ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராகத் தயாராகிறது கடுந்தொனியிலான தீர்மானம் – கொழும்பு ஊடகம் Tuesday, December 27, 2011, 5:53 t ஜெனிவாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேவையின் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான- கடுந்தொனியிலான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரும் முயற்சியில் மேற்கு நாடுகள் இறங்கியிருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடுமையான சொற்களில் அமைந்த இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மேற்கு நாடுகள், இதுபற்றி முன்னணி ஆசிய நாடுகளுடன் இராஜதந்திர ரீதியிலான ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளன. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் காணப்படும் மயக்க நிலை குறித்தும் மேற்கு நாடுகள் இராஜத்தந்திர ரீதியில் …
-
- 3 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவிற்கு நான் போக முடியாமல் உள்ளது. இலண்டனிற்கும் தான் நான் மட்டுமல்ல எனது மகனும் போக முடியாமல் உள்ளது. இதற்கு காரணம் பொன்சேகா என்னைப்பற்றி கூறிய வெள்ளைக்கொடி சம்பவமே என்று பொரிந்து தள்ளியுள்ளார் கோத்தாபாய. இத்தாலியில் இருந்து ஒரு பொன்சேகா ஆதரவு சிங்கள புத்திஜீவி ஒருவர் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கேட்டுள்ளார். பொன்சேகாவிற்கு மூன்றுவருட சிறை நியாயமற்றது எனவும் கூறியுள்ளார். இதன் போது ஆட்திரமடைந்த கோத்தா; உங்களைப்போல் நான் மின்னஞ்சல் மூலம் போர் செய்பவன் அல்ல நான் களத்தில் நின்று போராடினேன் விடுதலைப்புலிகளை ஒழித்தேன் அப்படிப்பட்ட நான் இன்று வெளி நாடுகளுக்கு போகமுடியாது செய்துவிட்டார் பொன்சேகா அவருக்கு மூன்று வருடமல்ல 10 வருடம் சிறையில் போட்டிருக்க வேண்டும் என ஆவே…
-
- 12 replies
- 2.2k views
-
-
சர்வதேசத்தையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் திருப்தி படுத்தும் நோக்கில் அரசாங்கம் அதிகாரப்பகிர்வினை மேற்கொள்ளக் கூடாது என மின்வலு எரிசக்தி அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஏதேனும் அதிகாரப்பகிர்வு அமுல்படுத்தப்பட வேண்டுமாயின் அது மக்களுக்காக மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகாரப் பகிர்வு குறித்து உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தமது எல்லையை மீறி பரிந்துரை செய்துள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அதிகாரப் பகிர்வு என்பது அரசியல் விவகாரம் என்றும், அது குறித்து உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு கருத்து வெளியிட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆணைக்குழுவின் அறிக்க…
-
- 1 reply
- 1.1k views
-
-
உலகின் பயங்கரவாதத்தை முற்றாக இல்லாது ஒழித்து இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்தியது போன்று ஆசிய பிராந்தியத்தை பாதுகாக்கும் பொறுப்பும் இலங்கை பாதுகாப்புப் படையினரிடம் உள்ளதாக மாலைத்தீவு ஜனாதிபதி மொஹம்மட் நேற்று தியத்தலாவையில் தெரிவித்தார். பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்திவிட்டோம் என்று இலங்கை பாதுகாப்புப் படையினர் ஓய்வில் இருக்க முடியாது என்று தெரிவித்த அவர், இலங்கையில் சமாதானத்தை நிலைத்திட செய்திடும் அதே சமயம், இந்த பிராந்தியத்தில் காணப்படும் பயங்கரவாதத்தை ஒழிக்கும் பாரிய நடவ டிக்கைகளுக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மாலைத்தீவு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார். தியத்தலாவையிலுள்ள இலங்கை இராணுவ அகடமியில் இரண்டரை வருடகால பயிற்சிகளை முடித்துக்…
-
- 8 replies
- 858 views
-
-
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு திட்டம் ஒன்றை முன்வைப்பதில் ஏற்பட்டுள்ள கால தாமதத்துக்கு தமிழர்களே பொறுப்பு சொல்ல வேண்டும் என இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புலம்பெயர்ந்த மற்றும் இலங்கையிலுள்ள சில தமிழ் மக்களே தீர்வுத் திட்டம் கால தாமதமாவதற்கு காரணமாய் உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். இந்தக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதனால் பரந்து பட்டவர்களினால் யோசனைத் திட்டங்கள் ஏற்றக்கொள்ளக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் தீர்வுத் திட்டமொன்றை பெற்றுக் …
-
- 1 reply
- 693 views
-
-
காட்டிக் கொடுக்கும் கறி வேப்பிலைகளை கடவுள் மன்னிக்கட்டும் தீர்வுக்குத் தலையாட்டினால் சோழர்காலக் கொடியையும் மாற்றச் சொல்லுவர் -மனோ பொலிஸ், காணி அதிகாரங்கள் இல்லாத தீர்வைத் திணிக்க முயல வேண்டாம் என்றும், போர் நடந்த வேளையில் உருவாக்கப்பட்ட இராணுவ முகாம்களை மேலும் கொண்டு நடத்தி தமிழ்ப் பிரதேசங்களில் இராணுவ ஆட்சி நடத்த வேண்டாம் என்றும் தமிழ்க் கட்சிகள் ஒருமித்த குரலில் சொல்வது இன்று தமிழ் மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இதுவே அரசிற்கு உரிய பதிலடி. இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.பொலிஸ், காணி, இராணுவமயம் ஆகியவை தொடர்பான தமிழர் நிலைப்பாடுகளுக்கு அரசு புலி முத்திரை குத்துகின்றது. அரசின் இந்த புலி முத்திரை கொள்கையை ஒருபோதும் நாம் …
-
- 0 replies
- 1.1k views
-
-
விடுதலைப் புலிகளைப் பற்றி இப்போது அதிகம் பேசத் தொடங்கியுள்ளது யார்? என்று ஒரு ஆய்வை நடத்தினால் அதற்கான பதில் தமிழ் மக்களாக இருக்க முடியாது. 2009 மே மாதம் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர் விடுதலைப் புலிகள் பற்றிய பேச்சு தமிழ் மக்களிடையே குறைந்து போய்விட்டது. ஆனால் அரசாங்கமோ புலிகளை மறக்கச் செய்ய வேண்டும் என்று கூறிக் கொண்டே, அவர்களை அடிக்கடி நினைவூட்டிக் கொண்டிருக்கிறது. இப்போது எதற்கெடுத்தாலும் விடுதலைப் புலிகளுடன் ஒப்பிட்டுப் பேசுகின்ற வழக்கம் அரசாங்கத்தின் முக்கிய தலைமைகளுக்கு வந்திருக்கிறது. அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடுதலைப் புலிகளுடன் ஒப்பிட்டுப் பேசத் தொடங்கியுள்ளது அரசாங்கம். கடந்தவாரம் அலரி மாளிகையில் ஊடக ஆசியர்களைச் சந்தித்துப் பேசி…
-
- 2 replies
- 1.9k views
-
-
புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் கைது – சயனைட் அருந்தியும் காப்பாற்றப்பட்டார் - [ சனிக்கிழமை, 24 டிசெம்பர் 2011, 09:08 GMT ] [ கார்வண்ணன் ] விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் கொழும்பு பிரிவின் தலைவர் உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்கள் சிறிலங்காவின் தீவிரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பிரதான சந்தேகநபர் தெமட்டகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும், அப்போது சயனைட் உட்கொண்ட அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் மருத்துவர்களால் காப்பாற்றப்பட்டதாகவும் தீவிரவாத தடுப்புப் பிரிவு காவல்துறை கூறியுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் சிறிலங்கா காவல்து…
-
- 25 replies
- 3.5k views
-
-
சிறீலங்காப் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இறுதிக்கட்டப் ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் போது சிறிலங்காப் படையினரால் இழைக்கப்பட்ட கொடூரங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக போதுமானளவு விசாரணைகள் நடத்தப்படவில்லை என கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட் தெரிவித்துள்ளார். நேற்று (27-12-2011) சிறிலங்கா அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பது குறித்து கனடிய ஊடகங்களிடம் பேசியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். உலக நாடுகளில் இடம்பெறும் மனித குலத்திற்கெதிரான செயற்பாடுகள் குறித்து எமது நாடு வாய்மூடி மௌனீகளாக இருக்கப் போவதில்லை. சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து நாங்கள் திகைப்படைந்துள்ளோம். போர்க்குற்றம் குறித்து சிறிலங்கா பொறுப்புக் கூறப்படவில்லை. அங்கு அர்த்தமுள…
-
- 1 reply
- 885 views
-
-
யாழ். வல்வெட்டித்துறை கடற்றொழிலாளர்கள் தங்களை ரோலரில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டுமென்பதுடன் தங்களது ரோலர்ப் படகுகளிலிருந்த கடற்றொழில் உபகரணங்களை யாழ். மாவட்ட நீரியல்வளத்துறை திணைக்களம் கையகப்படுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று புதன்கிழமை யாழ். வல்வெல்ட்டித்துறையிலிருந்து மூன்று பஸ்களில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடற்றொழிலாளர்களின் போராட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து நீரியல்வளத்துறைப் பணிப்பாளர் ஆர்.ரவீந்திரனுடன் பேச்சுவாத்தையில் ஈடுபட்டார். 'தென்பகுதி கடற்றொழிலாளர்கள் ரோலர் செய்யும்போது நாங்கள் ஏன் செய்யமுடியாத…
-
- 0 replies
- 1k views
-
-
http://imageshack.us/photo/my-images/269/ns129a1.jpg/ “Tamil Tigress” is a 320 page book released this year by the Australia –based publishing house, Allen& Unwin. The book has a picture of an armed female guerilla fighter on the cover along with the strap line “My story as a child soldier in Sri Lanka’s bloody civil war”. It is written by a former member of the Liberation Tigers of Tamil Eelam(LTTE)under the pseudonym Niromi de Soyza. The book has reportedly made quite a splash in Australia and New Zealand where it is available at book shops. The Australian Ministry for the Arts and the Australian Arts council have selected it for their 2011 “Get Reading! Campa…
-
- 12 replies
- 3.6k views
-
-
யாழ் வல்வெட்டித்துறை கடற்றொழிலாளர்கள் தங்களை றோலரில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரி இன்று நண்பகல் யாழ் பிராந்திய நீரியல் வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிங்களவனுக்கு ஒரு சட்டம் எங்களுக்கு ஒரு சட்டமா? நாங்கள் றோலரில் மீன்பிடிக்க கூடாது தென்பகுதி கடற்றொழிலாளர்கள் றோலரில் மீன்பிடிக்கலாம் என உங்கட அரசாங்கம் எங்களை ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என அலையலையாய் கொதித்து எழுந்தனர் வல்வெட்டித்துறை கடற்றொழிலாளர்கள். எங்கட றோலர் கடல்உபகரணங்களை எங்களின் அனுமதியின்றி ஏன் பறிமுதல் செய்தீர்கள் மீனவர்கள் கொதித்து எழுந்துனர். இந்த மீனவ்ரகளின் பிரச்சனையை அரசியலாக்கி அதில் அரசியல் இலாபம் தேட சில அரசியல்வாதிகள் முற்படுவதாக முன்னாள் நாடாளு மன்ற உறுப்பின…
-
- 0 replies
- 1.1k views
-
-
மரக்கறி மற்றும் பழங்களை ஏற்றிச் செல்ல பிளாஸ்டிக் கூடைகளை இலகுவாக பெற்றுக் கொடுக்கும் முறை தொடர்பில் ஆலோசனை நடத்தி வருவதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தெரிவித்தார். இது குறித்த விவசாய துறை அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சின் செயலாளர் சுனில் எஸ்.சிறிசேன தெரிவித்தார். கடன் அடிப்படையில் விவசாயிகளுக்கு பிளாஸ்டிக் கூடைகளை பெற்றுக் கொடுக்கும் திட்டத்தை விஸ்தரித்தல் தொடர்பாக பேச்சுவார்த்தையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அடுத்த மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் பிளாஸ்டிக் கூடைகளை உபயோகிப்பது கட்டயமாக்கப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னர் நிவாரணம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுனில் எஸ்.சிறிசேன தெர…
-
- 0 replies
- 707 views
-
-
சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச நாடுகளாலும், புலம்பெயர் தமிழர்களாலும் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகளுக்கு உங்களின் பதில் என்வென்று கேட்டபோது, நடந்தவற்றையும், பழையனவற்றையும் கிளறாது, புதிய இலங்கையைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என சிறிலங்கா அரச பிரதிநிதிகள் தங்களிடம் கூறியதாக ஒஸ்றேலியாவின் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் Maria Vamvakinou அவர்கள் தெரிவித்துள்ளார். http://naathamnews.com/2011/12/28/australian-delegation/
-
- 0 replies
- 498 views
-
-
டிசம்பர் 14 முதல் 17 வரை நடைபெற்று முடிந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மூன்றாவது அமர்வு குறித்து நா.த.அரசாஙகத்தின் பிரதமர் அலுவலகத்தால் உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையொன்று 28-12-2011 புதன்கிழமை வெளியிட்ப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் முழுவிபரம் : http://naathamnews.com/2011/12/28/tgte-eelam/
-
- 0 replies
- 675 views
-
-
மனித உரிமை விவகாரங்களில் கனடா முன்னுதாரணமாக திகழவேண்டும் என Amnesty International கனடாவுக்கான செயலர் Alex Neve அவாகள் தெரிவித்துள்ளார். உலகளாவியரீதியில் மனித விவகாரங்களில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்களை கவனத்தில் கொண்டு கனடா காத்திரமான பங்கினை 2012ல் ஆற்ற வேண்டும் என Alex Neve அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். http://naathamnews.com/2011/12/28/canada-srilank/
-
- 0 replies
- 417 views
-
-
சிறிலங்காவின் உட்கட்டுமானத்திற்கு 22 மில்லியன் யூறோக்களை பிரான்ஸ் வழங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் டிசம்பர் 20ம் திகதி சிறிலங்காவுக்கான பிரான்ஸ் தூதுவர் Christine Robichon மற்றும் சிறிலங்காவின் நிதிமையச் செயலருக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக சிறிலங்காவுக்கான பிரென்சு தூதரகத்தின் உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://naathamnews.com/2011/12/27/srilankafranc/
-
- 0 replies
- 317 views
-
-
இன்று காலை கீரிமலையில் சடலத்தை வைத்துக் கொண்டு பெண்கள் சுடலைக்காக ஆவேசமாக நடாத்திய போராட்டத்தில் சுடலையை மறித்தவர்கள் அனைத்தையும் கைவிட்டுப் பின்வாங்கினர். முழுக் காணொளி வலிகாமம் வடக்கிலுள்ள கீரிமலை மயானத்தை பாவனைக்கு விடுமாறு கோரி பொதுமக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை முதல் அம்மயானம் பொதுமக்களின் பாவனைக்கு விடப்பட்டுள்ளது. கீரிமலை மயானத்தை பாவனைக்கு விடுமாறு கோரி கீரிமலைச் சந்தியில் ஒன்றுகூடிய பொதுமக்கள் மரணமடைந்த ஒருவரின் சடலத்துடன் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கீரிமலை மயானம் பாவனைக்கு விடப்பட்டதைத் தொடர்ந்து குறித்த சடலம் அம்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. http://newjaf…
-
- 2 replies
- 1.2k views
-
-
தமிழர்களுடைய கலை, கலாசார, பாரம்பரியங்களைப் பறைசாற்றும் விதமாக எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள யாழ்ப்பாணத் திருவிழா-பொங்கல் 2012 நிகழ்வில் நடைபெறவுள்ள போட்டிகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. யாழ் மாநகரசபை அனுசரணையுடன் நடைபெறவுள்ள இந்த விழாவில் நடைபெறவுள்ள போட்டிகள் தொடர்பான விபரங்கள், மாநகரசபை மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை(27-12-2011) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கமளிக்கப்பட்டது. யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாநகரசபை உறுப்பினர் விஜயகாந்துடன், விழா ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த செஞ்சொற் செல்வர் இரா.செல்வவடிவேல் மற்றும் ஊடகவியலாளர் கோ.றுஷாங்கன் ஆகியோர் கலந்துகொண்டு போட்டிகள் தொடர்பான விபரங்களை…
-
- 0 replies
- 562 views
-
-
சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் அடங்கலாக உச்சமட்ட அதிகாரப்பகிர்வு மிக அவசியம். குறிப்பிட்ட காலப்பகுதியை மாத்திரம் அடிப்படையாக வைத்து விசாரணைகளை மேற்கொண்ட நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைக்கு முழுமையான தீர்வுகிட்டாது. இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹஸன் அலி நேற்று உதயனுக்குத் தெரிவித்தார்.முஸ்லிம்களின் பிரச்சினைகளை முழுமையாக ஆராய தனியான ஆணைக் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகள் என்பது இன்று,…
-
- 1 reply
- 716 views
-
-
சிறிலங்கா அரசினால் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள இந்திய அரசு, மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது குறித்து உறுதியான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசு எடுக்கும் என்று நம்புவதாகக் கூறியுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியான பின்னர் அதுபற்றி இந்தியா முதல் முறையாக தனது கருத்தை தெரிவித்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விஸ்ணு பிரகாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்தியாவின் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். “நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை இந்தியா இன்னமும் ஆய்வு செய்கிறது. ஆனால் முதற்கட்டமாக சில கருத்துகளை பகிர்ந்து கொள்ள முடியும். நல்லிணக்க ஆணைக்குழு…
-
- 9 replies
- 1.3k views
-
-
மஹாராஜா ஊடக நிறுவனம் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தா தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் சிரச தொலைக் காட்சி செயற்பட்டதாக கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார். தமது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். இந்த முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்திருந்தனர். சிறிகொத்தா தாக்குதல் சம்பவத்திற்கும் மஹாராஜா ஊடக நிறுவனத்திற்கும் இடை யில் ஏதேனும் தொடர்பு காணப்படுகின்றதா என்பது குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். http://www.saritham.com/?p=45504
-
- 1 reply
- 601 views
-
-
இலங்கை இராணுவ வரலாற்று நூலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பற்றி, புதிதாக எழுதப்படும் மகாவம்ச அத்தியாயங்களிலும் சேர்க்கப்படமாட்டார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை வரலாற்று நூலான மகாவம்சத்தில் புதிதாக மூன்று பகுதிகளை சேர்க்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளார். அந்தவகையில், இலங்கையின் 30 ஆண்டுகாலப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஆற்றிய பங்களிப்பை மையப்படுத்தியதாக மகாவம்சத்தின் புதிய பகுதிகள் சேர்க்கப்படவுள்ளன. எனினும், மகாவம்சத்தின் புதிய பகுதிகளில் சரத் பொன்சேகா பற்றிய எந்தக் குறிப்புகளும் இடம்பெறமாட்டாது என்று இலங்கையின் கலாசார அமைச்சு வட்டாரங்கள் …
-
- 4 replies
- 692 views
-
-
க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் மாணவர்கள் தோற்றாத பாடங்களுக்கும் பெறுபேறுகள் கிடைத்திருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரியல் பிரிவுப் பாடங்களுக்குத தோற்றிய மாணவர்கள் சிலருக்கு வேறு பாடங்களுக்கான பரீட்சைப் பெறுபேறு கிடைத்திருப்பதாக ஜே.வி.பியிலிருந்து பிரிந்து சென்ற மக்கள் போராட்ட இயக்கம் நேற்று தெரிவித்தது. இவ்வியக்கத்தின் இணைப்பாளரும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளருமான துமிந்த நாகமுவ இது தொடர்பாக கூறுகையில், இத்தகைய குழப்பங்கள் நாட்டின் பல பாகங்களிலும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். http://www.saritham.com/?p=45558
-
- 1 reply
- 730 views
-
-
பொலிஸ், காணி அதிகாரங்கள் இல்லாத தீர்வை திணிக்க முயல வேண்டாம் என்றும் போர் நடந்த வேளையில் உருவாக்கப்பட்ட இராணுவ முகாம்களை மேலும் கொண்டு நடத்தி தமிழ் பிரதேசங்களில் இராணுவ ஆட்சி நடத்த வேண்டாம் என்றும் தமிழ் கட்சிகள் ஒருமித்த குரலில் சொல்வது இன்று தமிழ் மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இதுவே அரசாங்கத்திற்கு உரிய பதிலடி என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். முன்னணியின் தேசிய அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான எஸ். ராஜேந்திரனின் ஏற்பாட்டில் வட கொழும்பு செயல்பாட்டாளர்கள் மத்தியில் மட்டக்குளியில் நடைபெற்ற நத்தார் தின நிகழ்வில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, பிரிக்கப்படாத இலங்கைக்குள்ளே கௌரவமான தீர்விற்கு தமிழர்கள் தயார்.…
-
- 1 reply
- 803 views
-