Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. "கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டாலும் போராட்ட வடிவங்களில் மாற்றம்" இலங்கையில், தமிழர்கள் படு கொலை செய்யப்பட்டதைக் கண்டிக்காத மத்திய அரசு மற்றும் அரசியல் கட்சிகளை எதிர்த்து, தமிழகத்தில், கல்லூரி மாணவர்கள், தொடர் போராட்டத்தில், ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க, அனைத்து கல்லூரிகளுக்கும், மாநில அரசு விடுமுறைறையை அறிவித்தது. துற்போது நிலைமை சீராகி உள்ளதை அடுத்து, நாளை, கல்லூரிகள் திறக்கப்படும் என, உயர் கல்வித் துறை அறிவித்துள்ளது. எனினும் பொறியியல் கல்லூரிகள் திறக்க்படுவதற்கான திகதி குறித்து, பின்னர் அறிவிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில், தேர்வு திகதிகளும், விரைவில் அறிவிக்கப்படும் என, எ…

  2. நாட்டுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்ததைத் தொடர்ந்து, இலங்கையில் அமெரிக்கப் பொருட்களைப் புறக்கணிக்க சிங்கள அமைப்புகள் முடிவு ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் தங்கள் நாட்டுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்ததைத் தொடர்ந்து, இலங்கையில் அமெரிக்கப் பொருட்களைப் புறக்கணிக்க சிங்கள அமைப்புகள் இலங்கை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. நேற்று கொழும்பு கோட்டை ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய சிங்கள அமைப்புகள், அமெரிக்கத் தயாரிப்புகளான கொகககோலா, பெப்சி மற்றும் அமெரிக்க கோதுமை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் தொடர்ந்து புறக்கணிக்க வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்ட முழக்கங்களை எழுப்பினார்கள். சிங்கள அமைப்புகள் அமெரிக்கத் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவ…

    • 2 replies
    • 761 views
  3. இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கும் நோக்கம் அமெரிக்காவுக்கு இல்லை என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மைக்கேல் ஜெ.சிசன் தெரிவித்துள்ளார். இலங்கையில் சமாதானத்தை வலியுறுத்தியும் மனித உரிமைகளை பாதுகாக்கும் நோக்கிலுமே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக சிசன் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பிரேரணைகளை இலங்கை நிராகரித்துள்ளது. எனினும் இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்கும் எண்ணம் அமெரிக்காவிடம் இல்லை எனவும் சிசன் குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=78802&category=TamilNews&language=tamil

  4. அமெரிக்க தீர்மானம் உப்புச்சப்பற்றது; வடபகுதி சிவில் சமூகம் கருத்து பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டிவிடும் செயற்பாடாகவே, ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானம் உள்ளது. நாங்கள் சர்வதேசத்துக்கு எத்தனையோ விடயங்களை அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொல்லியுள்ளோம். ஆனால் அதில் ஒன்றைத்தானும் இதில் உள்ளடக்காமை எங்களுக்கு ஏமாற்றத்தையளிக்கின்றது. இவ்வாறு வடபகுதி சிவில் சமூகத்தினர் "உதயனிடம்' கருத்து வெளியிட்டுள்ளனர். இலங்கை அரசுக்கு எதிராக ஜெனிவாவில் இரண்டாவது வருடமாகவும் அமெரிக்காவினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் தொடர்பில் வடக்கிலுள்ள சிவில் சமூகத்தினரிடம் கேட்டபோதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். இது குறித்து மன்னார் ஆயர் இராசப்பு யோ…

  5. யாழில் தகவல் பரிமாற்றங்கள் மக்களை சென்றடைய படை மற்றும் அடிவருடிகளினால் தடை மார் 24, 2013 ஈழத்தமிழர்களுக்கு ஆதாரவாகவும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராகவும் இந்தியாவின் தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் எதுவும் அறியக் கூடாது என்பதற்காக தொலைக்காட்சிகளில் வெளியாகும் போராட்டங்கள் தொடர்பான செய்திகள் மற்றும் சிறப்புக் கண்ணோட்டங்களை ஒலிபரப்பாமல் தடைசெய்யப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து காட்டிக் கொடுப்பு மூலம் தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டு வெறிவந்து ஒட்டுக்குழு அமைச்சரின் காலில் துடைத்துவிட்டு டான் ரீ.வி என்று ஒரு தொலைக் காட்சி நிறுவனத்தை ஆரம்பித்து தமிழ் தேசியத்திற்கு எதிராக செயற்பட்டு வரும் தயா மாஸ்டர் ஊடாக…

  6. நாம் என்ன நல்ல காரியம் செய்தாலும் தவறான பிரசாரம் செய்ய சில மோசமான கும்பல்கள் உள்ளனர். பொய் பிரச்சாரங்களை ஒருநாளும் நம்பவேண்டாம். இனபேதம், மதபேதம், மாகாண பேதம், எதுவும் இல்லாமல் நாம் ஒன்றாக சமாதானமாக ஒருதாய் மக்களாக வாழ வேண்டும். அது மாத்திரமல்லாமல் சம உரிமையோடும் வாழ வேண்டும். ஏனெனில் சமாதானம், சகவாழ்வு அபிவிருத்தி அதுதான் எமக்கு முக்கியம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 2013 தேசத்திற்கு மகுடம் “தெயட கிருள” தேசிய அபிவிருத்தி கண்காட்சியை அம்பாறை ஹாடி தொழிநுட்பக் கல்லூரி வளாகத்தில் இன்று சனிக்கிழமை மாலை 05.30 மணியளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில்…

  7. சர்வதேச சமூகத்தின் சொல்லை இலங்கை கேட்க வேண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற போரின் போது, படையினரால் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும்படி இலங்கையிடம் அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. வொசிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் இது குறித்து கருத்து வெளியிடுகையில், இலங்கை இதுவரையில் நடைமுறைப்படுத்தாத திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். சர்வதேச சமூகத்தின் சொல்லைக் கேட்க வேண்டும். உங்களுக்குத் தெரியும், நாம் முன்வைத்த தீர்மானத்தை வரவேற்று 25 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. தனது சொந்த மக்களுக்கு அதன் பொறுப்புகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு நாம் அழைப்பு விடுக்கிறோம். ந…

    • 0 replies
    • 406 views
  8. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சிறிலங்காவிற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை அமுல்படுத்த எதிர்வரும் 2014ம் ஆண்டு வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்தின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் உரிய முறையில் அமுல்படுத்தியதா என்பது அடுத்த ஆண்டு நடைபெறும் அமர்வுகளின போது ஆராயப்பட உள்ளது. வடக்கு அதி உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல், அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. மனித உரிமைப் பேரவையினால் இவ்வாறு நாடொன்றுக்காக விசேட அமர்வு ஒன்றை நடாத்தும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.அத்துடன் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றுவதற்கு 26 அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளன. எவ்வாறெனினும் நாட்டின்…

    • 1 reply
    • 712 views
  9. இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட “அமெரிக்க பிரேரணை” என்பது தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் உரிமை பிரச்சினை தீர்வுக்கு உதவப்போவதில்லை என்றும் மாறாக தமிழ், முஸ்லிம், சிங்கள மற்றும் ஆளும் அரசாங்க கட்சிகள் யாவும் ஒன்றுபட்டு செயற்படுவதற்கான நல்லெண்ண சமிக்ஞைகளே உள்நாட்டு பிரச்சினையை தீர்க்கவும், அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வு காணவும் அவசியமானது எனவும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள ஊடகங்களுக்கான அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளசையாவன… அழுதும் பிள்ளையை அவளே பெற வேண்டும் என்பதுபோல் எமது பிரச்சினைகளை நாம் மட்டுமே பேசி தீர்க்க முடியும். …

    • 2 replies
    • 737 views
  10. ஐ.நா. இப்போது தமிழர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால், போர் நடந்துகொண்டு இருந்த காலத்தில் மௌனமாகப் பார்த்துக்​கொண்டு இருந்ததும் இதே ஐ.நா தான். அதிகாரிகள், தமிழ் உணர்வாளர்கள் இதையும் ஒரு பக்கம் விமர்சிக்கவும் ஆரம்பித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் ஒன்றுகூடலை நடத்தியது 'மே-17' இயக்கம். அதன் நிறுவனர்களில் ஒருவரான திருமுருகன் இதுபற்றி நம்மிடம் விரி​வாகப் பேசினார். கேள்வி: அமெரிக்கத் தீர்மானத்தை இரண்டு விதமாக விமர்சிக்​கிறார்களே? பதில்: அமெரிக்கத் தீர்மானம் தமிழர்களுக்குச் செய்யும் மோசடி என்று முதலில் பேசியது எங்கள் இயக்கம்தான். இதுவரை உலகம் பார்க்​காத கொடூரத்தைச் செய்தது இலங்கை அரசு. இதுபற்றி, சர்வதேச விசா…

  11. இந்தியா-இலங்கை உறவுகள் தொடர்பாக மும்பையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில், இந்தியாவுக்கான இலங்கை தூதர் காரியவசம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவும், இலங்கையும் நட்பு நாடுகள் ஆகும். தற்போது ஏற்பட்டுள்ள சில அரசியல் பிரச்சினைகள் தற்காலிகமானதுதான். இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இலங்கையின் அமைவிட உத்தியை பயன்படுத்தி இந்தியா ஏராளமான ஆதாயங்களை அடைய முடியும். இலங்கையை சிறந்த வர்த்தக மையமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். இலங்கையில் செயல்படும் 46 சர்வதேச நிறுவனங்களில் 43 நிறுவனங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை. இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உள்ளது. ஆனால் இதை செயல்படுத்துவதில் போதிய முன்னேற்றம் காணப்படவில்லை. …

  12. இலங்கைத் தமிழர் விவகாரம் முதல், தமிழ்மீனவர் தாக்கப்படுவது வரை கண்ணைத் திறந்து பார்க்காமல், காது கொடுத்தும் கேட்காமல் காலம் காலமாக சுயலாபத்தைக் கணக்கில் கொண்டு தமிழனை பிரித்து வைத்து வருகிறது நமது இறையாண்மை மிக்க இந்திய அரசு என்பதை யாவரும் அறிவோம். இலங்கையிலும் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவின் வேறு மாநிலங்களிலும் தமிழன் ஒடுக்கப்படுகிறான் என்பதற்கு அத்தாச்சியாக எங்களது இன்றைய அனுபவத்தை இங்கே பகிர்கிறேன். ஒட்டு மொத்த தமிழ்நாடும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை வெளி மாநிலங்களுக்கும் எடுத்துச் சென்று இந்தியா முழுதும் பரப்பும் விதமாக, சில எதிர்ப்புகளுக்கிடையே கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று (17/3/13) ஹைதராபாத்தில் ஒரு நாள் உண்…

  13. சென்னையில் பௌத்த பிக்குகள் மீது தாக்குதல், மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள், நடிகர்களின் எதிர்ப்பு நடவடிக்கைகள் போன்றவை அவசியமற்றது என தமிழக பார்ப்பனிய நாளிதழான ஹிந்து செய்தி தாள் ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் இந்தியன் ப்ரிமியர் லீக் போட்டிகளில் இலங்கை வீரர்களை இணைத்து கொள்வது குறித்தும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக ஆளும் கட்சி உட்பட பல கட்சிகளும் இலங்கைக்கு எதிர்ப்பு நடவடிக்கைகளை ஈடுபட்டு வருகின்றனர். எனினும் இந்தியா மற்றும் இலங்கைக்கிடையேயான வர்த்தக உறவு, குறிப்பாக கடந்த 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைச்சாத்தான சுதந்திர ஒப்பந்தம் குறித்து இவர்கள் சிந்திக்கவில்லை என த ஹிந்து செய்திதாள் முதலைக்கண்ணீர் விட்டுள்ளது. இலங்கையினால் வெளியிடப்பட்டுள்…

    • 18 replies
    • 756 views
  14. பாடல் வரிகள்-வன்னிமைந்தன் பாடியவர் -தேனிசை செல்லப்பா இசை -இளங்கோ செல்லப்பா

  15. இவ்வாண்டுக்கான தேசத்துக்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சி இன்று சனிக்கிழமை அம்பாறை ஹாடி உயர் தொழில் நுட்பவியல் கல்லூரியில் மாலை 05.30 மணியளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. (படங்கள்: ஜனாதிபதி ஊடகப்பிரிவு) http://tamil.dailymirror.lk/--main/61472---2013.html

  16. அரசில் ஒட்டியிருக்கும் முஸ்லிம் அரசியல் வாதிகள். மக்களே விழித்தெழுவது எப்போது??” எனும் தலைப்பில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல பிரதேசங்களிலும் நேற்று புதன்கிழமை தேசிய முஸ்லிம் இளைஞர் முன்னணி என பெயர் தாங்கிய துண்டுப்பிரசுரமொன்று வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் தொன்று தொட்டு மிக கண்ணியமாக வாழும் நாம் அண்மைக்காலமாக எமது மார்க்கம் மற்றும் கலாசார ரீதியான பல அடக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறோம். எங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நச்சுக்கருத்துக்களுக்கு இலங்கை அரசாங்கம் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் ஆசீர்வாதம் வழங்கி வருகின்றது. கடந்த ஜெனீவா பிரேரனையின் போது எமது முஸ்லிம் பிரதிநிதிகள் முஸ்லிம் நாடுகளிடம் க…

  17. அடுத்த வருடத்திற்கான தேசத்துக்கு மகுடம் கண்காட்சி புத்தளம், சிலாபம் பகுதிகளின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு அப்பிரதேசத்தில் இடம்பெறுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அறிவித்துள்ளார். அம்பாறையில் தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே இதனை அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அங்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றுகையில்… நாட்டு மக்கள் அனைவரும் பேதங்களை களைந்து தேசத்தின் அபிவிருத்திக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். 30 வருட யுத்தினால் நீங்கள் பட்ட கஷ்டம், வேதனையெல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் இன்று அந்த நிலைமை இல்லை. எல்லோரும் அச்சமின்றி வாழ முடியும். கிழக்கில் அபிவிருத்தி வேலைகள் மிக வேகமாக இடம்பெற்று வருகின்றன.…

  18. சிறிலங்காவின் ஒரு பகுதியாக இருந்த ஈழ நாட்டை, இப்போது தாம் ஒரு கனவாக சுருக்கி விட்டதாக கூறியுள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச. போயகலவில் உள்ள விஜயபா இலகு காலாற்படைப்பிரிவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். "2009இற்கு முன்னர் இந்த நாட்டின் ஒரு பகுதி, ஈழப் பிராந்தியம் என்று அடையாளப்படுத்தப்பட்டது. போர்நிறுத்த உடன்பாடு கூட அதற்கு ஒப்புதல் அளித்திருந்தது. அனைத்துலக சமூகத்தினால் கொண்டு வரப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டை நாம் 2008இல் முடிவுக்குக் கொண்டு வராது போயிருந்தால், இன்று இந்த நாட்டின் நிலைமை என்னவாகியிருக்கும்? அவர்கள் விரும்பியபடி, அனைத்துலக சமூகத்தின் உத்தரவாதத்துடன், போர்நிறுத்த உடன்பாட்டை பயன்படுத்தி இந்த நாடு இரண…

  19. இலங்கையின் அரச பயங்கரவாதத்தால் கிட்டத்தட்ட இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட மக்களை இழந்து முள்ளிவாய்க்கால் பேரவலத்தை எதிர்கொண்டு இன்றும் தொடர்ச்சியான அடக்குமுறைக்குள் வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள் தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.ஆனாலும் உரிமைக்கான எமது குரல் இன்னமும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றது. திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், நில அபகரிப்புக்கள், பிரகடனப்படுத்தப்படாத இராணுவ ஆட்சி, சிவில் மற்றும் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள், ஆட்கடத்தல்,தொழில் வாய்ப்பில் பாரபட்சம்,கலாசார, புனித மையங்கள் சிங்கள மயப்படல்,தமிழரின் வரலாற்று எச்சங்கள், தொடர்புகள், சான்றாதாரங்கள், சிங்கள மயப்படுகின்றன. வரலாற்று மையங்களை அரசு பாதுகாக்கின்றது என்ற பெயரில் பல ஆயிரம் ஏக்கர்கள் தமிழர் நில…

  20. தவறுகளில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் தமது கருத்துக்களுடன் உடன்படாதவர்களைப் பழிவாங்கவும் துரோகிகள், அரச கைக்கூலிகள் போன்ற முத்திரைகளைக் குத்துவதற்கு பெரும்பாலானவர்கள் தயங்குவதில்லை என்பதற்கு உதாரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகின்ற உதயன் பத்திரிகை திகழ்ந்திருக்கின்றது என்ற கசப்பான உண்மை நடைபெற்றிருக்கின்றது. ஊடகங்களில் பேசப்படாத ஆனால் பேசப்படவேண்டிய ஒரு கவலை தரும் விடயம் 20-03-2013 அன்று முல்லைத்தீவில் நடைபெற்றிருக்கின்றது. உதயன் பத்திரிகைப் பிரதிகள் முல்லைத்தீவில் தீவைத்து எரிக்கப்பட்டமையே குறித்த சம்பவமாகும். உதயன் பத்திரிகை எரிக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகியவுடன் உடனடியாக இராணுவப் புலனாய்வாளர்கள் அல்லது இராணுவத்தினர் தான் எரித்திருப்பார்கள் என்ற கேள்வி வாசகர்கள்…

    • 15 replies
    • 1.6k views
  21. என் தொப்புள் கொடி உறவுகளை கொன்று குவித்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் சிறீலங்கா அரசுக்கு ஆதரவாக இருக்கும் இந்திய அரசினை நான் வெறுக்கிறேன். இந்திய அரசினை வேரறுக்க வேண்டும்... மண்ணின் மைந்தர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என்று நடிகர் மன்சூரலிகான் தெரிவித்துள்ளார். சென்னை வள்ளுவர்கோட்டத்தில் இன்று நடைபெற்ற தமிழகவாழ் ஈழத்தமிழர் பட்டினிப்போரில் கலந்துகொண்ட நடிகர் மன்சூரலிகான் தனது உரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.. அவரது உரையினை காணொளியாக காணுங்கள்..

  22. இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாட தடை! முஸ்லீம் லீக் வலியுறுத்து இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சென்னையில் விளையாட தடை விதிக்க வேண்டும் என்று முஸ்லீம் லீக் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அந்த கட்சியின் தலைவர் ஜவஹர் அலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் இப்போட்டிகளில் பங்கு பெற்றுள்ள இலங்கையை சார்ந்த வீரர்களை அனு மதிக்க கூடாது. குறிப்பாக சென்னையில் நடைபெறும் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கு பெற்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். எனவே தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து போட்டியில் பங்குபெறும் அனைத்து அணி உரிமையாளர்களும் இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். சென்னை சூப்பர்கிங்ஸ் …

    • 1 reply
    • 378 views
  23. மட்டக்களப்பு, கல்லடிப் பாலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. (படங்கள்:- கே.எஸ்.சசிக்குமார், தேவ அச்சுதன், ஜவ்பர்கான்) http://tamil.dailymirror.lk/--main/61368-2013-03-22-11-44-51.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.