Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைப் பிரச்னையில் தமிழர்களுக்கு ஆதரவாக சர்வதேசச் சூழல் மாறி வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது. இலங்கைக்குள்ளாகவே பரந்துபட்ட சுயாட்சி அதிகாரம் தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரியிருக்கும் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், "எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் தாய்மண்ணை ஆட்சி செய்யவும், சொந்த மக்களைப் பாதுகாக்கவும், தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்தவும் தமிழர்களுக்கு உரிமை வழங்கப்பட வேண்டும்'' என்றார். மட்டக்களப்பு நகரில் நடந்த கூட்டமைப்பின் 14-வது ஆண்டு மாநாட்டில் பேசியபோது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். கடந்த 30 ஆண்டு காலப் போராட்டம் ரத்தம், கண்ணீர், வீரம், ஏக்கம், பேரழிவு ஆகியவற்றால் எழுதப்பட்ட அத்தியாயம் எனக் குறிப்பிட்ட அவர், இந்தக் காலகட்…

    • 0 replies
    • 668 views
  2. தமிழ் வர்த்தகர் ஒருவரின் மூக்கைக் கடித்த சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தலைமறைவாகியுள்ளார். காலிமுகத்திடல் விடுதியில் கடந்த சனிக்கிழமை இரவு தமிழ் வர்த்தகர் ஒருவருக்கும் ஐதேகவின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துனேஸ் கங்கந்தவுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதையடுத்து தமிழ் வர்த்தகரைத் தாக்கிய சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் துனேஸ் கங்கந்த, அவரது மூக்கையும் கடித்தார். மூக்கு கடிபட்ட நிலையில் 41 வயதான திவாகரன் என்ற அந்த வர்த்தகர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடாளுமன்ற உ…

    • 9 replies
    • 975 views
  3. தனி ஈழம் ஒன்றை நிறுவுவது தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டில் எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை என அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் மாநாட்டின் போது 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன. இதன் போது இலங்கையில் தமிழர்களுக்கான தனி ராஜயம் ஒன்றை அமைப்பது தொடர்பிலும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதாக, சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதுகுறித்து வானொலியொன்று கருத்து கேட்டபோதே, நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார். ஒரே இலங்கையில் சமஉரிமையுடன் தமிழர்களும், சிங்களவர்களும் வாழக்கூடிய தீர்வு ஒன்று முன்வைக்கப்…

    • 1 reply
    • 772 views
  4. இலங்கையின் கொலைக்களங்கள்: தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் யமுனா ராஜேந்திரன் இங்கிலாந்தின் சேனல் நான்கு தொலைக்காட்சி, 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையின் கொலைக்களங்கள், ஆவணப்படத்தினை வெளியிட்டது. இரண்டு ஆண்டுகளின்பின் 2012 மார்ச் மாதம் இலங்கையின் கொலைக்களங்கள் : தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் எனும் இரண்டாவது ஆவணப்படத்தை வெளியிட்டிருக்கிறது. 2012 மார்ச் 14 ஆம் திகதி இரவு 10.55 மணிக்கு சேனல் நான்கிலும், சேனல் நான்கு வரிசையில் படம் முடிந்து ஐந்து நிமிடம் பின்னதாக, நள்ளிரவு 11.55க்கு சேனல் ப்ளஸ் ஒன்றிலும் ஆவணப்படம் இரு முறை திரையிடப்பட்டது. துல்லியமான புரிதலுக்காக இருமுறையும் படத்தினைப் பார்த்தபின் இந்தப் பதிவினை எழுதத் துவங்குகிறேன். இலங்கையின…

    • 2 replies
    • 1.1k views
  5. உலகில் போர் இடம்பெறும் பிராந்தியங்களில் வல்லுறவை யுத்தத்துக்கான கருவியாக பயன்படுத்துவது தொடர்பான ஆதாரத்தை திரட்டுவதற்கு துரிதமாக அந்தப் பகுதிகளுக்கு ஆட்களை அனுப்பிவைப்பதற்கு தேவையான விசேட செயலணிப் பிரிவை பிரிட்டன் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பிரித்தானிய அரசின் இந்தச் செயற்பாடு இலங்கை அரசுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. முன்னாள் யூகோஸ்லாவியா, ருவாண்டா, மத்திய ஆபிரிக்கா, இப்போது சிரியா வென இத்தகைய போர்க்குற்றங்களை பார்க்க முடிகிறது. இந்நிலையில் இதற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கும் ஓரங்கமாக விரிவான முன்முயற்சியை பிரிட்டன் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்தது. இந்தவிசேட செயலணிக் குழுவானது நிபுணர்களைக் கொண்டிருக்கும், வெளிவிவகார அமைச்சே இக்குழுவை …

    • 1 reply
    • 1.2k views
  6. பிரித்தானியாவில் உள்ள மான்சன் கவுஸில் (Mansion House) எதிர்வரும் யூன் மாதம் 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் (நேரம்: 09:00 தொடக்கம் 17:00) பொருளாதார மன்றம் நடைபெறவுள்ளது. அந்த மன்றத்தில் உரையாற்றவிருக்கும் கொலைகாரன் மகிந்த ராஜபக்சவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு பொதுநலவாய வர்த்தக மன்றத்திற்கு கோரிக்கை விடுக்குமுகமாக புகார்செய்ய ஆங்கிலம் பேசத்தெரிந்த அனைவரும் உடனடியாக பின்வரும் தொலைபேசி இலக்கங்களினூடாகத் தொடர்புகொள்ளவும்: (44)2070248200 – (44)2070248239 – (44)2070248271 அதேவேளை, அன்றைய நாட்களில் எமது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக கண்டன ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நாடாத்துவதற்கு பிரித்தானிய வாழ் தமிழ்மக்கள் ஒழுங்குகளை மேற்கொண்டுவருகின்றனர். அவர்க…

    • 0 replies
    • 1k views
  7. சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் பிரித்தானிய பயணம் சிறிலங்காவுக்கு கடும் சவாலாக மாறியுள்ளது. பயணத்திற்கான தேதியை சிறிலங்கா அரச தரப்பு வெளிப்படையாக தெரிவிக்காக போதும், கடந்தமுறைப் பயணம் போல் இம்முறைப் பயணம் கேள்விக்குறியாகவிடக்கூடாது என்பதில் வலுதீவிரமாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்சிலும், லண்டனிலும் மக்கள் போராட்டங்கள் நடந்துள்ள நிலையில் , எதிர்பினைத் தொடர்ந்தும் வெளிப்படுத்துமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் அறைகூவல் விடுத்துள்ளது. சனநாயகத்தில் அபார நம்பிக்கை வைத்திருக்கும் பிரித்தானியா மண்ணில் , இரத்தம் தோய்ந்த கரங்களுடன் , பிரித்தானிய மாகாராணியை…

  8. அரசுக்கு விசுவாசமாக அதிகாரிகள் பலரும் வடக்கில் செயற்பட்டு வருகின்ற போதும் சந்தர்ப்பம் கிடைக்கும் வேளைகளில் எல்லாம் அவர்களை தூக்கியடிக்க ஆட்சியாளர்கள் தயங்குவதேயில்லை. அவ்வகையில் யாழ் அரச அதிபரை தொடர்ந்து இன்னுமொருவர் இடமாற்றத்திற்கு உட்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநரின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் சிங்கள மக்களுக்கு தமிழர்களின் நிலங்களை வழங்க மேற்கொள்ளப்பட்ட இரகசிய ஏற்பாடு தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு கசியவிட்ட காரணத்திற்காக கரைதுறைப்பற்று பிரதேச செயலர் எஸ்.தயானந்தாவும் உள்நாட்டலுவல்கள் அமைச்சிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளருக்கு தகவல் கிடைத்துள்ளது. குறித்த அறிவிப்பு இன்று காலை வழங்கப்பட்டிருக்கின்றது. இதேவேளை முல…

  9. தமிழர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பதில் மஹிந்த அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாக தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் தம்பர அமிலதேரர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதன் காரணமாக அந்நிய நாடுகளின் தலையீடுகளுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து மஹிந்தவின் ஆட்சி நாட்டிற்கு பெரும் சாபத்தையே பெற்றுக் கொடுத்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். விடுதலைப் புலிகள் இருந்த காலகட்டத்தை விட தமிழ் மக்கள் மீதான உரிமை மீறல்கள் தற்போது பன்மடங்கில் அதிகரித்துள்ளன. சர்வதேச தலையீடுகள் மேலோங்க அரசின் பொறுப்பற்ற தன்மையே காரணம் எனவும் அவர் கூறியுள்ளார். ஐ.நா.வையும் அமெரிக்காவையும் குறை கூறுவதை விடுத்து மனித உரிமைகள் தொடர்பில் பொறுப்புடைமையை அரசு பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ள…

  10. அணிசேரா நாடுகளின் அமர்வில் பங்கேற்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு, ஈரான் அழைப்பு விடுத்துள்ளது. ஈரானின் பிரதி வெளிவிவகார அமைச்சர் டொக்டர் அப்பாஸ் அக்ராச்சி இந்த அழைப்பை விடுத்துள்ளார். தற்போது இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஈரானின் பிரதி வெளிவிவகார அமைச்சர், இலங்கை பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேராவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு, ஈரானிய ஜனாதிபதி முஹமட் அஹமட்நிஜாடீன் விடுத்த அழைப்பு தொடர்பான தகவல்களை, பிரதி அமைச்சர் நியோமல் பெரேராவிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். அணிசேரா நாடுகள் அமைப்பின் 16ம் அமர்வுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30,31ம் திகதிகளில் ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நடைபெறவுள்ளது…

  11. கிளிநொச்சி கிருஷ்ணபுர மக்கள் சிறஙீலங்கா ஆக்கிரமிப்புப் படையினரின் தொடரும் கெடுபிடிகள் கரணமாக அவதிப்பட்டு வருவதாக கிளிநொச்சி செய்தியாளர் தெரிவிக்கின்றார். கிருஷ்ணபுரம் கிராம அலுவலர் அலுவலகத்துக்கு அண்மையாக உள்ள படையினரின் பயிற்சி முகாம் ஒன்றினுள் நிலைகொண்டுள்ள படையினரே தொடர்ந்து கிருஷ்ணபுரம் மற்றும் அதை அடுத்துள்ள பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக காலத்தில் மாற்று வலுவுள்ள (அங்கவீனர்கள்) போராளிகளின் புனர்வாழ்வு நிலையமாக இருந்த நவம் அறிவுகூடம் காணப்பட்ட இடத்தை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள படையினரே இவ்வாறு இடையூறை ஏற்படுத்துவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். இரவு நேரங்களின் வீடுகளுக்குள் அத்துமீ…

    • 0 replies
    • 582 views
  12. சிறீலங்காவினால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ஆக்கிரமிப்பு இனஅழிப்பு போரினைத் தொடர்ந்து தமிழ் மக்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு அவர்கள் இரண்டாம் தர குடிமக்கள் என்னும் பிம்பம் ஒன்றை ஏற்படுத்தும் நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டுள்ள நிலையில் தற்போது தமிழுக்கான முக்கியத்துவம் குறைக்கப்படுவதில் சிறீலங்கா அரசு திட்டமிட்ட நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக அரசு மற்றும் தனியார் விளம்பரங்கள் மற்றும் அறிவித்தலிகளில் சிங்களத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் தமிழ் மொழியை இரண்டாம் மொழியாக்கி அதை காலப்போக்கில் காணாமல் போகச் செய்ய, சிறுபான்மையிலும் சிறுபான்மயானவர்களே உபயோகிக்கும் மொழி என்னும் விழிப்புக்குள் கொண்டுவந்துவிட இன்னோரன்ன நகர்வுகள் மேற்கொள்ளப்…

    • 0 replies
    • 598 views
  13. ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக பணியாற்றும் தாமரா குணநாயகம் சிறிலங்காவின் இராஜதந்திர சேவையில் இருந்து விலகிக் கொள்ளவுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அண்மையில் கியூபாவுக்கான தூதுவராக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இவரை இடமாற்றம் செய்ததை அடுத்தே அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளார். கியூபாவுக்கான தூதுவர் பதவியை அவர் ஏற்கனவே நிராகரித்திருந்தார். இந்தநிலையில் அவர் ஆங்கில இணையத்தளம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில், சிறிலங்காவின் இராஜதந்திர சேவையில் தொடர்ந்து பணியாற்ற தாம் விரும்பவில்லை என்று கூறியுள்ளார். அத்துடன் பிறேசில் அல்லது கியூபாவுக்கான தூதுவர் பதவியை ஏற்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்…

    • 4 replies
    • 890 views
  14. நல்லிணக்க அறிக்கை : ஆராயும் குழு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் கட்சியின் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக சிறிலங்கா சுதந்திர கட்சி மத்திய செயற்குழுவினால் நான்கு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்திலேயே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த குழுவில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, பசில் ராஜபக்ஷ, ஜீ.எல்.பீரிஸ், மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய மெத்திவ் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் வாரத்தில் இந்த குழுவினால் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக ஆராயப்பட்டு பரிந்து…

    • 0 replies
    • 430 views
  15. புதுக்குடியிருப்பு கோம்பாவில் 4ம் வட்டாரம் அரசடிப் பிள்ளையார் கோவில் அருகில் உள்ள வீடொன்றில் குப்பை எரித்த போது குண்டு வெடித்து பெண் ஒருவர் படுகாயமடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்காப்படையினரால் வெடிபொருட்கள் அகற்றப்பட்டு அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட புதுக்கடியிருப்பு கோம்பாவில் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயாரான 37 அகவையுடைய அசோக்குமார் மனோரஞ்சிதம் என்ற தாயாரே படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மேற்படி இப் பிரதேசத்தை ராணுவமே துப்பரவு செய்து மக்களுக்கு ஒப்படைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலதிக விசாரணைகளை …

  16. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறும் காணாமல் போனவர்களை தேடிக் கண்டுபிடித்துத் தருமாறும் கோரி கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பும் காணாமல் போனோரை தேடியறியும் குழுவும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய சோஷலிச கட்சி, நவ சம சமாஜக் கட்சி உட்பட பல இயக்கங்கள் பங்குபற்றின. (படங்கள்: சமந்த பெரேரா) http://www.tamilmirr...9-12-11-11.html

  17. 'ஒன்றுபட்ட இலங்கைக்குள் உரிமைகள் கிடைக்காது என்பதை உலக சமூகத்துக்கு நிரூபிக்க வேண்டும்' ஒன்றுபட்ட இலங்கை என்ற அமைப்புக்குள் தமிழர்கள் தமது உரிமைகளைப் பெறுவது சாத்தியமற்றது என்பதை தாம் சர்வதேச சமூகத்துக்கு நிரூபிக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் 14 வது தேசிய மாநாட்டில் மட்டக்களப்பில் உரையாற்றுகையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை உள்நாட்டுப் போரின் போது இலங்கை அரசாங்கத்துக்கு இராணுவ மற்றும் இராஜதந்திர ரீதியில் ஆதரவினை வழங்கிய சர்வதேச சமூகம், அப்போது இலங்கை அரசாங்கம் தமக்கு வழங்கிய …

    • 0 replies
    • 634 views
  18. சீனாவின் Union Pay வங்கி அட்டை நிறுவனம் சிறிலங்காவின் வங்கி அட்டைப் பாவனைக்குள் நுழைந்துள்ளது. சீனாவின் Union Pay வங்கி அட்டைகளை சிறிலங்காவில் உள்ள 500க்கும் மேற்பட்ட வங்கி அட்டை இயங்கிகளில் பாவனைகளில் பாவனைக்கு உட்டபடுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவுக்கு சீனப் உல்லாச் பயணிகளை மேலும் உள்வாங்கும் நோக்கிலேயே சீன வங்கி அட்டைப் பாவனையினை ஊக்குவித்துள்ளதாக சிறிலங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறிலங்காவின் உட்கட்டுமானப்பணிகளில் மட்டுமல்ல தற்போது சிறிலங்காவின் உள்ளக குடியியல் கட்டுமானங்களுக்குள்ளும் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துச் செல்வதையே இது காட்டுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.(News TGTE) http://www.eeladhesa...chten&Itemid=50

  19. தவறிழைத்திருந்தால் என் மகனுக்கு தண்டனைக் கொடுங்கள் - ஆனால் என் மகனை ஒரு தடவையேனும் பார்க்க விடுங்கள் எனது பிள்ளை எங்கிருக்கிறார் என்று தெரியாது தவிக்கின்றேன். எனவே எனது மகன் எங்கிருக்கிறான் என அறிவியுங்கள். ஒரு தடவையேனும் நான் எனது மகனை பார்க்க அனுமதியுங்கள் இவ்வாறு இன்று இடம்பெற்ற அரசியல் கைதிகளை விடுதலைச் செய்யும் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட ஓர் அவலத்தாய் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார். கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலை முன்னால் இன்று நண்பகல் மேற்கொள்ளப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி அரசாங்கத்தை வலியுறுத்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஓர் தாய் கண்ணீர் மல்க இவ்வாறு ஊடகங்கள் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார். அத்த…

    • 0 replies
    • 573 views
  20. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று தாய்லாந்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார். இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி தாய்லாந்து பிரதமர் யின்லக் சினவத்ரா அவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார். ஜனாதிபதியை கெளரவிக்கும் முகமாக பிரதமர் சினவத்ரா பகல் போசன விருந்துபசாரமொன்றையும் அளிக்கவுள்ளார். ஜனாதிபதி அவர்களின் தாய்லாந்துக்கான இவ்விஜயத்தின் போது இருதரப்பு அரசியல் ஆலோசனை தொடர்பாகவும் தாய்லாந்து அரசாங்கத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்கின்ற குற்றவியல் நடவடிக்கைகள் சம்பந்தமான சட்ட உதவிகளை பரிமாறிக் கொள்ளும் உடன்படிக்கை தொடர்பில் உறுதிப்படுத்திக்கொள்ளும் ஆவணங்களை பரிமாறிக்கொள்வது தொடர்பில் இரு நாடுகளின் வெளிவிவகார அமைச்ச…

  21. அனோமா! சரத்திடம் சொல்லுங்கள் நாங்கள் முரண்பட்டால் புலி வந்துவிடும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ஷவிடம் இருக்கக் கூடிய பலம் பலவீனம் பற்றிய ஆய்வுகள் தமிழ்த் தரப்புக்கு அவசியமானதாக இருந்தாலும் அது பற்றி நாம் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. இதுதான் தமிழ்த்தரப்பில் இருக்கக் கூடிய மிகப் பெரிய பலவீனம். தன்னை எதிர்க்கக் கூடியவர்கள் அல்லது தனக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கக் கூடியவர்களை, இனங்கண்டு அவர்களை தன்னுடையவர்களாக மாற்றி விடக்கூடிய பலம் ஜனாதி பதியிடம் உண்டு. இதற்கு வாசுதேவ நாணயக்கார, டி.யு. குண சேகர, திஸ்ஸ விதாரண, விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் நல்ல உதாரணங்கள். ஜனாதிபதியின் ஆலோசகர் என்ற அடிப்படை யில் வாசுதேவ நாணயக்கார போன்றவர்களைத் தன் பக்கம் இழு…

  22. யாழ்ப்பாணத்தில் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டு, அங்கு இராணுவத்தினரின் பிரசன்னம் படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதுடன், அவ்விடங்களுக்கு பொலிஸார் நியமிக்கப்பட்டு வருகின்றனர் என யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய துதுவர் றொபின் மூடி குழுவினரை சந்தித்தபோதே அவர் இவ்வாறு கூறியதாக பாதுகாப்புப் படைகளின் யாழ். கட்டளைத் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நிலைமைகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதாபிமானப் பணிகள், முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுவரும் வாழ்வாதார…

  23. சிறிலங்காவில் 26 ஆண்டுகாலமாகத் தொடரப்பட்ட உள்நாட்டுப் போரானது நிறைவுக்கு கொண்டு வரப்பட்டு மூன்று ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கும் முயற்சிகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட போதிலும் கூட, இவர்கள் மீண்டும் தமது வாழ்வைக் கட்டியெழுப்புவதில் மிகக் கடினமான பிறிதொரு சூழலை எதிர்கொள்கின்றனர். "நான் பொருளாதார ரீதியாக பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுக்கிறேன். விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனர் என்பதில் நான் கவலை கொள்ளவில்லை. ஆனால் எங்களைப் போன்றவர்களுக்கு மிகச் சிறந்த வாழ்வாதார முறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்" என சிறிலங்காவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 34 வயதாக ர…

  24. யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவத்தினர் படுகொலைச் சம்பவங்களில் ஈடுபடுவது அதிகரித்து வருவதால் இவர்கள் அனைவரும் உள ஆற்றுப்படுத்தற் பயிற்சித் திட்டத்துக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படைக் கல்லூரியின் உளவியற்துறை விரிவுரையாளரான சௌமியா றாமநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். "யுத்தத்தில் பங்கு கொண்ட இராணுவத்தினர் முதலில் உளவியல் அழுத்தங்களுக்கு உட்படுகின்றனர். இவர்களுடன் பணியாற்றுபவர் என்ற வகையில் இதனை என்னால் உணர முடிகின்றது. அவர்கள் பல்வேறு உளவியல் தாக்கங்களுக்கு உட்படுகின்றனர்" என ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தில் பங்கு பற்றிய பின்னர் அவுஸ்திரேலியாவுக்குத் திரும்பிய இராணுவத்தினருடன் இணைந்து பணியாற்றிய றாமநாயக்க இவ்வ…

  25. சிறிலங்காவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு தஞ்சம்கோருவோருக்கு வி்டுதலைப் புலிகள் நிதியுதவி செய்கின்றார்கள் என்ற சிங்களத்தின் கூற்று உண்மைக்கு புறம்பானது என்கின்றார் அவுஸ்திரேலியத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு ஆறுமுகம். சிறிலங்காவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு வரும் புகலிடம்கோருவோருக்கு விடுதலைப் புலிகள் நிதி உதவி செய்வதாக அவுஸ்திரேலியாவுக்கான சிறிலங்காத் தூதுவர் அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் குற்றஞ்சாட்டியிருந்தார். சிறிலங்காத் தூதுவரின் குற்றச்சாட்டை மறுதலித்த தமிழ் சங்கத் தலைவர், ”தூதுவரின் குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இருக்கின்றதா?” எனவும் கேள்வியெழுப்பினார். அண்மைக் காலங்களில் அவுஸ்திரேலியாவுக்கு வரும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.