ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143380 topics in this forum
-
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் வாரங்களில் தென் கொரியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார் என தெரியவருகிறது. அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளார். தென் கொரியாவில் அதிகளவான இலங்கையர்கள் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையாகளுக்கு தொழில் வாய்ப்புக்களை அதிகரித்தல் மற்றும் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தல் ஆகிய காரணிகளை முதனிலையாகக் கொண்டு இந்த விஜயம் அமையும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. http://www.seithy.co...&language=tamil
-
- 3 replies
- 480 views
-
-
தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை சிங்கள மக்கள் கொண்டிருக்கவில்லை. தமிழர்களின் துயரம் சிங்கள மக்களுக்குத் தெரியாது. தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் அவர்கள் தடையாக நிற்க மாட்டார்கள் என சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். அரசியல் லாப நோக்கங்களைக் கொண்ட அரசியல்வாதிகளே இனப்பிரச்சினையைத் தூண்டி விடுவதாகவும், தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை தொடர்ச்சியாக சிங்கள மக்களிடமிருந்து மூடிமறைத்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை சிங்கள மக்கள் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் மிகவும் பிழையானவை. தமிழர்களுக்கு தீர்வினை வழங்குவ…
-
- 4 replies
- 488 views
-
-
சர்வதேசத்தின் பார்வை தற்போது சிறீலங்காவை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கும் நிலையிலும், இனவாத சிங்களத்தின் பார்வை தமிழர்களின் பூர்வீகத்தின் மீதே வீழ்ந்துகொண்டிருக்கின்றது. சாகையிலும் தமிழ் உயிர் குடித்துச் சாவேன் என்ற நிலையிலேயே சிங்களம் தற்போதும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில், வடபகுதியில் இந்து ஆலயங்களின் விக்கிரகங்கள், தெய்வ வாகனங்கள் தென்னிலங்கைக்கு கடத்தப்பட்டமை தொடர்பாக பல தடவைகள் இப்பகுதியில் குறிப்பிட்டிருந்தோம். இந்து ஆலயங்களில் திருவிழாக்கள் தற்போது ஆரம்பித்துள்ள நிலையில் சிங்களத்தின் பார்வை தமிழர்களின் பூர்வீக ஆலயங்களை நோக்கித் திரும்பியுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்குள் நான்கு இந்து ஆலயங்களில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் இரண்…
-
- 1 reply
- 743 views
-
-
13ம் அரசியலமைப்பு திருத்தம், இந்திய-இலங்கை ஒப்பந்தம் பெற்றெடுத்த குழந்தை. இந்திய அரசாங்கத்தின் சொந்த தயாரிப்பு. இதன்மூலம் மாகாணசபைகள் இந்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் அரசியலமைப்பு திருத்தத்தின்படி அதிகாரம் பரவலாக்கப்படவில்லை. இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை பலமுறை மீறியுள்ளது. நாட்டின் ஏனைய மாகாணங்களில் உள்ள இந்த அரைகுறை மாகாணசபைகூட இன்று வடக்கில் இல்லை. கற்றுக்கொண்ட ஆணைக்குழு என்பது இலங்கை பெற்று எடுத்த குழந்தை. இந்நாட்டு அரசாங்கத்தின் சொந்த தயாரிப்பு. இதன் சிபாரிசுகளை அமுல் செய்வதாகத்தான் இலங்கை அரசு, உலகத்திற்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளது. இன்று இது தொடர்பிலும் அரசாங்கம் உலகத்திற்கு கொடுத்த வாக்குறுதி…
-
- 0 replies
- 437 views
-
-
தமிழ்நாட்டின் முக்கியமான அரசியல் கட்சிகளான அதிமுகவும், திமுகவும் விலகிக் கொண்ட பின்னர், சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்ளும் இந்திய நாடாளுமன்றக் குழுவின் பயண முக்கியத்துவம் குறைந்து போய் விட்டதாக இந்திய ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன. சிறிலங்காவுக்கு இன்று மேற்கொள்ளும் பயணத்தில் இருந்து முதலில் அதிமுகவும், நேற்று திமுகவும் விலகியிருந்தன. ஆனாலும் இந்தியக் குழு இன்று கொழும்பு பயணமாகவுள்ளது. இந்தநிலையிலேயே இந்தியக் குழுவின் இந்தப் பயணம் முக்கியத்துவத்தை இழந்து விட்டதாக இந்திய ஊடகங்கள் விமர்சித்துள்ளன. இந்தநிலையில், இதுபற்றிக் கருத்து வெளியிட்டுள்ள தெற்காசிய விவகாரங்கள் தொடர்பான நிபுணர் வி.சூரியநாராயணன், தமிழ்நாட்டின் கவலைகள் உண்மையானது என்று கூறியுள்ளார…
-
- 0 replies
- 807 views
-
-
குழந்தையினை பணையமாக வைத்து சுண்ணாகம் பகுதியில் கொள்ளைகள் நடந்துள்ளன. இந்த கொள்ளைச் சம்பவங்களை தென் பகுதியிகளில் இருந்து வந்த சிங்கள காடையர்களே செய்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர். பகலில் சிங்கள காடையர்கள் வியாபாரிகள் போன்று நோட்டம் விடுவதும் இரவில் கொள்ளையில் ஈடுபடுவதுமே இவர்களது தொழிலாக இருக்கின்றது எனவும் கூறப்படுகின்றது. கந்தரோடைப் பகுதியில் உள்ள ஐந்து வீடுகளில் நேற்று அதிகாலை அச்சத்தில் உறைய வைக்கும் இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது: நேற்று அதிகாலை இராசரத்தினம் தினேஸ்கரன் என்பவரது வீட்டுக்குள் ஆயுதங்களுடன் கொள்ளையர்கள் நுழைந்தனர். எனினும் அவர்களைக் கண்டவுடன் வீட்டிலிருந்தோர் மின்விளக்குகளை ஒளிரவிட்டனர். எனினும் கொள்ள…
-
- 0 replies
- 842 views
-
-
சிறிலங்காவினை போர்குற்றங்களுக்கு பொறுப்பு கூறவைக்க முடியும் ! சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தலைமை வழக்கு தொடுனர் By naatham On 15 Apr, 2012 At 08:50 AM சர்வதேச நாடுகளின் விரிவான தலையீடுள் ஊடாக சிறிலங்காவினை அதன் போர்குற்றங்களுக்கு பொறுப்பு கூறவைக்க முடியுமென சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்புதிய தலைமை வழக்கு தொடுனர், கௌரவ ஃபாத்து பென்சூத்தா அவர்கள் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பொஸ்ரன் பல்கலைக்கழக சட்டவியல் கருத்தரங்கொன்றில் பங்குபற்றிப் பேசிய தலைமை வழக்கு தொடுனர் ஃபாத்து பென்சூத்தா அவர்கள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முதற்படியில் குற்றங்களை, தான் விசாரித்து தீர்ப்பளிக்குமென்றும், அது இயலாதபட்சத்தில், பரந்துபட்ட சர்வதேச தொடர்புகளைப் பயன்படுத்தி, குற்றம் புரிவ…
-
- 6 replies
- 1.2k views
-
-
13ஆவது அரசியல் அமைப்பின்படி தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-04-15 12:17:58| யாழ்ப்பாணம்] வழங்கக் கோருகிறார் ரணில் விக்கிரமசிங்க 13ஆவது அரசியலமைப்பு சீர்திருத்த அதிகாரப்பகிர்வு இலங்கையில் வழங்கப்படவேண்டும் என ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்து கிறார். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தபோதே அவர் இதனைக்கூறியுள்ளார். இந்தியாவிற்கான தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கையின் எதிர்க்கட் சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித் துள்ளார். இந்த சந்திப்பு நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது. இலங்கை தமிழர்களுக்கு …
-
- 1 reply
- 555 views
-
-
தமிழீழம் என்ற விடுதலை உணர்வு இன்னும் மடிந்து போகவில்லை. இன்னும் உயிரோடு தான் இருக்கிறது. சர்வதேச சமூகம் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் மேற்கு நாடுகள் அண்மையில் ஒரு முடக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளன. தமிழீழக் கோரிக்கையை முடிக்க அது போதுமானதல்ல. இலங்கையின் ஜனநாயகத் தோல்வியை ஈடு செய்வதற்காகச் சர்வதேச சமூகமும் இந்தியாவும் இலங்கையின் அரசியல் தலைமை மாற்றத்தையும் (Regime Change) தமிழீழத்திற்குப் பதிலாகப் புனர்வாழ்வையும் மேம்பாட்டுத் திட்டங்களையும் (Rehabilitation and Development) வழங்கினால் போதுமென்று உத்தேசிக்கின்றன. இதற்காக முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரும் விடுதலைப் புலிகளைச் சமாதானப் பொறிக்குள் வீழ்த்த உதவியவருமான றணில் விக்கிரமசிங்க என்ற அமெரிக்கச் சார்பு அரசியல்வாதி தெ…
-
- 4 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவுக்கான இந்தியக் குழுவில் இருந்து தி.மு.கவும் விலகுவதாக சற்று முன்னர் மு.கருணாநிதி அறிவித்திருப்பதானது தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வியூக அரசியலுக்குள் வீழ்ந்து விட்டதாகவே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயணத் திட்டம் முற்றிலும் சிறிலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை சந்தித்துப் பேச வாய்ப்புகள் இல்லை என்றும், சிறிலங்கா அரசின் விருந்துகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளதோடு அககுழுவில் இருந்து தனது கட்சி உறுப்பினரை விலக்கிவிட்டார். இந்நிலையில் 16-04-2012 திங்கட்கிழமை அன்று இந்தியக்குழுவினர் சி…
-
- 1 reply
- 872 views
-
-
வலிகாமம் வடக்கு பகுதியில் மீள்குடியேற்றமென்ற பேரில் பொதுமக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றமை அவர்களிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உயர்பாதுகாப்பு வலயத்தின் எல்லை கிராமங்கள் சில மட்டுமே மீள்குடியமர்விற்கு அனுமதிக்கப்பட்டுள்ள போதும் எஞ்சிய பகுதிகள் பற்றி மூச்சு விடக்கூட அரசு தற்போது மறுத்து வருகின்றது. மீள்குடியமர்வு தொடர்பினில் தம்மால் எதுமே செய்யமுடியாதென அரச அதிபர் இமெல்டா சுகுமார் தற்போது ஒதுங்கிக்கொண்டுள்ளார். இது வரை காலமும் அரசினது பிரதிநிதியாக அவர் கால அவகாசங்களை மீள் குடியமர்வு தொடர்பினில் கூறிக்கொண்டிந்திருந்தார். ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் காலப்பகுதிகளில் மட்டும் பேசப்படும் விடயமாகவே உயர்பாதுகாப்பு வலய விவகாரம் தற்போது இர…
-
- 0 replies
- 517 views
-
-
வடக்கிற்கான சந்திரஹாசனின் வசந்த வருகையோடு, கிழக்கு சந்திரகாந்தனின் அஸ்தமனமும் ரவூப் ஹக்கீமின் உதயமும் தோன்றப் போவதாக செய்திகள் கூறுகின்றன. மேற்குலகின் ஜெனீவா அழுத்தங்களுக்கு மாற்று வழி முறைகளைத் தேடும் அரசின் புதிய தெரிவுகளாக இதனைப் பார்க்கலாம். நாடாளுமன்றத் தெரிவுக்குழு மேடை, அடுத்த அரங்க நிகழ்விற்கு ஏற்ற வகையில் உருவாகாவிட்டால் மாகாண சபைத் தேர்தல் முன்னெடுக்கப்படும் சாத்தியப்பாடுகள் அதிகம் காணப்படுகின்றது. பொருளாதார நிலைவரம் குறித்தான, மத்திய வங்கியின் ஆண்டறிக்கை வெளியீட்டு நிகழ்வில், போரினால் பாதிப்படைந்த வடக்கு கிழக்கு மீள் கட்டுமானப் பணிக்கு இந்த வருடம் 89 பில்லியன் ரூபாய்களை செலவிடப் போவதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த செய்தி இதனை மேலும் உறுதிப…
-
- 1 reply
- 821 views
-
-
முள்ளிவாய்க்காலில் போர் முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகளாகி விட்டன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், முக்கிய தளபதிகளும் கொல்லப்பட்டு, புலிகள் இயக்கத்தின் இராணுவ வல்லாண்மை முற்றாகவே அழிக்கப்பட்டு விட்டதாக, 2009 மே மாதம் அரசாங்கம் பிரகடனம் செய்தது. ஆனால், இன்று வரை, புலிகளை வைத்து பூச்சாண்டி காட்டும் பழக்கத்தில் இருந்து மட்டும் அரசாங்கத்தினால் விடுபட முடியவில்லை. எதற்கெடுத்தாலும் புலிகள் என்று குற்றஞ்சாட்டும் கடந்த முப்பதாண்டு காலபழக்க தோஷத்தில் இருந்து புலிகளால் ஏற்பட்ட காய்ச்சலில் இருந்து – அரசாங்கம் இன்னும் மீளவில்லை. மனிதஉரிமைகள் பற்றிப் பேசினால், உடனடியாக அவர்களுக்குப் புலிகள் நிதி வழங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்படும். அரசுக்கு எதிரான ஏ…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையில் இடம்பெறும் ஆள்கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய வெள்ளை வான் சாரதி ஒருவர் குறித்த விபரங்களை லங்கா ஈ நியூஸ் என்ற இணையத்தளம் வெளியிட்டுள்ளது. இலங்கை கடற்படையைச் சேர்ந்த கோப்ரலான சமரஜீவ கருணாரட்ன என்பவரே இக்கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய வெள்ளைவானின் சாரதியாக செயற்பட்டு வருவதாக இந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அந்த இணையத்தளம் மேலும் தெரிவித்ததாவது:- 1969 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பிறந்த இவரின் அடையாள அட்டையில் 690454793 V என தெரிவிக்கப்பட்டுள்ளது. 545, ஹிறு லுனிக்கவெவ, கலன் பிந்துனு வென எனும் முகவரியை கெண்ட இவரின் படைத்துறைச் வேவைக்கான பதிவு இலக்கம் 2 K 01454 என்பதாகும். இலங்கையில் இடம்பெறும் ஆள் கடத்தல் சம்பவங்களுக்காக டபிள…
-
- 1 reply
- 1.5k views
-
-
இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவில் தி.மு.க.வும் விலகியுள்ளது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். லோக்சபா பி.ஜே.பி. தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான, 15 எம்.பி.,க்கள் அடங்கிய குழு, நாளை ஐந்து நாள் பயணமாக இலங்கை செல்ல இருந்தது. இந்நிலையில் தி.மு.க.தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை செல்ல உள்ள எம்.பி.க்கள் குழுவில் தி.மு.க.வும் இடம் பெறாது என்று கூறியுள்ளார். முன்னதாக அ.தி.மு.க. எம்.பி.கள் இலங்கை செல்லமாட்டார்கள் என முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://news.vikatan.com/?nid=7536
-
- 4 replies
- 576 views
-
-
‘பாதைகள் எல்லாமே முடிந்து போய்விட்டன, ஆனாலும் பயணத்தைத் தொடரவேண்டிய நிலையில் இன்று தமிழர்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள்’ என்றொரு கவிஞன் சொன்னான். நிச்சயமாக அதுவே உண்மையாக இருப்பதுபோலத் தோன்றுகின்றது. மிக நீண்டகாலம் நாம் தமிழர்கள் தங்கள் சுயத்திற்காகவும் தங்கள் வாழ்நிலத்திற்காகவும் போராடியிருக்கின்றார்கள். அந்தப் போராட்டங்களுக்கு பயங்கரவாதச் சாயம் பூசி முடக்கிய சர்வதேசம் தமிழர்களுக்கு நிம்மதியான வாழ்வு பெற்றுக் கொடுக்கப்படும் எனக் கூறியிருந்தது. நிச்சயமாக அதற்கான முஸ்தீபுகளையும் மேற்கொண்டிருந்தது. ஆனால் அவை எதுவுமே இன்றுவரைக்கும் எமக்கொரு நிம்மதியான வாழ்வை பெற்றுத் தரவில்லை என்பது மட்டும் மறுக்கப்படாத உண்மையாக இருக்கின்றது. யுத்தம் முடிந்துவிட்டது, இந்த நாட்டி…
-
- 0 replies
- 671 views
-
-
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, அங்கு வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் கொழும்பு என எல்லா இடங்களிலும் உள்ள தமிழ்க்குழுக்களையும் சந்தித்துப் பேசவுள்ளதாக என்று இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் தலைமையிலான இந்தக் குழுவினர் வரும் 16ம் நாள் கொழும்பு வருவர். 21ம் நாள் வரை சிறிலங்காவில் தங்கியிருப்பர். இந்தக் குழுவினர் 17ம் நாள் காலையில் சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவையும், அதையடுத்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசையும் சந்தித்துப் பேசவுள்ளனர். அதையடுத்து சிறிலங்கா நாடாளுமன்றம் செல்லும் அவர்கள் அங்க…
-
- 3 replies
- 819 views
-
-
இலங்கை அரசு சர்வதேசக் கண்டனங்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக நல்லிணக்க ஆணைக் குழுவை நியமித்தது. நல்லிணக்க ஆணைக் குழுவின் தலைவராக முன்னாள் சட்டமா அதிபர் சி.ஆர்.டி.சில்வா நியமிக்கப்பட்டார். திருகோணமலையில் ஜந்து தமிழ் மாணவர்கள் படுகொலை, பட்டினிக்கு எதிரான பிரெஞ்சு தொண்டர் அமைப்பின் பதினாறு பணியாளர்கள் படுகொலை, அம்பாறையில் முஸ்லிம்கள் படுகொலை உட்படப் பதினேழு மனித உரிமை மீறல்களை விசாரணை செய்ய ஒரு ஆணையத்தை அரசு 2007ல் நியமித்தது. சர்வதேச நிர்ப்பந்தத்தின் காரணமாக இந்த ஆணையத்தை நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இலங்கை அரசு தள்ளப்பட்டது. அரசிற்கு உதவி செய்யும் தோரணையுடன் சர்வதேச சமூகம் ஒரு International Independent Group of Eminent Persons என்ற அமைப்பை உருவாக்கி …
-
- 0 replies
- 407 views
-
-
யாழ். கந்தரோடை மடத்தடி சுன்னாகப் பகுதியில் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு 11.40 மணியளவில் அப்பகுதியிலுள்ள எல்.லோகேஸ்வரன் என்பவரது வீட்டுக்குள் வெளியே நிற்க மூன்று கொள்ளையர்கள் மதிலால் ஏறிச் சென்று அவ்வீட்டில் பின்புறமாக இருந்த மின்சார உருகியை நிறுத்திவிட்டு கதவுகளை திறக்குமாறு வெளியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களை அடித்து நொருக்கியுள்ளனர். வீட்டில் இருந்தவர்கள் வீட்டு யன்னல்களை யாரோ உடைப்பதாக நினைத்து கதவை திறந்தவுடன் வெளியில் இருந்த மூன்று திருட்டு நபர்கள் உள்ள நுழைந்து வீட்டின் உரிமையாளர் சின்னத்துரை இராசத்தினம் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்கள் இருவரையும் தனித்தனி அறையில் பூட்டி வைத்து மகனின் மனைவியை அச்சுற…
-
- 0 replies
- 486 views
-
-
அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு மீணடும் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை மாலை 125.65 ரூபாவாக இருந்த ஒரு டொலரின் மதிப்பு நேற்று 128 ரூபாவாக அதிகரித்தது. சிறிலங்கா ரூபாவின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்து, இன்று முற்பகல் ஒரு அமெரிக்க டொலர் 130 ரூபாவாக விற்கப்பட்டது. கடந்த மார்ச் 19ம் நாள் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு கடுமையான வீழ்ச்சியடைந்து, அமெரிக்க டொலர் ஒன்று 131.60 ரூபாவாக விற்கப்பட்டது. இதையடுத்து சிறிலங்கா அரசாங்கம் நாணய மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்க முனைந்தது. இந்தநிலையில் கடந்தவாரம் டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பு 125 ஆக உயர்ந்தது. எனினும் இந்தவாரம் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வர…
-
- 17 replies
- 2k views
-
-
யாழ். சுண்டுக்குளியில் நடைபெற்ற விபத்தில் ஸ்தலத்திலேயே இருவர் பலி. சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அண்மையில் நடைபெற்ற விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். இச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது, மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் மின்சாரக்கம்பத்துடன் மோதுண்டதனாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. வேகக்கட்டுப்பாட்டை மீறியே மின்கம்பத்துடன் மோதுண்டதாக தெரியவருகின்றது. யாழ். போதனா வைத்தியசாலையின் அம்புலன்ஸ் சேவைக்கு சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்ட போதும் இவர்கள் சுமார் 30 நிமிடங்கள் தாமதமாகவே சம்பவ இடத்திற்கு வந்திருக்கின்றனர். அவர்கள் விரைவில் வந்திருந்தால் இவர்களைக் காப்பாற்றியிருக்க முடியும் என இப்பகுதி மக்க…
-
- 0 replies
- 468 views
-
-
மன்னார் வங்காலைப்பாடு மீனவ கிராமத்தினுள் உள்ள வீடு ஒன்றினுள் கடற்படையினன் ஒருவன் நிர்வாண கோலத்துடன் நுழைந்த சமயம் குறித்த கடற்படையினனை அப்பகுதி மக்களினால் துரத்தி பிடிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் கடந்த 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது என மன்னாரில் இருந்து சங்கதியின் செய்தியாளர் தெரிவிக்கின்றார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் வாங்காலைப்பாடு மீனவ கிராமம் அமைந்துள்ளது. குறித்த கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வழ்ந்து வருகின்றனர். ஆண்கள் தொழிலுக்குச் செல்லும் போது பெண்கள் தனிமையாக இருப்பது வழமை. இந்த நிiயில் சம்பவ தினமான கடந்த வெள்ளிக்கிழமை இரவு குறித்த கிராமத்தில் உள்ள ஆண்கள…
-
- 0 replies
- 846 views
-
-
உயர்தர படை ஏவுனனான மகிந்த ஹத்திறுசிங்கா போராளிகளுக்கான மானிய கொடுப்பனவுகளை முடித்துக்கொண்டு உள்ளூர் பொதுமக்களை நோக்கி இந்த அறிவுறுத்தலை வெளிவிட்டார். புலிகள் தனி நாடு கேட்டுப் போரிட்டதால் எல்லா இனத்தவரும் கஸ்டப்பட்டார்கள் என்றார். பிரிவினைகளைத் தூண்டி தமது பணத்தை விரயமாக்கும் புலம் பெயர் தமிழ்க்கூட்டம் இங்கே வந்து இவர்களுக்கு உதவினால் என்ன என்றும் கேள்வி எழுப்பினார். புலிகளின் அதி உச்ச தலைவர்களை அழித்துத்தான் போராடத்தை முற்றுக்கொண்டு வந்ததாகவும் கூறினார். அரசாங்கம், புலம் பெயர் தமிழர், புலிகளை திரும்ப வளர்த்தெடுக்க காட்டும் முயற்சிகள் மீது ஒரு கண் வைத்திருப்பதாகவும் எச்சரித்திருக்கிறார். http://www.indianexp...e-wary/936754/0
-
- 8 replies
- 1.6k views
-
-
காலி – எல்பிட்டி – திலிதுற தோட்டத்தில் வசிக்கும் தமிழ் குடும்பங்கள் மீது சிங்கள இளைஞர்கள் தாக்குதல் நடத்தி அவர்களது வீடுகளுக்கு தீயிட்டுள்ளதோடு பெறுமதியான பொருட்களையும் திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து நம்பகரமான, உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள்படி நடந்தவை வருமாறு, எல்பிட்டி – திலிதுற தோட்டத்தில் உள்ள இராணுவ சிப்பாய் விடுமுறையில் ஊருக்கு வரும்போது அங்குள்ள தமிழ் குடும்பங்களை சந்தித்து தன்னை ´சேர்´ அல்லது ´மாத்தயா´ என்றுதான் அழைக்க வேண்டும் என அச்சுறுத்தி வந்துள்ளார். எனினும் இலங்கை நாட்டு பிரஜைகள் என்பதால் அந்த இராணுவ சிப்பாய்க்கு அடிபணிய திலிதுற தோட்ட தமிழ் குடும்பங்கள் மறுத்து வந்துள்ளனர். இதனால் இந்த மக்கள் மீது இராணுவ சிப்பாய்க்கு கடும் கோபம் இருந்த…
-
- 4 replies
- 1.1k views
-
-
இலங்கை இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் சர்வ தேசத்தின் பங்களிப்பைப் பெற்றுக் கொள் வதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழு இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பயணங் களை மேற்கொள்ளவுள்ளது. அரசியல் தீர்வு தொடர்பில் சர்வதேசத்தின் ஆதரவைத் தேடும் பயணங்களாக இந்தப் பயணங்கள் அமையும் எனக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.கூட்டமைப்பின் குழுவினர் தலைவர் சம்பந்தன் தலைமையில் மே மாத இறுதி யில் இந்தியாவுக்கு பயணமாகின்றனர். அங்கு அவர்கள் இந்திய அரசியல் தலைமைகளைச் சந்தித்து இலங்கை இனப்பிரச் சினைத் தீர்வு தொடர்பான பேச்சுகளில் ஈடுபடவுள்ளனர். தமிழ் மக்களின் பிரச்சி னைக்கான தீர்வை விரைவுபடுத்துவது தொடர்பில் இந்தப் பேச்சுகளில் ஆராயப் படவுள்ளதாகத் தெரிய …
-
- 2 replies
- 883 views
-