ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
17 MAR, 2024 | 04:14 PM யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வெதுப்பகம் ஒன்றுக்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற முறையில் உற்பத்திகளை களஞ்சியப்படுத்தியமை, விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த பொது சுகாதார பரிசோதகர், வெதுப்பகத்திற்கு சீல் வைக்க கட்டளையிடக் கோரி விண்ணப்பம் செய்துள்ளார் . விண்ணப்பத்தை ஆராய்ந்த நீதிமன்றம் வெதுப்பகத்தில் திருத்த வேலைகளை முடித்து , சுகாதார பரிசோதகர் அதனை உறுதிப்படுத்தும் வரையில் வெதுப்பகத்துக்கு சீல் வைக்க உத்தரவிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/178955
-
- 0 replies
- 305 views
- 1 follower
-
-
17 MAR, 2024 | 03:58 PM காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்த்தர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) உயிரிழந்துள்ளார். கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குளத்துவெட்டை திகிலிவெட்டையில் பகுதியில் வசிக்கும் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வழக்கம் போல் மீன் பிடி தொழிலுக்கு சென்றவர் குளத்தில் மீன் பிடிப்பதற்காக கட்டு வலையினை கட்டிவிட்டு அங்கிருந்த கட்டிலில் உறங்கி கொண்டிருந்த வேளை காட்டு யானை அவரை தாக்கியுள்ளது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக உறிவினர்கள் தெரிவித்துள்ளதுடன் சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/1…
-
- 0 replies
- 351 views
- 1 follower
-
-
17 MAR, 2024 | 03:18 PM தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் சென்று விபத்தில் இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பளைப் பகுதியை 21 வயதுடைய இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார். கடந்த 11 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் விபத்தில் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தலைக்கவசம் அணியாத நிலையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி விபத்துக்குள்ளானதால் தான் தலையில் படுகாயம் ஏற்பட்டது என மரண விசாரணையின் போது தெரிய வந்துள்ளது. https://www.virakesari.lk/article/178949
-
- 0 replies
- 448 views
- 1 follower
-
-
17 MAR, 2024 | 02:57 PM சட்டவிரோதமான முறையில் மாட்டை இறைச்சியாக்கிய குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். வடமராட்சி புலோலி பகுதியில் வீடொன்றில் வைத்து சட்டவிரோதமான முறையில் மாடொன்று இறைச்சியாக்கபடுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த வீட்டுக்கு பொலிஸார் விரைந்திருந்தனர். பொலிஸாரை கண்டதும் மாட்டை இறைச்சியாக்கி கொண்டிருந்த நபர் வீட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். அதனை அடுத்து இறைச்சியை மீட்ட பொலிஸார் , வீட்டின் உரிமையாளரான தப்பியோடியவரின் தாயாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரை விசாரணைகளின் பின்னர் பருத்தித்துறை நீத…
-
- 0 replies
- 389 views
- 1 follower
-
-
17 MAR, 2024 | 02:04 PM (லியோ நிரோஷ தர்ஷன்) உத்தேச தேசிய தேர்தல்களை மையப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் சுமூகமானதாக அமையவில்லை. இவ்வாறானதொரு நிலையில் ஜனாதிபதி தேர்தல் முதலில் இடம்பெறுமேயானால் ரணில் விக்கிரமசிங்கவுக்கான ஆதரவை வாபஸ் பெற்று, தனித்து வேட்பாளர் ஒருவரை களமிறக்க தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் ஜனாதிபதிக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, அவ்வாறு ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை தனித்து பொதுஜன பெரமுன களமிறக்கும் பட்சித்தில் அவர், ராஜபக்ஷ ஒருவராக இருக்க மாட்டார் என்ற ஒருமித்த இணக்கப்பாடும் எட்டப்பட்டுள்ளது. ஜனா…
-
- 0 replies
- 209 views
- 1 follower
-
-
17 MAR, 2024 | 01:10 PM முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தவறானது என அவரது முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார். தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். அரச எதிர்ப்புப் போராட்டங்களின்போது புலனாய்வுப் பிரிவினர் தமது கடமைகளை சரியாக செய்யவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால், ஒட்டுமொத்த பாதுகாப்புத்துறையும் வீழ்ச்சியடைந்துள்ளது என்று அவர் வலியுறுத்தினார். முன்னாள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மிக நெருக்கமான அதிகாரிகள் பலர் தமது பொறுப்புக்களை புறக்கணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி மிரிஹானவ…
-
- 4 replies
- 411 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 17 MAR, 2024 | 12:00 PM தேசிய மக்கள் சக்தியின் எதிர்கால அரசாங்கத்தின் அமைச்சரவையில் வடபகுதியை சேர்ந்தவர்களும் இடம்பெற்றிருப்பார்கள் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க வவுனியாவில் தெரிவித்துள்ளார். தீவிரவாதபோக்கற்ற இனவாதமற்ற மிதவாத தலைவர்களுடன் நாங்கள் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்கால தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவையில் வடக்கை சேர்ந்தவர்களும் இடம்பெறவேண்டும் தீவிரவாதபோக்கற்ற இனவாதமற்ற மிதவாத தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு நாங்கள் தயார் அவர்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஒருபகுதியாகவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.…
-
- 1 reply
- 587 views
- 1 follower
-
-
அரசாங்கம் 1500 பக்க ஆவணங்களை மறைத்துவிட்டது - மர்ம லொறியொன்றை சோதனையிட வேண்டாம் என தற்போதைய பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டார் - கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் புதிய குற்றச்சாட்டு Published By: RAJEEBAN 17 MAR, 2024 | 11:27 AM அரசாங்கம் திருச்சபைக்கு வழங்கிய உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் முக்கியமான 1500 பக்கங்கள் காணப்படவில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். அரசாங்கம் ஆறு சிடிக்களில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை வழங்கியது நாங்களும் சட்டத்தரணிகளும் அதனை ஆராய்ந்தோம் 70,000 பக்கங்கள் உள்ளன எனினும் அரசாங்கம் 1500 பக்கங்களை எங்களுக்கு வழங்கவில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெர…
-
- 1 reply
- 265 views
- 1 follower
-
-
17 MAR, 2024 | 10:28 AM தமிழர் விடுதலைக் கூட்டணியின் புதிய நிர்வாகிகள் தெரிவு இன்று (17) வவுனியாவில் இடம்பெற்றது. இதில் தலைவராக அருண் தம்பிமுத்து தெரிவு செய்யப்பட்டதுடன், கட்சியின் செயலாளராக ஆனந்த சங்கரி தெரிவுசெய்யப்பட்டார். இதன்போது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி திருகோணமலையில் நடத்தப்படவுள்ள கட்சியின் மாநாடு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. https://www.virakesari.lk/article/178916
-
- 0 replies
- 583 views
- 1 follower
-
-
“என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே” எஸ். தில்லைநாதன் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்பகுதியில் அந்தியெட்டிக் கிரியை நிறைவேற்றப்பட்ட மிதவை ஒன்று இன்று காலை கரையொதுங்கியுள்ளது. “பரமேஸ்வரி - என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே” போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. உயிரிழந்த நபரின் இறுதிச் சடங்கிற்காக இது வடிவமைக்கப்பட்டு கடலில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது குறித்த மிதவையை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். https://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/எனன-நமமதயக-பக-வடஙகள-சகதரரகள/73-334760
-
-
- 4 replies
- 893 views
-
-
புதிய கூட்டணிக்கு கைச்சாத்து ஆ.ரமேஸ். ஜனநாயக மக்கள் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய சுதந்திர கட்சி ஆகியவை இணைந்து புதிய கூட்டணி ஒன்றை அமைக்கும் உடன்படிக்கையை கொழும்பில் கைச்சாத்திட்டுள்ளது. இதற்கான நிகழ்வு கொழும்பு பம்பலப்பிட்டி லூரிஸ் வீதியில் அமைந்துள்ள ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலையங்கத்தில் (15.03.2024) இடம்பெற்றதாக ஐக்கிய சுதந்திர கட்சி பொது செயலாளர் சவேரியார் ஜேசுதாஸ் தெரிவித்தார். இதன்போது இடம்பெற்ற கைச்சாத்து நிகழ்வில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் மற்றும் அக்கட்சியின் பொது செயலாளர் கங்காதரன் சுரேஷ்…
-
- 0 replies
- 250 views
-
-
கோட்டாபய ராஜபக்ச நாட்டிற்கும் மக்களிற்கும் துரோகமிழைத்தார் : மகிந்த ராஜபக்ச முன்னிலையில் உரையாற்றிய முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் ! NO COMMENTS பௌத்தமதகுரு ஒருவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில் மற்றுமொரு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை கடுமையா சாடியுள்ளார். மகிந்த ராஜபக்ச முன்னிலையில் உரையாற்றிய முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் மிகப்பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ச நாட்டிற்கும் மக்களிற்கும் துரோகமிழைத்தார் என குறிப்பிட்டுள்ளார். கோட்டபயவிடம் நிர்வாகத் திறமையிருக்கவில்லை தனக்கு யாரால் நன்மை கிடைக்கும் என கருதினாரோ அவர்களையே கோட்டபய தன்னை சுற்றிவைத்த…
-
- 5 replies
- 433 views
-
-
அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிர்ப்பு! அநுரகுமார திசாநாயக்கவின் கிளிநொச்சி வருகைக்கு இன்று (16) எதிர்ப்பு வெளியிடப்பட்டது. இன்று மக்கள் சந்திப்பிற்காக அநுரகுமார திசாநாயக்க கிளிநொச்சி சென்றிருந்த நிலையில் இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டது. முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகம் ஜீவராஜ் இவ்வாறு எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார். மக்கள் சந்திப்பு இடம்பெற்ற பகுதியை அண்மித்து A9 வீதியில் இவ்வாறு அவர் பதாதைகளை கட்டி எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. -கிளிநொச்சி நிருபர் சப்தன் https://tamil.adaderana.lk/news.php?nid=185232
-
-
- 3 replies
- 413 views
-
-
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்காக 107 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் அகியோரின் தலைமையில் இந்த துரித இலக்கம் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. 24 மணித்தியாலங்களும் செயற்பாட்டில் இருக்கும் 107 என்ற துரித இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடுகளை செய்ய முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை முற்றிலும் தமிழ் மொழியில் செயற்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதியின் வழிகாட்டுதலுக்கு அமைவாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/296023
-
- 1 reply
- 289 views
- 1 follower
-
-
16 MAR, 2024 | 04:01 PM கடற்கரைகளில் கழிவு முகாமைத்துவத்திற்கு பயன்படுத்தக்கூடிய கைபேசி செயலி (Beach Cleanup Coordination APP) அறிமுகம் தொடர்பான கலந்துரையாடல் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை (15) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடலோர மற்றும் கடல்சார் சூழலின் நிலையான வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை முறையாக ஒருங்கிணைத்து, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலையீட்டுடன் இந்த கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நிலைபேறான கடல் மற்றும் கரையோர வலயத்தை உறுதி செய்யும் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்…
-
- 0 replies
- 412 views
- 1 follower
-
-
தயாசிறி ஜயசேகர எம்.பியின் தலைமையில் புதிய கூட்டணி – 20 ஆம் திகதி ஆரம்ப நிகழ்வு March 16, 2024 சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகரவின் தலைமையில் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ‘மனிதநேய மக்கள் கூட்டணி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டணி எதிர்வரும் 20 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு – லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச நிலையத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. நாற்பது சிவில் அமைப்புகள் இந்த புதிய கூட்டணிக்கு ஆதரவளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் அன்றைய தினம் இந்த புதிய கூட்டணியுடன் சில ஒப்பந்தங்…
-
- 0 replies
- 218 views
-
-
அம்பாறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிள்ளைகள்: தந்தை அளித்த வாக்குமூலம் தனது இரு விசேட தேவையுடைய பிள்ளைகளையும் பராமரித்து வந்த மனைவியின் இழப்பு தன்னை வெகுவாக பாதித்து இருந்தமையால்தான் இரண்டு பிள்ளைகளையும் கழுத்தறுத்து கொன்றதாக தந்தை வாக்குமூலம் வழங்கியுள்ளார். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பகுதியில் இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தானும் தவறான முடிவெடுக்க முயற்சி செய்த தந்தை கல்முனை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குறித்த வாக்குமூலத்தை அளித்துள்ளார். வைத்தியசாலையில் அனுமதி மேலும், தனது இரு விசேட தேவையுடைய பிள்ளைகளையும் பராமரித்து வந்த மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புற்றுநோய் காரணம…
-
- 0 replies
- 352 views
- 1 follower
-
-
16 MAR, 2024 | 10:05 AM வெடுக்குநாறி மலையில் மஹாசிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட 8 பேரையும் விடுவிக்ககோரி, நல்லூரில் இருந்து வவுனியா வரையான வாகனப் பேரணியானது நல்லூர் கந்தசாமி ஆலய முன்றலில் இருந்து இன்று சனிக்கிழமை (16) காலை 7.45 மணியளவில் ஆரம்பமாகியது. இப் பேரணியானது காலை 10 மணியளவில் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தை அடைந்து, வெடுக்குநாறி மலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்ககோரி மாபெரும் போராட்டம் இடம்பெறும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஊடக பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்தார். இப் பேரணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட ஆசிரிய சங்க தலைவர், உறுப…
-
- 5 replies
- 351 views
- 1 follower
-
-
Published By: VISHNU 15 MAR, 2024 | 11:04 PM யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை (15) அதிகாலை முச்சக்கர வண்டியில் பயணித்த வாள்வெட்டுக் கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நகருக்கு அண்மையாக வெள்ளிக்கிழமை (15) அதிகாலை 2 மணியளவில் முச்சக்கர வண்டியில் பயணித்த 5 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மத்யூஸ் வீதியை சேர்ந்த 25 வயதான முச்சக்கர வண்டி சாரதி, கொக்குவிலை சேர்ந்த 25 வயதான இளைஞன், யாழ்ப்பாண நகரத்தை சேர்ந்த 20 வயதான இளைஞன், குருநகரை சேர்ந்த 26 வயதான இளைஞன், வண்ணார்பண்ணையை சேர்ந்த 19 வயதான இளைஞன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள…
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
நாட்டில் காசநோயாளர்களின் எண்ணிக்கை 14 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது. அத்துடன் அடையாளம் காணப்பட்ட காசநோயாளர்களில் நாள் ஒன்றுக்கு இரண்டு பேர் மரணிப்பதாக அந்த வேலைத்திட்டம் குறிப்பிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் நாட்டில் 9,358 காசநோயாளரகள் பதிவாகினர். இதுவே அண்மையில் பதிவான அதிகூடிய எண்ணிக்கையாகும். நாட்டில் அதிகளவான காசநோயாளர்கள் மேல் மாகாணத்தின் கொழும்பு நகர எல்லையிலேயே பதிவாகியுள்ளனர். https://www.virakesari.lk/article/178823
-
- 0 replies
- 532 views
- 1 follower
-
-
Published By: VISHNU 15 MAR, 2024 | 06:48 PM இந்திய இழுவைமடிப் படகுகளின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி யாழ். இந்தியத் துணைத் தூதரகம் முன்பு கடற்றொழிலாளர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத்தில் வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் தலைவர் செல்லத்துரை நற்குணம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது: எமது யாழ்ப்பாண மாவட்ட கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இந்திய மீனவர்கள் எமது வாழ்வாதாரத்தையும் …
-
-
- 15 replies
- 834 views
- 1 follower
-
-
மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நபர் ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்து, பணம் கோரிய குற்றச்சாட்டு தொடர்பில் அவர் தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வர்த்தகர் ஒருவரிடம் ஒரு இலட்சம் ரூபா கப்பம் கேட்டு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பாகவே தலங்கமை பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவரை 5 லட்சம் ரூபாய் பெறுமதியான தலா இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யுமாறு கடுவலை பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் மாதந்தோறும் இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் தங்கம பொலிஸ் நி…
-
- 0 replies
- 350 views
- 1 follower
-
-
2021 மற்றும் 2022 ஆம் ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக மாணவர்களை கல்வியற்கல்லூரிகளுக்கு உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இன்று முதல் மாணவர்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், அடுத்த மாதம் 5ஆம் திகதியுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலம் நிறைவடையவுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/295936
-
- 0 replies
- 173 views
- 1 follower
-
-
தோட்டத் தொழிலாளர்களுக்கான நாள் சம்பளத்தை 1, 700 ரூபாயாக அதிகரிக்க நடவடிக்கை! மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாள் சம்பளத்தை ஆயிரத்து 700 ரூபாயாக அதிகரித்து எதிர்வரும் 30 நாட்களுக்குள் வழங்கவுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தலவாக்கலை ஒலிரூட் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சகல வசதிகளுடன் கூடிய வீடுகள் நேற்று அமைச்சர் ஜீவன் தொண்டமானினால், மக்களுக்கு கையளிக்கப்பட்டன. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான சக்திவேல், பெருந்தோட்ட மனித வள…
-
- 2 replies
- 265 views
- 1 follower
-
-
நாட்டில் நீதிபதிகளுக்கும் தட்டுப்பாடு! நாட்டில் வைத்தியர்களுக்குத் தட்டுப்பாடு நிலவிவந்த நிலையில் தற்போது நீதிபதிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நீதிபதிகளின் வெற்றிடம் அதிகரித்துள்ளமை தொடர்பாகத் தாம் கவலையடைவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் இத்தகைய செயற்பாடானது நீதித்துறை கட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது எனவும், இதன் காரணமாக உயர்நீதிமன்ற நீதியரசர்களின் வெற்றிடங்களை விரைவில் நிரப்ப அரசியலமைப்பு பேரவை மற்றும் ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. https://athavannews.com/2024/1373610
-
-
- 1 reply
- 420 views
-