ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
மதுபோதையில் யாழ் தேவி ரயிலை செலுத்திய தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் கைது! யாழ்தேவி’ ரயிலின் தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர் , கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (25) பிற்பகல் அனுராதபுரத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த இந்த ரயில், பிற்பகல் 2.40 மணியளவில் அனுராதபுரம் ரயில் நிலையத்தை அடைந்துள்ள நிலையில் அவர் மது அருந்தியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரை அநுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதன் பின்னர் அவர் நீதிமன்றில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார…
-
- 0 replies
- 113 views
-
-
(அஷ்ரப் ஏ சமத்) இந்த நாட்டில் சர்வதேச தரத்தில் தாதியர்களுக்கு என்ற ஓர் சீருடை இருந்து வந்தது. அதை யாரும் அவரவர் மதம் கலாச்சாரத்திற்கும் ஏற்ப மாற்ற நினைப்பார்கள் ஆனால் அதற்கு எதிராக எங்களது பொது அரச தாதியர்கள் ஊழியர் சங்கம் தடுத்து நிறுத்தும்.. அதற்கு எதிராக நாங்கள் ஊழியர் சங்கத்தின் நடவடிக்கையில் இறங்கும் என பொதுச் சேவை தாதியர்கள் சங்கத்தின் தலைவர் முத்தட்டுவே ஆனந்த தோரோ இன்று 26 ஆம் திகதி அவரது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார் நாட்டில் வழமையாக இருந்து வரும் தாதியர்கள் சீருடையை அவரவர் மதம் கலாச்சாரத்திற்கேற்ப அணியலாம் என ஊடகங்களில் வெளிவந்த செய்தியை கவனித்தேன்…. ஆனால் தற்பொழுது சுகாதார அமைச்சர் திறம்பட எடுத்துச் செல்லும் வைத்தியர் ந…
-
- 0 replies
- 134 views
-
-
யாழ்.பல்கலையின் அடுத்த துணைவேந்தர் யார் ? களத்தில் பேராசிரியர் ரகுராமும் adminOctober 25, 2025 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு ஆறு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், பல்கலைக்கழகப் பேரவையின் பதவிவழிச் செயலாளரான பதிவாளரால் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதற்கான இறுதித் தினம் கடந்த 15ம் திகதி ஆகும். அன்றைய தினம் பிற்பகல் 3 மணியுடன் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் நிறைவடைந்த வேளையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பீடாதிபதிகள் 4 பேர் உட்பட ஆறு பேராசிரியர்கள் துண…
-
-
- 1 reply
- 250 views
-
-
25 Oct, 2025 | 03:07 PM வங்காள விரிகுடா கடல் பகுதி மற்றும் நாட்டின் கிழக்கு ஆழமற்ற கடல் பகுதிகளில் பலத்த காற்று, கனமழை மற்றும் கடல் கொந்தளிப்பானதாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை 12.00 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்திற்கு இது செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (26) க்குள் ஒரு ஆழமான காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, ஞாயிற்றுக்கிழமை (27) காலை தென்மேற்கு மற்றும் அதை அண்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் ஒரு சூறாவளி புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு, அடுத்த 48 மணி நேரத்தில் ஆந்திரப் பிரதேச கடற்கரை…
-
- 0 replies
- 102 views
- 1 follower
-
-
நாட்டில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் - சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ 25 Oct, 2025 | 04:22 PM நாட்டில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ தெரிவித்துள்ளார். பிரஜா சக்தி அபிவிருத்தி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் கொழும்பில் உள்ள கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை முறை…
-
- 0 replies
- 181 views
- 1 follower
-
-
கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், 'யாழ்தேவி' ரயிலின் தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர் ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால் இன்று (25) பிற்பகல் அனுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த இந்த ரயில், பிற்பகல் 2.40 மணியளவில் அனுராதபுரம் ரயில் நிலையத்தை அடைந்துள்ளது. இதன்போது அவர் மது அருந்தியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதன் பின்னர் அவர் நீதிமன்றில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். யாழ்தேவி ரயிலுக்கு வேறொரு கட்டுப்பாட்டாளர் நியமிக்கப்பட்ட நிலையில் அநுராதபுரத்தில் இருந்து கொழ…
-
- 0 replies
- 199 views
- 1 follower
-
-
போதைப்பொருளுக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்றாலும், பட்டப்பகலில் இடம்பெறும் கொலைகளை நியாயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது ! By SRI பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்துக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்றாலும், அதனைக் காரணமாகக்கூறி பட்டப்பகலில் இடம்பெறும் கொலைகளை நியாயப்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்பதற்கும், பாதாள உலகக்குழுக்களின் செயற்பாடுகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாடளாவிய ரீதியில் பல்வேறு நடவடிக்கைகளை முன…
-
-
- 3 replies
- 230 views
-
-
க.பொ.த உயர்த்தர மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்! 25 Oct, 2025 | 10:51 AM 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்த்திற்கான பொது தகவல் தொழில்நுட்ப (GIT) தேர்வுக்கான அனுமதி அட்டைகள் அனைத்தும் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அனைத்து அதிபர்களும் தங்கள் பாடசாலைக்குறிய அனுமதி அட்டைகளை அந்தந்த வலயக் கல்வித் உதவி கல்வி பணிப்பாளரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் தனியார் பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் தபால் மூலம், அவர்களின் தனிப்பட்ட தபால் முகவரிகளுக்கு நேரடியாக அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது…
-
- 1 reply
- 155 views
- 1 follower
-
-
“ஆனந்தன்” வழங்கிய தகவலுக்கமைய கஞ்சா கடத்தல்காரர் கைது! 25 Oct, 2025 | 10:36 AM நீண்ட நாட்களாக இந்தியாவிலிருந்து படகு மூலம் கஞ்சா கடத்தி வந்த கஞ்சா கடத்தல்காரர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வைத்து கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட கஞ்சா கடத்தல்காரரிடமிருந்து 10 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்திக்கு, இந்தியாவுக்கு தப்பிச் செல்ல படகு ஏற்பாடு செய்து கொடுத்து உதவியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வை…
-
- 0 replies
- 135 views
-
-
தந்தை செல்வாவின் மூத்த மகள் கனடாவில் காலமானார் ! 25 Oct, 2025 | 12:37 PM தந்தை செல்வா என்று போற்றப்பட்டவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவருமான தந்தை செல்வாவின் (எஸ்.ஜே.வி. செல்வநாயகம்) மூத்த மகள் சுசீலாவதி வில்சன் தனது 97 ஆவது வயதில் கனடாவில் இறைவனடி எய்தினார். அன்னார் இலங்கை அரசியல் பற்றிய விமர்சனத் துறையில் போற்றப்பட்டவரும் கனடா நியூ பிரன்சுவிக் பல்கலைக்கழகத்தின் அரசியற்துறைப் பேராசிரியருமான அ.ஜெயரெத்தினம் வில்சனின் அன்புத் துணைவியாரும் கனேடியச் சட்டத்தரணி மல்லிகா, மைதிலி குமணன் ஆகியோரின் அன்புத் தாயாருமாவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் சனிக்கிழமை (25 ஒக்டோபர் 2025) 11.00 மணி முதல் 2.00 மணி வரை Chapel Ridge - 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1 நடைப…
-
- 0 replies
- 122 views
-
-
வடமாகாணத்தில் நாளை 13 மணி நேர மின் தடை! வடக்கு மாகாணத்தின் நான்கு மாவட்டங்களிலும் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை 26ம் திகதி மின்தடைப்படும் என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. அதன்படி முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாண, கிளிநொச்சி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் 13 மணி நேரம் தொடர் மின் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா, மன்னார் 220kV மின் பரிமாற்ற வடத்தினை மாற்றியமைப்பதற்கான வேலைகளிற்காகவே நாளைய தினம் ‘காலை 6.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை மின் துண்டிக்கப்படுவதால், யாழ்ப்பாண மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் வவுனியா மாவட்டம் முழுவதும் மின் விநியோகமானது துண்டிக்கப்படவுள்ளது. வேலைகள் பூர்த்தியாகியவுடன் மின் இணைப்பானது உடனடியாக மீள வழங்கப்படும…
-
- 0 replies
- 119 views
-
-
இந்திய இராணுவத்தின் கொக்குவில் இந்துக்கல்லூரி படுகொலையின் நினைவேந்தல் adminOctober 24, 2025 யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து கல்லூரியில் தஞ்சம் அடைந்திருந்த பொது மக்கள் மீது இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 50 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் 38 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கொக்குவில் இந்து கல்லூரி நுழைவாயிலில் முன்பாக இடம்பெற்றது. நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தி அதனைத் தொடர்ந்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. 1987 ஒக்டோபர் 11 ஆம் திகதி மற்றும் 12 ஆம் திகதிகளில் கொக்குவில் பிரம்படி பகுதிகளில் நடைபெற்ற படுகொலைகளை தொடர்ந்து கொக்குவில் இந்துக் கல்லூரியில் தஞ்சம் அடைந்த…
-
- 0 replies
- 72 views
-
-
உள்நாட்டு யுத்த காலத்தை விட தற்போது பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது- சாகர காரியவசம்! தமிழீழ விடுதலை புலிகள் கூட அலுவலகங்களுக்குள் புகுந்து தமது எதிரிகளைக் கொலை செய்யவில்லை போர்க் காலத்தை விடவும் தற்போது பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். வெலிகம துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமானது படு பயங்கரமாகும் எனவும் தமக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த தவிசாளர் லசந்த விக்கிரமசேகர கோரிக்கை விடுத்திருந்த போதிலும் அது வழங்கப்படாத சூழ்நிலையிலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் எனவும் அவர் இதன்போது சுட்டிக்கா…
-
-
- 2 replies
- 198 views
-
-
நாட்டில் குறைவடைந்து வரும் திருமணம், பிறப்பு வீதங்கள்! 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் திருமணங்கள் மற்றும் பிறப்புக வீதம் கணிசமாகக் குறைந்துள்ளதாக மக்கள்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 1இலட்சத்து 39ஆயிரத்து 290 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8 சதவீத குறைவாகும் என தரவுகள் குறிப்பட்டுள்ளன. இதேவேளை, கடந்த 2022 ஆம் ஆண்டு, பொருளாதார நெருக்கடியின் காலத்தில், நாடு முழுவதும் 1இலட்சத்து 71ஆயிரத்து 140 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. முன்னதாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிபர தரவுகளின்படி பிறப்புகளிலும் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ள…
-
- 0 replies
- 190 views
-
-
ஆஸ்திரேலிய முதலீட்டாளரின் சொத்துக்களை மோசடி செய்த இருவர் கைது! மன்னாரில், மோசடி, சொத்துக்களை குற்றவியல் ரீதியாக கையகப்படுத்துதல் மற்றும் ஆஸ்திரேலிய முதலீட்டாளர் ஒருவரை மோசடி செய்த குற்றச்சாட்டுகளில் மன்னார் நானாட்டான் பகுதியை சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களை நேற்று (24) மாலை முருங்கன் பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில்,குறித்த இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார். மன்னார், நானாட்டான், புதுக்குடியிருப்பு, ஓமந்தை மற்றும் ஆலம்பில் பகுதிகளில் பல வணிகங்களை ஆரம்பிக்க ஆஸ்திரேலிய முதலீட்டாளர் குறித்த நபர்களுக்கு நிதி வழங்கியிருந்தார்.…
-
- 0 replies
- 111 views
-
-
24 Oct, 2025 | 04:52 PM (எம்.மனோசித்ரா) மஹிந்த ஜயசிங்கவுக்கு கனவிலும் ராஜபக்ஷர்கள் தான் தோன்றுகின்றனர். அதனால் அதனால் தான் அவர் அதிகளவில் ராஜபக்ஷர்கள் குறித்து பேசுகின்றார். செவ்வந்தி தனது தொலைபேசியில் பதிவு செய்திருப்பது எந்த நாமலுடைய இலக்கம் என்பதை அதனை பரிசோதித்தவர்களே கூற வேண்டும். ஆனால் அரசாங்கத்திலும் நாமல் கருணாரத்ன என்ற ஒருவர் இருக்கின்றார் என்பதை நினைவுபடுத்துகின்றேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். வெள்ளிக்கிழமை (24) பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், மஹிந்த ஜயசிங்கவுக்கு கனவிலும் ராஜபக்ஷர்க…
-
- 3 replies
- 248 views
- 2 followers
-
-
புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்துக்கு அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி கடும் எதிர்ப்பு : 7ஆம் திகதிக்கு முன் தீர்மானத்தை மாற்றுமாறும் வலியுறுத்தல் 24 Oct, 2025 | 04:49 PM (எம்.மனோசித்ரா) நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் 2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்துக்கமைய பாடசாலை நேரத்தை 30 நிமிடத்தால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி துறைசார்ந்தவர்களுடன் எந்தவொரு கலந்தாலோசனைகளையும் முன்னெடுக்காமல் எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தை தாம் கடுமையாக எதிர்ப்பதாக அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை (24) கொழும்பில் விசேட ஊடகவியலாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்து குறித்த தொழிற்சங்கம் இவ்வாறு எதிர…
-
-
- 2 replies
- 175 views
- 1 follower
-
-
வட மாகாண தொழில்முனைவோர் விருதுகள் - விருதுக்கு விண்ணப்பிக்குமாறு கோரிக்கை வெள்ளி, 24 அக்டோபர் 2025 06:14 AM பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் போன்றோரின் தொழில்முயற்சிகளுக்கு தேசிய ரீதியிலான அங்கீகாரங்களை பெற்றுக்கொடுக்கும் முகமாக , “வட மாகாண தொழில்முனைவோர் விருதுகள்-2025” எனும் விருது வழங்கும் நிகழ்வில் 16 பிரிவுகளில் 33 விருதுகள் வழங்கப்படவுள்ளன எனவும் , அதற்காக தொழில் முனைவோரை விண்ணப்பிக்குமாறும் , யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தினர் கோரியுள்ளனர் யாழ் . மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற , ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தின் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் முகமாக வடமாகாணத்தின் சி…
-
- 0 replies
- 136 views
-
-
யாழில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு சொத்து குவித்த எட்டு பேருக்கு எதிராக விசாரணை ஆரம்பம் வெள்ளி, 24 அக்டோபர் 2025 06:45 AM யாழ்ப்பாணத்தில் பணத்திற்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் , போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டவர்கள் , மீற்றர் வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 08 பேருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் , அவர்களில் ஐவருக்கு எதிராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் , மூவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றிலும் வழக்குகள் தொடரப்படவுள்ளன. வெளிநாடுகளில் இருந்து பெருந்தொகை பணத்தினை பெருக்கோடு யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுதல் , மீற்றர் வட்டிக்கு பணத்தினை …
-
-
- 3 replies
- 276 views
- 1 follower
-
-
கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் ஆபாச காணொளிகள்!! விசாரணைக்கு அழைக்கப்படும் நடிகைகள் October 24, 2025 10:36 am குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) தடுத்து வைக்கப்பட்டுள்ள கெஹல்பத்தர பத்மேவின் கையடக்க தொலைபேசி தரவுகளை பகுப்பாய்வு செய்ததில், ஐந்து பிரபல நடிகைகள் மற்றும் ‘மிஸ் இலங்கை’ கிரீடம் வென்ற ஒரு மாடல் தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளன. அதன்படி, அவர்கள் ஆறு பேருக்கு எதிராக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. குற்றப் புலனாய்வுத் துறை இந்த ஆறு பெண்களையும் அழைத்து அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட கெஹல்பத்தர பத்மே, மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, அவரது கையடக்க தொலைபேச…
-
- 1 reply
- 209 views
-
-
வெள்ளைக்கொடி விவகாரம்: சர்வதேச விசாரணை வேண்டும் – கோடீஸ்வரன் October 24, 2025 10:59 am இறுதிப்போரின்போது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு உள்ளக பொறிமுறை ஊடாக நீதி கிட்டாது. எனவே, சர்வதேச விசாரணையே வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். ” 2009 இறுதிப்போரின்போது வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த மக்கள், புலிகள் சவேந்திர சில்வாவின் அனுமதியுடன் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தார். இதனோடு சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள், அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் தண்டிக்கப்பட வேண்டியவர்க…
-
- 0 replies
- 122 views
-
-
போதைப்பொருள் பேரழிவை ஒழிக்க முழு நாடும் ஒன்றுபட வேண்டும் – ஜனாதிபதி October 24, 2025 அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் குறித்து விவாதிக்க முடிந்தாலும், நாட்டிலிருந்து போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதில் இனிமேலும் விவாதித்துக் கொண்டிருப்பதற்கு இடமில்லை. போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான துரித வேலைத்திட்டத்திற்காக முழு நாடும் ஒன்றுபட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். ‘போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான ” முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு’ குறித்து ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்கு விளக்கமளிப்பதற்காக வியாழக்கிழமை (23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவா…
-
- 0 replies
- 107 views
-
-
கடந்த காலங்களை விட தற்போது கடற்படையினர் வினைத்திறனுடன் செயற்படுகின்றனர் adminOctober 24, 2025 கடந்த காலத்தை விட கடற்படையினர் அதிக வினைத்திறனுடன் செயற்படுகின்றனர். அவர்கள் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மிக கடுமையாக முன்னெடுக்க வேண்டும் என வடமாகாண மீனவர் சங்கங்களின் இணையத்தின் செயலாளர்முகமட் ஆலம் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கடந்த கால அரசாங்கத்தை. விட தற்போதைய அரசாங்கம் இந்திய மீனவர்களை கைது செய்வதில் அதிக அக்கறை காட்டுகின்றது. அதனை நாங்கள் வரவேற்கிறோம். வட மாகாணத்தை பிரதிநிதிப்படுத்தும் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மு…
-
- 0 replies
- 90 views
-
-
இலங்கைக்கு பரிசாக வழங்கிய யானைகளை மீண்டும் திரும்பப் பெற தாய்லாந்து நடவடிக்கை! தாய்லாந்து பரிசாக வழங்கிய இரண்டு யானைகளை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதற்காக தாய்லாந்து அரசாங்கம் இலங்கையுடன் எதிர்வரும் 28 ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இலங்கையில் குறித்த யானைகள் மேசமாக பராமறிக்கப்படுவதாகவும், தவறாக நடத்தப்படுவதாகவும் வெளியான செய்திகளைத் தொடர்ந்து அவற்றை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வர தாய்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது. தாய்லாந்து யானைகளான Plai Pratu Pha மற்றும் Plai Srinarong ஆகியவற்றின் நலன் குறித்து அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், தாய்லாந்தின் பிரதிப் பிரதமரும் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சருமான Suchart Chomklin வியாழக்கிழமை (23) தனது முகந…
-
- 3 replies
- 204 views
- 1 follower
-
-
நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களை வரவேற்கத் தயார் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியாவில் இருக்கும் மக்கள் மீண்டும் தாயகம் திரும்பினால் அரசாங்கம் வரவேற்கத் தயாராகவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் நடைபெறும் நிகழ்வொன்றுக்காக தமிழ்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதி அமைச்சர், அங்கு ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் கூறிய அவர், இலங்கை அரசு பொருளாதாரத்தில் சிக்கலான சூழலில் இருந்த போது இந்தியா பல்வேறு உதவிகளை செய்துள்ளது. மலையக தமிழர்களுக்கு இந்தியா சார்பில் வீடுகள் கட்டிக் கொடுக்கும் நடவ…
-
- 0 replies
- 171 views
-