Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஈ.பி.ஆர்.எல்.எப் இன் பத்மநாபா ஞாபகார்த்த நிகழ்வு இன்று காலை வவுனியா நகரசபை உள்ளக மைதானத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, விடுதலைப்புலிகள் தொடர்பிலும், இறுதி யுத்தம் தொடர்பிலும் தான் தெரிவித்த கருத்துகள் சரியானவையென்றும், அதே நிலைப்பாட்டிலேயே தான் இப்போதும் இருப்பதாகவும் தெரிவித்ததோடு, அக்கருத்துகள் தொடர்பில் தனக்கு எதிராக வெளிவந்த விமர்சனங்களை மறுதளித்து நியாயப்படுத்தி உரையாற்றினார். இதன்போது சபையில் சலசலப்பு ஏற்பட்டதுடன், ‘இந்த மனுசன் கட்டையில போனாலும் தேராது’ என்று முணுமுணுத்தவாறு, சபையை விட்டு பலர் அதிருப்தியுடன் வெளியேறியதை…

  2. இலங்கை அரசுக்கு விடுதலைப் புலிகளை அழிப்பதற்குத் தேவையான அனைத்து நவீன ஆயுதங்களையும் பாகிஸ்தான் வழங்கியதாக அந்நாட்டு இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி அஷ்பாக் பர்வேஸ் கயானி , தியத்தலாவை இராணுவ முகாமில் நடைபெற்ற இராணுவ வீரர்களின் பயிற்சி நிறைவு வைபவமொன்றில் கலந்து கொண்டார். சுமார் இரண்டரை வருடம் பயிற்சியை நிறைவு செய்த கடேற் அதிகாரிகளின் பயிற்சி நிறைவு வைபவம் நேற்று தியத்தலாவை இராணுவ முகாமில் நடைபெற்றது. இதில் 64 அதிகாரிகள் பயிற்சியை நிறைவு செய்து வெளியேறுகின்றனர். இந்த வைபவத்தில் பிரதம அதிதியாக பாகிஸ்தான் இராணுவத் தளபதி அஷ்பாக் பர்வேஸ் கயானி கலந்து கொண்டு இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றிய போது அவர் மேற்கண்ட கருத்தைத் …

  3. மாகாண சபை முறைமை இரத்துச் செய்யப்பட்டாலோ, வலுவிழக்கச் செய்யப்பட்டாலோ அவ்வாறான அரசாங்கமொன்றைத் தாம் பிரதிநிதித்துவப்படுத்தப் போவதில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க.. http://tamilworldtoday.com/?p=19850

  4. வடக்குத் தேர்தலை தடுக்க உயர் நீதிமன்றத்தில் மனு ? நீதிமன்ற நடவடிக்கை மூலமாக வடமாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுவதற்கு அரசு திட்டமிட்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி அரசமைப்பின் 13 வது திருத்தம் மற்றும் மாகாண சபைகள் முறைமை என்பவற்றில் திருத்தங்களை மேற்கொள்ளாது, வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படுமானால் அதன் மூலம் தென்பகுதி மக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும் எனக் குறிப்பிடப்படும் மனுவொன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதே அரசின் நோக்கமாக உள்ளது எனத் தெரிய வருகிறது. இதற்கென அரசின் உயர் மட்டக் குழு ஒன்று தமது நவடிக்கைகள் குறித்து சந்தித்துப் பேசியுள்ளதாகவும் அத்தகைய மனுவொன்று சமர்ப்பிக்கப்படுவதாயின் அது பலம் பொருந்தியதொன்றாக அமைய வேண்டும் எனவும் அந்தக்…

  5. சிறிலங்கா - இந்தியா: இரு நாடுகளினதும் வர்த்தகத்தை 10 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க உடன்பாடு [ ஞாயிற்றுக்கிழமை, 30 யூன் 2013, 07:38 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்கா மற்றும் இந்திய அதிகாரிகள், இரு நாடுகளினதும் வர்த்தக, முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பில் பேச்சுக்களை நடாத்தியுள்ளனர். "சிறிலங்காவின் முதன்மையான வர்த்தகப் பங்களியாக இந்தியா உள்ளது. இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகமானது 5 பில்லியன் டொலர்களை அடைந்துள்ளது. இதனை அடுத்த மூன்று ஆண்டுகளில் 10 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வது தொடர்பில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது" என சிறிலங்கா அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு அய…

  6. ஆசியாவிலேயே மின்சாரக் கட்டணம் சிறிலங்காவில்தான் அதிகம் மின்கட்டணப் பற்றுச்சீட்டைப் பார்த்த அதிர்ச்சியில் ஒருவர் மாரடைப்பால் மரணமாகியுள்ளதாக சனிக்கிழமை அன்று வெளியாகிய சிறிலங்கா ஊடகம் தெரிவித்துள்ளது. தனது மின்சாரக் கட்டணமானது திடீரென அதிகரித்துள்ளதாக கூறி 61 வயதான SP சமரதாச, வெள்ளியன்று கொழும்பிலுள்ள சிறிலங்கா மின்சார சபையிடம் முறைப்பாடு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்திலிருந்து மின்சாரக் கட்டணத்திற்கான வரி அதிகரித்துள்ளாதாலேயே இவரது மின்கட்டணம் அதிகரித்ததாக சிறிலங்கா மின்சார சபை பாதிக்கப்பட்ட நபரிடம் தெரிவித்ததாகவும், இதற்கு மறுநாள் இவர் மாரடைப்பால் மரணமடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இறந்த சமரதாசவின் மின்கட்டணம் எவ்வளவு …

  7. பிரித்தானிய நுழைவிசைவு பெற பிணைப்பணம் - சிறிலங்கா எதிர்ப்பு [ ஞாயிற்றுக்கிழமை, 30 யூன் 2013, 07:15 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] ஆபிரிக்க-ஆசிய நாடுகளைச் சேர்ந்த உயர் ஆபத்தைக் கொண்ட ஆறு நாடுகளில் இருந்து பித்தானியாவுக்கு பயணம் செய்வோர் நுழைவிசைவு [Visa] பெற, 3000 பவுண்சுகளைப் பிணைப் பணமாகச் செலுத்த வேண்டும் என்கின்ற பிரித்தானியாவின் பரிந்துரையை சிறிலங்கா எதிர்த்துள்ளது. பிரித்தானியாவின் இந்தத் தீர்மானம் தொடர்பில் சிறிலங்கா அதிருப்தி அடைந்துள்ளதாக, பிரித்தானிய உயர் ஆணையாளர் ஜோன் றன்கின்னிடம் சிறிலங்கா வெளியுறவு அமைச்சரின் செயலாளர் கருணாதிலக அமுனுகம தெரியப்படுத்தியுள்ளார். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், சிறிலங்கா, நைஜீரியா மற்றும் கானா ஆகிய ஆறு நாடுகளிலிருந்…

  8. மாவையே கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர்! வேட்பாளர்களும் சொந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களே!! 01 ஜூலை 2013 மாவையே கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர்! வேட்பாளர்களும் சொந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களே!! எதிர்வரும் வடமாகாண சபைத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவை நிறுத்த இலங்கை தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.நேற்று கூடிய கட்சியின் யாழ்.மாவட்ட முக்கியஸ்தர்கள் ஒருமித்த முடிவாக மாவை சேனாதிராசாவை முன்னிறுத்த தீர்மானித்ததாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். இன்று திங்கட்கிழமை யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெ…

  9. கருத்தடை மாத்திரைகளை - முஸ்லிம் மருத்துவர்களை - முஸ்லிம் வர்த்தகத்தை பகிஸ்கரிக்க வேண்டும் 01 ஜூலை 2013 கலகொட அத்தே ஞானசார தேரர் நாட்டின் அடுத்த சவால், இளம் தலைமுறையினரிடையே பிரபலமாகி வரும் கருத்தடை மாத்திரைகள் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இதனால் இந்த மாத்திரை பயன்படுத்துவதை தவிர்த்து கொள்ளுமாறு தமது அமைப்பு பௌத்த சிங்கள மக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கட்டுநாயக்கவில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் உள்ள முஸ்லிம் மக்கள் தற்போது அவர்களின் இனத்தை கட்டியெழுப்பி, வர்த்தகம் உட்படஅ அனைத்து துறைகளிலும் மிகவும் சூட்சுமான முறையில் தமது விரிவுப்படுத்தலை மேற்கொண்டு …

  10. தமிழ் அரசியல் கைதிகளில் சிலரை வடமாகாண சபைத் தோ்தில் போட்டியிடுமாறு புலனாய்வு துறையினர் வலியுறுத்து 01 ஜூலை 2013 வெலிக்கடை மகசீன் களுத்துறை சிறைச்சாலைகளி்ல் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் சிலரை வடமாகாண சபைத் தோ்தில் போட்டியிடுமாறு புலனாய்வு துறையினர் வலியுறுத்துவதாக கூறப்படுகின்றது. தமிழத் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக சுயேற்சைக் குழுவில் போட்டியிடுமாறு ஆலோசணை வழங்குவதாகவும் தேவையான நிதிகளை அரசாங்கம் வழங்கும் என்றும் புலனாய்வு துறையினர் கூறுவதாகவும் கைதிகள் தமிழ் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளனா. அகில இலங்கைத் தமிழ்காங்கிரஸில் 1989ஆம் ஆண்டு போட்டியிட்ட நல்லதம்பி செல்லத்துரை, 2010ஆம் ஆண்டு மாம்பளம் சின்னத்தில் சுயேற்சையாக போட்டியிட்ட மதனராஜா ஆகிய இர…

  11. 13வது திருத்தம் தொடர்பான கொள்கையில் மாற்றம் இந்திய பிரதமரின் ஆத்ம கௌரவத்திற்கு பெரும் பாதிப்பு:- 01 ஜூலை 2013 இந்தியா அரசியல் அமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தம் தொடர்பான கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளமையானது இந்திய பிரதமரின் ஆத்ம கௌரவத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது. இலங்கை அரசாங்கம், ஒருதலைபட்சமாக 13வது திருத்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்தினால், இந்தியா - இலங்கை இடையில் காணப்படும் உறவுகளில் முற்றாக மாற்றமடைய கூடும் எனவும் இந்தியா கூறியுள்ளது. இந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த ராஜதந்திர முரண்பாடுகள் காரணமாக, எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்க…

  12. தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் TNAவிற்கு நாட்டமில்லை 01 ஜூலை 2013 தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நாட்டமில்லை என ஜே.என்.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. எந்தக் காலத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகளின் போது இதய சுத்தியுடன் பங்கேற்றதில்லை என ஜே.என்.பி.யின் ஊடகப் பேச்சாளர் முஹமட் முஸாம்மில் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்வது குறித்த பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்கப் போவதில்லை என வழமை போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் கு…

  13. மாகாண சபைக அதிகாரங்களில் திருத்தங்கள் தொடர்பான 05 விடயங்களை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது : 01 ஜூலை 2013 மாகாண சபைகளின் அதிகாரங்களில் திருத்தங்கள் ஏற்படுத்துவது தொடர்பான 05 விடயங்களை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது எனவும் அதனை எவ்வாறு செயற்படுத்துவது என்பதில் தான் அரசாங்கத்தின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் எனவும் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற கட்சியின் மாவட்ட மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் தெளிவாக தனது நிலைப்பாட்டை நாட்டுக்கு கூறவேண்டும். நாம் இந்தியாவுக்கு சென்றிருந்த போது, இந்திய அமைச்சர்களை சந்தித்து எமது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தினோம். இந்திய தூதுவரை சந்தித்து, தெளிவுப்படு…

  14. இடம்பெயர்ந்தோர் வாக்காளர்களாக பதிவுசெய்து கொள்வதற்கான காலஅவகாசம் 09ம் திகதி வரை நீடிப்பு : 01 ஜூலை 2013 போர் நடைபெற்ற காலத்தில் பல்வேறு காரணங்களால் வடக்கு, கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களில் வசிப்பவர்களில், தம்மை வாக்காளர்களாக பதிவுசெய்து கொள்ளாதவர்கள், தம்மை பதிவுசெய்து கொள்வதற்கான காலஅவகாசம் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். வடக்கு, கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள், 2012 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய தவறியவர்கள், தம்மை பதிவுசெய்வதற்காக விண்ணபிக்க வழங்கப்பட்ட காலஅவகாசம் கடந்த மாதம் 28 ஆம் திகதியுடன் முடிவடைந்தது. விடுக்கப்ப…

  15. இலங்கையர்கள் வெளிநாட்டு வங்கிகளில் கணக்குகளைப் பேண விரும்புகின்றனர் 01 ஜூலை 2013 இலங்கையர்கள் வெளிநாட்டு வங்கிகளில கணக்குகளைப் பேணுவதற்கு விரும்புவதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வரி ஏய்ப்பில் ஈடுபடுவதற்காகவும், அரசாங்கத்தின் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு அஞ்சியும் இவ்வாறு அதிகளவான இலங்கையர்கள் வெளிநாட்டு வங்கிகளில் கணக்குகளைப் பேணி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிசினஸ் டைம்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பின் மூலம் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்நாட்டு நிதிக் கொள்கைகள் மற்றும் கப்பம் கோருவோரிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் இவ்வாறு வெளிநாட்டு வங்கிகளில் பணத்தை வைப்பிலிட விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். எனினும் பெரும்பான்மையானவர்கள் வரி …

  16. - எஸ்.எம்.எம்.முர்ஷித் மீள்குடியேற்றக் கிராமமான நாவலடி பிரதேசத்திலுள்ள மஸ்ஜிதுல் அந்நூர் பள்ளிவாசல் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிவாசல் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிவாசலில் கடமை புரியும் மௌலவி எச்.எம்.இர்பான் கருத்துத் தெரிவிக்கையில், "நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இஷா நேரத் தொழுகை முடிந்தவுடன் இரவு 9 மணியளவில் பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளது. பள்ளிவாயலில் கடமை செய்பவர் இன்று அதிகாலை தொழுகைக்காக காலை 04 மணியளவில் பள்ளிவாயலுக்கு வந்தபோது பள்ளிவாயல் உடைந்து காணப்பட்டுள்ளது. பள்ளிவாயலில் உள்ள இரண்டு உண்டியல்களும் உடைக்கப்பட்டு பணம் எடுக்கப்பட்டுள்ளதுடன் அல…

  17. இந்தியாத் தூதரகம் மீதும், ''றோ'' புலனாய்வுப் பிரிவினர் மீதுமே இந்தச் சந்தேகம் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=19821

    • 0 replies
    • 552 views
  18. வடக்கில் தேர்தல் நடாத்துவது குறித்து சர்வதேசத்திற்கு தாம் எவ்வித வாக்குறுதியையும் வழங்கவில்லை என இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=19800

    • 0 replies
    • 435 views
  19. இன்று பாரிசில் நடைபெற்ற குர்திஸ்தான் இளைஜர் எழுச்சி விழாவில் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, தமிழீழ மக்களின் ஆதரவை குர்திஸ்தான் மக்களின் விடுதலை போராட்டத்திற்கு தமது ஆதரவை தெரிவித்து குர்திஸ்தான் மக்களின் கலை காலாச்சார, பாரம்பரிய நடனம், பாரம்பரிய விளையாட்டு விழாவில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சார்செல் நகரில் நெல்சன் மண்டேலா விளையாட்டு அரங்கில் செயின் செயின் டேனி பாராளுமன்ற உறுப்பினரும் சர்செல் நகரபிதா Francois Pupponi யும் கலந்து கொண்டு குர்திஸ்தான் மக்களின் விடுதலை போராட்டத்திற்கும், தமிழீழ மக்களின் விடுதலை போராட்டத்திற்கு தமது ஆதரவை தெரிவித்தார். இந்த நிகழ்வில் தமிழீழ மக்கள் சார்பில் "வெற்றி என்றாலும் தோல்வி என்றாலும் தமிழ் மக்களுக்கு விடுதலை கிடைக்கும…

  20. கொழும்பிற்கான நோர்வேத் தூதுவராக இருப்பவர் ஒரு பெண்மணி. அவர் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துள்ளார். அந்தப் பெண் தூதுவர் தனது வாழ்க்கைத் துணையைக் கொழும்புக்க அழைக்க இலங்கை வெளிநாட்டமைச்சிடம் அனுமதி கோரியுள்ளது மஹிந்த ராஜபகசவை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது என சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக் குடியரசுத் தலைவரின் உறைவிடமான அலரி மாளிகையில் மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்த சிங்கள பௌத்த இனவாத அமைப்பான பொது பல சேனா நோர்வேத் தூதுவரின் திருமணத்தையும் அவர் தனது பெண் வாழ்க்கைத் துணையை இலங்கைக்கு அழைப்பது பற்றியும் தமது ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளது. நோர்வேயில் ஒரு பெண் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்ய சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் இலங்கையில் அதற்கு சட்டத்தில் இடமில்லை…

    • 4 replies
    • 979 views
  21. லண்டனில் நடக்கும் பனிப்போர்: நேற்றும் சிங்களவர் மீது தாக்குதல் ! லண்டனில் நேற்று இரவு கொலின்டேல் பகுதியில் வைத்து சிங்கள இளைஞர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். லண்டன் ஓவல் மைதானத்தில் தமிழர்கள் மீது வசைபாடிய கனிஷ்க பெரேரா என்பவரின் நண்பர்கள் சிலர் நேற்று கொலின்டேல் பகுதியில் உள்ள மது அருந்தும்சாலை(பப்) முன்னால் கறுப்பு நிற BMW வாகனத்தில் நின்றுள்ளார்கள். இவர்களை அடையாளம் கண்ட நபர் ஒருவர், தமது நண்கபர்களுக்கு தொலைபேசியூடாக தகவலைத் தெரிவித்துள்ளார். இருப்பினும் குறிப்பிட்ட இச் சிங்களக் கும்பல் பிறிதொருவிடையமாக அங்கே ஒரு தமிழரைக் காணவே வந்திருந்தார்கள் என்பது பின்னர் தெரியவந்துள்ளது. இருப்பினும் அதற்கு முன்னதாகவே இச் சிங்களக் கும்பல் மீது இனந்தெடியாத நபர…

    • 17 replies
    • 1.4k views
  22. அரசிலிருந்து மு.கா. விலக வேண்டும் என நினைப்பது கோவணத்தை தலைப்பாகையாக அணிவது போன்றது: ஹக்கீம் அரசிலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறவேண்டுமென சிலர் நினைப்பது கோவணத்தைக் கழற்றி தலைப்பாகை சுற்றுவது போன்ற ஒரு செயலாகும் என்று நீதிஅமைச்சர் றவூப் ஹகீம் தெரிவித்தார். (30.6.213) இன்று கண்டியில் நடந்த கூட்டமொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது- ஒருவருக்கு தலையை மூடவும் வேண்டும். அதே நேரம் இருக்கும் சிறிய துணியைக் கொண்டு தனது மானத்தை பாதுகாக்கவும் வேண்டும். அப்படியான சந்தர்ப்பங்களில் அவர் தனது கோவணத்தை கழற்றி தலைப்பாகை அணிய மாட்டார். அதுபோல இருக்கின்ற சொற்ப அங்கத்தவர்களையாவது நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமே ஒழிய வேறொன்றை மறைப்தற்கு அத…

  23. -மொஹொமட் ஆஸிக் ஜனாதிபதியை பணயக் கைதியாக்க சில சக்திகள் முயற்சிக்கின்ற என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இந்த சக்திகளே மக்களின் உணர்வுகளை தூண்டி அரசியல் இலாபம் பெற முயற்சிக்கின்றன என அவர் குறிப்பிட்டார். கண்டியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், "நாட்டின் அரசியல் களம் இன்று ஒரு வகையாக சூடு பிடித்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் காங்கிரஸ் என்ன தீர்மானம் எடுக்கப் போகின்றது என்பது சம்பந்தமாக பலர் கேள்வி எழுப்புகின்றனர். முஸ்லிம் காங்கிரஸ் அரசிலிருந்து விலகி இவைகளுக்கு பதில் கொடுக்க வேண்டும் என்றும் சிலர் எதிர…

  24. இலங்கையின் வடகிழக்கு மாகாணப் பகுதி மற்றும் போலீஸ் நிர்வாகத்திற்கு அதிகாரங்கள் வழங்குவது குறித்த 13-வது சட்டத்திருத்தத்தை இந்தியாவின் மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கையின் அப்போதைய அதிபர் ஜெயவர்த்தனேவும் 1987-ம் ஆண்டு கொண்டு வந்தனர். அதன் மீது ஜே.வி.பி. கட்சி கொண்டு வந்த வழக்கை தொடர்ந்து அந்த 13-வது சட்டத்திருத்தம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் தமிழர்களின் பகுதிகளான வடகிழக்கு மாகாணங்களுக்கு தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கு முன்னரே அந்த சட்ட அதிகாரத்தை குறைக்கும் வேலையில் இலங்கை ராஜபக்சா அரசு இறங்கியுள்ளது. இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அதிபர் ராஜபக்சாவின் இளைய சகோதரரும் ஆலோசகருமான பசில் ராஜபக்சே ஜூலை 4-ம் தேதி இந்தியா வருகிறார். …

    • 0 replies
    • 481 views
  25. இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தவறானவை – ஜனாதிபதி 30 ஜூன் 2013 இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தவறானவை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மலேஷிய பிரதமர் நாஜீப் ராஸாக்கிடம் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது தன்சானியாவிற்கு விஜயம் செய்துள்ள இரு நாட்டு ஜனாதிபதிகளும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இரு தரப்பு விவகாரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மலேஷிய பிரதமருக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார். குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நியாயமான மதிப்பீடுகள் செய்யப்பட வேண்டியது அவசியமான…

    • 1 reply
    • 399 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.