Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் ஒருவர் ஓட ஓட வெட்டிக்கொலை;பட்டப்பகலில் கொடூரம் பட்டப்பகலில் சினிமாப் பாணியில் யாழ்.நகரில் பயங்கரக் கொலை ஒன்று நேற்று நிகழ்த்தப்பட் டது. வீதியில் ஓட ஓடத் துரப்பட்ட நபரின் மீது அசிட் வீசித் தாக்கிய கும்பல் அவரது கையை வாளினால் வெட்டித் துண்டாடியது. இந்தப் படுபாதகச் செயலால் யாழ். நகரமே நேற்று அதிர்ச்சியில் உறைந்தது. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் அவரசமாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு விரையப்பட்ட போதும் சிகிச்சை பய னின்றி நேற்றிரவு உயிரிழந்தார். இந்தக் கோரச் சம்பவம் யாழ்.ஐந்து சந்தியில் பிற் பகல் இடம்பெற்றது. சம்பவத்தில் யாழ். ஒஸ்மானி யாக் கல்லூரி வீதியைச் சேர்ந்த அப்துல் காதர் நவாஸ் (வயது 56) என்பவரே உயிரிழந்தவராவர். இவர் ஐந்து பிள்ளைகளின் தந்தையா…

  2. 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும், அரசாங்கம் பயங்கரவாதம், அதிகரித்த இராணுவ பிரசன்னம்,சோதனைச் சாவடிகள் என தற்போதும் செயற்பட்டு வருகின்றது. இதனால் இலங்கை தொடர்பில் மேற்குலக நாடுகளுக்கு எதிரான நிலைப்பாடு வலுப்பெற்றுள்ளது. எனவே இலங்கை செல்பவர்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும், நாட்டில் அண்மைக்காலமாக தேசப்பற்றுசார் நிலைப்பாடுகள் வலுவடைந்துள்ளமையால் மேற்குலக நாடுகளில் இலங்கை தொடர்பில் எதிர்ப்பலைகள் அதிகரித்துள்ளது. இவ்வாறான காரணங்களை முன்வைத்து பிரித்தானியா இலங்கை செல்லும் தமது பிரஜைகளுக்கு பயண எச்…

    • 2 replies
    • 701 views
  3. விரைவில் மும்மொழி அடையாள அட்டை: வாசு புதன்கிழமை, 27 மார்ச் 2013 21:13 -யொஹான் பெரேரா, லஹிரு பொத்முல்ல மும்மொழி தேசிய அடையாள அட்டையை விரைவில் அறிமுகம் செய்வது பற்றி அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். "அடையாள அட்டை வழங்கல் எனது அமைச்சின் கீழ் இல்லை. எனினும் எனது அமைச்சு இதில் பங்களிக்கவுள்ளது" என அவர் குறிப்பிட்டார். முன்னர் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளில் அடையாள அட்டைகள் வழங்க திட்டமிடப்பட்டிருந்தபோதும் தற்போது மும்மொழி அடையாள அட்டை பற்றி ஆலோசிக்கப்படுகின்றது என அமைச்சர் தெரிவித்தார். தேசிய அடையாள அட்டையின் முன் பக்கத்தில் சிங்களமே காணப்படுகின்றது. இதை மாற்றி மும்மொழி அட…

  4. ​பொதுபல சேனா அமைப்புக்கு ஹக்கீம் முதல் முறையாக கண்டனம்! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் இரண்டு கொள்கலன்களில் ஆயுதங்களை இரகசியமாக அம்பாறைக்கு கொண்டு வந்ததாக பொதுபல சேனா செயலாளர் பாணந்துறை பகிரங்க பொதுக் கூட்டமொன்றில் தெரிவித்த பொய்யான குற்றச்சாட்டு இலங்கை வரலாற்றில் முஸ்லிம்களின் மகோன்னத அரசியல் தலைவராகத் திகழ்ந்த அன்னாரை அவமதிக்கும் செயலென அக் கட்சியின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் கண்டனம் தெரிவித்துள்ளார். எந்தவித அடிப்படையோ ஆதாரமோ அற்ற பொய்களையும் அவதூறுகளையும் பெரும்பான்மை மக்கள் மத்தியில் பரப்பி, அவர்களை தவறாக வழிநடாத்த எத்தனிப்பதை அவ்வமைப்பு கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார். இது குறித்து அமைச்சர் ர…

    • 2 replies
    • 709 views
  5. பிரசாத் கரியவாசத்தை கைது செய்து சிறையில் அடைக்குமாறு வைகோ மன்மோகனுக்கு கடிதம் இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசத்தைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து மதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில்... இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசம், தன்னுடைய மின்னஞ்சல் மூலம் ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும், சிங்களக் கொடியோருக்கு ஆதரவாகவும், இந்தியாவில் உள்ள ஒரிசா, வங்காளம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்கள் செயல்பட வேண்டும் என்று, அக்கிரமமான ஆலகால விடம் தோய்ந்த ஒரு அறிக்கையை, மார்ச் 19 ஆம் திகதி தயாரித்து, கொழும்பில் உள்ள ஊடக மையத்தின் மூலம், இந்தியாவில் உள்ள ஊடகங்களுக்கும் பத்த…

    • 0 replies
    • 330 views
  6. தமிழ் ஈழம், ஐ.நா. தீர்மானம், மாணவர் போராட்டம், மீனவர்கள் மீது தாக்குதல் என இலங்கைப் பிரச்சினை சர்வதேச அளவில் பேசப்படுகிறது. மத்திய அரசின் பாராமுகத்துக்கு எதிராக தமிழகமே கொந்தளிக்கிறது. இன்னொரு பக்கம் மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகி இருக்கிறது. தமிழ்நாட்டு அரசியல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில் மக்களின் கணிப்பு பார்க்கக் களம் இறங்கியது ஜூனியர் விகடன். மக்கள் மனசு’ என்ற தலைப்பில், சர்வே எடுக்க நமது நிருபர்கள் தமிழகம் முழுக்க வலம் வந்தனர். 3,083 பேரை நேரடியாகச் சந்தித்தது நமது சர்வே குழு. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். விகடன் இணையத்தளத்தின் வழியாகவும் சர்வே எடுக்கப்பட்டது. அதில் பங்கேற்றவர்கள் 2,286 பேர். மொத்தமாக 5,369 பேரிடம் எடுக்கப்பட்ட இந்த ம…

    • 2 replies
    • 596 views
  7. நாடு முகம் கொடுத்திருக்கும் சவால்களை வெற்றி கொள்வதற்கு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பெரும் ஆதரவை இலங்கை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள இலங்கை அமெரிக்க சமூகத் தலைவர்களுடன் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை வலியுறுத்தியதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. சர்வதேச அரங்கில் இருக்கும் இலங்கைக்கு எதிரான சக்திகளை வெற்றிகொள்வதற்கு வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களது ஆதரவு மட்டுமன்றி புலம்பெயர் வாழ் சமூகத்தின் ஆதரவும் இலங்கைக்கு தேவைப்படுவதாகவும் ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார். அத்துடன், முதலீட்டுத் திட்டங்களிலும் வர்த்தக அபிவிருத்திகளிலும் அவர்களது பங்களிப…

    • 0 replies
    • 809 views
  8. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டை அக்கட்சி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். புல்மோட்டை, ஜின்னாபுரம் எனுமிடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போது அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டார். கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக போட்டியிட்ட சின்ன மரைக்கார் பளீல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சம்பந்தன் மேலும் தெரிவிக்கையில், "கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக நியமிக்க தயார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் பகிரங்கமா…

    • 0 replies
    • 446 views
  9. LLRC பரிந்துரைகளை அமுலாக்கும் ரணிலின் யோசனை நிராகரிப்பு! - நாடு தழுவிய ஹர்த்தாலுக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு!! நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக சர்வகட்சி மாநாட்டைக் கூட்டி அதனூடாகப் பொறிமுறையொன்றை வகுக்கவேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் யோசனையை அரசு நிராகரித்துள்ளதால் அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் ஹர்த்தால் நடவடிக்கைகளில் ஈடுபடப் பொது எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. இந்த ஹர்த்தால் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மக்களை அணிதிரட்டுவதற்காக எதிர்வரும் 31 ஆம் திகதி கண்டியில் மாபெரும் பொதுக்கூட்டமொ…

  10. வட மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடதத அரசாங்கம் திட்டமிட்டுள்ளதால், வடமாகாண சபையை ஸ்தாபிக்கும் அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதர்வரும் ஜூலை மாதம் வெளியிட்டுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் உள்ள எட்டு மாகாண சபைகள் இயங்கி வருகின்ற போதிலும் வடமாகாண சபை இதுவரை இயங்கவில்லை என்பதால், வடமாகாணத்தின் நிர்வாகம் அளுநரின் கீழ் இருந்து வருகிறது. வடமாகாண சபையின் தேர்தலை நடத்துவதற்காக அரசியல் அமைப்புச் சட்டத்தின் 154 (1) பிரிவின் கீழ் ஜனாதிபதியினால் மாகாண சபையை ஸ்தாபிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும். 1987 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 13வது அரசியல் அமைப்புத் திருத்தச்சட்டத்தின் மூலம் மாகாண சபைகள் ஏற்பட…

  11. கட்சி எம்மை நீக்கும் முன்னர் நாமாகவே கட்சியின் செயற்பாட்டினை இடைநிறுத்திக் கொண்டோம் எனத் தெரிவித்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆரம்பகால உறுப்பினரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எட்வின் கிருஸ்ணானந்தராஜா (பிரதிப் மாஸ்டர்) கட்சித் தலைவரின் ஓரங்கட்டும் செயற்பாட்டினாலேயே இந்நிலை ஏற்பட்டிருந்தது என்றும் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இருந்து அவரும் அவருடைய சகோதரர் கைலேஸ்வரராஜாவும் விலக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பில் விளக்கமளித்து ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆர…

    • 2 replies
    • 807 views
  12. தமிழக முதலமைசருக்கு ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டிய வரும் - சுப்பிரமணியன் சுவாமி மிரட்டல். தமிழகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாட அனுமதிக்கக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா விடுத்திருக்கும் வேண்டுகோளுக்கு ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டிய நிலை உருவாகும் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார். இலங்கையில் தமிழின இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடத்த வேண்டும், தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஏப்ரல் மாதம் தொடங்கும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் வல…

  13. உதயன் ஒன்லைன் அலுவலகச் செய்தியாளர் புவனேந்திரராசா மயூதரனின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்றன. உதயன் ஒன்லைன் செய்தியாளர் புவனேந்திரராசா மயூதரன் (வயது29) நேற்று அதிகாலை வீட்டுக்கிணற்றில் தவறி விழ்ந்து அகலமரணமானார்.இவரது இறுதிக் கிரிகைகள் தற்காலிக இல்லமான பழைய தபாற்கந்தோர் வீதி, லீலாவத்தை தெல்லிப்பழையில் நடைபெற்றது. மயூரதன் இணையத்தள செய்தியாளராக கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து பணியாற்றி வந்தவர். இவரின் இழப்பு ஊடகநிறுவனத்திற்கும் இணையத்தள வாசகர்களுக்கும் பேரிழப்பாகும். அவரின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திப்போம். http://onlineuthayan.com/News_More.php?id=811061924227512066

  14. தேயிலைத் தோட்டங்களுக்கு சீனா வியட்நாமில் இருந்து பௌத்த மத யுவதிகளை அழைத்துவருவோம் - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கச்சத்தீவு மீண்டும் பெற்றுக்கொள்ளும் தேவை ஏற்பட்டிருக்குமாயின், அந்த தீவை மீண்டும் இந்தியாவுக்கு கொடுக்குமாறும், அத்துடன் ஒரு நிபந்தனையை மாத்திரம் இந்தியாவுக்கு முன்வைக்குமாறும் லக்பல சேனா அமைப்பின் தலைவர் மருத்துவர் சுதத் மல்லிக்காராச்சி தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள 8 லட்சத்து, 42 ஆயிரத்து 323 இந்திய தமிழர்களை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே அந்த நிபந்தனையாகும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்திய அரசாங்கம் இதற்கு விருப்பம் தெரிவித்தால், தாமதமின்றி, அந்த நடவடிக்கைகளை எடுக்குமாறும், தேயிலை தோட்டங்களில் வேலைக்கு ஆட்கள்…

  15. கண்டி, மடவளை மற்றும் வத்துகாமம் பகுதிகளில் 'சிங்களவர்களே விழிப்பாக இருப்போம்' என்ற தலைப்பில் துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 'சிங்கள தேசத்தின் உண்மையான உரிமையாளர்கள்' என்ற அமைப்பு (சிங்களயே செபே உரிமக்காரயோ) இந்த துண்டு பிரசுரங்களை வழங்கியுள்ளது. அதன் விபரம் வருமாறு, சிங்களவர்களே விழிப்பாக இருப்போம்! பத்துமாதங்கள் தன் வயிற்றில் சுமந்து இவ் உலகிற்கு குழந்தை ஒன்றை ஈன்று அளிப்பவள் தாய். அவளது உதிரத்தை பாலாக மாற்றி பருகத் தருகிறாள். தாயானவள் சகல சுமைகளையும் தானே சுமந்து கொள்ளும் உயர் ஸ்தானத்தில் இருப்பவள். இதற்கு சமமான நிலையில் இருப்பது தாய் நாடும் தான் பிறந்த ஊருமாகும். ஆனால் நவீன உலகில் எதுவித குளிர்கால யுத்தமுமின்றி முஸ்லிம் இராஜ்யம் பற்…

    • 8 replies
    • 1.1k views
  16. அமெரிக்காவின் அனுசரணையுடன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை, ஒரு காகித புலி போன்றது என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். யுரோஏசியா என்ற விமர்சன இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த பிரேரணை இலங்கை அரசாங்கத்தை அச்சுறுத்தும் வகையிலும், தமிழர்களுக்கு தீர்வு வழங்கும் வகையிலும் முன்மொழியப்பட்டிருந்தாலும், இறுதி நேரத்தில் அது நீர்த்துப் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குறித்த பிரேரணை காகிதத்தில் மாத்திரம் அச்சுறுத்துவதாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐக்கிய நாடுகளின் தலையீட்டுடன் இலங்கை வாழ் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை, நீண்டகால கனவாக மாறி இருப்பதாகவும் …

  17. இலங்கை விவகாரம் தொடர்பாக போராடி வரும் கல்லூரி மாணவர்கள் புதிய இணையதளம் ஒன்றை துவங்கவிருக்கின்றனர். தமிழகத்தில் நடந்து வரும் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் வகையில் ஃபேஸ்புக்கில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு என்ற அமைப்பினை ஏற்கனவே தொடங்கியுள்ள மாணவர்கள் அதில் வெற்றியும் அடைந்துள்ளனர்.சிங்களப் படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படத்துடன் இந்த ஃபேஸ்புக்கின் முகப்பு அமைக்கபட்டிருந்தது. தற்போது இந்த படம் மாற்றப்பட்டு "ஐ சப்போர்ட் தமிழ் ஈழம்" என்ற படம் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த 10 நாட்களில் 28,000 பேர் இணைந்துள்ளனர். மேலும் சுமார் 1 லட்சத்து 17,000 பே…

  18. தமிழ் ஈழம், ஐ.நா. தீர்மானம், மாணவர் போராட்டம், மீனவர்கள் மீது தாக்குதல் என இலங்கைப் பிரச்சினை சர்வதேச அளவில் பேசப்படுகிறது. மத்திய அரசின் பாராமுகத்துக்கு எதிராக தமிழகமே கொந்தளிக்கிறது. இன்னொரு பக்கம் மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகி இருக்கிறது. தமிழ்நாட்டு அரசியல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில் மக்களின் கணிப்பு பார்க்கக் களம் இறங்கியது ஜூனியர் விகடன். மக்கள் மனசு' என்ற தலைப்பில், சர்வே எடுக்க நமது நிருபர்கள் தமிழகம் முழுக்க வலம் வந்தனர். 3,083 பேரை நேரடியாகச் சந்தித்தது நமது சர்வே குழு. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். விகடன் இணையத்தளத்தின் வழியாகவும் சர்வே எடுக்கப்பட்டது. அதில் பங்கேற்றவர்கள் 2,286 பேர். மொத்தமாக 5,369 பேரிடம் எடுக்கப்பட்ட இந்த மெகா ச…

  19. திராவிட முன்னேற்றக் கழகமோ, தமிழக அரசோ இலங்கை தமிழர்களின் நன்மைக்காக எதனையும் செய்யவில்லை என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசியல்வாதிகள் இலங்கை தமிழர்கள் குறித்து சிந்திப்பவர்கள் என்றால் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை தடுத்து நிறுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார். இலங்கை கடற்பரப்பில் அத்துமீறும் ஆயிரக்கணக்கான மீன்பிடி படகுகள் தமிழக அரசியல்வாதிகளுக்கு ஆதரவு வழங்கும் வர்த்தகர்களுடையது என கோத்தபாய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அரசியல்வாதிகள், அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சர்வதேச ஊடக நிறுவனங்கள் இன்னும் ப…

  20. போர்குற்றத்தில் நானும் நீரும் என மகிந்த சொன்னதால் தலையில் அடித்து கதறிய கருணா March 24, 20134:45 pm அண்மையில் மட்டக்களப்புக்கு சென்ற மகிந்த ராசபக்ச கல்லடி பாலத்தை திறந்து வைத்து விட்டு அங்கு நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் மகிந்த சொன்ன ஒரு விடயத்தை கேட்டு கருணா தலையில் அடித்து கதறியதாக அருகில் இருந்தவர்கள் கூறுகின்றனர். இருவரும் ஜெனிவா தீர்மானம் குறித்தும் சர்வதேச போர்க்குற்ற விசாரணை குறித்தும் பேசிக்கொண்டிருந்தனர். இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச நீதிபதிகள் கொண்ட குழுவை நியமிப்பது தொடர்பாக ஐ.நா.சபை ஆராய்ந்து வருவதாக சர்வதேச நீதிமன்ற குழுவில் இருக்கும் இலங்கையின் முன்னைநாள் நீதியரசர் நிகால் ஜெயசிங்க அண்மையில் மகிந…

  21. சிங்களர்கள் இந்தியர்கள்தான்: வடநாட்டுத் தலைவர்களிடம் இலங்கைத் தூதர் கரியவாஸம் பொய் பிரசாரம். பிரிவு: தமிழ் நாடு "வட இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட சிங்களர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில்தான் இந்தியா கவலை கொள்ள வேண்டும்'' என்று தில்லியில் உள்ள அந்நாட்டுத் தூதர் பிரசாத் கரியவாஸம் இந்திய ஊடகங்கள், வடநாட்டுத் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ரகசிய பிரசாரம் செய்து வருகிறார். ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் கடந்த 21-ம் தேதி இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்னதாக, இலங்கைக்கு சாதகமான ஆதரவை இந்திய ஊடகங்கள் மூலம் பெறும் முயற்சியில் பிரசாத் கரியவாஸம் ஈடுபட்டார். இதையொட்டி கரியவாஸம் "சிங்களர்கள் வட இந்திய பூர்விகவாசிக…

  22. ஈழத்தமிழரின் இழிநிலை கண்டு உள்ளம் துடித்து வீதியில் இறங்கி நிற்கின்ற தமிழக மாணவர்கள் காலத்தின் பதிவாக, வரலாற்றின் வாசல் கதவுகளாக என்றும் போற்றப்படுவார்கள். எமது மக்களுக்காக நாங்கள் நடத்திய போராட்டங்களுக்கு பல மடங்கு மேலே சென்று நீங்கள் நடத்துகின்ற போராட்டம் எங்களுக்கு பெரும் கௌரவத்தைப் பெற்றுத் தந்திருக்கின்றது. தமிழ் மாணவர்கள் தரணியில் நினைத்ததைச் சாதிப்பார்கள் என்பதை நீங்கள் சாதித்துக் காட்டி வருகின்றீர்கள். உங்கள் உணர்வுகளுடனே நாங்கள் இங்கே இணைந்திருக்கின்றோம் என்று யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் கொழுந்துவிட்டு எரிகின்ற ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக நாங்கள் தாயகத்தில் எதையுமே செய்ய முடியாமல் சிங்களப் படைகளின் சிறை…

  23. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கிடைக்கப்பெற்றமை ஆதாரத்துடன் நிரூபிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 11 நாடுகள் ஆயுதங்களை வழங்கியுள்ளதாகவும் இது தொடர்பான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இது குறித்த அறிக்கை சர்வதேச சமூகத்திற்கு சமர்ப்பிக்கப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி முள்ளிவய்க்காலில் மீட்கப்பட்ட இரகசிய ஆவணங்களில் இந்த ஆயுதக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான தகவல்கள் காணப்பட்டுள்ளன. அமெரிக்கப் படையினர் பயன்படுத்தும் எம்16 ஆயுதங்களையும் சமிக்ஞை கருவிகளையும் புலிகள் பயன்படுத்தியுள்ளனர். அத்துடன் புலிகளின் கப்பல்கள் சர்வதேச கப்பல் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தன. படையினருக்கு கிடையாத சில இலத்த…

    • 0 replies
    • 523 views
  24. இந்தியாவுக்கு இலங்கையின் ஆயத்த ஆடைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி ஏற்றுமதி செய்வதற்கான பரந்துபட்ட சந்தை வாய்ப்பை இந்தியா அதிகரித்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, 50 லட்சம் பருத்தி ஆடைகள் வரை இந்தியாவுக்கு தீர்வையின்றி இறக்குமதி செய்யலாம் என்ற கட்டுப்பாட்டை இந்தியா தற்போது 80 லட்சம் பருத்தி ஆடைகள் வரை அதிகரித்துள்ளதாக இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இலங்கைக்கு கடந்த ஆண்டு இந்திய வர்த்தக, தொழில் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஆனந்த சர்மா அவர்கள் சென்ற போது, இந்த ஆடை ஏற்றுமதியில் இருக்கும் கட்டுப்பாட்டை விலத்துமாறு இலங்கை அரசாங்கத்தால் கேட்கப்பட்டதாகவும், அதற்கிணங்கவே 80 லட்சம் பருத்தி ஆடைகள் வர…

  25. இலங்கைக்கான விஜயத்தை நவநீதம்பிள்ளை நிராகரிப்பு மனித உரிமை ஆணைக்குழுவின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் வரை இலங்கைக்கு விஜயம் செய்வதை மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை நிராகரித்துள்ளார். உடனடியாக இலங்கைக்கு சென்று நிலைமைகளை கண்காணிக்குமாறு இந்தியா, நவநீதம்பிள்ளையிடம் கோரிக்கை விடுத்திருந்தது.அதேவேளை அமெரிக்காவின் யோசனை நிறைவேற்றப்பட்ட பின்னர், ஜெனிவாவுக்கான அமெரிக்கா தூதுவர் ஐலின் டொனஹோர் ஊடகங்களிடம் உரையாற்றினார். போர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கை தனது பொறுப்பில் இருந்து மீள இடமளிக்க போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இந்த விடயம் தொடர்பில் தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.