ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142578 topics in this forum
-
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழப்பு! வெலிகம பிரதேச சபை அலுவலகத்தில் இன்று காலை (22) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) உறுப்பினரும் வெலிகம பிரதேச சபையின் தலைவருமான லசந்த விக்ரமசேகர உயிரிழந்தார். வெலிகம பிரதேச சபை அலுவலகத்தில் வைத்து துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடாத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள், தவிசாளரிடம் கையொப்பம் பெற வந்ததாகக் கூறி, பிரதேச சபை வளாகத்திற்குள் பிரவேசித்துள்ளமை தெரியவந்துள்ளது. பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்ரமசேகர நாற்காலியில் அமர்ந்…
-
-
- 16 replies
- 606 views
- 1 follower
-
-
முல்லைத்தீவு ஆழிவனம் இயற்கை சுற்றுலாத்தலத்தை மேம்படுத்த ரவிகரன் கள விஜயம் 28 Oct, 2025 | 01:23 PM முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள ஆழிவனம் இயற்கை சுற்றுலாத்தளத்துக்கு நேற்று (27) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரடியாகச் சென்று, அப்பகுதியை பார்வையிட்டார். நேரடி கள விஜயம் செய்த ரவிகரன், ஆழிவனம் சுற்றுலாத்தளத்தின் மேம்பாடு தொடர்பிலும் அவ்வேளை அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இந்த கள விஜயத்தில் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் இராஜயோகினி ஜெயக்குமாரும் இணைந்துகொண்டிருந்தார். https://www.virakesari.lk/article/228887
-
- 0 replies
- 113 views
-
-
வடக்குத் திணைக்களங்களில் நேரமுகாமைத்துவம் அவசியம்; ஆளுநர் வலியுறுத்து! வடக்கு மாகாணசபைக்கு உட்பட்ட திணைக்களங்கள் அனைத்திலும், நேர முகாமைத்துவம் பின்பற்றப்படவேண்டும். திணைக்களத்தலைவர்கள் முன்னுதாரணமாகச் செயற்படவேண்டும். அத்துடன் சிறப்பாகச் செயற்படும் பணியாளர்களை ஊக்குவிக்கும்வகையில் அவர்களுக்கான கெளரவிப்புகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்களுடனான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கடந்தவாரம் இடம்பெற்றது .அதில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு திணைக்களத்தில்…
-
- 0 replies
- 137 views
-
-
ஒரு வாக்கின் சக்தியின் கதைகள்” நடைபெறும் குறும்படப் போட்டி! adminOctober 28, 2025 தேர்தல் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில்.”ஒரு வாக்கின் சக்தியின் கதைகள்” நடைபெறும் குறும்படப் போட்டி – 2025 தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட பிரதித் தேர்தல் ஆணையாளர் இ.சசீலன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையினரின் பங்கேற்புடன் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. குறும்படத்திற்கு கதை எழுதுவது எப்படி, புகைப்பட கருவி நுட்பங்கள் மற்றும் காணொளி செம்மையாக்கம், கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி குறும்படத்தை எப்படி உருவாக்குவது, செயற்கை …
-
- 0 replies
- 73 views
-
-
வடக்குக்கான புகையிரத சேவை ஒரு வார காலத்திற்கு 4 மணி நேரம் தடைப்படும்! adminOctober 28, 2025 வடமாகாண ரயில் போக்குவரத்து நாளை மறுதினம் வியாழக்கிழமை தொடக்கம் ஒரு வாரத்துக்கு பகுதியளவில் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண ரயில் தண்டவாளங்களை சீர்செய்யும் நடவடிக்கையும், வடக்கின் ரயில் மார்க்கத்தைத் தரமுயர்த்தும் செயற்பாடுகளும் ஒரு வாரத்துக்கு முன்னெடுக்கப்படவுள்ளன. இந்தக் காலப்பகுதியில் காலை 10.15 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன . இதையடுத்தே ரயில் சேவைகள் பகுதியளவில் இடைநிறுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2025/222041/
-
- 0 replies
- 58 views
-
-
27 Oct, 2025 | 06:48 PM (இராஜதுரை ஹஷான்) மக்கள் விடுதலை முன்னணி கட்சி காரியாலயத்தில் நிகழ்ச்சி நிரலை பொலிஸ்மா அதிபர் செயற்படுத்துகிறார். முழு பாதுகாப்பு கட்டமைப்பும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். கொழும்பில் திங்கட்கிழமை (27) நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் குறிப்பிடப்பட்டதாவது, பூகோள காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அரசாங்கம் தனக்கு சார்பாக பயன்படுத்திக்கொண்டது. நாட்டுக்கு சேவையாற்றிய அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அனைவரும் திருடர்கள், மோசடியாளர்கள் என்று சித்தரிக்கப்பட்டார்கள். தேச…
-
- 1 reply
- 94 views
- 1 follower
-
-
Oct 28, 2025 - 09:03 AM - வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் எந்தவொரு தரப்பினரானரும், கட்டடங்களை நிர்மாணிக்கும் போது பிரதேச சபையின் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப அனுமதிபெற்று கட்டடங்களை நிர்மாணிக்க வேண்டும் என வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைக்காலமாக பிரதேச சபையின் ஆளுகைக்குள் பல்வேறு கட்டுமாணங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. இதில் பல முறையான அனுமதி பெற்று நிர்மாண வேலைகளை முன்னெடுக்கவில்லை என தகவல்களூடாக உறுதிசெய்ய முடிகின்றது. இவ்வாறு முறையான அனுமதி பெறாது நிர்மாணிக்கப்படும் கட்டுமாணங்கள் சட்டமுறையற்ற கட்டுமாணங்கள் என்றே கருத்தில் கொள்ளப்படும். அத்துடன் அவ்…
-
- 0 replies
- 70 views
- 1 follower
-
-
27 Oct, 2025 | 06:45 PM (எம்.மனோசித்ரா) இலங்கையில் மீண்டும் இனப்பிரச்சினை ஏற்படாமலிருப்பதற்கு அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி வடக்கு, கிழக்கை வேறாக்குவதே ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கமாகும். அந்த நோக்கம் நிறைவேற்றப்படும் வரை ஒவ்வொரு ஐ.நா. கூட்டத் தொடரின் போதும் இராணுவம் உள்ளிட்ட முப்படையினர் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். அரசாங்கமும் ஐ.நா.வின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே பாடுபடுவதாக முன்னாள் கடற்படை அதிகாரி ஓய்வு பெற்ற ரியர் அத்மிரல் டி.கே.பி.தசநாயக்க தெரிவித்தார். ஐ.நா.வில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான பழிவாங்கல் தொடர்பில் கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (26) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத்…
-
- 0 replies
- 44 views
- 1 follower
-
-
யாழில் 11 பேரின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை… October 27, 2025 யாழில் வாள்வெட்டு மற்றும் போதைப்பொருள் கடத்தல் என்பவற்றுடன் தொடர்புபட்டு, சட்டவிரோதமாகவும், முறைகேடாகவும் சொத்துச் சேர்த்த சந்தேகத்தில் இதுவரை 11 பேருக்கு எதிராக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக யாழ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.பி.எஸ்.ஜெயமஹா தெரிவித்துள்ளார். இது தொடர்பிலான கருத்துகளை ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது, “போதைப்பொருள் கடத்தல், வன்முறைகள், வட்டிக்கு விடுதல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுச் சொத்துச் சேர்த்தவர்களுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் அண்மைக்காலமாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அவ் வகையில் யாழ் மாவட்டத்தில் இதுவரை 11 பேர் இந்த விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர…
-
-
- 4 replies
- 371 views
-
-
27 Oct, 2025 | 06:14 PM உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட மனுவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (27) உத்தரவிட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த எச்சரிக்கையை புறக்கணித்து அதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக அருட்தந்தை சிறில் காமினி மற்றும் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்ஆகியோரால் கோட்டை நீதவான் நீதிமன்றில் தனிப்பட்ட மனு தாக்கல் செய்திருந்தனர். அருட்தந்தை சிறில் காமினி மற்றும் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்…
-
- 0 replies
- 87 views
- 1 follower
-
-
27 Oct, 2025 | 11:11 AM வவுனியா - கனகராயகுளம் குறிசுட்ட குளம் பகுதியில் விவசாய காணி ஒன்றுக்கு போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி யானை ஒன்று உயிரிழந்துள்ளது. திங்கட்கிழமை (27) காலை விவசாய காணிக்கு சென்ற விவசாயி யானை ஒன்று உயிரிழந்து கிடந்ததை அவதானித்ததையடுத்து அயலவர்களுக்கும் கனகராயன்குளம் பொலிஸாருக்கும் தகவலை வழங்கியுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கினர். https://www.virakesari.lk/article/228764
-
- 0 replies
- 162 views
- 1 follower
-
-
எல்லை நிர்ணயத்தை காரணம் காட்டி மாகாண சபைத்தேர்தலை இழுத்தடிக்கக் கூடாது; சுரேஸ் வலியுறுத்து மாகாணத்தின் அதிகாரங்கள் பயன்படுத்தபடப் வேண்டும் என்றால் மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும். எல்லை நிர்ணய விடயத்தினைக் காண்பித்து இழுத்தடிப்பு செய்யக்கூடாதென ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகபேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரச தரப்பால் மாறுபட்ட கருத்துகள் தெரிவிக்கப்பட்டுவருவது தொடர்பில் வினவியபோதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாண சபைத்தேர்தல் தொடர்பாக அரசாங்கம் மாறுபட்ட கருத்துக்களை கூறிவருகின்றது. மாகாணசபைத்தேர்தல் அடுத்தவருடம் வைக்கவுள்ளதாக ஒருபக்கம் கூறுகிறது. மறுபக…
-
- 0 replies
- 92 views
-
-
சீன கம்யூனிஸ்ட் கட்சி – ஜேவிபி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து, அமைச்சர் பிமல் தகவல் October 27, 2025 10:49 am அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், சீனாவுடன் அரசியல் உறவை மிக ஆழமாகவும் சோசலிச கொள்கைக்கு ஏற்ப மேம்படுத்தவும் எடுத்துள்ள செயற்பாடுகளின் ஒரு பகுதியாக, ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் பிரதான அங்கமான ஜேவிபி, சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் (CPC) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளது. ஜேபிவியின் தேசிய சபை உறுப்பினரான, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் உரையாடினார். குறிப்பாக சீனக…
-
- 0 replies
- 114 views
-
-
யாழ்.பல்கலை ஊழியர் பிரச்சினை நேரடித் தலையீட்டில் தீர்க்கப்படும்! துணைவேந்தர் உறுதியளிப்பு யாழ். பல்கலைக்கழகப் போதனைசாரா ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிறப்புக் கவனம்செலுத்தி, தாமே நேரடியாகக் கையாண்டு, ஓரிரு வாரங்களுக்குள் தீர்வுகளை வழங்குவதாக துணைவேந்தர் உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் போதனைசாரா ஊழியர்கள், துணைவேந்தரை அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். கலந்துரையாடலில் ஊழியர்கள், தரப்பில் முன்வைக்கப்பட்ட நியாயங்களையும் பிரச்சினைகளையும் துணைவேந்தர் ஏற்றுக்கொண்டதுடன், பல்கலைக்கழக நிர்வாகத்தினால் வெளியிடப்பட்ட பத்திரிகைச் செய்தி உட்பட சில விடயங்கள் தனக்கு தெரியாதவை எனவும் உண்மை நிலைமையை அறிய எடுத்த முயற்சிகள் பாரா…
-
- 0 replies
- 100 views
-
-
யாழ்.பல்கலையின் அடுத்த துணைவேந்தர் யார் ? களத்தில் பேராசிரியர் ரகுராமும் adminOctober 25, 2025 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு ஆறு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், பல்கலைக்கழகப் பேரவையின் பதவிவழிச் செயலாளரான பதிவாளரால் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதற்கான இறுதித் தினம் கடந்த 15ம் திகதி ஆகும். அன்றைய தினம் பிற்பகல் 3 மணியுடன் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் நிறைவடைந்த வேளையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பீடாதிபதிகள் 4 பேர் உட்பட ஆறு பேராசிரியர்கள் துண…
-
-
- 1 reply
- 238 views
-
-
Published By: Vishnu 26 Oct, 2025 | 06:56 PM (எம்.மனோசித்ரா) பாடசாலை மாணவர்களில் 12 வயதிற்குட்பட்டோர் நவீன கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக, சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்ட நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர், 12 வயதுக்குக் குறைவான எந்தவொரு பிள்ளையும் நவீன கையடக்க தொலைபேசிகளை வைத்திருக்கவோ அல்லது பயன்படுத்தவோ அனுமதிக்கப்படமாட்டாது என்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், மாணவர்கள் தவறிழைத்தால் அவர்களுக்கு தண்டனை வழங்குவது பொறுத்தமற்றது. பாசத்துடன் அறிவுரை கூறி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டு…
-
-
- 2 replies
- 149 views
- 1 follower
-
-
ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற ஆசிரியை உட்பட இருவர் கைது! கம்பளை உலப்பனை பிரதேசத்தில் வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் ஒய்வு பெற்ற ஆசிரியர் ஒருவரும் அவரது மருமகன் ஜஸ் மற்றும் ஹொரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பளை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து கம்பளை உலப்பனை பிரதேசத்தில் உள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவரும் மாமியார், மருகன் ஆகிய இருவர் 200 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கம்பளை குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, அவர்களிடம் இருந்து இரண்டு தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த மருமகன் முச்சக்கரவண்டி சாரதியாக உள…
-
- 0 replies
- 157 views
-
-
மதுபோதையில் யாழ் தேவி ரயிலை செலுத்திய தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் கைது! யாழ்தேவி’ ரயிலின் தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர் , கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (25) பிற்பகல் அனுராதபுரத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த இந்த ரயில், பிற்பகல் 2.40 மணியளவில் அனுராதபுரம் ரயில் நிலையத்தை அடைந்துள்ள நிலையில் அவர் மது அருந்தியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரை அநுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதன் பின்னர் அவர் நீதிமன்றில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார…
-
- 0 replies
- 107 views
-
-
(அஷ்ரப் ஏ சமத்) இந்த நாட்டில் சர்வதேச தரத்தில் தாதியர்களுக்கு என்ற ஓர் சீருடை இருந்து வந்தது. அதை யாரும் அவரவர் மதம் கலாச்சாரத்திற்கும் ஏற்ப மாற்ற நினைப்பார்கள் ஆனால் அதற்கு எதிராக எங்களது பொது அரச தாதியர்கள் ஊழியர் சங்கம் தடுத்து நிறுத்தும்.. அதற்கு எதிராக நாங்கள் ஊழியர் சங்கத்தின் நடவடிக்கையில் இறங்கும் என பொதுச் சேவை தாதியர்கள் சங்கத்தின் தலைவர் முத்தட்டுவே ஆனந்த தோரோ இன்று 26 ஆம் திகதி அவரது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார் நாட்டில் வழமையாக இருந்து வரும் தாதியர்கள் சீருடையை அவரவர் மதம் கலாச்சாரத்திற்கேற்ப அணியலாம் என ஊடகங்களில் வெளிவந்த செய்தியை கவனித்தேன்…. ஆனால் தற்பொழுது சுகாதார அமைச்சர் திறம்பட எடுத்துச் செல்லும் வைத்தியர் ந…
-
- 0 replies
- 128 views
-
-
போதைப்பொருளுக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்றாலும், பட்டப்பகலில் இடம்பெறும் கொலைகளை நியாயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது ! By SRI பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்துக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்றாலும், அதனைக் காரணமாகக்கூறி பட்டப்பகலில் இடம்பெறும் கொலைகளை நியாயப்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்பதற்கும், பாதாள உலகக்குழுக்களின் செயற்பாடுகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாடளாவிய ரீதியில் பல்வேறு நடவடிக்கைகளை முன…
-
-
- 3 replies
- 223 views
-
-
மணல்காட்டில் 300 ஏக்கர் காணியை அபகரிக்க முயற்சி; எதிர்ப்பு தெரிவித்த மக்களை மிரட்டிய சிங்களவர்கள் யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மணல்காடு கிராமத்தில் முந்நூறு ஏக்கர் காணி அபகரிப்பு முயற்சி மணல்காடு மக்களால் முறியடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது; வாகனம் ஒன்றில் வந்த சிங்கள மொழி பேசுபவர்கள் தனியார் காணிகள் உட்பட அரச காணிகள் மற்றும் சமூக காடாக பிரகடனப்படுத்தப்பட்ட சவுக்கமரக்காடு உட்பட 300 ஏக்கர் காணியை கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அனுசரணையுடன் அபகரிப்பதற்கு நில அளவை செய்வதற்கு முற்பட்டுள்ளனர். அங்கு காணி அளவீடு செய்வதனை அவதானித்த கிராம மக்கள் உடனடியாக அவ்விடத்திற்கு சென்று காணியை அளவீடு செய்ய விடாது தடுத்துள்ளனர். குறித்த சிங்கள மொழி பேசுபவர்கள் ம…
-
- 2 replies
- 258 views
- 1 follower
-
-
இன்று (17) நண்பகல் 12.00 மணி முதல் அமுலாகும் வகையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள், தங்களது திட்டமிட்ட விமான புறப்படும் நேரத்திற்கு நான்கு (04) மணிநேரத்திற்கு முன்பாக விமான நிலையத்திற்குள் நுழைந்து பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இச்செயல்முறை, பயணிகள் சேவைகளை மேம்படுத்துவதற்கும் விமான நிலையத்தினுள் பயணிகள் போக்குவரத்தைச் சீராகச் செய்வதற்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், இந்த காலம் 3 மணி நேரத்திற்கு முன்னதாக காணப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmguh67ze0129o29nsvhmes6m
-
-
- 24 replies
- 826 views
- 1 follower
-
-
25 Oct, 2025 | 03:07 PM வங்காள விரிகுடா கடல் பகுதி மற்றும் நாட்டின் கிழக்கு ஆழமற்ற கடல் பகுதிகளில் பலத்த காற்று, கனமழை மற்றும் கடல் கொந்தளிப்பானதாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை 12.00 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்திற்கு இது செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (26) க்குள் ஒரு ஆழமான காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, ஞாயிற்றுக்கிழமை (27) காலை தென்மேற்கு மற்றும் அதை அண்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் ஒரு சூறாவளி புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு, அடுத்த 48 மணி நேரத்தில் ஆந்திரப் பிரதேச கடற்கரை…
-
- 0 replies
- 99 views
- 1 follower
-
-
நாட்டில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் - சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ 25 Oct, 2025 | 04:22 PM நாட்டில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ தெரிவித்துள்ளார். பிரஜா சக்தி அபிவிருத்தி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் கொழும்பில் உள்ள கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை முறை…
-
- 0 replies
- 179 views
- 1 follower
-
-
இலங்கைக்கு பரிசாக வழங்கிய யானைகளை மீண்டும் திரும்பப் பெற தாய்லாந்து நடவடிக்கை! தாய்லாந்து பரிசாக வழங்கிய இரண்டு யானைகளை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதற்காக தாய்லாந்து அரசாங்கம் இலங்கையுடன் எதிர்வரும் 28 ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இலங்கையில் குறித்த யானைகள் மேசமாக பராமறிக்கப்படுவதாகவும், தவறாக நடத்தப்படுவதாகவும் வெளியான செய்திகளைத் தொடர்ந்து அவற்றை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வர தாய்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது. தாய்லாந்து யானைகளான Plai Pratu Pha மற்றும் Plai Srinarong ஆகியவற்றின் நலன் குறித்து அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், தாய்லாந்தின் பிரதிப் பிரதமரும் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சருமான Suchart Chomklin வியாழக்கிழமை (23) தனது முகந…
-
- 3 replies
- 204 views
- 1 follower
-