Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அம்பிலிபிட்டி கல்மில்லார பிரதேசத்தில் இடம்பெற்ற கைக் குண்டுத் தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர். இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் எட்டு பேர் ஆண்கள் எனவும், இரண்டு பெண்கள் எனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கிராம மக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்த மோதலுக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. கைக் குண்டுத் தாக்குதலை நடத்திய சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். http://www.globaltam...IN/article.aspx

  2. சுஷ்மா சுவராஜ் தலைமையில் எம்பிக்கள் குழு இன்று இலங்கை செல்கிறது. இந்த குழுவில், அதிமுகவை தொடர்ந்து திமுகவும் பங்கேற்கவில்லை என்று அறிவித்துள்ளது. இலங்கை செல்லும் எம்பிக்கள் குழுவில் திமுக, அதிமுக எம்.பிக்கள் பங்கேற்காதது குறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் அதிருப்தி தெரிவித்துள்ளார். "இலங்கை செல்லும் எம்பிக்கள் குழுவிற்கு பாஜ கட்சியை சேர்ந்த சுஷ்மா சுவராஜ் தலைமை வகிக்கிறார். காங்கிரஸ், திரிணாமுல், சமாஜ்வாடி உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் இடம்பெற்றுள்ளனர். திமுகவும் அதிமுகவும் அக்குழுவில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளது வருத்தமளிக்கிறது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மொத்தம் 6 நாள் பயணத்தின் போது, தமிழர் பகுதிகளில்…

  3. இலங்கை முஸ்லிம்களுக்கும், சிங்கள வர்களுக்கும் இடையிலான உறவு, அன்று முதல் இன்று வரை, சிறப்பாக காணப்பட்டதாகவும், அவ்வுறவு தற்போதைய அரசாங்கத்தினால், மேலும் உறுதிப்படுத்த ப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலை திறந்து வைத்து உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனை தெரிவித்தார். பள்ளிவாசல்களை திறந்து வைக்கும் சம்பிரதாய, சமய வழிபாடுகளுக்கு மத்தியில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனை திறந்து வைத்தார். அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், வரலாற்றில் முதல் தடவையாக முஸ்லிம் அல்லாத அரச தலைவர் ஒருவர் பள்ளிவாசலொன்றை திறந்த சந்தர்ப்பம் இது எனவும் இலங்கை முஸ்லிம்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையிலான உறவு, அன்று முதல் இன…

  4. வேலூருக்கு ஒரு பயணம் சென்றிருந்த போது உணவுக்காக தேசிய நெடுஞ்சாலையில் உள்ள துர்கா பவன் என்னும் உணவு விடுதியில் நுழைந்தோம். உணவு கிடைக்குமிடத்தில் கண்ட காட்சி எங்களை போன்ற தமிழ் உணர்வாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த உணவகத்தில் ஒரு பலகையில் திருக்குறளும் , அதன் விளக்கமும் எழுதப்பட்டிருந்தது. கூடவே அந்த நாளுக்கான அறிவுரையும் தமிழில் எழுதப்பட்டிருந்தது. இதை பார்த்த பின் சும்மா இருப்போமா, உடனே நம் படக் கருவியை எடுத்து அந்த காட்சியை படம் பிடித்தோம். பின்பு கடை உரிமையாளரிடம் பேச்சுக் கொடுத்தோம். அவர் கூறியதாவது, வயிற்றுப் பசிக்கு உணவு அருந்த இங்கு நிறைய பேர் வருகிறார்கள். எங்கள் உணவகத்தை போல் பல உணவு விடுதிகள் வயிற்றுப் பசிக்கு உணவு வழங்குகிறார்கள். நாங்கள் வயிற்றுக்கு ம…

  5. யுத்தக்குற்ற விசாரணை: அமெரிக்கா அரைவழி நண்பன். 29.02.2012 இக்கட்டுரை ஒரு கொள்கை ஆய்வுக் கட்டுரையாகவும் ஒரு கொள்கை வகுப்புக் கட்டுரையாகவும் அமைந்துள்ளதுடன் இலங்கைத்தீவு தொடர்பான சர்வதேச மற்றும் பிராந்திய அரசியலின் உடற்கூற்றியலை விளக்குவதாயும் அமைந்துள்ளது. இவற்றுடன் கூடவே ஓர் அரசியல் நிலைப்பாட்டையும் இக்கட்டுரை கோடிகாட்டி நிற்கின்றது. முள்ளிவாய்க்கால் யுத்தம் ஒரு சர்வதேச யுத்தத்தினதும், ஒரு பிராந்திய யுத்தத்தினதும், ஒரு முதற் பகுதியாய் முடிவடைந்துள்ளது. அதன் இரண்டாம் பகுதி இப்போது ஆரம்பமாகிவிட்டது. சீன-அமெரிக்க சர்வதேச வியூகமும், இந்திய-சீன பிராந்திய வியூகமும் ஒன்றிணைந்து முள்ளிவாய்க்கால் யுத்தமாய் வெடித் தெழுந்ததே இதன் முதலாவது பகுதியாய் அமைந்தது. சீனா…

    • 4 replies
    • 1k views
  6. குமார் குணரட்ணம் 40 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்த வேண்டுமாம் கூறகிறது இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் குமார் குணரட்ணம் தண்டப்பணம் செலுத்தும் வரை இலங்கைக்குள் பிரவேசிக்க முடியாது. குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் குமார் குணரத்தினத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தண்டப்பணத்தை செலுத்தும் வரைக்கும் அவர் இலங்கைக்குள் பிரவேசிக்க முடியாது என இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. குமார் குணரட்ணம் அவுஸ்திரேலியாவின் பிரஜாவுரிமை பெற்றவர் என்ற முறையில் அவர் அங்கிருந்து இலங்கை வந்து, தமது வீஸா காலம் முடிவடைந்திருந்த நிலையிலும் இலங்கையில் தங்கியிருந்தார் என்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு 40 ஆ…

  7. புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் அவர்களை இலங்கை இராணுவம் கட்டி வைத்து நெருப்பால் சூடு வைத்துள்ளனர். 2009ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி, சரணடைய விரும்பிய புலித்தேவன் மற்றும் ப.நடேசன் ஆகியோரை வெள்ளைக்கொடியோடு தம்மிடம் வருமாறு இலங்கை இராணுவம் தெரிவித்தது. ஐ.நா அதிகாரி நம்பியார், இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மற்றும் சமீபத்தில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் மேரி கொல்வின் ஆகியோர் அணுசரணை வழங்கிய நிலையில், இவர்கள் இராணுவத்திடம் சரணடைந்தனர். இவர்களோடு காயப்பட்ட போராளிகள் சிலரும் சென்றுள்ளனர். விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் மற்றும் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோரை இலங்கை இராணுவம், காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர். பு…

  8. பீதியில் உறைந்த காலி மாவட்ட தமிழ் மக்கள்! பாதுகாப்பு வழங்குமாறு திவித்துர தோட்ட மக்கள் கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 16 ஏப்ரல், 2012 - 17:07 ஜிஎம்டி பிபிசி தமிழ் தென்னிலங்கையில் காலி மாவட்டம், திவித்துர என்ற தோட்டத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழ் தொழிலாளர் குடும்பங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் அதிகாரிகள் இன்னும் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று பிரதேச மக்கள் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தனர். திவித்துர தோட்ட மக்கள் அச்சத்தில் காலி திவித்துர தோட்டத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பிரதேச மக்கள் மற்றும் காவல்துறை கூறும் கருத்துக்கள் கேட்கmp3 இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட…

    • 0 replies
    • 866 views
  9. கோட்டாபயவுக்கு எதிராக சிறப்புரிமை மீறல் விவகாரத்தை எழுப்புவேன்: கிரியெல்ல தான் தெரிவித்த கருத்துக்கு அரச சேவையாளரான பாதுகாப்புச் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ சவால் விடுத்தமைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை மீறல் விவகாரத்தை எழுப்பவுள்ளதாக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரான தான் கூறிய கருத்தை சவாலுக்குட்படுத்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு உரிமை இல்லை என லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 'பாதுகாப்புச் செயலாளர் ஓர் அரச ஊழியர் ஆவார். எனவே மரியாதை முறைமைப் படியில் அவர் மிக கீழ் நிலையிலேயே உள்ளர். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அறிக்கைக்கு சவால்விடும் அதிகாரம் அவருக்கு இல்லை. குரல் அற்ற மக்களுக்காக குரல்கொடுப்பது…

    • 2 replies
    • 946 views
  10. ஐ.நாவின் மட்டக்களப்பு மாவட்டச் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்குப் பொறுப்பான பொறியியலாளர் ஒருவரின் வீட்டின் மீது நேற்றிரவு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்றிரவு 7.45 மணியளவில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலினால் வீட்டின் கதவுகள், யன்னல்கள் சேதமாகியதாகவும் ஆயினும் இத்தாக்குதலில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது. மட்டக்களப்பு ஐ.நா செயலகதத்தில் பொறுப்பு வாய்ந்த ஒரு அதிகாரியாகப் பணியாற்றும் இளங்கோவன் காண்டீபன் என்ற பொறியியலாளரின் வீடே மேற்படி குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியது. இந்தத் தாக்குதல் தொடர்பில் மட்டக்களப்பு காவற்றுறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்தத் தாக்குதல் ஜெனிவா தீர்மானத்தை அடுத்து ஐ.நா மற்றும் …

    • 3 replies
    • 674 views
  11. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் மீண்டும் வரும் நவம்பர் மாதம் சிறிலங்கா மீது அனைத்துலக கவனம் திரும்பும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் வரும் ஒக்ரோபர் - நவம்பர் மாதங்களில், உலக நாடுகளின் மனிதஉரிமைகள் நிலை பற்றிய மீளாய்வு இடம்பெறவுள்ளது.இந்த மீளாய்வில் சிறிலங்கா குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும். இந்தநிலையில், சிறிலங்கா தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்க ஐ.நாவின் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசசார்பற்ற அமைப்புகளுக்கு ஏப்ரல் 23ம் நாள் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைகளுக்கு பதிலளிகப்பதற்கு சிறிலங்காவுக்கு வரும் ஜுலை 23ம் நாள் வரை காலஅவகாசம் அளிக்கப்படும். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் வரும் நவம்பர் முதலாம் நாள் சிறிலங்…

  12. ஐக்கிய நாடுகளின் மனித உரிமை சபையில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானம் ஒன்று இயற்றப்பட்டபின்னர் அது தமிழர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தரும் என பலரும் ஆர்ருடம் கூறினர் ஏன் காங்கிரஸ் கட்சியினை கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும் சில தமிழ் எம்.பி க்களும் கூட அப்படித்தான் கூறினர். ஆனால் நடந்தது , நடக்கின்றது வேறு மாதிரித்தான் சிங்களம் தான் கூறியது போலவே செய்துவருகின்றது. அதாவது இந்தியா, உலக நாடுகள் மீது தமது எதி்ர்ப்பினை காட்டிவருகின்றது சிங்களம். மகாத்மா காந்தி சிலையினை உடைத்தார்கள், தமிழ் மக்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றார்கள், சிங்கள குடியேற்றங்களைச் செய்துவருகின்றார்கள்,ஊடகங்கள் ஊடாக இனவாத கருத்துக்களும், சர்வதேசத்திற்கு எதிரான கருத்துக்களும் பரப்ப…

  13. 'பலஸ்தீன தனி நாடு அமைவதற்கு இலங்கை தொடர்ந்து ஆதரவளிக்கும்' பலஸ்தீன தனி நாடு அமைவதற்கு இலங்கை தொடர்ந்து ஆதரவளிக்கும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். ஒவ்வொரு வருடமும் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடரில் பலஸ்தீன் தனி நாடு தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பலஸ்தீன ஜனாதிபதி முஹமட் அபாஸ் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இலங்கை வந்தடைந்தார். பலஸ்தீன ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ரெயிட் என்.ஏ.மலிக் உள்ளிட்ட குழுவினரும் இலங்கை வந்திருந்தனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பலஸ்தீன் ஜனாதிபதி முஹமட் அபாஸ் ஆகியோர் இன்று திங்கட்கிழம…

  14. இலங்கையுடனான சீனாவின் நெடுங்கால உறவுகள் மிக நெருக்கமடைந்துவரும் நிலையில் சினாவின் இராணுவத் தளம் இங்கு அமைக்கப்படலாம் என்ற அச்சம் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர தெரிவித்தார். கிழக்கு மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டால் முஸ்லிம் அரசியல் கட்சியே ஆட்சியை கைப்பிடிக்குமென்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர மேலும் தெரிவிக்கையில், ஜெனீவாவில் எமக்கு எதிராக வாக்களித்த இந்தியாவிற்கு இன்று சிறிதளவு அச்சம் ஏற்பட்டுள்ளது. அதுதான் இலங்கை அரசாங்கம் சீனாவுடன் நெருக்கமாகிவிடுமோ என்பதாகும். அவ்வாறான நிலைமை தோன்றுமானால் இந்தியாவின் தேச…

  15. காலியில் தமிழ் குடும்பங்கள் மீது தாக்குதல்! 7 வீடுகள் எரிந்து நாசம் - முழு விபரம் இணைப்பு காலி - எல்பிட்டி - திலிதுற தோட்டத்தில் வசிக்கும் தமிழ் குடும்பங்கள் மீது பெரும்பான்மை சிங்கள யுவதிகள் சிலர் தாக்குதல் நடத்தி அவர்களது வீடுகளுக்கு தீயிட்டுள்ளதோடு பெறுமதியான பொருட்களையும் திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அத தெரண தமிழிணையம் பெற்றுக் கொண்ட நம்பகரமான, உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள்படி நடந்தவை வருமாறு, எல்பிட்டி - திலிதுற தோட்டத்தில் உள்ள இராணுவ வீரர் ஒருவர் (சாதாரண இராணுவ சிப்பாய்) விடுமுறையில் ஊருக்கு வரும்போது அங்குள்ள தமிழ் குடும்பங்களை சந்தித்து தன்னை ´சேர்´ அல்லது ´மாத்தயா´ என்றுதான் அழைக்க வேண்டும் என அச்சுறுத்தி வந்துள்ளார். எனி…

    • 3 replies
    • 692 views
  16. முள்ளிவாய்கால் கொடூர நிகழ்வின்போது அதில் சிக்கி தப்பித்து வாழ்பவர்களின் உண்மைக் கதைகளை 'சமூக சிற்பிகள்' அமைப்பினர் [The Social Architects -TSA]* சாட்சியமான மக்களிடம் கேட்டு தங்கள் வலைப்பதிவில் ஆங்கில மொழியில் பதிவேற்றம் செய்துள்ளனர். March 12 முதல் March 19 வரையில் வெளியான அக்கதைகளின் முக்கியத்துவம் கருதி 'புதினப்பலகை' மொழிமாற்றம் செய்து இங்கே வெளியிடுகின்றது. 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. [தனது முப்பதாவது வயதில் உள்ள துசியின் கணவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பொறுப்பாளர்களுள் ஒருவராக இருந்தார். ஆனால் இப்போது இவர் காணாமற் போய்விட்டார். அத்துடன் துசியின் கணவரின் தங்கை [மைத்துனி] நிலானி தற்போது இருபதாவது வயதில் உள்ளார். ] நாங்…

  17. தமிழகத்தின் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 32 பேரில் பத்துப் பேரே இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர். தாம் இலங்கை போரில் இருந்து பாதுகாப்புக் கோரியே தமிழகத்துக்கு வந்ததாகவும், தமக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்றும் அவர்களில் சிலர் கூறியுள்ளனர். தமது குடும்பத்தினர் போரினால் பாதிக்கப்பட்டு மிகவும் துன்பத்தில் இருப்பதால், அவர்களை தாம் பராமரிக்க வேண்டியிர்ப்பதாகவும் ஆகவே பிணையிலாவது தம…

    • 1 reply
    • 666 views
  18. பழுதடைந்த கிணற்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரிப் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.சாவகச்சேரி வடக்கு சேலை அம்மன் கோயிலடிக்கு அருகில் உள்ள வயல் வெளியில் இருந்த பழுதடைந்த கிணற்றில் இருந்தே மேற்படி சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்படிக் கிணற்றில் இருந்து வந்த துர்நாற்றத்தினை அடுத்தே மேற்படிச் சடலம் அக் கிணற்றுக்குள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்படிச் சடலம் இதுவரை மீட்கப்;படாததையடுத்து சடலத்தினை அடையாளம் காணமுடியவில்லை என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது. இராசரத்தினம் ஆனந்தன் (வயது 51) என்னும் குடும்பஸ்தர் ஒருவரை கடந்த 3 தினங்களுக்கு முன்னர் காணமால் போயியுள்ளதாகவும் அவரது சடலமாக அது இருக்கலாம…

  19. விஜேவீர கொலைக்கும், பிரபாகரன் குடும்பம் கொலைக்கும் உள்ள வித்தியாசம் - விளக்குகிறார் நிமல்கா பெர்னான்டோ [ திங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2012, 07:18 GMT ] [ புதினப் பணிமனை ] ஐநா மனித உரிமை பேரவை தீர்மானம் முடிந்த கையோடு நிமல்கா பெர்னாண்டோ சென்னை வந்திருந்தார். அநேகமாக அவரால் இலங்கைக்கு நுழைய முடியாத சூழல் நிலவுவதாக நினைக்கிறேன். ஜூனியர் விகடன் இதழுக்காக அவரை சந்தித்து பேசியதன் முழு வடிவ உரையாடல் இது.... "இலங்கையை அமெரிக்காவிடம் காட்டிக் கொடுக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் இலங்கைக்குள் நுழைந்தால் காலை உடைப்பேன்" என்று இலங்கை அமைச்சர் மேர்வின் சில்வாவினால் எச்சரிக்கப்பட்டவர் மனித உரிமை செயற்பாட்டாளர் நிமல்கா பெர்னாண்டோ. ஐநா பேரவையில் உரையற்றி, அமெரி…

    • 1 reply
    • 1.3k views
  20. இலங்கைக்கு செல்லும் இந்திய எம்.பிக்கள் குழு மேலும் பலவீனமாகியுள்ளது.இக் குழுவிலிருந்து தற்போது திரினமூல் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதாதளம் ஆகியவையும் வெளியேறி விட்டன. இதனால் குழுவின் எண்ணிக்கை 10 ஆக சுருங்கிப் போய் விட்டது. சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய எம்.பிக்கள் குழு இலங்கை செல்லவுள்ளது. இந்தக் குழுவிலிருந்து ஏற்கனவே அதிமுக, திமுக ஆகியவை வெளியேறி விட்டன. இதனால் குழுவின் எண்ணிக்கை 14 என்பதிலிருந்து 12 ஆக குறைந்து விட்டது. இந்த நிலையில் திரினமூல் காங்கிரஸும், ஐக்கிய ஜனதாதளமும் இன்று விலகி விட்டன. திரினமூல் சார்பில் சுசாரு ரஞ்சன் ஹல்தாரும், ஐக்கிய ஜனதாதளம் சார்பில் சிவானந்த திவாரியும் போவதாக இருந்தது. ஆனால் இருவரும் போகவில்லை. இதனால் குழுவின் எண்ணிக்கை…

    • 1 reply
    • 934 views
  21. இலங்கை சிறைச்சாலைகளில் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக இந்தியப் பாராளுமன்றக் குழுவினரிடம் எடுத்துரைத்து அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஆவன செய்யுமாறு, இந்தக் கைதிகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக கடிதம் ஒன்றை அவர்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.அந்தக் கடிதத்தின் முழு விபரம் வருமாறு: தமிழ் அரசியல் கைதிகள் அனைத்திலங்கை சிறைச்சாலைகள். 13.04.2012 கௌரவ ஆர்.சம்பந்தன் அவர்கள் பா.உ தலைவர், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஐயா, இந்திய பாராளுமன்றக் குழுவினரிடம் எமது நிலையினை எடுத்துரைத்து விடுதலைக்கு வழிசமைக்க வேண்டுகிறோம் அவசரகால மற்று…

    • 1 reply
    • 695 views
  22. யாழ்ப்பாணம் கிளாலிப்பகுதியில் பற்றைக்காணியைத் துப்பரவு செய்யும் போது பற்றைக்குள்; போர்க்காலத்தில் புதைத்து வைக்கப்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த மிதிவெடி வெடித்ததில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் இன்று திங்கள் மாலை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ். கொழும்புத்துறை உதயபுரம் பகுதியைச் சேர்ந்த சிறிதரன் பேணாட் (வயது 20) என்ற இளைஞனும் அவரது நண்பரான எஸ்.ரமணன் (வயது 18) என்பவரும் படுகாயங்களுக்கு இலக்காகியுள்ளனர். இந்த மிதிவெடி வெடிப்புச் சம்பவத்தில் சிறிதரன் பேணாட் என்ற இளைஞன் தனது ஒற்றைக் காலை இழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. http://thaaitamil.com/?p=15939

    • 0 replies
    • 819 views
  23. முள்ளிவாய்க்கால், முல்லைத் தீவுக்கும் போங்கள்- இந்திய குழுவுக்கு உலகத் தமிழர் இயக்கம் கோரிக்கை இலங்கையில் போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட இடங்களை இந்திய எம்.பிக்கள் குழு பார்வையிட வேண்டும் என்று உலகத் தமிழர் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய எம்.பிக்கள் குழுவுக்கு தலைமை வகிக்கும் சுஸ்மா சுவராஜ் மற்றும் எம்.பிக்களுக்கு உலகத் தமிழர் இயக்கத்தின் தலைவர் செல்வன் பச்சமுத்து அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கையில் நடைபெற்ற போரில் 2 லட்சத்து 16 ஆயிரம் தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். பல்லாயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளன…

    • 4 replies
    • 619 views
  24. இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் சர்வதேச நாடுகளின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்வதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவினர் இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான இக்குழுவில் கூட்டமைப்பின் முக்கிய அரசியல் தலைவர்கள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வகையில் மே மாதத்தின் இறுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் தலைவர்கள், அங்கு இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்து இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்க…

    • 1 reply
    • 731 views
  25. டெல்லி: இலங்கைக்கு செல்லும் இந்திய எம்.பிக்கள் குழு மேலும் பலவீனமாகியுள்ளது. இக்குழுவிலிருந்து தற்போது திரினமூல் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதாதளம் ஆகியவையும் வெளியேறி விட்டன. இதனால் குழுவின் எண்ணிக்கை 10 ஆக சுருங்கிப் போய் விட்டது. சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய எம்.பிக்கள் குழு இலங்கை செல்லவுள்ளது. இந்தக் குழுவிலிருந்து ஏற்கனவே அதிமுக, திமுக ஆகியவை வெளியேறி விட்டன. இதனால் குழுவின் எண்ணிக்கை 14 என்பதிலிருந்து 12 ஆக குறைந்து விட்டது. இந்த நிலையில் திரினமூல் காங்கிரஸும், ஐக்கிய ஜனதாதளமும் இன்று விலகி விட்டன. திரினமூல் சார்பில் சுசாரு ரஞ்சன் ஹல்தாரும், ஐக்கிய ஜனதாதளம் சார்பில் சிவானந்த திவாரியும் போவதாக இருந்தது. ஆனால் இருவரும் போகவில்லை. இதனால் குழுவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.