ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143373 topics in this forum
-
ஜெனீவா நிகழ்வில் கலந்து கொண்ட என்னுடன் அரச பிரதிநிதிகள் மோசமாக நடந்து கொண்டனர் பிரகீத் எக்னலி கொடவின் மனைவி குற்றச்சாட்டு ஜெனீவாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் தான் தெரிவித்த கருத்துக்களை தொடர்ந்து அரச பிரதிநிதிகள் தன்னுடன் மோசமாக நடந்து கொண்டதாக காணாமல் போன ஊடகவியலாளரான பிரகீத் எக்னலி கொடவின் மனைவியான காந்தியா எக்னலி கொட தெரிவித்துள்ளார். காணாமற் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட ஐரோப்பாவிற்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் பின்னர் நேற்று நாடு திரும்பினார். நாடு திரும்பி அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார். அதில் நான் ஜெனீவா சென்றிருந்தேன். 19 ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெற்ற பிரத்தியேக…
-
- 1 reply
- 738 views
-
-
இன்று மலை 5 மணிக்கு தமிழகத்தில் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் PUCL ஏற்பாடு செய்யும் கருத்தரங்கு நடக்கிறது. அதில் தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்துவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஏ.சுமந்திரன் உரையற்றுகின்றார் . இதில்நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையத்தின் பேராசிரியர் சரஸ்வதி அம்மா அவர்களும் கலந்து சிறப்பிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் தென்னிலங்கை தொலைக்காட்சியொன்றிற்கு கருத்து தெரிவித்திருந்த சுமங்திரன் தமிழ் தேசியத்திற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததுடன் தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.அத்துடன் தமிழீழ விடுதலை போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் விதத்திலான கருத்துக்களையும் தெரிவித்து வ…
-
- 5 replies
- 2.4k views
-
-
ஐ .நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் பல படிப்பினைகளைக் கற்றுக் கொடுத்துள்ளது. போர் முடிவுக்கு வந்த பின்னர், நாட்டை சரியானதொரு பாதையில் வழிநடத்த அரசாங்கம் தவறியுள்ளதன் வெளிப்பாடுதான் இந்தத் தீர்மானம். அந்த உண்மையை புரிந்து கொள்ளும் நிலையில் அரசாங்கம் இருக்கிறதா என்பது சந்தேகம் தான். அமெரிக்கா இந்தளவுக்கு இலங்கையை எதிர்ப்பதற்கு நாம் என்ன தவறு செய்தோம் என்று தெரியவில்லை என்று பிரதமர் டி.எம்.ஜயரட்ண கேள்வி எழுப்பியுள்ளார். இது அப்பாவித்தனமானதா அல்லது அவர் கண்ணை மூடிக் கொண்டிருப்பதாலா என்பது புரியவில்லை. முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்த போர் பெரும் அவலங்களோடு கழிந்து போனாலும், அதற்கடுத்த புனர்வாழ்வு, பொறுப்புக்கூறல், ம…
-
- 0 replies
- 906 views
-
-
ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றிய அமெரிக்காவுக்கு சிறிலங்கா அரசாங்கம் பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாக, கொழும்பில் உள்ள லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில் அமெரிக்க அரசின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் நிகழ்த்தவிருந்த உரையை எந்தக்காரணமும் கூறாமல் சிறிலங்கா அரசாங்கம் திடீரென கடைசிநேரத்தில் நிறுத்தியுள்ளது. தெற்காசியாவுக்கான அமெரிக்காவின உதவி வர்த்தகப் பிரதிநிதி மைக்கல் ஜே டிலானி வரும் 27ம் நாள் லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில், "தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் பொருளாதார அபிவிருத்தியின் பங்கு" என்ற தலைப்பில் முக்கிய உரை ஒன்றை நிகழ்த்தவிருந்தார். ஆனால் திடீரென இறுதி நேரத்தல் அவ…
-
- 7 replies
- 1.3k views
-
-
பேருந்துகள் இன்றி வடபகுதி மக்கள் அவதி இலங்கையில் யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்கள் நிறைவடைகின்ற போதிலும், வன்னிப்பிரதேசத்தில் பொதுப் போக்குவரத்து சேவைகள் இன்னும் சீராகவில்லை என அரச ஊழியர்களும் பொதுமக்களும் கூறுகின்றார்கள். குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த நிலைமை மோசமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பேருந்துக்காக பல மணிநேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாக ஆசிரியர்கள் முறையிடுகின்றனர் கிளிநொச்சி மாவட்டத்தை ஊடறுத்து வடக்கு நோக்கிச் செல்கின்ற ஏ9 நெடுஞ்சாலையில் யாழ்ப்பாணத்திற்கும், கொழும்பு, கண்டி உட்பட தென்பகுதி மாவட்டங்களுக்கும் இடையில் பல பேருந்துகள் நீண்டதூர சேவையில் ஈடுபடுகின்றன. ஆயினும் யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொ…
-
- 1 reply
- 652 views
-
-
The senior journalist union leader who was forced to flee Sri Lanka after being brutally attacked has accused a controversial minister of making public statements in order to protect the real perpetrators. Poddala Jayantha was abducted by an unidentified group on 1 June 2009 taken to a hideout, brutally assaulted and left on the street with a broken leg, the next morning. He was forced to leave the country having received death threats due to his refusal to speak up against threats and intimidation even after the attack. After the US-sponsored resolution was passed in Geneva, Public Relations and Public Affairs Minister Mervyn Silva has said that he is the one…
-
- 0 replies
- 748 views
-
-
இலங்கையில் நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்த, அமெரிக்காவின் தீர்மானம் வழிகோலும் - மன்னிப்புச் சபை இலங்கையில் நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்த, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்ப்பட்ட அமெரிக்காவின் தீர்மானம் வழிகோலும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக் காட்டியுள்ளது. போர் முடிவுற்ற பின்னரும், இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் திருப்தி அளிக்கும் வகையில் அமைய வில்லை என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய வலயப் பணிப்பாளர் சாம் சர்ப்பாரி (Sam Zarifi) தெரிவித்துள்ளார். இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தவறான திசையில் பயணிப்பதாகச் சர்வதேச சமூகம் கருதுகின்றது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான…
-
- 1 reply
- 1.1k views
-
-
பிரபல அறிவிப்பாளர் திருமதி ராஜேஸ்வரி சண்முகம் காலமானார் பிரபல வானொலி அறிவிப்பாளர் திருமதி ராஜேஸ்வரி சண்முகம் இன்று காலமானார். சுகயீனமுற்று யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வானொலிக்குயில் இன்று மாலை குரலடைத்திருக்கிறது. இறக்கும்போது அவருக்கு வயது 72. கடந்த 16ஆம் திகதி தனது 72ஆவது பிறந்த தினத்தினை கொண்டாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வானொலித்துறையில் நீண்டகால அனுபவமுள்ள ராஜேஸ்வரி சண்முகத்தின் இழப்பு ஈடுசெய்ய முடியாததாகும். "வானொலிக் குயில்" என்று செல்லமாய் எல்லோராலும் அழைக்கப்படும் ராஜேஷ்வரி சண்முகம் அவர்களின் இறுதிக் கிரியைகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும். http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/38173-2012-03-23-14-48-36.html
-
- 38 replies
- 3.2k views
-
-
ஈ.பி.ஆர்.எல்.எப்.சுரேஸ் அணியும் ஈ.பி.ஆர்.எல்.எப்.பத்மநாபா அணியும் ஒன்றுசேர முயற்சி! ஈ.பி.ஆர்.எல்.எப்.சுரேஸ் அணியின் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.பத்மநாபா அணியின் மட்டு.-அம்பாறை மாவட்ட தலைவர் இரா.துரைரெட்னத்துக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (24) மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியை ஒருங்கிணைக்கும் திட்டம் ஒன்றை மேற்கொண்டு மட்டக்களப்புக்கு வருகைதந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.சுரேஸ் அணியின் செயலாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கட்சி உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடி வருகின்றார். இந்த சந்திப்பில் அக்…
-
- 5 replies
- 848 views
-
-
1956இல் 'விஜயனின் வருகை' என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை(முத்திரை) ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும், கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இத் தபால் தலை அமைந்திருந்தது. தபால் தலையைப் பார்த்த பெரும்பான்மையினத் தலைவர்கள், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். "விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவன் என்ற கருத்து ஏற்கத்தக்கது அல்ல. தவிரவும், விஜயன் வந்தபோதே இங்கு குவேனி என்ற தமிழ்ப் பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்கள் என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகி விடும். எனவே, இந்தத் தபால் தலையை வாபஸ் பெற வேண்டும்" என்று கூறினார்கள். இதன் காரணமாக, இந்தத் தபால் தலையை இலங்கை…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறையிலிருந்து ஜெயதீபன் எழுதிய கடிதம் கொழும்பு மகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயதீபன் என்ற கைதி தனது குடும்ப வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவிகோரிய கடிதமொன்றினை எழுதியுள்ளார். ஜெயதீபனும் அவரது சகோதரனும் சிறையில் இருக்கிறார்கள். அவர்களது தாயாரும் ஒரு சகோதரனும் எவ்வித உதவிகளும் இன்றி வாழ்ந்து வருகின்றனர். ஜெயதீபன் தனது குடும்ப நிலமை பற்றி எழுதிய கடிதம் வருமாறு :- உதவ விரும்புவோர் நேரடியாகவே தொடர்பு கொண்டு உங்கள் உதவியை வழங்கலாம். தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் :- விபரங்களைப் பெற்றுக் கொள்ள :- Nesakkaram e.V Hauptstr – 210 55743 Idar-Oberstein Germany Shanthy Germany – 0049 6781 70723 மின்னஞ்சல்: nesakkaram@gmail.com Skype – Sh…
-
- 0 replies
- 763 views
-
-
சிகிரியாவில் சுனாமியானாலும் மகிந்தவிடம் இருந்து சுனாமி ஏற்படாது - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- ஊடகவியலாளர்களின் கை கால்களை உடைக்கப் போவதாக பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார். சில ஊடகவியலாளர்களின் கை கால்களை உடைக்கப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளுக்குச் சென்று நாட்டுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் ஊடகவியலாளர்களுக்கு எதிராகவே அமைச்சர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று கிரிபத்கொட பிரதேசத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறி…
-
- 17 replies
- 1.3k views
-
-
பகுதி 2 சீனாவின் தலையீடு அதிகரிக்கப் போகிறது என்கிற சிங்கள ஆதிக்க சக்திகளின் மிரட்டலையே நீங்கலளும் வழி மொழிகின்றீர்கள். ஆனால் சிங்கள ஆதிக்க சக்திகளோ இந்தியா பற்றிய அச்சத்தில் இருந்தே தனது வெளிவிவகாரக் கொள்கைகளை வகுக்கிறது. அதற்க்கு இரண்டு முக்கிய காரனங்கள் உள்ளது. 1. என்ன பிரச்சினைகள் இருந்தாலும் தமிழர்களும் இந்தியாவும் இறுதில் ஒன்று சேர்ந்து விடுவார்கள் 2. இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கைத் தமிழ்ப் பகுதிக் கடல் அடிப்படை அதனால் இந்தியா இலங்கையைப் பிரித்தென்றாலும் வடகிழக்குக் கடலைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் என்று சிங்கல ஆதிக்க சக்திகள் நம்புகின்றன. சிங்களா ஆதிக்க சக்திகள் தாம் நம்பும் இந்திய விஸ்தரிப்பு நோக்கங்களுக்கு எகெதிராக ஒரு புதிய சீனப் பெருமத…
-
- 0 replies
- 985 views
-
-
குப்பிவிளக்கில் படித்துக்கொண்டிருந்த மாணவி தீப்பிடித்து பலி யாழ்ப்பாணத்தில் குப்பிவிளக்கை வைத்துப் படித்துக்கொண்டிருந்த பாடசாலை மாணவியொருவர் தீப்பிடித்து எரிந்த நிலையில் இன்று சனிக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். சுன்னாகம் புகையிரத வீதியைச் சேர்ந்த சுன்னாகம் மயிலானை மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் சந்திரசேகரம் சுஜித்தா (வயது 16) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்தவராவார். நேற்று வெள்ளிக்கிழமை இரவு இம்மாணவி குப்பிவிளக்கை வைத்துப் படித்துக்கொண்டிருந்தபோது அவரது ஆடையில் திடீரென தீப்பிடித்த நிலையில் இம்மாணவி தீயில் எரிந்துள்ளார். உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இம்மாணவி இன்று காலை உயிரிழந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இவரது …
-
- 4 replies
- 777 views
-
-
சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட முடியாவிட்டால் ஐநாவில் இருந்து விலகவும் ஐக்கிய நாடுகள் சபையின் சட்ட திட்டங்களுக்கு அமைய செயற்பட முடியாவிட்டால் அதன் உறுப்புரிமையில் இருந்து விலகிக் கொள்ள முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகள் அந்த சபையில் செயற்பாடுகளுக்கும் தீர்மானங்களுக்கும் கட்டுப்பட்டு அதனை ஏற்று நடப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பிரச்சினையை மேலும் பெரிதாக்காமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே சிறந்தது என திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, எதிர்வரும் சில தினங்களில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை 20% அதிகரிக்கக்கூ…
-
- 3 replies
- 917 views
-
-
ஆயுதம் தாங்காத அப்பாவி மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் விட்டு கொடுப்பிற்கு தயார் இல்லை ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனை, இலங்கை வந்துள்ள கனடிய பாராளுமன்ற குழுவினர் சந்தித்து உரையாடியுள்ளனர். இச்சந்திப்பு இன்று (25) ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பில் இடம் பெற்றது. இச்சந்திப்பில் கிரிஸ் அலெக்சாண்டர், ரிக் டிஸ்ட்ரா, வேர்ன் வைட், ஜோன் லைட் ஆகிய கனடிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன், கொழும்பிலுள்ள கனடிய உயர்ஸ்தானிகரக அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, போருக்கு பிந்திய இன்றைய சூழலில் மனித உரிமைகள், மனிதாபிமான நடவடிக்கைகள், தேசிய இனப்பிரச்சினைகான அரசி…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கையின் போர்க்குற்றங்கள்: அடுத்தவாரம் அமெரிக்க செனற் சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்கிறார் ஸ்டீபன் ராப் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான தமது விசாரணை அறிக்கையை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் போர்க்குற்ற விவகாரங்களைக் கவனிக்கும் தூதுவர் ஸ்டீபன் ராப் அடுத்தவாரம் அமெரிக்க நாடாளுமன்றின் செனற் சபையில் சமர்ப்பிக்கவுள்ளார். இலங்கை தொடர்பாக தூதுவர் ஸ்டீபன் ராப் அமெரிக்க செனற் சபைக்கு சமர்ப்பிக்கும் மூன்றாவது அறிக்கை இதுவாகும். இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து நேரில் விசாரணைகளை நடத்துவதற்காக கடந்த பெப்ரவரி மாதம் ஸ்டீபன் ராப் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். இதன்போது அவர் இலங்கை அரசதரப்பு, தமிழ்த் தேசியக் கூட்டம…
-
- 0 replies
- 720 views
-
-
இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை இந்தியாவின் பிராந்தியத் தலைமைத்துவத்திற்கு விடுக்கப்பட்ட சவால் என ஜனாதிபதியின் சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தெற்காசிய பிராந்திய வலய நாடுகளில் பல என இந்தியாவிற்கு முரனான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தன. அமெரிக்காவிற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. எனினும், மாலைதீவு மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன. மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்காத நிலையில் பாகிஸ்தானும் இலங்கைக்கு ஆதரவை தெரிவித்திருந்தது. இத்தகைய சூழலில் பிராந்தியத்தின் தலைமைத்துவத்திற்கான தகுதியை இந்தியா இழந்து வருவதாகவும் இலங்கைக்கு எதிரான ஜெனீவா பிரேரணை, இந்தியாவிற்கு பாதக விளைவுகளை ஏற்ப…
-
- 6 replies
- 1.5k views
-
-
பாணை உண்ணாதே- கொக்கோகோலாவை குடிக்காதே- சிங்கள அமைப்புக்கள் எச்சரிக்கை! Published on March 23, 2012-5:31 pm · இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டுவந்துள்ள அமெரிக்காவின் உற்பத்திப் பொருட்களை இலங்கை மக்கள் புறக்கணிக்க வேண்டும் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. தேசப் பற்றுடைய தேசிய அமைப்பினரும் பௌத்த பிக்குகளும் கோட்டைப் புகையிரத நிலையத்திலிருந்து புறக்கோட்டை போதிராஜ விகாரை வரை ஊர்வலமாக சென்று பிரசாரங்களை மேற்கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய தேசப் பற்றுடைய தேசிய அமைப்பின் செயலாளர், இலங்கை மீது அமெரிக்கா தனது ஆதிக்கத்தைச் செலுத்தப் பார்க்கிறது என்று கூறினார். ஐ.நா.மனித உரிமை பேரவை தீர்மானம் நிறைவேறியிருந்தாலும் அதன…
-
- 23 replies
- 2.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் ஒருங்கிணைய முயற்சிக்கக் கூடும் என ஜாதிக ஹெல உறுமய கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் மீண்டும் வன்முறைகள் வெடிக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாகவும் இதனால் படையினரை ஆயத்த நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீவர்ணசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதனைத் தொடர்ந்து, ஜாதிக ஹெல உறுமய கட்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. நாட்டை பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜெனீவா தீர்மானம் தமிழ் புலம்பெயர் மக்களுக்கு புதிய உத்தேகத்தை அளித்துள…
-
- 4 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான தமது விசாரணை அறிக்கையை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் போர்க்குற்ற விவகாரங்களைக் கவனிக்கும் தூதுவர் ஸ்டீபன் ராப் அடுத்தவாரம் அமெரிக்க நாடாளுமன்றின் செனட் சபையில் சமர்ப்பிக்கவுள்ளார். இந்தத் தகவலை இராஜதந்திர வட்டாரங்கள் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் வெளியிட்டுள்ளன. சிறிலங்கா தொடர்பாக தூதுவர் ஸ்டீபன் ராப் அமெரிக்க செனட் சபைக்கு சமர்ப்பிக்கும் மூன்றாவது அறிக்கை இதுவாகும். சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து நேரில் விசாரணைகளை நடத்துவதற்காக கடந்த பெப்ரவரி மாதம் ஸ்டீபன் ராப் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.இதன்போது அவர் சிறிலங்கா அரசதரப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சமூகப் பிரதிநிதிக…
-
- 0 replies
- 701 views
-
-
-
- 1 reply
- 595 views
-
-
பதிலடி கொடுக்கிறது இலங்கை அரசு – அமெரிக்க உயர்மட்ட அதிகாரி கொழும்பில் ஆற்றவிருந்த உரை நிறுத்தம்! [ ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2012, 03:38.04 AM GMT ] [ புதினப்பலகை ] ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றிய அமெரிக்காவுக்கு இலங்கை அரசாங்கம் பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாக, கொழும்பில் உள்ள லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில் அமெரிக்க அரசின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் நிகழ்த்தவிருந்த உரையை எந்தக்காரணமும் கூறாமல் இலங்கை அரசாங்கம் திடீரென கடைசிநேரத்தில் நிறுத்தியுள்ளது. தெற்காசியாவுக்கான அமெரிக்காவின உதவி வர்த்தகப் பிரதிநிதி மைக்கல் ஜே டிலானி வரும் 27ம் நாள் லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில், “தேசி…
-
- 2 replies
- 743 views
-
-
தமிழர் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளை சிறிலங்கா விலக்கிக் கொள்ள வேண்டும் – இந்தியா [ வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2012, 01:39 GMT ] [ தா.அருணாசலம் ] உயர்பாதுகாப்பு வலயங்களை குறைத்து, தமிழர் நிலங்களை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும், தமிழர் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள சிறிலங்கா படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நேற்று கொண்டு வரப்பட்ட சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தின் மீது உரையாற்றிய போதே இந்திய பிரதிநிதி இவ்வாறு கூறியுள்ளார். “சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு வழங்கிய பரிந்துரைகளை இந்தியா வரவேற்றிருந்தது. சிறிலங்காவில் வாழும் அனைத்து இன மற்றும…
-
- 21 replies
- 1.7k views
-
-
இந்தியக் குழுவின் விஜயத்துக்கு அனுமதி கிடைப்பதில் சந்தேகம்! [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-03-25 11:03:46| யாழ்ப்பாணம்] இலங்கையுடன் தொடர்பு கொள்ளவும் தயக்கம் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நிலைமைகள் குறித்து நேரில் ஆராய்வதற்காக விஜயம் செய்யவிருந்த இந்திய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்குமா என்பது தொடர் பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 19 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை மீதான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்திருந்த நிலையிலேயே இச்சந்தேகம் ஏற்பட் டுள்ளது. இது குறித்து இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள தமிழக காங்கிரஸ் குழுவின் தலைவரான நாடாளுமன்ற…
-
- 0 replies
- 988 views
-