகதி வரையான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம்திகதி முதல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம்திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பு பிரகடனப்படுத்தி வருடாந்தம் அனுஷ்டித்து வருகின்றது. 24ஆவது வீரமக்கள்தின நிகழ்வுகளை திர…
-
- 2 replies
- 474 views
-
-
தமிழர்களினது பிரச்சினைகளும், முஸ்லிம்களினது பிரச்சினைகளும் வெவ்வேறானவை என்பதால், வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட முடியாது என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க...http://tamilworldtoday.com/?p=22889
-
- 8 replies
- 913 views
-
-
முல்லைத்தீவு கடற்பரப்பில் அனுமதியின்றி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவருவதாகக் கூறப்படும் வெளிமாவட்ட மீனவர்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்குமிடையிலான கலந்துரையாடலொன்று அம்மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார். முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்ட அமைச்சர், வெளிமாவட்டங்களிலிருந்து வருகை தந்துள்ள மீனவர்களில் நீண்டகாலமாக முல்லைத்தீவு கடற்பரப்பில் தொழில் புரியும் 58 மீனவர்களுக்கு மாத்திரமே இங்கு தொழில் …
-
- 0 replies
- 650 views
-
-
முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு தடுத்து நிறுத்தாவிட்டால் அனைத்து முஸ்லிம்களும் வீதியில் இறங்கி அரசுக்கு எதிராக போராடும் நிலையேற்படும் என கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதிமேயர் அசாத் சாலி தெரிவித்தார். கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் அரசாங்கம் 12 பள்ளிவாசல்களை உடைத்துள்ளது. அந்தவகையில் அண்மையில் மகியங்கனை பள்ளிவாசல் மீது பன்றி இறைச்சியை வீசித் தாக்குதல் நடத்துப்பட்டுள்ளது. தொமட்டகொட பகுதியில் உள்ள மாடுவெட்டும் மடுவத்தில் லொறியொன்றுக்க…
-
- 0 replies
- 351 views
-
-
பிரத்தானியாவின் ஆயுத ஏற்றுமதி குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்காக 3000 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வரும் நாடுகளுக்கும் ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சீனா, ஈரான் மற்றும் சவூதி அரேபியா போன்ற நாடுகளுக்கும் ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட்டமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கைத்துப்பாக்கிகள், சிறிய ரக ஆயுதங்கள், துப்பாக்கி ரவைகள், தோட்டாக்கள், 600 தாக்குதல் துப்பாக்கிகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்…
-
- 0 replies
- 337 views
-
-
கடந்த வருடம் 42ஆயிரத்து 145 விபத்துக்களில் பாடசாலை மாணவர்கள் அடங்கலாக 2444 பேர் மரணமடைந்துள்ளனர் என பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் தெரிவித்துள்ளார். 2012 ஆம் ஆண்டு நாட்டின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 2444 பேர் உயிரிழந்துள்ளனர். இவற்றுக்கு பிரதான காரணங்களாக பேருந்துகளை போட்டியில் செலுத்துதல், கவனக்குறைவு மற்றும் உயர் வேகம் , மது போதையில் வாகனம் ஓட்டுதல், தொலைபேசி பாவனை ஆகியவற்றையும் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் பெரும்பாலான விபத்துக்கள் தனியார் பஸ்களில் மோதி மரணமடைந்துள்ளனர். அதன்படி 320 பேர் மரணமடைந்துள்ளதால் தனியார் போக்குவரத்து துறையினருக்கு சாரதி அனுமதி பத்திரங்களை வழங்கும் போது தனியார் பேருந்துகளிலுள்ள தொழில்நுட்ப பிரச்சினைகளைக் கண்டறிய விர…
-
- 0 replies
- 340 views
-