ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143342 topics in this forum
-
[ செவ்வாய்க்கிழமை, 25 ஒக்ரோபர் 2011, 08:44 GMT ] [ புதினப் பணிமனை ] 'புதினப்பலகை'க்காக, தி. வழுதி. இலங்கைத் தமிழினத்தின் கேள்விக்கிடமற்ற தலைமை நிலைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது வந்துவிட்டது – இது, ஒரு காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வகித்ததைப் போன்ற வரலாற்றுப் பாத்திரம். விடுதலைப் புலிகள் இயக்கம் அந்த இடத்தை அடைந்த வழிமுறைக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த இடத்தை அடைந்த வழிமுறைக்கும் இடையில் அடிப்படையான வேறுபாடுகள் இருக்கலாம், அன்று விடுதலைப் புலிகள் மீதும், இன்று தமிழர் கூட்டமைப்பின் மீதும் தமிழ் மக்களுக்கு ஆழமான அதிருப்திகள் இருந்திருக்கலாம், இருக்கலாம், ஆனால் - தவிர்க்க முடியா…
-
- 19 replies
- 1.9k views
-
-
காலி கடற்பரப்பில் காணாமல் போன வெளிநாட்டவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். சுவீடன் நாட்டைச் சேர்ந்த பிரஜையே இவ்வாறு காணாமல் போய் உயிரிழந்துள்ளார். கடந்த 24 ஆம் திகதி காணாமல் போன குறித்த நபரின் சடலம் நேற்று முன்தினம் மாலை வரை கிடைத்திருக்கவில்லை. உனவட்டுனவை அண்மித்த கடற்பரப்பில் சடலம் மிதப்பதாக கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து கடற்படையினர் சடலத்தை மீட்டுள்ளனர். சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=34567
-
- 1 reply
- 736 views
-
-
அமெரிக்கா சென்றடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவுக்கும் அமெரிக்கத் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு அமெரிக்க நேரப்படி நேற்றுப் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு (இலங்கை நேரப்படி நேற்று இரவு 10 மணிக்கு) வாஷிங்டனில் உத்தியோக பூர்வமாக ஆரம்பமானது. அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் நேற்று முன்தினம் அதிகாலை 6 மணிக்கு இலங்கையில் இருந்து புறப்பட்ட கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழு நேற்றுமுன் தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு வாஷிங்டனைச் சென்றடைந்தது. இந்தக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அடங்கியிருந்தனர். வாஷிங்டனில் உள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அமெரிக்க நே…
-
- 2 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா அரசின் இராணுவ மயமாக்கல் தொடர்கின்றது - அமெரிக்க ஊடகவியலாளர் [ வியாழக்கிழமை, 27 ஒக்ரோபர் 2011, 08:10 GMT ] [ நித்தியபாரதி ] நாங்கள் சில இராணுவ சோதனைச் சாவடிகளைக் கடந்து சென்றுகொண்டிருந்தோம். பொதுமக்களின் செயற்பாடுகள் சிலவற்றில் இராணுவ வீரர்கள் குறுக்கீடு செய்வதைப் பார்த்த போது நாங்கள் மிகவும் குழப்பமுற்றோம். இவ்வாறு, அமெரிக்காவை தளமாகக் கொண்ட Journal of Foreign Relations என்னும் ஊடகத்தில் Gibson Bateman எழுதியுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவால் தலைமை தாங்கப்படும் போருக்குப் பிந்திய சிறிலங்காவானது சோகம் நிறைந்…
-
- 0 replies
- 767 views
-
-
சுதர்சன் நாச்சியப்பன் குழு யாழ் விஜயம் - வழமைபோல் இலங்கை அரசாங்கத்தின் புள்ளி விபரங்களுடன் இமல்டா உண்மையை அம்பலப்படுத்தினார் - சீ.வீ.கே.சிவஞானம் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் http://youtu.be/axaR85ksamE யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சர்வதேசத்தின் உதவிகள் கிட்டவேண்டுமென்ற எதிர்பார்ப்பினிலேயே சர்வதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றை யாழப்பாணம் அழைத்து வந்துள்ளதாக தெரிவித்தார் இந்திய காங்கிரஸ் கட்சி பிரமுகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுதர்சன நாச்சியப்பன். மேற்குலக நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று சகிதம் யாழ்ப்பாணம் வந்துள்ள அவர் பல இடங்களையும் சுற்றிப்பார்த்திருந்தார். யாழ்.செயலகத்திற்கும் குழுவினருடன் விஜயம் செய்த அவருக்கு …
-
- 0 replies
- 1.1k views
-
-
பொது நலவாய நாடுகளின் அமைப்பில் மனித உரிமைகள் ஆணையாளர் ஒருவரை நியமிப்பது குறித்து அவதானம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியா, கனடா, பிரித்தானியா போன்ற பொதுநலவாய நாடுகளில் அங்கம் வகிக்கும் நாடுகளின் ஆதரவளிக்கவுள்ள நிலையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன. ஜனநாயகம், சட்டம், ஒழுங்கு மற்றும் மனிதவுரிமைகளுக்கான ஆணையாளர் பதவியை உருவாக்குவது தொடர்பபாக பொதுநலவாய அமைப்பின் பதினொரு உறுப்பு நாடுகளால் முன்வைக்கப்பட்ட ஆலோசனையை சிறீலங்கா கடுமையாக எதிர்க்கவுள்ளதாகத் தெரிய வருகின்றது. 2009-ம் ஆண்டு ஸ்பெயினில் இடம்பெற்ற பொதுநலவாய அரசியல் தலைவர்களின் மாநாட்டில் அத்தகையதொரு பதவியை உருவாக்க…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமர்வுகளை சில நாடுகள் புறக்கணிக்கக் கூடும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ரொட் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2013ம் ஆண்டு ஹம்பாந்தோட்டையில் பொதுநலவாயத் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பில் தனிப்பட்ட நாடுகளே தீர்மானம் எடுக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பில் பல்வேறு கொள்கைகளை உடைய நாடுகள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும் என அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வெளியீட்டிற்கு அமைய சில நாடுகள் அமர்வுளை புறக்கணிக்க வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை காரணிகளை காரணம் காட்டி கனடா…
-
- 0 replies
- 787 views
-
-
இலங்கை அரசைக் காப்பாற்ற கை உயர்த்தும் நாடுகளை என் செய்வோம்? போர் முடிபுக்குக் கொண்டு வரப்பட்டு விட்டதெனக் கூறப்படும் அதே நேரம் தமிழ் மக்களின் அவலம் தொடர் கதையாகவே செல்கின்றது. போர் ஏற்படுத்திய தாக்கம், அதனால் தமிழ் மக்கள் படும் துன்பம் என்பன குறித்துச் சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா. சபை உள்ளிட்ட பொது அமைப்புகள் கவலை கொள்கின்ற போதிலும், அது தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்ப தே யதார்த்தமாகவுள்ளது. 2009-ம் ஆண்டு மே மாதத்தில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுப் போர் முடிபுறுத்தப்பட்டதாக இலங்கை அரசு பகிரங்கப்படுத்தியதில் இருந்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும், தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு - உரிமைப் பிரச்சினைகளுக்குத் த…
-
- 0 replies
- 1k views
-
-
அமெரிக்கா சென்றடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தலைமையி லான குழுவுக்கும் அமெரிக்கத் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு அமெரிக்க நேரப்படி நேற்றுப் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு (இலங்கை நேரப்படி நேற்று இரவு 10 மணிக்கு) வாஷிங்டனில் உத்தியோக பூர்வமாக ஆரம்பமானது. அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் நேற்று முன்தினம் அதிகாலை 6 மணிக்கு இலங்கையில் இருந்து புறப்பட்ட கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழு நேற்றுமுன் தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு வாஷிங்டனைச் சென்றடைந்தது. இந்தக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அடங்கியிருந்தனர். வ…
-
- 1 reply
- 741 views
-
-
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளை புனர்வாழ்வு கொடுத்து புதுவாழ்வுக்குள் இணைத்துக்கொள்கின்ற அரசாங்கம் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட ஜெகதீஸ்வரனை மனிதாபிமான முறையில் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வினோநோகராதலிங்கம் தெரிவித்தார். நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு வினோநோகராதலிங்கம் எம்.பி எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மன்னாரைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்ற அரசியல் கைதியின் விடுதலையில் மனிதாபிமான அணுகுமுறையைக் கையாண்டு விடுவிக்க வேண்டும். …
-
- 1 reply
- 798 views
-
-
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை எட்டுவதில் அரசாங்கத்திடம் உண்மைத் தன்மையோ வெளிப்படைத் தன்மையோ கிடையாது. தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் நடத்தும் பேச்சுவார்த்தை காலம் கடத்தும் முயற்சியாகும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் அமெரிக்க விஜயமானது அவர்களின் ஜனநாயக உரிமையாகும். தமது மக்களின் குறைகளை கூட்டமைப்பினர் தெளிவுபடுத்துவதில் தவறு கிடையாது. அது தடுக்கப்படக்கூடியதும் அல்ல. மேலும் சர்வதேச ரீதியிலான அழுத்தங்கள் இல்லாதவாறு நேர்மையாக செயற்பட வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்பதை மீண்டும் ஒரு முறை சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் …
-
- 0 replies
- 544 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் தூதுவராக ஐ.நாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அமைச்சர் மகிந்த சமரசிங்க, நேற்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரின் மூன்றாம் குழுக் கூட்டத்தின், பக்கநிலைச் சந்திப்பாக இது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் 2009 இல் போர் முடிவுக்கு வந்த பின்னர் கொழும்புக்குப் பயணம் மேற்கொண்ட ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வுடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கைக்கு அமைய, இலங்கையுடன் நடைபெறும் ஐ.நாவின் கலந்துரையாடலின் ஒருபகுதியாகவே இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக ஐ.நா அறிவித்துள்ளது. ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக மேலதிக விளக்களையும் இலங்கை தரப்பின…
-
- 0 replies
- 1.1k views
-
-
முஸ்லிம் உலகத் தலைவர்களை கருவறுக்கும் நடவடிக்கைகளை மேற்குலக வல்லரசு நாடுகள் வேகமாக மேற்கொண்டு வருவதை லிபியாவின் முன்னாள் தலைவர் கேர்ணல் கடாபியின் படுகொலை மூலம் உலகம் உணரத் தலைப்பட்டுள்ளது என ஏ.எச்.எம்.அஸ்வர் எம்.பி. குறிப்பிட்டார். மௌலவி காத்தான்குடி பௌஸ் எழுதிய எகிப்து முதல் இலங்கை வரை இஸ்லாமியர்களின் இசைஞானம் ஆய்வு நூல் வெளியீட்டு விழா பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்; கேர்ணல் கடாபி ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மற்றும் அநீதிகளுக்கும் அவலங்களுக்கும் ஆளாகிய மக்களுக்காக சர்வதேச ரீதியில் குரல் கொடுக்கும் சக்தியாக திகழ்ந்தார். இலங்க…
-
- 0 replies
- 713 views
-
-
Man dies at Sydney immigration centre A Sri Lankan has man died at a Sydney immigration centre. The Department of Immigration said the man was discovered in distress at his accommodation in the Sydney Immigration Residential Housing complex early on Wednesday. An ambulance was called and CPR done but the man died shortly after midnight. A department spokesman said police would investigate the circumstances of the man's death. He expected it would also be subject to a coronial inquest. The dead man's family are overseas and the department is seeking to inform them of the event. Refugee Action Coalition spokesman Ian Rintoul said the decea…
-
- 30 replies
- 2.2k views
-
-
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் நேற்று நடந்த தேநீர் விருந்தில் கனேடியப்பிரதமர் ஸ்ரிபன் ஹாபர் தனது அதிருப்தியினை வெளியிட்டார். அவர் பெரிதாக யாருடனும் பேச விரும்பவில்லை.. மனித உரிமை மீறல் சம்பவங்களினாலும் போர்க்குற்றம் சுமத்தபட்டதினாலும் சிறிலங்காவில் அடுத்த 2013 அமர்வினை நடத்தக்கூடாது என கனடா கூறியிருந்தது. ஆனால் இந்த கருத்தை இந்தியா முதலாவதாக எதிர்த்தது. பின்னர் தென்னாபிரிக்காவும், சிறிலங்காவும் எதிர்த்தன. அவுஸ்ரேலியாவோ இதில் மாற்றத்தினை ஏற்படுத்த தேவை இல்லை என இன்னும் ஒருபடி மேலே ஏறி சிறிலங்காவிற்காக வக்காளத்தினை வாங்கியது. பிரித்தானியாவோ அமைதியாக இருந்தது அதாவது கனடாவின் கருத்துக்கு ஆதரவாகவும் பேசவில்லை எதிராகவும் பேசவில்லை.. அத்துடன் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஒ…
-
- 2 replies
- 1.1k views
-
-
வடக்கு, கிழக்கில் காணிப் பதிவு நடைமுறையைக் கூட்டமைப்பினர் எதிர்ப்பது அநீதியானதாகும். வடக்கு, கிழக்கு மக்களின் நலன் கருதியே இந்த வேலைத்திட்டத்தை நாங்கள் முன்னெடுக்கின்றோம். இவ்வாறு கூறுகிறார் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ.பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் ஊடக வியலாளர்கள் எழுப்பிய கேள் விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்: கடந்த கால யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள காணி உரிமையாளர்களிடம் அவற்றுக்கான எந்தவொரு ஆவணமும் இல்லாத நிலையே காணப்படுகின்றது. அதிகமானோர் அவற்றை இழந்து விட்டனர். மேலும் பல குடும்பங்கள் அரச காணிக…
-
- 0 replies
- 516 views
-
-
யாழ்ப்பாணத்தில் வாக்காளர் மீள்திருத்தப் படிவத்தை கிராம அலுவலர்கள் கையேற்க மறுப்பதாக பொதுமக்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது இடம்பெயர்ந்து வேறு மாவட்டத்தில் வசிப்பவர்களும், வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து வாழ்பவர்களும் தம்மை வாக்காளர்களாக தமது சொந்த பிரிவில் பதிவதற்கான விண்ணப்பப் படிவம் தேர்தல் ஆணையகத்தால் கிராம அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறானோரின் உறவினர்கள் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று நிறைவு செய்து தமது கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இவ்வாறான விண்ணப்ப படிவங்களை கிராம அலுவலர்கள், மக்களிடமிருந்து ஏற்க மறுப்பதாக யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்களால்…
-
- 0 replies
- 705 views
-
-
ரஷ்சியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இருந்த பனிப்போர் ரஷ்யா உடைந்ததால் அமெரிக்காவின் கை தனியாக உலகில் வலுவடைந்தது. முதலாளித்துவம் என்னும் கொள்ளை பலமாக வேரூன்யி எதிர்கடை இல்லாத சண்டியனாக வளர்ந்து தான் வைத்தது தான் சட்டம் என்ற நிலைக்குள் உலகம் தள்ளப்பட்டு உலகநாடுகள் எல்லாம் அமெரிக்காவிற்குப் பயந்து அடங்கிவிட்டது. பின்னர் எதேச்சாதியாகமாக எதிர்ப்பவனுக்கொல்லாம் அடிபோடத்தொடங்கிய அமெரிக்கா ஆப்கானிஸ்த்தான், ஈராக்குள் நுழைந்து தன்னையே தானறுத்து பெட்டிப்பாம்புபோல் பெட்டிக்குள் படுத்துக்கொண்டாலும் மக்கள் இன்றும் பயப்பிடுகின்றார்கள். பெட்டிக்குள் இருந்து கொண்டும் மற்றையநாடுகள் மீது பிரச்சனைகளைத்தூண்டி அழிவை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்நது அமெரிக்கா. ஏழைகள் பண்மில்லாதவர்கள் இன்று உலகத்தில்…
-
- 1 reply
- 858 views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை விரைவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆஸ்திரேலியப் பிரதமர் ஜூலியா கில் லார்ட்டிடம் உறுதியளித்துள்ளார். அத்துடன், இலங்கை மீது சுமத்தப்பட் டுள்ள போர்க் குற்றச்சாட்டுகள் மற்றும் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் ஆஸ்திரேலியப் பிரதமர் ஜூலியா கில்லார்ட்டிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விளக்கியுள்ளார். ஆஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் 22ஆவது பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாட் டில் கலந்துகொள்ளச் சென்றுள்ள ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று பஸிபிக் ஹோட்டலில் வைத்து ஆஸ்திரேலியப் பிரதமரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.இந்தக் கலந்துரையாடலின்போது இலங்கையில் இடம் பெயர்ந்துள்ள மக்களின் மீ…
-
- 0 replies
- 531 views
-
-
[ வியாழக்கிழமை, 27 ஒக்ரோபர் 2011, 01:28 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்கா அதிபரின் தூதுவராக ஐ.நாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அமைச்சர் மகிந்த சமரசிங்க, நேற்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரின் மூன்றாம் குழுக் கூட்டத்தின், பக்கநிலைச் சந்திப்பாக இது இடம்பெற்றதாக சிறிலங்கா அரசு கூறியுள்ளது. ஆனால் 2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னர் கொழும்புக்குப் பயணம் மேற்கொண்ட ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கைக்கு அமைய, சிறிலங்காவுடன் நடைபெறும் ஐ.நாவின் கலந்துரையாடலின் ஒருபகுதியாகவே இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக ஐ.நா அறிவித்துள்ள…
-
- 0 replies
- 568 views
-
-
[ வியாழக்கிழமை, 27 ஒக்ரோபர் 2011, 03:01 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் அவுஸ்ரேலியப் பிரதமர் ஜுலியா கிலாட் கவலை தெரிவித்துள்ளதுடன், இதுதொடர்பான காத்திரமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பான நடவடிக்கை குறித்து சிறிலங்காவிடம் இருந்த உறுதிப்பாட்டை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நேற்றிரவு பேர்த் நகரில் உள்ள பான்பசுபிக் விடுதியில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, நல்லிணக்க முயற்சிகளின் மூலம் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று அவுஸ்ரேலியா கருதுவதாகவும், சிறிலங்க…
-
- 0 replies
- 946 views
-
-
[ வியாழக்கிழமை, 27 ஒக்ரோபர் 2011, 03:49 GMT ] [ கார்வண்ணன் ] மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக் கூறுவது தொடர்பாக கொமன்வெல்த் மாநாட்டில் சிறப்பு அறிக்கை ஒன்றை சிறிலங்கா வெளியிட வேண்டும் என்று அவுஸ்ரேலியா வலியுறுத்தியுள்ளது. நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது அவுஸ்ரேலியப் பிரதமர் ஜுலியா கிலாட் இது குறித்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்தியதாக சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க கூறியுள்ளார். ஆனால் கொமன்வெல்த் தலைவர்களின் முன்பாக பொறுப்புக் கூறுதல் குறித்து சிறப்பு அறிக்கை எதையும் வெளியிட முடியாது சிறிலங்கா அதிபர் கூறிவிட்டதாகவும் லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார். எனினும், பொறுப்புக்கூறும் வ…
-
- 0 replies
- 545 views
-
-
விடுதலைப்புலிகளில் இருந்து கருணா பிரியும்போது பெருந்தொகையான ஆயுதங்கள் வேறு அணிக்கு கைமாறியுள்ளதாகவும் அதுதான் நாட்டில் வன்செயல்களுக்கு காரனம் எனவும் கோத்தாபாய கூறியுள்ளார். சுயாதீன தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவ்வாறாயின் யார் அந்த வேறு அணி. கருணா அல்லது பிள்ளையான் இருவரும்தான் விடுதலைப்புலிகளிடம் இருந்து பிரிந்து செல்கையில் ஆயுதங்களுடன் சென்றனர். அந்த ஆயுதங்களை வைத்துக்கொண்டு தாம் தனித்து இயங்கப்போவதாக பல்வேறு புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தனர். இதற்கான வீடியோ ஆதாரங்களும் உள்ளன. ஆகவே கருணா பிள்ளையானிடம் தான் ஆயுதங்கள் இருக்கின்றது அதனால்தான் நாட்டில் பிரச்சினை என சொல்லாமல் சொல்கிறார் கோத்தாபாய . http://ww…
-
- 3 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா ஜனாதிபதிக்கு எதிராக தொடுக்கப்பட்ட போர்க்குற்ற வழக்கை விசாரிக்க முடியாமல் தடுத்ததன் மூலம் அவுஸ்திரேலிய அரசாங்கம் பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளதாக அவுஸ்ரேலியாவில் வாழும் தமிழ்ச் சமூகத்தினர் கவலையும் அதிர்ப்தியும் வெளியிட்டுள்ளனர். அவுஸ்திரேலிய அரசின் இந்த முடிவானது அவுஸ்ரேலிய தமிழ்ச் சமூகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலிய அரசின் முடிவு தமக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரசின் பெண் பேச்சாளரான சாம்பரி, ஏபிசி செய்திச்சேவையிடம் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கும் திகதியை அறிவித்த நிலையில், அரசியல்வாதி ஒருவர் அதற்கு அனுமதி அளிக்க முடியாது என்று அறிவ…
-
- 1 reply
- 1k views
-
-
மாவீரர் தினம் ஒன்றே எங்கள் பலத்தின் வெளிப்பாடு ! மாவீரரை மதித்து ஓரிடத்தில் ஒன்றிணைவீர். மாவீரர் ,அவர் மரணத்தால் மரணிக்க முடியா மாபெரும் பிறவிகள் ! மண்ணுக்காய் உயிரை அவர் உவகையோடு தந்தவர்உயிருக்கு அஞ்சி நாம் உடல் காக்க பிற நாடு வரை ஓடியபோது , எதிரிக்கு இங்கே இடம் இல்லை என்று உடலை குண்டாய் தந்தவர் ! பொன்னுக்கும் பொருளுக்கும் என்று வாழும் உலகில் சுதந்தரம் ஒன்றே மேல் என்று வாழ்ந்து சென்றவர் ! அவர்தம் நாளில் பிரிந்து நிற்பதா ? ஏன் ? தேசிய தலைவரின் அணியில் ஒன்றாய்தானே நின்றோம் ! விரும்பியோ விரும்பாமலோ இன்று ஏன் பிரிவு ? வெற்றியில் கைதட்டினோம் , ஆர்ப்பரிதோம் அல்லவா ! களத்தில் சிங்களவன் மண்ணின் மைந்தர்களை ஆயுத பலத்தால் அடக்க கூடாது என்று குளிரிலும் கூதளிலும் உழைத…
-
- 7 replies
- 1.5k views
-