ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142966 topics in this forum
-
102,877 குடும்பங்களை சேர்ந்த 373,428 பேர் பாதிப்பு! Nov 29, 2025 - 11:56 AM சீரற்ற காலநிலையால் 25 மாவட்டங்களில் உள்ளடங்கலாக 102,877 குடும்பங்களை சேர்ந்த 373,428 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் அதிகபட்ச மழைவீழ்ச்சி கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. கண்டி, நில்லம்பே பகுதியில் நேற்று (28) 431 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், கேகாலை மாவட்டத்தில் உள்ள டொத்தெலு ஓயா தோட்டத்தில் 277.8 மி.மீ. மழையும், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பொக்கணை பகுதியில் 274 மி.மீ. அளவில் மழையும் பதிவாகியுள்ளது. https://adaderanatamil.lk/n…
-
- 1 reply
- 134 views
- 1 follower
-
-
Published By: Digital Desk 3 29 Nov, 2025 | 12:53 AM அனர்த்த நிலை காரணமாக இரத்த வங்கி ஊடாக மேற்கொள்ளப்படும் இரத்த விநியோகம் ஸ்தம்பிதம். இரத்த தானம் வழங்க முன்வருமாறு தேசிய இரத்தமாற்று சேவை நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. குறிப்பாக நாரஹேன்பிட்ட தேசிய இரத்த மத்தியஸ்தானத்திற்கும், அதிக இரத்தம் தேவைப்படும் பின்வரும் இரத்த வங்கிகளுக்கும் இரத்த தானம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். அதன்படி, நாரஹேன்பிட்டி தேசிய இரத்த மத்தியஸ்தானத்தில் காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை ( 011 236 9931, 011 722 0677) இரத்த தானம் வழங்க முடியும். காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை ராகம போதனா வைத்தியசாலை - 011 296 0535/ 011 2959261 மகரகம ஹோப் வைத்தியசாலை - 011 284 9525/ 011 289 7377 கப்ப…
-
- 0 replies
- 91 views
- 1 follower
-
-
யாழில் சீரற்ற காலநிலையால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு சனி, 29 நவம்பர் 2025 04:33 AM யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 1297 குடும்பங்களைச் சேர்ந்த 4ஆயிரத்து 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார். கடந்த 24ம் திகதி முதல் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணி வரையிலான நிலவரப்படி யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இதனை அறிக்கையிட்டுள்ளது. பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் 311 குடும்பங்களைச் சேர்ந்த 1014 பேரும் சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 240 குடும்பங்களைச் சேர்ந்த 795 பேரும், சங்கானை பிரதேச செயலக பிரிவில் 224 குடும்பங்களைச் சேர்ந்த 725 பேரும், நெ…
-
- 0 replies
- 128 views
-
-
இராணுவப்படையினர் அனர்த்த நிவாரண சேவைகளில் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றனர் - இலங்கை இராணுவத் தளபதி 29 Nov, 2025 | 11:08 AM நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனர்த்த நிவாரண சேவைகளை வழங்குவதற்கு இராணுவப்படையினர் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றனர் என இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை (29) காலை வரையிலான நிலைமை கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, அம்பாந்தோட்டை, மொனராகலை ஆகிய மாவட்டத்தில் சுமார் 12,800 இராணுவத்தினர் அனர்த்த நிவாரண சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொலன்னறுவை, அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் சுமார் 3580 இராணுவத்தினர் அனர்த்த நிவாரண சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள…
-
- 0 replies
- 102 views
-
-
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு! குடிவரவு குடியகல்வு திணைக்களம் வௌியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு இதோ, இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள திடீர் அனர்த்த நிலைமையால் நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வசதிகளை வழங்குவது குறித்துக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, விசா வசதிகளை வழங்குவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் பின்வருமாறு: விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டமை மற்றும் போக்குவரத்துச் சிரமங்கள் காரணமாக நாட்டை விட்டு வெளியேற முடியாமல் விசா காலாவதியான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு, 2025.11.28ஆம் திகதியிலிருந்து அடுத்த 7 நாட்களுக்கு அபராதம் அல்லத…
-
- 0 replies
- 125 views
-
-
இலங்கை வந்த இந்திய மீட்பு குழுவினர் Nov 29, 2025 - 09:37 AM இந்திய மீட்புப் பணிக் குழுவினர் இன்று (29) அதிகாலை இலங்கைக்கு வந்துள்ளனர். இந்திய விமானம் மூலம் இந்தக் குழுவினர் இலங்கையை வந்தடைந்துள்ளனர். இதில் நான்கு பெண்களும் 76 ஆண்களும் அடங்குகின்றனர். மேலும், நான்கு மோப்ப நாய்களும் இந்தக் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களை விரைவில் மீட்கும் நோக்குடன் இந்தக் குழுவினர் இலங்கைக்கு வந்துள்ளனர். அவர்கள் அனர்த்த நிவாரண உபகரணங்களையும் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://adaderanatamil.lk/news/cmijrstq90253o29nh8tcjwu6
-
- 0 replies
- 131 views
- 1 follower
-
-
Published By: Digital Desk 3 29 Nov, 2025 | 12:28 AM பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காகவும் நிவாரணம் வழங்குவதற்காகவும் செயற்படும் விமானப்படையின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்பார்வை செய்தார். இன்றிரவு (28) விமானப்படை தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி குறித்த நடவடிக்கைகளை மேற்பார்வை செய்து தகவல்களை அறிந்துகொண்டார். https://www.virakesari.lk/article/231873
-
- 0 replies
- 123 views
- 1 follower
-
-
அவசர எச்சரிக்கை ! கொழும்பு, வத்தளை பகுதியில் வெள்ளநீர் அளவு மேலும் உயர்வு : உடனடியாக வெளியேற வேண்டுகோள் : படகு சேவைகளுக்கான இலக்கங்கள் இதோ ! Published By: Digital Desk 3 28 Nov, 2025 | 10:11 PM களனி கங்கையை அண்டிய, கொழும்பு, வத்தளை மற்றும் அதனைச் சூழ்ந்த பகுதிகளில் வெள்ளநீர் வேகமாக உயர்ந்து வருவதாக அதிகாரிகள் அவசரமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் விளைவாக வத்தள, ஹுனுப்பிட்டிய, கஹத்துடுவ, எலக்கந்த, பள்ளியாவத்த வீதி உள்ளிட்ட பல பகுதிகளில் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அபாய எச்சரிக்கை வலயத்தில் உள்ள குடியிருப்பாளர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ மையமும், பொலிஸாரும் கேட்டுக்க…
-
- 1 reply
- 213 views
- 1 follower
-
-
29 Nov, 2025 | 12:07 AM தீவிரமான வானிலை காரணமாக கொழும்புத் துறைமுகத்தின் அனைத்து செயற்பாடுகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று இலங்கை துறைமுக அதிகார சபை அறிவித்துள்ளது. தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியான பலத்த மழையும், அதனுடன் கூடிய பலத்த காற்றும் பதிவாகி வருகின்றன. இந்த நிலைமை துறைமுகப் பகுதிகளில் பாதுகாப்பு ஆபத்துகளை உருவாக்கியுள்ளதால், எந்தவித அனர்த்தமும் ஏற்படாத வகையில் செயல்பாடுகளை நிறுத்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பயனாக, கொழும்புத் துறைமுகத்தில் உள்ள அனைத்து முனையங்களின் (Terminals) செயற்பாடுகள், சரக்கு ஏற்ற இறக்க பணிகள், கப்பல் நகர்த்தல் மற்றும் தொடர்புடைய சேவைகள் முழுமையாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 117 views
-
-
28 Nov, 2025 | 11:37 PM வவுனியா, சாந்தசோலை ஏ - 9 வீதியில் நீரில் அடித்துச் சென்ற நிலையில் கார் ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன், அதன் உள்ளே இருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவமானது ஏ9 வீதி சாந்தசோலை சந்திக்கு அருகாமாயில் இடம்பெற்றுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக தெரியவருகையில், ஏ9 வீதி சாந்தசோலை சந்திக்கு அருகாமையில் கார் ஒன்று அடித்து செல்லப்பட்டுள்ளதை அவதானித்த கிராம மக்கள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர். குறித்த தகவலினை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த இராணுவம் மற்றும் பொலிஸார் கிராம இளைஞர்களுடன் இணைந்து குறித்த காரினை மீட்டுள்ளனர். காரினை மீடடுள்ளதுடன், காரில் பயணித்த ஆண் மற்றும் பெண் ஒருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது. உடற்க…
-
- 0 replies
- 165 views
-
-
28 Nov, 2025 | 11:51 PM யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய அனர்த்த நிலவரம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, 28/11/2025 பி.ப 6 மணியளவில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 1,297 குடும்பங்களை சேர்ந்த 4,140 பேர் வெள்ள அனர்த்தத்தினால்பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களில் தென்மராட்சி, நெடுந்தீவு, வேலணை, சண்டிலிப்பாய், சங்கானை பிரதேச செயலக பிரிவுகளில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 106 அங்கத்தவர்கள் பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலகங்களினால் வழங்கப்பட்டு வருகின்றது. இதேவேளை ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 85 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதெனவும் அரியாலை உவர் ந…
-
- 0 replies
- 137 views
-
-
Published By: Digital Desk 3 28 Nov, 2025 | 10:32 PM நாட்டில் நிலவி வரும் தற்போதைய அனர்த்த சூழ்நிலையை முன்னிட்டு, பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இறுதி கட்டத்துக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ அறிவித்துள்ளார். முன்னதாக, மூன்றாம் தவணையின் இறுதி கட்டத்திற்காக பாடசாலைகள் டிசம்பர் 8ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக இத்தீர்மானம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பில், “நாடு முழுவதும் உருவான அனர்த்த நிலைமையை கருத்தில் கொண்டு மாணவர்கள…
-
- 0 replies
- 247 views
- 1 follower
-
-
28 Nov, 2025 | 02:24 PM வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் (தமிழ் தேசிய பேரவை) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவானார். தவிசாளராக செயற்பட்ட தவமலர் சுரேந்திரநாதன், தனது தவிசாளர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் எம்.கே.சிவாஜிலிங்கம் 27 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளராக தெரிவானார். 16 உறுப்பினர்களை கொண்ட வல்வெட்டித்துறை நகர சபைக்கு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 5 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது. எம்.கே.சிவாஜிலிங்கத்தை முதன்மை வேட…
-
- 1 reply
- 152 views
- 1 follower
-
-
28 Nov, 2025 | 05:29 PM (இராஜதுரை ஹஷான்) சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கு பிரதேச செயலாளருக்கு 50 மில்லியன் ரூபா வரையில் செலவழிப்பதற்குரிய நிதி தத்துவங்களை வழங்குவதற்கு மாவட்ட செயலாளர் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி திறைசேரியின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியபெரும செலவு தொடர்பான சுற்றறிக்கையை சகல மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். வெளியிடப்பட்டுள்ள செலவு சுற்றறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நாட்டில் ஏற்பட்டுள்ள அவசர நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விரைவாக நிவாரணமளிப்பதற்கு உரிய பண்டங்கள், செயற்பாடுகள் மற்றும் ஆலோசனையற்ற சேவைகளுக்கு உரிய பெறுகை வழிமுறைகள் மற்றும் கையேடு -…
-
- 0 replies
- 98 views
- 1 follower
-
-
28 Nov, 2025 | 01:05 PM யாழ். காங்கேசன்துறைக்கான புகையிரத சேவை நிறுத்தப்பட்டதால், அநுராதபுரம் புகையிர நிலையத்தில் சுமார் 400 பேர் வரை சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை வழங்க அநுராதபுரம் நகரசபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார். அதிக மக்கள் தொகை சிக்கியயுள்ள நிலையில், உணவு, தண்ணீர் மற்றும் தற்காலிக வசதிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். புகையிரத சேவை மீண்டும் ஆரம்பிக்கும் வரை, சிக்கிய பயணிகள் பாதுகாப்பாக தங்க வைக்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அநுராதபுரம் புகையிர நிலையத்தில் சிக்கியுள்ள சுமார் 400 பேர்! | Virak…
-
- 0 replies
- 192 views
-
-
28 Nov, 2025 | 05:05 PM ( செ.சுபதர்ஷனி) “தித்வா“ சூறாவளியின் தாக்கத்தால் நாடு முழுவதும் பலத்த காற்றும் கனத்த மழையுடனான வானிலை தொடர்வதோடு, நேற்று கொழும்பில் உள்ள பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் வீதியில் மரங்கள் வீழ்ந்தமையால் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்த பட்டிருந்தமுதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை 2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டிருந்ததுடன், தொடரும் வானிலையால் கொழும்பு வரலாறு காணாத மோசமான வெள்ளத்தை சந்திக்க நேரிடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது. வங்காள விரிகுடாவில் இலங்கையின் தென் கிழக்குப் பகுதியை அண்மித்த கடற்கரையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை சூறாவளியாக வலுபெற்று தற…
-
- 1 reply
- 178 views
-
-
28 Nov, 2025 | 05:42 PM (இராஜதுரை ஹஷான்) நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களினால் போக்குவரத்து சேவைகள் முழுமையாக ஸ்தம்பிமடைந்துள்ளன. மலையகத்துக்கான புகையிரத சேவை முழுமையாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபடும் தூர பிரதேச புகையிரத சேவைகள் அனைத்தும் மறு அறிவித்தல் விடுக்கும் வரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகளை கருத்திற் கொண்டு நேற்று மாலையில் இருந்து களனிவெளி புகையிரத வீதி,பிரதான புகையிரத வீதி (மீரிகம),கரையோர பகுதி(அளுத்கம,காலி,)புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பேருந்து சேவைகள் இவ்வாறான நிலையில் கொழும்பில் இருந்து வடக்கு,கிழக்கு உட்பட தூர பிரதேசங்களுக்குமான பேருந்து சேவைகள் …
-
- 0 replies
- 106 views
-
-
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார விசேட அறிவுறுத்தல்! 27 Nov, 2025 | 05:28 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை எதிர்வரும் இரண்டு நாட்களில் அதிக மழையுடன் மோசமான வானிலையாக மாற்றமடையுமென எதிர்பார்க்கப்படுவதால், உயிரிழப்புகளைத் தடுக்கவும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் உடனடியாக தலையிடுமாறு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் உள்ள மக்ககளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தினார். மோசமான வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால அனர்த்த நிலைமை மற்றும் நிவாரண சேவைகள் குறித்து ஆராயும் வகையில் வியாழக்கிழமை (27) முற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசேட கலந்து…
-
- 2 replies
- 208 views
- 1 follower
-
-
28 Nov, 2025 | 01:45 PM தற்போது நிலவும் கடுமையான மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக சேவைகளை மட்டுப்படுத்தி வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மருத்துவ கிளினிக் மற்றும் பிற கிளினிக்குகளுக்கு வருவதை தற்காலிகமாக தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். வானிலை சீரான பின் வழக்கமான சிகிச்சைகளைப் பெற முடியும் என்பதை அறியத் தருகிறோம். குறிப்பாக நாளை யாழ் மாவட்டம் கடுமையாக பாதிக்கபடலாம் என எதிர்வு கூறப்படுகின்றது. கிளினிக் மருந்துகள் கைவசம் இல்லாதவர்கள் கட்டாயம் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அல்லது, இயலாமை இருப்பின், கிளினிக் கொப்பிகளை அனுப்பி மருந்துகளைப் பெறவும் முடியும். மேலதிக தகவல்கள் தேவையெனில், வைத்தியசாலை அனர்த்த முகாம் பிரிவை தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி ம…
-
- 0 replies
- 95 views
- 1 follower
-
-
28 Nov, 2025 | 01:03 PM சீரற்ற வானிலை காரணமாக உருவாகக்கூடிய அனர்த்த நிலைமைகளிலிருந்து பாதுகாப்பாக இருக்கவும், அனர்த்தங்கள் ஏற்படும் போது உடனடியாக தகவலறிந்து செயல்படவும் அவசர அனர்த்த நிவாரண உதவிகளுக்கான தேசிய அவசர தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. அவசர அனர்த்த நிவாரண உதவிகளுக்கான தேசிய அவசர தொலைபேசி எண்கள் பின்வருமாறு ; 1. அவசர அனர்த்த தகவல் வழங்கல் மற்றும் நிவாரண சேவைகளின் ஒருங்கிணைப்பு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையங்கள் (DMC): 117 2. உயிர் பாதுகாப்பு மற்றும் அவசர பாதுகாப்பு தேவைகள், பொலிஸ் அவசர அழைப்பு: 119 3.நோயாளிகளை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக, சுவ வசரிய ஆம்புலன்ஸ் சேவை: 1990 4.தீ விபத்துகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக, தீயணைப்பு படை: 110 5. ந…
-
- 1 reply
- 99 views
- 1 follower
-
-
28 Nov, 2025 | 04:30 PM இலங்கையில் நிலவும் கடுமையான வானிலை மற்றும் சூறாவளி காரணமாக ஏற்பட்ட பாரிய அளவிலான சேதத்தினை முன்னிட்டு, இலங்கை அரசுக்கும் மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஒற்றுமையுடன் கூடிய ஆதரவையும் பாகிஸ்தான் அரசாங்கமும் மக்களும் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஃபஹீம்–உல்–அசீஸ், பாகிஸ்தான் அரசின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உறவினர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துக்கொள்வதுடன், இடம்பெயர்ந்துள்ள ஆயிரக்கணக்கான குடிமக்களுக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கின்றோம். கடுமையான காலநிலை அசாதாரண சூழ்நிலைக்கு இலங்கை அதிகாரிகள் துரிதமாகவும் ஒருங்கிணைந்தவாறும் மேற்கொண்டு வரு…
-
- 0 replies
- 66 views
- 1 follower
-
-
விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு Mano ShangarNovember 28, 2025 10:06 am 0 மோசமான வானிலை காரணமாக, விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் www.srilankan.com என்ற இணையதளத்தில் விமானம் தொடர்பில் அண்மை புதுப்பித்த தகவல்களை சரிபார்க்குமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், 1979 அல்லது +94 117 77 1979 என்ற துரித இலக்கத்திற்கு அழைத்து தகவல்களைப் பெறுமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவுறுத்துகிறது. இதற்கிடையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த ஆறு விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஆறு விமானங்களை இந்தியாவின் திருவனந்தபுரம் மற்றும் கொச்சின் விமான நிலையங்களுக்கு திரு…
-
- 0 replies
- 136 views
-
-
இலங்கைக்கு மீண்டும் சிவப்பு எச்சரிக்கை! - அவசர அறிவிப்பு – காலை 5.00 மணிக்கு வெளியீடு Published By: Priyatharshan 28 Nov, 2025 | 07:23 AM இலங்கையைச் சுற்றி உருவாகியுள்ள டித்வா ‘Ditwah’ சூறாவளிப் புயல் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் மோசமான வானிலையியல் சூழ்நிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அவசர சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், நாடளாவிய ரீதியில் அதிகபட்ச மழை மற்றும் பலத்த காற்று வீசும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. நாட்டின் சில மாகாணங்களில் 200 மில்லிமீற்றரை மீறும் மிக கன மழை பெய்யும் என்றும் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றருக்கு இடைப்பட்ட வேகத்தில் பலத்த காற்றும் சில மாகாணங்களில் மணிக்கு 80 முதல் 90 கிலோமீற்றர் வேகத்தில்…
-
- 0 replies
- 177 views
- 1 follower
-
-
17 Nov, 2025 | 04:58 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் வகையிலான எச்.ஐ.வி தொற்று போக்கு காணப்படுகிறது. இவ்வாண்டில் புதிதாகப் பதிவான பெரும்பாலான எச்.ஐ.வி. தொற்றாளர்களில் ஆண்கயே அதிகளவில் காணப்படுவதாக தேசிய பாலியல் தொற்றுகள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது. தேசிய பாலியல் தொற்றுகள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் தரவுகளுக்கமைய, இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் (ஏப்ரல்–ஜூன்) மாத்திரம் 200 புதிய எச்.ஐ.வி தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். முதல் காலாண்டில் இந்த எண்ணிக்கை 230ஆகப் பதிவாகியுள்ளது. இது 2009ஆம் ஆண்டிலிருந்து ஒரு காலாண்டில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும். ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் பதிவான புதிய தொற்றாளர்களில், 15–24 வயதுக்கு…
-
- 1 reply
- 121 views
- 1 follower
-
-
மோசமான வானிலை; 43,991 பேர் பாதிப்பு, 56 பேர் உயிரிழப்பு. தித்வா சூறாவளியால் ஏற்பட்ட தீவிர வானிலை காரணமாக 12,313 குடும்பங்களைச் சேர்ந்த 43,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.…(Full News in Athavan News) இன்று (28) காலை வரையான தகவலின்படி, மோசமான வானிலை தொடர்பான அனர்த்த சம்பவங்களில் 56 பேர் உயிரிழந்துள்ளனர். 14 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 21 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நான்கு வீடுகள் முழுமையாகவும், 666 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1454076
-
- 0 replies
- 185 views
- 1 follower
-