Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மோதல் தவிர்ப்பு வலயம்’ இராஜதந்திரிகளை கண்கலங்கவைத்தது! இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பிலான சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தின் நெஞ்சைப் பதறவைக்கும் “மோதல் தவிர்ப்பு வலயம்’ (நோ பயர் ஷோன்) என்ற ஆவணப்படம் ஐ.நா.மனித உரிமைகள் சபையில் நேற்று ஒளிபரப்பப்பட்டது.குறித்த ஆவணப்படத்தைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த பன்னாட்டு இராஜதந்திரிகள் நெஞ்சை நெகிழவைக்கும் காட்சிகளால் கண்கலங்கினர். இதனால் ஐ.நா. சபை கண்ணீர்க் குளமானது.அதேவேளை, மோதல் தவிர்ப்பு வலயத்துக்குள் மக்கள் படும் அவலங்களை ஆவணப்படத்தின் ஊடாகப் பார்வையிட்ட இராஜதந்திரிகள் சிலர், சோகம் தாங்க முடியாததால் அறையிலிருந்து வெளியே சென்றனர்.இலங்கை அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி “மோதல் தவிர்ப்பு …

  2. (காணொளி இணைப்பு) தமிழீழ மக்களுக்கு இதுவரை மறுக்கப்பட்ட நீதிக்கான பிரச்சார நெடும் பயணம் ஒன்று இன்று சனிக்கிழமை காலை லண்டன் வைற் சிற்றியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிபிசி ஊடகத்தின் தலைமைச்செயலகத்தின் முன்னால், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பிராந்தியப் பொறுப்பாளர் நவம் அவர்களும் முன்னாள் மாணவர் பேரவையை சேர்ந்த பொ.சத்தியசீலன் அவர்களும் இணைந்து ஆரம்பித்து வைத்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி தலைமையில் ஆரம்பமாகிய இந்தப் பிரச்சார நெடும் பயணம் லண்டன் மாநகரை ஊடறுத்து தற்போது சென்றுகொண்டிருக்கின்றது. இவ்நடைபயணத்தில் ஜெயானந்தமூர்த்தி அவர்களுடன் தவராஜசிங்கம் உதயண்ணன், நாகேசு குணநிதி, பரமசிவன் கார்த்…

  3. மன்னார் கடற்படுக்கையில், கெய்ன் லங்கா நிறுவனம் தோண்டிய நான்காவது கிணற்றிலும், எண்ணெய் வளமோ, எரிவாயு வளமோ இல்லாதது, சிறிலங்காவுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. கெய்ன் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான கெய்ன் லங்கா நிறுவனம், முதற்கட்டமாக, மன்னார் கடற்படுகையில், மூன்று இடங்களில் எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டியது. இதையடுத்து இரண்டாவது கட்டமாக கடந்த மாதம், நான்காவது கிணற்றை துளையிடும் பணிகளை மேற்கொண்டிருந்தது. எண்ணெய் வளம் ஏதுமில்லாததால், அதைக் கைவிட முடிவு செய்துள்ளதாக கெய்ன் லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது. முதற்கட்ட துணையிடும் பணிகளின் போது, இரண்டு கிணறுகளில் எரிவாயு வளம் இருப்பது கண்டறியப்பட்டது. எனினும் மூன்றாவதாகத் துளையிடப்பட்ட கிணற்றில், எந்த எரிபொருள் வளமு…

  4. இலங்கைக்கு உதவிகளை வழங்கத் தயார் – அமெரிக்கா 02 மார்ச் 2013 இலங்கைக்கு உதவிகளை வழங்கத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. மனித உரிமை மேம்பாடு மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் போன்ற விவகாரங்களில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் கலந்து கொண்டுள்ள அமெரிக்கப் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.உண்iயைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் போன்றன குறித்து இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்கப் பிரதிநிதிகள் வ…

  5. சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் எடுக்கப்பட்ட அந்த ஒளிப்படங்களில் முதலாவது ஒளிப்படத்தில் காற்சட்டை மட்டும் அணிந்திருக்கும் அந்தச் சிறுவன் வாங்கொன்றில் அமர்ந்திருப்பதைக் காணலாம். அடுத்த ஒளிப்படத்தில் அந்தச் சிறுவன் நொறுக்குத் தீனி சாப்பிடுகிறான். மூன்றாவது ஒளிப்படத்தில், நெஞ்சில் சூட்டுக் காயங்களுடன் அந்தச் சிறுவனின் உயிரற்ற உடலம் கீழே விழுந்துகிடப்பதைப் பார்க்கலாம். கடந்த வாரம் பிரித்தானிய தொலைக்காட்சி சேவையான சனல் 04 ஆல் வெளியிடப்பட்ட இந்த ஒளிப்படங்களில் காணப்படும் சிறுவன், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகனான 12 வயதேயான பாலச்சந்திரன் பிரபாகரன் ஆவார். சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மேற்கொள்ளப…

  6. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்திய ஜனதா கட்சியின் தலைவர் கலாநிதி சுப்ரமணியம் சுவாமி இன்று வியாழக்கிழமை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம ஆகியோரும் கலந்துகொண்டனர். http://tamil.dailymirror.lk/--main/59751-2013-02-28-10-36-40.html#sthash.U3qqhiDx.dpuf

  7. இலங்கையின் வடக்கில் இராணுவ பிரசன்னம்,மீள்குடியேற்றம், காணிப் பிரச்சினை, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புக்கள் குறித்து அமைச்சர் மஹிந்த சமரசிங்க,ஐக்கிய நாடுகள் சபையில் கூறிய விடயங்கள் உண்மைக்கு புறம்பானவை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை அரசாங்கத்திடம் இருந்து உரிய தீர்வை தமிழர்கள் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் மஹிந்த சமரசிங்கவின் கருத்துக்கள் அதனை எதிர்ப்பார்க்கமுடியாத தோற்றத்தை கொடுத்துள்ளதாக கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் சர்வதேசத்தை ஏமாற்றி வருகிறது. இதனை தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தினால் முன்கொண்டு செல்லமுடியாது என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்க…

  8. இலங்கையில் தமிழ் ராஜ்சியம் ஒன்று அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதில் தவறு இல்லைஎன்று, இடதுசாரிகள் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். எமது செய்திப்பிரிவுடன் இடம்பெற்ற செய்தி உரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வரலாற்று காலத்தில் இலங்கையில் சிங்கள இராச்சியம் ஒன்றை அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பலனாகவே தற்போது சிங்கள அரசாங்கம் காணப்படுகிறது. அவ்வாறான நிலையில் தமிழர்கள் தமிழ் ராச்சியம் ஒன்றை அமைக்க முயற்சிப்பது தவறில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழர்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாக வாழ்வதன் ஊடாகவே, இலங்கையில் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.hirunews.lk/tamil/54418

    • 0 replies
    • 496 views
  9. தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைய வேண்டும் என்றும், அதன்; மூலம் பேச்சுவார்த்தையை மீண்டும் முன்னெடுக்க தயாராக இருப்பதாகவும், அரசாங்கம் நேற்று அறிவித்திருந்தது. அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனை அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது இதனைத் தெரிவித்திருந்தார். அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட விடயங்களில் அரசியல் கட்சிகள் வௌ;வேறு நிலைப்பாட்டில் உள்ளன. இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இதில் இணைந்து தமது நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும், தமிழ் தேசிய கூட்டமைப்பு, நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் இணையப் போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. கூட்டமைப்பிற்கு அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்…

    • 12 replies
    • 910 views
  10. நவனீதம்பிள்ளையின் இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நியாயமற்றவை – ஜெர்மனி 02 மார்ச் 2013 ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நியாயமற்றவை என ஜெர்மனி சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான ஜெனீவா நிரந்தரப் பிரதிநிதி எச்.சுமார்க்கர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 22ம் அமர்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நியாயமற்ற முறையில் இலங்கையை இலக்கு வைத்து நவனீதம்பிள்ளை குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/89211/language/ta-IN/arti…

    • 7 replies
    • 1.2k views
  11. மெரீனா கடற்கரையில் பாலச் சந்திரன் படுகொலை கண்டித்து கண்டனக் கூட்டம். இலங்கை ராணுவத்தால் பாலச்சந்திரன் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டது உலகெங்கும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் இன்று சென்னை மெரீனா கடற்கரையில் பாலச் சந்திரன் படுகொலை கண்டித்து மாபெரும் நினைவேந்தல் மற்றும் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியை போர்க்குற்றம்-இனப்படுகொலைக்கு எதிரான மாணவர்கள் ஒருங்கிணைப்பு செய்தனர். மெழுகுத் திரி ஏந்தி நடந்த இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் திரு பழ நெடுமாறன் அய்யா , திரு நல்லகண்ணு அய்யா , திரு பண்ருட்டி வேல்முருகன் , இயக்குனர் புகழேந்தி தங்கராஜ்,திரு.ஜோசப் கென்னடி(ஒருங்கிணைப்பாளர்-போர்க்குற்றம்-இனப்படுகொலைக்கு எத…

    • 1 reply
    • 459 views
  12. இலங்கை அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இரங்கையின் போர்க்குற்றம் தொடர்பிலான சனல் - 4 இன் 'போர் தவிர்ப்பு வலயம்' (No fire zone) என்ற ஆவணப் படம் இன்று வெள்ளிக்கிழமை ஒளிபரப்பப்படவுள்ளது. ஜ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் இந்த ஆவணப் படம் காண்பிக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் யாவும் தயார் நிலையிலுள்ளன என ஜெனிவாத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவதானிப்பு நாடுகளின் இராஜ தந்திரிகளும், அரசசார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இதன் போது கலந்து கொள்வர். அதேவேளை, 'போர் தவிர்ப்பு வலயம்' தயாரிப்பாளரான கெலும் மக்ரே ஆவணப் படத்தின் நம்பகத் தன்மை தொடர்பில் சர்வதேச பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கவுள்ளார்…

  13. போர்க்குற்றங்களுக்கு அனைத்துலக விசாரணையே தேவை – ஜெனிவாவில் சுமந்திரன் [ சனிக்கிழமை, 02 மார்ச் 2013, 01:01 GMT ] [ தா.அருணாசலம் ] சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவாவில் வலியுறுத்தியுள்ளது. நேற்று ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை வளாகத்தில், போர்தவிர்ப்பு வலயம் ஆவணப்படம் வெளியிடப்பட்ட நிகழ்வில் பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். போர் தவிர்ப்பு வலயம் திரையிடப்படுவதற்கு முன்னர், அறிமுகவுரை நிகழ்த்திய அவர், “நீதித்…

    • 1 reply
    • 498 views
  14. ஜெனிவாவில் சானல் 4 வீடியோ திரையிடப்பட்டது கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 1 மார்ச், 2013 - 16:07 ஜிஎம்டி சானல் 4 தொலைக்காட்சியின் நோ ஃபயர் ஷோன் என்ற இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர் குற்றங்கள் குறித்த படம் இன்று ஜெனிவாவில் ஐநா வளாகத்தில், மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளுக்காக வந்திருந்தவர்களுக்காக திரையிடப்பட்டுள்ளது. ஐநாவின் 23 வது அறையில் அது திரையிடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் இந்தப் படத்தை அங்கு திரையிட அனுமதிக்கக் கூடாது என்று கூறியிருந்தபோதிலும், ஐநாவில் கருத்து சுதந்திரத்தை தடுக்க முடியாது என்ற அடிப்படையில் அது அங்கு திரையிடப்பட்டதாக அங்கு அந்த படத்தை பார்த்தவர்களில் ஒருவரான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐநா நடவடிக்கைகளுக்கான இணைப்பாளரான…

  15. அந்தப் படுகொலையின் மறுபாதி - சண்டே கார்டியன் தலைமை ஆசிரியர் எம்.ஜே. அக்பர் 28 பெப்ரவரி 2013 12-வயதுச் சிறுவனான பாலச்சந்திரனது படுகொலையை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் மிகக்கொடூரமானவை. “இந்தப்புகைப்படங்கள் பொய்யென்றால், பிரபாகரனின் மகன் உயிருடன் இருக்கவேண்டும். அவன் உயிருடன் இருந்தால் அவன் இலங்கை அரசினது பிடியில்தான் இருக்கவேண்டும். அதிகாரிகள் செய்ய வேண்டியதெல்லாம் அந்தச் சிறுவனை வெளிக்கொணர வேண்டியது மட்டுமே.” (லண்டன் சண்டே கார்டியன் பத்திரிகைக்காக அதன் தலைமை ஆசிரியர் எம்.ஜே. அக்பர் - 24-02-2013) இறப்பு என்பது ஒரு அரைவாசி உண்மையாக இருக்க முடியுமா? இந்தக்கேள்வி வெளிப்படையாகவே ஒரு கொலைகாரனது இறுதி நம்பிக்கையாகவும், சிறந்த தற்பாதுகாப்பாகவும் அமை…

  16. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என்று தான் நம்புவதாக இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கை அரசுக்கு எதிரான அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் ஐ.நா. மனித உரிமை மீறல் கவுன்சிலில் திங்கள் அன்று விவாதத்திற்கு வர உள்ளது. இந்நிலையில், விவாதத்தை தடுக்கும் ராஜபக்சேவின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. தோல்வி விரக்தியில் இருக்கும் ராஜபக்சே, இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என நம்புவதாக தெரிவித்திருக்கிறார். காஷ்மீர் பிரச்சனையை ஈழத் தமிழர் விவகாரத்துடன் இணைத்து பேசியுள்ள அவர், இலங்கை மீது இந்தியா அத்துமீறாது என்ற துணிவில் மறைமுக மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு இடையே, தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட காட்சிகளை கொண்டு உருவாக்கப்ப…

    • 0 replies
    • 583 views
  17. பாலச்சந்திரன் ஒரு யுத்தத்தின் சாட்சி - பிரபாரகனின் மகன் என்பதற்காக அல்ல - அவன் ஒரு பாலகன்! அதனால்தான் உலகின் முன் வலிமையான சாட்சியாகவும் இருக்கிறான் - குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன் பாலச்சந்திரன் ஒரு யுத்தத்தின் சாட்சி - பிரபாரகனின் மகன் என்பதற்காக அல்ல - அவன் ஒரு பாலகன்! இப்பொழுது உலகமெங்கும் ஒரு சிறுவனுடைய புகைப்படம்தான் மனித மனங்களை உலுப்பிக்கொண்டிருக்கிறது. இசைப்பிரியாவின் படத்தைப்போலவோ அல்லது வேறு போர்க்குற்றப் படங்களைப் போலவே இரத்தமும் சதையும் அற்ற ஒரு புகைப்படம். கொடும் யுத்த களமொன்றில் பாதை மாறி சிக்கியவனைப்போல ஏக்கம் நிறைந்த பார்வை நிரம்பிய சிறுவனின் முகம். அந்தப் பார்வைதான் உலகத்தின் முழுப் பார்வையையும் குவியச் செய்திருக்கிறது. தமிழீழ விடுதலைப் …

  18. ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான யோசனை மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்படும் நிலைமை காணப்படுகின்றது : 02 மார்ச் 2013 ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான யோசனை எதிர்வரும் 23 ஆம் திகதி மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்படும் நிலைமை இருப்பதாக ராஜதந்திர தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அந்த யோசனை அமுல்படுத்தவோ, அதற்கான அழுத்தங்களை இலங்கைக்கு கொடுக்கவோ, சந்தர்ப்பம் இருக்காது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இலங்கை கடுமையாக மனித உரிமை மீறல்களை மேற்கொண்ட நாடு எனக் காட்டுவதே அந்த யோசனையை கொண்டு வரும் நாடுகளில் மற்றும் அதனை ஆதரிக்கும் நாடுகளின் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு செய்து, இலங்கையை அவமதிப்ப…

  19. எதிர்வரும் 21ம் திகதி இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு அதிகளவு ஆதரவு கிடைக்கும் - லக்பிம பத்திரிகையில் செய்தி [saturday, 2013-03-02 09:46:48] ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்திற்கு கூடுதல் ஆதரவு கிடைக்கும் சாத்தியம் காணப்படுவதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முயற்சி எடுத்து வருகின்றன. இந்தத் தீர்மானத்திற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மை உறுப்பு நாடுகள் ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த தடவையும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. …

  20. நிரந்தரப் படைமுகாம் கொக்குத்தொடுவாயில்; 15 ஏக்கரில் பணிகள் ஆரம்பம் கொக்குத்தொடுவாய் வடக்கு 14 ஆம் கட்டைப் பகுதியில் 15 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து நிரந்தர முகாம் அமைக்கும் பணிகளை இராணுவத்தினர் நேற்யைதினம் ஆரம்பித்துள்ளனர் என்று அந்தப் பகுதி மக்கள் உதயன் பத்திரிகையிடம் தெரிவித்தனர். வன இலாகா திணைக்களத்துக்குச் சொந்தமான காணியிலேயே நிரந்தரப் படை முகாம் அமைக்கும் பணி அரம்பிக்கப்பட்டுள்ளது. போர் முடிவடைந்து 3 ஆண்டுகள் கடந்த பின்னரும் வடக்கில் புதிது புதிதாக நிரந்தரப் படைமுகாம்களை அமைக்கும் பணியில் இராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கொக்குத் தொடுவாய் வடக்கு 14 ஆம் கட்டைப் பகுதியில், திருகோணமலை முல்லைத்தீவு பிரதான வீதியில் புதிய நிரந்தரப் படைமுகாம் நிர்மானிக்கப்…

  21. இலங்கைக்கான உதவிகளை, இந்தியா அதிகரித்துள்ளது 02 மார்ச் 2013 இலங்கைக்கான உதவிகளை இந்திய மத்திய அரசாங்கம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வரும் தருணத்தில், மத்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கி வரும் உதவிகளை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் இலங்கைக்கு 290 கோடி ரூபா உதவிகள் வழங்கப்பட்டிருந்தது. எனினும், 2013 – 2014ம் நிதியாண்டில் இலங்கைக்கான உதவிகள் 500 கோடி ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. உள்ளக இடம்பெயர் மக்களுக்கான புனர்வாழ்வு போன்ற நடவடிக்கைகளுக்காக இந்த உதவு தொகை பயன்படுத்தப்பட உள்ளது. சார்க் பிராந்திய வலய நாடுகளுக்கான உதவிகளை இந்திய மத்திய அரசாங்கம் உயர்த்தியுள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditoria…

  22. பிரபாகரன் கதையை படமாக்க தகவல் சேகரிப்பில் இயக்குனர் ரமேஷ் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவராக இருந்த வேலுப்பிள்ளை பிரபாகரனின் கதையை திரைப்படமாக தயாரித்து வெளியிடவுள்ளதாக தமிழக இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் தெரிவித்துள்ளார். இவர் இதற்கு முன்னர் குப்பி, காவலர் குடியிருப்பு தற்போது ஓடிக்கொண்டிருக்கும் வனயுத்தம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். சந்தனக் கடத்தல் வீரப்பன் கதையை மையமாக கொண்டு இறுதியாக வன யுத்தத்தம் திரைப்படத்தை ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கி வெளியிட்டுள்ளார். பிரபாகரனின் கதையை படமாக்குவதற்கு பல்வேறு ஆராய்ச்சிகளும், தகவல்களையும் ரமேஷ் சேகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பிரபாகரன் போன்ற ஒரு போராளி பற்றி, அவரின் வீரம், துணிச்சல், போர் வியூகம், அவ‌ர் ப…

    • 0 replies
    • 436 views
  23. சிறையில் சித்திரவதை அனுபவித்த தமிழ் அரசியல் கைதி வைத்தியசாலையில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் தமிழ் அரசியல் கைதி ஒருவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சித்ரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும், இவரை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸ் உட்பட மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. எஸ். அருள்சாமி என்னும் இந்த கைதி, தான் விசாரணை எதுவும் இன்றி மூன்று வருடங்களுக்கும் அதிகமாக கொழும்பு மகசின் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் தனது மனுவில் கூறி…

    • 0 replies
    • 243 views
  24. முஸ்லிம்களுக்கு எதிரான சதியின் பின்னணியில் சில அரசியல் சக்திகள் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சதி நடவடிக்கைகளின் பின்னணியில் சில அரசியல் சக்திகளின் அழுத்தங்கள் இருப்பதை நன்றாக அறிவேன். எந்தவொரு தருணத்திலும் முஸ்லிம் சமூகத்தினை கைவிடமாட்டேனென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை அலரி மாளிகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் உறுப்பினர்களுடன் கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ; நாட்டில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் சதிகள் குறித்து நான் நன்கு அறிந்துள்ளேன். சில மத அமைப்புகள் சிங்கள முஸ்லிம் மக்களுக்கு இடையிலான நல்லுறவினை சித…

  25. மைத்திரிபாலவின் நிலை சாதாரண விடயமல்ல - ரணில் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமையானது சாதாரண விடயமல்ல என ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேனவிற்கு ஏற்பட்டுள்ள அச்ச உணர்வு குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுது தெரிவித்தார். மட்டக்களப்பு பாசிக்குடா கற்பரப்பில் இடம்பெற்ற மோதலில் சந்தேகநபர் பொலிஸ் பிணையில் விடுதலையாகியுள்ளார் எனவும் ரணில் இதன்போது சுட்டிக் காட்டினார். http://www.adaderana.lk/tamil/news.php?nid=35722 .

    • 0 replies
    • 273 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.