ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் அரசாங்கம் காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கையை தடுத்து, இடம்பெயர்ந்துள்ள மக்களை முழுமையாக மீள்குடியேற்றம் செய்வதற்கு இலங்கை அரசுக்கு ஆஸ்திரேலியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியிருக்கின்றது. வாழ்வாதாரம் உட்பட அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டிருப்பதன் காரணமாகவே மக்கள் படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்குச் செல்வதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியிருக்கின்றது. மூன்று நாள் விஜயமாக வியாழனன்று கொழும்பு வந்துள்ள ஆஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் குடியுரிமை விவகார அமைச்சர் பிரண்டன் ஓ கான்னரை சந்தித்தபோதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். 'பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இலங்கைய…
-
- 0 replies
- 962 views
-
-
3 மே, 2013 ஆஸ்திரேலியாவுக்கு அடுத்ததாக இலங்கை பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டை இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடத்துவதை தாம் ஆதரிப்பதாக தெரிவித்துள்ள ஆஸ்திரேலியா அதில் தாம் கலந்துகொள்வோம் என்றும் கூறியுள்ளது. ஆஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் பிரஜாவுரிமை அமைச்சரான பிரண்டன் ஓ கொன்னர் அவர்கள் தற்போது இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இலங்கையின் வெளியுறவு அமைச்சரான பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் உட்பட இலங்கை அரசாங்க பிரதிநிதிகள் பலரை சந்தித்து அவர் அங்கு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே அவர் தாம் இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடப்பதை ஆதரிப்பதாகக் கூறியுள்ளார். அதேவேளை, இலங்கையில் சுபீட்சம் ஏற்படுவதற்கு நல்லிணக்க ஆணை…
-
- 0 replies
- 501 views
-
-
பத்திரிக்கை சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 3 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பத்திரிகை சுதந்திர அட்டவணை ஒன்றை 'ரிபோர்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ்' என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்பிரகாரம் பத்திரிகை சுதந்திரத்தில் இலங்கை 162 ஆவது இடத்தில் இருக்கின்றது. பத்திரிக்கை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதத்தில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான அட்டவணையில் இந்தியாவுக்கு 140 ஆவது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவில் கடந்த 2012ஆம் ஆண்டு மட்டும் பத்திரிகையாளர்கள் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த அட்டவணையில், பின்லாந்து முதல் இடத்தை பெற்றுள்ளது. அட்டவணையில் இங்கிலாந்து 29 ஆவது இடத்திலும், அமெரிக்கா 32ஆவது இடத்திலும் இருக்கின்றன. ரஷ்யா 148 ஆவது இடத்…
-
- 1 reply
- 973 views
-
-
வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள காணிகளை அரசாங்கம் சுவிகரிப்பதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கான ஆவணங்களில் கையொப்பம் இடும் நிகழ்வில் நூற்று கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். வலி வடக்கு தெல்லிப்;பளை பிரதேச சபையின் தலைமையகத்தில் இன்று சனிக்கிழமை; இரண்டாவது நாளாக வழக்குத் தாக்கல் செய்வதற்க்கான ஆவணங்களில் கையொப்பம் இடும் நிகழ்வு அதிகாலை 4.30 மணியளவில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் சுமார் 500க்கும் அதிகமான மக்கள் ஆர்வமாக கலந்து தமது கையொப்பங்களை இட்டனர். இந்த கையொப்பம் இடும் நடவடிக்கை தொடர்ந்து நாளையும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/local.php?vid=4367
-
- 0 replies
- 456 views
-
-
கேகாலை, தெய்யோவிட்ட பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தட்டுவல்கந்த தோட்டத்தில் இடம்பெற்ற அசம்பாவித நிகழ்வை அடுத்து அத்தோட்டத்தில் வசிக்கும் சிறுபான்மை தமிழ் மக்களின் தோட்ட குடியிருப்புக்கள் மற்றும் உடைமைகள் பெரும்பான்மை இனத்தவர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இச் சம்பவம் தொடர்பாக அத்தோட்ட மக்கள் சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் அண்ணாமலை பாஸ்கரனிடம் தெரிவித்ததை அடுத்து அத்தருணத்திலேயே பொலிஸ் அதிகாரிக ளுடன் தொடர்புகொண்டு குறித்த தோட்டத்தின் பாதுகாப்பை உறுதி செய்ததுடன் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விஜயம் செய்து சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களிடம் கேட்டறிந்து கொண்டதுடன் சம்பவம் குறித்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு தெரியப்படுத்தியுள்ளார். சம்பவம் தொடர்பில் பொல…
-
- 0 replies
- 524 views
-
-
முஸ்லிம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலியை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் சாலியை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் முஸ்லிம் பேரவை கோரியுள்ளது. அசாத் சாலியின் கைது தொடர்பில் முஸ்லிம் சமூகம் மிகுந்த கவலை கொண்டுள்ளதாக முஸ்லிம் பேரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடிதமொன்றின் மூலம் தெரிவித்துள்ளது. அசாத் சாலி நீரிழிவு மற்றும் உயர் குருதியழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் பேரவையின் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில் அசாத் சாலியை விடுதலை செய்யுமாறு கோருவதாக அமீன் சுட்டிக்காட்டியுள்ளார். அசாத் சாலியின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி தயவின் அடிப்படையில் நடவட…
-
- 0 replies
- 367 views
-
-
கூட்டமைப்பின் அதிருப்தி கட்சிகள் முன்னுள்ள ஒரே தெரிவு - செய் அல்லது தமிழரசுக் கட்சிக்குள் செத்துமடி யதீந்திரா தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவு செய்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றனவா என்னும் விவாதம் இன்னும் முற்றுப்பெற்றுவிடவில்லை. பெரும்பாலும் விரைவில் இது முற்றுப்பெறக் கூடுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழரசுக் கட்சியை வழிக்கு கொண்டுவரும் ஒரு முயற்சியாக, மன்னார் ஆயர் இராயப்பு யோசப் சமீபத்தில் மந்திராலோசனை ஒன்றில் ஈடுபட்டிருந்ததாக நம்பிக்கைக்குரிய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அம் முயற்சியும் வெற்றியளிக்கவில்லை என்றே அறிய முடிகிறது. தமிழரசுக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவு செய்ய முடியாமைக்கான காரணங்களை மன்னார் ஆயரிடம் தெரிவ…
-
- 1 reply
- 446 views
-
-
கல்வி வளர்ச்சி வீதத்தில் இந்தாண்டு கிளிநொச்சி மாவட்டம் தேசிய ரீதியில் முதலிடம் 04 மே 2013 கடந்தாண்டின் பெறுபேறுகளின் படி கல்வி வளர்ச்சி வீதததில் கிளிநொச்சி மாவட்டம் 11.84 வீதத்தினை வெளிப்படுத்தி தேசிய ரீதியில் முதலிடத்தில் காணப்படுகிறது பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினரால் அண்மையில் வெளியிடப்பட்ட தகவல்களின் படியே இந்தாண்டு கல்வி வளர்ச்சியில் இலங்கையில் முதல் நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு வெளியிடப்பட்ட கல்வி வளர்ச்சி புள்ளிவிபரங்கள் படி வட மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டம் 11.84 வீதமாகவும், யாழ்ப்பாணம் 05 வீதமாகவும், வவுனியா 06 வீதமாகவும், முல்லைத்தீவு 05 வீதமாகவும், மன்னார் 02 வீதமாகவும் கல்வி வளர்ச்சி நிலையினை கொண்டுள்ளது கொழும்பு மாவட்டம் 01 வீத வளர்ச்…
-
- 3 replies
- 897 views
-
-
எங்கள் மக்கள் அவர்களின் சொந்தக் காணிகளுக்குச் செல்ல வேண்டும் இதற்காக சர்வதேச நீதிமன்றம் வரை செல்வோம். அதற்குரிய நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளோம். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற காணி சுவீகரிப்பைத் தடுப்பது தொடர்பான கலந்துரையாடலில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: ஒவ்வொரு பிரதேச சபைக்கும் தமது பிரதேசத்திலுள்ள மக்களை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். காணி சுவீகரிப்புக்கு எதிரான வாழ்வுரிமைக்கான எமது போராட்டம் தொடர்பில் பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும். நாங்கள் எங்கள் போராட்டங…
-
- 4 replies
- 386 views
-
-
சர்வதேச நியமங்களை பின்பற்ற இலங்கைக்கு பிரித்தானியா அழுத்தம் கொடுக்க வேண்டும் - டக்ளஸ் அலக்சான்டர் 04 மே 2013 சர்வதேச நியமங்களை பின்பற்றுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு பிரித்தானியா அழுத்தம் கொடுக்க வேண்டுமென பிரித்தானியாவின் நிழல் வெளிவிவகார அமைச்சர் டக்ளஸ் அலக்சான்டர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் சர்வதேச வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை கருவியாகப் பயன்படுத்தி பிரி;த்தானியா இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் சகல தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீன சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்…
-
- 1 reply
- 312 views
-
-
ஹலால் உணவு வேண்டும் என்றால் பாகிஸ்தானுக்கு சென்று வாழ வேண்டும் என்றும், வடக்கில் அரசியல் உரிமைகள் கேட்டால் கொழும்பில் வாழும் தமிழருக்கு ஆபத்து என்றும் கருத்துகள் தெரிவிப்பது இனத்துவேஷம் இல்லையா? இந்த கருத்துகளை சொல்லி வருபவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் இல்லை. ஆனால் அதிகாரத்தை பகிர்ந்து சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஐக்கியமாக வாழும் நாட்டை கட்டி எழுப்ப எம்முடன் இணைந்து செயற்படும் அசாத் சாலியை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பது என்ன நியாயம்? என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய ஐக்கிய முன்னணி செயலாளர் அசாத் சாலியை கைது செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து கொழும்பு பெரிய பள்ளி வாசல் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பட்டத்தில் கலந்து கொண்…
-
- 2 replies
- 423 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 300 தமிழர்கள் மாயம்! - செல்வராசா MP குற்றச்சாட்டு!! பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்டுவிட்டதாக அரசு கூறியதன் பின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 300 தமிழர்கள் காணாமல் போயுள்ளனர். இவர்களைக் கண்டறிய பொலிஸ் திணைக்களத்திடமும் மற்றும் சிறைச்சாலை ஆணையாளரிடமும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள வெல்லாவெளிப் பிரதேசத்திற்குட்பட்ட முனைத்தீவு கிராமத்தின் மேம்பவர் விளையாட்டுக்கழகத்தின் சாதனையாளர் கௌரவிப்பும் புதுவருட விளையாட்டு விழாவும் முனைத்தீவு சக்தி மகாவித்தியாலய விளையாட்…
-
- 0 replies
- 350 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினரின் உரிமையில் உளவுத்துறை தலையிடுவது என்ன நியாயம்? - மாவை கேள்வி! 'நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களோ அரசின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் விசாரணைக்கு அஞ்சி ஒளிந்துகொள்ள மாட்டார்கள்' கிளிநொச்சியில் மட்டுமல்ல, வடக்கு, கிழக்கு முழுவதும் காணிச் சட்டதிட்டங்களுக்கு விரோதமாகவும் ஜனநாயக அடிப்படை உரிமைச் சட்ட திட்டங்களுக்கு மாறாகவும் மக்களின் காணிகளை பகற்கொள்ளைபோல் அபகரித்துவருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவேண்டியது அந்தக் காணி உரித்துள்ளவர்களுக்கும், அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உரித்தான பொறுப்பும், கடப்பாடுமாகும். அந்த உரிமையில் உளவுத்துறையினர் தலையிட…
-
- 0 replies
- 275 views
-
-
வட மாகாண சபைத் தேர்தல் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. அதுகுறித்த அறிவித்தல் எதுவுமே இதுவரை விடுவிக்கப்படவில்லை என்று தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கட்சிகளின் செயலாளர்களை நேற்று (03) தேர்தல் திணைக்களத்தில் சந்தித்து தேர்தல் ஆணையாளர் கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, உட்பட பதிவு செய்யப்பட்ட சகல கட்சிகளின் செயலாளர்களும் கலந்துகொண்டனர். இந்த மாதம் 15ஆம் திகதி முதல் காட்சிப்படுத்தப்படவுள்ள 2013ஆம் திகதிக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியல் தொடர்பில் இதன்போது ஆராயப்ப்ட்டது. இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆக…
-
- 0 replies
- 572 views
-
-
இலங்கையில் யுத்தத்தின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள சமாதான சூழலை சீர்குலைக்கும் வேலைகளில் ஈடுபடவேண்டாம் என்று நாட்டின் தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸ் காவல்துறையை எச்சரித்துள்ளார். நிந்தவூரைச் சேர்ந்த முஸ்லிம் பிரஜை ஒருவர் தாக்கல் செய்திருந்த மனுவொன்றை பரிசீலித்தபோதே தலைமை நீதியரசர் இந்தக் கருத்தைக் கூறினார். மூத்த வழக்கறிஞர் கே.எஸ். ரட்ணவேல் நியாயமான காரணமின்றி தன்னைக் கைதுசெய்த பொலிசார் இரண்டு மணிநேரத்துக்குப் பின்னர், எந்தவிதக் குற்றச்சாட்டுக்களுமின்றி தன்னை விடுவித்துவிட்டதாக மனுதாரர் வழக்கில் தெரிவித்துள்ளார். பொலிசார் சார்பில் ஆஜரான அரசதரப்பு சட்டத்தரணி மனுதாரருக்கும் பொலிசாருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு…
-
- 0 replies
- 361 views
-
-
சர்வதேச கண்காணிப்புக்கு மத்தியிலேயே வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையாளரிடம் நேற்று நேரில் கோரிக்கை விடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அது நடைமுறைக்கு வரவேண்டும் என்றும் வலியுறுத்தியது. வடக்குத் தேர்தலை முன்னிட்டு இவ்வாறானதொரு ஏற்பாடு செய்து கொடுக்கப் படாவிட்டால் அங்கு நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை எதிர்பார்க்க முடியாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் ஆணையாளரிடம் சுட்டிக்காட்டியது. அதேவேளை, இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள் உட்பட வெளிநாடுகளில் வாழும் இலங்கைப் பிரஜைகளுக்குத் தேர்தலில் வாக்களிப்பதற்கு விசேட திட்டமொன்று வகுக்கப்பட வேண்டும் எனவும் அரசியல் கட்சிகள் நேற்று தேர்தல் ஆணை…
-
- 0 replies
- 301 views
-
-
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதியாக டேவிட் டாலி நியமனம் 04 மே 2013 இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதியாக டேவிட் டாலி நியமிக்கப்பட்டுள்ளார். டேவிட் டாலி தற்போது அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதியாக கடமையாற்றி வருகின்றார். அசர்பைஜான், டொமினிக்கன் குடியரசு, ஹொண்டுராஸ், பரகுவே மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரத்துறைப் பொறுப்பாளா கெதரீன் அஸ்டனினால் இந்தப் புதிய நியமனங்கள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களை குறித்த நாடுகளின் அரசாங்கங்கள் அங்கீகரிக்க வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கான பிரதிநிதியாக டேவிட் ட…
-
- 0 replies
- 337 views
-
-
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலியின் விடுதலைக்காக அனைத்து முஸ்லிம்களும் பொறுமையுடன் துஆ பிரார்த்தனையில் ஈடுபடுமாறு அகில இலங்கை உலமா கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது. இது பற்றி உலமா கவுன்சில் தலைவர் முபாறக் அப்;துல் மஜீத் மௌலவி தெரிவித்திருப்பதாவது, முஸ்லிம் சமூகத்துக்கான குரலாக ஒலித்த அஸாத் சாலி பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை அதிர்ச்சியை தருகிறது. இந்த விடயம் அனைத்து முஸ்லிம்களையும் பாரிய கவலைக்குள்ளாக்கியுள்ளது. நிச்சயம் அஸாத் சாலி நிரபராதி என விடுதலை செய்யப்படுவார் என்பதில் எமக்கு நிறையவே நம்பிக்கை உண்டு. ஆயினும் அவரது விடுதலைக்காக அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து துஆ பிரர்த்தனையில் ஈடுபடுமாறு அகில இலங்கை உலமா கவுன்சி…
-
- 8 replies
- 721 views
-
-
ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகள்! இலங்கைக்கு 4ம் இடம் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை பிரயோகிப்போர் தண்டிக்கப்படாத நாடுகளின் பட்டியிலில் இலங்கை இரண்டாவது தடவையாகவும் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலே இலங்கையில் ஊடகவியலாளர்களின் நிலையை இவ்வாறு எடுத்துக் காட்டியுள்ளது. பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் இந்த வரிசையில் உள்ளடங்குகின்றன. ஈராக், இலங்கை, மெக்ஸிக்கோ, கொலம்பியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்படும் சம்பவங்களில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் ஊடகவியலாளர்களை பாதுகாக்க…
-
- 0 replies
- 307 views
-
-
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் அசாத் சாலியை விடுதலை செய்யக்கோரி அக்குறணையில் இன்று அமைதியான ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெருந்திரளான மக்கள் 'முஸ்லிம்களின் உரிமைக்காக குரல் கொடுத்த அசாத் சாலியை விடுதலை செய்" என கோஷம் எழுப்பினர். அசாத் சாலியை பார்வையிட மனைவி, மகள், எம்.பி.க்களுக்கு அனுமதி மறுப்பு குற்றப்புலனாய்வு பொலிசாரினால் கைது செய்யப்பட்டு தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியை பார்வையிட அவரது மனைவி மகள் உள்ளிட்ட அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. கொழு…
-
- 3 replies
- 335 views
-
-
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் பணிகளை பிரித்தானியா துரிதப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடு கடத்தப்பட்ட விபரங்கள் வெளியிடப்படாத போதிலும், யுத்த நிறைவினைத் தொடர்ந்து கிரமமான முறையில் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2009 ஆண்டில் 504 பேரும், 2010ம் ஆண்டில் 608 பேரும், 2011ம் ஆண்டில் 865 பேரும், 2012ம் ஆண்டு இதுவரையில் 717 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். 2013ம் ஆண்டு இறுதியில் நாடு கடத்தப்பட்டவர்கள் தொடர்பான முழு விபரங்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/91395/language/ta-IN/article.aspx
-
- 1 reply
- 317 views
-
-
அசாத் சாலி வாயை மூடிக்கொண்டு இருக்க உடன்பட்டால் விடுதலை என அரசு அழுத்தம் கொடுப்பதாக அரசாங்கத்தின் முக்கிய தரப்பொன்றிடம் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தகவல் கிடைத்துள்ளது. "நீரிழிவு நோயாளியான நான் உணவு உண்ண மாட்டேன்" என அசாத் உண்ணாநோன்பு மூலம் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் அசாத்தின் சட்டத்தரணியிடம், "நிலைமை என் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது" என சட்டமா அதிபர் தெரிவித்திருப்பதாக கொழும்பில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைக்கும் மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது. அசாத் சாலியை கைது செய்து தேவையற்ற சிக்கலை ஏற்படுத்த அரசு தலைமைக்கு பெரியளவில் ஆர்வம் இல்லை. ஆனால் இதை செய்து அவரது வாயை மூடசெய்யுங்கள் என அரசில் உள்ள முஸ்லிம் அரசியல்வாத…
-
- 0 replies
- 598 views
-
-
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் பங்கேற்றனர். கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் இருந்து விலகியுள்ள உறுப்பினர்களே மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண புலனாய்வுப் பிரிவுத் தலைவர் ஒருவரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதாக தெரியவருகிறது. அத்துடன், இவர்கள் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டதன் மூலம் பிள்ளையானின் கட்சி மீண்டும் பிளவுபட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதற்கு முன்னர் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுடன் இணைந்து செயல்பட்டுவந்த…
-
- 2 replies
- 702 views
-
-
வடக்குத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற குடையின் கீழ் போட்டியிட்டாலும் அதன் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்கள் குழுவானது தனித்துவமானவடக்குத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற குடையின் கீழ் போட்டியிட்டாலும் அதன் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்கள் குழுவானது தனித்துவமானதாக இருக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளார் பசில் ராஜபக்ஷ. வடக்குத் தேர்தலில் முதற் தடவையாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பலமான முறையில் போட்டியிடுகின்றது. இதுவரை காலமும் அவ்வாறான பலமான நிலைமை எமக்கு இருக்கவில்லை. ஆனால் தற்போது சுதந்திரக் கட்சிக்கு வடக்கில் மக்கள் ஆதரவுடன் பலமாக உள்ளது என்றும் ; ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை போன்று வடக்குத் …
-
- 4 replies
- 626 views
-
-
திருகோணமலை சம்பூரில் 500 மெகாவோல்ட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை அமைப்பதற்காக, இலங்கையுடன், இந்திய அரசுத்துறை நிறுவனமான என்.ரி.பி.சி இந்த மாத இறுதியில் இரண்டு முக்கிய உடன்படிக்கைகளைச் செய்து கொள்ளவுள்ளது. அயல்நாடுகளின் உட்கட்டமைப்பு வசதிகளில், பொருளாதார மற்றும் மூலோபாய செல்வாக்கை விரிவாக்கிக் கொள்ளும் இந்தியாவின் நோக்கத்தின் ஒரு பகுதியே இந்தத் திட்டமாகும். மின்சார கொள்முதல் மற்றும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான இரு முக்கியமான உடன்பாடுகளே இந்த மாத இறுதியில் செய்து கொள்ளப்படவுள்ளன. நீண்டகாலம் இழுபறியாக இருந்து வந்த இந்தத் திட்டத்துக்கான உடன்பாடுகள் செய்து கொள்ளப்படுவது தற்போது உறுதியாகி விட்டன என்பதை இந்திய அரச அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். அதேவே…
-
- 2 replies
- 592 views
-