Jump to content

வவுனியாவில் யானையுடன் மோதி தடம்புரண்ட ரயில் : தாய் யானை பலி, யானைக் குட்டி காயங்களுடன் மீட்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
26 MAY, 2024 | 07:49 AM
image
 

வவுனியா கனகராயன்குளம் காட்டு பகுதியில் யானையுடன் மோதி ரயிலொன்று  தடம்புரண்டுன்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை (25)  மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் யாழில் இருந்து அனுராதபுரம் நோக்கி சென்ற ரயில் கனகராயன்குளம் காட்டு பகுதியில் புகையிரத பாதையினை ஊடறுத்து சென்ற யானை மற்றும் குட்டியுடன் மோதுண்டுள்ளது.

இதன் காரணமாக யானை சம்பவ இடத்திலே பலியாகியுள்ளதுடன், யானை குட்டி காயங்களுடன் பொதுமக்களின் உதவியுடன் மீட்கப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைக்காக வனஜீவராசிகள் திணைக்களத்தினால் எடுத்துச் செல்லப்பட்டது.

மேலும் குறித்த விபத்து காரணமாக நான்கு மணி நேரத்தின் பின்னர் சம்பவ இடத்துக்கு பிறிதொரு புகையிரத சேவை ஊடகவே பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/184483

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.