ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
யாழ். இந்தியத் துணைத் தூதுவராலயத்தில் கலாச்சர உத்தியோகத்தராக கடமையாற்றும் பிரபாகரனின் மகன் அக்சைஜன் வெள்ளை வானில் வந்தவர்களினால் கடத்திச் செல்லப்பட்டு இன்று சனிக்கிழமை காலை 7 மணியளவில் இறக்கிவிடப்பட்டுள்ளதாக எஸ். பிரபாகரன் தெரிவித்தார். கடத்திச் செல்லப்பட்ட அக்சைஜன் கிளிநொச்சியில் மறைவிடம் ஒன்றில் வைக்கப்பட்டு பின்னர் யாழ்.நல்லூர் பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளார். தனது மகன் தற்போது கிடைத்திருப்பதாகவும் அவர் நான்கு நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் எஸ். பிரபாகரன் குறிப்பிட்டார். இந்த கடத்தல் எதற்காக நடந்தது என்பது தொடர்பாக எதுவும் தெரியவில்லை. கடத்தல் காரர்களின் நோக்கம் என்ன என்பதும் புரியவில்லை எனவும் அவர் தெரிவித்தார். …
-
- 9 replies
- 1.2k views
-
-
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இன்று மாலை 4 மணிக்கு திறக்கப்படவிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் புதிய காத்தான்குடி அலுவலகம் இனந்தெரியாத நபர்களினால் தீவைத்து எரிகப்பட்டுள்ளது. இதனால் அலுவலக கட்டிடம் முற்றாக சேதமடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில் அமைக்கப்பட்டிருந்த இவ் அலுவலகம் இன்று மாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான றவூப் ஹக்கீமினால் திறந்து வைக்கபடபடவிருந்நமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். …
-
- 2 replies
- 805 views
-
-
தேசிய நூதனசாலையிலிருந்து புராதன வாள்கள் காணாமல் போன சம்பவமானது, புராணக்கதைகளையும் மூடநம்பிக்கைளையும் நம்பும் தலைமைத்துவத்தை நாடு கொண்டுள்ளதன் விளைவாகும் என ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் நேற்று கூறினார். பண்டைய சிங்கள் அரசன் துட்டகைமுனுவின் வாளை வைத்திருப்பவர் ஆயுள் முழுவதும் ஆட்சி செய்ய முடியும் என புராதன நம்பிக்கை உள்ளதாகவும் அவர் கூறினார்.'இத்தகைய நம்பிக்கைகள்தான் நூதனசாலையிலிருந்து புராதன வாள்களும் மோதிரங்களும் மர்மமாக காணாமல் போவதற்கு வித்திட்டதாகத் தோன்றுகிறது. மக்களைவிட சோதிட சக்தியை நம்பும் அரசியல் தலைமை உள்ளபோது இவ்வாறு நேரிடுகிறது. அவர்கள் தேடும் வாளை மாத்திரம் வைத்துக்கொண்டு ஏனைய பொருட்களையாவது நூதனசா…
-
- 4 replies
- 959 views
-
-
யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட 2011 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியல் இன்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, எதிர்வரும் திங்கட்கிழமை வாக்காளர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்படுமென யாழ் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் பி.குகநாதன் தெரிவித்தார். வாக்காளர் இடாப்பில் உள்ள பெயர் விபரங்களை கடந்த 15ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரை கிராம சேவையாளர் பிரிவுகளில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது. 2010 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலின் அடிப்படையில் நான்கு இலட்சத்து எண்பத்து நாலாயிரத்து எழுநாற்று 91 ஆக இருந்தது. இன்று உறுதி செய்யப்பட்ட 2011 ம் ஆண்டுக்கான தேர்தல் இடாப்பின் அடிப்டையில் நான்கு இலட்சத்து எண்பத்து இரண்டாயிரத்து 342 என கணிப்பிடப்பட்டுள்ளது. இந்நில…
-
- 3 replies
- 743 views
-
-
தெஹிவளை, கல்விஹார பிளேஸில் அமைந்திருக்கும் தாருல் ரஹ்மான் பள்ளிவாயல் மற்றும் குர்ஆன் மத்ரசாவின் செயற்பாடுகளை எதிர்த்து நேற்று ஆப்பாட்டம் ஒன்று இடமபெற்றுள்ளது. இந்த ஆப்பாட்டத்தில் பெரும்பாலான பௌத்த பிக்குகளும் சிங்களவர்களும் கலந்து கொண்டனர்.ஜாமியுஷ் ஷபாப் நிறுவனத்தின் காணியில் அமைந்திருக்கும் மேற்படி பள்ளிவாயல் மற்றும் குர்ஆன் மதரசா, பள்ளிவாயல் மற்றும் குர்ஆன் மதரசா என முறைப்படி பதிவு செய்யப்பட்டிருப்பதுடன், பதினைந்து வருடங்களாக இவ்விடத்தில் இயங்கி வருகின்றன. கடந்த சில வாரங்களாக குறித்த கட்டடம் புனரமைப்பு வேலைகளுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, இந்த பள்ளிவாயலின் இயக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முறைப்பாடு ஒன்று கல்விஹார பிக்குகளால் தெஹிவளை – கல்கிசை மேயரிடம் முன்வைக்கப்…
-
- 11 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பரமலிங்கம் தர்சானந்த்மீது மர்மநபர்கள் என்ற போர்வையில் இராணுவத்தினர் கூரிய இரும்பு ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். பலத்த காயங்களுக்கும் இரத்தம் சிந்தலுக்கும் அவர் முகம் கொடுத்திருக்கிறார். யாழ் பல்கலைகழக மாணவர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் பேசும் சமூகத்திற்கும் எதிரான அச்சுறுத்தலாகவே இந்தத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் வரலாறு முழுவதும் அடக்குமுறையாளர்களுக்கு எதிராக தமிழ்ச் சமூகம் சார்பில் போராட்டங்களை நடத்துபவர்கள். அவ்வாறான எழுச்சியையும் குரலையும் பார்க்கப் பொறுக்காத நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தபடப்ட்டிருக்கிறது. அன்று மே18. தமிழ் மக்களின் நெஞ்சில் முள்ளிவாய்க்கால் படுகொலை…
-
- 7 replies
- 1.3k views
-
-
தேவன்பிட்டியில் மக்கள் ஆர்பாட்டம். மன்னார் மாந்தை மேற்கு தேவன் பிட்டியில் மக்கள் ஒன்றுகூடி எதிர்ப்பு வெளியிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சிறீலங்காவின் கைத் தொழில் அபிவிருத்தி அமைச்சரின் இணைப்பாளர் ஒருவருக்கு எதிராகவே இவ்எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. மன்னார் தேவன் பிட்டி கடலோரமான பல்வேறு வளங்கள் உள்ள நிலையில் அமைச்சரின் பின்னணியில் அவற்றை சுரண்ட முட்பட்ட மேற்படி இஸ்லாமிய முதலீட்டாளரை எதிர்த்தும் அவரது முதலீடுகள் தேவன்பிட்டிக்கு வரக்கூடாது எனத் தொவித்துனம் மக்கள் இவ் ஆhப்பாட்டத்தை மேற்கொண்டதாக அறிய முடிகின்றது. தேவன் பிட்டி கடற்கரையில் பண்ணை அமைந்து கடல் உணவுகளை வளர்க்கமுற்பட்ட வேளை இவ் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றதாகவும் மக்கள் கடும் எதிர்ப்பை அடுத்து திட்டதை கை…
-
- 0 replies
- 797 views
-
-
ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவர் சரத் பொன்சேகா இதுவரை அரசாங்கத்திடம் பாதுகாப்பு கோரவில்லை என சிரேஷ்ட அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவினால் நேற்றையதினம் -25-0512- பாராளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். சரத் பொன்சேகா முன்னாள் இராணுவ தளபதி, எனவே அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தயாசிறி ஜெயசேகர கோரிக்ககைவிடுத்துள்ளார். http://www.seithy.co...&language=tamil
-
- 5 replies
- 626 views
-
-
கொழும்பு நகரைச் சுற்றிப் ருத்தப்பட்டுள்ள சிசி ரிவி கமரா மற்றும் சிசி ரிவி நடமாடும் கமராவான் என்பவற்றில் அதிஉயர் தொழில்நுட்பத்துடனான அதிகூடிய நினைவாற்றல் கொண்ட சிப் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. கொழும்பு நகரை சுற்றிப் பெருத்தப்பட்டுள்ள சிசி ரிவி கமரா மற்றும் சிசி ரிவி நடமாடும் கமராவான் என்பவற்றிலில் அதி உயர் தொழில் நுட்பத்துடனான அதி கூடிய நினைவாற்றல் கொண்ட சிப் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. http://thaaitamil.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87/
-
- 1 reply
- 911 views
-
-
பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இணைந்து கொள்வது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இடம்பெற்று வரும் பேச்சுக்கள் சாதகமான நிலையில் செல்வதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கிம் தெரிவித்தார். தேசியப் பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்காக பாராளுமன்ற தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைத்து கொள்ளும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்டீன் ரொபிச்சன் உடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் இலங்கை அபிவிருத்தியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு நாட்டில் உள்ள அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் எனவும் அமைச்சர் இதன் ப…
-
- 4 replies
- 687 views
-
-
அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறி அவுஸ்திரேலியப் பாதுகாப் புலனாய்வு நிறுவனத்தால் காலவரையற்ற தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலைச் செய்யக்கோரி மெல்பேர்ண் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் முன்னால் நேற்று வெள்ளிக்கிழமை (25-05-2012) ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. Refugee Action Collective(RAC) அமைப்பினரால் ஒழுங்குபடுத்தப்பட்ட இவ் ஆர்ப்பாட்டப் பேரணியில் பலத்த மழைக்கு மத்தியிலும் பல நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். காலவரையற்ற தடுப்புக்காவலை நிறுத்து! அகதிகள் அவுஸ்திரேலியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தானவர்கள் அல்ல என்று கோசமிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அகதிகளுக்கு ஆதரவான பல பதாகைகளை தாங்கிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். …
-
- 0 replies
- 750 views
-
-
ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. அண்மையில் வொசிங்டனுக்குச் சென்றிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான சிறிலங்கா குழுவினருடனான சந்திப்பின் போதே அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன் ஐ.நாவுடன் நெருக்கமாக இணங்கிச் செயற்பட வேண்டும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. இதற்கு சிறிலங்கா குழுவினர், நவநீதம்பிள்ளை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு ஏற்கனவே பச்சைக்கொடி காண்பிக்கப்பட்டு விட்டதாக பதிலளித்துள்ளனர். ஆனால் அவர் தனது பயணத்துக்கு முன்பாக உண்மை கண்டறியும் அதிகாரிகள் குழ…
-
- 1 reply
- 514 views
-
-
நாட்டின் பாதுகாப்பு நலன்கள் மற்று தேசிய பாதுகாப்பு நோகங்களை அடைவதற்கு ஏற்பவே இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடிய ருவான் வனிகசூரிய கூறியுள்ளார். இலங்கையின் வடக்கு கிழக்கிலும் படையினரின் பிரசன்னமானது நாட்டின் ஏனைய பாகங்களில் உள்ள நிலையை ஒத்திருக்க வேண்டும் என பிரித்தானிய உயர் ஸ்தானிகர் கூறியமைக்கு பதிலளிக்கும் முகமாகவே இராணுவப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 'வடக்கு கிழக்கிலிருந்து பெரும் எண்ணிக்கையான படையினர் அகற்றப்பட்டு ஏனைய மாகாணங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நாம் எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல் முழுமையாக நீங்கவில்லை. ஈழப் பிரிவினைவாதிகளின் நிகழ்ச்சி நிரல் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது. செய்தி ஊடகங்களில் இது மிக வெளிப…
-
- 0 replies
- 584 views
-
-
கொழும்பு, புறக்கோட்டையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சடலமாக மீட்கப்பட்டவர் தெமட்டகொடவைச் சேர்ந்த 63 வயதான கணபதி பொன்னுத்துரை என அடையாளம் காணப்பட்டுள்ளது.சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மரணம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. http://thaaitamil.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/
-
- 0 replies
- 682 views
-
-
முல்லைத்தீவு மாவட்டம், நந்திக்கடல் பகுதியில் சுதந்திரக் கட்சி சார்ந்த நபரொருவர் அனுமதியின்றி இறால் வளர்ப்புக்கென சுமார் 4ஏக்கர் நிலப்பகுதியை ஆக்கிரமிக்க மேற்கொண்டிருந்த முயற்சி பொதுமக்களின் எதிர்ப்பினால்,தோல்வியில் முடிந்திருக்கின்றது. இந்தவிடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த 14ம் திகதி குறித்த பகுதியில் முகாமிட்ட குறித்த நபரொருவர், கரைதுறைப்பற்று பிரதேச செயலரினால் வழங்கப்பட்ட கடிதமொன்றை வைத்துக் கொண்டு குறித்த பகுதியை ஆக்கிரமித்துள்ளார். மேலும் தன்னையொரு சுதந்திரக்கட்சி உறுப்பினர் எனவும். அதற்கான அனுமதி தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்தே, அப்பகுதியை கனரக வாகனங்களைக் கொண்டு தோண்டி அணைகளையும் அமைத்துள்ளார். இதனையடுத்து பிரதேச மக்களும், நந்திக்கடல…
-
- 0 replies
- 383 views
-
-
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக் கேணிப் பகுதிக் கடற்கரையோடு இருந்த சிறிய கடற்படை முகாமினை பெருந் தொகையான நிலப்பரப்பினை உள்ளடிக்கி விஸ்தரிப்புச் செய்யும் நடவடிக்கைகளில் சிறிலங்கா கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் காலத்தில் பெரும் பங்கு வழங்கிய முகாமாகக் கூறப்படும் இம் முகாம் விடுதலைப் புலிகளின் விமானங்களை கண்டறிவதற்கான றேடர் முகாமாக இது பயன்படுத்தப்பட்டு வந்தது.சுனாமித் தாக்கத்திற்குப் பின்னர் கடற்கரையில் இருந்து 300 மீற்றர் தூரத்திற்கு அப்பாலேயே மக்களுடைய குடிமனைகள் அமைக்கமுடியும் என்னும் நடைமுறை கொண்டுவந்ததன் பின்னர் பெரும் பகுதியான நிலப்பரப்பினை கடற்கரையோடு விட்டுவிட்டு அப் பகுதி மக்கள் தொலைவான இடத்திற்குச் சென்றனர். இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் …
-
- 0 replies
- 320 views
-
-
காணாமல்போதலை தடுத்து நிறுத்து! அரச பயங்கரவாதத்தை நிறுத்து! 26 .05 .2012 , சனிக்கிழமை ஆம்ஸ்டர்டாம் நகரில் ஆர்ப்பாட்டம் 31 .05 .2012 , டென் ஹாக் நகரில் மறியல் போராட்டம் அரசியல் படுகொலைகள், சித்திரவதைகள், நீண்டகால சிறைத் தண்டனைகள், இரகசிய தடுப்பு முகாம்கள், இவற்றோடு, காணாமல் போகச் செய்யும் அரச பயங்கரவாதமும் உலகின் பல நாடுகளில் நடைபெறுகின்றது. செல்வந்தர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையில் மிகப் பெரிய இடைவெளி காணப்படும் நாடுகளில், மக்கள் நிறுவனமயப் பட்டு எழுச்சி கொள்ளும் நேரங்களில், இந்த காணாமல்போதல்கள் இடம்பெறுகின்றன. சமூகத்தின் எதிர்ப்புணர்வை முறியடிப்பதற்கான திட்டம் அது. துருக்கி, குர்திஸ்தான், சிறிலங்கா, கொலம்பியா, மெக்சிகோ போன்ற நாடுகளில், ஆயிரமாயிரம் காணாமல்போனவர்கள…
-
- 0 replies
- 398 views
-
-
காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருவதாக கூறி இருபாலையைச் சேந்த பெண்மணியிடம் ஒரு இலட்சம் ரூபாயைப் பெற்று பணமோசடியில் ஈடுபட்ட நபரைக் கைது செய்யுமாறு யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றப்புலனாய்வுப் பரிவினருக்கு குறித்த நபர் பற்றிய விபரங்களை ஒப்படைத்துள்ளதாக யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார். யாழ்.குடாநாட்டில் வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பாணமோசடிகள் பற்றிய முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து செலவதாகவும் பணம் கொடுத்து விட்டு ஏமாறியவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தமக்கு நீதி வேண்டும் என கோரிக்கை விடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். லண்டனுக்கு அனுப்பிவைப்பதாக கூறி மலேசியாவில் கொண்டு சென்று அடிமைப்படுத்…
-
- 0 replies
- 344 views
-
-
எனது மகனை வெள்ளை வானில் கடத்தியவர்கள் யார்? எஸ்.பிரபாகரன் கேள்வி யாழ். இந்தியத் துணைத் தூதுவராலயத்தில் கலாச்சர உத்தியோகத்தராக கடமையாற்றும் பிரபாகரனின் மகன் அக்சைஜன் வெள்ளை வானில் வந்தவர்களினால் கடத்திச் செல்லப்பட்டு இன்று சனிக்கிழமை காலை 7 மணியளவில் இறக்கிவிடப்பட்டுள்ளதாக எஸ். பிரபாகரன் தெரிவித்தார். கடத்திச் செல்லப்பட்ட அக்சைஜன் கிளிநொச்சியில் மறைவிடம் ஒன்றில் வைக்கப்பட்டு பின்னர் யாழ்.நல்லூர் பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளார். தனது மகன் தற்போது கிடைத்திருப்பதாகவும் அவர் நான்கு நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் எஸ். பிரபாகரன் குறிப்பிட்டார். இந்த கடத்தல் எதற்காக நடந்தது என்பது தொடர்பாக எதுவும் தெரியவில்லை. கடத…
-
- 1 reply
- 661 views
-
-
இன்று திறக்கப்படவிருந்த முஸ்லிம் காங்கிரஸின் புதிய அலுவலகம் தீவைத்து எரிப்பு (படங்கள்) மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இன்று மாலை 4 மணிக்கு திறக்கப்படவிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் புதிய காத்தான்குடி அலுவலகம் இனந்தெரியாத நபர்களினால் தீவைத்து எரிகப்பட்டுள்ளது. இன்று அதிகாலை இக்கட்டிடத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அலுவலக கட்டிடம் முற்றாக சேதமடைந்துள்ளது. புதிய காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில் அமைக்கப்பட்டிருந்த இவ் அலுவலகம் இன்று மாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான றவூப் ஹக்கீமினால் திறந்து வைக்கபடவிருந்தமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்…
-
- 1 reply
- 720 views
-
-
இலங்கையில் மிகவும் மோசமான மனித உரிமை மீறல்கள் அரச படைகளினால் மேற்கொள்ளப்படுகின்றன! அமெரிக்கா அமெரிக்க அரசுத்துறையினால் வெளியிடப்பட்டுள்ள உலக நாடுகள் குறித்த வருடாந்த அறிக்கையில் இலங்கை நிலவரம் குறித்து கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மிகவும் மோசமான மனித உரிமை பிரச்சினைகளாக, அரசாங்கப் படைகளாலும், துணைப்படைகளாலும் மேற்கொள்ளப்படும் சட்டத்துக்கு விரோதமான கொலைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் நடக்கும் இப்படியான கொலைகள், அரசியல் நோக்கம் கொண்டவை என்றும், சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்களும், விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்று பார்க்கப்படுபவர்களும், செய்தியாளர்களும் அரசாங்கத்துடன் இ…
-
- 0 replies
- 863 views
-
-
மன்னார் நாகதாழ்வு கிராமத்தில் ஆலமரத்தடியில் உடைந்த நிலையில் காணப்பட்ட புத்தர் சிலையினை தற்போது படையினர் மீண்டும் புனரமைத்து அங்குள்ள மக்ளை பாதுகாக்குமாறு வற்புறுத்தி வருவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார். இங்கு படையினரோ அல்லது சிங்கள மக்கலோ இல்லாத நிலையில் புத்த தர்மத்தையும் மீறி அவ்விடத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதனை பாதுகாக்குமாறு அங்குள்ள இந்து மக்களை படையினர் வற்புறுத்தியுள்ளதாகவும் அம்மக்கள் தெரிவித்தனர். நாள்தோறும் குறிப்பிட்ட பகுதிக்கு செல்லும் சிறீலங்காப்படையினர் அந்த புத்தர் சிலையினை மேலும் சீர்செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படங்கள் மன்னார் செய்தியாளார். http://thaaitamil.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%…
-
- 1 reply
- 490 views
-
-
எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் நியுசிலாந்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விஜயத்தின் போது நியுசிலாந்தில் பல்வேறு அரசியல் தரப்பினரையும் சந்திக்கவிருப்பதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் அவர் இலங்கையில் இல்லாத காலப்பகுதியில், எதிர்கட்சித் தலைவரின் பொறுப்புகள், ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்கவிடம் கையளிக்கப்பட்டுளளன. அத்துடன் இனப்பிரச்சினை தீர்வுக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் எதிர்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. http://www.seithy.co...&language=tamil
-
- 1 reply
- 514 views
-
-
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரிலுள்ள ஹோட்டலொன்றின் மீது வழக்குத் தொடுப்பதற்கு ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தீர்மானித்துள்ளார் என கொழும்பில் செய்திகள் வெளியாகியுள்ளன. நான்கு மாதங்களுக்கு முன்னர் மேற்படி ஹோட்டலில் தங்கியிருந்தபோது தான் கீழே விழுந்து காயமுற்றமை தொடர்பாகவே அவர் வழக்குத் தொடரவுள்ளார். அமைச்சர் கெஹலிய அவுஸ்திரேலியாவிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை இலங்கைக்குத் திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=60709&category=TamilNews&language=tamil
-
- 14 replies
- 1.2k views
-
-
இலங்கை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் மன்னார் ஆயருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாகக் கூறப்படும் சில கருத்துக்களுக்கு எதிராக மன்னார் கத்தோலிக்கர்களினால் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பிரார்த்தனைக் கூட்டத்துக்கு மன்னார் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. இத்தகைய கூட்டம் ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை உள்ளடக்கியது என்றும் அதனால் பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் ஏற்படலாம் என்று கூறி, அதனைத் தடுக்குமாறு மன்னார் பொலிஸார் நீதிமன்றத்தை அணுகியிருந்தார்கள். அந்த கூட்டத்தின் ஏற்பாட்டாளர்களாக 5 கத்தோலிக்க மதகுருமார் அந்த மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்கள். இதனை இன்று (25-05-12) விசாரித்த மன்னார் நீதிபதி யூட்சன் அவர்கள், கூட்ட ஏற்பாட்டாளர்களால், இந்தக் கூட்…
-
- 1 reply
- 549 views
-