ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143407 topics in this forum
-
கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் ஐந்து பிள்ளைகளின் தாய்ஒருவரை இராணுவச் சிப்பாய் ஒருவர் கூட்டிச்சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தனித்துவிடப்பட்ட தாம் பொலிஸ் நிலையம் சென்று தமது கண்ணீர் கதையை கூறி தாயாரை மீட்டுத்தரக் கோரிய முறைப்பாட்டை பொலிஸார் ஏற்கமறுத்துவிட்டதாகப் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்வம் பற்றி தெரியவருவதாவது, குறித்த பெண் இரணைமடுக்குளத்தில் நன்னீர் மீன்பிடி தொழிலின் போது அங்கு கூலி வேலை செய்துள்ளளார்.அப்போது இரணைமடு குளத்தின் பின்பகுதியில் கடமையிலிருந்த சிப்பாய்க்கும் இவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. குறிப்பிட்ட காலத்தின் பின்னர் அந்தப் பெண் வேலையை விட்டு நின்றுவிட்டார்.ஆனால் காதலை நிறுத்தவில்லை. சம்பவம் குறித்து…
-
- 3 replies
- 1.2k views
-
-
[size=3] கிளிநொச்சி அக்கராயன் பிரதேசத்தில் எட்டாங்கட்டை கிராமத்தில் அடர்ந்த காட்டிற்குலிருந்து மக்கள் வசிக்கும் பகுதியை நோக்கி வந்த புலி ஒன்றினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் புலியை சுடும் இராணுவத்தின் நடவடிக்கை தோல்வியில் முடிந்தது அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் அந்தப் புலியை தேடி துப்பாக்கியால் சுடுவதற்கு துரத்திச் சென்ற பொழுது அந்தப் புலி படையினரின் கண்களில் மண்ணை தூவிவிட்டு காட்டுக்குள் மறைந்தது.[/size] [size=3] எட்டாங்கட்டையில் புலி, இராணுவத்தினர் சுட முயன்ற பொழுது மாயமாக மறைந்தோடியது என்று அக்கராயன் பிரதேச மக்கள் கிண்டலாக பேசிக் கொள்வதாக குளோபல் தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்[/size] [size=3] http://www.globaltamil…
-
- 0 replies
- 1k views
-
-
கிழக்கு மாகாணத்தில் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு ௭ப்படியாவது தேர்தலை வெற்றி கொள்வதற்கான நிகழ்ச்சி நிரலை அரசாங்கம் முன்னெடுப்பதாக குற்றம் சாட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ௭ம். ஏ. சுமந்திரன், தேர்தல் சட்டங்களை மீறி பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார். கொழும்பில் ௭திர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற பொது ௭திர்க் கட்சிகளின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சுமந்திரன் ௭ம். பி. இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில். அரசாங்கம் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ௭ப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டுமென கங்கணம் கட்டி செயற்படு…
-
- 0 replies
- 747 views
-
-
சச்சரவுள்ள ஒருகட்சியை ஆதரித்து அந்த சச்சரவில் நானும் ஒரு பங்காளியாக விரும்ப வில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். கடவத்தை, இஹல பியன்வில என்ற இடத்தில் இடம் பெற்ற ஒரு பொதுக் கூட்டத்திலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது- சச்சரவு மலிந்த ஒரு கட்சியில் நானும் பங்காளியானால் அத்தகைய சச்சரவுகளுக்கு நானும் ஒரு பங்காளியாக வேண்டிவரும். இருவரது பிரச்சினைகளையும் நான் பொறுப் பேற்கத் தேவையில்லை. எனவே சிறிது காலம் பொறுமையாக இருந்து நடப்பதை அவதானிப்போம். அதற்குரிய அவகாசத்தை வழங்குவோம். அரச சார்புக் கட்சியும் சரி, எதிரத்; தரப்புக் கட்சியானாலும் சரி அவர்கள் இன்னும் தொடர்ந்து தவறு செய்ய அவகாசம் வழங்குவோம் என்றார். http://virakesar…
-
- 0 replies
- 667 views
-
-
பூகொட களனி ஆற்றில் தங்கம் சேகரிக்க அனுமதிப் பத்திரம் வழங்கி இரண்டு மாதங் களில் சுமார் 300 பவுண் தங்கம் சேகரிக் கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சேகரிக்கப்பட்ட தங்கத்தில் 250 பவுண் பூகொட, கிரிந்திவெல்ல ஆகிய பகுதிகளி லுள்ள தங்க ஆபரணக் கடைகளுக்கு விற் பனை செய்யப்பட்டுள்ளது. ௭ஞ்சியவை வெளியிடங்களிலிருந்து வந்தவர்களால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. _ http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=39705
-
- 5 replies
- 1k views
-
-
[size=4]ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் இனவாதக் கட்சியல்ல -ரவூப் ஹக்கீம்[/size] [size=4]ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் இனவாதக் கட்சியல்லவென்றும், அனைத்து இனத்தவர்களையும் அரவணைத்துச் செல்லும் அரசியல் கட்சியென்றும் அதன் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரணவீர திஸாநாயக்கவை ஆதரித்து தெஹியத்தகண்டிய மகாவலி 'சீ" வலயத்தில் உள்ள ரிதீஎல கிராமத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். மாவனாகம, தொலகந்த, ரங்ஹலகம ஆகிய ஊர்களில் நடந்த பிரசார கூட்டங்களில் அவர் உரையாற்றினார். அமைச்சர் ஹக்கீம் உரையாற்றுகைய…
-
- 4 replies
- 973 views
-
-
இடம் பெயர்ந்து சென்ற போது எனது கணவரை படையினலே பிடித்துள்ளனர்.முள்ளிக்குளம் இடப்பெயார்வின் போது கணவனை தொலைத்த மனைவி பரிதவிப்பு. மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச்செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு 09 ஆம் மாதம் இடம் பெற்ற யுத்தத்தின் போது அப்பகுதி மக்கள் திடீர் என இடம் பெயர்ந்து வேறு இடத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.இதன் போது குறித்த கிராம மக்கள் முதலில் நாணாட்டான் பிரதேசச்செயலாளர் பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில்படையினர் முதலில் தங்கவைத்தனர். இந்த இடப்பெயர்வின் போது சிலர் காணமல் போயுள்ளதாக தெரியவருகின்றது.எனினும் முள்ளிக்குளம் கிராமத்தில் இடம் பெற்ற இடப்பெயர்வின் போது கடந்த 2007 ஆம் ஆண்டு 09 ஆம் மாதம் 07 ஆம் திக…
-
- 0 replies
- 568 views
-
-
கிட்டு பூங்காவில் வைக்கப்பட்டிருந்த பழைய இரும்புகள் யாழ்.மாநகர சபையினால் ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி உறுப்பினர்களின் ஆதரவுடன் திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.பல இலட்சம் பெறுமதியான குறித்த இரும்புகள் யாழ் கிட்டுப் பூங்காவில் பாவனையில் இருந்தபோது சிறுவர்கள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்ட விளையாட்டுத் திடல்களாக இருந்த இரும்புகளே ஆகும். தற்போது கிட்டுப் பூங்காவினை விஸ்தரித்து புணரமைப்பதாக வெளியில் காட்டிக் கொள்ளும் யாழ்.மாநகர சபை அங்குள்ள பழமைவாய்ந்த பொருட்களையும் வரலாற்றுத் தடையங்களையும் அளித்து வருகின்றது. அதனடிப்படையில் குறித்த பூங்காவினுள் உள்ள கட்டடங்கள் மற்றும் சிறுவர்கள் விளையாட்டுத் திடல்கள் என்பன அழிப்பட்டு வருகின்றது. இதே போன்று அளிக்கபடும் போது எஞ்சிய…
-
- 0 replies
- 560 views
-
-
[size=4]வட பகுதியில் இடம்பெயர்ந்தவர்கள் அனைவரையும் மீள்குடியேற்றும் பணி அடுத்த மாதம் நடுப் பகுதிக்குள் நூறு வீதம் பூர்த்தியடைந்து விடுமென பாதுகாப்பு செயலாளரும், நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அதேநேரம், இந்தப் பணிகள் முடிவடைந்ததும் வட பகுதியிலுள்ள நலன்புரி முகாம்கள் அனைத்தும் மூடப்பட்டு விடுமெனவும் அவர் கூறினார்.[/size] [size=3][size=4]மன்னாரில் காத்தான்குளத்தில் இராணுவத்தினர் நிர்மாணித்த இரண்டு மாடிக் கட்டடத்தில் அமைந்துள்ள கன்னிமரியாள் சிறுவர் இல்லத்தைத் திறந்து வைத்து பேசும்போதே அவர் மேற்கண்டவாறு கூறுனார்.[/size][/size] [size=3][size=4]இந்த மாதத்தினுள் மீள் குடியேற்றப் பணிகள் முடியவிருக்கின்ற போதிலும், புதுக்கு…
-
- 1 reply
- 441 views
-
-
[size=3]தற்போது நடப்பது 4 - ம் கட்ட உலகப்போர் - இந்திய ஜனாதிபதி..! அதென்ன நான்காம் கட்ட உலகப் போர்..?! அலசுகிறது ஈழதேசம்..![/size] [size=3] முதல் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போர் அனைவரும் அறிவோம். இரண்டாம் கட்ட உலகப் போரில் என்றோ கொல்லப்பட்ட அல்லது சில ஆயிரம் மக்களான யூதர்களின் மரணத்திற்கு இன்றுவரை அரேபியர்கள் விலையை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டாம் உலகப் போரில் யூதர்களை கொன்றது ஜெர்மனி,இத்தாலி மற்றும் ஜப்பான்.இந்த மூவரும் யூதர்களை கொன்றதற்கு அரபிய மக்கள் பெரும் விலையை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நியாயமாக ஒழுங்காக பஞ்சாயத்து செய்திருந்தால், ஜெர்மனி,இத்தாலி மற்றும் ஜப்பான் நாடுகளைத் தானே பிரித்து கொடுத்திருக்க வேண்டும் யூத மக்களுக்கு..? ஆனால் நடந்தத…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஈழத் தமிழர்களின் ஒரே அரசியல் அபிலாசையான சுதந்திரமும், இறைமையுள்ள தமிழீழம் என்ற இலக்கை வெல்வதற்கான பயணத்தில் தொடர்ந்தும் உறுதியுடனும், அர்ப்பணிப்புடன் பயணிக்கவும், அதன்பாற்பட்ட அரசியல், பொருளாதார மற்றும் சமூக செயற்பாடுகளில் ஒன்றிணைந்து செயற்படவும் உலகளாவிய தமிழ் அமைப்புக்கள் உறுதிபூண்டுள்ளன. நோர்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவில் ஒன்று கூடிய பல்வேறு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியற் அமைப்புக்ககளின் பிரநிதிதிகள் கடந்த வெள்ளிக்கிழமை( யூலை 27) தொடங்கி ஞாயிற்றுகிழமை (யூலை 29) வரை நடைபெற்ற மாநாட்டின் நிறைவின் போது இந்த முடிவை ஏகமனதாக மீள் வலியுறுத்தின. ஆறு தசாப்தங்களுக்கு மேலாக சிறிலாங்கா அரசு தமிழ் மக்களை அழித்தும், அவர்களின் பூர்வீக நிலங்களை பறித்தும், அவர்க…
-
- 2 replies
- 614 views
-
-
[size=4]வட மாகாண சபைக்கான தேர்தல் பெப்ரவரி 26இல்! [செய்தி பதிவுசெய்யப்பட்டது : [size=1]2012-07-30 10:18:26| யாழ்ப்பாணம்][/size][/size] [size=1] [size=4]வட மாகாண சபைக்கான தேர்தலை 2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மா னித்துள்ளது.இதன்படி பெப்ரவரி மாத இறுதி யில் அதாவது 26-ம் திகதியளவில் தேர்தலை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட் டுள்ளது. [/size][/size] [size=1] [size=4]முன்னதாக இந்தத் தேர்தலை அடுத்த வருடம் செப்ரெம்பரில் நடத்துவதற்கு அர சாங்கம் திட்டமிட்டிருந்த போதிலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமர்வுகள் அடுத்த வருட பிற்பாதியில் நடைபெறவுள்ளதன் கார ணமாக முந்திக் கொண்டு தேர்தலை நடத்து வதற்கு அரசு ம…
-
- 0 replies
- 759 views
-
-
[size=4]இந்திய - சிறிலங்கா அமைதி உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு விடுதலைப் புலிகளும் முன்னாள் சிறிலங்கா அதிபர் ஆர்.பிரேமதாசவும் – சிறிலங்கா தரப்பில் தடையாக இருந்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்திய – சிறிலங்கா அமைதி உடன்பாடு செய்து கொள்ளப்பட்டு நேற்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இது குறித்து பிபிசிக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்திய - சிறிலங்கா உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு விடுதலைப் புலிகளும் முன்னாள் சிறிலங்கா அதிபர் ஆர்.பிரேமதாசவும் – சிறிலங்கா தரப்பில் பெரும் தடைகளை ஏற்படுத்தினர் என்பதை மறுக்க முடியாது. ஜே.ஆர். ஜெயவர்த்தனவுக்குப் பிறகு, இந்த உடன்பாட்டை நிறைவேற்ற வேண்…
-
- 0 replies
- 690 views
-
-
[size=3][/size] [size=3][size=4]ஐக்கிய நாடுகளின் அங்கீகாரம் பெற்ற ஈழ தமிழ் அகதிகள் அவுஸ்திரேலியாவுக்கு வரும் போது அவர்களுக்கு நிதி உதவி வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழ் சமூகத்தின் பிரதிநிதிகள் இது தொடர்பான திட்டத்தை அறிவித்துள்ளதாக த ரேடியோ அவுஸ்திரேலியா செய்தி வெளியிட்டுள்ளது.[/size][/size] [size=3][size=4]சட்டவிரோதமாக அகதிகள் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிப்பதை தடுக்கும் முகமாக இந்த நிதியுதவி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.[/size][/size] [size=3][size=4]இந்தநிலையில், இது தொடர்பான திட்ட ஆவணத்தை அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழ் சமூகத்தினர் பிரதம மந்திரி ஜூலியா கிளாடிடம் சமர்பிக்கவுள்ளனர்.[/size][/size] [size=3][size=4]அவுஸ்…
-
- 0 replies
- 288 views
-
-
[size=4][/size] [size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் நடத்தும் பேச்சுவார்த்தை நேர்மையானதாக இருக்க வேண்டும் எனவும் அது சர்வதேசத்தை ஏமாற்றுவதாக இருக்கக்கூடாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.[/size] [size=4]திருகோணமலை மாவட்டத்தின் திரியாய் மற்றும் கல்லம்பத்தை கிராமங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடைபெற்றன. திரியாயில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,[/size] [size=4]'அரசியல் தீர்வு காண்பது தொடர்பான பேச்சுவார்த்தையை அரசாங்கத்துடன் மேற்கொள்வதற்க…
-
- 0 replies
- 363 views
-
-
[size=4]இராணுவத்திலிருந்து தப்பியோடிய 41 ஆயிரம் படைச் சிப்பாய்கள், தமது பதவியிலிருந்து உத்தியோகபூர்வமாக நீக்கப்பட உள்ளனர். தப்பியோடிய படைவீரர்களிடமிருந்து பணம் அறவீடு செய்யப்பட வேண்டியதனைத் தவிர வேறும் குற்றச் செயல்களில் ஈடுபடாத படைச்சிப்பாய்கள் இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர்.[/size] [size=4]குறித்த படைவீரர்களுக்கான பணி நீக்கக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. 50 ஆயிரம் ரூபாவிற்கு குறைந்தளவு பணத்தை இராணுவத்திற்கு செலுத்த முடியாத, வேறு குற்றச் செயல்களில் ஈடுபடாத அனைத்து படைச் சிப்பாய்களும் விடுதலை செய்யப்பட உள்ளதாக இராணுவப் பேச்சாளர் ரூவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.[/size] [size=4]பாதுகாப்பு அமைச்சு தப்பியோடிய படைச் சிப்பாய்களை பணி நீக்கும்…
-
- 0 replies
- 313 views
-
-
[size=4]இன்று எட்டாவது நாளாக உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் திரு. சிவந்தன் கோபி அவர்களை பிரித்தானியாவில் செயற்படும் மனித நேயப்பணியாளர்கள் சிலர் சந்தித்து தமது ஆதரவினை வெளிப்படுத்தினர். தனது கோரிக்கைகளின் நியாயத்தன்மையினை விளக்கிய திரு. சிவந்தன், அவர்களது ஆதரவிற்கு நன்றியை தெரிவித்தார்.[/size] [size=4]ஒலிம்பிக் கிராமத்தினை பார்வையிடச் செல்பவர்கள் பலரும் திரு சிவந்தன் அமரந்துள்ளவிடத்தில் தரித்து நின்று, அங்கு விநியோகிக்கப்பட்டுவரும் சிறிலங்காவின் இனவழிப்பு தொடர்பான துண்டுப்பிரசுரங்களை பெற்றுச்செல்வதுடன் விபரங்களையும் அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.[/size] [size=4]திரு. சிவந்தனின் உடல்நிலையை பரிசோதித்த மருத்தவர்கள் அவரது இரத்த அழுத்…
-
- 0 replies
- 398 views
-
-
[size=4]நாம் தமிழர் மாணவர் பாசறையின் சார்பில், ஆதம்பாக்கத்தில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இதில் கலந்து கொண்டு பேசினார்.[/size] [size=4]அவர், ‘’ஈழத்தில் தங்கள் மண்ணின் விடுதலைக்காகவும், அரசியல் சம உரிமைக்காகவும் போராடி யவர்கள் விடுதலைப்புலிகள். தங்கள் மக்களின் துயரைத் நிரந்தரமாகத் துடைக்க, தம்மையே அழித்துக் கொண்டு போராடிய தியாகிகள் விடுதலைப்புலிகள். [/size] [size=4]அவர்கள் எம்மக்களுக்காக அழுதவர்கள் அல்ல, அவர் களின் அழுகையை நிறுத்துவதற்காக செத்த வர்கள். அப்படிப்பட்ட உன்னதமான ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்தின் தலைவர் அண்ணன் பிரபாகரன். அவருடைய படத்தை விற்பதற்கு காவல்துறை தடை செய்கிறது. இது நீடித்தால் ராஜீவ் காந்தி, சோனியா படங்க…
-
- 6 replies
- 1.3k views
-
-
[size=3][size=4]லண்டனில் நடைபெறுகின்ற ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள இருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வழங்க பிரித்தானியப் பொலிஸார் மறுத்தததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் தனது லண்டன் விஜயத்தை இரத்துச் செய்யுள்ளதாக. ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள இருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்குமாறு பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதரகம் கோரிக்கை விடுத்திருந்ததாக கூறப்படுகிறது.இந் நிலையில்இ ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்க முடியாது என பிரித்தானியாவின் ஸ்கொட்லன்ட்யாட் பொலிஸார் தெரிவித்திருந்தனர். இதனை பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய பணியகமும் அரசாங்க…
-
- 8 replies
- 2.9k views
-
-
உலகின் தலைசிறந்த சுதந்திரப் போராட்ட இயக்கங்களில் ஒன்றான தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு இந்தியா நீட்டித்திருப்பது வேண்டுமானால் வழக்கமான நடைமுறையாக இருக்கலாம். “அதை ஆதரிக்கும் இயக்கங்களே! தனி நபர்களே! உஷார்” என்று உதார் விடுவதுதான் எரிச்சலை ஏற்படுத்துகிறது. இதையெல்லாம் கண்டும் காணாதவர்களாய், வெளியே ராமதாஸே வந்து பூட்டுப் போடுவதைக்கூட உணராதவர்களாய், டாஸ்மாக் உள்ளே உட்கார்ந்து சரக்கு அடித்துக் கொண்டிருந்தோமென்றால், உண்மையிலேயே நாம் யார்? விடுதலைப் புலிகளை ஆதரிப்பது ஏன் – என்பதை பகிரங்கமாக இப்போது சொல்லாமல், வேறெப்போது சொல்லப்போகிறோம் நாம்? விடுதலைப் புலிகளை இவர்கள் தவறாகச் சித்தரிப்பது ஏன்? அவர்கள் மீதான இவர்களது குற்றச்சாட்டுகளை எதனால் மறுக்கி…
-
- 1 reply
- 743 views
-
-
[size=4]இயக்கச்சியில் சிறிலங்கா இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட புதிய பௌத்த வழிபாட்டுச் சின்னம் கடந்த வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா இராணுவத்தின் முதலாவது இயந்திர காலாற்படைப் பிரிவினால் இந்த பௌத்த வழிபாட்டுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவில் முதலாவது இயந்திர காலாப்படைப் பிரிவின் அதிகாரிகளும் படையினரும் பங்கேற்றதுடன், ஏழு பௌத்த பிக்குகளுக்கும் தானம் வழங்கப்பட்டுள்ளது. 1992இல் இயக்கச்சிப் பகுதியை சிறிலங்கா படையினர் கைப்பற்றும் வரை அங்கு எந்த பௌத்த வழிபாட்டுச் சின்னமும் அமைந்திருக்கவில்லை. இயக்கச்சிப் பகுதி ஆனையிறவுப் பெருந்தளத்துடன் இணைக்கப்பட்டதை அடுத்தே, அங்கு பௌத்த சின்னம் ஒன்று சிறிலங்க…
-
- 3 replies
- 743 views
-
-
[size=4]யாழ்.அரியாலை மகாத்மா காந்தி சனசமூக நிலையத்திற்கு முன்னால் உள்ள மகாத்மா காந்திசிலை நேற்று சனிக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் அதிகாரி குணசேகர தெரிவித்துள்ளார். இச்சிலை உடைப்பு தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லையென்றும் இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.[/size] [size=2][size=4] http://www.tamil.dai...9-07-02-37.html[/size][/size]
-
- 7 replies
- 620 views
-
-
தமிழர்களுக்கு சம உரிமைகளை வழங்காவிட்டால் அங்கு மீண்டும் இன மோதல் வெடிக்கும் என்று நோர்வே நாட்டின் முன்னாள் அமைதித் தூதர் எரிக் சொல்ஹெம் எச்சரித்துள்ளார்.அவர்இ நார்வே நாட்டின் ‘ஆஃப்டன்போஸ்டன்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார் இலங்கையில் 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்துக்கு தமிழர் பிரச்னையே காரணமாக இருந்தது. போர் முடிந்த பிறகும் அப்பிரச்னை தீர்க்கப்படவில்லை. தமிழர்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இதையும் அவர்கள் இன்னும் செய்யவில்லை. இந்த விவகாரங்கள் தீர்க்கப்படாவிட்டால் இலங்கையில் எதிர்காலத்தில் மீண்டும் இன மோதல் புதிய வடிவங்களில் வெடிக்கும். நான் கடந்த 2000-வது ஆண்டு இலங்கையில் சுற்றுப்யணம் மேற்கொண்டபோது சிங்கள பயங்கரவாதிகள்…
-
- 4 replies
- 555 views
-
-
[size=4]வன்னி யுத்தத்தில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்ட விட[/size]யம் தொடர்ந்தும் மர்மமாக உள்ளதாக சண்டேலீடர் செய்தி வெளியிட்டுள்ளது… [size=4]ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் கண்ணி வெடி அகற்றும் குழுவின் இலங்கைக்கான தலைவர் அலன் பொஸ்டன் தெரிவித்த, கொத்தணிக்;குண்டு குறித்த தகவல் இன்னும் மர்மாகவே உள்ளதாக சண்டேலீடர் செய்தி வெளியிட்டுள்ளது. [/size] [size=4]வடமாகாணத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் இவ்வகையான குண்டுகள் மீட்கப்பட்டதாக அண்மையில் அவர் தெரிவித்திருந்தார். எனினும் இது தொடர்பில் இன்னும் உத்தியோகபூர்வமாக தமக்கு அறிவிக்கப்படவில்லை என்று ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் ஆசிய மற்றும் பசுபிக் வலய பிராந்திய தொடர்பாளர் சன்ரா மெக்கேரியா தெரிவ…
-
- 0 replies
- 603 views
-
-
[size=4]நல்லூர்க் கந்தன் கோவிலில் கொடியேற்ற நாள் தொடக்கம் நேற்று வரையான காலப்பகுதியில் 20 பவுன் நகைகள் வரை கொள்ளையிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.[/size] [size=4]எதிர்வரும் திருவிழா நாட்களில் தரிசனத்திற்காக செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதன் காரணமாக திருட்டுச் சம்வங்களும் அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.[/size] [size=4]கோவில் வளாகத்தில் பெண்களும், பக்தர்களின் வேடமணிந்து திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வெளி ம…
-
- 1 reply
- 475 views
-