ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143353 topics in this forum
-
சிறிலங்காவில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதென ( international crisis group) நெருக்கடிகளுக்கான அனைத்துலக குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையை அமெரிக்காவுக்கான சிறிலங்காத் தூதுர் நிராகரித்துள்ளார். தமிழர் தாயகத்தில் இராணுவமயப்படுத்தப்பட புறச்சூழலில் பெண்களின் வாழ்வு மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதென ஆய்வறிக்கை பெண்கள் வற்புறுத்தப்பட்ட பாலியல் தொழிலுக்கு உள்ளாக்கப்படுவதோடு பல்வேறு வகையான பாலியல் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாக குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் அமெரிக்காவின் washington times ஊடகம் அமெரிக்காவுக்கான சிறிலங்காத் தூதுவரின் இதனை கேள்வியாக முன்வைத்த போது நெருக்கடிகளுக்கான அனைத்துலக குழுவின் அறிக்கையை 100 வீதம் முற்றாக நிராகரிக்கின்றேன் என அமெ…
-
- 0 replies
- 679 views
-
-
யாழ். மாநகர சபையின் 2012ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் கடும் வாத பிரதி வாதங்களுக்கு மத்தியில் மூன்று மேலதிக வாக்குகளால் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. thx http://newjaffna.com
-
- 2 replies
- 902 views
-
-
கிளிநொச்சியில் அமையவுள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடக்கட்டுமானப் பணிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உடனடி நடவடிக்கை காரணமாகத் திறைசேரியில் 100 மில்லியன் ரூபா நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது ஆனால் இதுவரை எந்தவிதமான நிதி ஒதுக்கீடுகளும் செய்யப்படவில்லை என்று யாழ். பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கிளிநொச்சியில் அமையவுள்ள யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீட நிர்மாணப் பணிகள் மற்றும் இதர பணிகளுக்கென சுமார் 2 ஆயிரத்து 600 மில்லியன் ரூபா நிதி தேவையாக உள்ளது. இந்த நிலையில் 100 மில்லியன் ரூபா நிதியை திறைசேரி ஒதுக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதற்கென திறைசேரியால் எதுவித நிதியும் ஒது…
-
- 1 reply
- 741 views
-
-
(நவரத்தினம்) 'தமிழினத்தின் வரலாற்றில் நடைபெற்று முடிந்த துயரங்களும், துன்பங்களும், வேதனைகளும், சோதனைகளும் காலத்தால் மறக்க முடியாதவை. ஒவ்வொரு தமிழர்களின் மனங்களிலும் வலிகள் ஆறாத வடுக்களாக பதிந்திருக்கின்றன. இதன் உச்சம் தான் முள்ளிவாய்க்காலில் நடந்தேறியது. எனவே முள்ளிவாய்க்காலில் நடந்த தமிழினத்தின் பேரவலத்தினை நூல்களாக எழுதி வெளியிட வட – கிழக்கு இணைந்த எமது தாயகத்தின் எழுத்தாளர்களோடு புலம்பெயர்ந்து வாழும் கவிஞர்களும் முன்வரவேண்டும' என தமிழ்தேசிய கூட்டமைப்பின் வவுனியா நகரசபையின் உப தலைவர் எம்.எம்.ரதன் தெரிவித்தார். வவுனியா கலைச்சூரியர் அமைப்பின் அனுசரனையோடு இளம் கவிஞர் சிவானந்தராசா மலர் கதன் எழுதிய 'வைகறை ஒன்றில்|| என்னும் நூல் வெளியீட்டு விழா நேற்றைய தினம் …
-
- 0 replies
- 619 views
-
-
மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்;ட முன்னாள் அமைப்பாளரும் மக்கள் போராட்ட இயக்கத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளருமான தோழர் லலித் வீரராஜூற்கு யாழில் ஆபத்து இருந்ததை மக்கள் விடுதலை முன்னணி முற்கூட்டியே உணர்ந்திருந்தது என்று தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சந்திரசேகரன் அரசின் அராஜகமே லலித் வீரராஜை கடத்தியது என்று குற்றம் சாட்டியுள்ளார். மக்கள் போராட்ட இயக்கம் காணாமல் போனவர்களை விடுவிக்க கோரி இம்மாதம் ஒன்பதாம் திகதி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்றை நடத்தியது. அந்தப் போராட்டத்தை நடத்திவிட்டு ஊடக மாநாடு ஒன்றை நடத்த தயாராகிய பொழுது யாழ் அச்சுவேலிப் பகுதியில் வைத்து மக்கள் போராட்ட இயக்கத்திற்கு ஆதரவான யாழ்ப்பாணத்தை சேர்ந்த குகன் என்பவரு…
-
- 0 replies
- 642 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விடுதலைப் புலிகள் மீதோ அல்லது தமிழீத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் மீதோ எதுவித குறையும் காணத் தயாராக நிலையும் புலம்பெயர் பெயர் தமிழ் சமூகத்துடனான அவர்கள் கொண்டிருக்கின்ற தொடர்புகளாலும்தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சிங்கள மக்கள் சந்தேகத்துடனேயே நோக்குகின்றனர் என பிரான்சுக்கான சிறிலங்காவின் தூதுவர் டயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார். பிரான்சின் அனைத்துலக வானொலிச் சேவையான RFI க்கு வழங்கிய செவ்வியிலேயே இக்கூற்றினை டயான் ஜெயதிலக முன்வைத்துள்ளார். இத்தகைய சூழலிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாக தூதுவர் டயான் ஜெயதிலக குறிப்பிட்டிருக்கின்றார். http://naathamnews.com/2011/12/30/sri-lanka-rfi/
-
- 0 replies
- 561 views
-
-
வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு யு.என்.எச்.சீ.ஆர் நிறுவனமே தடையாக உள்ளது என கைத்தொழில் மூதலீட்டு அமைச்சரும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான றிசாட் பதியுதீன் குற்றஞ்சாட்டினார். இதனால் யு.என்.எச்.சீ.ஆர் நிறுவனத்திற்கு எதிராக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். வடக்கில் மீள்குடியேற்றப்படும் முஸ்லிம்களை பழைய அகதி என்று பிரித்து யு.என்.எச்.சீ.ஆர் நிறுவனத்தினரால் எந்தவித நிவாரணமும் வழங்ப்படாதுள்ளது என அமைச்சர் றிசாட் தெரிவித்தார். இலங்கையில் பெரும்பான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் என்ற வேறுபாடு இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ள நிலையில், யு.என்.எச்.சீ.ஆர் நிறுவனம் மாத்திரம் ஏன் அகதிகளை பழைய …
-
- 0 replies
- 602 views
-
-
யாழ். மாவட்டத்தில் மக்களை மீளக் குடியமர்த்த வேண்டிய பகுதிகளில் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி எப்போது கிடைக்குமோ அப்போதே உடனடியாக மக்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று கிளிநொச்சியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அரச அதிபர் இவ்வாறு கூறினார்மண்டைதீவு, மாதகல், மாரீசன் கூடல், வயாவிளான் மற்றும் ஊறணி போன்ற இடங்களில் உள்ள மக்கள் இதுவரை மீளக் குடியேற்றம் செய்யப்படவில்லை. இப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் 1990களில் இருந்து இடம்பெயர்ந்து பல்வேறு இடங்களிலும் சிரமங்களின் மத்தியில் வாழ்ந்து வருக…
-
- 0 replies
- 619 views
-
-
இந்தியாவின் வெளியுற விவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஜனவரி நடுப்பகுதியில் இலங்கை வரவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இதன் போது அவர் இரு தரப்பினரையும் சந்தித்தித்துப் பேசவுள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமைச்சர் கிருஷ்ணாவின் இந்த விஜயம் அரசு தமிழ்க் கூட்டமைப்பு இடையே நடைபெறும் பேச்சுக்கள் தொடர்பாக இந்திய அரசு கொண்டுள்ள நிலைப்பாட்டை இருதரப்புக்கும் வலியுறுத்துவதாக அமையும் என அந்த வட்டாரங்கள் மேலும் கூறின. காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பகிர்வது குறித்த விவகாரத்தால் அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுகள் இக்கட்டான ஒரு நிலையில் உள்ளன. இனப்பிரச்சினைக்கான தீர்வில் காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது என அரசு பகிர…
-
- 4 replies
- 887 views
-
-
மேற்கு நாடுகளில் இருக்கும் சில விடுதலைப்புலிகள் அந்நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்கள் மீது அழுத்தங்களை கொண்டுவந்து இலங்கைக்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர் என இந்தியாவிலிருந்து வெளிவரும் டெக்கான் குரோனிக்கல் ஆங்கில பத்திரிகைக்கு மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய பேட்டியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். மேற்கத்திய நாடுகள் எப்போதும் காஷ்மீரையும் இலங்கை நிலவரத்தையும் பற்றி அந்நாடுகளின் பாராளுமன்றத்தில் ஆட்சேபக் குரல் எழுப்புகின்ற போதிலும், அவை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஈராக்கில் மேற்கத்திய வல்லரசு நாடுகளினால் மேற்கொள்ளப்படும் அக்கிரமங்கள் பற்றி வாய்திறந்து பேசாமல், மெளனம் சாதிக்கின்றனவென்று மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினைக்கு அரச…
-
- 1 reply
- 905 views
-
-
அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரல் குறித்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வாவும் பேச்சுநடத்தித் தீர்மானிப்பார்கள் என பேச்சுவார்த்தையில் பங்கெடுக்கும் அரசாங்கக் குழுப் பிரதிநிதியும், பாராளுமன்ற உறுப்பினருமான ரஜீவ விஜயசிங்க தெரிவித்தார். இரு தரப்புக்குமான அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜனவரி 17ஆம் திகதி பாராளுமன்றம் கூடும்போது ஆரம்பிக்கும். அடுத்த மாத இறுதி வாரத்தில் மூன்று நாட்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதென்றும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். எனினும், அடுத்த சுற்றுப் பேச்சுவார்த…
-
- 2 replies
- 654 views
-
-
பொறிக்குள் சிக்கப் போவது யார்? 2011ஆம் ஆண்டு முடிவுக்கு வருவதற்கு ஒருசில நாட்களே உள்ளன. இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு குறித்து அரசாங்கம் 2011ஆம் ஆண்டு இறுதிக்குள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துவிட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறி வந்தது நடைமுறைச் சாத்தியமற்றதாகியுள்ளது. அரசாங்க தரப்புடன் அடுத்தடுத்து நடத்தப்பட்ட பேச்சுக்கள் எதுவும் முன்னேற்றம் காணப்படாமலேயே முடிந்து போயுள்ளன. இரண்டு தரப்புமே எந்தவொரு கட்டத்திலேனும் இணக்கப்பாட்டை சந்திக்கக் கூடியளவுக்கு நெருங்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகள் நடைமுறைச் சாத்தியமற்றவை என்கிறது அரசாங்கம். அதேவேளை இலங்கை அரசாங்கமோ எதையும் விட்டுக் கொடுக்கின்ற நிலைப்பாட்டில் இல்லை என்கிறது தமிழ…
-
- 5 replies
- 1.6k views
-
-
மினுவாங்கொடை நகர சபை உறுப்பினர் தினேஷ் சந்திரசிறியின் சடலம் கொட்டதெனியாவ பகுதியிலுள்ள தியகம்பொல பாலத்தின் அடியிலிருந்து நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது. அவர் திட்டமிடப்பட்டு வேறொரு இடத்தில் கொலை செய்யப்பட்டு சடலத்தை பாலத்தின் அடியில் போடப்பட்டடிருப்பதாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அவரின் மோட்டார் சைக்கிளும் சடலத்துக்கு அருகில் காணப்பட்டது. சடலம் கண்டுபிடிக்கப்ட்டபோது மோட்டார் சைக்கிள் இயங்கிக் கொண்டிருந்தது. அவரின் செல்லிடத் தொலைபேசி, தலைக்கவசம், பாதணிகள் என்பன வெவ்வேறு இடங்களிலிருந்து மீட்கப்பட்டன. 28 வயதான தினேஷ் சந்திரசிறி, இரு பிள்ளைகளின் தந்தையாவார். இவர் நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான உபேக்ஷா ஸ்வர்ணமாலியின் மெய்ப்பாதுகாவலராக கடமையாற்றியவர். பின்னர் …
-
- 1 reply
- 793 views
-
-
நீதி மறுக்கப்பட்டு 50வருட தண்டனை பெற்ற மகசீன் சிறைச்சாலையில் வாடும் சிங்கராசா என்ற இளைஞர் தனது அம்மாவுக்கு உதவிகோரியுள்ளார். சிங்கராசாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினைக் கேள்வியுற்று இவரது தந்தையார் மரணத்தைத் தழுவினார். 18ஆண்டுகளுக்கு மேலான சிறைவாழ்வின் துயரம் எல்லாவற்றுக்கும் மேலாக வயதான அம்மாவுக்கும் யுத்தத்தில் கணவரை இழந்த அக்காவுக்கான வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்திக் கொடுக்க புலம்பெயர் உறவுகளிடமிருந்து ஆதரவினை வேண்டி கண்ணீரால் எழுதிய கடிதம் இது. ஈரமுள்ள இதயங்களே இந்த இளைஞனின் குடும்பத்திற்கு ஆதரவு தாருங்கள். நேசக்கரம் கொடுக்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய விபரம் வருமாறு :- Nesakkaram e.V Hauptstr – 210 55743 Idar-Oberstein Germany Shanth…
-
- 0 replies
- 1.3k views
-
-
இளம் குடும்பஸ்தரொருவரின் சடலமொன்று களனி ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். நேற்று (28-12-2011) காலை கடத்தப்பட்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கொழும்பு - 15, மோதரைப் பகுதியைச் சேர்ந்த 36 அகவையுடைய முரளிதரன் என சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கொழும்பு மருத்துவனையில் வைக்கப்பட்ட சடலம் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளித்துகப்பட்டள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது இவர் ஏழு வயது மகளுடைய தந்தையெனவும் நீண்ட காலமாக மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார் என்றும் தெரிய வருகின்றது. http://www.eeladhesa...ndex.php?option
-
- 0 replies
- 1.8k views
-
-
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி எடுத்துவரப்பட்ட சடலத்தையும் அதனுடன் கூட வந்த பதினொரு பேரையும் காணவில்லையென சுன்னாகம் பொலிஸிலும் புளியங்குளம் பொலிஸ் மற்றும் மனித உரிமைகள் ஆனைக்குழுவின் யாழ் அலுவலகத்திலும் முறையிடப்பட்ட செய்தி தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்படும் நபர் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவுடன் உரையாடினார். கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து சடலத்துடன் வந்த 11 பேரையும் கடத்தப்பட்டமை தொடர்பான சம்பவம் வெறும் கட்டுக்கதை என யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்தியாவில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படும் நபர் ஒருவரை கட்டுநாயகா விமான ந…
-
- 0 replies
- 1.2k views
-
-
(கிரிசன், கவிசுகி) கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி எடுத்துவரப்பட்ட சடலத்தையும் காணவில்லை அதனுடன் கூட வந்த பதினொரு பேரையும் காணவில்லையென சுன்னாகம் பொலிஸிலும் புளியங்குளம் பொலிஸ் மற்றும் மனித உரிமைகள் ஆனைக்குழுவின் யாழ் அலுவலகத்திலும் முறையிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மரணம் அடைந்து மூன்ற பிள்ளைகளி;ன் தந்தையின் சடலமும் அதனை எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணம் வந்தவர்களுமே கடந்த பத்து நாட்களாக காணாமல் போயுள்ளவர்களாகும். இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது: இந்தியாவில் உள்ள வைத்தியசாலையொன்றில் கடந்த 18 ம் ஆம் திகதி க.தனஞ்செயன் வயது 38 என்பவர் மரணம் அடைந்துள்ளார். இவருடைய சடலம் 19ம் திகதி நன்பகல் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு விமானம் …
-
- 4 replies
- 1.2k views
-
-
குருதி சிந்தும் நாள்கள் மீண்டும் வருவதைத் தமிழ் மக்களும், கூட்டமைப்பும் விரும்பவில்லை. ஆனால் சிங்கள அரசும், சிங்கள தலைவர்களும் அதனையே விரும்புகின்றனர் என்றே தெரிகிறது. மீளவும் தமிழ் மக்கள் அடக்கு முறைக்குள் உட்படுத்தி துன்புறுத்தவே சிங்கள அரசியல்வாதிகள் முயற்சிக்கிறார்கள். ஊடகவியலாளர்களை நேற்று சந்தித்து, உரையாடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளு மன்ற உறுப்பினர் சிறிதரன் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்துள்ளமை வருமாறு: தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளான வடக்கு கிழக்கு இணைப்பு, பொலிஸ், காணி அதிகாரம் உள்ளிட்ட தமிழ்த் தேசிய இனம் என்ற அடிப்படையில் எம்மை நாமே ஆளும் சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு தீர்வைத் தவிர வேறு எந்தத் தீர்வை…
-
- 2 replies
- 687 views
-
-
பூநகரி சங்குப்பிட்டியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை இடைமறித்த இராணுவம் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிக்க முற்பட்டு மோட்டார் சைக்கிள் சாரதியைப் படுகொலை செய்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வீதியில் நின்றிருந்த இராணுவம், வீதியில் பயணித்த குறித்த நபரை இடைமறித்து மோட்டார் சைக்கிளைத் தருமாறு கேட்டிருக்கின்றது. இந் நிலையில் அவர் அதற்கு உடன்பட மறுத்திருக்கின்றார். சம்பத்தினை அடுத்து குறித்த நபர் மீது இராணுவம் சரமாரியான துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருக்கின்றது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கின்றார். இந்தச் சம்பவம் தொடர்பில் அருகில் இருந்த இராணு…
-
- 0 replies
- 1.3k views
-
-
கிளிநொச்சி – சங்குபிட்டி – பூநகரி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்ததோடு மற்றுமொரு அதிகாரி படுகாயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்புஆராச்சி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. 18வது கெமுனு படை முகாமைச் சேர்ந்த படை சிப்பாய் ஒருவர் முகாமில் இருந்து தப்பியோடியதாகவும் அவரை சக இராணுவ வீரர்கள் துரத்திச் சென்று பிடித்து வந்ததாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். இவ்வாறு பிடித்து வந்து கொண்டிருந்த போது குறித்த சிப்பாய் சக இராணுவ வீரர் வசம் இருந்த துப்பாக்கியை எடுத்து சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டின்போது இராணுவ உப லெப்டினன் அதிகாரி ஒருவர் அவ்விடத்திலேயே உய…
-
- 0 replies
- 1k views
-
-
யாழில் இடம்பெறவிருக்கும் இந்தியக் கலாசார மையம் திறப்பு விழாவில் இந்திய இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்வும் நடைபெறவிருப்பதாக யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார். இதன் ஏற்பாடுகளை ஈழமக்கள் ஜனநாயக கட்சியும் இந்தியத் உயர்ஸ்தானிகராலயமும் செய்து வருவதாக திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெறவிருக்கும் இந்தியக் கலாசார மையம் திறப்பு விழாவில் இந்திய இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்வும் நடைபெறவிருப்பதாக யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார். இதன் ஏற்பாடுகளை ஈழமக்கள் ஜனநாயக கட்சியும் இந்தியத் உயர்ஸ்தானிகராலயமும் செய்து வருவதாக திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா …
-
- 1 reply
- 1.2k views
-
-
தற்போது புற்றுநோய் அதிகரிப்பிற்கு அதிகரித்த தொலைபேசிப் பாவனையே காரணம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் மூலமே இத்தரவினை வெளியிட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் உள்ள சனத்தொகை சுமார் இரண்டு கோடி. ஆனாலும் இரண்டு கோடியே பத்து இலட்சத்திற்கும் அதிகமான கையடக்கத் தொலைபேசிகள் பாவனையில் உள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டார். ஒருவரிடம் இரண்டு அல்லது மூன்றுக்கு மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் பாவனையில் உள்ளதாகவும் கையடக்கத் தொலைபேசியின் மூலம் தினமும் நீண்ட நேரம் கதைப்பதனாலேயே புற்றுநோய் ஏற்படக் காரணமாக அமைகின்றது எனவும் தெரிவித்துள்ளார். இதனையும் விட நாட்டில…
-
- 0 replies
- 620 views
-
-
புலம்பெயர்வாழ் தமிழ் மக்களே.! நாம் ஏதோ ஒரு வகையில் யாரோ ஒருவரிடம் அடிமையாகத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் அந்த வகையில் ஈழத்து சினிமா ஒன்று இருக்கிறதா ? இல்லையா ? ஒரு திரைப்படத்தின் மூலம் ஒரு இனத்தின் பிரச்சனையை உலக அரங்கிற்கு சுலபமாக எடுத்துச் செல்லலாம். எமக்கு என்று ஒரு சிறத்த அரசாங்கம் இருந்துள்ளது அதில் மக்களுக்கு வேண்டிய அனைத்து துறைகளும் இருத்துள்ளதை இத்த உலகம் நான்கு அறியும். ஒரு திரைப்படத்தில் ஒரு காட்சி எடுப்பதற்காக ஒரு கிராமத்தையோ அல்லது ஒரு நகரத்தையோ செட்டு போட்டு காட்சி அமைத்து படப்பிடிப்பு செய்வார்கள். படப்பிடிப்பு முடித்த பிற்பாடு செட்டை கலைத்து விடுவார்கள். அது போல் கலைக்கப்பட்டதா எமது மக்களின் விடுதலை போராட்டம். தமிழ் திரைப்படங்களை தயாரிப்ப…
-
- 2 replies
- 1.6k views
-
-
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்குள் 44 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் வாகனம் செலுத்தியதன் காரணமாகவே அதிக விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். நவம்பர் 27ம் திகதிமுதல் டிசம்பர் 27ம் திகதிவரை அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறிச் சென்ற 396 சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதேவேளை, தெற்கு அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்குள் 70 மில்லியனுக்கும் அதிகம் ஆதாயம் ஈட்டப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு மாதத்தில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 240,000 வாகனங்கள் பயணித்து…
-
- 0 replies
- 665 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மற்றும் யுத்த ஆயுதங்கள் சில முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு – இரனபளை – ஆனந்தபுரம் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் சிலவற்றை கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினர் மீட்டு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் கையளித்துள்ளனர். இதன்படி, 7.62 குண்டு – 320, 12.7 ரவை – 14, 81 மோட்டார் புகைக்குண்டு – 13, ஆர்.ஜீ.பி.ரவை – 04, GPMG ரவை – 30, 120 மோட்டார் ரவை – 07, 8 கிராம் குண்டு – 01, LTTE தயாரிப்பு குண்டு – 16, 81 மோட்டார் பியுஸ் – 49, குண்டு பியுஸ் – 18, 60 மோட்டார் குண்டு – 09, 120 மோட்டார் குண்டு – 02…
-
- 0 replies
- 847 views
-