Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், இன்று (09) காலை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து முக்கிய பேச்சுக்களை நடாத்தவுள்ளார். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=21202

    • 0 replies
    • 529 views
  2. நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் போது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை வரவேற்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாட்டின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. நாட்டுக்காக கடமையாற்றி அதற்காக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டால் அதனை சந்தோசமாக ஏற்றுக்கொள்வேன். நாட்டின் எதிர்காலத்திற்கு எது தேவை என்பதனை உணர்ந்து அதற்கமைய மஹிந்த சிந்தனைக் கொள்கை நடவடிக்கை எடுத்து வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார். வாரியப்பொல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=86971&category=TamilNews&language=tamil

    • 2 replies
    • 418 views
  3. இந்தியாவை சந்தோஷப்படுத்துவதா? அல்லது இலங்கையின் சிங்கள பெளத்த மக்களை சந்தோஷப்படுத்துவதா? என்பது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானம் எடுக்க வேண்டும். இத் தீர்மானத்திலேயே இந்த ஆட்சியின் எதிர்காலம் தங்கியுள்ளது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர தெரிவித்தார். இந்திய வெளிவிவகார அமைச்சர் குர்ஷித் அமெரிக்காவின் அடிவருடி. எனவே இலங்கையை பிரிக்கும் நிகழ்ச்சி நிரலே அவரால் முன்னெடுக்கப்படுகின்றது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பாக டாக்டர் குணதாச அமரசேகர மேலும் தெரிவிக்கையில், இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனின் வருகையானது தீர்க்கமானதாகும். 13 ஆவது திருத்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வதை தடுக்கவும் மாகாண சபை முற…

  4. இலங்கை இராணுவத்திடமிருந்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்தும் இந்திய மத்திய அரசாங்கம் பயங்கரவாதத்தை எவ்வாறு ஒழிப்பது தொடர்பில் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகச் செயலாளர் பியசிறி விஜயநாயக்க தெரிவித்தார். பத்தரமுல்லயில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், புத்த பொருமான் பிறந்த பூமியான புத்தகாயவில் உள்ள மகாபோதியில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலானது உலகத்தில் உள்ள பௌத்தர்களுக்கே கவலையளிக்கும் செயலாகவுள்ளது. இது உலகெங்கிலும் வாழும் பௌத்தர்களின் பாரம்…

    • 1 reply
    • 361 views
  5. வடக்கு தேர்தல்களை கண்காணிக்க வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் - கபே வடக்கு தேர்தல்களை கண்காணிப்பதற்கு வெளிநாட்டு கண்காணிப்பாளாகளை ஈடுபடுத்த வேண்டுமென கபே எனப்படும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கோரியுள்ளது. வட மாகாணசபைத் தேர்தல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்துவது குறித்து தேர்தல் ஆணையாளருக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்…

    • 0 replies
    • 229 views
  6. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக கூறப்படுகின்றது. புத்தகாயாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்பை அடுத்த ஜனாதிபதி அங்கு செல்லவுள்ளதாகவும் காயமடைந்த பிக்குமாரை பார்வையிடுவார் எனவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோரையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சந்தித்திப்பார் என்றும் கொழும்பு தகவல்கள் கூறுகின்றன. இந்திய வெளிவிவகார அமைச்சர் கொழும்புக்கு சென்று திரும்பிய பின்னரே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச புதுடில்லிக்கு பயணம் செய்யவார் என்றும் கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/93819/language/ta-IN/article.asp…

  7. முஸ்லிம் பெண்களின் நிஜாப் ஆடையை தடை செய்யுமாறு பொதுபல சேனா அமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. முஸ்லிம் பெண்களின் கலாச்சார உடையான நிஜாப் ஆடையை தடை செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளது. அண்மைய சம்பவங்களின் மூலம் முஸ்லிம் பெண்கள் தலையுடன் அணியும் இந்த நிஜாப்பினால் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அண்மையில் முஸ்லிம் பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவர் இந்த ஆடையை அணிந்து குற்றச் செயலில் ஈடுபட்டமை அம்பலமாகியிருந்தது. மத ரீதியான விடயம் என்பதனால் பலர் இது குறித்து கேள்வி எழுப்புவதில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட்ட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து அரசாங்கத்தின் உயர் மட்டத்தினருக்கு அறிவிக்க உள்ள…

  8. இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டுக்கு கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்ப்பர் செல்லாமல் அங்கு அரச தூதுக்குழுவை மட்டும் அனுப்பும் தீர்மானம் நாட்டின் கொள்கை ரீதியான நிலைப்பாட்டுக்கு முரணானது என்று கனடாவின் எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி கூறியுள்ளது. இலங்கையில் நடக்கும் மாநாட்டை கனடா ஒட்டுமொத்தமாக புறக்கணித்தால் மட்டுமே மற்றைய நாடுகளும் கனடாவைப் பின்பற்றும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் பிபிசி தமிழோசைக்கு வழங்கியுள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=87033&category=TamilNews&language=tamil

  9. தேசிய பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொள்ளும் நோக்கிலான நாடாளுமன்ற தெரிவுக்குழு நாளை முதன்முறையாக கூடவுள்ளது. நாளை பிற்பகல் 3 மணியளவில் நாடாளுமன்த்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவுக்குழுவின் தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். "இலங்கை பொதுமக்கள் ஒரு இனமாக வாழக்கூடிய நிலைமையை வலுப்படுத்துவதற்கான அரசியல் மற்றும் அரசியலமைப்பு முறைமையை பரிந்துரைத்தலுக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுக் கூட்டம்" என்று இந்தக்குழுவுக்கு பெயரிடப்பட்டுள்ளது. சபாநாயகரினால் குறித்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்பவர்களின் பெயர்கள் அண்மையில் வெளியிடப்பட்டன. அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ்,மைத்திரிபால சிறிசேன, டக்ளஸ் தேவானந்தா, ஏ.எல்.எம்.அதாவுல்லா, டியூ குணசேகர, ரிஷாட் பதியுதீன்…

  10. காதலித்துக்கொண்டிருக்கும் இளைஞர், யுவதிகள் எவ்விதத் தடையுமின்றி சந்தித்து கலந்துரையாடுவதற்கும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, இளைஞர் பரம்பரையை ஊக்குவிக்கும் வகையில், நாடு முழுவதும் பூங்காக்களை அமைக்க இளைஞர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்பிரகாரம், மேற்படி அமைச்சினால் நிர்மாணிக்கப்படவுள்ள முதலாவது பூங்கா, மாத்தறை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்காக 800 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி பூங்காவில் சிற்றுண்டிச்சாலை, திரையரங்கு, நிகழ்ச்சி மண்டபம், வாசிகசாலை ஆகிய வசதிகளையும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இளைஞர்களை மையப்படுத்தி நாடு முழுவதும் பூங்காக்களை நிற…

  11. நாய் கடிக்குள்ளான 10 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று அநுராதபுரத்தில் இடம்பெற்றது. அநுராதபுரம் மத்திய கல்லூரியை சேர்ந்த மாணவர்களே இன்று அதிகாலை 7 மணிளவில் இவ்வாறு நாய் கடிக்குள்ளாகியுள்ளனர். காயமடைந்த மாணவர்கள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் மூன்று பேர் மோசமான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை பாடசாலையில் இருந்த ஆசிரியர்கள் சிலர் நாயை அடித்து கொலை செய்துள்ளனர். http://www.virakesari.lk/article/local.php?vid=5744

  12. முல்லைத்தீவு மாவட்டத்தில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் 600 க்கும் மேற்பட்ட சிங்கள மீனவர்களை உடனடியாக வெளியேற்றக் கோரியும் சட்டவிரோத மீன்பிடி முறைகளை தடைசெய்யக் கோரியும் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் இன்று மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் அமைப்புகளின் சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள இந்தப் போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு எதிரே நடைபெறவுள்ளது. இதில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப் படுகின்றது. இது குறித்து முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் அமைப்புகளின் சம்மேளனத் தலைவர் சி.அருள்ஜெனிபேர்ட் தெரிவித்ததாவது: தொடர்ந்தும் எமது பகுதியில் உள்ள மீன்களை அத்துமீறி தென்பகுதி மீன…

    • 1 reply
    • 395 views
  13. வவுனியா, பாரதிபுரத்தில் வசித்துவரும் மலையக மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு இலங்கை அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=21116

  14. -சுமித்தி தங்கராசா மகளின் காதல் திருமணத்தினை ஏற்க மறுத்த குடும்பத்தினரினால், குறித்த பெண்ணின் கணவர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவமொன்று யாழ். நகரப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. யாழ். குருநகர் பகுதியில் இன்று மதியம் 12.30 மணியளவில் மேற்படி சம்பவம் இடம்பெற்றது. கிறிஸ்தவ மதத்தினைச் சேர்ந்த 22 வயதுடைய பெண்ணும், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 34 வயதுடைய முஸ்லிம் இளைஞரும் கடந்த 2 வருடங்களாக காதலித்துள்ளனர். இவர்களின் காதலை இரு வீட்டாரும் ஏற்காத நிலையில், அவ்விருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த மாதம் பதிவு திருமணம் செய்துகொண்டுள்ளனர். முச்சக்கரவண்டி சாரதியான கணவருடன், குறித்த பெண் குருநகர், பாங்சால் வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனை அறிந்த பெண் வீட்ட…

  15. -வடிவேல் சக்திவேல் கிழக்கு மாகாணசபை கலைந்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒன்று சேர்ந்து கிழக்கு மாகாண சபையினை ஆட்சியமைக்கும். அதற்குரிய காலம் மிகவிரைவில் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. பின்னர் வட, கிழக்கை நாங்கள்தான் ஆட்சி செய்வோம். மக்களின் அபிலாசைகளை துரிதகதியில் முன்னெடுப்போம். இதற்குரிய காலம் கனிந்துள்ளது என வன்னிமாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களை கௌரவித்தலும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயக…

  16. சர்வதேச ரீதியில் ஆயுத வன்முறை காரணமாக ஆபத்தான பட்டியலில் இலங்கை ஒன்பதாம் இடத்தை பிடித்துள்ளது. ஜெனீவாவில் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஆயுத வன்முறைகள் காரணமாகப் பாதிக்கப்படுபவர்கள் தொடர்பான விளக்கப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த யூன் மாதம் 25ம் திகதி வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், ஆயுத வன்முறை காரணமாக ஒவ்வொரு நிமிடமும் ஓர் உயிர் இழக்கப்படுவதாகவும் ஒவ்வொரு ஆண்டும் வன்முறை காரணமாக அரை மில்லியன் மக்கள் (526 000) மரணமடைவதாகக் குறிப்பிட்டுள்ளது. இவர்களில் 10 வீதமானவர்களே மோதல்கள் காரணமாக இறக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கப்படத்தில் முதலாவதாக மிக ஆபத்தான நாடாக எல் சல்வடோரும் இரண்டாவதாக ஈராக்கும் காணப்படுகிறது. தொடர்ந்து ஒன்பதாவத…

  17. ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 375 பேர் இன்று காலை பல்கலைக்கழகத்திலிருந்து காலவரையறையின்றி வெளியேற்றப்பட்டுள்ளதாக பதிவாளர் எச்.அப்துல் சத்தார் தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=21107

    • 0 replies
    • 370 views
  18. வடக்கு தேர்தலிற்கு முன்னதாக ரணில் விக்கிரமசிங்கவே தயாமாஸ்டருடன் கதைக்க விரும்பியிருந்தார். ஒரு முன்னாள் பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர் என்ற வகையினில் நானே அவருக்காக தயாமாஸ்டருடன் தொடர்பு கொண்டு பேசியுமிருந்தேன். எனினும் தயா மாஸ்டர் ரணிலுக்கு பதிலுக்கு தொலைபேசி அழைப்பு எதனையும் எடுத்திருக்கவில்லை என தெரிவித்துள்ளார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தி. இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் அண்மையில் குடாநாட்டிற்கு சென்றிருந்த ரணில் பல்வேறு தரப்புக்களையும் சந்தித்திருந்தார். அவ்வகையில் என்னையும் சுன்னாகத்திலுள்ள விருந்தினர் விடுதியொன்றில்; சந்தித்திருந்தார். தான் தமிழ் அரசியல் தலைவர்களை…

    • 2 replies
    • 477 views
  19. கண்டி மல்வத்து, அஸ்கிரி பீடாதிபதிகள் உள்ளிட்ட பௌத்த பிக்குகளும், பொதுபல சேனா உள்ளிட்ட கடும்போக்குடைய அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் சூதாட்டமையம் அமைப்பதற்கு தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், http://tamilworldtoday.com/archives/21085

    • 0 replies
    • 305 views
  20. இந்தியப் புலனாய்வு அமைப்பான "றோ' தான் புலிகளின் தலைவர்களுக்கு போதிய பயிற்சிகளை வழங்கி அவர்களை பலமிக்க சக்தியாக மாற்றியது. 13ஆவது திருத்தத்தை முற்றாக ஒழிப்பதன் மூலமே அதிகாரப் பரவலுக்கான முன்னேற்றத்தை அடைய முடியும் என்று தெரிவித்துள்ளார் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ. கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது: "தேசிய பாதுகாப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ஜெயவர்த்தன சரியான முடிவுகள் எதனையும் எடுக்கவில்லை. இந்தியாதான் போராளிகுழுக்களை வளர்த்து விட்டது. பயிற்சிகளையும் ஆயுதங்களையும் வழங்கியது. இந்திய புலனாய்வு அமைப்பான றோ புலிகளின் தலைவர்களுக்கு போதிய பயிற்சிகளை வழங…

  21. குறைந்தபட்சம் 38 அமைச்சர்கள் 13ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்து வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை நீடிப்பதற்கு ஆதரவளிப்பதற்கான ஆவணத்தில் 38 அமைச்சர்கள் கையொப்பமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 38 ஆளும் கட்சி அமைச்சர்கள் 13ம் திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்யக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை மாற்றியமைப்பது குறித்த யோசனைக்கு அரசாங்கத்தினால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்தால் அதனை எதிர்க்கப் போவதாக அமைச்சர் தேவானந்தா தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டம் முழுமையாக…

  22. இலங்கையில் மாதம்பே சீதுவெல்ல பிரதேசத்தில் உள்ள இந்தியா நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான இரும்புத் தொழிற் சாலையில் வெடிப்பு. இன்று காலை இடம்பெற்ற சம்பவத்தில் பலா் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனா். குண்டு வெடிப்பா அல்லது வேறு காரணமா புத்தகாயாத் தாக்குதலுக்கு பதிலடியா எனப்து குறித்து விசாரணை இடம்பெறுகின்றது http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/93803/language/ta-IN/article.aspx

  23. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் கொழும்புக்கு சென்றுள்ளார். வெளியுறவு அமைச்சர் பேரசரியர் பீரிஸ் மற்றும் சில உயர்மட்ட அதிகாரிகளை அவர் இன்று சந்தித்துள்ளார். இன்று மாலை பாதுகாப்பு செயலாளர் கோதபாஜ ராஜபக்சவை சந்திக்கவுள்ள அவர் ஜனாதிபதியை நாளை சந்திக்கவுள்ளார். தமிழத்தேசிய கூட்டமைப்பு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும் சிவ்சங்கர் மேனன் சந்திக்கவுள்ளதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/93811/language/ta-IN/article.aspx

  24. புத்தகயா மகாபோதி விகாரை மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் தமக்கு உடனடியாக அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு இந்தியாவிற்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசத்திற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=21096

    • 0 replies
    • 344 views
  25. இந்தியா கவலை வெளியிட்டிருந்த போதிலும், சிறிலங்கா 13வது திருத்தச்சட்டத்தை நீர்த்துப்போக வைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்று பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது. புதுடெல்லி சந்திப்புகளை முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பிய பசில் ராஜபக்ச வெளியிட்டுள்ள கருத்துகளை வைத்தே, பிரிஐ செய்தி நிறுவனம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. “நாம் ஒரு பிரேரணையைக் கொண்டு வந்தால், அதை வழக்கமாக விலக்கிக் கொள்ளமாட்டோம். மக்கள் விரும்பினால் தான் அதைத் திரும்பப் பெறுவோம். மக்களின் விருப்பப்படி நாங்கள் அவ்வாறு நடந்து கொண்டதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. இந்த விவகாரத்தில் இந்தியா வலியுறுத்தியதா என்பதில் சில விடயங்கள் நிச்சயமாக இரகசியமாகவே இருக்க வேண்டும்.” என்று பசில் ராஜபக்ச கூறியுள்ளார். எனவே,…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.