Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தாய்தமிழுக்கு நன்றி (http://thaaitamil.com/?p=12944) சென்னையில் மே 17 இயக்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த இலங்கைக்கு எதிரான பெரும் கூட்டம் மெரீனா கடற்கரையில் கூடியது. மெரினா கடற்கரை அதிர்ந்தது. அதே போல் தமிழ்நாட்டின் தென்பகுதியில் கூடங்குளத்தின் அருகே இடிந்த கரையில் அணு உலை எதிர்பாளர்கள் மாபெரும் பேரணி இலங்கைக்கு எதிராக நடத்தி அதிர வைத்துள்ளனர். இந்தியா இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று இடிந்த கரையில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமம் வரை இந்த எழுச்சி பேரணியை நடத்தி உள்ளனர். இதில் அதிக அளவு பெண்கள் கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பினர். பல்லாயிரக்கணக்கில் மக்கள் அங்கு கூடியது போது இடிந்த கரையே அதிர்ந்தது

    • 1 reply
    • 838 views
  2. புதிய காணொளியை வெளியிட்ட சனால் - 4 ன் புதிய ஆதாரங்கள் குறித்து ஆஸ்திரேலிய அரசின் செனட்டர் லீ ரைனான் செய்தியாளர்களிடம் கூறியவை,இலங்கையின் போர்க்குற்றம் குறித்து பிரிட்டன் தொலைக்காட்சி வெளியிட்ட 54 நிமிட மனித உரிமை மீறல் காட்சிகள் ஆஸ்திரேலிய அரசை உலுக்கி உள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் புதல்வன் 12 வயது சிறுவன் பாலச்சந்திரன் மற்றும் உதவியாளர்கள் நால்வரும் சரணடைந்த வேளை, இலங்கை இராணுவத்தினால் ஆடை களையப்பட்டு, கைகள் கட்டப்பட்டு சுட்டுக் கொன்ற காட்சிகள் போர்க்குற்ற ஆவணமாக காட்டப்பட்டுள்ளன. மேலும் இந்தக் காட்சிகளை புதிய போர்க்குற்ற ஆவணங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன என்றார் லீ. மேலும் கூறுகையில், சமீபத்தில் வெளியிட்ட போர்க்குற்றம் இரண்டாவது பாகம் என…

  3. ஈழத்திற்கு ஆதரவாக சென்னையில் போராட்டம் 18 மார்ச் 2012 ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணையை நடத்த வலியுறுத்தி சென்னையில் மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலையின் முன்பாக மாபெரும் கூட்டமும் பேரணியும் இன்று இடம்பெற்றது. மே 17 இயக்கத்தின் ஏற்பாட்டிலேயே இந்த போராட்டம் இடம்பெற்றது. பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்தப் போராட்டம் சுமார் நான்கு மணிநேரம் இடம்பெற்றது. மே 17 இயக்கத்தின் தலைமை செயற்பாட்டாளர் திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தின் பொழுது தோழர் தியாகு, தோழர் மணியரசன், கவிஞர் தாமரை, பேராசிரியர் தீரன் உட்படப் பலர் கலந்து கொண்டனர். இலங்கை மற்றும் இந்திய அரசுகளுக்கு…

    • 9 replies
    • 1.1k views
  4. இராணுவத் தரப்பு, தலைவர் பிரபாகரனின் மரணம் பற்றிய கேள்விகளுக்கு.....! Sunday, March 18, 2012 ஈழத்தவன் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்களை வெளிப்படுத்தும் வகையில் சனல் 4 தொலைக்காட்சி புதியதொரு வீடியோவை வெளியிட்டுள்ளது. கடந்த புதன்கிழமை இரவு வெளியான இந்த வீடியோவை உடனடியாகவே அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஆனால் இந்த வீடியோ அரச, இராணுவ உயர் மட்டங்களுக்குத் தெரிந்தே போர்க்குற்றங்கள் நடந்தன என்று அடித்துச் சொல்கிறது. குறிப்பாக பாதுகாப்பு வலயங்கள் மீதான ஷெல் தாக்குதல்கள் குறித்து அரச தரப்பு நன்றாகவே அறிந்திருந்தது என்கிறது இந்த ஆவணப்படம். இதற்குச் சான்றாக ஐ.நா பணியாளர்களுடன் தொடர்புடைய சம்பவம் ஒன்றையும் சனல்4 ஆதாரப்படுத்தியுள்ளது. அதைவி…

    • 2 replies
    • 1.9k views
  5. சுகி சிவம் அவர்களே ஈழத்தமிழர்களின் வாழ்க்கையை ஒரு முறை வாழ்ந்து பாருங்கள், புரியும் - ஜெயதாஸன்:- 13 ஜனவரி 2011 சுகி சிவம் அவர்களே ஈழத்தமிழர்களின் வாழ்க்கையை ஒரு முறை வாழ்ந்து பாருங்கள், புரியும் - ஜெயதாஸன்:- அண்மை நாட்களில் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது.அந்த மின்னஞ்சலில் ஆன்மீகச் சொற்பொழிவாளர் திரு.சுகி சிவம் அவர்கள் சன் தொலைகாட்சியில் ஆற்றிய சொற்பொழிவு இடம்பெற்றிருந்தது. இந்தச் சொற்பொழிவில் திரு.சுகி சிவம் அவர்கள் இலங்கைக்கு சென்றுவந்ததாகவும், தான் இலக்கியங்களில் வாசித்த மணிபல்லவம் என்ற நயினா தீவிற்கு சென்றுவந்ததாகவும் குறிப்பிட்ட அவர் புலம்பெயர் தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் தேவையற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக உலகத்தமிழர்களை சாடியிருந்தார். …

    • 9 replies
    • 2.3k views
  6. இலங்கைக்கு எதிராக ஜெனிவா சென்றவர் தமரா இன்று நடப்பது வேடிக்கை என்றது ஐ.தே.க. [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-03-18 10:46:05| யாழ்ப்பாணம்] அன்று இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த தமரா குணநாய கம், இன்று மனித உரிமைகள் மீறப்படவில்லை என வாதாடுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளார். இது என்ன வேடிக்கை? என்று ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளோம் அதனை நடைமுறைப்படுத்துவோமென அரசின் ஒரு தரப்பு ஜெனிவாவில் உறுதியளிக்கை யில், இன்னொரு தரப்பு இதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாதென்கிறது. இவ்வாறு அரசிற்குள்ளேயே இழு பறி நிலை தோன்றியுள்ளது. கொழும்பில் எதிர்க்கட்சித் …

    • 4 replies
    • 1.5k views
  7. நாளை லண்டனில் தொழில்கட்சியினர் பிரித்தானியா வாழ் தமிழர்களை சந்திக்கும் ஒன்றுகூடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழில்கட்சிக்கான தமிழர் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச்சந்திப்பில் முன்னாள் லண்டன் நகர முதல்வர் Ken Livingston (Labour Party Candidate and the former Mayor of London) கலந்துகொள்ளவுள்ளார். இச்சந்திப்பின் போது முக்கிய விடையங்களாக லண்டன் நகர போக்குவரத்து, மற்றும் தமிழர்களின் பிரச்சனைகளை ஆராய்தல் என்பன பேசப்படவுள்ளன. தற்போது ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் சிறீலங்கா விடையம் முக்கிய பேசு பொருளாக அமைந்திருப்பதாலும், நேற்று முந்தினம் இரவு சன்ல் 4 தொலைக்காட்சியில் சர்வதேசத்திற்கு அம்பலப்படுத்தப்பட்ட சிறீலங்காவின்…

    • 7 replies
    • 771 views
  8. ஈழத்தில் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த போது ஒரு மிகப்பெரிய நாடகத்தை அப்போது பாரளுமன்றத் தேர்தலை சந்திக்க காத்துக் கொண்டிருந்த ஆளும் காங்கிரசு கட்சி மேற்கொண்டதை எம் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். போரின் இறுதி நிலை என்று இலங்கை இராணுவம் அறிவித்து இந்தியாவின் உதவியுடன் தமிழ் மக்களை துவம்சம் செய்து கொண்டிருந்த போது தமிழகத்தில் காங்கிரசின் கூட்டணிக்கட்சித் தலைவரான திரு. கருணாநிதி அவர்களின் தலைமையில் உண்ணாவிரதம் என்னும் ஒரு தற்காலிக நாடகத்தை சென்னை மெரினாவில் அரங்கேற்றிக் கொண்டே போரை இலங்கை அரசு நிறுத்தி விட்டதாக கூறி இந்திய ஊடகங்களைக் கொண்டு பரப்புரை செய்தது இந்திய அரசு. தமிழர்களாகிய நாமும் வாய் பிளந்து அட தமிழினத்தலைவரின் உண்ணாவிரதத்திற்கு இவ்வளவு சக்தியா என்று ஆ…

    • 7 replies
    • 2k views
  9. கொமன்வெல்த் நாளை முன்னிட்டு நியுயோர்க்கில் உள்ள பிரித்தானிய வதிவிடப் பிரதிநிதியின் பணியகத்தில் கடந்தவாரம் வரவேற்பு நிகழ்வு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த வரவேற்பு நிகழ்விற்கு, நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. சவீந்திர சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்படாதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர விதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன, இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அவுஸ்ரேலியாவுடன் இணைந்து கொமன்வெல்த் கூட்டத்துக்கு இலங்கையே இணைத்தலைமை வகிக்கிறது. இந்தநிலையில், சவீந்திர சில்வா பு…

  10. அமெரிக்க அரசாங்கம் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத் தொடரில் மேற்கொண்டு வரும் மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டை புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்று திரண்டு எதிர்க்க வேண்டுமென லண்டனில் உள்ள டயஸ் போரா டயலொக் அமைப்பின் அங்கத்தவர் ராஜேஸ்வரி சுப்ரமணியம் கோரிக்கை விடுத்தார். இலங்கையில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் இலங்கையில் இருந்து சென்ற புலம்பெயர்ந்த தமிழர்கள் வடபகுதி மக்களுக்கு எந்தவிதமான உதவிகளையும் செய்வதற்கு முன்வரவில்லை. புலம்பெயர்ந்த சமூகத்தினரால் திரட்டப்பட்ட மில்லியன் கணக்கான டொலர்களை சிலர் சுருட்டிக் கொண்டு ஆடம்பரமாக வாழ்ந்து வருகின்றனர். யுத்தத்தினால் வடபகுதி மக்கள் வீடுகளையும், சொத்துக்களையும் இழந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கையில் …

  11. ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கத் தவறினால், அது சிறிலங்காவில் உள்ள தமிழர்களைக் காயப்படுத்தும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். “இந்தியா இந்தத் தீர்மானத்தை எதிர்க்கலாம் என்று தெரிகிறது. தமிழ் மக்களின் சார்பாக மட்டும் நான் பேசவில்லை. ஆனால் சிறிலங்காவில் உள்ள தமிழ்மக்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள். இந்தியா ஒரு அயல்நாடு, அவர்கள் மிகவும் கவனமாகவே முடிவு எடுப்பார்கள் என்று நினைக்கிறேன். இந்த முடிவின் ஊடாக அவர்கள் ஒரு பங்கை வகிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். கடந்த மாதம் தீர்மானம் கலந்துரையாடல் நிலையில் இருந்த போது வொசிங்டனுக்கு நெருக்கமான…

  12. ஜெனிவாவில் தீவிரம் பெற்றுள்ள சிறிலங்கா மீதான போர்க்குற்றச்சாட்டுகள், கடந்தவாரம் நியுயோர்க்கிலும் எதிரொலித்துள்ளது. கொமன்வெல்த் நாளை முன்னிட்டு நியுயோர்க்கில் உள்ள பிரித்தானிய வதிவிடப் பிரதிநிதியின் பணியகத்தில் கடந்தவாரம் வரவேற்பு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த வரவேற்புக்கு நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான - மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. சவீந்திர சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்படாததற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர விதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன, இந்த வரவேற்பு நிகழ்வில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார். இந்த ஆண்டு அவுஸ்ரேலியாவுடன் இணைந்த…

  13. நான்காம் கட்ட ஈழப்போர் மணலாற்றில் சிங்கள அரசினால் மூட்டு விக்கப்பட்டது முதல் கடந்த 2009-ல் முள்ளிவாய்க்காலில் நடந்த தமிழ் இனப்படுகொலை வரை சிங்கள அரசுக்கு ராமும் அவரது இந்து பத்திரிக்கையும் கொடுத்த ஒத்துழைப்பு சோனியா தலைமயிலான மத்திய அரசு கொடுத்த ஒத்துழைப்போடு பொருத்திப்பார்க்கும் அளவுக்கு மிக கொடூரமானது என்றால் அது மிகையாகாது. ராஜபக்சே தர்பாரின் அனைத்து உயர் மட்டங்களிலும் தனிச்செல்வாக்குடன் திகழ்ந்த பார்ப்பன ராமின் செய்தி முகவர்கள் சிங்கள ராணுவத்தின் வாலாகவே போர்க்களமெங்கும் திரிந்தார்கள். இனப்படுகொலையை அருகிலிருந்து ரசித்தும் அந்த செய்திகளை திரித்தும் இலங்கை அரசுக்கு சார்பாக செயல்பட்டார்கள். இந்த கைங்கர்யங்கள் மூலம் மனித குலத்துக்கு எதிரான மாகுற்றங்களுக்கு துணை…

  14. ஜெனீவா விவகாரத்தினை கையிலெடுத்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைமையினை இல்லாமல் செய்யும் நடவடிக்கையில் இணையத்தளங்களும், உள்ளுர் ஊடகங்களும் செயற்பட்டுவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் இன்று பிற்பகல் நடைபெற்ற “கூட்டமைப்பு ஏன் ஜெனீவா செல்லவில்லை” என்ற தொனிப்பொருளிலான கருத்தூட்டல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சில மணி நேரமாக தொடர்ந்து உரையாற்றிய மாவை சேனாதிராசா பிரதேச சபை உறுப்பினர்கள் கேள்வி கேட்பதற்கு சந்தர்ப்பம் வழங்காது நீண்ட உரையாற்றியிருக்கின்றார். அவர் தனது உரையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனீ…

  15. ஐ நா - மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் இலங்கைக்கு கூடுதலான ஆதரவு காணப்படுவதாக திவயின பத்திரிகை தனத பதிப்பில் தெரிவித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் பிரேரணைக்கு ஆதரவாக 22 நாடுகள் மட்டுமே ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இலங்கைக்கு ஆதரவாக 25 நாடுகள் வாக்களிக்க உள்ளன. இந்நிலையில், கூடுதலான ஆதரவை திரட்டும் நோக்கில் அமெரிக்கா, இராஜதந்திரிகளையும் அரச சார்பற்ற நிறுவன பணியாளர்களையும் ஜெனீவா அனுப்பி வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 50 இராஜதந்திரிகளும், 32 அரச சார்பற்ற நிறுவனப் பிரதானிகளும் இவ்வாறு ஜெனீவா பயணம் செய்துள்ளனர் என திவயின செய்தி வெளியிட்டுள்ளது. http://www.seithy.co...egory=TamilNews

  16. டி.எம்.வி.பி. மாநாட்டில் வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிராக தீர்மானம் இலங்கையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இனப் பிரச்சினைக்கு தீர்வாக ஏனைய தமிழ் கட்சிகளினால் முன்வைக்கப்பட்டுவரும் வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பை முற்றாக நிராகரிப்பதமாக அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்ற அக்கட்சியின் முதலாவது தேசிய மாநாட்டில் இது தொடர்பான தீர்மானமொன்று நிறைவேற்றப்டப்டுள்ளது. வடக்கு கிழக்கு இணைப்பு என்பது கிழக்கு மக்களின் சுய விருப்பதிற்கும் அரசியல் அபிலாஷை மற்றும் இறைமைக்கும் எதிரானது என்றும் இந்த தீர்மாணத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இனப் பிரச்சினைக்கான தீர்வு…

    • 4 replies
    • 950 views
  17. சிறீலங்காவின் ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவினதும் அவரது குடும்பத்தினரதும் முழுமையான நோக்கம் இலங்கையினைத் தனிச் சிங்கள தேசிய நாடாகவே வைத்திருக்க விரும்புகின்றனர். பயங்கார நடவடிக்கைகள் தொடர்பிலான பிரித்தானியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் பில் றீஸ் தெரிவித்துள்ளார். அல்ஜசீரா தொலைக்காட்சி சில நாட்களுக்கு முன்னர் இலங்கை நிலவரம் தொடர்பில் நடைபெற்ற “நல்லிணக்கம் எட்டப்பட்டதா?” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த நிகழ்ச்சியில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி ஆலோசகர் ரஜீவ விஜயசிங்கவும் ஈழத்தமிழர் சார்பில் பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர் குமார் குமரேந்தின் ஆகியோருடன் மூன்றாம் தரப்பு உறுப்பினராக பயங்கார நடவடிக்கைகள…

  18. ராஜபக்ச மகனுக்கு, இந்தியாவில் விருது! டெல்லி: தமிழகத்தில் உள்ள 8 கோடி தமிழர்களும், பல கட்சித் தலைவர்களும் இலங்கையில் நடந்த தமிழர் படுகொலையை கண்டித்தும், இலங்கையை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும் திரண்டெழுந்துள்ள இந்த நேரத்தில், மீண்டும் ஒரு தமிழர் விரோத நடவடிக்கைக்கு அமைதியாக அனுமதியளித்துள்ளது மத்திய அரசு. சிங்கள இனவெறியின் அடையாளமாகத் திகழும் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவுக்கு இந்தியாவில் சிறப்பு விருது அளிக்கும் விழாவை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்ததோடு, அவருக்கு இஸட் பாதுகாப்பும் அளிப்பதாக அறிவித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஒரு பத்திரிகை விழாவில் சிறந்த சர்வதேச இளைஞன் என்ற விருதினை வழங்குகிறார்களாம். இந்த விழா பற்றிய விவரங்கள் வெளியானதிலிருந்து …

  19. அடுத்த முறை தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியானால் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வை முன்வைப்பீர்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் யாழ்ப்பாண மக்கள் முன்வைத்த கேள்வியால் அவர் ஆடிப்போனார். இரண்டு இடங்களில் கேட்கப்பட்ட இந்தக் கேள்விக்கு ஒரு இடத்தில் பதிலளிக்காமல் தவிர்த்தார். மற்றொரு இடத்தில் மழுப்பலான பதிலை வழங்கினார். நேற்றுமுன்தினம் மாலை யாழ்ப்பாணம் வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டக் குழு நேற்று யாழ்ப்பாணத்தின் பல இடங்களுக்கும் சென்று மக்களைச் சந்தித்தது. மாதகலில் இடம் பெற்ற சந்திப்பில், ஜனாதிபதியானால் தமிழ் மக்களுக்கு ரணில் வழங்கவுள்ள தீர்வு என்ன என்று மக்கள் கேள்வி எழுப்பினர். "நீங்கள் ஜனாதிபதியாகத் தெரிவானால் தமிழ் மக்களுக்கு எ…

    • 3 replies
    • 1.1k views
  20. சிங்களத்தைப் புறக்கணிக்கும் ஜெனீவா மனித உரிமை ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கையின் உப மாநாடுகளை, சர்வதேச நாடுகள் பலவும் புறக்கணித்து வருவதாக ஜெனிவாச் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் இலங்கையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உப மாநாட்டில், 8 பேர் மட்டுமே பங்கேற்கும் அளவுக்கு, இலங்கையின் நிலைமை மோசமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐ.நா மனித உரிமைகள் சபையின் பிரதான அமர்வு இடம்பெறும் சமவேளை, உப மாநாடுகள் இடம்பெறு வது வழமையான ஒன்று. இந்நிலையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தைத் தோற்கடிக்கும் நோக்கில், இலங்கை அரச தரப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுவரும் உப மாநாடுகள் பலவும், தொடர்ச்சியாகப் பிசுபிசுத்து வருவதாக அறிய முடிகின்றது. நேற்றுமுன…

    • 0 replies
    • 876 views
  21. ‘தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால், தமிழ்நாட்டையும், தமிழர் வீரத்தையும், கலையையும் நாகரிகத்தையும் மறந்தான்’ என்று பெரியார் சொன்னது உண்மைதான்: மன்மோகன்சிங்க்குக்கு தமிழருவி மணியன் கடிதம் பதியப்பட்ட நாள்March 17th, 2012 நேரம்: 14:13 அன்பிற்கினிய பாரதப் பிரதமர் மாண்பு​மிகு மன்மோகன்சிங் அவர்களுக்கு… வணக்கம்! இந்திய ஜனநாயகம் இந்த எளிய​வனுக்​கும் வழங்கியிருக்கும் உரிமையின் அடிப்​படையில் உங்களுக்கு இந்த முடங்கலின் மூலம், என்னை உறங்கவிடாத உணர்வுகளை வெளிப்படுத்த விழைகிறேன். தமிழகத்தில் உள்ளவர்கள் தலைசிறந்த பண்பாட்​டுக்கு உரியவர்கள்; அன்பு சார்ந்து, அமைதி காத்து, இந்திய ஒருமைப்பாட்டை இதயங்களில் இருத்தி, சக மனிதர்களை உடன் பிறந்த சகோதரர்களாகப் பாவித்து வாழப் பழகியவர…

    • 6 replies
    • 1.4k views
  22. [TamilNet, Sunday, 18 March 2012, 05:45 GMT] “The [sri Lankan] Government’s current activities in the North and East are challenging the very existence of the Tamil people and more time to the GOSL to implement the LLRC’s recommendations will only mean further time for the Government to play havoc in the North and East and subjugate the interests and aspirations of the Tamil people,” said leading Eezham Tamil civil society members in the island, in a letter addressed to the visiting US Under Secretary of State Maria Oetro and the Assistant Secretary of State Robert Blake last month on 10 February 2012. TamilNet has received a copy of this confidential letter and relea…

    • 0 replies
    • 835 views
  23. கச்சத்தீவில் இலங்கை அரசு நிரந்தர கடற்படை தளம் அமைத்துவிட்டதாக இலங்கை ஊடகங்கள் தகவல் சனிக்கிழமை, மார்ச் 17, 2012, 17:20[iST] கச்சத்தீவு: தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத்தீவில் இலங்கை அரசு நிரந்தர கடற்படைத் தளத்தை அமைத்துள்ளதாக இலங்கையிலிருந்து வெளியாகும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்த 2009-ம் ஆண்டு முதலே கச்சத்தீவில் நிரந்தர கடற்படை தளம் அமைக்க இலங்கை அரசு முயற்சித்து வந்தது. ஆனால் தமிழகத்தில் இதற்குத் தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் கச்சத்தீவின் மேற்குப் பகுதியில் மேட்டு நிலப்பரப்பில் நிரந்தர கடற்படை தளத்தை இலங்கை…

    • 6 replies
    • 898 views
  24. அமெரிக்காவுக்கு எதிராக ஒரு வார்த்தையை கூட தெரிவிப்பதில்லை - விமல் வீரவங்ச அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன என்பவர், மிலிந்த மொரகொடவின் நண்பர் எனவும் அவர் அமெரிக்காவுக்கு எதிராக ஒரு வார்த்தையை கூட தெரிவிப்பதில்லை எனவும் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். இப்படியான ஒருவர் அமெரிக்காவுக்கு எதிராக கருத்துக்களை வெளியிடுவார் என நம்புவது கடினம். யுத்தம் செய்யும் போது, இந்த துரைமார், யுத்தத்தை செய்ய முடியாது என கூறிவந்தனர். எனினும் யுத்தத்தை நல்லபடியாக செய்து கொண்டு செல்லும் போது, அவர்கள் அரசாங்கத்திற்கு தாவினர். அவர் கூறியது போல் நான் தெரிவித்த கருத்து, அரசாங்கத்தின் கருத்து அல்ல. நாங்கள் அரசாங்கத்தில் இருப்பது போல் எங்களுக்கும் தனியான கொள்கைகள் உள்ளன. அந்த…

    • 2 replies
    • 1k views
  25. ஜெனீவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கூட்டத் தொடரில் முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைந்து இலங்கைக்கு பலம் சேர்க்க முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வுடன் தொடர்ந்தும் நட்பினை பேணவே விருப்பம் கொள்வதாக இலங்கையின் மூத்த அமைச்சர் ரிஸாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். அண்மைக்கால வரலாற்றில் ஒரே இலக்கை கொண்டு இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை ஒழித்த ஒரே தலைவர் மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு உதவ நட்பு நாடுகள் இருக்கின்றன என நேற்றைய தொழுகையின் பின்னதாக செய்தியாளர் சந்திப் பொன்றில் அமைச்சர் தெரிவித்தார். இலங்கையைச் சுற்றி சபீட்சத்தை ஏற்படுத்த சிறப்பு பிராத்தனைகள் நடைபெறுகின்றன. பயங்கரவாதத்திற்கு எதிராக போராடி வெற்றி கொண்ட வீரர்களை அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.