ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142807 topics in this forum
-
Published By: VISHNU 26 FEB, 2024 | 06:21 PM அதிக வெப்பநிலை காரணமாக ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து பாடசாலை மாணவர்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான ஆலோசனைகளை குறிப்பிட்டு கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை குறித்து அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் தெரியபடுத்துமாறு கல்வி அமைச்சு ,அனைத்து மாகாணங்களின் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளது. இந்த அறிவித்தலில் மாணவர்களுக்கான விசேட குறிப்பிடுவதாவது , 1. கறுப்பு நிற ஆடைகளை அணிவதை தவிர்க்கவும் 2. தொப்பி அணிந்து அல்லது குடையைப் பிடித்தவாறு வெயில் செல்லுங்கள் 3. வீட்டிலிருந்து செல்லும் போது சுத்தமான குடிநீரை எடுத்து செல்லவும் …
-
- 1 reply
- 407 views
- 1 follower
-
-
அரச நிறுவனங்களின் உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகளில் 71 சத வீதமானவை முறையாகச் செயற்படவில்லை: கணக்கெடுப்பில் தகவல்! Published By: VISHNU 26 FEB, 2024 | 05:21 PM நாட்டிலுள்ள அரச நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகளில் 71 சத வீதமானவை முறையாகச் செயற்படவில்லை என பேராதனைப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பேராசிரியர் வசந்த அத்துகோரலவின் வழிகாட்டலின் கீழ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளி விபரவியல் திணைக்கள மாணவர்கள் குழுவினால் இது தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பின்படி, அரச நிறுவனங்களைத் தொடர்பு கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட உத்தியோக…
-
- 0 replies
- 246 views
- 1 follower
-
-
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களிடம் வெளிநாட்டு கையிருப்புகளை அனுப்ப வேண்டாம் என எமது நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதனால் நாங்கள் பொருளாதார ரீதியாக உடைந்து போனோம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பொருளாதார வீழ்ச்சி இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கத்தின் முறைமையின்படி அரசாங்கத்தின் பிரதான மதிப்பீட்டாளரின் பெறுமதி பெறப்பட்டதுடன் அரசாங்கத்தின் மதிப்பீட்டுத் தொகை 8,299 மில்லியன் ரூபாவாகும். சுயாதீன மதிப்பீட்டாளரிடமிருந்து பெறப்பட்ட மதிப்பீட்டின் ஆரம்ப முதலீட்டு அறிக்கையை சம்பந்தப்பட்ட முதலீட்டாளர் சமர்ப்பித்திருந்தார். அதன் மதிப்பீடு 3,256 மில்லியன் ரூபாவாக காட்டப்பட்டது. இந்தத் தொகைய…
-
-
- 2 replies
- 553 views
-
-
இலங்கைகான அமெரிக்காவின் புதிய தூதுவராக எலிசபெத் கெத்ரின் ஹோர்ஸ்ட் நியமனம்! இலங்கை;கான அமெரிக்காவின் புதிய தூதுவராக எலிசபெத் கெத்ரின் ஹோர்ஸ்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக பணியாற்றிய ஜூலி சங்கின் பதவிக்காலம் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சிரேஷ்ட அமெரிக்க ராஜதந்திரியான எலிசபெத் கெத்ரின் ஹோஸ்ட், பாகிஸ்தானுக்கு பொறுப்பான தலைமை பிரதி செயலாளராக பதவி வகித்து வருகின்ற நிலையிலேயே இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்க செனட் சபையின் அனுமதிக்கிணங்க இலங்கை அரசாங்கம் இதற்கான ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
-
- 2 replies
- 537 views
-
-
26 FEB, 2024 | 10:25 AM யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் பஸ்ஸின் மிதி பலகையிலிருந்து தவறி விழுந்து இருவர் உயிரிழந்துள்ள நிலையிலும், பஸ்ஸின் மிதிபலகையில் தொங்கியவாறு ஆபத்தான பயணங்களை இன்னமும் தொடர்கின்றனர். பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட சிலர் யாழ். நகர் பகுதியிலிருந்து காரைநகர் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸில், மிதிபலகையில் தொங்கியவாறு பயணிக்கும் போது, வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனத்துடன் மோதுண்டு விழும் காட்சிகளை ஒருவர் கையடக்க தொலைப்பேசியில் பதிவு செய்து, தனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த 19ஆம் திகதி பஸ்ஸினை நிறுத்துவதற்கு முதல், பெண்ணொருவர் இறங்க முற்…
-
- 0 replies
- 363 views
- 1 follower
-
-
மார்ச் மாதம் ஜெனீவா அமர்வில் எழக்கூடிய சவால்களை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளில் இலங்கை தீவிரம் - பிரிட்டனுடன் ரணில் பேச்சுவார்த்தை Published By: RAJEEBAN 17 JAN, 2024 | 10:48 AM ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் சவால்களை எதிர்கொள்வதற்காக இலங்கை புதிய இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள் உட்பட பல நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதன் மூலம் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் எதிர்வரும் அமர்வில் எழக்கூடிய சவால்களை எதிர்கொள்வதற்கான புதிய அணுகுமுறைகளை இலங்கை பின்பற்ற ஆரம்பித்துள்ளது. அணிசேரா மாநாட்டிற்காக ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க உகன்டா செல்லவுள்ளார், 19வத…
-
- 3 replies
- 523 views
- 1 follower
-
-
25 FEB, 2024 | 10:25 AM பல்வேறு நபர்களின் தனிப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய சில இணையத்தளங்களிலிருந்து பெறப்படும் தரவுகளைக் கணினி ஹெக்கர்கள், குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்துவதாகக் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இணையத்தைப் பயன்படுத்தும் போது பயனாளர்களின் முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்க இணையதளத்தில் பல்வேறு பாதுகாப்பு உத்திகள் பின்பற்றப்படுகின்றன. ஆனால் சில அரசு மற்றும் தனியார் இணையதளங்கள் மூன்றாம் தரப்பினருக்கு மிக எளிதாகத் தகவல்களைப் பெறும் திறனைக் கொண்டுள்ளன. முகநூல், வட்ஸ்அப், மின்னஞ்சல் போன்ற முக்கியமான தரவுகளை உள்ளடக்கிய தனிப்பட்ட கணக்குகள் கணினி ஹெக்கர்களால் திருடப்படலாம் என கணினி குற்றப் புலனாய…
-
- 0 replies
- 199 views
- 1 follower
-
-
மட்டக்களப்பில் 15 வயது சிறுமி கடத்தல் : 18 வயது காதலனும் அவரது சிறிய தாயாரும் கைது Published By: VISHNU 25 FEB, 2024 | 09:31 PM மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியைக் கடத்திச் சென்ற 18 வயது இளைஞனையும் அவரது சிறிய தாயாரையும் பொலிஸார் வாகரையில் வைத்து சனிக்கிழமை (24) இரவு கைது செய்துள்ளனர். கடத்தப்பட்ட சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர். கொக்குவில் பொலிஸ் பிரிவில் வசித்து வந்த சிறுமி கடந்த 7ம் திகதி பாடசாலைக்குச் சென்ற நிலையில் அவர் வீடு திரும்பாததையடுத்து அவரது உறவினர்கள் பொலிசாரிடம் முறைப்பாடு செய்தனர். இதையடுத்து கொக்குவில் ப…
-
- 0 replies
- 470 views
- 1 follower
-
-
வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்குப் பெரும்பான்மை இனப் பேராசிரியர் உட்பட நால்வர் விண்ணப்பம்! Published By: DIGITAL DESK 3 23 FEB, 2024 | 03:54 PM வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு பெரும்பான்மை இனப் பேராசிரியர் ஒருவர் உட்பட நான்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அறிய வருகிறது. தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் தம்பு மங்களேஸ்வரனின் பதவிக் காலம் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அந்தப் பல்கலைக்கழகத்தின் பேரவைச் செயலாளரால் புதிய துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதற்கான இறுதித் தினம் நேற்று 21 ஆம் திகதி புதன்கிழமையாகும். நேற்றுப் பிற்பகல் 3:00 மணியுடன் …
-
-
- 18 replies
- 1.5k views
- 1 follower
-
-
ரணிலை இரகசியமாக சந்திக்கும் பொன்சேகா! சரத் பொன்சேகா இரவு நேரங்களில் டயனா கமகேவின் வீட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து வருவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமது பணி இடைநிறுத்தம் மற்றும் பதவி நீக்கத்தை தடுக்குமாறு சரத்பொன்சேகா நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்துள்ளார். சரத் பொன்சேகாவிடம் நாம் ஒர…
-
- 4 replies
- 665 views
-
-
ரஷ்யா, உக்ரைன் நாட்டவர்களை வெளியேற விடுத்த அறிவிப்பு தொடர்பில் விசாரணை - அமைச்சரவை அனுமதியின்றி குடிவரவு திணைக்கள ஆணையாளர் நாயகம் அறிவித்ததாக ஊடகங்களில் செய்தி Rizwan Segu MohideenFebruary 25, 2024 – உடன் விசாரிக்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு ரஷ்யா மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகளை 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென விடுக்கப்பட்ட அறிவித்தல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அமைச்சரவையின் முன் அனுமதியின்றி குறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி…
-
-
- 3 replies
- 658 views
-
-
25 FEB, 2024 | 03:07 PM திருக்கோணேஸ்வர பெருமானின் நகர்வலம் வழமைபோன்று எவ்வித இடையூறுகளும் இன்றி திட்டமிட்டபடி இடம்பெறும் என ஆலய பரிபாலன சபை தெரிவித்துள்ளது. மஹா சிவராத்திரியை முன்னிட்டு வருடாவருடம் இடம்பெறும் திருக்கோணேஸ்வர பெருமானின் நகர்வலம் இம்முறையும் திட்டமிட்டபடி இடம்பெறவுள்ளதாகவும், அதற்கு எந்த தடைகளும் இல்லை எனவும் பக்தர்கள் அது தொடர்பில் எவ்வித ஐயப்பாடும் கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. அத்துடன் கடந்த வருடத்தை விட இம்முறை மிகவும் சிறப்பான முறையில் நகர்வலம் இடம்பெறும் என எதிர்பார்ப்பத…
-
- 1 reply
- 544 views
- 1 follower
-
-
பெரும்பான்மை வாதம் குறித்து இலங்கை எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்; அதிகாரப் பகிர்வு அபிவிருத்திக்கு மிகவும் அவசியம் - இந்தியாவில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூர்ய Published By: RAJEEBAN 25 FEB, 2024 | 12:23 PM அதிகார பகிர்வு அனைவரையும் உள்வாங்கும் அபிவிருத்தி ஆகியவை இலங்கையின் பேண்தகு அபிவிருத்திக்கு மிகவும் அவசியம் என தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூர்ய பெரும்பான்மைவாதம் குறித்தும் எச்சரித்துள்ளார் இந்தியாவின் 2022 ரைசினா டயலொக் 2024 நிகழ்வின் ஒரு பகுதியாக இடம்பெற்ற கலந்துரையாடலில்கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவ…
-
-
- 2 replies
- 374 views
- 1 follower
-
-
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான நடை முறைகள் பின்பற்றப்பட வேண்டும் - மாவட்ட அரசாங்க அதிபர் 12 FEB, 2024 | 05:55 PM (எம்.நியூட்டன்) கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது இம்மாதம் 23 ஆம், 24ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பின்வரும் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அறிவுறுத்தியுள்ளார். கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது இந்த வருடம் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரின் ஒருங்கிணைப்பின் கீழ் யாழ் ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, நெடுந்தீவு பிரதேச செயலகம், மற்றும் சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினதும் முழுமையான ஒத்துழைப்புடன் பெப்ரவரி 23 மற்றும் 24 ம் திகதிகளில் நடைபெறவுள்ளது…
-
-
- 15 replies
- 1.6k views
- 1 follower
-
-
25 FEB, 2024 | 06:05 PM மட்டக்களப்பு ஏறாவூர் கடற்கரை பகுதியில் சுமார் 22 இலட்சம் ரூபாய் பெறுமதியான பெருமளவு சட்ட விரோத சுருக்குவலைகள் மற்றும் 3 தோணிகளை மீன்பிடி அதிகாரிகள் கடற்படையினருடன் இணைந்து கைப்பற்றியுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தினர் தெரிவித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை (25) சட்டவிரோத சுருக்கு வலைகளை கண்டுபிடிப்பதற்கான சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோதே இந்த வலைகளும் தோணிகளும் அதிகாரிகள் மற்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் சிலர் தொடர்ச்சியாக தடை செய்யப்பட்ட சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக மீனவர்கள் முறைப்பாடு அளித்துள்ளனர். …
-
- 0 replies
- 430 views
- 1 follower
-
-
01 DEC, 2023 | 05:30 PM கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதிபெற்றுள்ள மாணவர்களுக்கு கடந்த வருடத்தைப் போன்று, இந்த வருடமும் ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். அதற்கமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டலில் மேற்படி புலைமைப்பரிசில் திட்டம் இன்று வெள்ளிக்கிழமை (01) ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி நாட்டிலுள்ள 100 கல்வி வலயங்களும் உள்ளடங்கும் வகையில் ஒரு கல்வி வலயத்தில் இருந்து 50 மாணவர்கள் வீதம் தெரிவு செய்யப்பட்டு, 5000 மாணவர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா புலைமைபரிசில் வழங்கப்படவுள்ளது. …
-
- 3 replies
- 339 views
- 1 follower
-
-
25 FEB, 2024 | 04:11 PM தேராவில் குளத்து மேலதிக நீரினால் பாதிக்கப்பட்டு இரண்டு மாதங்களாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தீர்வு வழங்கும் விதமாக முல்லைத்தீவில் வெள்ளநீர் முகாமைத்துவ செயற்றிட்டம் மாவட்ட அரசாங்க அதிபரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேராவில் குளத்தின் மேலதிக நீரினை வெளியேற்றுவதற்கான செயற்றிட்டம் லைக்கா ஞானம் அறக்கட்டளை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிதிப் பங்களிப்புடன் இன்று (25) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது தேராவில் குளத்து மேலதிக நீரினை வெளியேற்றும் இத்திட்டத்துக்கான பெயர்ப்பலகை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது. அதனை தொ…
-
- 0 replies
- 211 views
- 1 follower
-
-
நாட்டின் மூத்த குடிமக்களின் வருமானம் பெரும் சரிவை சந்தித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். வங்கி வட்டி விகிதம் 9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் வங்கிகள் பரிவர்த்தனைகளில் 3 சதவீதம் எடுத்துக் கொள்வதாலும் இவ்வாறு மூத்த குடிமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மூத்த குடிமக்கள் ஓய்வு பெற்ற பின், வாழ்நாள் முழுவதும் சேவை செய்து கிடைக்கும் வருமானத்தை வங்கிகளில் வைப்பு செய்து, வட்டியில் தான் வாழ்கின்றனர். வங்கி வட்டி ஆனால் இன்று வங்கிகளில் வட்டி கொடுக்கும் முறையால் அவர்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவுகளால் ஏராளமான குடும்பங்கள் ஆதரவற்ற நிலையி…
-
- 1 reply
- 497 views
- 1 follower
-
-
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மியன்மார் துறைமுகத்துடன் இணைக்க திட்டம் : மேற்கு, கிழக்கு மூலோபாய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி எடுத்துரைப்பு 25 FEB, 2024 | 03:09 PM ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் உட்கட்டமைப்பு வசதிக்காக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள பாரிய முதலீடுகளை தேசிய பொருளாதாரத்துக்கு நன்மை பயக்கும் வகையில் தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மியன்மார் துறைமுகத்துடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதனை கிழக்கு சீனாவின் சோங்கிங் துறைமுகம் வரையில் விரிவுபடுத்தி, பின்னர் ஆபிரிக்கா வரை அதனை மேலும் விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுவதாக குறிப்…
-
- 0 replies
- 243 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 25 FEB, 2024 | 10:40 AM உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள்குறித்த விசாரணகளின் அவசியத்தை அமெரிக்காவின் முகாமைத்துவம் மற்றும் வளங்கள் பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சட் வெர்மா வலியுறுத்தியுள்ளார். பொருளாதார நெருக்கடி உத்தேபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் நல்லிணக்கம் போன்றவழமையான விவகாரங்களிற்கு அப்பால் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணகள் குறித்தும் வெர்மா ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியுடனான சந்திப்பின்போதும் பின்னர் ஜனாதிபதியுடனான சந்திப்பின்போதும் ரிச்சட்உயிர்த்த ஞாயிறுதாக்குதல் விசாரணைகள் குறித்து ஆராய்ந்துள்ளார் என தகவல்கள் வெளியாகிய…
-
- 0 replies
- 246 views
- 1 follower
-
-
23 FEB, 2024 | 06:12 PM புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என வெளிநாடு வாழ். இலங்கையருக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் வீ. கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் நடத்தப்படும் பேசாப்பொருள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், புலம்பெயர்வு என்பது புதிய விடயமல்ல. மனித வாழ்க்கை முறை ஆரம்பித்த காலத்திலிருந்து பல்வேறுபட்ட காரணங்களுக்காக இடம்பெயர்வுகள் நிகழ்ந்துள்ளன. மனிதன் தனக்கு சாத்தியமான வளங்கள் காணப்படும் பகுதிகளை நோக்கி நகர்வதை காண முடிகிறது. இன்றளவில் நியூசிலாந்து வட…
-
-
- 14 replies
- 1.6k views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 24 FEB, 2024 | 03:21 PM இந்திய இழுவை படகுகளுக்கு எதிரான கறுப்புக் கொடி போராட்டம் ஒன்றினை இந்திய - இலங்கை கடல் எல்லையில் நடத்துவதற்கு யாழ்ப்பாண மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புகளின் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது. இன்று சனிக்கிழமை (24) யாழ்ப்பாணத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலுயே, அந்த அமைப்பின் பிரதிநிதி பாக்கியநாதன் றேகன் அவர்கள் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய இழுவை படகுகள் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தொழில் முதல்களை அழித்து வந்த வேளை, எமதா கடற்படையினரால் அந்த இந்திய இழுவைப்படகுகள் கைப்பற்றப்பட்டு அதில…
-
- 1 reply
- 285 views
- 1 follower
-
-
இலங்கை வழங்கும் ஆதரவிற்கு நன்றி இந்திய சமுத்திரத்தில் கடல் பயணத்தை சுதந்திரமாக மேற்கொள்ள இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமெரிக்க பிரதிநிதிகளிடம் உறுதியளித்துள்ளார். அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் வர்மாவை சந்தித்த போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு வருகை தந்த நான்காவது அமெரிக்க பிரதிநிதி ரிச்சர்ட் வர்மா என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். …
-
- 0 replies
- 464 views
-
-
கடந்த ஆண்டு 1 மில்லியனுக்கும் அதிகமான மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன : பாராளுமன்றக் குழு வெளிப்படுத்துகிறது நாடு முழுவதும் கடந்த ஆண்டில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மின் துண்டிப்புகள்செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்றக் குழு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தலைமையில் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை தணிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழு நேற்று வியாழக்கிழமை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடிய போது இவ்விடயம் தெரியவந்துள்ளது. கடந்த வருடம் 10,69,000 மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டமை தெரியவந்துள்ளதாக தலைவர் வலேபொட தெரிவித்தார். இணைப்பு துண்டிக்கப்பட்ட நுகர்வோருக்கு, மறு இணைப்பு கட்டணத்த…
-
- 0 replies
- 407 views
-
-
இலங்கையர்களை நாடு கடத்திய சீனா! கொள்கலன் ஒன்றில் மறைந்திருந்து மலேசியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது சீனாவில் கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்களும் ஒரு வருடத்தின் பின்னர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று (24) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். இந்த 2 சந்தேக நபர்களும் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் இருந்த கொள்கலனில் மறைந்து மலேசியாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர். அவர்களில் ஒருவர் 26 வயதுடைய மலர்மதி ராஜேந்திரன் என்றும் மற்றவர் 39 வயதான ஜெயக்குமார் தருமராசா என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜனவரி 30, 2023 அன்று குறித்த இருவரும் ம…
-
- 0 replies
- 332 views
-