Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published By: DIGITAL DESK 3 12 JUN, 2024 | 03:50 PM யாழ்ப்பாணம் - பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவர், வைத்தியசாலை விடுதிக்குள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். குறித்த சம்பவம் இன்று புதன்கிழமை (12) வைத்தியசாலையில் நடந்தது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரே உயிரை மாய்த்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரிய வராத நிலையில் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/185925

  2. Published By: DIGITAL DESK 3 12 JUN, 2024 | 11:47 AM (செ.சுபதர்ஷனி) இலங்கையில் இனங்களுக்கிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதாக உலக பௌத்த மகா சம்மேளனத்தின் இலங்கை கிளை வலியுறுத்தியுள்ளது. உலக பெளத்த மகா சம்மேளனத்தின் இலங்கை மத்திய நிலையம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் பணியகம் ஆகியன இணைந்து இலங்கையில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய இனங்களுக்கிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை விருத்தி செய்யும் நோக்கில் செவ்வாய்க்கிழமை (11) நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தன. உலக பௌத்த மகா சம்மேளனத்தின் இலங்கை கிளையின் தலைவர் கலாநிதி சுதத் தேவபுரவின் தலைமையில் கொழும்பு மயூ…

  3. Published By: DIGITAL DESK 7 12 JUN, 2024 | 11:42 AM போரில் எந்த குற்றமும் செய்யாத பாடசாலை சிறுவர்கள், குழந்தைகள் குண்டு தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்து, யுத்தம் முடிவுக்கு வந்து இவ்வளவு ஆண்டுகளாகியும் நீங்கள் எல்லோரும் இணைந்து இன்னமும் இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்க முடியவில்லையே என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்கவிடம் சைவ சமயத் தலைவர்கள் ஆதங்கத்தை வெளியிட்டனர். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை (11) மாலை ஏழு மணிக்கு நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்திற்குச் சென்று சந்திப்பில் ஈடுபட்டனர். சந்திப்பில் நல்…

  4. Published By: DIGITAL DESK 3 12 JUN, 2024 | 10:36 AM எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள், நாட்டின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்குமே அன்றி தனிப்பட்ட வெற்றி, தோல்வியாக அமையாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பொருளாதார சீர்த்திருத்த துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்து கொள்ளும் இளைஞர் பிரதிநிதிகளுடன் பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் நடைபெற்ற கொள்கை சீர்திருத்தம் தொடர்பான கருத்தாடலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/185886

  5. இலங்கையின் கடன் திட்டம் தொடர்பான இரண்டாவது மீளாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை இன்று (12) கலந்துரையாடவுள்ளது. இந்த நிறைவேற்று சபை கூட்டத்தில், 2024 ஆம் ஆண்டுக்கான 4வது பிரிவின் கீழ் ஆலோசனை நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறையின் பணிப்பாளர் ஜூலி கோசெக், சமீபத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இலங்கை கடன் மறுசீரமைப்பில் போதுமான மற்றும் வலுவான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக அவர் மேலும் கூறினார். கடன் திட்டத்தின் தரத்திற்கு ஏற்ப வெளி வணிகக் கடன் வழங்குநர்களுடன் இலங்கை விரைவில் ஒரு உடன்பாட்டை எட்டிவிடும் என்று தான் மிகவும் எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்தார். மேலும்,…

  6. Published By: DIGITAL DESK 3 12 JUN, 2024 | 10:26 AM யாழ்ப்பாணம் அனலைதீவிலிருந்து நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (10) கடற்றொழிலுக்குச் சென்ற இருவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமரசிங்கம் மற்றும் கேதீஸ்வரன் ஆகிய இருவரையே காணவில்லை. இது தொடர்பில் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது. காணாமல் போனோரை கடலில் தேடும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/185885

  7. இந்த வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அத்துடன் 2025ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை (2025) செப்டெம்பர் மாதம் நடத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிள்ளைகளின் நேரத்தை வீணடிப்பதைத் தடுக்க பரீட்சை நிறைவடைந்தவுடன் உயர்தரக் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்து, பல்கலைக்கழக நுழைவை விரைவுபடுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். https://t…

  8. 12 JUN, 2024 | 11:24 AM ஈச்சிலம்பற்று முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை கொண்டுசென்ற அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டு 38 வருடங்களாகியும் நீதி கிடைக்கவில்லையென படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள். திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உலர் உணவுப்பொருட்களை சேருவில பகுதியில் இருந்து ஈச்சிலம்பற்று நோக்கி கொண்டுசென்ற போது மகிந்தபுர பகுதியில் வைத்து மூன்று அரச அதிகாரிகள் உட்பட 21பேர் படுகொலை செய்யப்பட்ட வெருகல் படுகொலையின் 38வது நினைவுதினம் இன்று புதன்கிழமை (12) அனுஷ்டிக்கப்படுகின்றது. அன்று நாட்டில் நி…

  9. 11 JUN, 2024 | 05:37 PM திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு, சேனையூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள நெல்லிக்குளம் மலைத் தொடரின் பாறைகளை உடைப்பதற்கு சனிக்கிழமை (08) பாறை உடைப்பு இயந்திரத்துடன் மலை உடைப்பு வேலைகளை ஆரம்பிக்க முயன்ற போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக மலை உடைப்பு வேலைகள் நிறுத்தப்பட்டன. ஆனால் இன்று (11) செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணிக்கு மீண்டும் மலை உடைப்பு வேலைகளை ஆரம்பித்த போது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாறை உடைப்பு இயந்திரம் வேலைகளை ஆரம்பித்த போது அப்பகுதி மக்கள் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று எதிர்ப்பை தெரிவித்து மலை உடைப்பு வேலைகளை தடுத்து நிறுத்தினர். …

  10. 11 JUN, 2024 | 07:11 PM மன்னர் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணங்களுக்கான மையத்தின் ஒரு குழு, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பல பிராந்தியங்களில் விநியோகிப்பதற்கான 300 தொன் பேரீச்சம்பழங்களை உலக உணவுத் திட்டத்திடம் இன்று, செவ்வாய்கிழமை (11), கையளித்தது. இலங்கை குடியரசிற்க்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி மற்றும் இலங்கையில் உள்ள சர்வதேச உணவுத் திட்டத்தின் துணைப் பணிப்பாளர்/ ஜெரார்ட் ரெபெல்லோ மற்றும் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணங்களுக்கான மையத்தின் பணிப்பாளர் இப்ராஹிம் பின் அப்துல்லா அல்-கலாஃப் போன்றோர் இந் நிகழ்வில் பங்கேற்றனர் . உலக உணவுத் திட்டமானது இப்பேரீத்தம் பழங்களை 200,…

  11. 11 JUN, 2024 | 07:08 PM வவுனியா கதிர்வேலர் பூவரசங்குளத்தில் காணிகள் எல்லையிட்டு அளவீடு செய்வதற்காக வருகை தந்த வனவள திணைக்கள அதிகாரிகளை பொதுமக்கள் திருப்பி அனுப்பிய சம்பவம் ஒன்று இன்று இடம் பெற்றுள்ளது. 1997 ஆம் ஆண்டு கதிர்வேலர் பூவரசங்குளத்திலிருந்து யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த மக்கள் மீண்டும் 2011 ஆம் ஆண்டு குறித்த பகுதியில் மீள்குடியேறியிருந்தனர். அவர்கள் வசித்த பிரதேசம் அனைத்தும் பற்றை காடுகள் நிறைந்ததாக காணப்பட்ட நிலையில் அவர்கள் குறித்த பகுதியை துப்புரவு செய்து விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குறித்த பகுதியில் வன வளத்திற்குரிய காணிகள் இருப்பதாக தெரிவித்து வனவள திணைக்களத்தினர் இன்ற…

  12. 11 JUN, 2024 | 05:35 PM யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, துன்னாலைப் பகுதியில் சட்டவிரோத இயங்கி வந்த மாடு வெட்டும் கொல்களமொன்றை சவகச்சேரிப் பொலிஸார் முற்றுகையிட்டதுடன் இறைச்சியாக்கப்படவிருந்த கன்றுத்தாச்சி மாடு உட்பட மூன்று பசு மாடுகளை மீட்டுள்ளனர் . இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்றுள்ளதுடன் மாடுகளை கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பொலிஸார் மீட்டுள்ளதுடன், நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுவில் பிரதேசத்தில் அண்மையில் வளர்ப்பு மாடுகள் திருடப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நீண்ட தேடுதலுக்கு பின்னர் பொலிஸார் குறித்த சட்டவிரோதமாக இயங்கி …

  13. 11 JUN, 2024 | 03:05 PM யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனமும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலாலி இராணுவ முகாமை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த, இராணுவத்தினருக்கு சொந்தமான பௌசர் வாகனம், புன்னாலைக்கட்டுவன் பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது. அதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.vir…

  14. Published By: DIGITAL DESK 3 11 JUN, 2024 | 02:00 PM தேசிய மக்கள் சக்தியினருக்கும் தமிழ் அரசுக் கட்சியினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை யாழில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்துள்ள அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் மாவை சேனாதிராசா தலைமையிலான தமிழ் அரசுக் கட்சியினரை சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியிலுள்ள தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை இச் சந்திப்பு இடம்பெற்றது. இதன் போது பிரதானமாக ஜனாதிபதித் தேர்தல் உட்பட சமகால அரசியல் நிலைமைகள் பற்றி கலந்துரையாடப்பட்டன. இச் சந்திப்பில் தமிழ் அரசுக் கட்சி சார்பி…

  15. 11 JUN, 2024 | 12:58 PM கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இந்திராபுரம் பிரதான வீதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையினை பாதுகாப்பான ரயில் கடவையாக புனரமைத்துத் தருமாறு கோரி பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று செவ்வாய்க்கிழமை காலை (11) முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீள் குடியேற்ற கிராமமான முகமாலை இந்திராபுரம் மக்கள் கடந்த 2000 ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் தமது சொந்த இடங்களில் குடியேறியுள்ளனர் . இந்த நிலையில் குறித்த பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையானது இதுவரை புன…

  16. 11 JUN, 2024 | 01:11 PM யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை, துணைவி பகுதியில், வாள் வெட்டுக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை (10) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் வன்முறை கும்பல் இந்த வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு தப்பி சென்றுள்ளனர். வாள் வெட்டு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/185812

  17. 11 JUN, 2024 | 03:24 PM மட்டக்களப்பு வீதி தளங்குடா பிரதேசத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோன் பயணித்த வாகனம் வீதியை விட்டு விலகி மின்சார தூணில் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (11) அதிகாலை 2.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிவமோகன் உள்ளிட்ட 3 பேர் சம்பவதினமான இன்று செவ்வாய்க்கிழமை (11) அதிகாலை பொத்துவில் அறுகம்பையில் இருந்து வவுனியா நோக்கி வாகனத்தில் பயணித்துள்ளனர். இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்…

  18. 13வது திருத்தம் தொடர்பில் சஜித்தின் கருத்து! தாம் ஆட்சிக்கு வந்தவுடன் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சி – பாரதிபுரம் மகாவித்தியாலயத்தில் பிரபஞ்சம் நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக வகுப்பறை திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் தெரிவித்தார். அதன்படி நீங்கள் சிங்களவராக இருந்தாலும், தமிழராக இருந்தாலும், முஸ்லிம்களாக இருந்தாலும், பேகராக இருந்தாலும் ஒரு தாயின் பிள்ளைகளாக கைகோர்த்து நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைய வேண்டும். இதேவேளை 13வது திருத்தம் குறித்து பேசும் போது பல்வேறு தலைவர்கள் பயப்படுவதாகவும் அவர்கள் அரசியல் சந்தர்ப்பவா…

  19. Published By: VISHNU 11 JUN, 2024 | 01:35 AM யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கடந்த 8 ஆம் திகதி விடுதி இலக்கம் 7 இலக்க விடுதியில் நுழைந்து அங்கு கடமையிலிருந்த தாதிய உத்தியோகத்தரை தாக்க முற்பட்ட சம்பவத்தை கண்டித்து மதியம் 12 மணி முதல் ஒரு மணிவரையன தமதி உணவு வேளையில். வைத்தியசாலையின் தாதிய உத்தியோகஸ்தர்கள் சிற்றூழியர்கள், தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். உத்தியோகத்தர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்து, ஆயுதம் தாங்கிய பொலிசாரை கடமையில் ஈடுபடுத்து, சம்மந்தப்பட்ட குற்றவாளியை கைது செய், போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த போராட்டம் முன்னெட…

  20. Published By: VISHNU 11 JUN, 2024 | 01:29 AM அராலி வடக்கு பகுதியில் 10ஆம் திகதி திங்கட்கிழமை இளம் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்துத் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சிவகரன் மயூரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் தந்தையும், அண்ணாவும் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அவர் இன்று இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார். சடலம் மீதான பிரேதப் பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/185792

  21. Published By: VISHNU 10 JUN, 2024 | 08:44 PM யாழ்ப்பாணத்திற்கு விஐயம் மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தலைமையிலான குழுவினர் இன்று திங்கட்கிழமை தமிழரசு கட்சியினரை சந்தித்தனர். இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் குறித்த சந்திப்பு திங்கட்கிழமை (10) இரவு இடம்பெற்றுள்ளது. கட்சி தலைவர் மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் மற்றும் கட்சியின் சிரேஸ்ட தலைவர் சிவிகே சிவஞானம், நிர்வாக செயலாளர் குலநாயகம் ஆகியருடன் எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தலைமையிலான குழுவினர் சந்திப்பை மேற்கொண்டனர். https://www.virakesari.lk/article/185789

  22. 10 JUN, 2024 | 12:49 PM தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு நாம் இறங்கி செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்ற மக்கள் மன்றம் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். சமஸ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வு தான் வேண்டும் என்பதனை இனியும் நிறுவ தேவையில்லை. கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்னரே நிறுவி விட்டோம். திரும்ப திரும்ப அதனை நிறுவ தேவையில்லை. பொது வேட்பாளர் என்பது விஷ பரீட்சை என சொல்வதனை விட உதவாத விஷ பரீட்சை என்று கூட சொல்ல முடியாது. இது தமிழ் மக்களின் இருப்பை இல்லாது செய்யும் …

  23. 10 JUN, 2024 | 04:58 PM மக்களவைத்தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்காத காரணத்தால் தான் அதிமுக தோல்வி தழுவியதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். மதுரையில் மதுரை 293 ஆவது ஆதீனமான ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “இந்தியாவின் 3 ஆம் முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடிக்கும், அமைச்சர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களே கொன்று குவிக்க காரணமானவர்களும் வெற்றி பெற்று விட்டார்களே என மன வருத்தம் உள்ளது. இந்த காரணத்திற்காகவே காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆள முடியவில்லை, வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இரண்டு கோரிக்கை…

  24. 10 JUN, 2024 | 07:00 PM (எம்.நியூட்டன்) மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர்களின் 38ஆவது ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணம் குருநகரில் உயிரிழந்த மீனவர்களின் நினைவுத்தூபி அமைவிடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்கள், மதகுருமார்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு கொல்லப்பட்ட மீனவர்களுக்காக வழிபாடுகளில் ஈடுபட்டு, அஞ்சலி செலுத்தினர். 1986ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10ஆம் திகதி குருநகர், இறங்குதுறையில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர்கள் 31 பேரும் மண்டைதீவு கடலில் வைத்து கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டனர். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.