Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சர்ச்சைக்குரிய உயர்தர பரீட்சை முடிவுகள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள குழு ஒன்றை நியமித்துள்ளார் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ஷ. இக்குழுவின் தலைமை பொறுப்பை தாரா விஜயதிலக்க வகிக்கவுள்ளார். இவ்வருடம் வெளியான உயர்தர பரீட்சை முடிவுகளில் மாவட்ட தரவரிசையில் ஏற்பட்ட பிரச்சினைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி அரசிற்கு பெரும் நெருக்கடிகயை தோற்றுவித்துள்ள நிலையில் அவற்ற சரிசெய்யவென குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவினர் பரீட்சை முடிவுகள் தொடர்பான பிரச்சினைகளை இரண்டு வார காலத்திற்குள்ளாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதியால் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைமைப் பொறுப்பு தாரா விஜயதிலக்கவிடம் வ…

  2. போரின் இறுதிக்கட்டத்தில் 1200 பொதுமக்கள் இராணுவத்தினரின் தாக்குதல்களில் கொல்லப்பட்டது உண்மையே என்று சிங்கப்பூரைத் தளமாக கொண்ட, தீவிரவாத ஆய்வு மற்றும் அரசியல் வன்முறைகள் குறித்த அனைத்துலக நிலையத்தின் தலைவர் பேராசிரியர் றொகான் குணரட்ண தெரிவித்துள்ளார். பிரித்தானிய புலமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் வெளிநாட்டு மண்ணில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தல் என்ற பொருளில் நிகழ்த்திய உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தனது உரையில் மேலும் குறிப்பிடுகையில்: போரின் இறுதிக்கட்டத்தில் 7000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சில அமைப்புகள் சொல்கின்றன. வேறு சில அமைப்புகளோ 10,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறுகின்றன. இன்னும் …

  3. பலஸ்தீன வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ரெயிட் மல்கி இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பிரிஸின் அழைப்பை ஏற்று இலங்கை வரும் அவர், செவ்வாய்க்கிழமை வரை தங்கியிருப்பார் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார். இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பிரிஸ் உள்ளிட்ட பலருடன் பலஸ்தீன் வெளிவிவகார அமைச்சர் பேச்சு நடத்தவுள்ளதாக அப்பேச்சாளர் குறிப்பிட்டார். இதன்போது, அரசியல் ஆலோசனை தொடர்பிலான இராஜதந்திர உடன்படிக்கையொன்று இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக பேச்சாளர் மேலும் தெரிவித்தார். http:…

  4. இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் ஜனவரி மாதம் மூன்றாம் வாரத்தில் யாழ்ப்பாணம் வரவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை இந்தியத் தூதரகம் மேற் கொண்டுள்ளது. ஜனவரி 22 அல்லது 23 ஆம் திகதியில் யாழ்ப்பாணம் வரும் கலாம் யாழ். பல்கலைக்கழகத்தில் உரையாற்ற உள்ளார். பின்னர் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டவர்களைச் சந்தித்துப் பேசுகிறார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் வருகைதரவுள்ள அவர், அங்கும் மாணவர்களைச் சந்தித்துப் பேசுவார். கலாம் யாழ்ப்பாணம் வருவதை உறுதி செய்தது இந்தியத் தூதரகம். அவரது வருகையின் போதான நிகழ்ச்சி நிரலில் யாழ்ப்பாணத்தில் இந்த மூன்று விடயங்களுமே இப்போதைக்குத் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தது. http…

  5. போர்க்குற்ற நகர்வுகளின் முன் தமிழர்கள் எதனை வலியுறுத்த வேண்டும்? இலங்கைத் தீவில் உள்ள தமிழ்த் தேசமும் சிங்களத் தேசமும் நலன்சார் அடிப்படையில் இலங்கை மீது தலையிடுகின்ற சர்வதேசத் தரப்புக்களை எவ்வாறாக நோக்குகின்றன என்பதைக் கடந்த பத்தியில் தெரிவித்திருந்தேன். அப் பத்தியில் சிங்களத் தேசியவாதமானது இலங்கையில் உள்ள தமிழ்த் தேசம் மற்றும் இந்தியா, மேற்குலகு உள்ளிட்ட தரப்புக்களை எவ்வாறாக எதிரிகளாகக் கருதுகின்றது என்பதையும் விளக்கியிருந்தேன்.தமிழ்த் தேசத்தினைப் பொறுத்தளவில் அது இயல்பாகவே பக்கம் சாரக் கூடிய அதிக வாய்ப்புள்ள தரப்புக்களாக இந்தியாவும் மேற்கு நாடுகளாகவுமே உள்ளன. இந்தியாவுடன் தமிழ்த் தேசம் சார்ந்து கொள்வதற்கு, இலங்கைத் தீவில் உள்ள தமிழ்த் தேசத்துடன் இந்தியாவில் உ…

    • 0 replies
    • 370 views
  6. இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கை வரவுள்ளார். தேசிய மும்மொழி கொள்கை அங்குரார்ப்பண நிகழ்வில் இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்துகொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், அவர் எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ளதாக யாழ். இந்திய துணைத்தூதுவர் எஸ்.மகாலிங்கம் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் யாழ்.பல்கலைக்கழகத்தில் விசேட உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழில் மூன்று நாட்கள் தங்கவுள்ள இவர், யாழ். பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர்களையும் சந்திக்கவுள்ளதுடன் யாழில் நடைபெறவுள்ள இந்திய கலை கலாசார நிகழ்வுகளிலும் கலந…

  7. ஏ.ஆர்.ரகுமான் அவர்களே உங்களுக்கு ஈழத்தமிழினத்தின் வலிகள் புரியும்.. தமிழனித்தின் இசைச் சாம்ராஜ்யத்தின் வலிமையை உலகறியச் செய்த இசைப் புயல் ரகுமான் அவர்களுக்கு வணக்கம், ஈழத்தமிழினம் சுமந்த இன்னல்கள் ஏராளம், ஈழத்தமிழர்கள் உடலில் வலிசுமக்கும் போது தாய்த் தமிழகத்தின் உறவுகளின் கண்களில் இருந்து இரத்த ஆறு ஓடும் அளவிற்கு தமிழகத்திற்கும் ஈழத்திற்குமான உறவின் வலிமை அளப்பெரியது. பிறந்தோம்,வாழ்ந்தோம், மறைந்தோம் என்றில்லாமல், இசை உலகில் புதிய புரட்சி படைக்கும் உங்களை தமிழின அழிப்பின் பிரதான சக்திகள் இலங்கைக்கு குறிப்பாக தமிழ் உலகிற்கு முகவரி சொல்லும் யாழ்ப்பாணத்திற்கு அழைத்திருப்பது வேதனை தருகிறது. உயிர்கள் பிய்த்தெறியப்பட்டு இரத்த வாடை மாறுவதற்கு முன்பாக உங்களை வைத்து எங்…

  8. மேற்கு நாடுகளில் இருக்கும் சில விடுதலைப்புலிகள் அந்நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்கள் மீது அழுத்தங்களை கொண்டுவந்து இலங்கைக்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர் என இந்தியாவிலிருந்து வெளிவரும் டெக்கான் குரோனிக்கல் ஆங்கில பத்திரிகைக்கு மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய பேட்டியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். மேற்கத்திய நாடுகள் எப்போதும் காஷ்மீரையும் இலங்கை நிலவரத்தையும் பற்றி அந்நாடுகளின் பாராளுமன்றத்தில் ஆட்சேபக் குரல் எழுப்புகின்ற போதிலும், அவை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஈராக்கில் மேற்கத்திய வல்லரசு நாடுகளினால் மேற்கொள்ளப்படும் அக்கிரமங்கள் பற்றி வாய்திறந்து பேசாமல், மெளனம் சாதிக்கின்றனவென்று மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினைக்கு …

  9. 'போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான சக்கர நாற்காலிக்கும் வரி' இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக அனுப்பப்பட்ட சக்கர நாற்காலிகளுக்கு இலங்கை சுங்கத்துறை வரி விதித்தமை தொடர்பாக பிரிட்டனைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது. யோக்ஷெயரைச் சேர்ந்த பிசியோநெட் என்னும் தொண்டு நிறுவனம் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக 322 சக்கர நாற்காலிகளை அனுப்பியுள்ளது. அந்த நாற்காலிகளுக்கு 8000 டாலர்கள் வரை இலங்கை சுங்கத்துறையால் வரி விதிக்கப்பட்டதாகவும், அந்தப் பொருட்களை சுங்கத்துறையில் இருந்து வெளியே கொண்டு செல்வதற்கு சுங்கத்துறை மிகுந்த தாமதத்தை ஏற்படுத்தியதாகவும், அந்த தொண்டு நிறுவனத்தின் தலைவரான பீட்டர் தோம்சன் கண்டன…

  10. மஹிந்தருக்கு பொழுதுபோகாவிட்டால் மாலைதீவு ஜனாதிபதியை அழைக்கின்றாரா? அல்லது மாலைதீவு ஜனாதிபதிக்கு பொழுதுபோகாவிட்டால் மஹிந்தரிடம் வருகின்றாரா? அப்படி என்னதான் உறவு இந்த வருடம் இது நான்காவது தடவை மாலைதீவு ஜனாதிபதி அப்துல் மொஹமட் நசீத் மஹிந்தரிடம் போய் உறவாடியுள்ளார். மஹிந்தரிடம் சுதேச வைத்திய சிகிச்சை பெறப்போகின்றாரா? அல்லது மஹிந்தரிடம் தனிப்பட்ட வியாபார கொடுக்கல் வாங்கல்கள் நடக்கின்றதா? என்னவென்று தெரியவில்லை.இரு நாட்டின் தலைவர்களையும் கேட்பார் யாரும் இல்லை. மாலைதீவு பத்திரிகைகள் எழுதுகின்றன தமது ஜனாதிபதி சிறிலங்கா செல்கின்றார் என; கொழும்பு பத்திரிகைகள் எழுதுகின்றன மாலைதீவு ஜனாதிபதி கொழும்பு வருகின்றார் என அவ்வளவும்தான். இதனிடையே மாலைதீவு ஜனாதிபதி அப்துல் நசீத்த் ஓர் நாட்ட…

  11. முல்லைத்தீவு விசுவமடுவில் சுற்றுலாச் சென்ற சிங்களவர்களின் பேருந்து ஒன்று வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயம் அடைந்திருக்கின்றனர்.இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, இன்று முற்பகல் 9மணியளவில் விசுமடு 12ஆம் கடைப்பகுதியில் திருப்பதி என்பவர் தனது பிள்ளையுடன் பயணித்துக்கொண்டிருந்தார். அவ்வேளை எதிரே வந்த சிங்களவர்களை ஏற்றிய சுற்றுலாப் பேருந்து திருப்பதி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியிருக்கின்றது. சம்பவத்தில் திருப்பதியும் அவரது பிள்ளையும் படுகாயம் அடைந்ததுடன் மோட்டார் சைக்கிளும் மோசமாகச் சேதமடைந்திருக்கின்றது. சம்பவம் இடம்பெற்றதை அடுத்து அங்கு விரைந்த இராணுவ அதிகாரி ஒருவருவரும் சிப…

  12. கீரிமலை செம்மண்காடு மயானத்திற்குச் கடற்கரையால் செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட பாதையில் முட்கம்பிகள் போட்டு மறிக்கப்பட்டுள்ளது.கடந்த புதன்கிழமை வலி வடக்கைச் சேர்ந்த ஒருவர் மரணமடைந்ததையடுத்து குறித்த சடலத்தை கீரிமலை செம்மண்காடு மயாணத்தில் தகனம் செய்வதற்கு கடற்படையினரிடம் அனுமதி கேட்டபோது அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும் வாக்குவாதம் நடைபெற்றுப் பின்னர், செம்மண்காட்டிற்குச்செல்லும் பாதையைத் தவிர்த்து, கடற்கரையோரமாக சடலத்தைக் கொண்டு செல்வதற்கு கடற்படையினர் அனுமதி வழங்கினர். இத்தகைய நிகழ்வின்போது வலி வடக்கு பிரதேசசபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டமையினால் அரசியல் பழிவாங்கும் நிகழ்வாக குறித்த மயானத்திற்கு மக்கள் செல்வதை கடற்படையின…

  13. யாழ் குடாநாட்டில் இராணுவத்தினர் தங்கியுள்ள பொதுமக்களின் வீடுகள், காணிகள் மற்றும் பொது இடங்கள் தொடர்பான விவரங்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகளில் கிராம அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். யாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் உத்தரவிற்கு அமைவாக விண்ணப்பப்படிவங்கள் தயாரிக்கப்பட்டு இராணுவத்தினர் தங்கியுள்ள பொதுமக்களின் வீடுகள், மற்றும் காணிகள் தொடர்பான முழு விபரங்களையும் பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப்படிவத்தில் வீட்டின் உரிமையாளர்கள் வெளிநாடு, உள்நாடுகளில் தங்கியிருப்பதன் விலாசம், தங்கியிருந்த ஆண்டு காலப்பகுதி தொடர்பான விபரங்கள் அடங்கியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இராணுவம் தங்கியுள்ள வீட்டின் உரிமையாளர்கள் தமது வீடுகளில் குடியமர்வதற்கு இராணுவத்தினரை வெளியேறக் கேட்கின…

  14. இந்திய தலைநகர் புதுடெல்லியில் இருந்து சென்னை சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இலங்கையை சேர்ந்தவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் விடயம் குறித்து தமிழக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பில் இந்திய ஊடகமொன்றில் கூறப்பட்டுள்ளதாவது, டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று (29) காலை போபால் வந்தது. அப்போது அந்த ரயிலின் தூங்கும் வசதி கொண்ட ஒரு பெட்டியில் வெளிநாட்டை சேர்ந்தவர் ஒருவரின் சடலம் காணப்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் பொலிஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்தவர் உடலில் எந்த காயமும் இல்லை. சடலத்தின் அருகே ஒரு கடவுச்சீட்டு மற்றும் ரயில் பயணச்சீட்டு என்பன மீட்கப்பட்டன. அதன் மூலம் …

  15. சுதந்திர தமிழீழம் எனும் ஈழத்தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. ஆனால் இந்தியாதான் தனது நிலைப்பாடடில் இருந்து மாறவேண்டும் என பேராசிரியர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது அமர்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொணடு உரையாற்றும் போதே இக்கருத்தினை அவர் முன்வைத்துள்ளார். இலங்கைய மையப்படுத்திய சீன - இந்திய வலுத்தளத்தில் இன்றைய சூழலில் தமிழர்களுக்கு இந்தியா தேவை என்பதற்கு மேலாக இந்தியாவுக்கு தமிழர்கள் தேவை என்ற நிலை ஏற்படுகின்றது. ஏற்பட்டுள்ளது. கலாச்சார் பண்பாட்டு ரீதியான உறவினைக் கொண்டுள்ள இந்தியாவுக்கு எதிராக தமிழர்கள் இல்லை என்பதனை இந்தியா புரிந்து கொள்ளவேண்டும். இத்தனை பெருந்துயரங்களுக்க…

  16. இனப்பிரச்சினை தீர்வு யோசனைகளில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் மற்றும் போர்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இராணுவ முகாம்கள் அகற்றப்படுவது ஆகிய முக்கிய விவகாரங்கள் தொடர்பில் இந்நாட்டின் பிரதான கட்சித் தலைவர்களான ரணில் விக்கிரமசிங்க, சோமவன்ச அமரசிங்க, சரத் பொன்சேகா, கரு ஜெயசூரிய, சஜித் பிரேமதாச ஆகியோர் தத்தமது நிலைப்பாடுகளை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அதற்கான தீர்மானக்கரமான காலம் இன்று வந்து விட்டது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆனந்த குமாரசுவாமி மாவத்தை புதிய நகர மண்டபத்தில் இன்று (30) நடைபெற்ற நவ சம சமாஜ கட்சியின் 34ம் வருடாந்த மகாநாட்டிலே, ஜனநாயகத்தின் குழப்ப நிலையும், தேசிய இனப்பிரச்சினையும் என்ற தலைப்பில் சிங்கள மொழியிலே சிறப்பு உரையாற…

  17. யாழ் நாவற்குழி பகுதி வீ ட்டில் இருந்த மேட்டார் சயிக்கிளை இராணுவ சிப்பாய் வலுக்கட்டாயமாக பெற்றுச் சென்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை காலை நாவற்குழியிலுள்ள வீட்டிற்றுச் சென்ற அப்பகுதியைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவர் மோட்டார் சைக்கிளைத் தருமாறு கோரி மோட்டார் சைக்கிளை பெற்றுச் சென்றதாகவும், காலை கொண்டு சென்றவர் நேற்று மாலை வரை மீளக் கொண்டுவரவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இராணுவ வீரர் சிவில் உடையில் வந்து மோட்டார் சைக்கிளை வேண்டிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த இராணுவச் சிப்பாய் மோட்டார் சைக்கிள் வாங்கிச் சென்றதற்கும், நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் சென்றவரை இராணுவத்தினர் இடைமறித்து சுட…

  18. பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது காதலியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புத்தளம் மதுரங்குளியிலுள்ள மேற்படி பெண்ணின் வீட்டிற்குச் இச்சம்பவம்இடம்பெற்றுள்ளது. இக்கான்ஸ்டபிள் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தவராவார். இது தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணைகளை நடாத்தி வருகின்றனர். http://www.saritham.com/?p=45879

  19. தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிரதான பாதுகாப்பு அதிகாரியாக செயற்பட்டவர் எனக் கருதப்படும் மண்ணிலவன் என்பவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (30) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபஷ் முன்னிலையில் சட்டமா அதிபர் இந்த குற்றப்பத்திகையை தாக்கல் செய்தார். குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பாதுகாப்பு பிரதானியாகவும் அவருடைய தனியான பாதுகாப்பு பிரிவின் கட்டளையிடும் அதிகாரியாகவும் செயற்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக…

  20. விடுதலைப்போராட்டத்தில் கணவன் 4ஆண்பிள்ளைகளும் உழைத்து இன்று அனாதைகளாகிப் போன நிலமையில் உதவிகோருகிறார் புஸ்பரதியம்மாவின் 4பிள்ளைகள் நாட்டுக்காக உழைத்தார்கள். புஸ்பரதியம்மாவின் கணவரும் விடுதலைப் போராட்டத்தில் இருந்தவர். தற்போது அம்மாவின் மகன் செந்தூரன் சிறையில் இருக்கிறார். தற்போது 14நாட்களுக்கு ஒருமுறை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறார். ஆயினும் எவ்வித முடிவுமின்றி சிறைவைக்கப்பட்டுள்ளார். புஸ்பரதியம்மா தனது மகன் செந்தூரனின் அடிப்படை மனிதவுரிமை வழக்குக் தாக்கல் செய்ய உதவிகோரியுள்ளார். வறுமையில் வாடும் தனது குடும்பத்துக்கு உதவுமாறு புஸ்பரதியம்மா புலம்பெயர் தமிழர்களுக்கு எழுதியிருக்கிறார். செந்தூரனின் அடிப்படை மனிதவுரிமை வழக்குக் தாக்கல் செய்ய இலங்கைரூபா 3…

    • 0 replies
    • 817 views
  21. சிறிலங்காவில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதென ( international crisis group) நெருக்கடிகளுக்கான அனைத்துலக குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையை அமெரிக்காவுக்கான சிறிலங்காத் தூதுர் நிராகரித்துள்ளார். தமிழர் தாயகத்தில் இராணுவமயப்படுத்தப்பட புறச்சூழலில் பெண்களின் வாழ்வு மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதென ஆய்வறிக்கை பெண்கள் வற்புறுத்தப்பட்ட பாலியல் தொழிலுக்கு உள்ளாக்கப்படுவதோடு பல்வேறு வகையான பாலியல் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாக குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் அமெரிக்காவின் washington times ஊடகம் அமெரிக்காவுக்கான சிறிலங்காத் தூதுவரின் இதனை கேள்வியாக முன்வைத்த போது நெருக்கடிகளுக்கான அனைத்துலக குழுவின் அறிக்கையை 100 வீதம் முற்றாக நிராகரிக்கின்றேன் என அமெ…

  22. யாழ். மாநகர சபையின் 2012ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் கடும் வாத பிரதி வாதங்களுக்கு மத்தியில் மூன்று மேலதிக வாக்குகளால் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. thx http://newjaffna.com

  23. கிளிநொச்சியில் அமையவுள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடக்கட்டுமானப் பணிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உடனடி நடவடிக்கை காரணமாகத் திறைசேரியில் 100 மில்லியன் ரூபா நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது ஆனால் இதுவரை எந்தவிதமான நிதி ஒதுக்கீடுகளும் செய்யப்படவில்லை என்று யாழ். பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கிளிநொச்சியில் அமையவுள்ள யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீட நிர்மாணப் பணிகள் மற்றும் இதர பணிகளுக்கென சுமார் 2 ஆயிரத்து 600 மில்லியன் ரூபா நிதி தேவையாக உள்ளது. இந்த நிலையில் 100 மில்லியன் ரூபா நிதியை திறைசேரி ஒதுக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதற்கென திறைசேரியால் எதுவித நிதியும் ஒது…

  24. (நவரத்தினம்) 'தமிழினத்தின் வரலாற்றில் நடைபெற்று முடிந்த துயரங்களும், துன்பங்களும், வேதனைகளும், சோதனைகளும் காலத்தால் மறக்க முடியாதவை. ஒவ்வொரு தமிழர்களின் மனங்களிலும் வலிகள் ஆறாத வடுக்களாக பதிந்திருக்கின்றன. இதன் உச்சம் தான் முள்ளிவாய்க்காலில் நடந்தேறியது. எனவே முள்ளிவாய்க்காலில் நடந்த தமிழினத்தின் பேரவலத்தினை நூல்களாக எழுதி வெளியிட வட – கிழக்கு இணைந்த எமது தாயகத்தின் எழுத்தாளர்களோடு புலம்பெயர்ந்து வாழும் கவிஞர்களும் முன்வரவேண்டும' என தமிழ்தேசிய கூட்டமைப்பின் வவுனியா நகரசபையின் உப தலைவர் எம்.எம்.ரதன் தெரிவித்தார். வவுனியா கலைச்சூரியர் அமைப்பின் அனுசரனையோடு இளம் கவிஞர் சிவானந்தராசா மலர் கதன் எழுதிய 'வைகறை ஒன்றில்|| என்னும் நூல் வெளியீட்டு விழா நேற்றைய தினம் …

  25. மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்;ட முன்னாள் அமைப்பாளரும் மக்கள் போராட்ட இயக்கத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளருமான தோழர் லலித் வீரராஜூற்கு யாழில் ஆபத்து இருந்ததை மக்கள் விடுதலை முன்னணி முற்கூட்டியே உணர்ந்திருந்தது என்று தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சந்திரசேகரன் அரசின் அராஜகமே லலித் வீரராஜை கடத்தியது என்று குற்றம் சாட்டியுள்ளார். மக்கள் போராட்ட இயக்கம் காணாமல் போனவர்களை விடுவிக்க கோரி இம்மாதம் ஒன்பதாம் திகதி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்றை நடத்தியது. அந்தப் போராட்டத்தை நடத்திவிட்டு ஊடக மாநாடு ஒன்றை நடத்த தயாராகிய பொழுது யாழ் அச்சுவேலிப் பகுதியில் வைத்து மக்கள் போராட்ட இயக்கத்திற்கு ஆதரவான யாழ்ப்பாணத்தை சேர்ந்த குகன் என்பவரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.