ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
12 MAY, 2024 | 09:49 AM இன்றுவரை நீதி வழங்கப்படாத இனப்படுகொலையின் இவ்வாண்டிற்கான நினைவேந்தல் எதிர்வரும் 18 ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடைபெறும் என்றும் எனவே அனைவரும் பேதங்களைத் துறந்து சுயலாப சுயவிளம்பரப் படுத்தல்களைக் கடந்து பொது நிகழ்ச்சி நிரலில் ஒன்றுபட்டு தமிழர்களாக இந் நினைவேந்தலில் ஒன்றிணையுமாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுகட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. நினைவேந்தல் நிகழ்வு குறித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுகட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது, முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழினப்படுகொலை உச்சந்தொட்டு இவ்வருடம் 15 ஆவது ஆண்டு. ஈழ…
-
- 0 replies
- 286 views
- 1 follower
-
-
12 MAY, 2024 | 07:20 AM வவுனியா நகரை அண்மித்த பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, ஓமந்தைப் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை வவுனியா நகரையண்டிய பகுதியில் உள்ள விடுதி ஒன்றிற்க்கு அழைத்து சென்ற இளைஞர் ஒருவர் குறித்த சிறுமிக்கு பாேதை மருந்து கொடுத்து கூட்டு வன்புணர்வில் ஈடுபட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சிறுமியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து பெற்றோர் சிறுமியிடம் விசாரித்ததில் சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்ப…
-
- 1 reply
- 390 views
- 1 follower
-
-
12 MAY, 2024 | 10:19 AM 'முக்கால் நூற்றாண்டு போராட்டமும் எமது தேசத்தின் எதிர்காலமும்' என்ற தொனியில் முள்ளிவாய்க்காலின் 15ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு சுமந்திரன் அறைகூவலொன்றை விடுத்துள்ளார். இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2009 மே மாதம் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் படுகொலைகளை இந்த வாரம் நாம் நினைவுகூருகிறோம். யுத்தத்தின் இறுதிக்கட்டத்திலே எந்தத் திசையிலும் தப்பியோட முடியாமல், தொடர்ச்சியாக அன்பானவர்களை இழந்தவண்ணமாக வெறுங்கையர்களாக எமது மக்கள், உணவில்லாமல், கஞ்சி மட்டும் குடித்தபடி, பாரிய நெருக்கடியிலும் துயரத்திலும் கழித்த நாட்கள் இவை…
-
- 0 replies
- 283 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 11 MAY, 2024 | 10:59 AM தமிழ்நாட்காட்டியின் மிகவும் துயரமான நாட்களை முள்ளிவாய்க்கால் குறிக்கின்றது என தெரிவித்துள்ள அவர் முள்ளிவாய்க்காலின் இறுதி இராணுவ நடவடிக்கையின் போது 169000 தமிழர்கள் கொல்லப்பட்டனர் என மதிப்பிடப்படுகின்றது இது ஒரு இனப்படுகொலை என பலர் கருதுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இராணுவம் யுத்தசூன்யவலயத்தில் கண்மூடித்தனமான குண்டுவீச்சினை மேற்கொண்டது படுகொலைகள் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் போன்றவற்றில் ஈடுபட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழர்தாயகப்பகுதிகளான வடக்குகிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளிற்கு எதிரான இலங்கை இராணுவத்தின் தொடரும் ஒடுக்குமுறைகளை குறித்து கவலை…
-
- 0 replies
- 193 views
- 1 follower
-
-
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவேந்தி குருதிக்கொடை நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. குறித்த நிகழ்வானது எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 09 மணி முதல் மாலை 03.00 மணி வரை இடம்பெறவுள்ளது. தமிழ் மக்களின் நினைவேந்தல் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவேந்தி நடைபெறும் குருதிக்கொடையில் பல்கலைக்கழக மாணவர்கள், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் மட்டுமன்றி பொதுமக்களும் கலந்து கொண்டு குருதிக் கொடை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/blood-donation-jaffna-uni-mullivaikal-memorial-1715440182
-
- 0 replies
- 544 views
- 1 follower
-
-
சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதம் தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி ஆலோசனை 11 MAY, 2024 | 04:38 PM (எம்.மனோசித்ரா) சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதத்தினை அதிகரிக்குமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில், தற்போதைய பொருளாதார நிலைமையையும் அடிப்படையாகக் கொண்டு மதிப்பாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்தார். பொருளாதார நெருக்கடிகளுக்கு முன்னர் சிரேஷ்ட பிரஜைகளுக்கான சேமிப்பு வட்டி வீதம் 15 வீதமாகக் காணப்பட்டது. ஆனால், அதன் பின்னர், மத்திய வங்கி வட்டி வீதங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போ…
-
- 3 replies
- 526 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 11 MAY, 2024 | 12:47 PM யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பகுதியில் குடும்ப பெண்ணொருவர், நேற்று வெள்ளிக்கிழமை (10) கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். உடுத்துறை வடக்கு, தாளையாடியை சேர்ந்த 44 வயதுடைய ஜெகசீலன் சங்கீதா என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் வீட்டின் கழிவறைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த நீர் நிரப்பப்பட்ட கொள்கலனினுள் (பரல்) தலை மூழ்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். அது தொடர்பில் மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக ஒப…
-
- 0 replies
- 289 views
- 1 follower
-
-
11 MAY, 2024 | 01:41 PM பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் அமெரிக்கத் தூதர் ஜூலி சங். நாமல் ராஜபக்ஷவுடனான சந்திப்பையடுத்து அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையில் அரசியல் கட்சிகளுக்கிடையிலான எமது சந்திப்பின் ஒரு பகுதியாக நாமல் ராஜபக்ஷவை சந்தித்தோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் என்ற புதிய பொறுப்பில் அவரது அரசியல் ஈடுபாடுகள், இளைஞர்களை பாதிக்கும் பிரச்சினைகள் மற்றும் இலங்கை - அமெரிக்காவுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தல் தொடர்பான கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம் என குறிப்பிட்டு…
-
- 0 replies
- 284 views
- 1 follower
-
-
தற்போது மேலும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். “உச்ச நீதிமன்ற தீர்ப்பை பரிசீலிக்குமாறு இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். டயானா கமகேவைப் போன்று 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருப்பதால் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு தகுதியற்றவர்கள் என்ற செய்திகளை நாங்கள் கேள்விப்படுகிறோம்” என சோபித தேரர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இந்த விடயங்கள் தொடர்பில் நீதிமன்றத்திற்கு செல்வது நேரத்தையும் பணத்தையும் வீணடிக்கும் செயலாகும் எனவும் சோபித தேரர் தெரிவித்துள்ளார். "இந்த எம்.பி.க்கள் தங்கள் பதவிகளை மரியாதையுடன் ராஜினாமா செய்யுமாறு நாங்கள் கேட்ட…
-
- 0 replies
- 260 views
-
-
தமிழ்ப் பொது வேட்பாளா் விடயத்தில் முடிவெடுக்க 19 ஆம் திகதி தமிழரசு மத்திய குழு கூடுகிறது May 11, 2024 தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை எடுப்பதற்காக இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயல்குழு எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கூடவுள்ளது. வவுனியாவில் நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து மத்திய செயல் குழுவிலுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கடிதம் அனுப்பி வைத்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் விடயம் தொடர்பாக கடந்த 4ஆம் திகதி சிவில் அமைப்புகளுக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையே சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இந்த சந்திப்பில் பங்கேற்றதமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமது கட…
-
-
- 4 replies
- 667 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 11 MAY, 2024 | 08:27 AM இலங்கையில் பொறுப்புக்கூறல் உண்மை நல்லிணக்கம் நீதி போன்றவற்றிற்கு ஆதரவளிப்பேன் என இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்படவுள்ள எலிசபெத் கே கோர்ஸ்ட் தெரிவித்துள்ளார். அமெரிக்க செனெட்டின் வெளிவிவகார குழுவின் முன்னிலையில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்டால் இலங்கையில் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களை ஆதரவளிக்க எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்துள்ள அவர் இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்த அமெரிக்காவின் கரிசனைகளை பகிர்ந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கையில் துடிப்பான சிவில்சமூகம் காண…
-
- 0 replies
- 191 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் – புன்னாலைக் கட்டுவனில் பொலிஸார் விரட்டிச் சென்ற நபரொருவர் மின்கம்பத்தில் மோதுண்டு இன்று இரவு உயிரிழந்தார். குறித்த சம்பவத்தில் அப்பகுதியில் பொதுமக்கள் கூடியதால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை மறித்துள்ளனர். இதன் போது குறித்த நபர் தொடர்ந்து பயணிக்கவே விரட்டி சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த நபர் பயணித்த மோட்டார் வண்டியை உதைந்து விழுத்தியதில் குறித்த நபர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்தார் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டினார். உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொ…
-
- 0 replies
- 251 views
- 1 follower
-
-
Published By: VISHNU 11 MAY, 2024 | 01:53 AM இலங்கை நிர்மாணக் கைத்தொழில் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ”வீடமைப்பு மற்றும் சர்வதேச நிர்மாணக் கண்காட்சி – 2024”ஐ (Housing & Construction International Expo – 2024) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் வெள்ளிக்கிழமை (10) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பார்வையிட்டார். 'இலங்கையைக் கட்டியெழுப்புவோம்' என்ற தொனிப்பொருளின் கீழ் இவ்வருட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், நிர்மாணத்துறை நிறுவனங்களின் 300 விற்பனை கூடங்கள் இந்தக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சீனாவில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களின் தயாரி…
-
- 0 replies
- 180 views
- 1 follower
-
-
Published By: VISHNU 11 MAY, 2024 | 01:02 AM (இராஜதுரை ஹஷான்) இந்திய மக்களவைத் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தனது நிலைப்பாட்டை அறிவிப்பார். ஜனாதிபதி தேர்தலுக்கு நாங்கள் தயார், ஆனால் சிறந்த வேட்பாளர் இதுவரை கிடைக்கவில்லை. நாட்டுக்காக எவருடனும் இணைந்து செயற்பட தயார் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (10) தேர்தல் கண்காணிப்பு மையத்தைத் திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது, …
-
- 1 reply
- 240 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 11 MAY, 2024 | 09:57 AM குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்ததாக தெரிவித்து 15 வயது சிறுமியொருவர் கர்ப்பம் தரித்த நிலையில் தனது தாயுடன் குழந்தை பிரசவத்துக்காக நேற்று (10) மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குழந்தை நேற்று இரவு பிரசவித்த நிலையில், குழந்தையை அநாதரவாக விட்டுவிட்டு இன்று (11) காலை முதல் தாய், சிறுமி என இருவரும் தலைமறைவாகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தால் யாழ்ப்பாணம் பொல…
-
- 2 replies
- 387 views
- 1 follower
-
-
இலங்கையின் தற்போதைய தேசிய வலைப்பந்தாட்ட வீராங்கனையும் முன்னாள் தலைவருமான செமினி அல்விஸ் ( Semini Alwis ) தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பயன்படுத்தியுள்ளதாக, இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் (SLADA) தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட சோதனைகளின்போது, சிறுநீர் மாதிரிகளில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகள் இருப்பதாக உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (WADA) அதிகாரபூர்வமாக செமினிக்கும், இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனத்துக்கும் தெரிவித்துள்ளது. வலைப்பந்தாட்ட போட்டி இந்நிலையில், இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் மற்றும் உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் ஆகிய அமைப்புகளால் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனைய…
-
- 1 reply
- 287 views
-
-
-
-
- 3 replies
- 367 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் (Jaffna) மற்றும் மன்னார் (Mannar) ஆகிய மாவட்டங்களின் கரையோரப் பிரதேசங்களை கடலரிப்பானது மிகமோசமான முறையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan) மற்றும் சிவஞானம் சிறீதரன் (Sivagnanam Shritharan) ஆகியோர் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் இன்றைய (10.05.2024) அமர்வின் போதே அவர்கள் இதனை கூறியுள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கடலரிப்பின் காரணமாக மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தின் கரையோரங்களில் பாரியளவில் பாதிப்பு ஏற்படுகின்றது. இதனால் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலை அண்மித்த கரையோர பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் பெறும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். எனவே …
-
- 0 replies
- 226 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 10 MAY, 2024 | 03:45 PM (நா.தனுஜா) இலங்கையில் சிறந்த ஆட்சி நிர்வாகத்தையும், வெளிப்படைத்தன்மையையும் உறுதிசெய்யவேண்டியதன் அவசியம் குறித்து அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளார். 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 80 ஆம் பிரிவின்படி 2023 ஆம் ஆண்டுக்கான பொருளாதார மீளாய்வு அறிக்கை மற்றும் 99 ஆம் பிரிவின்படி கடந்த ஆண்டுக்கான மத்திய வங்கியின் நிதியியல் கூற்றுக்கள் என்பன அண்மையில் வெளியிடப்பட்டன. இவ்வாறானதொரு பின்னணியில் சில தினங்களுக்கு முன்னர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க…
-
- 1 reply
- 186 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில் காணி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்ட நிலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடியான முறையில் ஈடு வைத்து பணம் பெற்றவரே நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியின் உறுதியை பதிவு ஒன்றுக்காக தனது உறவினர் ஒருவரிடம் கையளித்துள்ளனர். காணி உறுதி குறித்த நபர் அக்காணி உறுதி பத்திரத்தை உள்ளூரில் நபர் ஒருவரிடம் 12 இலட்ச ரூபாய்க்கு ஈடு வைத்து பணம் பெற்றுள்ளார். இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதற்கமையை கைது செய்யப்பட்ட நபர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்…
-
- 0 replies
- 207 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 10 MAY, 2024 | 04:46 PM வன்னி மண் அறக்கட்டளை அனுசரணையுடன் மன்னார் மாவட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனை நிலையத்தின் அமுலாக்கத்துடனும் நுங்கு விழா இன்று வெள்ளிக்கிழமை (10) காலை 10.30 மணியளவில் மன்னாரில் நடைபெற்றது. மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள மன்னார் மாவட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனை நிலையத்தின் முன்பாக சிறப்பாக இடம்பெற்ற நுங்கு திருவிழாவில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மன்னார் மாவட்ட மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை விசேட அம்சமாகும். நுங்கு திருவிழாவானது பனை மரத்தின் தேவை குறித்தும் பனை மரத்தினால் பெறப்பட கூடிய பயன்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற…
-
-
- 5 replies
- 562 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 10 MAY, 2024 | 04:38 PM தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீராப் பிரச்சினையாக வைத்திருந்து அரசியல் ஆதாயம் தேடுவோரின் விருப்பமே தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தும் முயற்சி என்று விமர்சித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஒப்பீட்டளவில் வல்லவராக தன்னை நிரூபித்துள்ள ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை தமிழ் மக்களின் வெற்றியாக மாற்றும் வகையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்பாடுகள் அமைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தீவக அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே செயலாளர் நாயகத்தினால் குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளத…
-
- 2 replies
- 411 views
- 1 follower
-
-
கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடத்தின் தமிழ், சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது மதுசாரப் பாவனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட ஆய்வொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. குறித்த ஆய்வுக்காக நாடளாவிய ரீதியில் 415 பேரிடம் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. அவர்களில் 192 பெண்களும் அடங்குவர் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் படி இந்த ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டக் காலங்களில் மதுசாரப் பாவனை குறைவடைந்துள்ளதாக 64.4 சதவீதமானோர் தெரிவித்துள்ளனர். அதில் 26 சதவீதத்தினர் இந…
-
-
- 2 replies
- 509 views
- 1 follower
-
-
இலங்கையிலுள்ள 24 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோகிராம் அரிசியை இலவசமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தீர்மானத்திற்கமைய இந்ந நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. அதேவேளை அண்மைக்காலமாக அரசாங்கத்தினால் இலவசமாக விநியோகிக்கப்படும் அரிசி தரமற்றது எனவும், அவை பணத்திற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார். https://thinakkural.lk/article/301288
-
- 2 replies
- 211 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 10 MAY, 2024 | 12:24 PM மூதாட்டி ஒருவரிடம் கைபேசியை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவருக்கு நீதிமன்றத்தினால் ஆறு மாதகால சிறைத்தண்டனை விதித்ததோடு, அதனை 10 வருடங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. பருத்தித்துறை தும்பளை பகுதியில் பழைய பொருட்கள் சேகரிக்க வாகனம் ஒன்றில் சென்ற மூவர், வீட்டில் தனித்திருந்த மூதாட்டியின் கைபேசியை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் பருத்தித்துறை பொலிஸாரினால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், மூவரையும் மன்று குற்றவாளியாக கண்டு, மூவருக்கும் தலா 06 …
-
- 1 reply
- 594 views
- 1 follower
-