ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143439 topics in this forum
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்த வாரத்தில் கூடி தமது அமெரிக்க பயணம் தொடர்பில் ஆராயவுள்ளதாக தெரியவருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் அமெரிக்கப் பயணம் இந்த வருட ஆரம்பத்தில் இடம்பெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. கண் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்த கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் இன்று நாடு திரும்புகிறார். இதனையடுத்தே அமெரிக்க பயணம் தொடர்பான ஒழுங்குகள் செய்யப்படவுள்ளன. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அழைப்பின் பேரிலேயே இந்த பயணம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 2011ம் ஆண்டிலும் அமெரிக்காவின் தெற்காசிய பிராந்திய உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளெக்கின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டடமைப்பு அமெரிக்கா சென்று தமிழர் பிரச்சினை தொடர்ப…
-
- 1 reply
- 355 views
-
-
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப்பிரேரணை குறித்து தனது கவலையை மீண்டும் தெரிவித்துள்ள அமெரிக்கா, இந்நடவடிக்கை நீதித்துறையின் சுயாதீனத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளது. இதனால் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் இலங்கையின் திறனில் பாதிப்பை ஏற்படுத்துமெனவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. 'பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், பிரதம நீதியரசர் பதவி நீக்கப்பட்டமை இலங்கையில் அதிகாரங்களின் வேறாக்கமென்பது பற்றி கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. அதிகார வேறாக்கம் ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமாகும். குற்றப்பிரேரணையையிட்டு நாம் எமது விசனத…
-
- 14 replies
- 1.2k views
-
-
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை : தமிழ் பாடசாலைகளின் வெட்டுப்புள்ளிகள் By General 2013-01-16 21:06:38 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள தமிழ் மொழிமூல பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வருமாறு, ஆண்கள்பாடசாலைகள் டி.எஸ். சேனாநாயக்கா கல்லூரி கொழும்பு - 168 புனித மைக்கல் கல்லூரி மட்டக்களப்பு - 160 ஆர்.கே.எம். கோணேஸ்வரா இந்துக் வித்தியாலயம் திருகோணமலை - 156 இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் - 150 ஹாட்லிக் கல்லூரி பருத்தித்துறை - 150 பெண்கள்பாடசாலை பதியூதீன் மகளிர் ம.வி. கண்டி - 166 வின்ஷன்ட் மகளிர் உயர்தர பாடசாலை மட்டக்களப்பு - 162 ஸ்ரீ சண…
-
- 3 replies
- 406 views
-
-
44ஆவது பிரதம நீதியரசராக முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.35க்கு இருந்த சுப நேரத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சத்தியப்பிரமாண நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56946-2013-01-15-07-15-12.html
-
- 4 replies
- 423 views
-
-
சிறிலங்கா அரசாங்கம் தனது போர்குற்றங்கள், மற்றும் ஈழத்தமிழர்கள் மேல் தொடர்ந்தும் நடத்திவரும் இன அழிப்பை கிரிக்கெற்றினால் மூடி மறைத்து வருகின்றார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிரிக்கெற்றினால் எவ்வாறு சிறிலங்கா அரசாங்கம் தனது குற்றச் செயல்களை மறைக்கின்றது, தொடர்ந்தும் மறைக்க முயல்கின்றது. போன்ற விடயங்களை எம் அனைவருக்கும் பரிட்சயமான ஊடகவியலாளர் Trevor Grant மெல்பேனில் வெளிவரும் “The Age” என்ற பத்திரிக்கையில் மிகவும் விபரமாகவும் உறுதியாகவும் ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். 20.01.2013 அன்று அவுஸ்திரேலியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான கிரிக்கெற் போட்டி நடைபெறவுள்ள அன்றைய தினத்தில் Trevor Grant கூறியது போல சிறிலங்கா அரசாங்கம். தொடர்ந்தும் தனது குற்றச் செயல்களை கிர…
-
- 0 replies
- 366 views
-
-
ஜி.எல்.பீரிஸ் அடுத்த வாரம் இந்தியாவிற்கு பயணம். [Wednesday, 2013-01-16 10:32:28] சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அடுத்தவாரம் புதுடில்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் இந்திய அரசினால் சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக புதுடில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை இந்திய - சிறிலங்கா கூட்டுக் குழுக் கூட்டத்திலும் பீரிஸ் பங்கேற்கவுள்ளார். இந்தக் கூட்டத்தில், சிறிலங்கா குழுவுக்கு ஜி.எல்.பீரிசும், இந்தியக் குழுவுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித்தும் தலைமை வகிக்கவுள்ளனர். http://seithy.com/breifNews.php?newsID=73977&category=…
-
- 0 replies
- 345 views
-
-
இந்தியா – சிறிலங்கா: வலிகள் நிறைந்த உறவு [ புதன்கிழமை, 16 சனவரி 2013, 01:35 GMT ] [ கார்வண்ணன் ] தேசிய நீரோட்டத்தில் தமிழ்ச் சமூகத்தைக் கொண்டு வருவதற்கான அரசியல், ஜனநாயக மறுசீரமைப்புகளை மேற்கொள்ளுமாறும் சிறிலங்கா அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வருவதாக, livemint இணையத்தில், எலிசபெத் றொக்கி எழுதியுள்ள செய்திக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. சிறிலங்காவில், மிகப்பெரிய அயல் நாடான இந்தியா மேற்கொண்டு வரும் திட்டங்கள் குறித்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அடுத்தவாரம் புதுடெல்லிக்கு வரும் போது, இருநாடுகளும் மீளாய்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, இருதரப்பிலும் இந்த விவகாரத்துடன் தொட…
-
- 0 replies
- 340 views
-
-
விஜய் நம்பியாருக்கும் பான்கீ மூனுக்குமான உறவும், ஐநா அறிக்கைகளின் மறைப்பும் - போல் நியூமன் [ செவ்வாய்க்கிழமை, 15 சனவரி 2013, 12:42 GMT ] [ நித்தியபாரதி ] புதுடில்லியில் 23 வயதான யுவதி ஒருவர், கூட்டாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதை எதிர்த்து கடந்த இரு வாரங்களாக பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட அதேவேளையில், பெண்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளதாக உலக நாடுகள் சிலவற்றின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில், புதுடில்லியில் இடம்பெற்ற பாலியல் வன்முறைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட யுவதிக்கு ஆதரவாக சிறிலங்காவில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டமை மற்றும் இது தொடர்பில் ஐ.நா செயலாளர் நாயகம் திரு.பான்கீ மூன் விடுத்துள்ள அறிக்கை…
-
- 0 replies
- 463 views
-
-
கிளிநொச்சி நகரத்தில் உள்ள சில மரங்கள் பட்டுப்போகத் தொடங்கியுள்ளன. கிளிநொச்சி நகரில் பிரதான வீதி மிகவும் அகலாமாக புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வீதியின் இரண்டு மருங்கிலும் மிக நீண்டகாலத்து மரங்கள் நின்று செழிப்பையும் அழகையும் கொடுக்கின்றன. நகரின் புனரமைப்புக்குள் பட்டுப்போன மரம் சொல்லும் சேதியை எமது செய்தியாளர் தனது புகைப்படத்தில் பதிவு செய்துள்ளார். கிளிநொச்சி நகரின் வீதியை புனரமைக்க சீனாவிலிருந்து துறை சார்ந்த பணியாளர்கள் கொண்டுவரப்பட்டார்கள். அவர்கள் நகரில் நின்ற மரங்களை அழிக்காமல் வீதிக்குள் விட்டு வீதியை அமைத்தார்கள். இவ்வாறு அமைப்பதுவே நகருக்கு அழகையும் சூழலுக்கு நலத்தையும் கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கிளிநொச்சி நகரில் உள்ள சில மரங…
-
- 1 reply
- 569 views
-
-
கடுதாசித் துண்டொன்றில் நாட்டை ஆட்சி செய்த காலம் மீண்டும் இந் நாட்டில் உருவாக இனிமேலும் யாருக்கும் இடமளிக்கப் போவதில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். நாட்டின் சட்டங்களை அலட்சியம் செய்து அரசியல் இலாபம் தேட முனையும் குழுக்களை இனங்காண்பது நாட்டை நேசிக்கும் சகலரதும் பொறுப்பாகுமெனவும் மஹிந்த தெரிவித்தார். நேற்று அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருக்கும் இடையிலான விசேட சந்திப்பில் உரையாற்றிய போதே மஹிந்த இவ்வாறு தெரிவித்தார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் விஜயதாச ராஜபக்ச உட்பட இலங்கை நீதித்துறையின் 14 சட்டத்தரணிகள் சங்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள…
-
- 4 replies
- 356 views
-
-
ரிசானாவுக்கான மரண தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது' சவுதி அரேபியாவில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள திருகோணமலை பெண் ரிசானா நஃபீக், மரண தண்டனையை எதிர்கொள்ளும் அபாயம் இன்னும் இருப்பதாக, சவுதியில் அவரது விடுதலைக்காக போராடி வரும் டாக்டர் ஹிபாயா இஃப்திகர் கூறியுள்ளார். முன்னர் ரிசானாவுக்கு மரண தண்டனையை வழங்கிய சவுதி நீதிமன்றம், தற்போது அந்தத் தண்டனையை உறுதி செய்துள்ளதாக டாக்டர் ஹிபாயா இப்திகார் கூறியுள்ளார். இந்த மரண தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்படாவிட்டாலும், அது எந்த நேரத்திலும் நிறைவேற்றப்படலாம் என்றும் அவர் அச்சம் வெளியிட்டார். டாக்டர். ஹிபாயா இஃதிகார் மாற்று மீடியா வடிவில் இயக்க அதேவேளை இறுதிக் கணம்வரை ரிசானாவின் விட…
-
- 71 replies
- 4.9k views
-
-
25 வயதுக்கு குறைந்தவர்கள் பணிபெண்களாக வெளிநாடுகளுக்கு செல்லத் தடை 25 வயதுக்கும் குறைந்தவர்கள் வெளிநாட்டுக்கு பணிபெண்களாக செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்புக்காக செல்லும் பெண்களின் வயது குறைந்தபட்டசம் 25க்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும் எனவும் அறிவிவித்துள்ளது. இதேவேளை மத்திய கிழக்கு நாடுகளுடன் தொழில் உடன்படிக்கைகள் கைச்சாத்திடும் போது சஹரிய சட்டங்கள் மற்றும் இலங்கை சட்டங்கள் கருத்திற்கொள்ளப்படும் எனவும் உடன்படிக்கைகளின் போது தொழிலாளர்களின் நலன்களை உறுதி செய்யக் கூடிய வகையிலான நிபந்தனைகள் உள்ளடக்கப்படும் எனவும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மேம்பாட்டு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ள…
-
- 5 replies
- 576 views
-
-
யாழ். குடாநாட்டில் திட்டமிட்ட கலாசாரச் சீரழிவு: - முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் [Tuesday, 2013-01-15 09:50:24] யாழ். குடாநாட்டில் இப்போது திட்டமிட்ட கலாசாரச் சீரழிவு நடைபெற்று வருகிறது. எமது அருமந்த இளைஞர்களும், யுவதிகளும் சீரழிந்த ஒரு வாழ்க்கை முறைக்குத் திட்டமிட்டு இழுத்துச் செல்லப்படுகின்றார்கள். இவ்வாறு தெரிவித்தார் உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன். நேற்றுத் திங்கட்கிழமை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் தலைமைக் காரியாலயக் கட்டடத் திறப்புவிழா இந்து வாலிபர் சங்கத்தின் தலைவர், சட்டத் தரணி க.சுகாஷ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில் நீதியரசர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையா…
-
- 1 reply
- 563 views
-
-
வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சி நடத்துவதை நிறுத்த கோரி சமவுரிமை இயக்கத்தினால் நாடெங்கிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் மாபெரும் பதாகை கையெழுத்திடும் கவன ஈர்ப்பு போராட்டம் இன்றைய தினம் யாழ் நகரில் காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது. யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்! வடக்கு கிழக்கில் நில ஆக்கிரமிப்பை நிறுத்து! கைதுகளையும் கடத்தல்களையும் உடன் நிறுத்து! அனைத்து அரசியல் சிறைக்கைதிகளையும் உடன் விடுதலை செய்! என்ற கோஷங்களுடன் இடம்பெறும் இவ் கவனயீர்ப்பு பதாகை கையெழுத்திடும் போராட்டத்தில் அனைவரையும் பங்குகொள்ளுமாறு சமவுரிமை இயக்கத்தினர் அழைக்கின்றார்கள். இராணுவ ஆட்சியை மேற்கொண்டிருக்கும் அரசிற்கு எதிராக அனைத்துவிதமான எதிர்ப்பு …
-
- 8 replies
- 592 views
-
-
சவூதியில் இலங்கை பணிப்பெண் மீது தாக்குதல்: எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி By General 2013-01-15 10:46:52 இலங்கை பணிப் பெண்ணொருவர் சவூதி அரேபியாவில் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு வருடத்துக்கு முன்னர் பணிப் பெண்ணாக சவ+தி அரேபியாவுக்குச் சென்ற கொழும்பு, புளூமென்டல் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய அங்கஸ் பெரேரா என்பரே தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்தப் பெண் தொழில் வழங்குனரினால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு தாக்கப்பட்ட நிலையில் வீதியில் வீசப்பட்டுள்ளார். இதனையடுத்து பொலிஸார் குறித்தப் பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். குறித்தப் பெண்ணின் உடலில் வெட்டுக்காயங்கள், எரிகாய…
-
- 2 replies
- 1k views
-
-
'பத்து லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும்": யாழில் சுவரொட்டிகள் By Priyarasa 2013-01-15 11:25:36 தென்னிலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டது சம்பந்தமாக தகவல் தருபவர்களுக்கு பத்து லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என சுவரொட்டிகள் யாழ். மாவட்டத்தின் பல பாகங்களிலும் பொலிசாரினால் ஒட்டப்பட்டுள்ளன. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பலாலி வீதி காப்பற் போடும் பணியில் ஈடுபட்ட தென்னிலங்கை இளைஞர் ஒருவர் நந்தாவில் தோட்டவெளியில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தக் கொலையைத் தொடர்ந்து கொழும்பில் இருந்து வருகை தந்த விசேட பொலிஸ் குழுவினர் புன்னாலைக்கட்டுவனில் ஒரு இளம் குடும்பத்தினரை கடத்திச் சென்று விசாரணைகளை மேற் கொண்டதுடன் அவர்களுடைய தந்தையையும…
-
- 1 reply
- 483 views
-
-
பிரதம நீதியரசரின் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்திலிருந்து முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை மாலை வெளியேறினார். இதன்போது ஊடகங்களுக்கு முன்னாள் பிரதம நீதியரசர் கருத்து தெரிவிப்பதையும் அதனை பொலிஸார் முற்படுவதையும் படங்களில் காணலாம்.(படங்கள்:குஷான் பத்திராஜ) http://tamil.dailymirror.lk/--main/56982-2013-01-15-13-53-19.html
-
- 0 replies
- 566 views
-
-
இலங்கையின் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பதவி விலக்கப்பட்டமை குறித்து மீண்டும் கவலை வெளியிட்டுள்ள அமெரிக்கா, நீதித்துறைச் சுதந்திரத்தைப் பாதிக்கும் எந்த நடவடிக்கையும் இலங்கையின் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் திறனைப் பாதிக்கும் என்று எச்சரித்துள்ளது. வாசிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட், இலங்கையின் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பரேரணை குறித்து நாம் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளோம். உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மாறாகவே, அவர் பதவி நீக்கப்பட்டுள்ளார். இது இலங்கையில் அதிகாரப் பகிர்வு சம்பந்தமான தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு இந்த அதிகாரப் பகிர்வு …
-
- 1 reply
- 367 views
-
-
By Leo Niroshan 2013-01-15 18:30:37 உயிருக்கு உத்தரவாதம் தாருங்கள் என்று பொதுமக்களிடம் கோரிக்கையிட்டுள்ள கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க பாரிய அநீதிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கொழும்பு 7 பௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள பிரதம நீதியரசரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேறும் போது ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே கலாநிதி ஷிராணி மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/local.php?vid=2569
-
- 0 replies
- 602 views
-
-
தான் குற்றமற்றவர் எனவும் தனது குடும்பத்தின் பாதுகாப்பு இன்று கேள்விக்குரியாகியுள்ளது என்றும் இது மக்களின் கைகளிலேயே உள்ளது எனவும் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தெரிவித்தார். பிரதம நீதியரசரின் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்திலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை மாலை வெளியேறிய போதே முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மேற்கண்டாவாறு ஊடகங்களுக்கு குறிப்பிட்டார். அங்கு தொடரந்து உரையாற்றிய அவர், 'கடந்த 30 வருடங்களாக உண்மையாக கடமையாற்றியுள்ளேன். எதிர்காலத்தில் மக்களோடு இருப்பேன். நான் உண்மையானவள். வரியற்ற வாகனமொன்றையேனும் கொள்வனவு செய்யவில்லை. நான் நிரபராதி. நான் எப்போதும் மக்களுடனேயே இருப்பேன். மக்கள் எனது குடும்பத்தைக் காப்பார்கள் என்று நம்புகின்றேன். ந…
-
- 1 reply
- 728 views
-
-
புதிய பிரதம நீதியரசராக நியமனம் பெற்றுள்ள மொஹான் பீரிஸுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே.வி.பி) இன்று, ஊழல் மோசடி முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளனர். அரசாங்கத்தைச் சேர வேண்டிய ஏழு கோடியே 28 இலட்சம் ரூபாவினை மோசடி செய்தார் என்று குற்றஞ்சாட்டியே ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மோசடிகளுக்கு எதிரான குரல் அமைப்பின் இணைப்பாளருமான வசந்த சமரசிங்கவினாலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56972-2013-01-15-11-59-32.html
-
- 0 replies
- 444 views
-
-
A+AA- நாங்கள் பிழைவிட்டோம் என்று சிங்கள மக்கள் விரைவில் உணர்வார்கள் joomla 2.5 vip макияж в Москве шаблоны Joomla ஆணவம் கன்மவினையை ஏற்படுத்துகின் றது என உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதி யரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஒரு கூட்டத்தில் கூறிய விடயம் ஈன்று சிந்திப்பதற் குரியது. இதன் காரணமாகவே ஆணவம் கொண்டோர் அழிவைச் சந்திக்கின்றனர் என்ற அவரின் உரை விளக்கம் மிகவும் யதார்த்தமானது. இஃது இலங்கைக்கு மிகவும் பொருத்துடையதும்கூட. இலங்கை நாட்டின் சமகாலப்போக்கை ஒரு கணம் சிந்தித்தால், இங்கு என்னதான் நடக்கிறது என்று எண்ணத் தோன்றும். அந்தளவுக்கு ஜனநாயகப் பண்புகள் புதைக் கப்படுகின்றன. நாட்டின் பிரதம நீதியரசர் விடயத்தில் இலங் கையின் அரசியலமைப்பு செயற்பட்ட விதம், இலங்கையி…
-
- 2 replies
- 741 views
-
-
ஷிராணியின் இடத்துக்கு மொஹான் பீரிஸா? சீறுகிறார் சரத் என். சில்வாரி பிரதம நீதியரசர் பதவி யிலிருந்து ஷிராணி பண்டாரநாயக்கவை அகற்றும் விடயத்தில் அரசியல் இருக்கவில்லை என்று கருதியதால்தான் நாங்கள் அதற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தோம். பிரதம நீதியரசராக மொஹான் பீரிஸை நியமிக்க அரசு தீர்மானித்திருப்பதால் நாங்கள் தவறான விடயத்துக் காகக்குரல் கொடுத்துவிட் டோமோ என்றே எண்ணத் தோன்றுகிறது. இப்போது ஏற்பட்டுள்ள நிலைமை இஞ்சி கொடுத்து மிளகு வாங்கிய கதையாகத் தான் இருக்கிறது. இவ்வாறு நேற்று காட்டமாகக் கருத்துத் தெரிவித்தார் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா. மொஹான் பீரிஸை பிரதம நீதியரசராக அமர்த்துவது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது: ஷிராணி…
-
- 1 reply
- 983 views
-
-
இலங்கையின் புதிய நீதியரசராக முன்னாள் சட்டமா அதிபரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சட்டத்துறை ஆலோசகருமான மோஹான் பீரிஸ் பதவியேற்கவுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் அவர் பதவியேற்பார் என இன்று காலை கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதம நீதியரசராகப் பணியாற்றிய சிஷானி பண்டாரநாயக்க நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட குற்றப் பிரேரணை மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவரது பதவி நீக்கத்தை உறுதிப்படுத்தி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடிதம் ஒன்றை நேற்று முன்தினம் அனுப்பிவைத்திருந்தார். இந்த நிலையில் புதிய சட்டமா அதிபராக யாரை நியமிப்பது என்பதில் இழுபறி நிலை காணப்பட்டது. ஷிரானி பண்டாரநாயக்கவுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்குத் தயா…
-
- 1 reply
- 511 views
-
-
பட்டதாரிப் பயிலுநர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பட்டதாரிகள் இறுதியில் ஏமாற்றத்துடனும் வெறும்கையுடனும் திரும்பி வந்தனர். இலங்கையை ஜனநாயக நாடு ஆக்கியமை தொடர்பான விவரணப் படம் ஒன்று சுகததாஸ அரங்கில் பட்டதாரிகளுக்குக் காண்பிக்கப்பட்டது. அவர்களது நிரந்தர நியமனம் தொடர்பில் அங்கு எதுவுமே தெரிவிக்கப்படவில்லை. அத்துடன் குறித்த நிகழ்வில் 15 ஆயிரம் தமிழ்ப் பட்டதாரிகள் கலந்து கொண்டிருந்தபோதும் அங்கு அனைத்து நிகழ்வுகளும் சிங்கள மொழியிலேயே இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பட்டதாரி பயிலுநர்களாக கடந்த ஜூன் மாதம் நாடளாவிய ரீதியில் 50 ஆயிரம் பட்டதாரிகள் …
-
- 1 reply
- 374 views
-