ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143411 topics in this forum
-
தமிழர்கள் வன்னியில் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்படும் போது அமைதியாக இருந்த முஸ்லிம்கள் இன்று தம் நபிகள் பற்றி நேர்மையாக படம் எடுத்ததை எதிர்த்து இலங்கையில் ஆடும் ஆட்டங்களின் தொகுப்பு: ------------------------- கல்குடாவில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு By General 2012-09-21 20:23:15 படங்கள் எம்.ரீ.எம்.பாரிஸ் முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட அமெரிக்க திரைப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையை தொடர்ந்து கல்குடாவில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கல்குடா தொகுதியிலுள்ள அனைத்து ஜூம் ஆ பள்ளிவாயல்களிலிந்தும் பேரனியாகச் சென்…
-
- 6 replies
- 700 views
-
-
ஆழமாக்கப்படுகிறது புல்லுக்குளம் யாழ். நகரப் பகுதியில் அமைந்துள்ள புல்லுக்குளத்தை ஆழமாக்கும் பணிகள் மிகவும் துரித கதியில் இடம்பெற்று வருகின்றது. யாழ் குடாநாட்டில் கரும வரட்சி நிலவி வருகின்றதனால் புல்லுக் குளமானது நீர்வற்றி காணப்பட்டது எனிவரும் காலப்பகுதி மழைகாலம் என்பதால் இதனை ஆழமாக்கும் பணிகள் மிகவும் விரைவாக இடம் பெற்று வருகின்றது. http://onlineuthayan.com/News_More.php?id=172511450222507216
-
- 0 replies
- 798 views
-
-
வீட்டில் இருந்த 12 ஆயிரம் ரூபா பணத்தை எடுத்துக் கொண்டு திருகோணமலை செல்லும் பஸ்ஸில் பயணிக்க முயன்ற 10, 11 வயதை உடைய சிறுவர்கள் மூவர் அங்கிருந்தவர்களால் பிடிக்கப்பட்டு யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் முற்றவெளியில் உள்ள யாழ்.தனியார் பஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. பெற்றோருக்குத் தெரியாமலே இந்தச் சிறுவர்கள் மூவரும் இந்தச் செயலில் ஈடுபட்டதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது: வண்ணார்பண்ணையைச் சேர்ந்த இந்த மூன்று சிறுவர்களும் அந்தப் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயில்கின்றனர். இவர்களில் இருவர் சகோதரர்கள், மற்றவர் அயல் வீட்டைச் சேர்ந்தவர். …
-
- 0 replies
- 669 views
-
-
பேருவளையில் படகு கவிழ்ந்து ஐவர் உயிரிழப்பு பேருவளை வெளிச்ச வீட்டுக்கு நபர்களை ஏற்றிச் சென்ற படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று மாலை நிகழ்ந்ததாகக் கூறப்படும் இவ் விபத்தில் உயிரிழந்த ஐவரில் நால்வர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://onlineuthayan.com/News_More.php?id=539411451122524860
-
- 0 replies
- 362 views
-
-
இலங்கையுடனான நட்புறவை சிறு சிறு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்கப்படமாட்டாதென்றும் அந்த நட்புறவை உரிய மட்டத்தில் உறுதி செய்ய வேண்டுமென்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார தொடர்புகளை போன்று பாதுகாப்பு நடவடிக்கைளும் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவிற்கான மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு அங்கு சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் வியாழக்கிழமை இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங்கை உத்தியோக பூர்வமாக சந்தித்து பேசிய போதே இந்தியப் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது. ஜனாதிபதியின் இந்திய விஜயம் தொடர்பாக ஜனாத…
-
- 0 replies
- 487 views
-
-
மக்கள் தமது மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக ஜனநாயக வழியில் கூட போராட முடியாத ஓர் நிலையையே இந்த அரசாங்கம் தோற்றுவித்திருக்கின்றது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்திருக்கின்றார். அதேவேளை நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை கண்டித்து முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை குழப்பும் முகமாக கழிவுப்பொருட்களை வீசியிருக்கின்றமையானது மனித நாகரிகமற்ற ஓர் செயல் எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார். முல்லைத்தீவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமைதி வழிப்போராட்டம் குழப்பியடிக்கப்பட்டிருப்பது தொடர்பில் கேட்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, நாட்டின் வடக்…
-
- 0 replies
- 336 views
-
-
வடமத்திய மாகாணத்தில் 22 ஆயிரம் சிறுநீரக நோயாளிகள் 5 வருடங்களில் பலி வடமத்திய மாகாணத்தில் ஐந்து வருடங்களில் 22 ஆயிரம் பேர் சிறுநீரக நோயினால் பலியாகியுள்ளனர். இன்னும் 18 ஆயிரம் பேர் வைத்தியசாலையில் இந்நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் என்று ஐ.தே.க. எம்.பி.யான பி.ஹரிசன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது அவர் எழுப்பிய கேள்விக்கு உள்ளூராட்சி மாகாணசபைகள் பிரதியமைச்சர் இந்திக்க பண்டார அளித்த பதிலையடுத்து தெரிவிக்கும் போதே ஹரிசன் எம்.பி.தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், வடமத்திய மாகாண சபையினது சிறுநீரக நோயாளிகளுக்கு இலவசமாக பகிர்ந்தளிப்பதற்காக தரக்குறைவான நீர் வடிகட்டும் ச…
-
- 0 replies
- 427 views
-
-
இன்று நடைபெறவிருக்கும் “எமது நிலம் எமக்கு வேண்டும் ” மாபெரும் பொங்கு தமிழ் நிகழ்வையொட்டி நேற்று ஜெனீவா ஐக்கிய நாட்டு சபை மனிதவுரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் காரியாலயத்தில் உயரதிகாரிகளுடன் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இச் சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ் மக்கள் பிரதிநிதிகளால் பின்வரும் ஐந்து கோரிக்கைகள் அடங்கிய மனு கையளிக்கப்பட்டது. 1. பல தசாப்தங்களாக இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப் படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் அவை மார்ச், 2011 ல் வெளியிட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக சமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ் மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். 2. ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் எ…
-
- 2 replies
- 639 views
-
-
பகைமையும், வெறுப்புணர்வும் வன்முறைக்கு எம்மை இட்டு செல்வதால் சகிப்புத்தன்மையே இன்றைய தேவை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் வைத்துக் கூறியுள்ளார். இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்றுச் சென்று மத்திய பிரதேச சாஞ்சி நகரில் பெளத்த பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டி விட்டு அவர் இந்த மகத்தான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் இதை இந்தியாவில் சொல்லிக்கொண்டிருந்த அதேவேளையில் அவரது இராணுவத்தின் புலனாய்வுதுறை நபர்கள் முல்லைத்தீவில் நாம் நடத்திக்கொண்டிருந்த ஜனநாயகப் போராட்டத்தின் மீது சகிப்புத்தன்மையற்ற, வெறுப்புடன் கூடிய வன்முறைத் தாக்குதல்களை நடத்தினார்கள். இந்தக் குற்றச்சாட்டை எந்தவித ஒளிவு மறைவு இல்லாமல் பொறுப்புடன் நான் முன் வைக்கின்றேன். என்னுடன்…
-
- 1 reply
- 356 views
-
-
அமெரிக்காவின் கடலோரக் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த உயர்மட்டக் குழுவொன்று அடுத்த மாதம் சிறிலங்கா வரவுள்ளது. இதனை சிறிலங்காவின் கடலோர பாதுகாப்புத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. சிறிலங்காவின் கடலோரப் பாதுகாப்பை ஸ்திரப்படுத்தும் பொருட்டு உள்ளுர் அதிகாரிகளுக்குப் பயிற்சிகளை வழங்கவே இவர்கள் இங்கு வருவதாகவும் இந்தப் பயிற்சிகள் திருகோணமலை கடற்பரப்பில் இடம்பெறும் எனவும் சிறிலங்காவின் கடலோரப் பாதுகாப்பு திணைக்கள் பணிப்பாளர் ரியல் அட்மிரல் ருவன் டயஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை, அண்மையில் கிழக்கு மாகாணக் கடற்பரப்பில் ஐந்து நாடுகளின் முப்படையினர் கலந்து கொண்ட பயிற்சிகள் இடம்பெற்றிருந்தமை தெரிந்ததே. இந்தப் பயிற்சியின் கண்காணிப்பாளர்களாக சீனாவும் இந்தியாவும் செயற்பட்டமை குறிப்பிடத…
-
- 1 reply
- 519 views
-
-
கைதிகள் விவகாரம் அரசு விசேட கவனம்; ஐ.நா.குழுவினரிடம் ஹக்கீம் தமிழ் சிறைக்கைதிகளுடைய விவகாரம் குறித்து விஷேட கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அரசியல் கைதிகள் தொடர்பில் விசாரணைகளைத்துரிதப் படுத்துவதற்காக அவற்றை நான்கு விசேட மேல் நீதி மன்றங்கள் மேற்கொள்ளு மெனவும் நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய,பசுபிக், மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க கிளைகளுக்குப் பொறுப்பான ஹன்னி மெகாலியைச் சந்தித்தபோதே அவர் மேற்படி கருத்தைத் தெரிவித்தார். இலங்கைக்கு வந்துள்ள இந்தக்குழுவினர் நேற்று முன்தினம் மாலை நீதிய மைச்சரை அவரது கொள்ளுப் பிட்டி இல்லத்…
-
- 1 reply
- 607 views
-
-
[size=2][/size] [size=2][size=4]பசுபிக் தீவு நாடான நவுறுவிற்கு இடமாற்றம் செய்வதற்கு மறுப்பு தெரிவித்த இலங்கையைச் சேர்ந்த 18 புகலிடகோரிக்கையாளர்கள் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவதாக அவுஸ்திரேலியா குடிவரவு அமைச்சர் கிரிஸ் போவ்ன் தெரிவித்தார். அவுஸ்திரேலியாவிற்கு புகலிடம்கோரி படகு மூலம் கிறிஸ்மஸ்தீவிற்கு பயணிப்பவர்களை நவுறு நாட்டில் வைத்து பரிசீலனை செய்வதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்தது. இந்நிலையில், தம்மை நவுறு நாட்டிற்கு அனுப்பாமல் மீண்டும் இலங்கைக்கு அனுப்புமாறு கோரிய இலங்கையர்கள் 18 பேர் இன்று சனிக்கிழமை கிறிஸ்மஸ் தீவிலிருந்து கொழும்புக்கு புறப்பட்டதாக அவுஸ்திரேலிய குடிவரதுறை அமைச்சர் போவ்ன் மேலும் கூறினார்.[/size][/size] [size=2][size…
-
- 1 reply
- 417 views
-
-
[size=4]சிங்கள அரசும், ராஜபக்சவும் விரிக்கும் வஞ்சக வலையில் விழுந்து விடாமல் இனியாவது விழித்துக் கொண்டு ஈழ தமிழர்களுக்கு வாழ்வுரிமை பெற்றுத் தரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:[/size] [size=4]தமிழகத்தில் உள்ள ஆளும் கட்சியைத் தவிர ஏனைய அனைத்துக் கட்சிகளும் இலங்கை அதிபர் ராஜபக்ச இந்தியாவிற்கு வருவது, அவருக்கு வரவேற்பு கொடுப்பது, மத்தியப் பிரதேசத்திற்கு அவர் சென்று அங்கே புத்தமதச் சம்மந்தமான மையத்தைத் திறந்து வைப்பது ஆகியவற்றை எதிர்த்து உள்ளன. ஆனால், மத்திய அரசோ, தமிழக அரசோ அதைப் பற்றி கவலைப்படாதது மாத்திரமல்ல, மத்திய அரசே ஒரு அமைச்சரை அனுப்பி வரவேற் ப…
-
- 0 replies
- 410 views
-
-
[size=3] [size=4]அரசாங்கத்தின் மும்மொழிக்கொள்கை சமூக அபிவிருத்திக்கு வழிகோலும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.[/size] [size=4]யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.[/size] [size=4]தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் பாடசாலை மாணவர்களுக்கு கற்பிக்கும் அரசாங்கத்தின் முனைப்பு வரவேற்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.[/size] [size=4]சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளை வடக்கு மாணவர்கள் கற்றுக்கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் சமூகத் n;தாடர்பாடல் மற்றம் தகவல் தொழில்நுட்ப அபிவிருத்திக்கு வழிகோலும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.[/size] …
-
- 1 reply
- 468 views
-
-
[size=3][/size] [size=3][size=4]ஈழத்தமிழர் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனப்படுகொலையினை மேற்கொண்ட மகிந்த ராசபக்சவின் இந்திய விஜயத்தினை எதிர்த்து தனது இன்னுயிரை ஆகுதியாக்கிய தோழர் விஜயராஜ் அவர்களின் கோரிக்கைக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தினை பிரித்தானியாவிலுள்ள இந்தியத் தூதரகம் முன்னிலையில் தமிழர் ஒருங்கினைப்புக்குழுவினர் ஒழுங்குசெய்திருந்தனர். இவ் ஆர்ப்பாட்டத்தில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தோழர் விஜயராஜ் அவர்களிற்கு வணக்கத்தினை செலுத்தினர்.[/size][/size] [size=3][size=4][/size] [size=4]http://www.eeladhesa...chten&Itemid=50[/size][/size]
-
- 0 replies
- 443 views
-
-
[size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென இந்திய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.அரசியல் தீர்வுத் திட்டம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் உலக சமூகத்திற்கு ஒர் நல்ல செய்தியை வெளியிட முடியும் என தெரிவித்துள்ளது.[/size] [size=4]எவ்வாறான தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து அரசாங்கம் நிகழ்ச்சி நிரலொன்றை தயாரிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.[/size] [size=4]இலங்கை ஜனாதிபதியுடன் இந்திய பிரதமர் மன் மோகன் சிங் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்த விடயங்கள்…
-
- 0 replies
- 274 views
-
-
எமது இனத்தினை சிங்கள ஆட்சியாளர்களிடம் இருந்து பாதுகாக்கவும், எமது நிலத்தினை பாதுகாக்கவும் எமது தேசத்தினை சர்வதேசம் அங்கீகரிப்பதே ஒரே வழி என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள்விடுத்துள்லார். முல்லைத்தீவில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார். அங்கு தொடந்து உரையாற்றிய அவர் கூறுகையில், ‘மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்வதற்காக இன்று போராடுகின்றார்கள். அவர்களை முகாம்களுக்குச் சென்று அச்சுறுத்தி வெளியேறவிடாமல் இராணுவம் தடுக்க முற்பட்டுள்ளது. சொந்த மண்ணுக்குச் செல்லவேண்டும் என்பதற்காக நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்கள் வந்திருக்கின்றனர். இன்று இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நில அபகரிப்பு ஒரு தனிப்பட்ட பி…
-
- 0 replies
- 366 views
-
-
யாழ் மாவட்டத்தில் வருடாந்தம் புதிதாக ஐயாயிரம் புற்றுநோயாளர்கள் இனங்காணப்படுகின்றனர்; சுகாதார அமைச்சு தகவல் யாழ் மாவட்டத்தில் வருடாந்தம் புதிதாக ஐயாயிரம் புற்றுநோயாளர்கள் இனங்காணப்படுகின்றனர் என சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இந்த நோயாளர்களுக்கு சிகிச்சை பெறுவதற்கான வசதிகளுடன் கூடிய பிரிவு வட மாகாணத்தில் இல்லாததால் அவர்கள் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு செல்ல நேரிடுவதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக தெல்லிப்பழை வைத்தியசாலையில் புதிதாக புற்றுநோய் சிகிச்சை பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்காக நிதி திரட்டும் வகையில் சுகாதார அமைச்சு, தெற்கிலிருந்து வடக்கு வரையான நடைபவனியொன்றை ஏற்பாடு செய்திருந்தது. …
-
- 0 replies
- 632 views
- 1 follower
-
-
இன்று முல்லைத் தீவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மாட்டுச் சாணம் மற்றும் கழிவு எண்ணை ஆகிய பொருட்களால் அபிசேகம் செய்யப்பட்ட காணொளி thx http://newjaffna.com
-
- 3 replies
- 953 views
-
-
[size=4]கிழக்கு மாகாண முதலமைச்சராக மீண்டும் தான் வரமுடியாது என்பதை தேர்தல் முடிவுகள் மூலம் தன்னால் உணர்ந்து கொள்ள முடிந்ததாக முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார் கிழக்கு மாகாண சபைக்கு மீண்டும் உறுப்பினராக தெரிவான இவர் ஜனாதிபதியின் ஆலோசகர்களில் ஒருவராகவும் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார் கிழக்கு மாகாணத்தின் புதிய முதலமைச்சராக நஜீப் ஏ மஜீத் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பி.பி.சி தமிழோசைக்கு கருத்து தெரிவித்த அவர் , ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனிக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் இதன் காரணமாகவே நஜீப் ஏ மஜீத் நியமி…
-
- 10 replies
- 1k views
-
-
[size=3]மாலக்க சில்வா வழக்கு: இராணுவ மேஜர் பொய் சொல்கிறாரா?[/size] [size=3][size=1][size=1][size=1][/size][/size] [size=3]இலங்கை இராணுவப் புலனாய்வு மேஜர் அதிகாரி ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்த கைத்துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களை பறிக்க முயன்றதாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கின்ற மாலக்க சில்வா குழுவினர் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணையை உடனடியாக முடித்துக்கொள்ள கொழும்பு கோட்டை நீதிமன்றம் மறுத்துவிட்டது.[/size] [size=3]அதேவேளை இராணுவ மேஜர் பொய் சொல்லியுள்ளாரா என்பதை ஆராய்ந்து, சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று, அதன்படி மேஜருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் கனிஷ்க விஜேரட்ண பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.மாலக்க சில்வாவுக்கு எதிரான முறைப்பாடு தவறானது என்றும்…
-
- 0 replies
- 434 views
-
-
[size=2][/size] [size=2][size=4]'மிச்சமிருக்கும் ஈழத் தமிழர்களையாவது காப்பாற்றுங்கள்' என மத்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். 'கை குலுக்குவது அங்கே - கழுத்தறுப்பது இங்கேயா?' என்ற தலைப்பில் இன்று அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் மத்திய அரசுக்கு இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்தக் கடித விவரம் பின்வருமாறு: "தமிழகத்திலே உள்ள ஆளுங்கட்சியைத் தவிர ஏனைய அனைத்துக் கட்சிகளும் இலங்கை அதிபர் ராஜபக்ஷ இந்தியாவிற்கு வருவதையும், அவருக்கு இங்கே வரவேற்பு கொடுப்பதையும், மத்தியப் பிரதேசத்திற்கு அவர் சென்று அங்கே புத்தமதச் சம்மந்தமான மையத்தைத் திறந்துவைப்பதையும் எதிர்த்தும்கூட, இந்திய அரசோ, தமிழக அரசோ அதைப் பற்றி கவலைப்படாதது மாத்திரமல்ல; மத்த…
-
- 2 replies
- 700 views
-
-
அமெரிக்க மண்ணில் மகிந்த இராஜபக்சவினைத் விடாது துரத்தும் கேணல் ரமேஸ் படுகொலை வழக்கு ! - மனுதாரரின் முறைப்பாட்டு மனுவினை தள்ளுபடி செய்ய நியூ யோர்க் மாவட்ட நீதிமன்றம் ! - மேன்முறையீட்டு மன்றுக்கு கொண்டு செல்கின்றோம் : வி.உருத்திரகுமாரன் - அமெரிக்க நீதித்துறையில் மாற்றங்களை ஏற்படுத்தவல்ல மனுதாரரின் வாதங்கள் : நீதிபதி அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களத்தினால் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச வழங்கப்படுகின்ற இராஜீகரீதியிலான சிறப்புரிமை தொடர்பிலான வழக்கு விசாரணையினை தள்ளுபடி செய்துள்ள நியூ யோர்க் மாவட்ட நீதிபதி றயோமி றீஸ் பூசுவர்ட் அவர்கள் அமெரிக்காவின் தற்போதய நீதித்துறையில் குறிப்பிடக்கூடிய மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய பல்வேறு வாதங்களை மனுதாரர் முன்வைத்த…
-
- 2 replies
- 623 views
-
-
[size=4]பிற மதத்தவரிடம் பகைமை, வெறுப்பை காட்டினால், அது, வன்முறையில் முடிந்து விடும்; இப்போக்கை கைவிட்டு, எல்லாரும் சகிப்புத் தன்மையுடன் இருப்பது, அமைதிக்கு வழி ஏற்படுத்தும், என, இலங்கை அதிபர் ராஜபக்ஷே கூறினார். அவரது வருகையைக் கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, கைதாகி பின், விடுதலை செய்யப்பட்டார்.மத்திய பிரதேச மாநிலம், சாஞ்சி நகரில், சாஞ்சி பல்கலைக் கழக அடிக்கல் நாட்டு விழாவில், நேற்று, இலங்கை அதிபர் ராஜபக்ஷே கலந்து கொண்டார்.[/size] [size=4]விழாவில் அவர் பேசியதாவது:[/size] [size=4]பல்கலைக் கழக அடிக்கல் நாட்டு விழாவில், கலந்து கொண்டு பேசும் இந்நாளில், சகிப்புத் தன்மையை வலியுறுத்துவது, பொருத்தமான செய்தியாக இருக்கும் என,…
-
- 3 replies
- 683 views
-
-
தமிழ் நாட்டில் ராஜபக்சேவின் வருகையை கண்டித்து பல் வேறு இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது. பல கட்சிகள் பல்வேறு வடிவங்களில் போராட்டம் செய்கின்றனர். வைகோ அவர்களின் தலைமையில் ராஜபக்சேவிற்கு கறுப்புக் கோடி காட்ட பல ஆயிரம் பேர்கள் மத்திய பிரதேசத்திற்கு சென்றுள்ளனர். இன்னும் பல தமிழ் உணர்வாளர்கள் தனித் தனியே மத்திய பிரதேசத்திற்கு சென்றுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிற வேளையில், தமிழக வாழ்வுரிமை கட்சி தங்கள் போராட்டத்தை மிகச் சிறப்பாக முன்னெடுத்துச் சென்றனர். ராஜபக்சேவிற்கு எதிராக நடைபெற்ற இந்த போராட்டத்தால் தமிழக தொடர் வண்டிகள் போக்குவரத்து தமிழகமெங்கும் முடங்கியது. சுமார் 50,000 பேர்கள் பங்குபெற்ற இப்போராட்டத்தை கட்டுப் படுத்த காவல் துறை தி…
-
- 17 replies
- 1.8k views
-