ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143380 topics in this forum
-
அமெரிக்க அதிகாரி ஒருவருக்கும் போர்க்குற்றவாளி கோத்தபாய ராஜபக்ஷவிற்கும் இடையே நேற்று பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் இராணுவ ஒத்துழைப்பு மற்றும் அரசியல் விவகார துணைச்செயலர் வோல்டர் கிஹான் ( Maj Gen Walter D Givhan, Deputy Assistant Secretary for Plans, Programmes and Operations of the US State Department’s Bureau of Political – Military Affairs ) அவர்களுக்கும் கோத்தபாயவிற்கும் இடையே சுமார் இரு மணி நேரம் இந்த சந்திப்பு நடந்துள்ளது.இரு நாடுகளினதும் இராணுவ, பொருளாதார ஒத்துழைப்புக்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதாக கொழும்பு செய்திகள் கூறுகின்றன. http://thaaitamil.com/?p=17210
-
- 4 replies
- 908 views
-
-
ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மூவர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவொன்று நாளை இலங்கைக்கு விஜயம செய்ய உள்ளதாகக் செய்திகள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவின் கிரீன் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜென் லெம்பார்ட், ஸ்பெய்ன் சோசலிச கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜூவான் பெர்னாண்டோ லுபாஸ் மற்றும் லத்வியன் கிறிஸ்தவ டெமொகரட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இனிஸ் வெய்டரே ஆகியோர் அடங்கிய பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம செய்ய உள்ளது. இந்தக் குழுவினர், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங…
-
- 0 replies
- 366 views
-
-
அமேரிக்கப் படையினரின் உதவியினாலும் இத்தாலிய விடுதலை இயக்க போராளிகளின் போராட்டத்தாலும் நாசிப் படைகளில் இருந்தும் முஸ்ஸோலீனியின் சர்வாதிகாரத்தில் இருந்தும் இத்தாலி விடுதலைப் பெற்றது. றெஜியோ எமிலியா நகரில் கத்தாதிகோ எனும் இடத்தில் 28-12-1943ம் ஆண்டு முஸ்ஸோலீனியின் சர்வாதிகாரத்துக்கு எதிரான சிந்தனை கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாட்டுடன் உள்ளவர்களுமான 7 சகோதரர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்கள். சுதந்திரத்திற்காகப் போராடினவர்களை அழித்த ஓர் அடையாளமாக இவ்வேழு சகோதரர்கள் வாழ்ந்த வீட்டை கண்காட்சிக்காக அமைத்துள்ளார்கள்.சுதந்திர தினம் ஆன இன்று இவ்விடத்தில் 15000 க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் அமைப்புகள் இணைந்து வணக்கம் செலுத்தி பெரும் ஒன்றுகூட…
-
- 0 replies
- 431 views
-
-
போரில் தாம் ஒருபோதும் கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தவில்லை என்று சிறிலங்கா படைத்தரப்பு மறுத்துள்ள நிலையில், கிளஸ்டர் குண்டினால் பாதிக்கப்பட்ட ஒருவரை நேரில் கண்ட மருத்துவப் பணியாளர் ஒருவரின் சாட்சியத்தை ஏபி செய்தி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. சிறிலங்காவில் போரின் போது, வெடிக்காத கிளஸ்டர் குண்டினால் காயமடைந்த ஒருவரைத் தான் கண்டதாக அந்த மருத்துவப் பணியாளர் ஏபி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். சிறிலங்காவில் போரின் இறுதிகட்டத்தில், கிளஸ்டர் குண்டு பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஐ.நாவின் வெடிபொருள் நிபுணர் அலன் போஸ்டனின் அறிக்கையை ஏபி செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்டிருந்தது. இதனை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் அடிப்படையற்றது என்று நிராகரித்துள்ள நிலை…
-
- 0 replies
- 450 views
-
-
முல்லையில் போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் சிங்களவர்கள் மீனவர்கள் என்ற போர்வையில் குடியேற்றப்பட்டுவருகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் திட்டமிட்ட அடிப்படையில் ஆய்ரக்கணக்கான சிங்களக் குடியேற்றங்களை அசுர வேகத்தில் அரங்கேற்றி வருகின்றது இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. தமிழ் மக்களைச் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கு காலத்தை இழுத்தடிக்கும் அரசு, சிங்களக் குடியேற்றங்களை அரங்கேற்றி தமிழர் தாயகப் பகுதியையும் சிங்களமயப் படுத்துவதற்கு முயற்சிக்கின்றது என்றும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை இடாவிட்டால் தமிழ் மக்கள் இன்னுமொரு முள்ளிவாய்க்கால் அவலத்தைச் சந்திக்க நேரிடும் என்று தமிழ்த் தே…
-
- 0 replies
- 342 views
-
-
தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்டமை தொடர்பான விடயத்தை அடுத்து, இலங்கையில் பலமிக்க இஸ்லாமிய இயக்கமாக இருந்து வந்த அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைக்கு எதிராக மற்றும் ஒரு சபை நேற்று முதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை என்ற பெயரில் இந்த அமைப்பே நேற்று தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதலுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து கொழும்பிலும் ஏனைய இடங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை, ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட போதும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து வந்தது. எனினும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை, இலங்கையின் அரசாங்கத்துடன் இணைந்துள்ள முஸ்லிம் அமைச்சர்களுக்கு ஆதரவாக செயற்படுகி…
-
- 0 replies
- 381 views
-
-
ஐம்பது வருடங்களுக்கு மேற்பட்ட பாரம்பரியத்தையும் அழகிய சித்திரத்தேரையும் கொண்டு, வன்னி மக்களின் நம்பிக்கை தாயாக விளங்கக்க கூடிய கிளிநொச்சி கனகாம்பிகை அம்பாளின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது. 2009இற்கு முன்னர் மிகவும் அருள்பெருக்கு நிறைந்த பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு சிறப்புற்ற இவ்வாலயம், போருக்கு பின்னர் பல்வேறு நெருக்கடிகளை இராணுவத்தாலும் சிங்கள சுற்றுலா பயணிகளாலும் புனிதம் மாசுபடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சியின் நூற்றாண்டு பெருமை கொண்ட 30000இற்கும் மேற்பட்ட ஏக்கர் வயல்களின் செழிப்புக்கும் உழவர்களின் உவப்புக்கும் பஞ்சங்களுக்கும் பரிவுகடாட்சமாகவும் விளங்கும் இணைமடு பெருங்குளத்தின் காவல் தெய்வமாக இருக்கும் கனகாம்பிகை அம்பா…
-
- 0 replies
- 409 views
-
-
யாழ்ப்பாணம் நாவாந்துறை, பொம்மை வெளிப்பகுதியிலுள்ள வீடு ஒன்றில் தனது மனைவியைப் பூட்டிவைத்து மண்ணெண்ணை ஊற்றி கொழுத்த முயற்சி செய்தார் என்ற சந்தேகத்தில் குறித்த பெண்ணின் கணவனை கைது செய்துள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்மணி (வயது 40) கணவனிடமிருந்து தப்பியோடி யாழ்.பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்து தனக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பாக முறையிட்டுள்ளார். அவரிடமிருந்து முறைப்பாட்டைப் பதிவு செய்து கொண்டு அப் பெண்ணின் கணவனைத் தோடி யாழ்.பொலிஸார் இரண்டு வாகனத்தில் விரைந்துள்ளதாகவும் அவர் யாழ்.நகரிலுள்ள மதுக்கடை ஒன்றில் மது அருந்திக் கொண்டிருக்கும் போது விலங்கிடப்பட்ட நிலையில் தூக்கி வாகனத்தில் ஏற்றப்பட்டுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இச் சம்ப…
-
- 2 replies
- 441 views
-
-
”நீங்கள் உடையுங்கள். ஆனால் அந்த உடைப்பு வரலாற்றில் இடம்பெறும் என்பதை மறவாதீர்கள்” மனோ கணேசன் இந்நாட்டில் இன்றுள்ள இனவாத பிரிவினைவாத கட்சி ஜாதிக ஹெல உறுமய என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய தம்புள்ள பள்ளிவாசல் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். கொழும்பு நகரமண்டப தெவதகஹா பள்ளிவாசலுக்கு எதிரில், வெள்ளிக்கிழமை நண்பகல் பிரார்த்தனைகளுக்கு பின்னர் முஸ்லிம், தமிழ், சிங்கள அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இங்கு தொடர்ந்து உரையாற்றிய மனோ கணேசன், இந்நாட்டில் இன்று இனவாதத்தையும், பிரிவினைவாததைய…
-
- 0 replies
- 732 views
-
-
திருமுறிகண்டியில் பொது மக்களது மீள்குடியமர்விற்கு இராணுவத்தினர் தொடர்ந்தும் தடைவிதித்து வருவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.திருமுறிகண்டியில் மீளக்குடியமர சுமார் 115 குடும்பங்கள் வரையில் தயாராக உள்ளபோதும், அவர்களுக்கான 200 ஏக்கருக்கும் அதிகமான பகுதியை இராணுவத்தினர் இன்னமும் விடுவிக்காமல் தம் வசம் வைத்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக வழக்கொன்றும் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் 64 ஏக்கர் நிலப்பரபையே விடுவிக்க இராணுவம் சம்மதித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவித்து தருமாறு அப்பகுதிப் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்னர். http://thaaitamil.com/?p=17224
-
- 0 replies
- 261 views
-
-
தம்புள்ளை பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தாக்குல் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முஸ்லிம்கள் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தனர். இந்தச் சம்பவத்தின் பின்னணியில், அரசாங்கம் பல தரப்பினரைப் பயன்படுத்தி மதங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த முயற்சித்தமைக்கும் இதன்போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஜனாதிபதி தென்கொரியாவிலிருந்து நாடு திரும்பியதும், இந்தப் பிரச்சினை குறித்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தும்வரை வெள்ளிக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டாம் என அகில இலங்கை ஜம்யத் உலமா சம்மேளனமும், அரசாங்கத்திலுள்ள சில முஸ்லிம் அரசியல்வாதிகளும், வேண்டுகோள் விடுத்திருந்தனர். எனி…
-
- 4 replies
- 1k views
-
-
கொழும்பு: முள்ளிவாய்க்கால் பகுதியில் 45,000 தமிழர்கள் அடைக்கலம் புகுந்திருந்ததால், அங்கு தாக்குதல் நடத்த சற்று தயங்கினோம். ஆனால் ராஜபக்சேதான் தொடர்ந்து தாக்கி அழிக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்தே மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் அங்கு தொடர்ந்து தாக்குதல் நடத்தினோம். இதனால்தான் ஈழப் போரில் வெல்ல முடிந்தது அந்நாட்டு ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூரியா தெரிவி்ததுள்ளார். ஜெயசூரியாவின் இந்தப் பேச்சு, ராஜபக்சேவுக்கு எதிரான போர்க்குற்றசாட்டுக்கு தேவையான வலுவான ஆதாரமாக பின்னர் உருவெடுக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஈழத்தில் நடந்த இறுதிகட்டப்போரின்போது முள்ளிவாய்க்காலில் விஷ கொத்துக்குண்டுகள் வீசி 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த போர்க்குற்றத்திற்கு எதிராக ஐ.நா. சபையில் த…
-
- 2 replies
- 844 views
-
-
தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் கொழும்பு மாநகர சபைக்கு உள்பட்ட பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளது. ஆர்ப்பாட்டத்தின் காரணமாக மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் பாரிய அளவிலான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் இவ் ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான முஸ்லீம் மக்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த தம்புள்ள பள்ளிவாசலை அகற்றி விகாரை அமைப்பதற்கு பௌத்த பிக்குகள் மேற்கொள்ளும் முயற்சிக்கு முஸ்லீம் சமூகம் உள்ளிட்ட ஏனைய சமூகத்தினரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். பிக்குகளின் செயற்பாட்டை கண்டித்து அம்பாறை பிரதேசத்தில் நேற்றைய தினம் ஹர்த்தால் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை,சகல சமயத்தினரும் முரண்ப…
-
- 3 replies
- 1k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச விவகாரங்களைக் கையாளும் விசேட இராஜதந்திரிகளை உள்ளடக்கிய உயர்மட்டக் குழுவொன்று அவசரப் பயணம் ஒன்றை மேற்கொண்டு அடுத்த மாத நடுப்பகுதியில் இலங்கை வருகின்றது என்றும் இதனை ஒட்டி வன்னியில் உள்ள படை அரண்கள் அகற்றப்பட்டு மறைவான இடங்களில் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கமைய இலங்கை அரசு செயற்பட வேண்டும் என சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் நிலையிலேயே, ஐ.நா.மனித உரிமைகள் குழு அவசர பயணமொன்றை மேற்கொண்டு கொழும்பு வரவுள்ளது. ஐ.நா. சபையின் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பணிப்புரைக்கமைய இலங்கை வரும் இந்த இராஜதந்திரிகள் குழு, இங்கு முக்கிய சந்திப்புக்கள் பலவற்றை…
-
- 1 reply
- 869 views
-
-
இலங்கையும் இந்தியாவும் உறுதியான ஒரு பொருளாதார அபிவிருத்தி இலக்கை எட்டியுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா தெரிவிக்கின்றார்.கொழும்பில் நடைபெறும் 2012 ஆம் ஆண்டின் இந்திய நிர்மாணத்துறைசார் கண்காட்சியை நேற்றைய தினம் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் சிறந்த உறவு நிலவி வருவதாகவும் அந்த உறவை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியம் எனவும் அசோக் கே காந்தா குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம், ஐந்து பில்லியன் வரை அதிகரித்து 65 வீதமாக உயர்வடைந்துள்ளதாக, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளி…
-
- 1 reply
- 585 views
-
-
முள்ளிவாய்க்காலின் பின்னரான ஈழவிடுதலைப் போராட்டத்தின் சனநாயக வடிவமாகவுள்ள, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு வலுவூட்ட, உலகளாவியரீதியில் உறுதுணைக்குழுக்கள் உருவாக்கம் பெற்று வருகின்றன. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை விரிவாக்குவதும், மக்கள் மயப்படுத்துவதும் இந்த உறுதுணைக்குழுக்களின் அடிப்படை நோக்கமாகவுள்ளது. தமிழகத்தில் தோழமை மையமாகவும் மற்றும் சில நாடுகளிலும் இத்தகைய உறுதுணைக்குழுக்கள் ஏலவே தோற்றம் பெற்றிருந்ததன் தொடர்சியாக, தற்போது ஜேர்மன், சுவிஸ், பிரான்ஸ், நோர்வே மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிலும் உறுதுணைக்குழுகள் விரிவாக்கம் பெற்றுள்ளன. ஜேர்மன்: ஜேர்மன் பேர்லின் நகரில் உறுதுணைக்குழுவின் அங்குரார்ப்பண கூட்டம் 28-04-12 சனிக்கிழமை இடம…
-
- 4 replies
- 761 views
-
-
மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மதுத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இன்று (26-04-2012) துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் களுபோவில மதுத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். களுபோவில மதுத்துவமனையில் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்கவிடம் வினவியபோது, துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டதாக அவருக்கு வயிறு பகுதியில் அவசர சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அனில் ஜயசிங்க குறிப்பிட்டார். ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் காவல்துறை பாதுகாப…
-
- 4 replies
- 801 views
-
-
சம்பந்தன் தானாம் தேசியத் தலைவர்சொல்கின்றார் TNA எம்பி சரவணபவன் !!!! TNA தலைவர் சம்பந்தனை தேசியத் தலைவர் என TNAஎம்பி சரவணாபவன் தீபம் தொலைக் காட்சியில் தெரிவித்தார் . இதனை அவதானித்த தீபம் தொலைக்காட்சி ஊடகவியலாளர் அனஸ் அவர்கள் சற்று அதிசயமாகவே , நீங்கள் சம்பந்தனையா தேசியத் தலைவர் என குறிப்பிடுகின்றீர்கள் என மீண்டும் கேட்டார் . அதற்கு சரவணபவன் ஆம்எனப் பதிலளித்தார் . இந்த வீடியோவில் பார்க்கலாம் . http://www.youtube.com/watch?feature=player_embedded&v=jry_fW_p-rc அதே பேட்டியில் தொடர்ந்து பேசிய சரவணபவன் தேசியம் , சுய நிர்ணய உரிமை பற்றி பேசுவதால் சிங்கள அரசு கோபப்படுகின்றது அதனால் தான் எல்லாப் பிரச்சனையும் என்றும் தெரிவித்தார் ஏதோ இன அட…
-
- 21 replies
- 2.2k views
-
-
இலங்கை தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ அறப்போர் தொடருவோம் என்று கருணாநிதி கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2008,2009ம் ஆண்டுகளில் இலங்கையில் இறுதிப் போர் நடை பெற்று ஈழத் தமிழ் இனம் உதிரமும் உயிரும் சிந்திய அந்தக் கோர நிலைமைகளை இலங்கையிலே ஏற் படாமல் தடுத்திட அங்கே போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான என்னென்ன முயற்சிகளிலே ஈடுபட்டோம் என்பதை ஞாபகப்படுத்துவது என்னுடைய கடமை. திமுக அரசின் சார்பாக இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக 14,10,2008ல் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, இலங்கையில் இரண்டு வார காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு முன்வராவிட்டால், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன…
-
- 3 replies
- 757 views
-
-
யாழ்ப்பாணத்தில் மூதறிஞர் தந்தை செல்வாவின் நினைவு தினம் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லையா இராஜதுரை உரையாற்றுவதற்கு ரெலோ அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கறுப்பு கொடிகாட்டி எதிர்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.யாழிலுள்ள தந்தை செல்வநாயகத்தின் நினைவு சதுக்கத்தில் இந்த நினைவு தினம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எதிர்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். சிவாஜிலிங்கம் தனது கறுப்பு கொடி எதிர்ப்பின் போது, “தமிழ் தேசிய துரோகி இராஜதுரையை வெயேற்று எனவும் மட்டக்களப்பு துரோகி, அரசின் அடிவருடி, துரோகியை வெளியேற்ற வேண்டும்” என போராட்டத்தில் ஈடுபட்டார். இதன்போது தந்தை செல்…
-
- 12 replies
- 1.4k views
-
-
பிரித்தானிய காலனித்துவத்தின் விலகலோடு.. எமது இனத்தின் அடிமை வாழ்வுக்கு காரணமாகவும்.. அதன் பின்னரான அழிவுகளின் போதும் மெளனமாக இருந்து அவற்றை சிங்கள.. இந்திய ஆதிக்க சக்திகளோடு சேர்ந்து நின்று ரசித்த.. வெள்ளை வேட்டி.. வெள்ளாட்டு மந்தைகள்.. தந்தை செல்வாவின் நாமத்துக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவை ஆதாரமாக வைத்துக் கொண்டு.. அரசியல் வியாபாரக் கடைவிரிக்க ஊர் திரும்பியுள்ளன..! இவர்கள்.. குறித்து தாயக.. மற்றும் புலம்பெயர் தமிழ் மக்கள் தகுந்த விழிப்புணர்வோடு இருப்பது அவசியம்..! Indian embassy, Chandrahasan, Rajadurai, conspicuous at Chelva memorial in Jaffna [TamilNet, Friday, 27 April 2012, 07:10 GMT] Indian embassy officials, SJV Chelvanayakam’s son, SC Chandrahasan…
-
- 11 replies
- 1.1k views
-
-
போரில் தாம் ஒருபோதும் கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தவில்லை என்று சிறிலங்கா படைத்தரப்பு மறுத்துள்ள நிலையில், கிளஸ்டர் குண்டினால் பாதிக்கப்பட்ட ஒருவரை நேரில் கண்ட மருத்துவப் பணியாளர் ஒருவரின் சாட்சியத்தை ஏபி செய்தி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. சிறிலங்காவில் போரின் போது, வெடிக்காத கிளஸ்டர் குண்டினால் காயமடைந்த ஒருவரைத் தான் கண்டதாக அந்த மருத்துவப் பணியாளர் ஏபி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். http://www.puthinapp...?20120427106086
-
- 2 replies
- 1.2k views
-
-
[TamilNet, Friday, 27 April 2012, 01:24 GMT] Following a court order to close down two KP-run centres for war orphans in Vanni for their mismanagement, Selvarasa Pathmanathan alias KP, functioning in the custody of Gotabhaya Rajapaksa, and the SL Defence Establishment plan returning with their ‘child management’ activities by exploiting the names of the former social institutions of the LTTE, news sources in Vanni said. By using the names, they also aim at claiming funds from international donors and attracting money from gullible sections in the diaspora, the news sources further said. The district judge of Mullaiththeevu, Mr. Prabhakaran has recently ordered the closu…
-
- 0 replies
- 966 views
-
-
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் துமிந்த சில்வாவுக்கு சாதமாக நடந்து கொள்வதாக கொல்லப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகளான ஹிருணிக்கா பிரேமச்சந்திர குற்றச்சாட்டியுள்ளார்.உயிரிழந்த எனது தந்தைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்ப்பார்ப்பு எமக்கு துமிந்த சில்வாவின் உடல் நிலை குறித்து கவலையில்லை. துமிந்த சில்வாவை கைதுசெய்யவேண்டும் என்பதே எமது கோரிக்கை, எத்தனையே குற்றவாளிகள் வைத்தியசாலையில் பதுங்கியிருந்த வேளையில் கைதுசெய்த காவற்துறையினர் ஏன் துமிந்த சில்வாவை கைது செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பிய ஹருணிக்கா, குற்றப் புலனாய்வு பிரிவினர் அவரை கைதுசெய்யவோ பிடிவிராந்து பிறப்பிக்கவே இதுவரை எந்தவிதமான நடவடிக்கையினையும் முன்னெடு…
-
- 1 reply
- 601 views
-
-
தமிழக மீனவர்களின் உள்நுழைவினை தடுக்க 5 ஆயிரம் மீனவர்களை இராமேஸ்வரத்திற்கு அழைத்துச் செல்ல தான் தீர்மானித்திருப்பதாகவும், அதில் நீங்களும் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்த ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ், முல்லைத்தீவு மக்களின் காட்டமான பதிலால் மூக்குடைபட்டுத் திரும்பியிருக்கின்றார். இதுபற்றித் தெரியவருவதாவது: கடந்த சில தினங்களுக்கு முன்பதாக இருநாள் விஜயமாக அமைச்சர் முல்லைத்தீவு மாவட்டத்திற்குச் சென்றிருந்தார். இதன்போது மாவட்ட கடற் தொழிலாளர்களை சந்தித்திருக்கின்றார். இதன்போது, இந்திய மீனவர்களின் உள்நுழைவினை தடுக்க 5 ஆயிரம் மீனவர்களை இராமேஸ்வரத்திற்கு அழைத்துச் செல்ல தான் தீர்மானித்திருப்பதாகவும், இதில் முல்லைத்தீவு மீனவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என அமைச…
-
- 3 replies
- 705 views
-