ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
அமெரிக்க அரசாங்கம் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத் தொடரில் மேற்கொண்டு வரும் மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டை புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்று திரண்டு எதிர்க்க வேண்டுமென லண்டனில் உள்ள டயஸ் போரா டயலொக் அமைப்பின் அங்கத்தவர் ராஜேஸ்வரி சுப்ரமணியம் கோரிக்கை விடுத்தார். இலங்கையில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் இலங்கையில் இருந்து சென்ற புலம்பெயர்ந்த தமிழர்கள் வடபகுதி மக்களுக்கு எந்தவிதமான உதவிகளையும் செய்வதற்கு முன்வரவில்லை. புலம்பெயர்ந்த சமூகத்தினரால் திரட்டப்பட்ட மில்லியன் கணக்கான டொலர்களை சிலர் சுருட்டிக் கொண்டு ஆடம்பரமாக வாழ்ந்து வருகின்றனர். யுத்தத்தினால் வடபகுதி மக்கள் வீடுகளையும், சொத்துக்களையும் இழந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கையில் …
-
- 10 replies
- 1.5k views
-
-
ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கத் தவறினால், அது சிறிலங்காவில் உள்ள தமிழர்களைக் காயப்படுத்தும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். “இந்தியா இந்தத் தீர்மானத்தை எதிர்க்கலாம் என்று தெரிகிறது. தமிழ் மக்களின் சார்பாக மட்டும் நான் பேசவில்லை. ஆனால் சிறிலங்காவில் உள்ள தமிழ்மக்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள். இந்தியா ஒரு அயல்நாடு, அவர்கள் மிகவும் கவனமாகவே முடிவு எடுப்பார்கள் என்று நினைக்கிறேன். இந்த முடிவின் ஊடாக அவர்கள் ஒரு பங்கை வகிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். கடந்த மாதம் தீர்மானம் கலந்துரையாடல் நிலையில் இருந்த போது வொசிங்டனுக்கு நெருக்கமான…
-
- 2 replies
- 598 views
-
-
ஜெனிவாவில் தீவிரம் பெற்றுள்ள சிறிலங்கா மீதான போர்க்குற்றச்சாட்டுகள், கடந்தவாரம் நியுயோர்க்கிலும் எதிரொலித்துள்ளது. கொமன்வெல்த் நாளை முன்னிட்டு நியுயோர்க்கில் உள்ள பிரித்தானிய வதிவிடப் பிரதிநிதியின் பணியகத்தில் கடந்தவாரம் வரவேற்பு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த வரவேற்புக்கு நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான - மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. சவீந்திர சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்படாததற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர விதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன, இந்த வரவேற்பு நிகழ்வில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார். இந்த ஆண்டு அவுஸ்ரேலியாவுடன் இணைந்த…
-
- 3 replies
- 982 views
-
-
நான்காம் கட்ட ஈழப்போர் மணலாற்றில் சிங்கள அரசினால் மூட்டு விக்கப்பட்டது முதல் கடந்த 2009-ல் முள்ளிவாய்க்காலில் நடந்த தமிழ் இனப்படுகொலை வரை சிங்கள அரசுக்கு ராமும் அவரது இந்து பத்திரிக்கையும் கொடுத்த ஒத்துழைப்பு சோனியா தலைமயிலான மத்திய அரசு கொடுத்த ஒத்துழைப்போடு பொருத்திப்பார்க்கும் அளவுக்கு மிக கொடூரமானது என்றால் அது மிகையாகாது. ராஜபக்சே தர்பாரின் அனைத்து உயர் மட்டங்களிலும் தனிச்செல்வாக்குடன் திகழ்ந்த பார்ப்பன ராமின் செய்தி முகவர்கள் சிங்கள ராணுவத்தின் வாலாகவே போர்க்களமெங்கும் திரிந்தார்கள். இனப்படுகொலையை அருகிலிருந்து ரசித்தும் அந்த செய்திகளை திரித்தும் இலங்கை அரசுக்கு சார்பாக செயல்பட்டார்கள். இந்த கைங்கர்யங்கள் மூலம் மனித குலத்துக்கு எதிரான மாகுற்றங்களுக்கு துணை…
-
- 3 replies
- 1.8k views
-
-
ஜெனீவா விவகாரத்தினை கையிலெடுத்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைமையினை இல்லாமல் செய்யும் நடவடிக்கையில் இணையத்தளங்களும், உள்ளுர் ஊடகங்களும் செயற்பட்டுவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் இன்று பிற்பகல் நடைபெற்ற “கூட்டமைப்பு ஏன் ஜெனீவா செல்லவில்லை” என்ற தொனிப்பொருளிலான கருத்தூட்டல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சில மணி நேரமாக தொடர்ந்து உரையாற்றிய மாவை சேனாதிராசா பிரதேச சபை உறுப்பினர்கள் கேள்வி கேட்பதற்கு சந்தர்ப்பம் வழங்காது நீண்ட உரையாற்றியிருக்கின்றார். அவர் தனது உரையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனீ…
-
- 1 reply
- 1k views
-
-
ஐ நா - மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் இலங்கைக்கு கூடுதலான ஆதரவு காணப்படுவதாக திவயின பத்திரிகை தனத பதிப்பில் தெரிவித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் பிரேரணைக்கு ஆதரவாக 22 நாடுகள் மட்டுமே ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இலங்கைக்கு ஆதரவாக 25 நாடுகள் வாக்களிக்க உள்ளன. இந்நிலையில், கூடுதலான ஆதரவை திரட்டும் நோக்கில் அமெரிக்கா, இராஜதந்திரிகளையும் அரச சார்பற்ற நிறுவன பணியாளர்களையும் ஜெனீவா அனுப்பி வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 50 இராஜதந்திரிகளும், 32 அரச சார்பற்ற நிறுவனப் பிரதானிகளும் இவ்வாறு ஜெனீவா பயணம் செய்துள்ளனர் என திவயின செய்தி வெளியிட்டுள்ளது. http://www.seithy.co...egory=TamilNews
-
- 1 reply
- 810 views
-
-
டி.எம்.வி.பி. மாநாட்டில் வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிராக தீர்மானம் இலங்கையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இனப் பிரச்சினைக்கு தீர்வாக ஏனைய தமிழ் கட்சிகளினால் முன்வைக்கப்பட்டுவரும் வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பை முற்றாக நிராகரிப்பதமாக அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்ற அக்கட்சியின் முதலாவது தேசிய மாநாட்டில் இது தொடர்பான தீர்மானமொன்று நிறைவேற்றப்டப்டுள்ளது. வடக்கு கிழக்கு இணைப்பு என்பது கிழக்கு மக்களின் சுய விருப்பதிற்கும் அரசியல் அபிலாஷை மற்றும் இறைமைக்கும் எதிரானது என்றும் இந்த தீர்மாணத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இனப் பிரச்சினைக்கான தீர்வு…
-
- 4 replies
- 949 views
-
-
சிறீலங்காவின் ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவினதும் அவரது குடும்பத்தினரதும் முழுமையான நோக்கம் இலங்கையினைத் தனிச் சிங்கள தேசிய நாடாகவே வைத்திருக்க விரும்புகின்றனர். பயங்கார நடவடிக்கைகள் தொடர்பிலான பிரித்தானியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் பில் றீஸ் தெரிவித்துள்ளார். அல்ஜசீரா தொலைக்காட்சி சில நாட்களுக்கு முன்னர் இலங்கை நிலவரம் தொடர்பில் நடைபெற்ற “நல்லிணக்கம் எட்டப்பட்டதா?” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த நிகழ்ச்சியில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி ஆலோசகர் ரஜீவ விஜயசிங்கவும் ஈழத்தமிழர் சார்பில் பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர் குமார் குமரேந்தின் ஆகியோருடன் மூன்றாம் தரப்பு உறுப்பினராக பயங்கார நடவடிக்கைகள…
-
- 0 replies
- 1.2k views
-
-
ராஜபக்ச மகனுக்கு, இந்தியாவில் விருது! டெல்லி: தமிழகத்தில் உள்ள 8 கோடி தமிழர்களும், பல கட்சித் தலைவர்களும் இலங்கையில் நடந்த தமிழர் படுகொலையை கண்டித்தும், இலங்கையை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும் திரண்டெழுந்துள்ள இந்த நேரத்தில், மீண்டும் ஒரு தமிழர் விரோத நடவடிக்கைக்கு அமைதியாக அனுமதியளித்துள்ளது மத்திய அரசு. சிங்கள இனவெறியின் அடையாளமாகத் திகழும் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவுக்கு இந்தியாவில் சிறப்பு விருது அளிக்கும் விழாவை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்ததோடு, அவருக்கு இஸட் பாதுகாப்பும் அளிப்பதாக அறிவித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஒரு பத்திரிகை விழாவில் சிறந்த சர்வதேச இளைஞன் என்ற விருதினை வழங்குகிறார்களாம். இந்த விழா பற்றிய விவரங்கள் வெளியானதிலிருந்து …
-
- 1 reply
- 833 views
-
-
அடுத்த முறை தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியானால் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வை முன்வைப்பீர்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் யாழ்ப்பாண மக்கள் முன்வைத்த கேள்வியால் அவர் ஆடிப்போனார். இரண்டு இடங்களில் கேட்கப்பட்ட இந்தக் கேள்விக்கு ஒரு இடத்தில் பதிலளிக்காமல் தவிர்த்தார். மற்றொரு இடத்தில் மழுப்பலான பதிலை வழங்கினார். நேற்றுமுன்தினம் மாலை யாழ்ப்பாணம் வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டக் குழு நேற்று யாழ்ப்பாணத்தின் பல இடங்களுக்கும் சென்று மக்களைச் சந்தித்தது. மாதகலில் இடம் பெற்ற சந்திப்பில், ஜனாதிபதியானால் தமிழ் மக்களுக்கு ரணில் வழங்கவுள்ள தீர்வு என்ன என்று மக்கள் கேள்வி எழுப்பினர். "நீங்கள் ஜனாதிபதியாகத் தெரிவானால் தமிழ் மக்களுக்கு எ…
-
- 3 replies
- 1.1k views
-
-
சிங்களத்தைப் புறக்கணிக்கும் ஜெனீவா மனித உரிமை ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கையின் உப மாநாடுகளை, சர்வதேச நாடுகள் பலவும் புறக்கணித்து வருவதாக ஜெனிவாச் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் இலங்கையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உப மாநாட்டில், 8 பேர் மட்டுமே பங்கேற்கும் அளவுக்கு, இலங்கையின் நிலைமை மோசமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐ.நா மனித உரிமைகள் சபையின் பிரதான அமர்வு இடம்பெறும் சமவேளை, உப மாநாடுகள் இடம்பெறு வது வழமையான ஒன்று. இந்நிலையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தைத் தோற்கடிக்கும் நோக்கில், இலங்கை அரச தரப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுவரும் உப மாநாடுகள் பலவும், தொடர்ச்சியாகப் பிசுபிசுத்து வருவதாக அறிய முடிகின்றது. நேற்றுமுன…
-
- 0 replies
- 875 views
-
-
‘தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால், தமிழ்நாட்டையும், தமிழர் வீரத்தையும், கலையையும் நாகரிகத்தையும் மறந்தான்’ என்று பெரியார் சொன்னது உண்மைதான்: மன்மோகன்சிங்க்குக்கு தமிழருவி மணியன் கடிதம் பதியப்பட்ட நாள்March 17th, 2012 நேரம்: 14:13 அன்பிற்கினிய பாரதப் பிரதமர் மாண்புமிகு மன்மோகன்சிங் அவர்களுக்கு… வணக்கம்! இந்திய ஜனநாயகம் இந்த எளியவனுக்கும் வழங்கியிருக்கும் உரிமையின் அடிப்படையில் உங்களுக்கு இந்த முடங்கலின் மூலம், என்னை உறங்கவிடாத உணர்வுகளை வெளிப்படுத்த விழைகிறேன். தமிழகத்தில் உள்ளவர்கள் தலைசிறந்த பண்பாட்டுக்கு உரியவர்கள்; அன்பு சார்ந்து, அமைதி காத்து, இந்திய ஒருமைப்பாட்டை இதயங்களில் இருத்தி, சக மனிதர்களை உடன் பிறந்த சகோதரர்களாகப் பாவித்து வாழப் பழகியவர…
-
- 6 replies
- 1.4k views
-
-
[TamilNet, Sunday, 18 March 2012, 05:45 GMT] “The [sri Lankan] Government’s current activities in the North and East are challenging the very existence of the Tamil people and more time to the GOSL to implement the LLRC’s recommendations will only mean further time for the Government to play havoc in the North and East and subjugate the interests and aspirations of the Tamil people,” said leading Eezham Tamil civil society members in the island, in a letter addressed to the visiting US Under Secretary of State Maria Oetro and the Assistant Secretary of State Robert Blake last month on 10 February 2012. TamilNet has received a copy of this confidential letter and relea…
-
- 0 replies
- 834 views
-
-
கச்சத்தீவில் இலங்கை அரசு நிரந்தர கடற்படை தளம் அமைத்துவிட்டதாக இலங்கை ஊடகங்கள் தகவல் சனிக்கிழமை, மார்ச் 17, 2012, 17:20[iST] கச்சத்தீவு: தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத்தீவில் இலங்கை அரசு நிரந்தர கடற்படைத் தளத்தை அமைத்துள்ளதாக இலங்கையிலிருந்து வெளியாகும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்த 2009-ம் ஆண்டு முதலே கச்சத்தீவில் நிரந்தர கடற்படை தளம் அமைக்க இலங்கை அரசு முயற்சித்து வந்தது. ஆனால் தமிழகத்தில் இதற்குத் தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் கச்சத்தீவின் மேற்குப் பகுதியில் மேட்டு நிலப்பரப்பில் நிரந்தர கடற்படை தளத்தை இலங்கை…
-
- 6 replies
- 897 views
-
-
அமெரிக்காவுக்கு எதிராக ஒரு வார்த்தையை கூட தெரிவிப்பதில்லை - விமல் வீரவங்ச அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன என்பவர், மிலிந்த மொரகொடவின் நண்பர் எனவும் அவர் அமெரிக்காவுக்கு எதிராக ஒரு வார்த்தையை கூட தெரிவிப்பதில்லை எனவும் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். இப்படியான ஒருவர் அமெரிக்காவுக்கு எதிராக கருத்துக்களை வெளியிடுவார் என நம்புவது கடினம். யுத்தம் செய்யும் போது, இந்த துரைமார், யுத்தத்தை செய்ய முடியாது என கூறிவந்தனர். எனினும் யுத்தத்தை நல்லபடியாக செய்து கொண்டு செல்லும் போது, அவர்கள் அரசாங்கத்திற்கு தாவினர். அவர் கூறியது போல் நான் தெரிவித்த கருத்து, அரசாங்கத்தின் கருத்து அல்ல. நாங்கள் அரசாங்கத்தில் இருப்பது போல் எங்களுக்கும் தனியான கொள்கைகள் உள்ளன. அந்த…
-
- 2 replies
- 1k views
-
-
ஜெனீவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கூட்டத் தொடரில் முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைந்து இலங்கைக்கு பலம் சேர்க்க முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வுடன் தொடர்ந்தும் நட்பினை பேணவே விருப்பம் கொள்வதாக இலங்கையின் மூத்த அமைச்சர் ரிஸாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். அண்மைக்கால வரலாற்றில் ஒரே இலக்கை கொண்டு இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை ஒழித்த ஒரே தலைவர் மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு உதவ நட்பு நாடுகள் இருக்கின்றன என நேற்றைய தொழுகையின் பின்னதாக செய்தியாளர் சந்திப் பொன்றில் அமைச்சர் தெரிவித்தார். இலங்கையைச் சுற்றி சபீட்சத்தை ஏற்படுத்த சிறப்பு பிராத்தனைகள் நடைபெறுகின்றன. பயங்கரவாதத்திற்கு எதிராக போராடி வெற்றி கொண்ட வீரர்களை அ…
-
- 15 replies
- 1.4k views
- 1 follower
-
-
குடியிருப்புகள் மீது வீசப்பட்ட குண்டுகள் மிகவும் பயங்கரமானவை! ஈழத்தில் இருந்து ஒலிக்கும் ஒப்பாரியும் ஓலமும்…. மரணத்தின் ஓலமே பச்சைப் படுகொலையை உணர்த்தும். ஈழத்தில் இருந்து ஒலிக்கும் ஒப்பாரியும் ஓலமும் இப்போதுதான் உலக நாடுகளுக்கு ஓரளவு கேட்க ஆரம்பித்து இருக்கிறது என்பதை உணர்த்துகிறது அமெரிக்கா. ஜெனிவாவில் கூடிப் பேசும் நாடுகள், வவுனியாவில் கூடி இருந்தால் உண்மை அதிகமாகவே சுடும். எனது பணிக் காலத்தில் நெஞ்சத்தைப் பதைபதைக்க வைத்த காட்சி அது! என்று 2009 மே மாதம் 23-ம் தேதி ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் மூச்சடைத்துப் போய்ச் சொன்னார். மே 19-ம் தேதி உயிர்ப் பறிப்பின் கடைசி தினம். அன்றில் இருந்து நான்கு நாட்கள் கழித்து சென்ற பான் கீ மூன் குறிப்பிட்ட இடங்களுக்…
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கைப் படையினர்:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாண நகரப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களை கொண்டு படைத்தரப்பும் ஜெனிவாவிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டமொன்றை இன்று நடத்தி முடித்துள்ளது.குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இன்று காலை முதல் வாகனங்களில் ஆட்களை திரட்டும் பணியில் படையினர் முழு அளவில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பல இடங்களிலும் வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் முகாம்களில் அகதி வாழ்க்கையை தொடரும் மக்களே இந்த ஆட்பிடிப்பிற்கு உள்ளாகியிருந்தனர். வடமராட்சி கிழக்கில் அண்மையில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டவர்களும் இலக்கு வைக்கப்பட்டிருந்தனர். குடாநாட்டிற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த எதிர் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது சந்திப்புக்களினல் மு…
-
- 2 replies
- 973 views
-
-
சிறிலங்காவின் கொலைக்களங்கள்-தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்ற சனல்-4 தொலைக்காட்சியின் ஆவணப்படம் சுதந்திரமான அனைத்துலக விசாரணைக்கான எமது அறைகூவலை மீண்டும் வலியுறுத்தி நிற்கின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். ஐநா மனித உரிமைப் பேரவையின் அங்கத்துவ நாடுகள் காலத்தின் தேவையை உணர்ந்து தற்பொழுது முன்வைக்கப் பட்டுள்ள பிரேரணையில் ஒரு திருத்தத்தைக் கொண்டு வருவதன் மூலம் சுதந்திரமான அனைத்துலக விசாரணையின் தேவையை வற்புறுத்துமாறு அறைகூவல் விடுகின்றோம் எனவும் இதுவரை வெளிவந்துள்ள எல்லாவகை ஆதாரங்களின் அடிப்படையிலும் இன்றைய தேவை அனைத்துலக விசாரணை ஒன்று மட்டுமேயாகும் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்த…
-
- 0 replies
- 513 views
-
-
உலகத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பி இருக்கிறது சேனல் 4 தொலைக்காட்சி! நெஞ்சில்ஈரம் உள்ள வர்களைக் கண்ணீர் வடிக்கவும், ரத்தம் சூடானவர்களைக் கொதிக்க வைக்கும் அளவுக்கும் ஈழத்துக் காட்சிகளை அந்தத் தொலைக்காட்சி அம்பலப்படுத்தி உள்ளது. இப்போது, ஈழத்தில் நடந்த போர்க்குற்றங்களையும் மனிதஉரிமை மீறல்களையும் ஐக்கிய நாடுகள் சபை விவாதித்துக்கொண்டு இருக்கிறது. ஆனால், இந்த நேரத்திலும், 'ஈழத்தில் நடந்தது போர்க்குற்றம்தான்� என்பதை ஒப்புக்கொள்வதற்குக்கூட பல நாடுகள் யோசிக்கின்றன என்பதுதான் வேதனை. வியட்நாம் போர் தாக்குதலில் ஒரு சிறுமி பதறியபடி நிர்வாணமாய் ஓடி வந்த புகைப்படம் வெளியானதற்கே, இந்த உலகம் பதைபதைத்துத் துடித்தெழுந்தது. ஆனால், ஈழத் தமிழர்கள் கொத்துக்கொத்தாய் நிர்வ…
-
- 0 replies
- 1.6k views
-
-
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தேசிய பிரச்சினையாக மத்திய அரசு கருதவில்லை என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதிய கடிதத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். மன்மோகனுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, பாக்ஜலசந்தி பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் (ராமேசுவரம் மீனவர்கள்) மீது கடந்த 14-ஆம் திகதி இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது அவர்களின் படகு மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டு மீனவர்கள் 4 பேர் கடலில் மூழ்கி விட்டனர். அவர்களை மற்றொரு படகில் வந்தவர்கள் மீட்டு மறுநாள் காலை கரைக்கு கொண்டு வந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காது என இலங்கை அரசு உறுதி அளித்த பிறகும் த…
-
- 2 replies
- 705 views
-
-
ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்திருக்கும் பிரேரணை தொடர்பில் கலந்தாலோசிப்பதற்கு நேரம் ஒதுக்குமாறு இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் விடுத்த அவசர வேண்டுகோளை தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நேற்றுத் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டார். இலங்கை அரசுக்கு எதிரான பிரேரணையை ஆதரிக்குமாறு தமிழ்நாட்டில் ஏகோபித்த குரலில் அரசியல் கட்சிகள் வலியுறுத்திவரும் தற்போதைய சூழ்நிலையில், சிவ்சங்கர் மேனனை சந்திக்க ஜெயலலிதா மறுத்திருப்பது மத்திய காங்கிரஸ் அரசுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. “ஜெயலலிதாவை சந்திப்பதற்குச் சிவ்சங்கர் மேனன் இரண்டு தடவைகள் சந்தர்ப்பம் கேட்டார். அவர் அவசரமாக சென்னை வருவதற்கும் ஏற்பாடானது. ஆனால், மத்திய அரசின…
-
- 23 replies
- 2.4k views
-
-
அவர் கோபிப்பார், இவர் விரும்ப மாட்டார் என தமிழர் தமது தேசிய அபிலாஷைகளையும், துன்பங்களையும் பற்றி பேச தயங்கும் காலம் இன்று மலையேறிவிட்டது – ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன்' இலங்கை ஜனாதிபதி கோபிப்பார், இந்திய பிரதமர் விரும்பமாட்டார் என தமிழர்கள் இனிமேலும் தமது அபிலாசைகளையும், துன்பங்களையும் பகிரங்கமாக எடுத்து கூறத்தயங்கி கொண்டிருக்க முடியாது. அந்த காலம் காலம் இன்று மலையேறிவிட்டது. இனிமேலும் நாம் தயங்கி கொண்டு இருந்தால் உலகம் எமக்காக காத்திருக்காது. தமிழர்களாகிய நாம் ஆளுமையுடன் செயல்பட வேண்டிய காலம் வந்துவிட்டது. பிரிபடாத இலங்கை என்ற கோட்பாட்டை தமிழர்கள் ஏற்றுக்கொண்டு விட்டோம் என்ற அறிவிப்பை எல்லா தமிழ் கட்சிகளும் செய்து விட்டன. அதற்கு மேலும் நாம் இறங…
-
- 5 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை நிறுத்துமாறு மேற்குலக நாடுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடுமையான அழுத்தம் கொடுத்ததாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரிட்டன் போன்ற பல மேற்குலக நாடுகள் மனிதாபிமான மீட்புப் பணிகளை இடைநிறுத்த முயற்சித்தன. நாட்டின் தலைவர் மற்றும் படைகளின் சேனாதிபதி என்ற ரீதியிலும் இந்த அழுத்தங்களைக் கண்டு ஜனாதிபதி அஞ்சவில்லை. இறுதிக் கட்ட போரின் போது மேற்குலக நாடுகள் கடுமையான அழுத்தங்களை பிரயோகித்து வந்தன. புலிகளின் வான்படை பலம் பெரும் பீதியை ஏற்படுத்தியிருந்தது. அதனை முறியடிப்பதற்கு ஜனாதிபதி சிறந்த ஆலோசனைகளை வழங்கினார். ஒரே நோக்கத்தில் போரை முன்னெடுத்த காரணத்தினால் வெற்றியீட்ட முடிந்தது என …
-
- 3 replies
- 1.2k views
-
-
போரினால் கற்றுக் கொண்ட படிப்பினை என்ன? Friday, March 16, 2012 ஈழத்தவன் இலங்கை தனக்குத் தானே ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்துக்கொண்டதற்குக் காரணம் சர்வதேச அளவில் உருவான அழுத்தம்தான். டப்ளின் நகரில் செயல்படும் மக்கள் ‘நிரந்தரத் தீர்ப்பாயம்’ - அதைத் தொடாந்து பான்கி மூன் நியமித்த மூவர்குழு விசாரணை அறிக்கைகள் - இலங்கை அரசின் போர்க் குற்றத்தை உறுதிப்படுத்தின. அய்ரோப்பிய நாடுகளின் மனித உரிமை அமைப்புகள் கண்டனக் குரல் எழுப்பின. இதைத் தொடர்ந்து வேறு வழியின்றி இலங்கை அரசு ஒரு விசாரணை ஆணையம் அமைக்கும் நிலைககு தள்ளப்பட்டது. ஏற்கனவே இலங்கை அதிபர் நியமித்த பல ஆணையங்கள் உருப்படியாக எந்த விளைவுகளையு ம் ஏற்படுத்தாத நிலையில் மீண்டும் இலங்கை ஒரு விசாரணை ஆணையத்தை அமைத…
-
- 1 reply
- 657 views
-