Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றஞ்சாட்டிப் பதவி பறிக்கும் பிரேரணையை விசாரித்த நாடாளுமன்ற தெரிவுக்குழு தனது பணிகளை முடித்துக்கொண்டுவிட்டால் கூட அதனை விசாரணைக்காக அழைக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு உண்டு என்று ஓய்வுபெற்ற நீதியரசரான சி வி. விக்னேஷ்வரன் கூறியுள்ளார். பிரதம நீதியரசரின் விவகாரம் குறித்த வழக்கு ஒன்று குறித்து விசாரணைக்கு வருமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அது குறித்த நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், அதனை நிராகரித்த அந்த தெரிவுக்குழுவின் உறுப்பினரான அமைச்சர் ராஜித சேனரட்ண அவர்கள், தமது தெரிவுக்குழுவின் விசாரணைகள் முடிந்து, அது குறித்த அறிக்கை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், நீதிமன்றம் ''தெரிவுக்குழு உ…

    • 0 replies
    • 402 views
  2. மன்னனின் கழுத்தில் இருந்த ஈயை விரட்டுவதற்காக, குரங்கு வாளை பயன்படுத்தியதை போன்று வேட்டை நாய்களின் தலையை துண்டிக்க வேண்டிய நிலைமை ஜனாதிபதிக்கு ஏற்படும். மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் தற்போதைய நிர்வாகமானது, முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் இறுதிகால ஆட்சிக்கு இணையானது என மௌபிம மக்கள் கட்சியின் தலைவர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம், அரசாங்கத்திற்கு வலியை ஏற்படுத்துவோர், சரியானதை செய்வோர் என அனைத்து தரப்பினர் மீது அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதனால் வட பகுதியில் உள்ள இளைஞர்கள் முதல், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் வரையான அனைவரும் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அரசாங்கத்தின் வேட்டை நாய்கள் மேற்கொண்டு வரும் இந்த…

  3. கனவு காணாதீர்கள் கைதான நான்கு மாணவர்களையும் விடுவித்தால்தான் பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிப்போம் என்பீர்களானால் அது நடக்காது. கைதான மாணவர்கள் இன்றும் பிரபாகரன் இருக்கிறார் என்று வாதிடுகின்றனர். அவர்களை அவரே காப்பாற்றுவார்'' யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவப் பிரதிநிதிகள், கைதான மாணவர்களது பெற்றோர்கள் மத்தியில் இறுமாப்புடன் பேசிய விடயம் இது. கடந்த நவம்பர் ம…

  4. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கான தனது பயணத்தை மீள்பரிசீலனை செய்திருப்பதாக ஐ.நா சபையின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முற்பகுதியில் இலங்கை வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அந்த உத்தேச யோசனை இப்போது மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக ஐ.நா சபை வட்டாரங்களில் இருந்து நேற்று செய்திகள் வெளியாகியுள்ளன. "இலங்கையின் தற்போதுள்ள அரசியல் மற்றும் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்து ஆணையாளர் அலுவலகம் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் இலங்கைகு நேரடிப் பயணம் ஒன்றை மேற்கொண்டு நேரடியாக நிலைமைகளை ஆராய திட்டமிட்டிருந்தார். எனினும் இலங்கையின் அரசியல் நிலை…

    • 0 replies
    • 556 views
  5. நம்பிக்கையில்லாப் பிரேரணையால் ஆட்டம் காணும் மகிந்த அரசாங்கம் தமிழ் அமைச்சர் ஒருவரை கொல்ல சூழ்ச்சி? திடுக்கிடும் தகவல் - தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- நம்பிக்கையில்லாப் பிரேரணையால் பெரும் அசௌகரிய நிலைமையை எதிர்நோக்கி வரும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம், இந்த பிரச்சினையில் இருந்து மீள்வதற்காக முற்றாக எவரும் நினைத்து பார்க்காத வேறு நடவடிக்கை தொடர்பான சூழ்;ச்சி திட்டம் ஒன்றை வகுத்து வருவதாக அரசாங்கத்தின் உட்தரப்பு தகவல்களை வழங்கி வருபவர்கள் தெரிவிக்கின்றனர். அமைச்சரவையில் உள்ள மிகவும் பேசப்பட்டு வரும், கிழக்கு மாகாணத்தில் இருந்து அரசாங்கத்தில் இணைந்து கொண்ட தமிழ் அமைச்சர் ஒருவரை கொலை செய்வதே அந்த சூழ்ச்சித் திட்;டமாகும். இந்த கொலையானது பயங்கரவாத தாக்குதல்…

  6. சிங்கள ஊடகம் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு மீண்டும் உயிரூட்டும் நோக்கில் தமிழகத்தை மையமாக கொண்டு செயற்படும் புலிகளுக்கு ஆதரவான அமைப்பு ஒன்றின் மூன்று முக்கிய உறுப்பினர்களை கைதுசெய்வதற்காக இந்திய பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசேட தேடுதல் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக இந்திய தூதரக தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன என சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அண்மையில் இந்த குழுவைச் சேர்ந்த 5 பேர், இந்திய பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் மேற்படி மூன்று உறுப்பினர்கள் தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், குறித்த மூன்று பேரை கைதுசெய்வதற்காக இந்திய பயங்கரவாத விசாரணை பிரிவினர், இலங்கை புலனாய்வு பிரிவினருட…

  7. அதிகரித்துவரும் குதவாயில் மூலமான கடத்தல் நடவடிக்கைகள்! இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்திச் செல்ல முயன்ற நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று நண்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யபட்ட குறித்த நபரிடமிருந்து ரூ 20 இலட்சம்பெறுமதியான 3 தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இவற்றின் மொத்த நிறை 300 கிராம்களாகும். குத வாயிலில் மறைத்து வைத்தே இவர் தங்கத்தை கடத்த முயன்றுள்ளார். இன்று நண்பகல் 2 மணிக்கு சென்னைக்குச் செல்லவிருந்த ஸ்ரீலங்கன் எயார் விமானத்தில் பயணிக்க வந்த போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக குதவாயிலில் மறைத்து வைத்த…

  8. போரின் இறுதியில் சவேந்திர சில்வாவை பதவி நீக்க சரத் பொன்சேகா முயற்சித்தார்! - கொழும்பு ஊடகம் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது படைத்தரப்பின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை அப்பதவியில் இருந்து நீக்க சிறிலங்காவின் அப்போதைய படைத் தளபதி சரத் பொன்சேகா முயற்சி மேற்கொண்டதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இவ்வூடகத்தில் படைத்துறை ஆய்வாளர் சாமிந்ர பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரை ஒன்றிஜலேயே இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடபில் இக்கட்டுரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி  அதிகாலை 3 மணியளவில் சிறிலங்கா படைத்தரப்பால் முற்றுகையிடப்பட்டிருந்த முள்ளிவ…

  9. தடை செய்யப்பட்ட புலிகளுக்கு ஏன் அஞ்சலி செய்ய வேண்டும். அதற்காக ஏன் பல்கலைக்கழகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்கிறார் யாழ். மாநகர சபை ஆளும்கட்சி உறுப்பினர் சுபியான். யாழ். மாநகரசபையின் 2012 ஆம் ஆண்டுக்காக மாதாந்த இறுதிக் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு யாழ். மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கூட்டநிறைவில் எதிர்க்கட்சி உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தனது கருத்தினை முன்வைக்கும் போதே பதிலுக்கு விவாதித்த சுபியான் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த வாரம் யாழ். மாநகர சபையினால் ஒளிவிழா கொண்டாடப்பட்டிருந்ததை தாம் ஊடகங்கள் வாயிலாகவே அறிந்தோம். எமக்கு அறிவித்தல் எதுவும் விடப்படவில்லை என்றும் எதிர்கட்சி சார்பில் விந்தன் கனகரத்தினம் சபையில் தெரிவித்…

  10. ஆழிப்பேரலைக்குப் பலியானோரை நினைவு கூரும் வகையில், நாளை மறுநாள் இரண்டு நிமிடநேர மௌன வணக்கம் செலுத்துமாறு சிறிலங்கா அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆழிப்பேரலைக்கு பலியானவர்களை நினைவு கொள்ளும் வகையில், வரும் புதன்கிழமை காலை 9.25 தொடக்கம் 9.27 வரை மௌனவணக்கம் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யுமாறு அனைத்து அரசதுறை, தனியார்துறை நிறுவனங்களையும் சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. 2004 டிசம்பர் 26ம் நாள் ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தில் சிறிலங்காவில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மரணமானது குறிப்பிடத்தக்கது. http://www.puthinappalakai.com/view.php?20121224107488

  11. தங்களுடைய உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தைச் சேர்ந்த யாராவது காணாமல் போய்விட்டால் அவர்கள் தொடர்பில் சர்வதேச அமைப்புகளிடம் முறையிடக்கூடாது என்று படையினர் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில் பிபிசி செய்திச்சேவை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் கிராமத்தைச்சேர்ந்த மக்கள் பாதுகாப்புத் தரப்பினரால் இவ்வாறு எச்சரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரதேசங்களில் கடந்த காலங்களில் கடத்தப்பட்டு காணாமல்போனவர்களின் உறவினர்கள் ஐ.நா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடமோ அல்லது வேறு வெளிநாட்டு நிறுவனங்களிடமோ முறைப்பாடு செய்யக்கூடாது என்றும் படையினர் எச்சரித்துவிட்டுச் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் …

  12. 'ஈ.பி.டி.பி உறுப்பினரை திருமணம் செய்ய கனடாவில் இருந்து சென்ற பெண் யாழில் எரித்து படுகொலை!' யாழ். புத்தூர் வடக்கில் வசிக்கும் ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவரை திருமணம் செய்ய கனடாவில் இருந்து சென்ற தமிழ்ப்பெண் நேற்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அடுத்த மாதம் முதல் வாரத்தில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் குறித்த பெண் புத்தூர் வடக்கில் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த வேளை எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருபவை வருமாறு: கொழும்பை சொந்த இடமாகக் கொண்ட கலைமகள் (வயது - 30) கடந்த 10 வருடங்களாக கனடாவில் உறவினர்களுடன் வசித்து வந்துள்ளார். இவரின் தாய், தந்தை 12 வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் இடம்…

  13. ஒரு லட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்களின் இரட்டைக் குடியுரிமை விண்ணப்பங்களை குடிவரவு குடியகல்வு திணைக்களம் நிராகரிப்பு. [Monday, 2012-12-24 09:20:22] ஒரு லட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் இரட்டைக் குடியுரிமை கோரி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டு குடியுரிமை பெற்றுக்கொண்ட இலங்கையர்களே இவ்வாறு குடிவரவு குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் ஊடாக இரட்டைக் குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளனர். எனினும், தமது கோரிக்கைக்கு க திணைக்களம் சாதகமான பதில் எதனையும் அளிக்கவில்லை என வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். இவர்களில் சிலர் ஏற்கனவே இரட்டைக் குடியுரிமை அந்தஸ்து வகித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு குடியுரிமை பெற்றுக் கொண்ட இ…

  14. வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு துப்பாக்கிகள் மாற்றம்! December 24th, 2012 அன்று வெளியிடப்பட்டது - கருத்துக்களேதுமில்லை வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து T56 மற்றும் CZ 58 துப்பாக்கிகளுக்கு பதிலாக இயக்குவதற்கு சுழல்முறை துப்பாக்கிகளை வைத்திருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் சிறைச்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஜி எஸ் வித்தானகே இதனை குறிப்பிட்டுள்ளார்.சிறைச்சாலையில் வன்முறைகள் ஏற்படும் போது கைதிகளால் ரி 56 துப்பாக்கிகளை பயன்படுத்தப்பட்டால் அதன் மூலம் பாரிய சேதங்கள் ஏற்படக்கூடும். எனினும் சுழல்முறை துப்பாக்கியின் மூலம் ஒரேதடவையில் 6 ரவைகளை மாத்திரமே வெளியாக்கமுடியும் என்பதன் காரணமாக பாதிப்புக்கள் குறைவாக இருக்கும் என்ற அடிப்படையிலேயே சுழல்முறை துப்பாக்கிகளை சிறைச்சாலையில் …

  15. "ஜனாதிபதியின் கைகளும் கட்டப்படும்" திங்கட்கிழமை, 24 டிசெம்பர் 2012 01:21 (அழகன் கனகராஜ்) குற்றப்பிரேரணையை கொண்டுவருவதற்கான சகல நடவடிக்கைகளையும் ஊடகங்களே செய்தன. ஊடகங்களே ஜனாதிபதியை இந்த நிலைக்கு கொண்டு வந்தன என்று தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த ஆளும் கட்சியின் உறுப்பினரான அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். இலங்கை மன்றக்கல்லூரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பிற்கு பின்னர் 5 ஆவது குற்றப்பிரேரணையை விசாரிக்கப்பட்டுள்ளதுடன். நீதியரசர்களுக்கு எதிரான மூன்றாவது குற்றப்பிரேரணை இதுவாகும். ஒரு குற்றப்பிரேரணையை விசாரிக்கும் தெரிவுக்குழுவில் நான…

  16. இந்திய மீனவர்கள் 32 பேர் இலங்கை கடற்படையினரால் கைது: இந்திய ஊடகங்கள் By General 2012-12-24 11:03:28 இந்திய கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடல் எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக தெரிவித்தே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்றுள்ளதாகவும் நாகப்படினம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 7 பேர், நம்பியார் கிராமத்தைச் சேர்ந்த 7 பேர், புதுவை மாநிலம் காரைக்கால்மேடு பகுதியைச்ச் சேர்ந்த 18 பேர் உள்ளிட்ட 32 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவை சுட்டிக்காட்டியுள்ளன. மீனவர்களுடன் அவர்கள்…

  17. மன்னாரில் மீண்டும் இராணுவத்தின் கெடு பிடி ஆரம்பம்! By General 2012-12-24 11:45:38 (மன்னார் நிருபர் எஸ்.வினோத்) மன்னார் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்குப்பின் மீண்டும் இராணுவத்தினர் புதிய காவலரன்களை அமைத்தல் மற்றும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடும் செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்ற நிலையில் மன்னார் மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இது குறித்து மேலும் தெரியவருவது. சிவில் நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் மக்களின் குடியிருப்புக்கள் மற்றும் பொது இடங்களில் காவலரன்களை அமைத்திருந்த இராணுவத்தினர் தமது காவலரன்களை அகற்றிய நிலையில் அவ்விடங்களில் இருந்து இராணுவத்தினர் படைமுகாம்களுக்கு மாற்றப்பட்டனர். இந்த நிலையில் மன்னாரில் இடம் பெற்ற…

  18. கிழக்கு மாகாணப் பாட சாலைகளில் நடைபெறும் வைபவங்களில் பயன்படுத்தப்படும் "பான்ட்' வாத்தியங்களை ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், ஆளுநர் ஆகியோர் தவிர்ந்த வேறு எவருக்கும் இசைக்கக் கூடாது என்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ. ஏ.புஷ்பகுமார சகல அதிபர்களுக்கும் அறிவித்துள்ளார். சாதாரண ஒரு தன வந்தர் பாடசாலைக்குரிய அபிவிருத்திப் பணியொன்றை மேற் கொண்டால், அவர்களுக்கு நன்றி கூறும் முகமாக விழா ஏற்பாடு செய்யப்பட்டு "பான்ட்' வாத்தியங்கள் இசைத்து வரவேற்கப்படுகின்றனர். இந்த நிலை முற்றாக தவிர்க்கப்பட வேண்டும் என்று அவர் பணித்துள்ளார். கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகள், பரிசளிப்பு விழாக்களில் ஒருவரை பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ள அழைப்பதற்கு மு…

    • 0 replies
    • 394 views
  19. கேணல் பரிதி அவர்களின் திட்டமிட்ட படுகொலைக்கு நீதி கோரி யேர்மனி பெர்லின் நகரத்தில் அமைந்துள்ள பிரான்ஸ் தூதரகத்தில் கடந்த வெளிக்கிழமை தமிழ் மக்கள் பிரதிநிதிகளால் மனுக்கையளிப்பும் சந்திப்பும் முன்னெடுக்கப்பட்டது. எல்லை தாண்டிய சிங்கள அரசின் பயங்கரவாதத்தால் கேணல் பரிதி அவர்கள் படுகொலை செய்யப்பட்டார் இருந்தும் இன்று வரை பிரான்ஸ் காவல்த்துறை கேணல் பரிதி அவர்களின் படுகொலை விடையமாக எவ்வித ஆக்கபூர்வமான முன்னேற்ரங்களையும் தெரிவிக்கவில்லை . தாயகத்தில் தமிழ் மக்களை இனவழிப்பு செய்துகொண்டிருக்கும் சிங்கள பேரினவாத அரசு புலத்திலும் அதன் கோர முகத்தை இனம்காட்டி தமிழ் மக்களின் உயரிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் தேசியப்பணியாளர்களை குறிவைக்கும் முகமாக தொடர்ந்தும் தனது இனப்படுகொல…

    • 2 replies
    • 517 views
  20. யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மாணவிகள் மீதான விசாரணைகள் அதிகரித்துள்ளன. இவ்வாறு நாளாந்தம் சுமார் மூன்று மாணவிகள் வீதம் வவுனியாவுக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். மாணவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படும் விடயம், அவர்களது வீடுகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டே இடம்பெறுவதால் இதுவரை எத்தனை மாணவர்கள் இவ்வாறு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை அறியமுடியவில்லை என்று யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது : யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் கைத…

    • 0 replies
    • 585 views
  21. தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழர்களும், பல்கலைக்கழக மாணவர்களுமே வளர்த்து விட்டதாக படைத்தரப்பும் அரசும் கூறினாலும் சிங்களவர்களும் பிரேமதாஸ போன்ற அரசியல்வாதிகளும் சேர்ந்தே அவர்களை வளர்த்து விட்டனர் என கணிதவியல் பேராசிரியர் எஸ்.சிறி சற்குணராஜா தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் கைதானதைத் தொடர்ந்து முடங்கியுள்ள கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து ஆராய யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர், துறைத் தலைவர்கள், கைது செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர் ஆகியோரை யாழ். மாவட்டகட்டளைத் தளபதி ஹத்துருசிங்க பலாலி படைத் தளத்தில் சந்தித்தார். அங்கு உரையாற்றிய மஹிந்த ஹத்துருசிங்க, முப்பது வருட கால அழிவுக்கு புலிகளும் அவர்களை உருவாக்கி வளர்த்துவிட்ட தமிழர்களும் பல்கலைக்கழக …

  22. டென்மார்க் அன்னை அறக்கட்டளை வெள்ள நிவாரண உதவி. கடும்மழையால் பாதிப்புற்ற கிழக்கு மாகாண மக்களுக்கான அவசர வெள்ள நிவாரண உதவியை புலம்பெயர் உறவுகளிடம் நேசக்கரம் அனர்த்தக்குழுவினர் கோரியிருந்தோம். எமது வேண்டுதலையேற்ற டென்மார்க் ‘அன்னை அறக்கட்டளை’ அமைப்பினர் 5400DKK(டெனிஸ் குறோணர்களை) Hosltebro /Viborg நகர் வாழ் உறவுகளிடமிருந்து சேகரித்து வழங்கியுள்ளனர். அவலமுறும் மக்களின் அவசர நிலமையைப் புரிந்து ஆதரவு வழங்கியோர்:- பாஸ்கரன் சீனித்தம்பி – 200.00DKK செல்வன் தங்கராசா-300.00DKK சிவலிங்கம் ராமலிங்கம் 200.00DKK வ.தெய்வன் 200.00DKK சந்திரமூர்த்தி நாகமுத்து 200.00DKK J.மலீனா 300.00DKK மாரிமுத்து முருகேசு 500.00DKK ம.மரியதாஸ் 200.00DKK ம.கீதா 200.00DKK வே.ரத்தினவ…

  23. நேசக்கரம் அனர்த்த நிவாரணக்குழுவின் அவசர வேண்டுகோள். சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்கள் கடும்மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.தொடர்மழை காரணமாக வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளான கிராமங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர நிவாரண உதவிகளை புலம்பெயர் உறவகளிடமிருந்து கோருகிறோம். வெள்ளத்தால் பாதிப்புற்ற மக்களுக்கான சமைத்த உணவு , ஆடைகள் , அத்தியாவசியப் பொருட்கள் போன்றவை வழங்கப்பட வேண்டியிருக்கிறது. புலம் பெயர்ந்த அனைத்து தமிழர்களும் உங்கள் ஆதரவினை வழங்குமாறு நேசக்கரம் அனர்த்த நிவாரணக்குழுவினர் வேண்டிக் கொள்கின்றனர். உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் :- Bank information Germany: NESAKKARAM e.V. 55743 Idar-Oberstein Konto-Nr. 0404446706 BLZ 6001…

  24. மூன்றாவது ஆண்டாக மழைக்காலத்தை சுமக்கும் வன்னிப் பெருநிலத்தின் கூடாரங்கள் - 23 டிசம்பர் 2012 குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக பார்த்தீபன் குளங்களும் வாய்க்கால்களும் நிரம்பிய நிலப்பகுதி வன்னி. அண்மைய நாட்களாக வன்னிப் பெருநிலப்பரப்பில் பெருமழை பெய்துகொண்டிருக்கிறது. குளங்களில் நீர் நிரம்பி உடைக்கும் நிலையில் சில குளங்களின் கதவுகளும் திறந்து விடப்பட்டிருக்கின்றன. முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் இன்னமும் காட்சியளிக்கும் கூடாரங்கள் மழையை மூன்றாவது ஆண்டும் தாங்குமா? மழையும் வெள்ளமும் உலகெங்கும் மக்களின் இயல்புநிலையை பாதிக்கின்றன. ஆனால் வன்னிப்பெருநிலத்தில் மழைக்கும் வெள்ளத்திற்கும் மக்கள் பல வகையான பாதிப்புக்களுக்கு முகம் கொடுக்கிறார்கள். வன்னியில் எப்…

  25. இலங்கையின் கிழக்கே, திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் கிராமத்தில் மக்கள் பாதுகாப்புத் தரப்பினரால் எச்சரிக்கப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. அந்தப் பிரதேசங்களில் கடந்த காலங்களில் கடத்தப்பட்டு காணாமல்போனவர்களின் உறவினர்கள் ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடமோ அல்லது வேறு வெளிநாட்டு நிறுவனங்களிடமோ முறைப்பாடு செய்யக்கூடாது என்றும் இராணுவத்தினர் எச்சரித்துவிட்டுச் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தமக்கு முறைப்பாடு செய்துள்ளதாக வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல்கொடுக்கின்ற அமைப்பொன்றின் தலைவி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். தம்பலகாமத்துக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் இராணுவ வாகனமொன்றில் சென்ற நபர்கள், விடுதலைப் புலிகளோடு தொடர்புடைய எவ…

    • 0 replies
    • 610 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.