Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சி மாவட்டத்தில் 37,707 குடும்பங்கள் மீள்குடியேற்றத்திற்காக கடந்த காலங்களில பதிவுகளை மேற்கொண்டிருந்ததாகவும் இதில் 35,822 குடுங்களுக்கு வீடுகள் அமைத்துக்கொடுக்க வேண்டியிருந்ததாகவும் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். . இதற்குள் 26,867 குடும்பங்களுக்கு புதிய வீடுகளும் 8,955 குடும்பங்களுக்கு வீடுகளை திருத்துவதற்குமாக உதவிகளை வழங்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். . ஆனால் இதுவரைக்கும் திருத்த வீடுகளுக்கான உதவிகள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. அதில் 1,692 திருத்த வீடுகள் முடிவுற்ற வேலைகளாகவும் 1,203 திருத்த வீடுகள் தற்போது வேலைகள் நடைப்பெற்றுக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்த அவர், புதிதாக அமைத்துக்கொடுக்கும் வீடுகளிலேயே தாம் ப…

  2. சனல்4 இனரால் தயாரிக்கபப்ட்ட சிறிலங்காவில் கொலைக்களம் எனும் போர்க்குற்ற ஆதார காணொளி நம்பிக்கையானதும், ஊடக சட்டங்களை மதித்தும் தயாரிக்கபப்ட்ட ஒன்று என ஊடக ஒழுங்குபடுத்தல் ஆணையம் ( OFCOM) கூறியுள்ளது.. சனல் 4 காணொளி தொடர்பில் சிங்கள அர்சாங்கத்தின் தூண்டுதலின்படி புலம்பெயர் சிங்களவர்கள் மற்றும் சிலர் 118 முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். இந்த காணொளி உண்மைக்கு புறம்பானது, பார்வையாளர்களை கலங்க வைக்க கூடியது, சாதாரண பொதுமக்கள் இதனால் பாதிப்படைந்துள்லனர் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களை முறைப்பாடாக செய்திருந்தனர்.. இந்த முறைப்பாடுகளை விசாரித்த ஓவ்கொம் எனப்படும் ஊடக ஒழுங்குபடுத்தல் ஆணையம் தனது முடிவுகளை வெளியிட்டுள்ளது.. அதாவது இந்த காணொளியில் உள்ள காட்சிகள், படங்கள் உரிய முறை…

  3. அமெரிக்க நீதிமன்றின் பிடியாணை தமிழ்நெட்டில் வெளியானது மகிந்தவுக்கு எதிரான அமெரிக்க நீதிமன்றின் பிடியாணை தமிழ்நெட்டில் வெளியானது. K. Manoharan et al. v. Mahinda Rajapakse: Complaint, Summons [TamilNet, Sunday, 23 October 2011, 23:13 GMT] As per order issued on the 13th day of October 2011, by the United States District Judge, Colleen Kollar-Kotelly of the District Court of District of Columbia, with respect to Civil Action No. 11-00235 (CKK) Dr. Kasippillai Manoharan, et al. v. Percy Mahendra Rajapakse, the Court Summons and the Complaint are published here in full. The 29-page complaint is published as a single PDF document, and as 29 separate jpg images…

    • 3 replies
    • 1.4k views
  4. கோலியாத் என்ற மாபெரும் வீரனை வீழ்த்தியது தாவீது என்ற சிறுவனின் சாணக்கியமே. அதாவது அவன், புத்திசாலித்தனமாக வீசிய கல்லே கோலியாத்தைத் தோற்கடித்தது. அதுவரையும் கோலியாத்தும் இருந்தான்.கல்லும் இருந்தது. ஆட்களும் இருந்தார்கள். ஆனால், புத்திசாதுரியத்தைப் பயன்படுத்திக் கல்லை எறியக்கூடிய ஒரு தாவீது வரும் வரைக்கும் கோலியாத்தே “கிங்'. மிகச் சிறிய வயதிலேயே சொல்லிக் கொடுக்கப்படும் இந்த விடயத்தைத் தமிழ் அரசியலாளர்களிற் பெரும்பாலானோர் இன்னும் சரியாக விளங்கிக் கொள்ளவில்லை. என்றபடியாற்தான், இவர்கள் மலைகளை உடைத்துக் கற்களை வீசுகின்றபோதும் ஒரு கல்லுத்தானும் எதிர்த்தரப்பைச் சேதப்படுத்தாமல் இருக்கிறது. இப்போது இவர்கள் எறிந்த கற்களின் குவியலே மலைகளாகப் போகிறது. “தமிழர்கள் காலத்த…

    • 2 replies
    • 838 views
  5. கனடாவில் ‘பொங்கு தமிழ்’ காலத்தின் கட்டளை இது “பொங்கு தமிழுக்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிசம் என்று சங்கே முழங்கு.” இது பாரதிதாசன் வரிகள். கனடியத் தமிழருக்காகவே அன்று எழுதி வைத்தார் போலும். கனடியத் தமிழர் துணிச்சலுடனும், ஒற்றுமையுடனும், உற்சாகத்துடனும் செயற்பட வேண்டிய தருணமிது. ‘பொங்கு தமிழ்’ ரொறன்ரோவில் நிகழவுள்ளதாக அறியப்பட்டவுடனேயே அதற்கெதிராக செயற்படத் தொடங்கி விட்டனர் இங்குள்ள உள்ள மகிந்த அரசின் கைக்கூலிகள். இதனை நிகழவிடாமல் செய்வதற்கு அனைத்து வழிகளையும் - சாம பேத தான தண்டம் அனைத்தையும் பயன்படுத்துகின்றனர். புலம்பெயர் தமிழரின் அரசியல் அழுத்தம் காரணமாக மகிந்தவின் இனவெறி அரசு மேற்குலகத்திடமிருந்து தனிமைப்படுத்தப்படுவதுடன், சர்வதேச போர்க்குற்ற விசாரண…

  6. லண்டனில் இருந்து, விடுமுறையை கழிப்பதற்காக கொழும்பு சென்ற, பிரித்தானிய பிரஜைகளான தாயாரும், அவரது இளம் மகளும் கொழும்பில், இன்று சிங்கள இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, சிங்கள சித்திரவைதை கூடமான 4'ம் மாடியில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. இவர்களை விடுவிப்பதற்காக பெருமளவு பணம் கேட்க்கப்பட்டிருப்பதாகவும், கொடுக்கத் தவறின் புலிகளுடன் தொடர்பு உடையவர்களென குற்றஞ்சாட்டப்பட்டு சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வரும் என எச்சரிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களின் குடும்ப நண்பர் ஒருவர் தெரிவித்தார். புங்குடுதீவை பூர்வீகமாக கொண்ட இவர்கள், பல வருடங்களாக லண்டனில் வசித்து வருவதாகவும் தெரிய வருகிறது. அண்மைக்காலங்களாக, இவ்வாறு புலத்தில் இருந்து கொழும்பு சென்ற பலர்…

    • 29 replies
    • 3.8k views
  7. கூட்டமைப்பின் பயணம் வெற்றிகரமாக அமைய எமது மனப்பூர்வமான வாழ்த்துக்கள், போர்க் குற்ற விசாரணையை சமரசம் செய்ய இடமளிக்கக் கூடாது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அமெரிக்கா செல்லும் கூட்டமைப்பு சுயநிர்ணய உரிமையையும் தமிழ் தேசத்தின் தனித்துவமான இறைமையையும் ஆணித் தரமாக வலியுறுத்த வேண்டும். தமிழ் மக்களும் இளைஞர்களும் செய்த உயிர்த்தியாகங்களை பேரம்பேசும் வகையில் போர்க் குற்ற விசாரணையை சமரசம் செய்ய இடமளிக்கக் கூடாது என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் அவர்களது பயணம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் பத்திரிகையாளார் மகாநாடு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின…

  8. ஜேர்மனி செய்மதியின் பாகங்கள் சிறிலங்காவில் வீழ்ந்தன? ஆபத்தை எச்சரிக்கத் தவறிய விஞ்ஞானிகள் விண்வெளியில் செயலிழந்த ஜெர்மனியின் ஆய்வுச் செய்மதியின் உடைந்த பாகங்கள் தென்கிழக்காசியாவில் விழுந்திருக்கலாம் என்று ஜேர்மனிய விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். சிறிய பேருந்து ஒன்றின் அளவுடைய - 1.87 தொன் எடையான இந்த செய்மதி செயலிழந்து, 30 துண்டுகளாக உடைந்து 450 கி.மீ வேகத்தில் பூமியில் விழுந்துள்ளது. 1990ம் ஆண்டில் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இந்த செய்மதி 1999ம் ஆண்டில் செயலிழந்த நிலையில் புவிச்சுற்று வட்டப்பாதையில் சுற்றிக் கொண்டிருந்தது. இந்த செய்மதி சனிக்கிழமை இரவு 9.45 மணிக்கும், 10.15 மணிக்கும் இடையில் புவியை நெருங்கியதாகவும், அது தரையில் விழுவதற்கு 10 தொடக்கம்…

  9. கோடிய‌க்கரை அருகே ‌மீ‌ன் ‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த வேதார‌ண்ய‌த்தை சே‌ர்‌ந்த நான்கு கடல்தொழிலாளர்களை சுற்றிவளைத்த சிங்கள கடல்தொழிலாளர்கள்அரிவாளால் வெட்டி காயப்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்கள். வேதாரணியம் கடல்தொழிலாளர்கள் இரண்டாவது தடவையாக சிங்கள கடல்தொழிலாளர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்கள். நாகை மாவ‌ட்ட‌ம் வேதார‌ண்ய‌த்தை அடு‌த்த ‌விழு‌ந்தமாவடியை சே‌ர்‌ந்த 4 ‌மீனவ‌ர்க‌ள் நே‌ற்‌றிரவு கடலு‌க்கு ‌‌மீ‌ன்‌பிடி‌க்க செ‌ன்றன‌ர். கோடிய‌க்கரை‌யி‌ன் தெ‌ன்‌கிழ‌க்கே அவ‌ர்க‌ள் ‌மீ‌ன்‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்தன‌ர். படகில் வந்த சிங்கள கடல்தொழிலாளர்கள் நான்கு கடல்தொழிலாளர்களையும் சுற்றிவளைத்து அரிவாளால் வெட்டினார்கள் இதில் அர்ச்சுனன் என்ற கடல்தொழிலாளி கையில் காயம் அடைந்த …

  10. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அமெரிக்காவும் இந்தியாவும் செயற்படுகின்றன. இதற்கு கூட்டமைப்பினன் அமெரிக்க விஜயம் இதன் ஒரு கட்டமே யாகும். எனவே தமிழ்க் கூட்டமைப்பின் தேசத்துரோக செயல்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சரு மான சம்பிக்க ரணவக்க தெவித்துள்ளார். கேணல் கடாபியின் கொலையுடன் உண்மையான போர்க் குற்றவாளிகள் யார்? என்பது வெளிப்பட்டுள்ளது. எனவே ஐ.நா. இலங்கைக்கு எதிராக செயற்படுவதை நிறுத்தி விட்டு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு எதிராக கடும் நடவ டிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளா…

  11. அரசியல்வாதிகள் வழங்குகின்ற வாக்குறுதிகள் பற்றியும் இலங்கையின் அரசியல் கலாசாரத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பது குறித்தும் இன்று கவனம் செலுத்தப்படுகின்றன. இந்த இரு விடயங்கள் தொடர்பாக ஆங்கில, தமிழ்ப் பத்திரிகைகளில் ஆசிரியர் தலையங்கங்கள் தீட்டப்பட்டுள்ளதுடன் இவை தொடர்பான செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் வழங்குகின்ற வாக்குறுதிகள் குறித்து ஜனாதிபதி அரசியல்வாதிகளுக்கு நினைவூட்ட வேண்டிய நிலை தோன்றியுள்ளது. அக்டோபர் 8 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களில் வெற்றி பெற்ற அரசாங்க சார்பான உறுப்பினர்களுக்கு சத்தியப் பிரமாணம் செய்து வைக்கும் வேளையிலேயே ஜனாதிபதி தேர்தல் காலங்களில் உறுப்பினர்கள் வழங்கிய உறுதி மொழிகள் குறித்து பேசியுள்ளார். …

  12. அதிகாரிகளின் அசிரத்தையினால் மட்டு சிறைச்சாலையில் தமிழ் இளைஞர் (கைதி) ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த சில தினங்களாக சுகயீனமுற்றிருந்த குறித்த கைதி உணவு உட்கொள்ள முடியாது வாந்தி எடுத்தவாறு இருந்ததாகவும் அது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவித்தும் அவர்கள் அதனை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை எனவும் சிறைச்சாலையின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.. சிறைச்சாலை அதிகாரிகள் கவனம் செலுத்தியிருந்தால் கைதியின் உயிரை காப்பாற்றியிருக்க முடியும் எனத் தெரிவித்துள்ள கைதிகள், சிறைச்சாலை அதிகாரிகளின் கவனயீனத்தைக் கண்டித்து இன்று தொடக்கம் உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.. சிலரை படகு மூலம் சட்டவிரோதமாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்க முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்…

  13. அரசாங்க படை அதிகாரிகள் கூறிய பாதுகாப்பு உத்தரவாதத்தினை நாம் நம்ப தயாராக இல்லை என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கூறியுள்ளது. எமது மாணவ சமூகம் அச்சமின்றி கல்வியைத் தொடர முடியும் என்ற உத்தரவாதத்தினை அரசாங்க படைத்தரப்பு வழங்கியுள்ளதாக யாழ். பல்கலைக்ழக நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் நாம் அதனை நம்பமாட்டோம். . எமது மூன்று அம்சக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை நாளை திங்கள் தொடக்கம் தொடர் வகுப்புப் பகிஸ்கரிப்பு போராட்டம் தொடரும் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் பாலசுப்பரமணியம் தவபாலசிங்கம் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களிலும் வாய்மூல பாதுகாப்பு உறுதி மொழிகள் வழங்கப்பட்டது. ஆனால், எங்களுக்கான பாதுகாப்பு தொடர்பாக பாதுகாப்பு பிரிவினர் எமுத்துமுல உறுதி மொழிகள் வ…

  14. அமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, யாழ் போதனா வைத்தியசாலை வளாகத்தில் நிகழ்ந்த படுகொலை. இந்தியப்படையின் துப்பாக்கிச் சூட்டில், வைத்தியசாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த மூன்று வைத்தியர்கள், இரண்டு தாதிமார்கள், மேற்பார்வையாளர், ஊழியர்கள் உட்பட இருபத்தியொரு பணியாளர்களும், நோயாளார் விடுதிகளில் சிகிச்சை பெற்றுவந்த நாற்பத்தியேழு நோயாளர்களுமாக, மொத்தம் அறுபத்தியெட்டுப் பேர் கொல்லப்பட்டார்கள். 1987 ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21ம் நாள் நடாத்தப்பட்ட அந்தக் கோரப் படுகொலையின் இருபத்து நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்று. இன்றுவரை மறக்க முடியவில்லை. அந்தச் சம்பவத்தில்தான், வைத்தியசாலைய…

  15. [ ஞாயிற்றுக்கிழமை, 23 ஒக்ரோபர் 2011, 07:42 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்கா அதிபர் ராஜபக்ச மற்றும் அவருடைய குடும்பத்தினர், கேணல் கடாபியின் மறைவு தொடர்பான தமது இரங்கல் செய்தியையும், தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் அவரது மகனான கன்னிபல் கடாபிக்கு தெரிவித்துள்ளனர். ஒக்ரோபர் 21,2011 அன்று மிஸ்றற்றாவின் புறநகர்ப் பகுதியிலுள்ள மசூதி ஒன்றின் அருகில் உள்ள மரக்கறிச் சந்தையின் அறையொன்றுக்குள் இருந்த மெத்தை மீது லிபிய நாட்டின் பலம்மிக்க ஆட்சியாளரான முகமர் கடாபியின் இறந்த உடல் வைக்கப்பட்டிருந்தது. கடாபி கொல்லப்பட்டமை தொடர்பாக பல்வேறு குழப்பகரமான சூழல் நிலவுகின்ற போதிலும் கூட, லிபியத் தலைவர்கள் தமது நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பதிலும், ஜனநாயக …

    • 7 replies
    • 2.1k views
  16. ரணிலும் மகிந்தவும் ஒரே இலக்கை நோக்கியே பயணிக்கின்றனர்:- 24 அக்டோபர் 2011 நாட்டின் ஆட்சித் தலைவரான மகிந்த ராஜபக்கவும், எதிர்கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்கவும் ஒருவரை ஒருவர் குறைகூறி வந்தாலும் அவர்கள் இருவரும் ஒரே இலக்கை நோக்கியே பயணிக்கின்றனர். உலக ஒப்பாசாரத்துக்காக தாம் மோதிக் கொள்வதுபோல் காட்டிவருகின்றனரே தவிர அவர்கள் இருவருக்கும் இடையில் இறுக்கமான நட்பும், ஒற்றுமையும் உள்ளது. இருவருமே தமது கட்சிக்குள் தீவிர ஜனநாயகம் வேண்டி நிற்பவர்களை ஓரம் கட்டி வருகின்றனர். பாரதலக்ஸ்மன் பிரேமச்சந்திரா இன்று இல்லாதது ஒழிக்கப்பட்டுள்ளார். மகிந்த ராஜபக்ஸவிற்கு சவாலாக விளங்கிய ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஆட்சியாளரின் நவ தாராளவாத கொள்கைகளுக்கு எதிர…

    • 3 replies
    • 997 views
  17. வெள்ளைக்கொடி சம்பவத்தை ஒத்ததே கடாபியின் கொலை - மனித உரிமைகள் கண்காணிப்பகம் _ லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கடாபியின் கொலைக்கும் இலங்கையின் வெள்ளைக்கொடி சம்பவத்துக்கும் ஒற்றுமைகள் தென்படுவதாக நியூயோர்க்கைத் தலைமையகமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மேற்படி கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியத்துக்கான பணிப்பாளர் பிறட் அடம்ஸ் தெரிவித்திருப்பதாவது, சிர்தே நகரில் கேர்ணல் கடாபி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் புரட்சிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். எனினும் சண்டையின் போது அவர் கொல்லப்பட்டதாக இடைக்கால அரசு கூறி வருகிறது. இலங்கையின் வெள்ளைக்கொடி சம்பவத்திலும் இவ்வாறான குற்றச்சாட்டுக்களே முன் வைக்கப்பட்டுள்ளன. விடு…

  18. இலங்கை காவல்துறை மீது குற்றச்சாட்டு இலங்கையில் பொலிஸ் காவலில் இருப்போர் மீதான சித்திரவதைகளும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகளும் அளவின்றி தொடர்வதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன. இந்த ஆண்டில் கடந்த 9 மாதங்களில் மட்டும் வடக்கு கிழக்குப் பிரதேசங்களுக்கு வெளியே பொலிஸ் நிலையங்களுக்குள் நடந்துள்ள சித்திரவதைகள், மோசமான நடாத்துதல் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் என கிட்டத்தட்ட 98 சம்பவங்கள் தம்மிடம் பதிவாகியிருப்பதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் நிகழ்சித்திட்ட இயக்குநர் பசில் பெர்ணான்டோ பிபிசியிடம் சுட்டிக்காட்டினார். கொல்லப்பட்ட 13 பேரில் பெரும்பாலானவர்கள் பொலிஸ் காவலில் இருந்து தப்ப முயன்றபோது அல்லது பொலிசாருடன் ஏற்பட்ட மோதல…

  19. இந்த முறை (2012) சிறிலங்கா அரசாங்கம் சமர்ப்பித்துள்ள வரவு செலவுத்திட்டத்தில் 222 பில்லியன் டொலர் செலவீடாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் துண்டு விழும் தொகை 110 பில்லியன் டொலர்கள். இந்த துண்டு விழும் தொகையில் மஹிந்த குடும்பத்திற்கு ஐந்தில் ஒரு பங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 22 பில்லியன் டொலர்கள். இந்த ஒதுக்கீட்டில் மஹிந்த குடும்பம் 25 விழுக்காட்டினை விழுங்கினால் அவர்களுக்கு மொத்தமாக ஒரு வருடத்திற்குள் புரளப்போகின்ற பணம் எவ்வளவு தெரியுமா? 5.5 பில்லியன் டொலர்கள். . எப்படித்தான் என்று பார்ப்போம்; . மஹிந்த இராஜபக்‌ஷவின் கீழ் உள்ள மூன்று அமைச்சுக்களுக்கும் 32 திணைக்களங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி 6161 மில்லியன் ரூபாய்கள். கோத்தபாய இராஜபக்‌ஷவின் கீழ் உள்…

    • 4 replies
    • 2k views
  20. இலங்கையில் அதிகரித்து வரும் சீனப் பிரசன்னம் குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது என்று இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜக் கிங்ஸ்டன் தெரிவித்துள்ளார். சீனாவுடன் இராணுவ ரீதியாக ஒத்துழைப்பை இலங்கை அதிகரித்து வருவது குறித்து தமது நாடு கவலை கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். சில ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு நெருங்கிய நட்பு நாடாக இருந்த அமெரிக்கா இப்போ, திடீரென எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பதற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்ட போதே சீன – இலங்கை உறவு குறித்து அமெரிக்கா கொண்டுள்ள கவலையை அவர் வெளிப்படுத்தியிருக்கின்றார். இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அதிகரித்துவரும் சீன ஆதிக்கம் அமெரிக்காவுக்கு மிக கவலை தருவதாகவும் அவர் குறிப்பிட்டார். …

    • 3 replies
    • 1.1k views
  21. புலிகளின் தோல்வி ஆசிய போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளை பாதித்துள்ளது – விக்கிலீக்ஸ் 23 அக்டோபர் 2011 தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியில் தோற்கடிக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஆசிய போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் 17ம் திகதி அமெரிக்க தூதரகத்தினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட தகவல்களில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 1983ம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆசிய போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளில் முக்கிய பங்கினை வகித்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகள் இந்தியாவின் மும்பையை மையமாகக் கொண்டு போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்…

  22. பிரித்தானிய மக்களிடமும், பிரித்தானிய அரசாங்கத்திடமும் நீதி கேட்டு, மன்செஸ்டர் நகரில் இருந்து லண்டன் மாநகரம் வரையிலான 'நீதிக்கான நடைப்பயணமொன்று' திரு.ஜெயசங்கர் முருகையா அவர்களினால் மேற்கொள்ளப்படவுள்ளது. 29-10-2011 முதல் 7-11-2011 வரைக்குமாக அமையவுள்ள இந்த நடைப்பயணம் ஐந்து கோரிக்கைகளை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படுகின்றது. * ஈழத்தமிழர்களின் மீதான சிறிலங்கா அரச பயங்கரவாதிகளின் இனப்படுகொலையையும், போர்க்குற்றங்களையும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் விசாரிப்பதற்காக ஒரு சுயாதீனமான, நீதியான, சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்படல் வேண்டும். * ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதோடு, தமிழீழத்தில் சர்வதேச சமுகத்தின் மத்தியஸ்தத்துடன் கூ…

  23. மூதூரில் கிட்டத்தட்ட 800 தமிழ், முஸ்லிம் குடும்பங்களின் அதிகூடிய சாகுபடி கொண்ட வயல் நிலங்களை சிங்களவர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பிற்கு காரணமான சிங்கள குடும்பங்களுக்கு தலைமை தாங்குபவர் டெகிவத்த நீலபூல சாது எனும் சிங்கள பேரினவாத துறவி. . மூதூர் பிரதேசத்திற்கும் சேருவெல பிரதேசத்திற்கும் இடைப்பட்ட கங்குவேலி எனும் இடத்தில் சுமார் 1600 ஏக்கர் வயல் நிலங்களை தமிழ் மற்றும் முஸ்லும் மக்கள் சுமார் 60 ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்துள்ளனர். குடும்பத்திற்கு இரண்டு ஏக்கர் எனும் வகையில் 1952 ஆம் ஆண்டும் தமிழ் மற்றும் முஸ்லிம் குடும்பங்கள் சேர்ந்து காடொன்றினை வெட்டி விளை நிலங்கள் ஆக்கினர். . 1986 ஆம் ஆண்டு வரை அவர்கள் நெல் பயிரிட்டு வந்துள்ளனர். இதற்கான பத்திரங்களும் …

  24. [ ஞாயிற்றுக்கிழமை, 23 ஒக்ரோபர் 2011, 00:45 GMT ] [ கார்வண்ணன் ] கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் செய்வாய்க்கிழமை அவுஸ்ரேலியா செல்லவுள்ளார். பேர்த் நகரில் நடைபெறும் கொமன்வெலத் மாநாட்டில் பங்கேற்கச் செல்லும் சிறிலங்கா அதிபருடன், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க உள்ளிட்ட சுமார் 100 பேர் கொண்ட குழுவொன்றும் அவுஸ்ரேலியா செல்லவுள்ளது. 108 பேர் கொண்ட இந்தக் குழுவில், தற்போது இராணுவத்தில் பணியாற்றும் இளநிலை அதிகாரிகளைக் கொண்ட குழுவே இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. மூத்த இராணுவ அதிகாரிகள் எவருக்கும் இந்தக் குழுவில் சேர்த்துக் கொள்ளப்ப…

  25. இலங்கை மக்களின் நலன்புரி வேலைத் திட்டங்களிற்காக வழங்கப்பட்ட நிதி உதவிகள் ஒருபோதும் நேரடியாக இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கவில்லை என பிரித்தானியா அரசாங்கம் தெரிவிக்கிறது. பிரித்தானியாவின் எதிர்க்கட்சிகளின் சில அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டுகின்றன. பிரித்தானியாவின் மக்கள் சபைக்கு சர்வதேச மனிதபிமான நிதி உதவி வழங்கும் அமைப்பு (DFID) கடந்த 10 வருடகாலப் பகுதியில் பெருமளவு நிதியை இலங்கைக்கு மனதபிமான சேவைகளுக்காக வழங்கிய என அறிவித்துள்ளது. இவ் அமைப்பு 2006ம் ஆண்டு இருதரப்பு உடன்படிக்கைகளில் இருந்து வாபஸ்பெற்ற போதிலும் மனிதபிமான சேவைகளுக்காக நிதிஉதவியை தொடர்ந்து வழங்கப்பட்டு வந்துள்ளதாகவும் தெரி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.