Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 15 APR, 2024 | 04:46 PM இ.போ.ச மற்றும் தனியார் இணைந்த பேருந்து சேவையை முன்னெடுப்பதில் இருந்துவரும் இழுபறி நிலையையடுத்து, யாழ். நீண்ட தூர தனியார் பேருந்து சேவையில் ஈடுபட்டுவரும் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கான முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாமையால் எழுந்த பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டை அடுத்து பரீட்சார்த்த அடிப்படையில் சேவைகளை நடத்துவது என சுமுகமான தீர்வு காணப்பட்டுள்ளது. முன்பாக முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாமையை கண்டித்து உள்ளூர் மற்றும் நீண்ட தூர தனியார் பேருந்து சாரதிகள், நடத்துநர்கள் யாழ். மத்திய பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தனர். இந்நிலையில், தனி…

  2. இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கை ரூபாய் (LKR) உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயமாக மாறியுள்ளது. இது ஆண்டின் தொடக்கத்தில் இருந்த பெறுமதியுடன் ஒப்பிடுகையில் 7மூ க்கும் அதிகமான வளர்ச்சியென Bloomberg சந்தை தரவு குறிகாட்டிகள் சுட்டிக்காட்டுகின்றன. ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. https://athavannews.com/2024/1377990

  3. 15 APR, 2024 | 03:50 PM யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) போதையில் குழப்பங்களை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தாண்டு தினத்தை முன்னிட்டு , யாழ்.பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இசைநிகழ்வில் போதையில் , குழப்பங்களை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்டதாக கூறப்படும் வன்முறை கும்பலைச் சேர்ந்த 7 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் விசாரணைகளின் பின்னர் சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி மருத்துவ பரிசோதனையை மேற்கொண்ட பின்னர் யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழில் போதையில் குழப்பங்களை ஏற்படுத்தி…

  4. 15 APR, 2024 | 05:32 PM கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து சிலாபம் நோக்கிப் பயணிக்கவிருந்த ரயில், கோட்டை ரயில் நிலையத்தின் முதலாவது மேடையில் நிறுத்த முயற்சித்தபோது அங்கிருந்த தடுப்பையும் ரயில் மேடையையும் உடைத்துக் கொண்டு சென்று நின்றதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (15) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் முதலாம் பயண மேடையின் ஒரு பகுதியும் தடுப்பும் ரயில் எஞ்ஜினின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரயில் சேவைகளில் பாதிப்பி…

  5. 15 APR, 2024 | 11:47 AM யாழ்ப்பாணம் – சாவகச்சேரி கச்சாய் வீதியில் அமைந்துள்ள மகிழங்கேணி சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு சிறுவர்களும் அவர்களது தாத்தாவும் காயமடைந்துள்ளனர். புதுவருட தினமான நேற்றைய தினம் (14) இரவு சாவகச்சேரி பகுதியிலிருந்து தனது இரண்டு பேரப் பிள்ளைகளை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற தாத்தா, மகிழங்கேணி பகுதியில் மோட்டார் சைக்கிளை திருப்ப முற்பட்டபோது, பின்பக்கமாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் காயமடைந்த இரு குழந்தைகள் மற்றும் வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற அவர்களது தாத்தா என மூன்று பேரும் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்…

  6. http://athavannews.com/wp-content/uploads/2024/01/1572229620-dead-body-2-650x375.jpg யாழில் மீண்டும் கொரோனா! ஒருவர் உயிரிழப்பு. யாழ் மாவட்டத்தில் நீண்ட நாட்களின் பின்னர் கொரோனாத் தொற்றுக் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸ் நாட்டிலிருந்து ஆயுர்வேத சிகிச்சையைப் பெறுவதற்காக வருகை வந்த 62 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் வட்டுக்கோட்டை அராலியில் தங்கியிருந்த நிலையில் காய்ச்சல் காரணமாக இரண்டு நாட்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். உயிரிழப்பின் பின் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று…

  7. Published By: VISHNU 14 APR, 2024 | 05:45 PM சித்திரை புதுவருடத்தினமான ஞாயிற்றுக்கிழமை (14) வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொண்டுவரும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவிக்கையில்…. காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்க் குழந்தைகளைக் கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களைக் காப்பாற்ற, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியைப் பெறுவதற்காக 2611வது நாளாக நாம் போராடிவருகின்றோம். அமெரிக்காவில் உள்ள புலம்பெ…

  8. வெடுக்குநாறியில் அடாவடியில் ஈடுபட்ட சிவசேனை. சிவசேனையின் அடாவடி தனத்தால் வெட்டுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாக குழு கூட்டம் இடைநடுவில் இரத்து செய்யப்பட்டுள்ளது. வெட்டுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாகக்குழு கூட்டம் இன்றைய தினம் ஒலுமடு பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. அதன் போது கூட்டத்திற்கு அழையா விருந்தாளிகளாக சிவசேனை அமைப்பின் மறவன்புலவு சச்சிதானந்தன் தலைமையிலான குழு வருகை தந்து கிறிஸ்தவர்களுக்கு எதிரான கருத்துக்களை கூட்டத்தில் முன் வைத்து குழப்பங்களை ஏற்படுத்தினர். அதன் போது, வெட்டுக்குநாறியில் சிவராத்திரி தினத்தன்று பொலிஸார் அடாவடியில் ஈடுபடும் போது , நீங்கள் எங்கே சென்றீர்கள் ? ஆலய பூசாரி உள்ளிட்ட 08 பேரை கைது செய்து …

      • Confused
      • Like
      • Haha
      • Thanks
    • 33 replies
    • 2.2k views
  9. யாழ். நகரின் தூய்மை குறித்து அவதானம் : கள விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ். யாழ். நகரத்தின் சுகாதார நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவற்றை தூய்மையாக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளார். புது வருடப் பிறப்பு தினமான இன்று காலை யாழ். நகரத்தில் கண்காணிப்பு விஜயம் ஒன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார். இதன்போது, யாழ். நகரின் மையப்பகுதி மற்றும் புதிய மாநகரசபை கட்டட வளாகம் அதனை அண்டிய சுற்றுவட்டத்தின் நீர் வடிந்தோடும் வடிகால்கள் உள்ளிட்டவற்றை அமைச்சர் பார்வையிட்டுள்ளார். இதனையடுத்து, அவற்றை தூய்மையாக்குவது குறித்து அமைச்சர் அவதானம் செலுத்தியதாக குறிப்பிடத்தக்கது. யாழ். நகரின் தூய்மை பர…

  10. தமிழ் – சிங்கள புத்தாண்டு : அமெரிக்க ஜனாதிபதியின் வாழ்த்து! தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது X தளத்தில் அவர் இந்த, வாழ்த்தினை வௌியிட்டுள்ளார். இந்தச் சிறப்பான நிகழ்வைக் கொண்டாடும் உலகில் உள்ள அனைவருக்கும் தானும் தன் மனைவியும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1378019

  11. புதிய ஆண்டில் 'ஒரு நாடு' என்ற அடிப்படையிலான முன்னேற்றத்துக்கு காரணம் சமூக உறவுகளும் ஒற்றுமையுமே - ஜனாதிபதி 10 APR, 2024 | 05:09 PM புதிய ஆண்டில் 'ஒரு நாடு' என்ற வகையில் சரியான வழியில் முன்னேறுவதற்கு சமூக உறவுகளும் ஒற்றுமையுமே அடிப்படைக் காரணிகளாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவிப்பதாவது : புதுப்பித்தல் வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கை தரும். புதுப்பிப்புக்களின் அடிப்படையிலேயே நாடு, உலகம் முன்னேற முடியும். புதிய சிந்தனைகளினாலேயே புத்தாக்கம் பிறக்கும். புதிய வர…

  12. புத்தாண்டு காலத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் பேருந்து சாரதிகள் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் செயற்பாட்டில் இருக்கும் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. புத்தாண்டு காலத்தில் பேருந்துகளின் மூலம் ஏற்படும் விபத்துக்களை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. குறித்த அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்…

  13. 13 APR, 2024 | 07:50 PM மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான வெயிலுடனான காலநிலை நீங்கி மழைபெய்துவரும் நிலையில் மக்கள் குடியிருப்புகளை நோக்கி முதலைகள் வரும் சாத்தியம் இருப்பதால் மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட மக்கள் அதிகளவாக வாழும் கூழாவடி பகுதிக்குள் நுழைந்த முதலையொன்று மக்களினால் பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்குள் நீர்நிலைகள் இல்லாதபோதிலும் முதலையொன்று மக்கள் பகுதிக்குள் நுழைந்ததனால் பெரும் பதற்ற நிலைமையேற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அதனை அப்பகுதியை சேர்ந்த மக்கள் பிடித்து அது தொடர்பான தகவல்கள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு…

  14. நாட்டில் உள்ள சிறைக் கைதிகள் 779 பேருக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். ஜனாதிபதியின் தீர்மானம் தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு குறித்த 779 பேருக்கும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய ஜனாதிபதியால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. அரசியலமைப்பின் 34(1) பிரிவிற்கமைவாக ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது. https://tamilwin.com/article/many-prisoners-were-released-1712671291

  15. Published By: VISHNU 12 APR, 2024 | 06:38 AM ஆர்.ராம் உள்நாட்டில் நீண்டகாலமாக அரசியலில் புரையோடிப்போயிருக்கின்ற சிங்கள, பௌத்த தேசிய இனவாதத்தினை களைவதற்கு பொருத்தமான தருணம் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழ் தரப்புக்கள் பிரதான போட்டியாளர்களான சஜித், அநுரவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்று இராஜதந்திரியான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழர்களின் அரசியல் போக்கு அவரோணகத்தில் சென்றுகொண்டிருக்கையில், தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துகின்ற முயற்சியானது பொருத்தமான வியூகமாக அமையப்போவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு, கிழக்கை தளமாகக் கொண்டு செயற்படும் தமிழ் அரசியல் கட்சிகள் எதிர்வரும் ஜன…

  16. சுமந்திரனை அவமதித்தது விரும்பத்தகாத செயல் : அமைச்சர் டக்ளஸ் கருத்து. ஜே.வி.பியின் மாநாட்டுக்கு அழையா விருந்தாளியாக சுமந்திரன் வந்திருந்தார் எனக் கூறி சுமந்திரனை அவமதித்தது விரும்பத்தகாத செயல் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள தனது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் கேட்டதற்கு பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். அண்மையில் ஜே.வி.பி கட்சி தனது கட்சி மாநாடொன்றை யாழ்ப்பாணத்தில் நடத்தியிருந்தது. இந்த மாநாட்டுக்கு அழைப்பு விடுக்காமல் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் சென்றதாக ஜேவிபியின் பேச்சாளர் எனக் கூறுபவர் ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தமையை சுட…

    • 1 reply
    • 444 views
  17. (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளமை பௌத்தர்களுக்கு மனவேதனையளிக்குமாக இருந்தால் அது இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தி நாட்டில் தேவையில்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்கும் ஆகவே அவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (01) இடம்பெற்ற ஆயுர்வேத சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக நான் பேசவில்லை. இருப்பினும் உ…

  18. Published By: DIGITAL DESK 7 11 APR, 2024 | 05:11 PM (நா.தனுஜா) அண்மையில் இலங்கைக்கு வருகைத்தந்திருந்த சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் ஆய்வாளர் அலன் கீனன், வெடுக்குநாறிமலை மற்றும் குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் விசேடமாக ஆராய்ந்ததாகவும், அதுபற்றிய அறிக்கையொன்றை வெளியிடுவதற்கு அவர் எதிர்பார்த்திருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது. வவுனியா மாவட்டத்தின் வெடுக்குநாறிமலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று (மார்ச் 8 ஆம் திகதி) பூஜை வழிபாடுகளில் ஈடுபடச்சென்ற பக்தர்களுக்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டதுடன், இரவு வேளையில் அங்கு வழிபாடுகளைத் தொடர முற்பட்டோர் அங்கிருந்த…

  19. மியன்மார் அடிமை முகாமிலிருந்து 8 இலங்கையர்கள் மீட்பு - விரைவில் நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை Rizwan Segu MohideenApril 12, 2024 – IT தொழில் என கூறி இணைய மோசடியில் மியன்மாரின் மியாவாடி பகுதியில் உள்ள சைபர் கிரைம் அடிமை முகாம்களில் இருந்து மீட்கப்பட்ட எட்டு இலங்கையர்கள், தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகத்தை பாதுகாப்பாக வந்தடைந்துள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என தாய்லாந்திற்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார். மியாவாடியில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் சிக்கியிருந்த 56 இலங்கையர்களில் எட்டு பேர் மியன்மார் அரசாங்க அதிகாரிகளால் மார்ச் மாத தொடக்கத…

  20. Published By: DIGITAL DESK 3 05 APR, 2024 | 05:05 PM கிளிநொச்சி பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற அமைச்சர் டக்ளஸ் மக்களின் எதிர்ப்பால் திரும்பினார். குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (05) பகல் இடம்பெற்றுள்ளது. பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர். கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னாவெளி பகுதியில் சீமெந்து தொழிற்சாலைக்கான சுன்னக்கற்களை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்றைய தினம் அமைச்சர் குறித்த தொழிற்சாலையை ஆரம்பித்து வைக்க நடவடிக்…

  21. பிறப்புரிமையான சுதந்திரத்தை எவரும் எழுதித்தர வேண்டியதில்லை! யாழ். பல்கலை துணைவேந்தர் தெரிவிப்பு: சுதந்திரம் எங்களது பிறப்புரிமை. அதை இன்னொருவர் எமக்கு எழுதித் தரவேண்டிய அவசியமில்லை. அதை இன்னொருவர் பறிக்கவும் முடியாது. இவ்வாறு தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறையின் அரசறிவியல் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அரசறிவியலாளன் இதழ் 6 நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- சுதந்திரக் காற்றை நீங்களாகச் சுவாசிக்க முடியாது. முன்னெடுப்புகள் இல்லாமல் எதையும் சாதித்து விடமுடியாது. …

  22. 11 APR, 2024 | 03:53 PM எழுத்தாளர் தீபச்செல்வனை பயங்கரவாத விசாரணை பிரிவினர் இன்று விசாரணைக்குஉட்படுத்தியுள்ளனர். ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நா. யோகேந்திரநாதனின் நாவல் வெளியீட்டு நிகழ்வை நடாத்தியமைக்காகவே இவ்வாறு விசாரணை இடம்பெற்றது. புத்தகம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்கும் நோக்கில் எழுதப்பட்டதா என்றும் விசாரணையின் போது கேட்கப்பட்டது. இதேவேளை குறித்த புத்தகத்தின் வெளியீட்டு விழாவை நீங்கள் ஏன் நடத்தீனர்கள் என்று கேட்டார்கள். கிளிநொச்சியின் மூத்த எழுத்தளார் நா. யோகேந்திரநாதனை மதிப்பளிப்பு செய்யும் நோக்கிலேயே வெளியீட்டு விழாவை நடாத்தியதாக கூறினேன். இன்று காலை 11மணிக்கு ஆரம்பிக்கப்பட…

  23. Published By: DIGITAL DESK 7 11 APR, 2024 | 04:29 PM முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் இன்று வட மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இச்சந்திப்பில் காணி உரிமையாளர்கள் சிலர் (6 பேர்) கலந்து கொண்டனர். முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக்கோரி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அந்தவகையில் இன்றையதினம் இவ்வாறு ஆளுநரைச் சந்தித்தனர். தமது பிரச்சினைகள் குறித்து ஆராய்வதாக ஆளுநர் தெரிவித்ததாக குறிப்…

  24. இலங்கை போன்ற நட்பு நாடுகளுக்கு, நவீன ஆயுதங்களை வழங்க புதுடில்லி தயாராக உள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற இந்திய, இலங்கை பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இலங்கை, இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடு மற்றும் அண்டைய நாடு என்ற அடிப்படையில், இந்த ஒத்துழைப்புக்களை வழங்க இந்தியா முன்வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/298808

  25. பசுமை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்களை பிரபலப்படுத்துதல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டு சீனாவுடன் இணைந்து இலங்கை, ஆய்வகம் ஒன்றை நிறுவுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, கிருமிநாசினி பாவனையை குறைத்தல், தேயிலை தோட்டத்திற்கான உயிரியல் கட்டுப்பாட்டு தொழில்நுட்பம், தேயிலை கிருமிநாசினி எச்சங்களை இலக்காகக் கொண்ட இடர் கண்காணிப்பு ஆகியவற்றைக் கொண்டு அந்த ஆய்வகம் நிறுவப்படவுள்ளதாக சீன ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த முயற்சிகளின் மூலம், தேயிலை பயிர்ச்செய்கையில் சிறந்த விளைச்சளைப் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. https://thinakkural.lk/article/298791

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.