ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143390 topics in this forum
-
சமந்தா பவர் மஹிந்தரை உடைப்பவள் யார் இந்த சமந்தா பவர்?அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு உலக நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வரும் பெண்மணியே இந்த சமந்தா பவர். இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தையும் வெள்ளை மாளிகையையும் உஷார்படுத்தி வருபவர் இந்தச் சமந்தா பவரே என்று இலங்கை அரசு நம்புவதாகத் தோன்றுகிறது. வன்னிப் போரின் இறுதி நாள்களிலும், போர் முடிவுக்கு வந்த நாள்களிலும் அலரிமாளிகையில் ஜனாதிபதிக்கும் அவரது சகோதரர்களுக்கும் இடையேயான வட்டமேசை ஆலோசனைகளில் அடிக்கடி உச்சரிக்கப்பட்டதொரு பெயர் சமந்தா பவர். கடந்த 2010 ஆம் ஆண்டு …
-
- 3 replies
- 673 views
-
-
இங்கே தமிழருக்கு எதிரான செயல்கள் நிறுத்தப்பட்டால் அங்கே தானாகவே நிறுத்தப்படும் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் மண்டையை உடைத்து கொலை செய்ய முயற்சி செய்தவர்களும், பிரபல இந்திய நடிகர் ஷாருக் கான் மீது கொழும்பில் வெடிகுண்டு வீசியவர்களும், இலங்கை வந்த அமெரிக்க-பிரித்தானிய-பிரான்சிய அமைச்சர்களுக்கு எதிராக கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களும், இன்று தமிழகத்தில் இலங்கை அரசாங்க அரசியல்வாதிகளுக்கு எதிராக நடத்தப்படும் ஜனநாயக எதிர்ப்பு போராட்டங்களை விமர்சிப்பது நல்ல வேடிக்கை என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கை அமைச்சர்களுக்கு எதிராக தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் கருத்து தெர…
-
- 1 reply
- 838 views
-
-
தமிழர் தாயக பூமியான வடக்குப் பிரதேசத்தை அடிமைகள் வாழும் பிரதேசமாக மாற்றியமைப்பதற்கே இந்தக் கொடுங்கோல் அரசு படையினரை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கின்றது என நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரும், தெஹிவளை கல்கிஸை மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன குற்றஞ்சாட்டியுள்ளார். மயான பூமியையும் ஆக்கிரமித்து, அங்கு பௌத்த கொடியை நிலைநாட்டி சிங்கள தேசம் என்ற இனவாத மந்திரத்தை ஓதி நாட்டை சிங்களமயமாக்குவதற்கு அரசு முயற்சிக்கின்றது என்றும் அந்தக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. தங்களின் உரிமைகளைக் கோரிப் பேராடிய தமிழர்களைக் கொன்று குவித்த இந்த அரசு, தமிழினத்தின் தனித்துவ சின்னங்களையும் இன்று அழித்து வருகின்றது எனவும் நவசமசமாஜக் கட்சி குறிப்பிடுகின்றது. யாழ். குடாநாட்டில்…
-
- 3 replies
- 780 views
-
-
கனடா தமிழ் இளையோர் அமைப்பு தியாகி பொன். சிவகுமாரன் நினைவாக ’தமிழீழ மாணவர் எழுச்சி நாள்’ மாநாட்டினை கடந்த 9ஆம் திகதி நடத்தியிருந்தது. இம்மாநாடானது தமிழீழப் போரின் தியாகி பொன். சிவகுமாரனின் தன்னலமற்ற அர்ப்பணிப்பினை மாணவர்களுக்கு எடுத்து விளக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இவரின் அர்ப்பணிப்பு தமிழீழ விடுதலைப் போரில் பல்லாயிரக்கணக்கான மாணவர்களைப் போராட்டத்தில் இணைவதற்குப் பாதையமைத்துக் கொடுத்திருந்தது. முதலில் அமைதி வணக்கமும் மலர் வணக்கமும் இடம்பெற்றன. கனடா தமிழ் இளையோர் அமைப்பினால் வழங்கப்பட்ட தியாகி பொன்.சிவகுமாரனின் வாழ்வும் கல்வித் தரப்படுத்தலுக்கெதிரான அவரது போராட்ட அர்ப்பணிப்பும் தொடர்பான கருத்தாக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமானது. இந்நிகழ்வில் ஒன்…
-
- 1 reply
- 746 views
-
-
முகமாலை மீள்குடியேற்றம் தொடர்பில் ஆராய்வு கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முகமாலை பொந்தர்குடியிருப்புப் பகுதியின் மீள்குடியேற்றம் தெடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தலைமையில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த கிராம மக்களை அடுத்த சில வாரங்களில் மீள்குடியேற்றம் செய்வது தொடர்பில் இந்த கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டது. ஹலோ றஸ்ட் நிறுவனத்தினரால் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு அதற்கான உறுதிப்பட்ட சான்றிதழ் கிடைக்கப்பெற்ற நிலையில் இந்த மீள் குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. மீள குடியேற தயாராக உள்ள அறுபது குடும்பங்களை அங்கு மீள்குடியேற்றுவது தொடர்பிலும் அவர்களுக்கான தற்காலிக வீட்ட…
-
- 0 replies
- 828 views
-
-
33 LLRC பரிந்துரைகளை தேசிய ரீதியில் செயற்படுத்த நடவடிக்கை - லலித் வீரதுங்க கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட 33 பரிந்துரைகளை தேசிய ரீதியில் செயற்படுத்துவது குறித்து சிறப்பு செயலணி கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு இன்று (13) கருத்து வெளியிட்ட போதே லலித் வீரதுங்கா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள 135 பரிந்துரைகளில் 33 பரிந்துரைகள் தேசிய ரீதியில் செயல்படுத்தப்பட வேண்டியவை என LLRC சிறப்பு செயலணியின் தலைவரான ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க கூறியுள்ளார். …
-
- 0 replies
- 607 views
-
-
முல்லைத்தீவு- திருமுறிகண்டி பிரதேசத்தில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் நிலத்தை விடுவிக்க வலியுறுத்தி நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தவர்களை இராணுவப் புலனாய்வாளர்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் சிலர் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குறித்த பிரதேசத்தில் சுமார் 163 குடும்பங்களுடைய நிலம் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டு யுத்தத்தில் அங்கவீனர்களாக்கப்பட்ட படையினருக்கான ஆயிரம் வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப் பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் 117குடும்பங்கள் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும், 46குடும்பங்கள் வவுனியா முகாம்களிலும் வாழ்ந்து வருகின்றனர். இந்த அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றாமல், கொக்காவில் பக…
-
- 0 replies
- 427 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சட்ட மருத்துவ அதிகாரியாக சிங்கள இனத்தவரை சேர்ந்த எஸ் .சேனதுங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்திற்கு கடந்த காலங்களில் சட்ட மருத்துவ அதிகாரியினை நியமிக்காத சிறீலங்கா அரசு தற்போது சிங்களவரைநியமித்துள்ளது எத்தனையோ தமிழர்கள் சட்டமருத்துவ அதிகாரியாக இருக்கின்ற நிலையில் தற்போது சிங்களவரை நியமித்ததன் பிண்ணயியில் மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளார்கள்,முல்லைத்தீவு மாவட்டத்தில் இறந்தவர்களை உடற்கூற்று பரிசோதனையினை மேற்கொள்ள மருத்துவ அதிகாரிகள் இல்லாத காரணத்தால் கிளிநொச்சி,வவனியா,யாழ்ப்பாண மாவட்டங்களுக்கே உடலங்கள் செலவு செய்து மக்கள் எடுத்து சென்றுள்ளார்கள். முற்று முழுதாகமுல்லைத்தீவு மாவட்டம் தமிழ்மக்களை கொண்டு வாழு…
-
- 0 replies
- 475 views
-
-
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் மண்டையை உடைத்து கொலை செய்ய முயற்சி செய்தவர்களும், பிரபல இந்திய நடிகர் ஷாருக் கான் மீது கொழும்பில் வெடிகுண்டு வீசியவர்களும், இலங்கை வந்த அமெரிக்க-பிரித்தானிய-பிரான்சிய அமைச்சர்களுக்கு எதிராக கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களும், இன்று தமிழகத்தில் இலங்கை அரசாங்க அரசியல்வாதிகளுக்கு எதிராக நடத்தப்படும் ஜனநாயக எதிர்ப்பு போராட்டங்களை விமர்சிப்பது நல்ல வேடிக்கை என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கை அமைச்சர்களுக்கு எதிராக தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது, இலங்கை அமைச்சர்களுக்கு, இந்திய-தமிழக அரசுகள் பாது…
-
- 0 replies
- 648 views
-
-
திருகோணமலைக்கு கொழும்பிலிருந்து வந்த சுகந்திர வர்த்தக மையத்தின் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த குழுவொன்று அங்குள்ள 200 இற்கும் மேற்பட்ட பெண்களை திருமலை நகராட்சி மன்றத்துக்கு அழைத்து தொழில் வாய்ப்பு தருவதாகக் கூறி கூட்டம் வைத்துள்ளனர். இவர்கள் மிக விரைவில் கொழும்புக்குக் கொண்டு செல்லப்படவுள்ளனர் எனவும் தகவல் கிடைத்துள்ளது. இவர்கள் எங்கு அழைத்துச் செல்லப் போகின்றார்கள்? எதற்கு அழைத்துச் செல்லப்போகின்றார்கள்? என்று கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோரியுள்ளார். “கொழும்பு வர்த்தக மையத்திலிருந்து வந்தவர்கள் ஆடைத்தொழிற்சாலை மற்றும் ஏனைய தொழில்களில் தங்களை ஈடுபடச் செய்யவுள்ளனர் எனப் பெண்கள் கூறுகின்றனர். தொழில் வாய்ப்பு இன்மையால் கிழக்கில் உள்ள இளைஞர், யுவதிகள் பாதிக்கப்படுக…
-
- 0 replies
- 797 views
-
-
http://naathamnews.com/ சிறிலங்கா தொடர்பில் ஐரோப்பிய ஊடகங்களில் வெளிவருகின்ற எதிர்மறையான செய்திகளினால், இலங்கைதீவிற்கான உல்லாச்துறையில், இழப்புக்கள் ஏற்படலாம் என்ற அச்சம், சிறிலங்கா அரச உல்லாசத்துறைக்கு ஏற்பட்டுள்ளது. சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், சர்வதேச ஊடகங்களில் வெளிவருகின்ற செய்திகளினால், சிறிலங்காவின் உல்லாதச் துறையில், முதலீகளைச் மேறகொள்ள ஐரோப்பிய நிறுவனங்கள் ஆர்வங்காட்டாமையே, இந்த அச்சத்துக்கு காரணமமென தெரிவிக்கப்படுகின்றது. தேயிலை ஏற்றுமதி மற்றும் ஆடை உற்பதத்தி சந்தைகளுக்கான வாய்ப்புக்களில் இழப்பு என சிறிலங்காவின் பொருளாதார வருவாய்க்கு, உல்லாசப் துறைiயினை, கணிசமாக சிறிலங்கா எதிர்பார்த்துள்ளது. இந்நிலையில் , இதனைச் சமாளிக்க ஐரோ…
-
- 1 reply
- 344 views
-
-
http://naathamnews.com/ இலங்கையில் அனைத்து சமூகங்களுக்கு இடையே நம்பிக்கையினைக் கட்டியெழுப்ப, மத சுதந்திரத்தினையும், மத சமத்துவத்தினையும் உத்தரவாதப்படுத்துமாறு, சிறிலங்கா அரசாங்கத்தினை World Evangelical Alliance அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையில் சிங்கள பௌத்த இனவாதிகளினால் இந்து, கத்தோலிக்க, இஸ்லாமிய சமூகத்தினர் அச்சுறுத்தல்கள் சமீபத்திய காலங்களில் அதிகரித்து வரும் இந்த வேண்டுகோள் வெளிவந்துள்ளது. தமிழர்களுக்கான நீதிவேண்டி மன்னார் மறைமாவாட்ட இராஜப்பு ஜோசப்பு ஆண்டைகையோடு, 31 கத்தோலிக்க குருமார்களினால் வெளியிடப்பட்ட அறிக்கiயினையும் சுட்டிக்காட்டி, சிறிலங்கா தொடர்பிலான அறிக்கையொன்றினை World Evangelical Alliance அமைப்பு வெளியிட்டுள்ளது. மத சுதந்தி…
-
- 0 replies
- 348 views
-
-
யாழ்.குடநாட்டிற்கு இரணைமடு குளத்து நீரை கொண்டுவருவதற்கான முழு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் இன்றை தினம் தெரிவித்துள்ளார். இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இரணைமடு குளத்து நீரை யாழுக்கு கொண்டுவருவது பற்றிய மாநாட்டின் முடிவில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அரச அதிபர், இரணமடு குளத்து நீரைப் பாதுகாத்து வழங்குவதற்குரிய நீர்தாங்கிகளை அமைப்பதற்காக காணிகளை கொள்வனவு செய்வதற்கு நடவகை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பிரதேச செயலளர்கள் பிரிவில் உள்ள காணிகளில் நீர்த்தாங்கிகள் அமைப்பதற்கு முறையாக காணிகளை சுவிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடப்படுள்ளது. அத்தோடு நிலத்தடி நீர்வளம், நீர்ப்பாசன முறைகள் தொடர்பாக ஆராயப்பட்டு முடிவ…
-
- 0 replies
- 569 views
-
-
குறி பார்த்துச் சுடுவதில் படையினரை விட வல்லவர்களான விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் தற்போது மெய்வன்மைப் போட்டிக்கு குறிபார்த்துச் சுடும் போட்டிக்குக்கூட துப்பாக்கி ஏந்த மறுக்கின்றனர். இவ்வாறு புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறீ கஜதீர தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது; எமது அமைச்சினூடாக புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பலர் பல்வேறு திறமைகளைக் கொண்டவர்கள். குறிப்பாக விளையாட்டுத் துறையில் சாதிக்கக்கூடியவர்கள். கிரிக்கெட், உதைபந்தாட்டம் போன்றவை மட்டுமன்றி குறிபார்த்துச் சு…
-
- 53 replies
- 4.3k views
-
-
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களால் தான் சிறிலங்கன் விமானசேவை மற்றும் மிகின் எயர் விமான நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதாக ஐதேக குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பில் நேற்ற நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஐதேக பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க, “சிறிலங்கா அதிபரும் அவரது அமைச்சர்களும் இந்த விமானங்களைப் பயன்படுத்துவதால் தான் 24 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது. 2010ம் ஆண்டில் இருந்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மட்டும் 35 நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். சிறிலங்கா அதிபரும் அவரது அமைச்சர்களும் வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்களால் நாட்டுக்கு அதிகபட்ச செலவுகள் ஏற்பட்டுள்ளன. ஆனாலும் மிகக்குறைந…
-
- 0 replies
- 346 views
-
-
திருகோணமலையிலுள்ள இந்தியாவின் குத்தகை எண்ணெய்க் குதங்களை இலங்கை அரசு மீளப்பெறவுள்ளது என செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கோண்டு எதிர்வரும் 29ம் திகதி இலங்கை செல்லவுள்ளார். கொழும்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் இதர அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களுடன் சிவ்சங்கர் மேனன் முக்கிய பேச்சுகளை நடத்தவுள்ளதாக அறியப்படுகின்றது. சிவ்சங்கர் மேனனின் கொழும்பு விஜயமானது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதொன்றல்ல என்றும், இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் தொடர்பில் முக்கிய பேச்சுகளை நடத்தவே அவர் அவசரமாக இலங்கை செல்கிறார் எனவும் அறியமுடிகின்றது. முன்னதாக, திருகோணமலையில் இந்திய எண்ணெய் நிறுவனத்த…
-
- 0 replies
- 702 views
-
-
இன்னசிற்றி பிறசுக்கு (Inner City Press) எதிராக ஐக்கிய நாடுகள் சபைக்கு பல்வேறு அநாமதேய தொலைபேசி அழைப்புக்கள் மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்படும் அதேவேளையில், 'தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக இந்த நிறுவனத்துக்கு நிதி வழங்கி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரந்தளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் தங்களது பதில் என்ன?' என்று யூன் 07 அன்று சிறிலங்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் இன்னசிற்றி பிறசிடம் கேள்வி எழுப்பியிருந்தார். முரண்பாடுகள் ஏற்படும்போது, சுய பாதுகாப்பை உறுதிப்படுத்தி சீரான, இருதரப்புக்கும் இடையில் மன்னிப்பை வழங்குவதை தனது நோக்கின் ஒரு பகுதியாகக் கொண்டுள்ள இன்னசிற்றி பிறஸ், சிறிலங்கா பத்திரிகையாளரால் எ…
-
- 0 replies
- 662 views
-
-
மட்டக்களப்பை ஆக்கிரமிக்கும் சிங்கள இராணுவத்தினர் பட்டிப்பாழை வட்டாரத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிகுந்த தாந்தாமலை முருகன் கோயில் கற் சிலைகளை இடித்து சிதைத்துள்ளனர் கிழக்குப் பகுதியினர் இக்கோயிலை ' சின்ன கதிர்காமம்' கோயிலென்று அழைப்பது வழக்கமாகும். இதனை சுற்றியுள்ள 25 ஏக்கர் நில பகுதி, 1959-ஆம் ஆண்டில் சிலோன் நீதிமன்ற ஆணையினரால் சைவ புனித தளமாக முத்திரையிடப் பட்டது. தாந்தாமலை முருகன் கோயில், 1994-ஆம் ஆண்டு முதல் பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக புலிகள் படையினரால் காக்கப்பட்டும் நன் முறையில் பராமரிக்கப்பட்டும் வந்தது. ஆனால், நடந்த போருக்குப் பின்னர் அது இலங்கை இராணுவ படையினரின் கைக்கும் கொழும்பு தொல்பொருள் ஆராய்ச்சி துறைக்கும் கைமாறிவிட்டது. இதனிடையே, இச்சைவ கோயிலுக…
-
- 7 replies
- 1.2k views
-
-
காலி மாவட்டத்தில் பெந்தர எல்பிட்டிய பகுதிகளில் முஸ்லிம்களின் கடைகளில் சிங்களவர்கள் பொருட்கள் வாங்குவதை நிறுத்துமாறும் முஸ்லிம்கள் கடைகளை மூடிவிட்டுச் செல்லுமாறும் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கையெடுக்க வேண்டுமென மேல் மாகாண சபை உ றுப்பினர் முஜிபுர் ரகுமான் கோரியுள்ளதுடன் இல்லாவிட்டால் இது ஏனைய பகுதிகளுக்கும் பரவும் அபாயமுள்ளதாகவும் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில தினங்களாக பெந்தர, எல்பிட்டிய பகுதிகளில் தேசப்பற்றாளர்கள் என்ற பெயரில் முஸ்லிம்களை கடைகளை மூடிவிட்டுச் செல்லுமாறும் முஸ்லிம்களின் கடைகளில் சிங்களவர்கள் பொருட்கள் வாங்குவதை நிறுத்த வேண்டுமெனவும் கூறி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. அங்கு முஸ்லிம்களின் …
-
- 16 replies
- 1.6k views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை மையப்படுத்தி இரண்டு ஹிந்திப் படங்கள்தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 'சிலோன்' மற்றும் 'ஜப்னா' என இந்தப் படங்களுக்குபெயரிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை மையப்படுத்தி இந்தத் திரைப்படங்கள் வெளிவரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரபல திரைப்பட இயக்குனர்களான சந்தோஷ் சிவன் மற்றும் சூஜித் சிர்கார் ஆகியோர்இந்தப் படங்களை இயக்குகின்றனர். நீண்டகாலமாக மனதில் இருந்த கதையை திரை வடிவில் கொண்டு வருவதாக சந்தோஷ் சிவன் தெரிவித்துள்ளார் . இதேவேளை, புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களுக்கு நிகரான தோற்றத்தை உடையவர்களை திரைப்படத்தில் நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளதாக சூஜித்சிர்கர் தெரிவித்து…
-
- 10 replies
- 1.5k views
-
-
யாழ்.மாவட்ட பாடசாலைகளுள் உள்புகுந்துள்ள அரசியலினால் அனைவரும் திண்டாடியே வருகின்றனர். ஏற்கனவே யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி அதிபர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளின் பேரில் வடமாகாண ஆளுநர் சந்திரசிறியினால் தூக்கியடிக்கப்பட்டிருந்தார். கல்வி அதிகாரி ஒருவரது அடாவடிகளுக்கு எதிராக மாணவர்கள் பாடசாலை பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டமையையடுத்தே குறித்த அதிபர் பழிவாங்கும் வகையில் தூக்கியடிக்கப்பட்டிருந்தார். குறித்த அதிகாரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நெருங்கிய உறவினராக இருந்தமையே பழிவாங்கலிற்கு காரணமாகவிருந்திருந்தது. இதனிடையே யாழ்.வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை அதிபரான திருமதி இராஜினிதேவி முத்துக்குமாரன் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரது இடமாற்றத்தை எதிர்த்து…
-
- 3 replies
- 956 views
-
-
சிறுவர்கள் பற்றிய கறுப்புப் பட்டியலில் இருந்து சிறீலங்காவை அகற்றியுள்ள ஐக்கிய நாடுகள் சபை, சிறுவர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகளில் அந்த நாடு முன்னேறி வருவதாகத் தெரிவித்துள்ளது. சிறுவர்களும், ஆயுத மோதலும் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த அறிக்கையில், இலங்கையில் சிறுவர்களுக்கான கல்வி, சுகாதாரம், மற்றும் காணாமல்போன சிறுவர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை என்பவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், போரில் ஈடுபட இணைக்கப்பட்டிருந்த 1400 சிறுவர்கள் இதவரை எங்கு எனத் தெரியவில்லை எனவும், இவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் இந்த அறிக்கை கூறுகின்றது. இருப்பினும், இந்தச் சிறுவர்களைத் தேடிக்கண்டுபிடிக்க …
-
- 0 replies
- 775 views
-
-
தமிழ் மக்களின் வெளி;ப்பாடகவே நான் சிங்கக் கொடியினை ஏற்றவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார். அண்மையில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற சமூக அமைச்சின் நிகழ்வென்றில் வைத்து சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பேரேரா பல தடைவ வர்புறுத்தியும் தேசியக் கொடியான சிங்கக் கொடியினை ஏற்ற குறித்த பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துறை விநாயக மூர்த்தி திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்திருந்நதார். இந்நிலையில், மேற்படி சம்பவம் தொடர்பாக அப்பாத்துரை விநாயமூர்த்தி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்தது தொடர்பாக அவர் வெளியிட்ட கருத்திலேயே மேற்படி விடையத்தினைத் தெரிவித்துள்ளா…
-
- 0 replies
- 783 views
-
-
கடந்த வாரம் குருதிஸ்தானில் நடைபெற்ற ‘வீவா’ உதைபந்தாட்டப் போட்டியில் தமிழீழத்தின் சார்பாகக் கலந்துகொண்ட தமிழீழ உதைபந்தாட்ட அணிக்கு கனடா, ரொறன்ரோ, பியர்சன் சர்வதேச விமானநிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. உலகளாவிய தமிழ் இளையேர் அவையின் ஏற்பாட்டில், சர்வதேச அரங்கில் இடம்பெறும் இந்த காற்பந்தாட்ட போட்டியான வீவா உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் தமிழீழ அணியும் பங்கு பற்றியிருந்தது. குருதிஸ்தானில் (வட ஈராக்) இடம்பெற்ற இந்த உலகக்கிண்ணப் போட்டியில், தமிழீழம் அணி சார்பாக கனடா, சுவிற்சர்லாந்து, மற்றும் பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழ் விளையாட்டு வீரர்கள் விளையாடி இருந்தனர். ஐ.நா. நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளுக்கிடையே ’ஃபீஃபா’ (FIFA) அமைப்பினால் நடத்தப்படும் உதைபந்த…
-
- 0 replies
- 737 views
-
-
யேர்மனி Rheinland Pfalz மாநிலத்தில் சென்ற சனிக்கிழமை பல்லின சமூகத்தினருக்காக நடைபெற்ற கலாச்சார நிகழ்வில் தமிழ் இளையோர்கள் தமிழர்கள் மீது சிங்கள அரசு மேற்கொள்ளும் இனவழிப்பை கலை நிகழ்வின் ஊடாக வெகுசிறப்பாக எடுத்துக்காட்டினார்கள் .500 க்கும் மேலான யேர்மனியர்கள் கலந்துகொண்ட இவ் நிகழ்வில் பலர் இப்படியான கொடுமைகளுக்கு தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் செய்தி தாம் இதுவரை ஆழமாக அறியவில்லை எனவும் அதேநேரம் இன்றைய உலகில் இப்படி நடந்திருப்பது மிக கவலை அளிப்பதாகவும் தெரிவித்தனர் . அத்தோடு இவ் நிகழ்வில் Landau நகர உள்ளூர் அரசியல்வாதிகள் கலந்துகொண்டு தமிழ்மக்களுக்கு தமது ஆதரவை தெரிவித்தனர் .இளையோர்களால் வழங்கப்பட்ட நாட்டிய நாடகத்தில் புலத்தில் ஈழத்தமிழர்கள் தாம் வாழும் அந்தந்த நாடு…
-
- 0 replies
- 384 views
-