ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
08 MAY, 2024 | 02:34 PM வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையை ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும், முழுமையான கடன் மறுசீரமைப்புப் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுப்பதன் மூலம் இலங்கையின் கடன் சுமையை 17 பில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைக்க முடியும் என்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கடன் தவணையைப் பெற்ற பின்னர் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளைத் தொடர முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று புதன்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இதனைத் …
-
-
- 7 replies
- 623 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான வீதிகளை பயன்படுத்த அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.8 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகளை திறக்குமாறும், இணைந்த வீதிகளை பயன்படுத்த அனுமதிக்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பாதுகாப்பு பிரிவினரிடம் நேற்று (07) தெரிவித்தார். ஒட்டகப்புலம் பகுதிக்கு நேற்று விஜயம் செய்த ஆளுநர் விடுவிக்கப்பட்ட காணிகளை பார்வையிட்டத்துடன், காணி உரிமையாளர்களுடனும் கலந்துரையாடினார். யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக மாவட்டச் செயலாளர் (க…
-
- 0 replies
- 330 views
-
-
08 MAY, 2024 | 04:04 PM (எம்.நியூட்டன்) மகாவலி அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த கொக்குதொடுவாய், கொக்கிளாய் கருநாட்டுக்கேணி பிரதேச மக்களினால் இன்று (08) வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் மகாவலி எனும் பெயரில் தமிழர்களின் பூர்வீக காணிகளை அபகரிக்காது மகாவலி திட்டத்தை எமது மண்ணில் நிறுத்து, எமது வாழ்வாதாரத்தை பறிக்காதே, மகாவலி அபிவிருத்தி முல்லைதீவில் பௌத்த மயமாக்கலுக்கா, எமக்கு நீதி வேண்டும், மகாவலி திட்டத்தை எமது மண்ணில் நிறுத்து என்ற பதாகைகள் தாங்கியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது முன்…
-
- 2 replies
- 274 views
- 1 follower
-
-
08 MAY, 2024 | 11:55 AM முப்படைகளிலும் பணியாற்றி ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களை ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்குச் சுற்றுலா விசா மூலம் அழைத்துச் சென்று கூலிப்படைகளில் அமர்த்தும் மனிதக் கடத்தல் செயற்பாடு இடம்பெறுவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. அவர்களில் சிலர் யுத்தத்தில் பலத்த காயமடைந்து ஆதரவற்ற நிலையில் பரிதாபமாக உயிரிழப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மனித கடத்தல் செயற்பாடு தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் 0117192142 அல்லது 0117192250 என்ற இலங்கை கடற்படைத் தலைமையக தொலைபேசி இலக்கங்களுக்குத் தகவல் வழங்குமாறு இலங்கை கடற்படை கோரிக்கை விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/182955
-
- 4 replies
- 372 views
- 1 follower
-
-
08 MAY, 2024 | 12:05 PM இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஒத்துழைப்புடன் இலங்கை இராணுவம் ராகம ரணவிரு செவன இராணுவ புனர்வாழ்வு மையம் செயற்கை கை, கால் தயாரிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான பிணைப்பை அடையாளப்படுத்துவது மட்டுமல்லாமல், தங்கள் தேசத்தின் பாதுகாப்புக்காக தியாகம் செய்தவர்களுக்கு அல்லது இயலாமை காரணமாக சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான கூட்டு முயற்சியையும் எடுத்துக்காட்டுகிறது. செயற்கை கால்களை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற 8 இந்தியர்களின் வள பங்களிப்போடு கடந்த 3ஆம் திகதி தொடங்கிய இந்த பயிலரங்கம் எதிர்வரும் 23ஆம் திகதி நிறைவடையும். 375 இரா…
-
- 0 replies
- 260 views
- 1 follower
-
-
08 MAY, 2024 | 11:30 AM இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் நியமனத்தை எதிர்த்து ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக கனிஷ்க விஜேரத்ன நியமிக்கப்பட்டமை ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் விதிகளை மீறும் செயல் என அடிப்படை உரிமைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நியமனம் தன்னிச்சையானது என்றும், நடைமுறை உத்தரவுக்கு எதிரானது என்றும் மேன்முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த நியமனத்தை நீதிமன்றம் செல்லுபடியற்றது என அறிவிக்க …
-
- 0 replies
- 151 views
- 1 follower
-
-
டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு தகுதியற்றவர் என உயர்நீதிமன்றம் இன்று (08) தீர்ப்பளித்துள்ளது. சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பிரித்தானிய குடியுரிமையை கொண்டவர் எனவும், இதனால் அவர் இலங்கை பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பதற்கு தகுதியற்றவர் எனவும் உத்தரவிடக்கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. https://thinakkural.lk/article/301111
-
-
- 33 replies
- 3.3k views
-
-
மின் கட்டண குறைப்பு தொடர்பான முன்மொழிவுகளை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்மாதம் முதலாம் திகதி இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன் இலங்கை மின்சார சபை அதற்கு கால அவகாசத்தை கோரியிருந்ததாக ஆணைக்குழுவின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும் 10ஆம் திகதி வரை குறித்த முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த முன்மொழிவுகள் கிடைத்ததன் பின்னர் மின் கட்டணங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி மின் கட்டணங்களை குறைப்பது தொடர்பான …
-
- 0 replies
- 247 views
- 1 follower
-
-
08 MAY, 2024 | 09:47 AM குலதெய்வமாக வழிபடப்பட்டுவந்த நாகதம்பிரான் ஆலயத்தை நாக விகாரையாக மாற்றி தமது வழிபாட்டை தடை செய்துள்ளதாக திரியாய் மக்கள் தெரிவிக்கின்றனர். குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திரியாய் வளத்தாமலையடி பகுதியில் உள்ள நாகதம்பிரான் ஆலயமானது 2021ஆம் ஆண்டுக்குப் பின்னர் பௌத்த பிக்கு ஒருவரினால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், சப்த நாக விகாரையாக மாற்றப்பட்டு திரியாய் மக்களின் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாகதம்பிரான் ஆலயத்தில் திரியாய் மக்கள் பரம்பரை பரம்பரையாக குலதெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு வந்ததாகவும் 1984ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்று, மீண்டும் 2002ஆம் ஆண்டு அப்பகுதியில் மீளக் குடியே…
-
-
- 3 replies
- 435 views
- 1 follower
-
-
நூற்றாண்டு கடந்த வேப்பமரம்:சட்டவிரோதமாக அழிப்பு! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் நூற்றாண்டு கடந்த வேப்பமரம் ஒன்று சட்டவிரோதமாக அழிக்கப்பட்ட நிலையில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கு மௌனம் காப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் உள்ள மதஸ்தாபனம் ஒன்றின் வளாகத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த காணியில் பல வருடங்களுக்கு முன்னர் சுற்று சூழலை பாதுகாக்கும் நோக்குடன் பல்வேறு மரங்கள் நாட்டப்பட்டுள்ளது. அப்பகுதிக்கு பொறுப்பாக உள்ள குருவானவர் ஒருவரால், சில மரங்கள் வளாகத்தில் இடையூறாக உள்ளதாக தெரிவித்து கிராம சேவையாளர் ஊடாக அகற்றுவதற்கான அனுமத…
-
- 2 replies
- 425 views
-
-
கடும் வெப்பநிலை : மக்கள் குடிநீருக்காக சிரமம்!! கிளிநொச்சி மாவட்டத்தில் கடும் வெப்பநிலையுடன் கூடிய வறட்சி காரணமாக குடிநீருக்காக பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். கடும் வெப்பநிலையுடன் கூடிய வறட்சி காரணமாக பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 239 குடும்பங்களைச்சேர்ந்த 732 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் நல்லூர் செட்டியார்குறிச்சி, ஆலங்கேணி,ஞானிமடம், கொல்லக்குறிச்சி, மட்டுவில் நாடு கிழக்கு, பரமன் கிராய் போன்ற கிராம அலுவலர் பிரிவுகளைச்சேர்ந்த மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதி மக்கள் குடிநீருக்காக பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.இவர்களுக்கான குடிநீரை பூநகரி…
-
- 0 replies
- 170 views
-
-
Published By: RAJEEBAN 07 MAY, 2024 | 01:21 PM ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானியாக பணிபுரிந்த பெல்ஜியம் விமானியும் விமான பணியாளரும் தங்களை உடல்ரீதியாக அவமானப்படுத்தினார்கள், இன பாரபட்சத்தை வெளிப்படுத்தினார்கள் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகளும் பணியாளர்களும் முறைப்பாடு செய்துள்ளதை தொடர்ந்து பாரிய இனவெறி மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது என டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஏப்பிரல் 30 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் டெய்லிமிரர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பலத்த நஷ்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் தனது விமான சேவையை வலுப்படுத்துவதற்காக டிசம்பரில் பெல்ஜி…
-
- 0 replies
- 243 views
-
-
07 MAY, 2024 | 12:12 PM நெடுந்தீவு பிரதேசத்தில் தடையற்ற 24 மணி நேர மின்சார வழங்கல் உறுதி செய்யப்பட வேண்டும் என துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் பாரிய மின்பிறப்பாக்கிகள் மூலமாக நெடுந்தீவு மக்களுக்கு தடையற்ற பின்சாரம் இலங்கை பின்சார சபையின் மூலம் நீண்டகாலமாக வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக நெடுந்தீவு பகுதியில் அடிக்கடி மின்சாரம் தடைப்பட்டதால் அப்பகுதி மக்கள் குறிப்பாக தற்போதைய அதி வெப்பமான சூழ்நிலையில் பல்வேறு அசௌகரியங்களை சந்திக்க நேரிட்டிருந்தது. இதற்கு இயந்திரங்களில் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறுகளே காரணம்…
-
- 1 reply
- 280 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 07 MAY, 2024 | 02:53 PM யாழ்ப்பாணம் - நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான இணுவில் குப்பைக் கிடங்கில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இணுவில் காரைக்கால் குப்பைக் கிடங்கில் நேற்று திங்கட்கிழமை (06) தீ பரவியது. யாழ்.மாநகர சபை மற்றும் ஏனைய பகுதி பிரதேச சபையினரின் தீயணைப்பு படையினரின் நீண்ட நேர பிரயத்தனத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. குறித்த இடத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், இதற்கு முன்பும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் குப்பை மேட்டுக்கு விஷமிகள் யாராவது தீ வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளி…
-
- 0 replies
- 158 views
-
-
Published By: DIGITAL DESK 3 07 MAY, 2024 | 04:25 PM கல்முனை இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ மேஜர் ஒருவர் 3 இலட்சம் ரூபாய் பணம் தருமாறு அச்சுறுத்தி மிரட்டிவருவதாக மட்டக்களப்பைச் சேர்ந்த நபரொருவர் நேற்று திங்கட்கிழமை (6) முறைப்பாடு செய்துள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது, மட்டக்களப்பைச் சேர்ந்த ரங்கன் என அழைக்கப்படும் சாமித்தம்பி வேலாயுதம் என்பவர் வெளிநாட்டுக்கு அனுப்பும் இடை தரகராக கல்முனையைச் சோந்த ஒருவரிடம் 5 இலச்சத்து 70 ஆயிரம் ரூபாவையும் அதனுடன் 5 பேரிடம் பணத்தை வாங்கி அதனை வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் ஒருவருக்கு வழங்கியுள்ளார். இந்நிலையில் குறித்த வெளிநாட்ட…
-
- 0 replies
- 348 views
-
-
07 MAY, 2024 | 05:02 PM கடந்த பெப்ரவரி மாதம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் போராளி செல்வநாயகம் ஆனந்தவர்ணன் மற்றும் கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக நீதிமன்றில் முற்படுத்தப்படாமல் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் மூதூரைச் சேரந்த எஸ்.சுதாகரன் ஆகிய இருவரையும் இன்று பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்டார்கள் . அதன்போது தனது விடுதலையை வலியுறுத்தி கடந்த இரண்டு நாட்களாக உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆனந்தவர்ணன் பாராளுமன்ற உறுப்பினர்களிடம்…
-
- 1 reply
- 368 views
-
-
Published By: DIGITAL DESK 3 07 MAY, 2024 | 05:15 PM (எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்) கருத்து தெரிவித்தமைக்காக விசாரணைக்கு அழைப்பதற்கு இலங்கையில் நடப்பது பொலிஸ் இராஜ்ஜியமல்ல. இலங்கை ஜனநாயக நாடு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) விசேட கூற்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் பேசுகையில், விசா பிரச்சினை குறித்து அண்மையில் விமான நிலையத்தில் கருத்துத் தெரிவித்த சந்தரு குமாரசிங்கவை பொலிஸுக்கு அழைத்து அது குறித்து வாக்குமூலம் பெறப்பட்டது. இது பொலிஸ் இராஜ்ஜியமல்ல, இது ஏகாதிபத்திய நாடல்ல, இது…
-
- 0 replies
- 269 views
-
-
Published By: DIGITAL DESK 3 07 MAY, 2024 | 12:57 PM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து குழப்பத்தில் ஈடுபட்ட கும்பலை கைது செய்வதற்கு யாழ்ப்பாண பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இளைஞனின் உயிரிழப்பை அடுத்து , அவரின் நண்பர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சுமார் 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டதுடன், மருத்துவர்கள், தாதியர்கள், நோயாளிகளுடன் முரண்பட்டனர். அது தொடர்பில் மருத்துவ சேவைக்கு…
-
- 2 replies
- 764 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 07 MAY, 2024 | 12:49 PM அதிக வெப்பத்தினால் ஏற்பட்ட வெப்ப பக்கவாதம் (Heat stoke) நோய் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரு விடுதியில் கடந்த வாரத்தில் மாத்திரம் நான்கு முதல் ஐந்து வரையான இறப்புக்கள் பதிவாகியுள்ளதென வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் திங்கட்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தற்பொழுது அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக உடலின் வெப்பநிலை அதிகரித்து வெப்ப பக்கவாதம் ஏற்படக்கூடிய வாய்ப்புஉள்ளது. வெப்ப பக்கவாதம் மூலம் எமது விடுதிகளில் அனுமதிக்கப்பட்டிருந்…
-
- 1 reply
- 272 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 07 MAY, 2024 | 01:33 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு 90 நாட்களுக்குள் மீள் இணைப்பை பெற்றுக் கொள்ளாத மின்பாவனையாளர்களின் மின்கணக்கு இரத்து செய்யப்பட்டு மின் விநியோகம் முழுமையாக துண்டிக்கப்படும். மீள் மின் இணைப்புக்காக அறவிடப்படும் கட்டணம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற அமர்வின் போது எதிர்க்கட்சியின் உறுப்பினரான கெவிந்து குமாரதுங்க முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, …
-
- 1 reply
- 413 views
- 1 follower
-
-
இவா்களை யாராலுமே தட்டிக்கேட்க முடியாது – ரவிகரன் துரைராஜா செவ்வி May 7, 2024 போா் முடிவுக்கு வந்த பின்னா் முல்லைத்தீவை சிங்கள மயப்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரலுடன் அரசாங்கம் செயற்படுகிறது. இதற்காக, தமிழா்களின் காணிகளை அபகரித்தல், சிங்களக் குடியேற்றங்கள் என்பன தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த வாரமும் கொக்குத்தொடுவாய் பகுதியில் காணி அபகரிப்பு இடம்பெற்றது. இவை குறித்து அதனை நேரில் பாா்வையிட்ட வடமாகாண முன்னாள் உறுப்பினா் துரைராஜா ரவிகரன் வழங்கிய நோ்காணல் கேள்வி – கொக்குத் தொடுவாய்ப் பகுதிக்கு கடந்த வாரம் களவிஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தீா்கள். அங்கு என்ன நடைபெறுகின்றது? பதில் – வடமாகாண சபையில் நான் உறுப்பினராக இருந்த கா…
-
-
- 1 reply
- 720 views
-
-
வட மாகாண அபிவிருத்திக்கு ஒத்துழைப்புகளை வழங்குவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் தெரிவிப்பு! இலங்கைக்கான நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை இன்று திங்கட்கிழமை(06) சந்தித்து கலந்துரையாடினார். வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் மீள்குடியேற்ற நடவடிக்கையின் முன்னேற்றங்கள், காணி விடுவிப்பு, கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகள், சுற்றுலாத்துறை அபிவிருத்தி, கல்வி, இயற்கை சக்தி வளங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எனினும், சுற்றுலா வழிகாட்டிகள் போதிய எண்ணிக…
-
- 0 replies
- 151 views
-
-
ஆயுர்வேதத் திணைக்களத்தால் 359 சித்த மருத்துவ மாணவர்கள் பாதிப்பு adminMay 7, 2024 ஆயுர்வேதத் திணைக்களத்தின் குளறுபடியான சில நடவடிக்கைகள் மூலம் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம் என சித்த மருத்துவ மாணவர்களின் பிரநிதியான வர்ணகுலசிங்கம் பிரவீன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். இலங்கை பூராகவும் 359 சித்த மருத்துவ மாணவர்கள் உள்ளக பயிற்சிக்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஆயுர்வேதத் திணைக்களத்தின் குளறுபடியான சில நடவடிக்கைகள் மூலமே நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களுடைய பிரச்சனை தொடர்பில் பேசியிருந்த போது, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு 60 பேருக்கு மாத்திரம் அன…
-
- 0 replies
- 163 views
-
-
வித்தியா வழக்கு – நீதியரசர் எஸ். துரைராஜா விலகல் adminMay 7, 2024 2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற பாடசாலை மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்காக பிரதம நீதியரசரால் நியமித்த ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமின் தலைமை நீதியரசர் எஸ். துரைராஜா நேற்று (06) குறித்த குழாமில் இருந்து விலகியுள்ளாா். இந்த மனுக்கள் நேற்று எஸ்.துரைராஜா, யசந்த கோதாகொட, ஏ. எச்.எம்.டி. நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய ஐந்து பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு…
-
- 0 replies
- 200 views
-
-
07 MAY, 2024 | 10:16 AM சாத்தியவளக் கற்கையின் அறிக்கையின் பிரகாரம் உத்தேசக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகியது. இலங்கையின் பொதுவான கல்வி முறையை டிஜிட்டல் நிலையுருமாற்றம் செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்ட முன்மொழிவுக்கமைய உதவிகளை வழங்குவதற்கு சீனா அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது. குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குரிய சாத்தியவளக் கற்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. உத்தேசக் கருத்திட்டத்தின் மூலம் மிடுக…
-
- 0 replies
- 186 views
- 1 follower
-