Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published By: DIGITAL DESK 7 27 MAY, 2024 | 03:31 PM யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டுகள் அதிகரித்து உள்ளதாகவும், திருடப்படும் மோட்டார் சைக்கிள்கள் உடனேயே உதிரிபாகங்களாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாண நகர் பகுதிகளை அண்மித்த பகுதிகளில் சில மாதங்களில் 32 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளன. அவை தொடர்பிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. விசாரணைகளின் போது, திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை உடனேயே உதிரிபாகங்களாக பிரித்து விற்பனையில் ஈடுபடுகின்றனர். அதானல் மோட்டார் சைக்கிள்களை மீட்பதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக பொலிஸா…

  2. 27 MAY, 2024 | 01:54 PM திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமத்தில் அமைந்துள்ள முள்ளிப்பொத்தானை சிங்கள மகா வித்தியாலய மாணவர்களும் பெற்றோர்களும் இன்று (27) வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முள்ளிப் பொத்தானை சிங்கள மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதை சுட்டிக்காட்டியே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/184597

  3. Published By: VISHNU 27 MAY, 2024 | 02:20 AM பொலன்னறுவை வெள்ளப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவின் ஹந்தபன்வில்லு ஏரியில் உயிரிழந்த ஏழு காட்டு யானைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் பின்னர் சுற்றித் திரிந்த காட்டு யானைகள் ஓடை கால்வாயை கடக்கும் போது சேற்றில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த யானைகளில் 8 முதல் 10 வயதுக்குட்பட்ட ஐந்து குட்டி யானைகளும், 30 முதல் 35 வயதுடைய இரண்டு காட்டு யானைகளும் என நம்பப்படுகிறது. https://www.virakesari.lk/article/184564

  4. Published By: DIGITAL DESK 7 27 MAY, 2024 | 01:37 PM வவுனியா மாவட்டத்தில் இதுவரை 123 தொழுநோயாளர்களும், இதில் செட்டிகுளம் பிரதேசத்தில் 69 தொழு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் வைத்திய அதிகாரி சுஜானி தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை (27) இடம்பெற்ற வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் தொழுநோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது, தொழுநோய் தொற்றும் முறை மற்றும் அதன் அறிகுறிகள், அதற்கான மருத்துவ உதவிகள் போன்ற விடயங்களையும் தெரிவித்திருந்தார். மேலும், இக்கருத்தரங்கில் பொது அமைப்புக்களின் பிரதிந…

  5. 26 MAY, 2024 | 03:13 PM வவுனியா வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக மாற்றப்பட்டு, வவுனியா பல்கலைக்கழகத்தில் புதிய மருத்துவ பீடமொன்று ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் தெரிவித்தார். இன்று (26) மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட வைத்திய புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலைய திறப்பு விழாவில் இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், மேல் மாகாணத்தை போன்று உயர்தர சுகாதார சேவைகளை கொண்ட மாகாணமாக வட மாகாணத்தை அபிவிருத்தி செய்வதே தமது நோக்கம் என்றும் அதற்காக கடந்த இரு வருடங்களில் வடக்கில் 4 மருத்துவ பிரிவுகள் திறந்து வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk…

  6. Published By: DIGITAL DESK 3 27 MAY, 2024 | 12:02 PM கடந்த சில நாட்களாக ரம்சா சதுப்பு நிலமான ஆனைவிழுந்தான் சரணாலயத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் மற்றும் மீன்கள் உயிரிழந்துள்ளன. சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடமான ஆனைவிழுந்தான் சரணாலயத்தில் இக்காலப்பகுதியில் இடம்பெயர்ந்து வரும் பறவைகள் சுதந்திரமாக வாழ்ந்து இனப்பெருக்கம் செய்யும். இந்நிலையில், அப்பகுதியிலுள்ள தொழிற்சாலை ஒன்றிலிருந்து கொட்டப்படும் இரசாயனக் கழிவுகளால் பறவைகள் மற்றும் மீன்கள் இவ்வாறு உயிரிழந்திருக்கலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த மீன்கள் மற்றும் பறவைகளின் மாதிரிகள் பரிசோதனைக்காக பேராதனை சிறப்பு கால்நடை மருத்துவப் பிரிவுக்கு அனுப்…

  7. 27 MAY, 2024 | 10:05 AM இலங்கையின் மூலோபாய வளங்கள் சொத்துக்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருவதற்கான மற்றுமொரு உதாரணங்களாக இலங்கையின் காரீய சுரங்கங்களில் முதலீடு செய்வதற்கு இந்தியா, சீனா, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் போட்டியிடுகின்றன. ஏற்கனவே இந்த தொழில்துறையில் கனடா, அவுஸ்திரேலியா நிறுவனங்கள் தங்களை ஈடுபடுத்தியுள்ள நிலையிலேயே இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் முதலீடு செய்வதற்கான ஆர்வத்தை வெளியிட்டுள்ளன. இலங்கையில் உயர்தர காரீயம் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். புவியியல் மற்றும் சுரங்க ஆய்வு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ரஞ்சித் பிரேமசிறி இந்தியா சீனா உட்பட பல வெளிநாடுகள் இந்த து…

  8. 26 MAY, 2024 | 01:57 PM வைத்தியர்கள் தமது பட்டப்படிப்பை முடித்த பின்பு குறைந்தது மூன்று வருடமாவது தமது மாகாணத்தில் சேவையாற்ற வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்த அடுத்துவரும் அமைச்சரவையில் பத்திரமொன்றை சமர்பிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். பெண்கள் மருத்துவம் மற்றும் பராமரிப்புக்கான சிறப்பு நிலையத்தின் திறப்பு விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய அமைச்சர், நெதர்லாந்து அரசாங்கத்தின் இலங்கைக்கான இலகு கடன் உதவியாக ரூபா 50,320 மில்லியன் ரூபாய் செலவில் இந்த நிலையம…

  9. தற்கொலை குண்டுதாரிகளை பிரபாகரன் உருவாக்கியதற்கான காரணம் இதுதான் – வவுனியாவில் அநுர தெரிவிப்பு! இந்த நாட்டிலுள்ள வடக்கு – தெற்கு ஆட்சியாளர்களே மக்கள் மத்தியில் பாரிய இனவாதத்தை தூண்டி, மாபெரும் யுத்தத்தை உருவாக்கியதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். மேலும், 1981 இல் தேர்தலில் வெற்றி காண்பதற்காக, ரணில் விக்கிரமசிங்கவே யாழ். நூலகத்தை எரித்தான எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். வவுனியாவிலுள்ள இரட்டைபெரியகுளம் விருந்தினர் விடுதியில் நேற்று இடம்பெற்ற, தேசிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவி…

  10. Published By: DIGITAL DESK 7 26 MAY, 2024 | 02:59 PM ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமக்களுக்கு காணிகளை கையளித்து அதன் முழு உரித்தையும் அவர்களுக்கு வழங்குவது வரவேற்கப்பட வேண்டிய விடயமாக இருந்தாலும் அவர் அரசியலமைப்பை மீறி காணி அதிகாரத்தினைப் பயன்படுத்தியுள்ளார் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். கிளிநொச்சியில் நேற்று சனிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நீண்…

  11. 26 MAY, 2024 | 02:02 PM நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியில், 4500 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட முல்லைத்தீவு மாங்குளம் ஆதார வைத்தியசாலை மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையம் சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்துவைக்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் பிரதமராக பதவி வகித்த 2017ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்த நிலையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. https://www.virakesari.lk/article/184517

  12. விக்னேஸ்வரனின் வீட்டில் ரணில் இரகசிய கலந்துரையாடல்! (இனியபாரதி) நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனின் வீடு தேடிச் சென்று, அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க (25)இன்று மாலை சந்தித்தார். இதன்போது எதிர்வரும் அரச தலைவர் தேர்தல் தொடர்பில் அவருடன் ஆராய்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.(ப) விக்னேஸ்வரனின் வீட்டில் ரணில் இரகசிய கலந்துரையாடல்! (newuthayan.com)

  13. 26 MAY, 2024 | 07:49 AM வவுனியா கனகராயன்குளம் காட்டு பகுதியில் யானையுடன் மோதி ரயிலொன்று தடம்புரண்டுன்டுள்ளது. இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை (25) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் யாழில் இருந்து அனுராதபுரம் நோக்கி சென்ற ரயில் கனகராயன்குளம் காட்டு பகுதியில் புகையிரத பாதையினை ஊடறுத்து சென்ற யானை மற்றும் குட்டியுடன் மோதுண்டுள்ளது. இதன் காரணமாக யானை சம்பவ இடத்திலே பலியாகியுள்ளதுடன், யானை குட்டி காயங்களுடன் பொதுமக்களின் உதவியுடன் மீட்கப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைக்காக வனஜீவராசிகள் திணைக்களத்தினால் எடுத்துச் செல்லப்பட்டது. மேலும் குறித்த விபத்து காரணமாக நான்கு மணி நேரத்தின் பின்னர் சம்பவ இடத்துக்கு பி…

  14. கல்வி உயர் மட்டத்தில் பேணப்பட்டதனாலேயே யாழ்ப்பாணம் கட்டியெழுப்பப்பட்டது – யாழில் ஆசிரியர்களுக்கான நியமனங்களை வழங்கி வைத்த ஜனாதிபதி தெரிவிப்பு! கல்வி உயர் மட்டத்தில் பேணப்பட்டதன் காரணமாகவே யாழ்ப்பாணம் கட்டியெழுப்பப்பட்டதாகவும், யாழ்ப்பாணத்திலுள்ள சில பாடசாலைகள் உலகம் முழுவதும் பெரும் புகழைப் பெற்றதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தின் யாழ். மாவட்டத்தில் புதிய ஆசிரியர்களுக்கான நியமனங்களை வழங்கி வைத்த ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். யாழ்.மாவட்டத்திலுள்ள புதிய ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு, யாழ்ப்பாணம் தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போது, வடக்கு மாகா…

  15. சிறிலங்கன் விமான சேவையை வாங்கப் போவது யார்? இறுதிச் சுற்றில் மூன்று நிறுவனங்கள் May 26, 2024 சிறிலங்கன் ஏர்லைன்சை வாங்கப் போகும் மூன்று நிறுவனங்களை அந்நாட்டு அரசு இறுதிச் சுற்றுக்கு தெரிவு செய்துள்ளதாக கொழும்புத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை கொள்வனவு செய்ய விருப்பம் தெரிவித்த ஆறு நிறுவனங்களில் மூன்று, அமைச்சரவையால் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், Sheriza- Supreme group மற்றும் Hayleys கொம்பனி ஆகிய இரண்டு உள்ளூர் நிறுவனங்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், சிறிலங்கன் ஏர்லைன்சை கொள்வனவு செய்யும் மூன்று இறுதிப் போட்டியாளர்களில் ஆசியாவில் குறைந்த கட்டண விமான சேவையான Air asia-வும் உள்ளதாக தெரிவிக்கப்பட…

  16. அனைத்து அசையும், அசையா சொத்துக்கள் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல்! adminMay 25, 2024 அரச நிறுவனங்கள் உட்பட இலங்கை பிரஜைகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான தகவல்களை உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் வழங்க வேண்டும் என விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அத்துடன், இலங்கைப் பிரஜைகளின் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் வாகன உரிமைப் பரிமாற்றங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அதிகாரிகள் பயன்படுத்தும் தகவல்களையும் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் …

  17. Published By: DIGITAL DESK 3 25 MAY, 2024 | 05:34 PM “உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் 04 பிரதேச செயலகங்களையும் உள்வாங்கி 1,700 இலவச காணி உறுதிப் பத்திரங்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கி வைத்தார். இந்நிகழ்வு இன்று சனிக்கிழமை (25) இரணைமடு பிரதேசத்தில் நடைபெற்றது. https://www.virakesari.lk/article/184460

  18. யாழ். போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் - ஜனாதிபதி ரணில் 24 MAY, 2024 | 01:55 PM யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதன் மூலம் வடக்கில் சிறந்த சுகாதார கட்டமைப்பை உறுதிப்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி கூறினார். யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கான மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டடத்தை இன்று (24) திறந்துவைத்ததை தொடர்ந்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/184375

  19. Published By: DIGITAL DESK 3 25 MAY, 2024 | 03:47 PM வடக்கில் அரசாங்க அதிபர்கள் மற்றும் அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம் அரசியல் காரணமாக பின்னடிப்புச் செய்யக் கூடாதென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களிலுமுள்ள நிரந்தர ஜிஏக்கள் ஓய்வு பெற்று சுமார் 03 மாதங்களாகியும் நிரந்தர அரச அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. கூடுதல் GAக்கள் அந்த கடமைகளை உள்ளடக்கி உள்ளனர். தகுதியான தமிழ் சிறப்பு தர SLAS அதிகாரிகள் நியமனத்திற்கு தகுதி இருந்தும் முக்கியமான பொதுப் பதவிகளுக்கு இந்த மூத்த அ…

  20. Published By: DIGITAL DESK 3 25 MAY, 2024 | 03:15 PM கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். கிளிநொச்சி மாவட்ட வலிந்து ஆக்கப்பட்ட உறவுகள் சார்பில் கதிர்காமநாதன் கோகிலவாணி மேலும் தெரிவிக்கையில், இன்று கிளிநொச்சிக்கு ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம ஒன்றினை மேற்கொண்டுள்ளார். அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நிகழ்த்த திட்டமிட்டிருந்ததாகவும், அந்த போராட்டத்திற்கு நீதிமன்ற தடை உத்தரவு விதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். தமது பிள்ளைகளை யுத்த காலத்தில் இராணுவத்திடம் கையால் ஒப்படைத்தும் விசாரணைக்கு என்று அழைத்து ச…

  21. வெளிவருகிறது பொன்சேகாவின் போா் குறித்த நுால் – பல உண்மைகள் வெளிவரும் எனத் தகவல் May 25, 2024 சஜித் பிரேமதாசவுடன் நிலவும் முரண்பாடுகளின் காரணமாகவே ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தான் தலைமை தாங்கிய இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் எழுதிய புத்தகத்தை வெளியிடவுள்ளதாகவும் இதன் மூலம் இதற்கு முன்னர் வெளிவந்த கோட்டாபய ராஜபக்ச மற்றும் கமல் குணரத்ன ஆகியோரின் புத்தகங்களிலுள்ள பல விடயங்கள் பொய்யென நிரூபிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தற்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, சஜித் பிரேமதாச போன்றவர்கள் பற்றிய பல உண்மைகளை இந்தப் புத்தகம் வெளிப்படுத்த…

      • Like
      • Thanks
    • 4 replies
    • 505 views
  22. தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்து அமெரிக்கா அதிருப்தி! தொல்பொருள் திணைக்களமானது பௌத்த பிக்குகள் மற்றும் ஏனைய அரச கட்டமைப்புக்களுடன் ஒன்றிணைந்து பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதற்காக வட, கிழக்கு மாகாணங்களில் இந்து மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளை ஆக்கிரமித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக சர்வதேச மதச் சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழு (United States Commission On International Religious Freedom), மதச்சுதந்திரத்துடன் தொடர்புடைய விவகாரத்தில் இலங்கையை விசேட கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்குமாறு ஜோ பைடன் தலைமையிலான அரசாங்கத்துக்குப் பரிந்துரை செய்துள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களில் பௌத்த பிக்…

  23. தமிழ் காவல்துறையினரை கட்டாயப்படுத்தி பிரித் ஓத வைத்த காவல்துறை உயர்மட்டம் adminMay 25, 2024 யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள கெமுனு விகாரையில் நடைபெற்ற வெசாக் வழிபாட்டிற்காக தமிழ் காவல்துறை உத்தியோகஸ்தர்களை கட்டாயப்படுத்தி அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. காங்கேசன்துறை குமார கோவில் வளாகத்தில் கெமுனு விகாரை அமைக்கப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் குமார கோவில் இருந்தவேளை, ஆலயத்திற்கு முன்பாக இராணுவத்தினரால் கெமுனு விகாரை எந்தவிதமான அனுமதிகளும் பெறப்படாது நிர்மாணிக்கப்பட்டது. தற்போது குறித்த பகுதிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் மீள்குடியேறி …

  24. எதிர்வரும் தேர்தலின் பின்னர் அரசியலில் ஈடுபட மாட்டேன் : விஜயகலா மகேஸ்வரன் அறிவிப்பு! கடந்த காலங்களில் தவறாக மக்கள் வாக்களித்ததால் தான் பல மோசமான தலைவர்கள் ஆட்சிக்கு வந்து நாட்டை சோமாலியாவின் நிலைக்குக் கொண்டு சென்றார்கள் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்தார். ஆனால், தேர்தலில் படுதோல்வியடைந்தும் இன்று ஒரு ஆசனத்துடன் ஆசியாவின் சிறந்த தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களுக்கு சேவையாற்றுகின்றார் என விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். …

  25. Published By: DIGITAL DESK 3 25 MAY, 2024 | 10:21 AM கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் 5,320 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையம் (Centre of Excellence for Women’s Healthcare) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று சனிக்கிழமை (25) திறந்து வைக்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன், அரசாங்கம் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/184430

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.