ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
இலங்கையை சர்வதேசத்தின் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்நிறுத்த ஐ.நா.உட்பட பல சர்வதேச நாடுகளின் முயன்று வருகின்றதுடன், நவநீதம்பிள்ளை என்பவர்களை நாட்டுக்குள்ளும் அனுமதிக்கக் கூடாது என குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறுகையில்: நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை எத்தகைய தன்மையினை கொண்டிருந்தாலும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்துவதே ஐ.நா. உள்ளிட்ட மேற்குலக சக்திகளின் நோக்கமாகும். எனவே நவநீதம்பிள்ளை போன்றவர்களை நாட்டுக்குள் அரசு அனுமதிக்கக் கூடாது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர குறிப்பிட்டார். நாட்டிற்கு எதிரான சர்வதேச செயற்பாடுகள் தீவிரம் கண்டுள்ளன. இன்று இலங்கையை …
-
- 0 replies
- 698 views
-
-
சர்வதேச சமூகத்தால் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அமையும் என ஐரோப்பிய பாராளுமன்ற பாதுகாப்புச் செயலாளர் ஜெப்ரி வேன் ஒடன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளும் கடப்பாட்டை அவர்களிடமே ஒப்படைத்தல் சிறந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய எதிர்பார்ப்புக்களுடன் கூடிய பொருளாதார வளர்ச்சியை இலங்கையில் காணக்கூடியதாக உள்ளதென அவர் தெரிவித்துள்ளார். தனது இலங்கை விஜயத்தின் போது இலங்கையில் அவதானித்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஐரோப்பிய பாராளுமன்ற பாதுகாப்புப் பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்…
-
- 0 replies
- 759 views
-
-
யப்பானிற்காக உழவு பார்த்த ஒஸ்ரின் பெனாண்டோ Monday, December 12, 2011, 4:14 இன்நாள் பாதுகாப்பு அமைச்சின் செயலருக்கு ஆப்பு வைத்து வருகின்றார் முன் நாள் பாதுகாப்பு செயலர். முன் நாள் பாதுகாப்பு செயலராக பணி புரிந்தவர் ஒஸ்ரின் பெனாண்டோ, இவர் சிறிலங்கா நிர்வாக சேவையின் தரம் ஒன்று அதிகாரியுமாவார். ரணில் அரசாங்கத்தில் பாதுகாப்பு செயலராக இருந்த இவர் அதன் பின்னர் யப்பான் நாட்டின் சர்வதேச ஒத்துழைப்பிற்கான அமைப்பில் JAICA பணிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் ஊடாகவே சிறிலங்காவின் வடக்கு,கிழக்கின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஜப்பான் இரகசியத் தகவல்களை திரட்டி வந்துள்ளது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிங்கள வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. வடக்கு, கிழக்கின் பாது…
-
- 2 replies
- 664 views
-
-
கனடா மனிதவுரிமை சார்பான விடயத்தில் தொடர்ந்தும் மிகக் கடுமையாகவே நடக்கும்!- அமைச்சர் பால் கோசால் Monday, December 12, 2011, 4:13 கனடியப் பிரதமர் ஹார்ப்பர் தலைமையிலான அரசானது மனிதவுரிமைகளை, மதவுரிமைகளை மதிக்காத எவரையும் இனிவரும் காலங்களில் கண்டிப்பான அணுகுமுறையுடனே நடாத்தும் என கனடிய விளையாட்டுத்துறை அமைச்சரான பால் கோசல் கனடிய மனிதவுரிமை மையத்தால் நடாத்தப்பட்ட வருடாந்த நிகழ்வில் பேசும் போது குறிப்பிட்டார். கனடிய கொன்சவேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள். மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் ஆகியோருடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் பேசும் போது இலங்கைத் தமிழர்கள் விவகாரம் தொடர்பாக கனடியப் பிரதமர் அக்கறை செலுத்துகிறார் என்பதை தாங்கள் அண்மைய காலங்களி…
-
- 0 replies
- 413 views
-
-
அனைத்து குடிமக்களினதும் விபரங்களை திரட்டுகிறது சிறிலங்கா இராணுவம் Monday, December 12, 2011, 4:18 சிறிலங்காவில் உள்ள அனைத்து குடிமக்களினதும் விபரங்களை திரட்டும் நடவடிக்கை ஒன்றை சிறிலங்கா இராணுவம் மேற்கொள்ளவுள்ளது. புவிசார் குடிமக்கள் தகவல் முறைமைத் திட்டம் என்ற பெயரில் சிறிலங்கா இராணுவம் 2.5 மில்லியன் ரூபா செலவில் இந்த தகவல்களை திரட்டவுள்ளது. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ், ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான நிலையமும் சிறிலங்கா இராணுவமும் இணைந்து இந்த தகவல் திரட்டும் நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளன. தென்கிழக்காசியாவிலேயே சிறிலங்காவில் தான் இது முதல் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. சிறிலங்காவில் வாழும் அனைத்துக் குடிமக்கள் பற்றிய தகவல்களையும் …
-
- 0 replies
- 379 views
-
-
யாழ்ப்பாணத்தில் புதிய சிறைச்சாலை அமைக்கப்பட உள்ளது 12 டிசம்பர் 2011 யாழ்ப்பாணத்தில் புதிய சிறைச்சாலை ஒன்று அமைக்கப்பட உள்ளது. புதிய சிறைச்சாலை அமைப்பது தொடர்பான ஆரம்ப நிகழ்வுகள் அண்மையில் யாழ்;ப்பாணத்தில் நடைபெற்றது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர இந்த நிகழ்விற்கு தலைமை தாங்கினார். புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ள சிறைச்சாலையில் ஆயிரம் கைதிகளை தடுத்து வைக்க முடியுமு; என தெரிவிக்கப்படுகிறது. தற்போது யாழ்ப்பாணத்தில் நான்கு வாடகை வீடுகளில் சிறைச்சாலை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 560 மில்லியன் ரூபா செலவில் இந்த புதிய சிறைச்சாலை அமைக்கப்பட உள்ளது. யாழ்ப்பாணம் பன்னை பிரதேசத்தில் இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில…
-
- 0 replies
- 463 views
-
-
[ ஞாயிற்றுக்கிழமை, 11 டிசெம்பர் 2011, 12:42.47 PM GMT ] ஐக்கிய நாடுகள் சபையினால் உலகில் மனித உரிமையைப் பேணுவதற்காக பல்வேறு குழுக்கள் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் Treaty Bodies (ஒப்பந்த அமைப்பு) எனச் சொல்லப்படும் அமைப்பு பல குழுக்களை உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது. இவ் அமைப்பின் கீழ் மனித உரிமைக் குழு சித்திரவதைக்கான குழு இனவேறுபாடுகளைக் களைவதற்கான குழு பெண்கள் மீதான வேறுபாடுகளைக் களைவதற்கான குழு போன்று பல குழுக்கள் உள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகள் கைச்சாத்திட்ட ஐ.நா. சாசனங்களை ஒழுங்காக நடைமுறைப்படுத்தியுள்ளனவா மதிக்கின்றனவா என்பதைப் பரிசீலிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. இக் குழுக்கள் அவற்றின் தன்மைகளைப் பொறுத்து தனிப்பட்ட முறைப்பாடுகள் பொது…
-
- 3 replies
- 755 views
-
-
விலகிச் செல்லும் சர்வதேச நேசக்கரம்! -வி.தேவராஜ் அமெரிக்க உலக வர்த்தக மையம் தாக்கப்பட்ட 9/11 உலக ஒழுங்கமைப்பில் பெரும் மாறுதல்களை கொண்டு வந்தது. அந்த மாறுதல்களுக்கு இலங்கை வாழ் தமிழர்களும் பலிக்கடா ஆக்கப்பட்டு அநாதைகளாக்கப்பட்டனர். இடையில் முள்ளிவாய்க்கால் போருடன் தமிழ் மக்களை நோக்கி சர்வதேசத்தின் கரங்கள் நீண்டன. சர்வதேசம் நீட்டிய அந்தக் கரங்கள் தமிழ் மக்களை அரவணைக்க போவதாகவே இலங்கை வாழ் தமிழ் மக்களும், புலம்பெயர் தமிழ் மக்களும், மனிதவுரிமை ஆர்வலர்களும் நம்பினர். இந்த நம்பிக்கையிலும் தற்பொழுது மண் விழுந்துள்ளது. உலக வர்த்தக மையத் தாக்குதலையடுத்து உலக ஒழுங்கில் ஏற்பட்ட மாற்றம் போல் தற்பொழுது அமெரிக்க இந்திய கூட்டுடன் சீனாவுடன் தொடங்கப்பட்டுள்ள பனிப்போருக்குள்…
-
- 0 replies
- 735 views
-
-
மனித உரிமை மீறல் விவகாரம் ஐ.நாவில் விவாதத்துக்கு வருமா? ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ள, நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழுவின் அறிக்கையையும் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவின் அறிக்கையையும் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் ஒரேசமயத்தில் விவாதத்துக்கு எடுப்படுவதை தான் ஆதரிக்கிறார் என்று நவிப்பிள்ளை (நவனீதம்பிள்ளை) தெரிவித்துள்ளார். ஐ.நா. தொடர்பான செய்திகளை வெளியிடும் "இன்னர் சிற்றி பிரஸ்" இணையத்தின் செய்தியாளரிடம் பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரான நவிப்பிள்ளை அவ்வாறு கூறியபோதும், அறிக்கைகளை மனித உரிமைகள் சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்கான பணிகள் அவசரமாக நடப்பதாகத் தெரியவி…
-
- 1 reply
- 810 views
-
-
முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் பெயர் இலங்கை இராணுவ வரலாற்றில் இருந்தும் அகற்றப்பட்டுள்ளதாகவும், அவர் இனிவரும் காலத்தில் முன்னாள் இராணுவத்தளபதி என்ற பதவி நிலைக்குள் உள்ளடங்கமாட்டார் என இராணுவப் பேச்சாளார் பிரிகேடியர் நிஹால் ஹப்பு ஆராச்சி தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போரின்போது சரத் பொன்சேகா மேற்கொண்ட நடவடிக்கைகளும் கருத்திற்கொள்ளப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு இராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து இது நடைமுறைக்கு வந்துள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளார் தெரிவித்துள்ளார். http://www.seithy.co...&language=tamil
-
- 10 replies
- 1.1k views
-
-
வடபுலத்தவர்களின் உழைப்பு வெளியே போகிறது பாரீர்! அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, ஜனாதிபதித் தேர்தலின்போது இரு விடயங்களை முன்வைத்தார். அதில் ஒன்று ‘எங்களால் முடி யும்’ மற்றையது ‘மாற்றத்தை ஏற்படுத்துவோம்’ இவ்விரு விடயமுமே அவரை வெள்ளை மாளிகையில் அமர்த்தியது. அமெரிக்க மக் கள் மாற்றத்தை விரும்புபவர்கள். மாற்றம் என்பது மிகவும் முக்கி யமானது. அதேநேரம் நேரான சிந்தனையும், எங்களால் முடியும் என்ற நம்பிக்கையும் வாழ்க்கையில் வெற்றி நடைபோடுவதற்கு மிகவும் அவசியமானது. இந்த இரண்டு கருத்துக்களும் அமெரிக்க மக்களின் சிந்தனையைத் தூண்டிவிட அதில் நிறம், மதம் என்பன அடிபட்டுப்போக ஒபாமா, அமெரிக்காவின் ஜனாதிபதியாகினார். இதை இவ்விடத்தில் கூறிய தன் நோக்கம் யாது? என்று நீங்கள் கேட்கலாம்…
-
- 14 replies
- 2k views
-
-
சிறிலங்காவின் வடக்கு,கிழக்கின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஜப்பான் இரகசியத் தகவல்களை திரட்டி வந்துள்ளது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிங்கள வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. வடக்கு, கிழக்கின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் அரச அதிகாரி ஒருவரினால் ஜப்பானுக்கு அனுப்பப்பட்ட மிகவும் நம்பகமான புலனாய்வு அறிக்கை ஒன்று சிறிலங்கா அரச புலனாய்வுச் சேவையினால் இடைமறிக்கப்பட்டுள்ளது. இதையடுத்தே இரு முன்னாள் அரச அதிகாரிகள் இந்த இரகசியத் தகவல்களை ஜப்பானுக்கு வழங்கி வந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த அதிகாரிகள் மாதந்தோறும் அரசியல், பொருளாதார, மற்றும் பாதுகாப்புத் தொடர்பான இரகசியத் தகவல்கள் அடங்கிய அறிக்கைகளை ஜப்பானிய அரசாங்கத்து…
-
- 1 reply
- 600 views
-
-
கடந்த செப்டம்பர் மாதம் இலண்டனில் முதன்மை பிக்குவான பகலமதேரோ என்பவர் பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தினால் குற்றவாழியாக இனங்காணப்பட்டார். நேற்று முந்தினம் இதே பிக்கு மீண்டும் ஒரு பாலியல் குற்ற வழக்கில் குற்றவாழியாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். 16 வயதிற்கு குறைந்த பெண் சிறார்கள் புத்தகோயிலுக்கு சென்ற வேளை அங்கு பாலியல் சில்மிஷம் செய்துள்ளார் என இலண்டனில் உள்ள ஃபெல்தாம் நீதி மன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இலண்டனிற்கு இலங்கை அதிபர் மஹிந்தராஜபஷ வந்தால் இந்த தலைமை பிக்குவான பகலம சோமரட்ன தேரரிடம்தான் ஆசிபெறச்செல்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது. http://www.seithy.co...&language=tamil
-
- 2 replies
- 816 views
-
-
வடக்கு, கிழக்கில் ஜனநாயகக் குரல் மீண்டும் எழுந்துவிடக்கூடாது என்றளவில் இராணுவ ஆட்சி இந்த நாட்டின் வரலாற்றை நீங்கள் திரும்பிப் பார்க்க வேண்டும். எல்லாள மன்னன் ஆட்சிசெய்த பொழுது அதற்கு எதிராக இந்த நாட்டில் போராட்டம் நடந்தது. துட்டகைமுனு மன்னன் எல்லாள மன்னனை போரில் தோற்கடிக்கபட்டதன் பின்னர் அந்த இடத்திலே ஒரு நினைவுச் சின்னம் பொறிக்கப்பட்டு அந்த வழியால்போகின்றவர்கள் அரசர்களாக இருந்தாலும் சரி அங்கே தங்களுடைய வணக்கத்தைத் தெரிவித்துவிட்டுத்தான் போவார்கள். ஆனால் இன்று இந்த நாட்டினுடைய நாகரிகம் என்னவென்று கேட்க விரும்புகிறேன். ஆயிரம் ஆயிரமாக ஓர் இனத்தின் விடுதலைக்காகத் தங்களை அர்ப்பணித்தோம் என்று செத்துப்போனவர்களின் அப்பாவிகளின் பெற்றோர்களும் சகோதரர்களும் அவர்கள் இருக…
-
- 0 replies
- 642 views
-
-
கால் வைக்குமா அமெரிக்க இராணுவம் ? ஆக்கம்: கே. சஞ்சயன் அமைச்சரவை கடந்தவாரம் கூடியபோது சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப்பீடத்தின் உதவியுடன் வடக்கில் உள்ள நான்கு மருத்துவமனைகளைத் திருத்திமைக்கும் திட்டமே அது. ஒட்டுசுட்டான், முழங்காவில் பூநகரி மற்றும் பளை ஆகிய இடங்களில் உள்ள- போரினால் சேதமடைந்த மருத்துவமனைகளை புனரமைப்பதற்கு பசுபிக் கட்டளைப்பீடம் 190 மில்லியன் ரூபாவை வழங்கியது. இந்தநிதியுடன் உள்ளூர் நிதி 23 மில்லியன் ரூபாவையும் சேர்த்து இந்த நான்கு மருத்துவமனைகளையும் புனரமைப்புச் செய்ய அமைச்சரவையின் அனுமதி கோரினார் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன. ஆனால…
-
- 0 replies
- 1k views
-
-
மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கமே பொறுப்பு சொல்ல வேண்டுமென ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் தொடர்ச்சியாக மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர்ஷ - சித்திரவதைச் சம்பவங்கள் மேற்கொள்ளப்படாது என்பதனை உறுதி செய்தல், சட்டவிரோத கைதுகள், கருத்து சுதந்திர உரிமை போன்ற அடிப்படை மனித உரிமைகள் இலங்கையில் கடுமையாக மீறப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஜனநயாகத்தை உறுதிப்படுத்தல், சம உரிமைகளை வழங்குதல் மற்றும் சம சந்தர்ப்பங்களை வழங்குதல் போன்றவற்றின் மூலமே நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்பதே ஜே.வி.பி.யின் நம்பிக்கை என அவர் குறிப்பிட்டுள்ளார…
-
- 0 replies
- 502 views
-
-
சிறைகளின் கண்ணீர் கதைகள் ஒரு வாக்குமூலம் 1988இல் இந்திய இராணுவம் ஈழமண்ணில் கொலைத்தாண்டவம் ஆடிய காலத்தில் போராளியானவன் இவன். 15வருடங்களுக்கு மேல் தனது வாழ்வை விடுதலைக்காகக் களங்களில் கரைத்தவன். விடுதலை நோக்கிய பாதையில் பணிகளில் தன்னை இணைத்து எட்ட முடியாத சிகரங்களையெல்லாம் தொட்டுவந்த புயல் இவன். களநிலத்தை விட்டு எதிர் நிலத்தில் பணிக்காய் சென்ற இவன் படைத்த வெற்றிகளுக்கு விலாசமில்லை. இன்றைய அரசியல் நீரோட்டத்தில் இணைந்ததாய் சொல்கிற புளொட் இயக்கத்தின் கொலைகாரர்களால் கடத்தப்பட்டு கொடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு அந்தக் கொலைகாரர்களிடமிருந்து தப்பித்துப் பணியை தலைநகரம் வரை வியாபித்த விடுதலையின் சுடர் இவன். இவனுக்கு 2பெண்பிள்ளைகள். இவனை மட்டும் நம்பி…
-
- 0 replies
- 810 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு ஒருபோதும் விலக மாட்டேன் - மு.றெமீடியஸ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ந்து ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் தலைமையிலான யாழ். மாநகரசபை ஆட்சியைக் கவிழ்க்கப்போவதாகவும் தான் சுகந்திரக் கட்சியில் இணையப் போவதாகவும் கூறுவது சுத்தப் பொய் என யாழ். மாநாகர சபை உறுப்பினரும் பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணியுமான றெமீடியஸ் தெரிவித்துள்ளார். ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையப் போவதாக வெளிவந்த செய்தி தொடர்பாக அவரிடம் தொடர்பு கொண்டு வினாவியபோது... என் மீது வேண்டும் என்று சிலர் சேறு பூச முனைகின்றனர். நான் பிரபல சட்டத்தரணி என்பதால் எனது பெயருக்கு அவப்பெயரை உண்டு பண்ணுவதற்காக திட்டமிட்டு செயற்படுகின்றனர். எது எப்படி நடந்தாலும் தமிழ் த…
-
- 2 replies
- 1.3k views
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
முல்லைப் பெரியாறு அணை விவாகரத்தில் கேரள கட்சிகளின் பிரச்சாரம் தமிழகத்தில் கேரள எல்லையோர மக்களை உசுப்பி விட்டுள்ளது. நேற்று திடீரென திரண்ட கம்பம் பகுதி விவசாயிகள் குமுளியை முற்றுகையிடப் போவதாக திரண்டனர். இத்தனைக்கும் போலீசார் 144 தடையுத்தரவு போட்டிருந்தனர். இந்த தடையையும் மீறி திரண்ட விவசாயிகள் போலீசாரின் தடையையும் மீறி எல்லையை நோக்கிச் சென்றனர். இந்த பேரளி நேற்று நடந்தது பதறிப்போன போலீசார் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தகவல் தெரிவித்ததோடு ,மேலதிக போலீசாரோடு சேர்ந்து மக்களை கேரள எல்லையை நெருங்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். பின்னர் பேரணியாகச் சென்ற மக்களுடன் தேமாவட்ட ஆட்சித் தலைவர் பழனிச்சாமி, தென்மண்டல ஐஜி ராஜேஸ்தாஸ் ஆகியோர் சமாதானப்படுத்தினர்.பின்னர் மக்கள் கிளம்பிச் சென…
-
- 4 replies
- 2k views
-
-
யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்ட ஜேவிபி மாற்றுக்குழுவான மக்கள் போராட்டக் குழுவின் மாவட்ட அமைப்பாளர் லலித் குமார் வீரராஜ் கொல்லப்பட்டு விட்டதாக தமக்கு தொலைபேசி மூலம் தகவல்கள் கிடைத்துள்ளதாக, மக்கள் போராட்டக் குழுவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சமீர கொஸ்வத்த அச்சம் வெளியிட்டுள்ளார். “கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடத்தப்பட்ட லலித் குமார் கொல்லப்பட்டு விட்டதாக பல தொலைபேசி அழைப்புகள் கிடைத்துள்ளன. அவர் எங்கிருக்கிறார் என்பது எமக்குத் தெரியாது. இந்த தகவல்களை நாம் நம்பவில்லை. ஆனால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது என்பது தெளிவாகியுள்ளது. லலித் குமார் மற்றும் இன்னொரு செயற்பாட்டாளரான முருகநாதன் குகன் ஆகியொர் காணாமற் போயுள்ளதற்கு சிறிலங்…
-
- 0 replies
- 887 views
-
-
அலரி மாளிகையின் தொலைபேசி இயக்குனருக்கு அந்த அழைப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.தொலைபேசியில் சிங்களத்தில் பேசிய பெண், தன்னை அனோமா பொன்சேகா என்று அறிமுகப்படுத்திக் கொண்டு சிறிலங்கா அதிபருடன் பேச வேண்டும் என்று கேட்டார். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் குடும்பத்தின் சார்பில் அவர் சிறிலங்கா அதிபரிடம் பொதுமன்னிப்புக் கோரவுள்ளதாக தொலைபேசி இயக்குனர் நினைத்துக் கொண்டார். உடனடியாக அவர் மகிந்த ராஜபக்சவிடம், அனோமா பொன்சேகா இணைப்பில் இருப்பதாகவும் உங்களிடம் பேச வேண்டும் என்ற கேட்பதாகவும் கூறினார். தொலைபேசியை எடுத்து “என்ன பிரச்சினை? எங்களால் என்ன செய்யமுடியும்?“ என்று கேட்டார் மகிந்த ராஜபக்ச. அழைத்தவர் ஓரளவுக்கு தயவாகப் பேசினார். வாழ்க்கைச்செலவு உயர்வினால் பொதுமக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
வன்னி யுத்தத்தின்போது உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் தொடர்பான சட்ட ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதில் வன்னி மக்கள் பெரும் இடர்களை எதிர்கொள்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தச் சட்ட ஆவணங்கள் பெற்றுக்கொள்வதற்காகப் பல இடங்களுக்கு அலைந்து திரிந்தும் பயனேதும் கிட்டவில்லை எனவும் அவர்கள் கூறினார்கள். இந்த விடயத்தில் அரசு கூடிய கவனம் செலுத்தி பாதிக்கப்பட்டோர் இந்த ஆவணங்களை விரைவாகப் பெறுவதற்கு உதவ வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி, முல்லைத் தீவு மாவட்டங்களிலேயே இந்தப் பிரச்சினை தலை தூக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்ற வேளையில் பெரும் உயிரிழப்புக்கள் இடம்பெற்றன. பலர் குடும்பம் குடும்பமாகவும் கொல்லப்பட்டனர். வேறு பல க…
-
- 0 replies
- 445 views
-
-
தமிழ் மக்களின் நலன்சார்ந்த அரசியல் கட்சிகள் அரசுக்கு முட்டுக்கொடுக்கும் வேலையையும்,கிழக்கு பிரிவினை வாதத்தையும் பேசிக்கொண்டிராமல் நேர்மையுடனும் இதயசுத்தியுடனும் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வுத்திட்டத்தை பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் தமிழ் தேசம் ஒன்றை உருவாக்குவது தொடர்பாகவும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமுகமாக சர்வதேசம் தலையிடுவது தொடர்பாகவும் தலையிடாமல் இருக்கவேண்டுமாயின் இலங்கை அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று அரசாட்சி செய்துகொண்டு தேச…
-
- 0 replies
- 581 views
-
-
தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்தில் தமிழிளைஞர் கூட்டமைப்பின் சார்பில் தமிழர் எழுச்சி நாள் பொதுக் கூட்டம் நாளை மறுநாள் 12.12.2011 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற உள்ளது. கடந்த நவம்பர் மாதம் நடைபெற இருந்த பொதுக்கூட்டம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் நிறுத்தப்பட்டதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்வில் எழுச்சி உரைகளை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழநெடுமாறன் ஐயா அவர்களும் மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக்கழகப் பொதுச் செயலர் வைகோ அவர்களும் ஆற்றவுள்ளனர். இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவருக்கும் நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்புவிடுத்துள்ளனர். http://www.vannionli...-post_7442.html
-
- 0 replies
- 609 views
-