ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை கவரும் பொருட்டு பாராளுமன்றத்துக்கு காற்சட்டை அணிந்து செல்வதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார். மேலும் இனிமேல் பாரம்பரிய உடையுடன் பாராளுமன்றத்துக்கு செல்லப்போவதில்லையெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பொது நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ரோசி சேனாநாயக்க, உபேக்ஷா சுவர்ணமாலி போன்ற அழகான பெண் பாரளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும் அவர்களின் பார்வையை தன் பக்கம் திருப்ப விரும்புவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இம்முடிவை அடுத்து தற்போது பாராளுமன்றத்துக்கு காற்சட்டை அணிந்து செல்வதாகவும், இதனால் பெண் உறுப்பினர்களின் பார்வை தன் பக்கம் திரும்பியுள்ளதாகவும் அமைச…
-
- 7 replies
- 768 views
-
-
புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காகவே, தாம் உள்ளிட்ட பிக்குகள், வெளிநாடு சென்றதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தேச ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நோர்வே பிரஜை ஒருவரின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டதாகவும் புலம் பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமது அமைப்புக்கு பெரும் தேவை இருந்தது எனவும் அவர் கூறியுள்ளார். பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் முழுமையான அறிவுறுத்தல்களுடனேயே தமது அமைப்பின் பிக்குமார் அமெரிக்காவுக்கு சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டுக்கு வெளியில் நாட்டை நேசிக்கும் தேசப்பற்றாளர்கள் இருப்பதாகவும் துரதிஷ்டவசமாக அவர்கள் இலங்கை சமூகத்திற்குள் இல்லை எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். ப…
-
- 5 replies
- 464 views
-
-
வன்னி இறுதிக் கட்டப் போரின் போது ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் செயற்பட்ட விதம் தொடர்பில் ஆராய்ந்த "சாள்ஸ் பெற்றிக்' அறிக்கை, அடுத்த மாத இறுதிக்கு முன்னர் தயாராகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. பிரதிப் பொதுச் செயலாளர் யான் எலியசன் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் இடம்பெற்ற வாராந்த செய்தியாளர் சந்தின்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். குறித்த அறிக்கை தொடர்பான விவாதம் பலமணி நேரம் தொடரும் என்றும் இவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இது தொடர் பான ஒன்றரை மணிநேர வீடியோ காட்சி ஒன்று ஒளிப்பரப்புச் செய்யப்பட வுள்ளதாகவும் அவர் குறிப் பிட்டார். இறுதிப் போரின்போது ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் செயற்பட்ட விதம் திருப்தி இல்லை என்று பரவலாகக் குற்றம் ம…
-
- 1 reply
- 493 views
-
-
2007 ஆம் ஆண்டு கொழும்பில் தன் மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பாக அன்றைய இராணுவத் தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேக்கா சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளதாக இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரின் ஆலோசனையின்படி தன் மீது அந்த தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக பொன்சேக்கா கூறியுள்ளார். குண்டு தாக்குதல் தொடர்பாக வாக்;குமூலம் ஒன்றை பெறுவதற்காக புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் பொன்சேக்காவை தொடர்பு கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறே அந்த தொலைபேசி உரையாடல் நடந்துள்ளது. அதிகாரி - பொன்சேக்கா அவர்களே உங்கள் மீது நடத்தப்பட்ட குண்டுத…
-
- 6 replies
- 508 views
-
-
வங்காள விரிகுடாவின் தென்கிழக்காகக் காணப்பட்ட சூறாவளிப் புயலானது, தற்போது மட்டக்களப்பிலிருந்து கிழக்காக 900 கிலோ மீற்றர் தூரத்திற்கப்பால் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மகாசென் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளிப்புயலானது, வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதன் தாக்கத்தினால் கிழக்கு மற்றும் தென் கிழக்கின் 300 கிலோ மீற்றர் தூரத்திற்கப்பாலுள்ள ஆழ்கடல் பிரதேசங்கள் கடும் கொந்தளிப்பாகக் காணப்படும். அத்துடன் மேற்குறிப்பிடப்பட்ட ஆழ்கடல் பிரதேசங்களில் கடும் காற்றுடன் மழையும் காணப்படும். இதனால் மீனவர் சமூகம் மற்றும் கடல்சார் தொழிலாளர்கள் மேற்குறிப்பிடப்பட்ட ஆழ்கடல் பிரதேசங்களில் தங்களது கடல் நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்க…
-
- 0 replies
- 453 views
-
-
வடமாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் அரசமைப்பில் கைவைத்தால் அது பொதுநலவாய மாநாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவேதான், இவ்விரண்டு நிகழ்வுகளும் முடிவடைந்த பின்னர் அரசமைப்பில் திருத்தம் கொண்டுவருவது சம்பந்தமாக பரிசீலிக்கப்படவுள்ளது. அரசமைப்பில் உடனடியாகத் திருத்தங்களை மேற்கொள்ளாதிருக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு நேற்று தீர்மானித்துள்ளது என நம்பகரமாக அறியமுடிகின்றது. இதன்படி வடமாகாணசபைத் தேர்தல், பொதுநலவாய மாநாடு ஆகியன முடிவடைந்த பின்னரே அரசமைப்பில் மாற்றம் கொண்டு வருவது சம்பந்தமாக அரசு பரிசீலிக்கவுள்ளது. வடமாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் அரசமைப்பில் சிற்சில திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசு முன்னதாகத் தீர்மானித்திருந்த போதிலும் …
-
- 0 replies
- 590 views
-
-
சுன்னாகம் கந்தரோடைப் பகுதிக்கு நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையினால் வழங்கப்படும் குழாய் மூலமான நீர் பயன்படுத்த உகந்ததாக இல்லையென அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளார்கள். கடந்த ஒரு வார காலமாக மிகவும் கலங்கிய நிலையில் சேற்று நீராக குழாய்மூலம் தண்ணீர் வருவதினால் குழாய் நீரைப் பயன்படுத்துகின்ற இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட குழாய் நீர் மூலம் தண்ணிர் பெறுவதில் உள்ள பிரச்சனை சம்பந்தமாக உடுவில் பிரதேச செயலகத்தின் கவனத்திறக்கும் மற்றும் உடுவில் பிரதேச சபைக்கும் பொது மக்கள் தெரிவித்துள்ளார்கள். இது சம்பந்தமாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையின் யாழ் மாவட்ட அலுவலகத்திலும் குழாய் நிர் பெறுவதில் பாதிக்கப்பட்டவர்கள் நேரடி…
-
- 0 replies
- 363 views
-
-
யாழ்ப்பாணத்தின் தற்N;பாதைய நிலைமைகள் குறித்து ,லங்கைக்கான ஜெர்மனிய தூதுவர் டொக்டர் ஜெர்கன் மொர்ஹார்டிற்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனிய தூதுவர் தற்போது யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவை ஜெர்மனிய தூதுவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். துருப்பினர் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகவும் நல்லிணக்க முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதார அபிவிருத்தி, புனர்வாழ்வு போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. யுத்தத்தின் பின்னர் பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளில் படையினர் பாரியளவு பங்களிப்பு வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 404 views
-
-
தனது விடுதலைக்காக அசாத் சாலி ஜனாதிபதிக்கு அளித்த சத்திய வாக்குறுதி இதோ கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் அசாத் சாலி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பிய சத்திய வாக்குறுதி ஜனாதிபதியால் பரிசீலிக்கப்பட்ட பின்னரே இன்று (10) நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதிக்கு அசாத் சாலி நேற்று (09) அனுப்பியதாகக் கூறப்படும் அந்த சத்திய வாக்குறுதியில் கீழ்காணும் விடயங்கள் அடங்குகின்றன. இந்தியாவின் சஞ்சிகைக்கு தான் வழங்கிய செவ்வி திரிபுபடுத்தப்பட்டு பிரசுரமானதாகவும் தான் அதுகுறித்து சஞ்சிகை அதிகாரிகளுடன் உரையாடி கருத்தை சரிசெய்து மீண்டும் பிரசுரிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அசாத் சாலி தெரிவித்துள்ளார். இலங்கை முஸ்லிம் பிரஜை என்ற வகையில் ஒருபோது…
-
- 1 reply
- 2.9k views
-
-
சிறையில் வாடும் தமிழ் இளைஞர்களுக்கு மன்னிப்புக் கொடுக்க ஜனாதிபதி மறுப்பது ஏன்; கேள்வி எழுப்புகிறார் அரியநேந்திரன் எம்.பி ரிசானா நபீக்கை மன்னித்து விடுவிக்கும் படி சவூதி மன்னருக்குக் கடிதம் எழுதிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பல வருடங்களாக இலங்கைச் சிறையில் வாடும் தமிழ் இளஞர்களை மன்னித்து விடுதலை செய்ய அவரின் கருணை உள்ளம் மறுப்பது ஏன் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். ரிசானா நபீக்கிற்கு மன்னிப்பு வழங்கும் படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சவூதி மன்னருக்குக் கடிதம் எழுதினார். ஆனால், சவூதி சட்டத்தின் படி இறந்த குழந்தையின் பெற்றோர் மன்னித்தால் மட்டுமே ரிசானாவை விடுவிக்க முடியுமெனக் கூறி அம் மன்னிப்புக் கிடைக்க…
-
- 0 replies
- 398 views
-
-
இம்முறை கிளிநொச்சியில் வரலாறு காணாத வகையில், மிகப்பெரியளவில் வெசாக் கொண்டாட்டங்களை நடத்துவதற்கு சிறிலங்காப் படையினர் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். சிறிலங்காவில் வெசாக் வரும் 24ம் நாள் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி கிளிநொச்சியில் பிரமாண்டமான வெசாக் பந்தல் மற்றும் அலங்காரங்களை மேற்கொள்வதற்கு சிறிலங்காப் படையினர் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். மௌரியப் பேரரசரான அசோகரின் மூத்த மகனான மகிந்த தேரர் 2319 ஆண்டுகளுக்கு முன்னர் கிளிநொச்சிக்கு வந்ததாகவும், அதனை நினைவுகூரும் வகையில், இந்த ஆண்டு பெருமெடுப்பில் கொண்டாட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக சிறிலங்காப் படையினர் தெரிவித்துள்ளனர். சிறிலங்கா இராணுவம், விமானப்படை, காவல்துறை என்பன இணைந்து கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில…
-
- 2 replies
- 506 views
-
-
தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இணைத்துக்கொள்ளும் முயற்சிகளை ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்டிருந்தது. எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கமும் அதேபோன்று இந்தியாவும், பேச்சுக்களை நடத்திக் கொண்டிருந்ததின் விளைவாகவே பாராளுமன்றத் தெரிவுக் குழு விவகாரம் சிக்கல் நிலைமைக்குத் தள்ளப்பட்டது என்று எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்துடன், கற்றுக்கொண்ட பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழுப் பரிந்துரைத்துள்ளதும் நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றதுமான அரசியலமைப்பின் 17ஆவது திருத்ததத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தினால் தமிழ்த் தேசியக் கூட்…
-
- 0 replies
- 494 views
-
-
வட மாகாண சபைக்கான தேர்தல் இவ்வருடம் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்பதை ஜனாதிபதி மீளவும் உறுதிப்படுத்தியுள்ளார். அண்மையில் அலரிமாளிகையில் இடம்பெற்ற பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின்போது தேர்தல் தொடர்பிலும் ஜனாதிபதி தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதற்கு ஒருபடி மேலாகச் சென்று அமைச்சர் பசில் ராஜபக்ஷ, வட மாகாண சபைத்தேர்தலை எதிர்கொள்ள ‘நீல அலை’ திட்டத்தின் மூலம் அரசாங்கம் தயாராகவுள்ளது, எதிரணியினர் யாரை வேண்டுமானாலும் வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற்றுக் காட்டட்டும் என்று சவால் விடுத்திருந்தார். எதிரணியினர் யாரை வேண்டுமானாலும் வேட்பாளராக நிறுத்தி வெற்றிபெறட்டும் என்று பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டதன் உள்ளர்த்தம் யாதெனில், வடமாகாண சபைக்கான தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பி…
-
- 6 replies
- 564 views
-
-
வடமாகாணத் தேர்தலில் அரசின் சுயேட்சைக் குழு வடமாகாண சபைத் தேர்தலில் அரசு சார்பில் சுயேட்சைக் குழுவொன்று களமிறங்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இதில் மேலும் தெரிவிக்கப்பட் டிருப்பதாவது: வடக்கிலுள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகள் சிலர் தாம் அரசின் சார்பில் சுயேட்சையாகப் போட்டியிடப் போவதாக அரசின் உயர் மட்டப் பிரதிநிதிகளை அணுகியுள்ளனர். வடக்கு மக்கள் தமிழ் தேசியக் கட்சி மீதும் அரசின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் ஈ.பி.டி.பி. கட்சி மீதும் வெறுப்புணர்வில் உள்ளனர். எனவே சுயேட்சையாகக் களமிறங்கினால் மக்களின் ஆதரவைப் பெறமுடியுமென அந்தக் குழுவினர் தெரிவித்துள்ளதாக அதில் மேலும் தெ…
-
- 0 replies
- 336 views
-
-
தமிழ்நாட்டு முகாம்களில் வசிக்கும் இலங்கைச் சிறார்களுக்கு பிறப்புச்சான்றிழ்கள் மற்றும் பிரஜா உரிமைப்பத்திரங்களை விநியோகிக்கும் வேலைத்திட்டம் ஒன்று சென்னையிலுள்ள இலங்கைத்தூதரகத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ராமேஷ்வரம், விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய முகாம்களிலுள்ள இலங்கைச் சிறார்கள் 353 பேருக்கு பிறப்பு அத்தாட்சி பத்திரங்களும் 567 பேருக்கு பிரஜா உரிமை பத்திரங்களும் விநியோகிக்கப்பட்டன. சென்னையிலுள்ள இலங்கைக்கான பதில் பிரதித்தூதுவர் ஓ.எல். அமீர் தலைமையில் இந்த செயல் திட்டம் நடைபெற்றது. மேலும், தமிழ் நாட்டில்லுள்ள முகாம்களில் பிறந்த இலங்கைச்சிறார்களை பதிவு செய்வதற்காக பிரதித்தூதரகம் மூலம் நடமாடும் சேவைகளும் ஆரம்பிககப்பட்டுள்ளன.தமிழ்நாட்டிலுள்ள ஒன்பது முக…
-
- 0 replies
- 333 views
-
-
கடலில் மீன்பிடிக்க செல்லும் போது எங்களது சொந்த சகோதரர்களுடனே மோத வேண்டிய நிலைமை ஏற்படுகிறது என்று இலங்கையை சேர்ந்த தமிழ் மீனவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இராமேஸ்வரம் மற்றும் நாகபட்டினம் பகுதியில் இருந்து கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் சர்வதேச எல்லையை கடந்து விட்டதாக கூறி இலங்கை கடற்படை சிறைபிடித்து செல்வதும், அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் அடிக்கடி நடந்து வருகிறது. சமீபத்தில் கூட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 30 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு நேற்று முன்தினம் தான் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் தமிழக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர் என்று இலங்கையைச் சேர்ந்த தமிழ் மீனவர்கள் கூறுகின்றனர். தமிழக மீ…
-
- 0 replies
- 276 views
-
-
ஏறக்குறைய ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட சொந்த நாட்டு மக்களின் மரணத்துக்கு காரணமாக அமைந்த உள்நாட்டு யுத்தத்தில் கிடைத்த வெற்றியை மாபெரும் தேசிய வெற்றி விழாவாக கொண்டாடும் ஒரே நாடு உலகத்தில் இலங்கை மட்டும்தான்' என்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'அண்டை நாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராக யுத்தம் செய்து பெற்ற வெற்றியை போன்று உள்நாட்டு யுத்த வெற்றியை கொண்டாடுபவர்கள், இந்த யுத்த வெற்றியின் பின்னால் மறைந்து நிற்கும் மனதை கொல்லும் சோகத்தை அங்கீகரிக்க மறுக்கின்றார்கள். அதனால் யுத்தத்தில் தமது உறவுகளை இழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்கள், உயிரிழந்த தமது அந்த உறவுகளை நினைவு கூறுவதற்கும் உ…
-
- 1 reply
- 202 views
-
-
-எஸ்.றொசேரியன் லெம்பேட், நவரத்தினம் கபில்நாத், ரோமேஸ் மதுசங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான அவசரகலந்துரையாடல் ஒன்று மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை தலைமையில் இன்று காலை மன்னார் ஞானோதய மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், எஸ்.வினோ நோகராதலிங்கம், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சுரேஸ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், சிறிதரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் சித்தார்த்தன் …
-
- 0 replies
- 204 views
-
-
சிறிலங்காவில் முப்பது ஆண்டுகாலப் போர் வெற்றி கொள்ளப்பட்ட பின்னர் நாட்டின் பெரும்பான்மை சமூகமும் பாதுகாப்புப் படையும் மிகவும் பெருந்தன்மையுடனும் தாராள மனப்பாங்குடனும் நடந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாறாக இவர்கள் போர் மமதையுடன் நடந்து கொண்டனர் என்று கொழும்பை தளமாகக் கொண்ட Ceylon Today ஊடகம் தனது ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. “இலங்கையர்களின் காஸா” என நோக்கப்படும் வடக்கில் இலங்கை அரசாங்கமானது பொதுமக்களுக்குச் சொந்தமான நிலங்களை அபகரிப்பது தற்போது அதிகரித்துள்ளதாகவும் குறித்த ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற மிக உச்சக்கட்ட வன்முறையாக தற்போது வடக்கில் இடம்பெறுகின்ற நில அபகரிப்பை குற…
-
- 0 replies
- 259 views
-
-
மின்சாரக் கட்டண உயர்விற்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவளிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. எதிர்வரும் 21ம் திகதி நாடு தழுவிய ரீதியில் பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்க தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தொழிற்சங்க ஓன்றிய கூட்டமைப்பிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படாவிட்டால் நாடு தழுவிய ரீதியில் போராட்டம் நடத்த நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/91630/language/ta-IN/art…
-
- 0 replies
- 270 views
-
-
May 11, 2013 நெதர்லாந்து நாட்டு மக்களுக்களினதும், நெதர்லாந்தைச் சேர்ந்த ஊடகங்களினதும் ஆதரவைத்தேடி நடைப்பயணம். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 4ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நெதர்லாந்து நாட்டு மக்களுக்களினதும், நெதர்லாந்தைச் சேர்ந்த ஊடகங்களினதும் தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இன ஒடுக்குமுறைக்கெதிரான ஆதரவைத்தேடி 14 வைகாசி, செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணிக்கு அம்ஸ்ரர்டாமைச் சேர்ந்த சூரி அவர்களால் நடைப்பயணம் ஒன்று ஆரம்பிக்கப்பட உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இந்நடைப்பயணம் அம்ஸ்ரர்டாமில் ஆரம்பித்து ஹில்வர்சம் மீடியா பார்க் வரை சென்று அங்கு புதன்கிழமை 15ம் திகதி காலை மகஜர் கையளிக்கப்பட்டபின் அங்கிருந்து தொடர்ந்து டென்ஹாக் பாராளுமன்றத்தில் அமைதி ந…
-
- 1 reply
- 358 views
-
-
புலிகளின் முன்னாள் ஊடகத்துறை இணைப்பாளர் தயா மாஸ்ரரை வடக்குத் தேர்தலில் அரசு முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதை தான் கடுமையாக எதிர்ப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். புலிகள் மக்களின் பணத்தைக் கொள்ளையடித்தனர். அவர்கள் மாகாண சபைக்கு வந்தாலும் அதையே செய்வார்கள் எனக் குறிப்பிட்ட பொன்சேகா, முன்னாள் புலிகள் வன்முறையைக் கைவிட்டதை ஆதரிக்கின்றேன். ஆயினும் அவர்கள் மாகாண சபை தலைமைப் பதவிகளுக்கு வருவதை மக்கள் விரும்ப வில்லை எனவும் குறிப்பிட்டார். http://onlineuthayan.com/News_More.php?id=665362026010410262
-
- 3 replies
- 661 views
-
-
இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் மனித உடலுக்கு ஒவ்வாத ''டைசயன் டயமைட்'' இரசாயனப் பொருள் கலக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மனித உடலுக்கு ஒவ்வாத Dicyan Diamide இரசாயனப் பொருள் ஒன்று பால்மாவில் கலக்கப்பட்டுள்ளதா என்பது சிங்கப்பூருக்கு அனுப்பப்ட்ட மாதிரிகளில் நடத்தப்பட்ட, பரிசோதனைகளிலிருந்து உறுதியாகியுள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் இந்த இரசாயனப் பொருள் கலக்கப்பட்டுள்ளதா என்று எழுந்த சந்தேகத்தை அடுத்து நுகர்வோர் அதிகார சபையினால் ஐந்து பால்மா மாதிரிகள் சிங்கப்பூருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்த பரிசோதனைகளின் முடிவுகள் கடந்த வாரம் நுகர்வோர் அதிகார சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஐந்து மாதிரிகளிலும் ''டைசயன் டயமைட்'' இரசாயனப் பொருள் உள்ளமை …
-
- 0 replies
- 498 views
-
-
ஜனாதிபதியின் பதவிக் காலம் 6 வருடங்களிலிருந்து 5 வருடங்களாக குறைக்கும் வகையிலும், ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படக்கூடிய குறைந்த கால இடைவெளியாக இருக்கும் நான்கு வருடத்தை 3 வருடமாக குறைக்கும் வகையிலும் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக மிகவும் நம்பரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ், காணி அதிகாரங்களையும் இந்த திருத்தச் சட்டத்தின் ஊடாக அகற்றப்படுவதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் சட்டமூலத்தைத் தயாரிக்கும் இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிகாரத்தைப் பகிர்ந்து சிறுபான்மையினருக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்த ஶ்ரீலங்கா ம…
-
- 0 replies
- 380 views
-
-
வடமாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் புலிகளின் அரசியல் பொம்மையாக செயற்பட்ட TNA அதிகாரத்தை கைப்பற்றும் 10 மே 2013 பிரிவினைவாத அதிகாரங்களுடன் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தினால், எதிர்காலத்தில் நாட்டின் ஒருமைப்பாடு இல்லாமல் போகும் நிலைமை ஏற்படும் எனவும் அவ்வாறான தவறு நாட்டின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்த தலைமை தாங்கிய ஜனாதிபதியினால் ஏற்படாது என நம்புவதாகவும் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை கூறியுள்ளார். 13வது அரசியல் அமைப்புத் திருத்ததின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை எந்த மாகாணங்களும் இதுவரை உத்தியோகபூர்வமாக செயற்படுத்தவில்லை. மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அத…
-
- 4 replies
- 725 views
-