ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142807 topics in this forum
-
யாழ். இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு மார்ச் 5இல் போராட்டம் - எம்.வி.சுப்பிரமணியம் 02 MAR, 2024 | 04:27 PM வடக்கில் உள்ள இந்திய துணை தூதரகத்தை முற்றுகை இடுவதற்கான போராட்டம் 5ஆம் திகதி கச்சேரியில் இருந்து ஆரம்பமாகி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வரை நடைபெறும் என இணையத்தின் தலைவர் எம்.வி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இன்று (02) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 23ஆம் திகதி வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் பொது சபை கூட்டமானது முல்லைத்தீவிலே நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 5ஆம் திகதி…
-
- 0 replies
- 223 views
- 1 follower
-
-
02 MAR, 2024 | 05:56 PM (ஆர்.ராம்) தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க வடக்குக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் 16ஆம் திகதி கிளிநொச்சிக்கு முதலில் விஜயம் செய்யும் அவர் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் மக்கள் சந்திப்பில் பங்கேற்கவுள்ளதோடு, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் பிற்பகலுக்குப் பின்னர் வவுனியாவில் நடைபெறும் மக்கள் சந்திப்பில் அவர் பங்கேற்கவுள்ளதோடு அங்கும் பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை மேற்கொள்வுள்ளார். இதனையடுத்து எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி ய…
-
- 0 replies
- 228 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 02 MAR, 2024 | 10:02 AM இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்கள் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக இலக்குவைக்கப்பட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஐக்கியநாடுகளின் மனித உரிமை ஆணையாளர் வோல்கெர் டேர்க் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை அரசாங்கம் கடந்தகாலத்தைய தற்போதைய மனித உரிமை மீறல்கள் பொருளாதார குற்றங்கள் தொடர்பி;ல் விசாரணைகளை மேற்கொண்டு வழக்குகளை தாக்கல் செய்வதற்கான நம்பகதன்மை மிக்க பொறுப்புக்கூறல்நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகள் உலகளாவிய மற்றும் சர்வதேச நியாயதிக்க எல்லைக்க…
-
-
- 4 replies
- 290 views
- 1 follower
-
-
காத்தான்குடியில் சட்டவிரோதமாக ஒன்று கூடிய 30 பேர் கைது! காத்தான்குடியில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடி கூட்டமொன்றை நடத்திய 30 பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஸஹ்ரான் ஹாசிமின் சாகோதரியின் கணவர் உள்ளிட்ட 5 பேர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு அருகாமையிலுள்ள வீடு ஒன்றில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர்கள் ஸஹ்ரா…
-
-
- 5 replies
- 632 views
- 1 follower
-
-
உணவை குறைத்து மின் கட்டணம் செலுத்தும் நிலைமைக்கு தாம் வந்துள்ளதாக கொழும்பிலுள்ள மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். பதினையாயிரத்திற்கும் மேலாக தமக்கு மின் கட்டணம் வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். வட்டிக்கு பணம் பெற்று மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமது கவலையை தெரிவித்துள்ளனர். ஒரு இலட்சம் ரூபா கூட தற்போதைய காலத்தில் போதவில்லை. வீட்டு வாடகை, நீர் கட்டணம், மின் கட்டணம், உணவு, பிள்ளைகளின் படிப்பு என எதனையுமே சமாளிக்க முடியவில்லை என கூறியுள்ளனர். https://tamilwin.com/article/electricity-bill-today-in-sri-lanka-1709122250
-
-
- 32 replies
- 3.1k views
-
-
02 MAR, 2024 | 10:17 AM கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக தென்னிலங்கையை சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் சிலர் காடுகளை வெட்டி காணியை கைவசப்படுத்திக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக ஆனையிறவுக்கும் இயக்கச்சிக்கும் இடையில் ஏ9 வீதிக்கு கிழக்கு பக்கமாக உள்ள காட்டுப் பகுதியில் இயந்திர உபகரணங்கள் மூலம் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலர் காடுகளை வெட்டி பல ஏக்கர் பரப்பளவில் காணிகளை பிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரதேசத்துக்கு அருகில் இராணுவ முகாம் ஒன்றும் இருக்கிறது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 465 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 27 FEB, 2024 | 12:38 PM யாழ்ப்பாணம் - மாதகல் சம்பில்துறை (ஜம்புகோள பட்டினம்) விகாரைக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என கடற்படையினர் தடை விதித்துள்ளதாக அப்பகுதி கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். சம்பில்துறை பகுதியில் அமைந்துள்ள சங்கமித்த விகாரையின் பின்புறமாக உள்ள கடற்பகுதிகளில் மீன் பிடியில் ஈடுபட வேண்டாம் என கடந்த 2013ஆம் ஆண்டு கடற்தொழிலாளர்களுக்கு கடற்படையினர் தடை விதித்த நிலையில், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, அப்பகுதிகளில் மீன் பிடியில் ஈடுபட கடற்படையினர் அனுமதித்தனர். இந்நிலையில் தற்போது அப்பகுதிக…
-
-
- 18 replies
- 1.1k views
- 1 follower
-
-
குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதால், இரண்டு வயதுக்கு முன்பே இனிப்பு உணவு மற்றும் பானங்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு பெற்றோர்களுக்கு சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். குழந்தைகளுக்கு இரண்டு வயதுக்குப் பிறகு மட்டுமே இனிப்பு உணவு பரிந்துரைக்கப்படுகிறது, அதே நேரத்தில் முதல் ஆறு மாதங்களில் தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என கொழும்பு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். ”இனிப்பான உணவு மற்றும் பானங்களை உட்கொள்வது அதிக எடை அல்லது உடல் பருமன் அதிகரிக்கும் அபாயத்துடன் தொடர்புடையது” என அவர் வலியுறுத்தினார். “சேர்க்கப்பட்ட சர்க்கரைகள் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பா…
-
-
- 1 reply
- 317 views
- 1 follower
-
-
தமிழரசுக் கட்சிக்கு எதிரான நீதிமன்ற தடை வழக்கு விசாரணை இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடர்பான வழக்கானது இன்றையதினம் திருகோணமலை மற்றும் யாழ்ப்பாண நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. குறித்த வழக்குத்தாக்கலானது மாவை சேனாதிராஜா, சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், குகதாசன், குலநாயகம், யோகேஸ்வரன் ஆகிய ஆறு பேருக்கு எதிராகவே செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த வழக்கனது கடந்த 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது பெப்ரவரி 27ஆம் திகதி வரை தேசிய மாநாட்டை நடத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கனது இன்றைய தினம் யாழ் மற்றும் திருகோணமலை நீதிமன்றங்களால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்…
-
-
- 13 replies
- 1.5k views
- 1 follower
-
-
01 MAR, 2024 | 03:49 PM (மெல்றோய்) திருகோணமலை இந்து கல்லூரியின் 13 வயதான மாணவன் ஹரிகரன் தன்வந்த் தனுஸ்கோடியில் இருந்து தலைமன்னார் வரையான பாக்கு நீரிணையை கடந்து சாதனை படைத்துள்ளார். இன்றைய தினம் (01) அதிகாலை 5.30 மணியளவில் தனுஸ்கோடியில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்த தன்வந்த் மதியம் 2.00 மணியளவில் தலைமன்னாரை வந்தடைந்தார். தனுஸ்கோடி முதல் தலைமன்னார் வரையான 32 கிலோ மீற்றர் தூரத்தை மிகக் குறைவான நேரத்தில் நீந்திக் கடந்து இலங்கையில் சாதனையை நிலைநாட்டியுள்ளார். 9 மணித்தியாலங்கள் 37 நிமிடங்கள் 54 செக்கன்களில் நீந்திக் கடந்து இலங்கையில் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார். …
-
- 3 replies
- 526 views
- 1 follower
-
-
ரஷ்ய பசிபிக் கடற்படையின் ஏவுகணை கப்பல் வர்யாக் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கடற்படை மரபுப்படி இலங்கை கடற்படையினரால் கப்பலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. “இன்று, பசிபிக் கடற்படையின் முதன்மையான, கார்ட்ஸ் ஆர்டர் ஆஃப் நக்கிமோவ் ஏவுகணை கப்பல் வர்யாக் இலங்கையின் மிகப்பெரிய துறைமுகமான கொழும்பில் வணிக அழைப்பை மேற்கொண்டுள்ளது” என கடற்படையின் பத்திரிகை அலுவலகம் இன்று ரிவித்ததாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 187 மீ நீளமுள்ள இந்த கப்பல் 529 பேர் கொண்ட ஏவுகணை கப்பலாகும். கப்பலின் கொடி அதிகாரி கெப்டன் 1 ஆவது தரவரிசை வெலிச்கோ அனடோலி வாசிசீவிச் மற்றும் கெப்டன் 2 ஆவது தரவரிசை குளுஷாகோவ் ரோமன் நிகோலாவிச் கட்டளை அதிகாரியாக பணியாற்றுகி…
-
- 0 replies
- 579 views
- 1 follower
-
-
நிதியமைச்சின் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் மீண்டும் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. அதன்படி நாளை காலை 6.30 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக சுகாதார வல்லுநர்கள் சம்மேளனத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். தொழிற்சங்க பிரதிநிதிகள் இன்று நிதியமைச்சின் அதிகாரிகளுடன் முக்கிய கலந்துரையாடலை நடத்திய போதிலும் இரு தரப்பும் இணக்கப்பாட்டுக்கு வராத நிலையில் பணிப்புறக்கணிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/291414
-
- 9 replies
- 919 views
- 1 follower
-
-
01 MAR, 2024 | 05:48 PM யாழ். போதனா வைத்தியசாலை சூழலில் தரித்து நிற்கும் பேருந்துகளால் நோயாளிகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக மருத்துவ பீட பீடாதிபதி வைத்திய கலாநிதி சுரேந்திர குமார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை (29) ஊடகங்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், சர்வதேச தரத்திலான மருத்துவ வசதிகளை வழங்குவதற்கு நெரிசலற்ற அமைதியான சூழல் யாழ். போதனா வைத்தியசாலை சூழலில் ஏற்படுத்தப்பட வேண்டும். மருத்துவ சேவைகளை முன்னெடுப்பதற்கு எமக்கு சவாலாக இருப்பது நீண்ட தூரம் பயணிப்பதற்கு தரித்து நிற்கும் பேருந்துகள். நாம் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. …
-
- 1 reply
- 519 views
- 1 follower
-
-
01 MAR, 2024 | 03:58 PM வடமாகாணத்தின் மூன்று தீவுகளில் மீள்புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி அமைப்புமுறைகளை உருவாக்குவது தொடர்பான உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் 10995 அமெரிக்க டொலர் முழுமையான நிதி உதவி திட்டத்தின் கீழ் நெடுந்தீவு, அனலை தீவு, நயினா தீவு ஆகியன 2025ம் மார்ச்மாததத்திற்குள் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைப்புமுறைகளை பெற்றுக்கொள்ளும் என அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். இந்தியாவை தளமாக கொண்ட யு- சோலர் கிளீன் எனர்ஜி சொலுசன்ஸ் என்ற நிறுவனம் இந்த திட்டத்தின் கீழ் 530 கிலோவோட் காற்றாலை மின்சாரம் 1700 கிலோவோட் சூரியசக்தி உட்பட சக்தி அமைப்புகளை இந்த தீவில் உருவாக்கவுள்ளது எனவும் அம…
-
- 1 reply
- 314 views
- 1 follower
-
-
யாழ். மத்திய பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் ! 29 FEB, 2024 | 10:16 AM பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் தனியாா் பேருந்து உரிமையாளா்கள் யாழ்ப்பாணம் இ.போ.ச பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாமையை கண்டித்து உள்ளூா் மற்றும் நீண்டதுார தனியாா் பேருந்து சாரதிகள், நடத்துனா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனா். இதனால் தனியாா் போக்குவரத்து சேவைகள் மாகாண மட்டத்தில் முடங்கியுள்ளன. இந்நிலையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தனியாா் பேருந்து சாரதிகள், நடத்துனா்கள் யாழ். மத்திய பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை முன்…
-
- 3 replies
- 527 views
- 1 follower
-
-
01 MAR, 2024 | 03:32 PM இலங்கையில் பொருளாதார உரிமைகள் மீறப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாரென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். செங்கடலில் இலங்கையின் பொருளாதார உரிமைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், அதற்கு எதிரான செயற்பாடுகளை இலங்கை முன்னெடுக்கும் என்றும், வலய - உலகளாவிய பிரச்சினைகளின்போது ஐக்கிய நாடுகள் சபையின் வேலைத்திட்டங்களுக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை இலங்கை வழங்கும் என்றும் உறுதியளித்தார். திருகோணமலை சீனக்குடா விமானப்படை தளத்தில் நேற்று (29) இடம்பெற்ற இலங்கை விமானப்படை கெடட் அதிகாரிகளுக்கு அதிகார ஆணை அளிக்கும் நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெர…
-
- 0 replies
- 195 views
- 1 follower
-
-
தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டத்தை (National Cyber Security Act) இவ்வருடத்திற்குள் கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் சைபர் பாதுகாப்பு அதிகார சபையை நிறுவவுள்ளதாகவும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(29) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கடந்த காலத்தில் 4.73% ஆக காணப்பட்ட டிஜிட்டல் பொருளாதாரம் இன்று 5% வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. அதனால் பொருளாதாரமும் வலுவடைந்திருக்கிறது. அதனை மேலும் பலப்படுத்தும் வகையிலேயே டிஜிட்டல் பொருளாதார மாநாடு ஜூலை மாத இறுதியில் இலங்கையில் நடத்தப்படவுள்ளது. அதனூடாக உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத…
-
- 0 replies
- 283 views
- 1 follower
-
-
கடந்த ஜனவரி மாதத்தில், சுற்றுலாத்துறையின் ஊடாக 342 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பின்னர் பதிவான மாதம் ஒன்றின் அதிகூடிய சுற்றுலாத்துறை வருவாய் என இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் 269 மில்லியன் அமெரிக்க டொலர் சுற்றுலாத்துறையின் ஊடாக வருமானமாக ஈட்டப்பட்டிருந்ததாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/293838
-
- 0 replies
- 387 views
- 1 follower
-
-
01 MAR, 2024 | 10:12 AM பாடசாலை புத்தகப் பையின் சுமையை குறைப்பதற்கு கல்வி அமைச்சால் புதிய சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட பயிற்சிப் புத்தகங்களைத் தவிர, பாடசாலைக்கு கொண்டு வரப்படும் பாடப்புத்தகங்களை குறைப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை புத்தகப் பையின் எடை காரணமாக, முதுகுத் தண்டுவடக் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளை பாடசாலை மாணவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, மாணவர்களின் புத்தகப் …
-
-
- 2 replies
- 464 views
- 1 follower
-
-
ஈழத் தமிழர்களை சிதைத்தெடுக்கும் சித்திரவதை முகாமிற்கு இனியாவது இந்திய மத்திய, மாநில அரசுகள் முடிவு கட்டவேண்டும் - யாழ். பல்கலைகழக மாணவர் அமைப்பு 01 MAR, 2024 | 12:56 PM ராஜீவ்காந்தி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏனைய மூன்று ஈழத்தமிழர்களையும் அவர்கள் விரும்பும் இடங்களில் வசிப்பதற்கு அனுமதிக்க வேண்டுவதோடு தாயகம் திரும்ப எவரேனும் விரும்பினால் அவர்களை அழைத்து வர இனியாவது உரிய நடவடிக்ககை எடுக்குமாறு ஈழத்தமிழ் அரசியல் தரப்புக்களையும் இலங்கை இந்திய அரசுகளையும் வலியுறுத்துகின்றோம்.என யாழ்பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஊடக மற்றும் வெகுசன தொடர்புபிரிவு தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள யாழ் பல்கலைகழக மாணவர் …
-
- 0 replies
- 204 views
- 1 follower
-
-
புதிய சிறைச்சாலைகளை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை ! சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசல் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண புதிய சிறைச்சாலைகளை அமைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சில சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட நடவடிக்கைகள் காரணமாகவே தற்போது சிறைச்சாலையில் கைதிகளின் எண்னிக்கை அதிகரிப்பதற்கு பிரதான காரணம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேவைக்கு ஏற்ப புதிய சிறைகள் விரைவில் நிறுவப்படும் என்றும் சிறைச்சாலைகள் நிரம்பி வழிவதைக் காரணம் காட்டி சட்ட நடவடிக்கைகளை தாமதப்படுத்த முடியாது என்ற…
-
-
- 13 replies
- 1.5k views
-
-
100 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரும் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல! 29 FEB, 2024 | 03:18 PM நியாயமான காரணமின்றி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தன்னைக் கைது செய்து விளக்கமறியலில் வைத்ததன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்கி 100 மில்லியன் ரூபா நஷ்டஈட்டை தனக்குப் பெற்றுத் தருமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சட்டத்தரணிகள் ஊடாக மனுத்தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பில் இன்று (29) உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். சட்டத்தரணி சனத் விஜேவர்தன தாக்கல் செய்த மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்கள …
-
-
- 5 replies
- 945 views
- 1 follower
-
-
Published By: VISHNU 29 FEB, 2024 | 01:54 AM இலங்கை சட்டங்களுக்கு உட்பட்டு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே, எல்லை மீறிய இந்திய மீனவர்கள் மூவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பதை இந்திய மீனவர்களும் மற்றும் அரசியல் தலைவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென தமிழ் மீனவர் சங்கத் தலைவர் வலியுறுத்தியுள்ளார். “இலங்கையிலுள்ள நீதிமன்றத்தினால் அரசியல் அமைப்பில் உள்ள சட்டத்திற்கு ஏதுவாகவே வழங்கப்பட்ட தீர்ப்பின் காரணமாக இந்திய மீனவர்கள் இரண்டு, மூன்று பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அச்செயலானது எவ்வித அடாவடித்தனமான செயலாக தென்படவில்லை. எல்லைக்குள் அத்துமீறி வந்தமையாலேயே அவர்கள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய தேவை வந்துள்ளது,” யாழ்ப்ப…
-
- 2 replies
- 336 views
- 1 follower
-
-
சமூகஊடக போராளிகளுக்கு “ஆப்பு” – எச்சரிக்கும் அருட்தந்தை சக்திவேல் February 29, 2024 நிகழ்நிலை காப்புச் சட்டம் இலங்கையில் நடைமுறைக்கு வந்திருக்கின்றது. பெப்ரவரி முதலாம் திகதி அழுலுக்கு வந்த உடனடியாகவே, இச்சட்டத்தின் கீழ் ஒருவா் கைதாகியிருக்கின்றாா். சமூக ஊடகம் ஒன்றில் அவா் வெளியிட்ட பதிவுதான் கைதுக்கு காரணம். நடைமுறைக்கு வந்த உடனடியாகவே தமது ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டது நிகழ்நிலை காப்புச் சட்டம்! இந்த சட்டத்தினால் வரப்போகும் ஆபத்துக்கள் என்ன? தாயகக் களம் நிகழ்வில் விளக்குகிறாா் அருட்தந்தை சக்திவேல். கேள்வி – இந்த நிகழ்நிலை காப்புச் சட்டத்தை அரசாங்கம் அவசரமாக நடைமுறைக்குக் கொண்டுவந்தமைக்குக் காரணம் என்ன? பதில் – அரசாங்கத்துக…
-
-
- 2 replies
- 461 views
-
-
26 FEB, 2024 | 12:33 PM யுனைடெட் பெற்ரோலியம் அவுஸ்திரேலியா பிரைவேட் லிமிடெட் இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுடன் உள்ளூர் சந்தையில் பெற்றோலிய பொருட்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் சார்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுலக்க்ஷனா ஜயவர்தன மற்றும் யுனைடெட் பெற்ரோலியம் அவுஸ்திரேலியா சார்பாக அதன் நிறுவனத்தின் உரிமையாளர் என்ற வகையில் எடி ஹேர்ஸ் (Eddie Hirsch) ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான பெற்ரோலிய சில்லறை விற்பனையாளர் மற்றும் இறக்குமதியாளருக்கு இலங்கை முழுவதும் 150 எரிபொருள் நிலையங…
-
-
- 10 replies
- 887 views
- 1 follower
-