ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
இலங்கை தமிழரசு கட்சி துணைப்பொதுச் செயலாளர் வீட்டின் மீது கல்வீச்சு! (படங்கள்) யாழில் இலங்கை தமிழரசு கட்சியின் துணைப்பொதுச் செயலாளரும், முன்னாள் மாநகரசபை ஆணையாளருமான சீ.வீ.கே.சிவஞானத்தின் வீட்டின்மீது நேற்றிரவு இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சு தாக்குதல் நாடாத்தியுள்ளனர். நேற்று நள்ளிரவு 12 மணியளவில் பொலித்தீன் பைகளில் பாரிய கற்களைக் கொண்டுவந்த சிலர் அந்த கற்களை வீசி தாக்குதல் நடாத்தியுள்ளனர். இதில் அவரது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. இத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை சீ.வி.கே.சிவஞானம் ஜன்னல் அருகில் உள்ள கணினியில் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். இதன்போது கல்வீச்சினால் உடைந்த ஜன்னலின் கண்ணாடி துண்டு ஒன்று அவரது மூக்கில்…
-
- 0 replies
- 291 views
-
-
காயமடைந்த 37 புலிகளுக்கு ஓராண்டு உணவு கொடுத்தேன் - வைகோ காயமடைந்த 37 விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு ஓராண்டு என் வீட்டில் வைத்து உணவு கொடுத்தேன். என் அம்மா அவர்களை பார்த்துக் கொண்டார் என ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ம.தி.மு.க தொடங்கி 19 ஆண்டுகள் நிறைவடைந்து 20ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 20ம் ஆண்டு தொடக்கவிழா பொதுக் கூட்டம் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் நடந்தது. இரவு 8.45க்கு தொடங்கி 10.45 மணி வரை 2 மணி நேரம் ம.தி.மு.க பொது செயலாளர் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள அவர், உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் ஈழத்தமிழர்களிடம் அந்தந்த நாடுகளில் வாக்கெடுப்பு நடத்தி சுதந்திர ஈழம் அமையும் நாடு ஈழ…
-
- 0 replies
- 559 views
-
-
இலங்கையில் அல்-கைடா, தலிபான் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் இருப்பதாக காட்டி அமெரிக்கா உட்பட மேற்குலகை வவளைத்து போடவே தேசிய ஐக்கிய முன்னணி பொதுசெயலாளரும், அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் இணை தலைவருமான நண்பர் அசாத் சாலி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என இன்று கொழும்பில் நடைபெற்ற அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாட்டில் உரையாற்றுகையில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்த ஊடக மாநாட்டில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, ஜூனியர் விகடன் சஞ்சிகையில் அசாத் சாலியின் நேர்முகம் 24ம் திகதி வெளிவந்தது. அதில் இடம்பெற்றதாக சொல்லப்படும் கருத்து பிழையை திருத்தி அவர் ஜூனியர் விகடனுக்கு அனுப்பி வைத்து…
-
- 2 replies
- 347 views
-
-
தமிழர்களுக்குகுந்தகமாக இருக்க நாம் விரும்பவில்லை. ஹக்கீம் 0 தமிழர்களுக்கு வாய்ப்பான மாகாண ஆட்சியொன்று அமையுமாக இருந்தால் அதற்கு குந்தகமாக இருக்க நாம் விரும்பவில்லை. ஹக்கீம் எங்களது பார்வையில் வடமாகாணம் தமிழ் மக்களை பெரும்பாண்மையாக கொண்டது. எங்களுக்கு நடக்கும் அநியாயங்கள் முடிவுக்கு வரவேண்டியதை போல தமிழர்களுக்கு அநியாயம் நடந்தாலும் நேர்மையாக பேசும் கட்சியாகத்தான் நாங்கள் இருக்க முடியும் . அவர்களுக்கு வாயப்பான மாகாண ஆட்சியொன்று அமையுமாக இருந்தால் அதற்கு குந்தகமாக இருக்க நாம் விரும்பவில்லை ஆனால் அவர்களோடு சேர்ந்து நாம் ஆட்சிஅமைக்க போகின்றோம் என்பது அர்தமல்ல . அரசாங்கத்துக்கு விரோதமாக நாங்கள் செயற்பட போகின்றோம் என்பதும் அல்ல .ஜனனாயகத்துக்கேற்ப தேர்தல் நடாத்தப்பட வ…
-
- 1 reply
- 602 views
-
-
இலங்கையின் வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றி இன சுத்திகரிப்பு செய்தது தவறு என்பதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்திலேயே தமிழ்த் தரப்பு மற்றவர்களிடம் நியாயம் கோர முடியும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தந்தை செல்வா படத்துக்கு மரியாதை செய்கிறார் சுமந்திரன் மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபகரான தந்தை செல்வாவின் 36ஆவது நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை விசாரணை நடத்த வேணடும் என்று தற்போது ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதில் கூறப்பட்டுள்ளது மனி…
-
- 40 replies
- 2.5k views
-
-
இலங்கையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டை, பிரித்தானியா மகாராணி இரண்டாவது எலிசபெத் புறக்கணித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் 15 தொடக்கம் 17ம் நாள் வரை இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் உச்சி மாநாட்டில், பிரித்தானிய மகாராணி பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்ட போதும் அது தற்போது உறுதியாகிவிட்டது. இலங்கையின் மனிதஉரிமைகள் நிலைமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பல நாடுகளின் அரச தலைவர்களும் கொழும்பு மாநாட்டில் இருந்து ஒதுங்கி கொள்ளும் நிலை காணப்படுகின்றது. இந்நிலையில் கொமன்வெல்த் உச்சி மாநாட்டில் பிரித்தானிய மகாராணி பங்கேற்காவிட்டால் இலங்கை அரசாங்கத்துக்கு முக்கியமான பின்னடைவாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் பிரித்தானிய ம…
-
- 4 replies
- 620 views
-
-
கூட்டமைப்பைப் பதிவு செய்வதில்லை என்ற முடிவால்அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு சம்பந்தன் ஐயா உதவுகின்றாரா? கட்சி அரசியலைக் கைவிட்டு செயற்பட அனைவரும் முன்வர வேண்டும் எனவும் சிவசக்தி ஆனந்தன் அழைப்பு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வதில்லை என்ற தீர்மானத்தை எடுப்பதன் மூலம் கூட்டமைப்பைப் பிளவுபடுத்தும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் தலைவர் இரா சம்பந்தன் ஐயா விழுந்துவிடப் போகின்றாரா என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியிருக்கின்றார். தமிழர்கள் பெரும் அவலங்களுக்குள்ளாகியிருக்கும் இந்த நிலையில் கட்சி அரசியலைக் கைவிட்டு பொது நலனின் அடிப்படையில் செயற்படுவதற்கு சம்பந்தன் ஐயாவும், தமிழரசுக் கட்சியினரும் முன்வர வேண்டும் எனவும் அவர் வலியுறு…
-
- 5 replies
- 660 views
-
-
மான்னாரில் திட்டமிட்டு தொடர்ந்து நடைபெறும் சிங்கள குடியேற்றம் புதன்கிழமை, 08 மே 2013 10:01 மன்னார் மாவட்டத்தில் சிறீலங்கா அரசாங்கம் புதிய சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,, நாட்டில் இடம் பெற்ற யுத்த காலத்தை தொடர்ந்து வடக்கில் இடம் பெயர்ந்துள்ள தமிழ், முஸ்ஸிம் மக்கள் இது வரை உரிய முறையில் அரசாங்கத்தினால் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை. இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் இருந்து இடம் பெயர்ந்த மக்க…
-
- 0 replies
- 309 views
-
-
கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக போராட வேண்டும் - சுமந்திரன் அழைப்பு புதன்கிழமை, 08 மே 2013 15:44 நாட்டில் இடம்பெறும் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் போராட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடும் அனைவருக்கும் எதிராக பயங்கரவாத தடைச் சட்டம் பிரயோகிக்கப்படுகின்றது. அந்த வகையிலேயே வாய்ப் பேச்சால் எச்சரிக்கை விடுத்த அசாத் சாலிக்கும் அது பிரயோகிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். அசாத் சாலி ஏற்கனவே முன் பிணை பெற்றிருந்ததால் பிணை கொடுக்க முடியாத பயங்கரவாத தடைச்சட்டத்தை பிரயோகித்து அவரை தற்போது கைது செய்துள்ளனர். அரசாங்கம் மக்களை அச்சுறுத்தும…
-
- 0 replies
- 270 views
-
-
ஹக்கீம் மீது கோத்தபாய சீற்றம்! - அசாத் சாலி நாட்டின் இறைமைக்கு எதிரானவர் என தொலைபேசியில் பதில்!! கொழும்பு மாநகரபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியின் கைது தொடர்பில் சிறிலங்காவின் நீதியமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்த காரசாரமான கருத்துத் தொடர்பில் தனது கடும் அதிருப்தியை படைத்துறை அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அவரிடம் நேரடியாகே வெளியிட்டுள்ளார். ரவூப் ஹக்கீமை நேற்றிரவு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட சிறிலங்கா படைத்துறை அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இது தொடர்பிலான தனது அதிருப்தியை கடும் சீற்றத்துடன் வெளிப்படுத்தியதாக தெரியவருகின்றது. அத்துடன், 'சிறிலங்காவின் நீதியமைச்சராகப் பதவி வகித்துக் கொண்டு ப…
-
- 0 replies
- 543 views
-
-
"பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது கடினம். அரசியல் நோக்கர்களுக்காகவோ, அரசியல் கட்சிகள், நபர்களைக் குறிவைத்தோ பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளை அரசு ஒருபோதும் பயன்படுத்த வில்லை'' பிரதமர் டி.எம். ஜயரட்ண நேற்று நாடாளுமன்றில் இவ்வாறு அறிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் பிரதமர் இவ்வாறு கூறினார். "அஸாத் சாலி கைதுசெய்யப்பட்டதைப் பயன்படுத்தி சிலர் அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றனர். இதனையிட்டு நான் கவலையடைகின்றேன். எதிர்க் கட்சித் தலை வரும் அரசியல் நோக்கத்துக்காகத் தான் இதுகுறித்துப் பேசுகிறார் என நான் நினைக்கின்றேன்'' என்றார் பிரதமர். தேசிய சுதந்திர முன்னணியின் செயலாளர் அஸாத் சாலி பல்வேறு சந்தர்ப்பங்கள…
-
- 1 reply
- 357 views
-
-
இலங்கைத்தீவில் தமிழர் தேசத்திற்கு எதிராக அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடிய மனிதப்பேரவலத்தின் உச்சத்தைத் தொட்ட மே 18-2009 நினைவுகளைச் சுமந்தபடி அதன் நான்காவது ஆண்டில் நிற்கின்றோம். ஆயிரக்கணக்கான மக்களை முள்ளிவாய்க்கால் என்ற குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கவைத்து, சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை திட்டமிட்ட ரீதியில் பயன்படுத்தி, சாட்சிகள் அற்ற போரை நடத்தி, ஒரு தேசிய இனத்தின் அழிவை உறுதிப்படுத்துவதில் சிறிலங்கா அரசு கவனம் செலுத்தியிருந்தது. ஆனால் படுகொலை செய்யப்பட்ட மக்களின் ஏக்கங்களையோ அல்லது எமது மக்களின் நீடித்து நிலைக்கக் கூடிய சுதந்திரமான வாழ்வுக்காக இறுதிவரை போராடிய போராளிகளின் கனவுகளையோ மறைக்க முடியாதபடி, உலகத்தின் கண்களுக்கு ஈழத்தமிழர்களின் அடிப்பட…
-
- 0 replies
- 416 views
-
-
ஈழத்தமிழினத்தின் மீது நடந்தேறிய போர்குற்றங்கள் - இனப்படுகொலை - மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியனவற்றின் குறியீடாக அமையும் மே-18 முள்ளிவாய்க்கால் பெருவலியினை நினைவேந்த உலகத் தமிழினம் தயாராகி வருகின்றது. வணக்க நிகழ்வுகள் , கவனயீர்ப்பு நிகழ்வுகள் , பரப்புரைகள் , கண்காட்சிகள் , கருத்தரங்குகள் , ஒன்றுகூடல்கள் என பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளின் உச்ச நிகழ்வாக தமிழீழ சுதந்திர சாசனம் உலகத் தமிழர்களால் முரசறையப்படவிருக்கின்றது. ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழுகின்ற தேசங்களில் மட்டுமல்ல தமிழகம் மலேசியா தென்னாபிரிக்கா என பல்வேறு இடங்களிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தப்படுகின்றது. தமிழர் அமைப்புக்கள் பலவ…
-
- 1 reply
- 760 views
-
-
இலங்கை நீதி அமைச்சருக்கே இலங்கையின் நீதி மீது அவநம்பிக்கை! வவுனியாவில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டத்தில் வவுனியா, மன்னார், முல்;லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த வன்னி கட்சி உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.அசாத் சாலி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமென நீதி அமைச்சரும் , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் கூறினார். றோயல் கார்டன் ஹோட்டலில் நடைபெற்ற இக் கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிபாவா பாறுக் ,பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அங்கு உரையாற்றும் போது கைது செய்யப்பட்டுள்ள ஆசாத்சாலி பற்றி அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது : இன்று எனது மனச்சாட…
-
- 2 replies
- 576 views
-
-
பிரிட்டன் பிரதமர் டேவிட் கமருனின் தீர்மானத்திற்கு ஈழ ஆதரவாளாகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கப் போவதாக பிரதமர் கமருன் அறிவித்துள்ளார். இந்தத் தீர்மானத்திற்கு ஈழ ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் கொன்சவேட்டிவ் கட்சி உறுப்புரிமையை துறக்கவும், முக்கிய பதவிகளை இராஜினாமா செய்யவும் ஈழ ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பில் பிரிட்டன் தமிழர் பேரவைக்கும், உலகத் தமிழர் பேரவைக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எனினும், பதவிகளை இராஜினாமா செய்ய சில ஈழ ஆதரவாளர்கள் விரும்பவில்லை என சிங்கள ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது. ஈழ ஆதரவாளர்கள் பலர் கொன்சவ…
-
- 0 replies
- 389 views
-
-
பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவரை இந்தியா, இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளது. 34 வயதான நிஸார் அஹமட் என்ற நபரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார். உரிய வீசா இன்றி ஆந்திர பிரதேசத்தின் சுட்டப்பா கிராமத்தில் வாழ்ந்து வந்த போது குறித்த நபரை மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த ஏழு ஆண்டுகளாக உரிய வீசா எதுவுமின்றி குறித்த தீவிராவதி இந்தியாவில் வாழ்ந்து வந்துள்ளார். பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு சென்று அங்கிருந்து அவர் இந்தியாவிற்கு சென்றுள்ளார். இலங்கையிலிருந்து இந்தியா சென்ற காரணத்தினால் அவரை இந்திய அதிகாரிகள் இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளனர். சென்னையிலிருந்து குறித்த நபர் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த நாடு கடத்தல் தொடர்பில் இந்திய அதிகாரிகள் இலங்கைக்கு அறிவித்துள…
-
- 0 replies
- 375 views
-
-
வடமாகாணசபை தேர்தலில் கூட்டமைப்பு சுயேட்சையாக களமிறங்கினால் ஆதரவளிக்க தயார் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் [Monday, 2013-05-06 08:34:25] வடமாகாண சபைத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு போட்டியிடாமல் சுயேட்சைக்குழுவாக களமிறங்கினால் அந்த சுயேட்சைக்குழுவுக்கு நாம் ஆதரவளிக்கத் தயார் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். அவரது வீட்டில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், வடமாகாண சபைத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக போட்டியிடாமல் சுயேட்சைக்குழுவாக களமிறங்கினால் அதன் சகல செயற்பாடுகளுக்கும் நாம் ஆதரவளிப்பதற்கு தய…
-
- 4 replies
- 651 views
-
-
தற்போதைய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எத்தகைய குழப்பவாதியாக இருந்தார், தனக்கு எப்படி, எத்தகைய துரோகங்களைச் செய்தார் என்பதை, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அளித்துள்ள விரிவான செவ்வியில் விளக்கியுள்ளார். அந்தச் செவ்வியின் முக்கியமான பகுதிகளின் தொகுப்பின் நிறைவுப் பகுதி இது:- முதற்பகுதியினை படிக்க : “மகிந்தவின் துரோகங்கள்” – மனந்திறக்கிறார் சந்திரிகா கேள்வி – 2000ம் ஆண்டு தேர்தலுக்கு முன்னர், நீங்கள் உங்கள் தாயாரை பிரதமர் பதவியில் இருந்து எதற்காக நீக்கினீர்கள்? சந்திரிகா - உண்மையில், எனது தாயார் தன்னை பதவியில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அ…
-
- 7 replies
- 773 views
-
-
நோர்வே அகதிகள் கவுன்சிலும், ஐ.டி.எம்.சி எனப்படும் உள்நாட்டு இடம்பெயர்வைக் கண்காணிக்கும் மையம் என்ற அமைப்பும் சேர்ந்து வெளியிட்டுள்ள உலகளாவிய உள்நாட்டு இடப்பெயர்வு குறித்த அறிக்கையில் இலங்கையில் போரினால் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தோரின் நிலை இன்னும் முன்னேறவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. 2012 இறுதிவாக்கிலான , இலங்கை உள்நாட்டு இடம்பெயர்ந்தோர் நிலவரம் குறித்து சொல்கிறது நோர்வே அகதிகள் கவுன்சிலின் இந்த அறிக்கை. விடுதலைப்புலிகள் அரச படைகளால் தோற்கடிக்கப்பட்டு மூன்றாண்டுகளுக்கும் மேலான அந்த காலகட்டத்தில், இலங்கையில் சுமார் 93,000 பேர் அகதி முகாம்கள், உறவினர்கள் அல்லது நண்பர்களின் வீடுகள் மற்றும் இடம்விட்டு இடம் மாறிக்கொண்டிருக்கும் சூழ்நிலை ஆகிய நிலைகளில்தான் இருக்கி…
-
- 3 replies
- 515 views
-
-
கொழும்பு நகரில் வியாபார அனுமதிப் பத்திரம் வழங்கமுடியாத நிலையில் 300 உணவகங்கள் - கொழும்பு மாநகர சபை [Wednesday, 2013-05-08 10:32:48] வியாபார அனுமதிப் பத்திரங்களை வழங்க முடியாத நிலையில் உள்ள சுமார் 300 உணவகங்கள் கொழும்பு நகரில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. குறித்த உணவகங்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் பிரதீப் காரியவசம் தெரிவித்தார். தகுந்த இடங்களில் உணவகங்கள் அமைக்கப்படாமை, கட்டடங்களில் காணப்படும் குறைபாடுகள், அசுத்தம் போன்ற காரணங்களினால் குறித்த உணவகங்களுக்கு வியாபார அனுமதிப் பத்திரங்களை வழங்க முடியாத நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, கொழு…
-
- 1 reply
- 258 views
-
-
பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட மாட்டாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம், எதிர்க்கட்சிகள் கோரியிருந்தன. தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக இலங்கையில் தோற்கடிக்கப்பட்ட போதிலும், வேறும் நாடுகளில் பல்வேறு வழிகளில் தொடர்ந்தும் இயங்கி வருவதாக பிரதம டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்ளை மீட்பதற்கும் ஏனைய பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பதற்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். 2009ம் ஆண்டு சரணடையாத தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை கைது செய்வதற்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தேவை இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மார்ச் 17ம…
-
- 1 reply
- 507 views
-
-
இந்திய உதவியில் இலங்கையில் மேலும் 26 அபிவிருத்தி திட்டங்கள்: அசோக் கே. காந்தா செவ்வாய்க்கிழமை, 07 மே 2013 09:55 -எஸ்.கே.பிரசாத் "கடந்த 2009ஆம் ஆண்டு முதல் இந்தியாவினால் இலங்கையில் 36 அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், மேலும் 26 அபிவிருத்தித் திட்டங்களை இந்தியா, இலங்கையில் நடைமுறைப்படுத்த உள்ளது" என்று இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக் கே.காந்தா தெரிவித்தார். இதேவேளை, "யாழ்ப்பாணத்திற்கான யாழ் தேவி புகையிரதச் சேவை அடுத்த வருடம் மார்ச் மாதம் சேவையில் ஈடுபடும் என்றும் இதன் மூலம் வடக்கின் பொருளாதாரம் வளர்ச்சியடையும்" என்றும் அவர் குறிப்பிட்டார். குருநகரில் வடகடல் நிறுவனத்தின் வலைத் தொழிற்சாலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போ…
-
- 2 replies
- 302 views
-
-
இலங்கையில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை புத்த பிக்குகள் கைவிட வேண்டும் என திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா கோரிக்கை விடுத்துள்ளார். மியான்மார் மற்றும் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்தப்பட்டுள்ள வன்முறைகளுக்கு பௌத்தர்களும் புத்த பிக்குகளுமே காரணம். மதத்தின் பெயரில் நடந்துள்ள இந்த வன்முறை, நினைத்து பார்க்க முடியாத வருத்தத்தை தருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளதுடன், புத்த மத்தினர் இந்த வன்முறையில் இணைத்து பேசப்படுவது மிகவும் துரதிருஷ்டவசமானது. அவர்கள் புத்தரின் அகிம்சை வழியை கடைபிடிக்க வேண்டும். உலக முழுமைக்கும் ஒரே மனித குலம் படைக்கும் பொறுப்பு இளைஞர்களிடத்தில் இருக்கிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள…
-
- 5 replies
- 453 views
-
-
களவாக பிடிக்கப்பட்ட ஆட்டினை முச்சக்கரவண்டியில் கொண்டு சென்றவர்களை தெல்லிப்பழைப் பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். களவாடப்பட்ட ஆட்டினை முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற நபர்களை தெல்லிப்பழை பொலிஸார் மறித்தபோது நிறுத்தாது தப்பிச் செல்ல முற்பட்டவர்களை வீதிக்கடமையில் ஈடுபட்டிருந்து பொலிஸார் மோட்டார் சையிக்கிளில் சுமார் மூன்ற கிலோ மீற்றருக்கு மேல் துரத்தி சென்று குறிப்பிட்ட முச்சக்கர வண்டியையும் அதில் இருந்தவர்களையும் நிறுத்தியுள்ளனர். அந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. அதன் போது முச்சக்கர வண்டியில் இருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பி ஓடிய நிலையில் மேலும் ஒருவரை கைது செய்த பொலிஸார் முச்சக்கர வண்டி, ஆடு ஆகியவற்றையும் ப…
-
- 2 replies
- 723 views
-
-
இனவாதிகள் என்பதனை ஒப்புக்கொள்வதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி அறிவித்துள்ளது. இனவாத, மதக் கடும்போக்குடைய அமைப்பு என்பதனை ஏற்றுக்கொள்வதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், நாட்டில் இனவாதம், மதக் கடும்போக்குவாதம் உருவாக தாம் காரணமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இனவாதத்தை தாம் ஆரம்பிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இனவாத, மதவாத விவகாரங்கள் தலைதூக்கும் போது அதற்கு உணர்வு பூர்வமாக பதிலளிக்க நேரிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டிருந்தால் தங்களை அழைத்து விசாரணை நடத்துமாறு மிகவும் தாழ்மையுடன் பாதுகாப்பு தரப்பினரிடம் கோருவதாகத் தெரிவித்துள்ளார். அசாத் சாலி கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஊடகவி…
-
- 0 replies
- 317 views
-