Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பட்டமளிப்பில் காசுக்குக் கையேந்தும் பண்பாடு பாடை ஏறாதோ! பங்களாதேஷை சேர்ந்த ஒரு பேராசிரியர் ஏழை மக்களுக்கு உதவும் பொருட்டு அவர்களுக்கு வங்கிகளில் கடன் பெற்றுக் கொடுக்க முயற்சித்தார். எனினும் கடன் வழங்குவதற்கு வங்கிகள் தயாராக இல்லை. இந்த விடயம் அந்த பேராசிரியரை கவலை கொள்ள வைத்தது. படித்து பேராசிரியராகப் பதவி பெற்ற போதிலும் ஏழை மக்களுக்கு உதவ முடியவில்லை என்ற கவலை அவரை வாட்ட, ஏழை மக்களுக்கு உதவக் கூடிய நிதி அமைப்பொன்றை தானே உருவாக்கினார். அந்த அமைப்பு ஏழை மக்களுக்கு நிபந்தனைகள் இன்றி நிதியுதவி வழங்கியது. அவரின் இந்த முயற்சி பங்களாதே´லுள்ள ஏழை மக்களின் பொருளாதார தேடுதலுக்கு பேருதவி புரிந்து வருகின்றது. அந்த பேராசிரியரின் பணியை உலகம் போற்றியதுடன் அது போன்ற திட்ட…

    • 0 replies
    • 804 views
  2. யார் இவர்? இவரின் பேச்சை பாருங்கள்.. தமிழீழ விடுதலையை கருவறுத்த முக்கிய காரணத்தை விளங்கப்படுத்துகிறர். ஆங்கிலத்தில் உள்ளது.. பத்து நிமிட நீள தனியார் ஒருவர் தனிமையில் படைத்த வீடியோ.. இவரின்ட யுடியூப் பக்கம்.. http://www.youtube.com/user/massey1944 வழக்கம்போல.. டி.வி கோப்பிகளும் சோகப்படல்களும் போர்குற்ற ஆதரங்களும் உள்ள பக்கம் இல்லை... மனித்தியாலம் மனித்தியாலமா தமிழ் பிரச்சினை பற்றி தனியாரினால் படைத்த பேச்சு வீடியோ..... அவிப்பிராயம் ஏது மண்டைக்க வந்தா, தயவுசெய்து எழுதி விடுங்கள்..

  3. 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அமெரிக்க தலைமயகத்துக்கு அனுப்பிய பாதுகாப்புச் செய்திகள் சிலவற்றை தற்போது விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு கேபிள் ஊடாக அனுப்பட்ட இச் செய்தியில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பற்றீசியா பூட்டின்ஸ் அவர்கள் தான் சரத் பொன்சேகாவோடு பேசியதாகத் தெரிவித்துள்ளார். டிசம்பர் மாதம் இலங்கையில் இருந்து வெளிவரும் சண்டே லீடர் பத்திரிகையில் வெள்ளைக்கொடியோடு சரணடைந்த புலிகள் இயக்கத்தின் அரசியல் தலைவர்கள் குறித்த செய்திகள் வெளியாகியிருந்தது. அதில் சரணடையும் புலிகளின் தலைவர்களை சுட்டுத் தள்ளுமாறு கோத்தபாய உத்தரவிட்டார் என்ற செய்தியை சரத் பொன்சேகா தெரிவித்ததாக அப்பத்திரிகை வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து பெரும் சர்ச்சை ஏற்பட்ட…

  4. [Monday, 2011-10-10 12:44:12] விடுதலைப் புலிகள் பேரழிவு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கான 'றெட் மேர்க்குரி' இரசாயனத்தை அமெரிக்காவில் கொள்வனவு செய்ய முயற்சித்ததாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கொடுத்த அறிக்கையை நம்பகமற்றது என்று அமெரிக்கா நிராகரித்தாக விக்கிலீக்ஸ் தகவல்கள் கூறுகின்றன. 2006 ஜுலை 27ம் நாள் சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் பாலிக்ககார, விடுதலைப் புலிகளிடம் இராசாயன அயுதங்கள் இருப்பது பற்றிய, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் ஆவணம் ஒன்றை கொழும்பில் இருந்த அமெரிக்க பதில் தூதுவரிடம் கையளித்தார். இந்த அறிக்கை சிறிலங்கா அரசுக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதன் அடிப்படையில் சிறிலங்காவுக்குத் தொழில்நுட்ப உதவிகளை அமெரிக்கா வழங்க வேண்டும்…

  5. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மத்தாய்க்கும் தமிழ்த் தரப்புக்குமிடையிலான சந்திப்பொன்று இன்றுபகல் 12மணியளவில் கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது. சுமார் 45நிமிட நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் பொதுச்செயலர் தி.சிறீதரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன், இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் அவர்களுடன், இந்திய அதிகாரிகளும், இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா, பிரதி உயர்ஸ்தானிகர் குமரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். இதன்போது, வடக்கு கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் ஒவ்வொரு சிவில் நிர்வா…

  6. கிழக்கில் படையினர் தேடுதல் கிழக்கு மாகாணம் அம்பாறை திருக்கோவில் அக்கரைப்பற்று பிரதேசங்களில் இராணுவத்தினரும் பொலிஸாரும் நேற்றிரவு மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளில் தமிழ் இளைஞர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்த இளைஞர்களின் விபரங்கள் பெறப்பட்டதுடன் தொழில்புரியும் இடங்களையும் படையினர் அறிந்து கொண்டதாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றன. படையினரின் தேடுதல் நடவடிக்கைகளில் இளைஞர்கள் எவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை. கிழக்கு மாகாணத்தில் சமீபகாலமாக படையினர் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.eeladhesa...ndex.php?option

  7. கிளிநொச்சி வட்டக்கச்சியில் மீண்டும் ஒரு பயங்கரம் நடந்துள்ளது. வெள்ளைவானில் வந்தோர்களால் வீடு புகுந்து பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியில் வயோதிபப்பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு கழுத்தில் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். வட்டக்கச்சிப்பகுதியில் கடந்த மூன்று தினங்களில் இது இரண்டாவது கொலைச் சம்பவம் ஆகும். வட்டக்கச்சி கட்சன் வீதியைச்சேர்ந்த குமார்ராஜா கொலன் மேரி திரேசா (வயது63) என்ற வயோதிபப் பெண்மணியே கொலையுண்டவர் ஆவார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது பிரஸ்தாப பெண் கிளிநொச்சி கட்சன் வீதியிலுள்ள வீடு ஒன்றில் உடல் நோய்வாய்ப்பட்ட அவரது கணவருடன் வாழ்ந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் எதிர் வீட்டில் வவுனியாவ…

  8. பாலியல் துன்புறுத்தல்களிற்கு எதிரான தனது நடவடிக்கையினை பலாலி ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் ஆரம்பிக்கப்போவதாக இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். . அண்மைக்காலமாக யாழ். குடாவில் பாலியல் துஷ்பிரயோகங்களும்கலாசாரச் சீர் கேடுகளும் அதிகரித்து வருவதாக யாழ்.மாவட்டஅரசாங்க அதிபரான இமெல்டா சுகுமார் தற்போது அடிக்கடிகூறிவருகிறார் என்பது தெரிந்ததே. இப்போது அவர் பலாலி ஆசிரியர்கலாசாலையில் பாலியல் ரீதியாக பெண்கள் பலர் பாதிப்புகளுக்குஆளாகி வருவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளனதெரிவித்துள்ளார். . யாழ்.மாவட்ட அரச அலு வலகங்கள் மற்றும் நிறுவனங்களில் உயர் மட்ட அதிகாரிகள் முதல் ஏனைய தரங்களில்உள்ளவர்கள் பலர் இவ்வாறான பாலியல் ரீதியான வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அவர்களின் ப…

    • 0 replies
    • 1.1k views
  9. முல்லைதீவில் மீள்குடியமர்வினில் என்ன நடக்கின்றது? ஏன் இவ்வளவு தாமதமென கேள்வி எழுப்பினார் இந்திய அரசின் புதிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரஞ்சன் மாதாய். வட மாகாண ஆளுநர் இல்லத்திற்கு சென்ற இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் உள்ளடங்கிய குழுவினர் வடக்கில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து கொண்டனர். அவ்வேளையிலேயே ரஞ்சன் மதாய் இக்கேள்வியை எழுப்பினார். முன்னதாக இந்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் காங்கேசன்துறை துறைமுகத்தின் புனரமைப்புப் பணிகளை இன்றைய தினம் குடாநாட்டுக்கான விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய அரசின் புதிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரஞ்சன் மாதாய் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்றம் குறித்தும் நேரடியாக ஆய்வுகளை மேற்…

  10. கல்வியுதவி வேண்டும் 18 மாணவர் பெயர் விபரம். முக்கிய குறிப்பு :- இந்தப் பிள்ளைகளின் தந்தையர்கள் பெரிய வெற்றிகளுக்கும் வரலாறுகளுக்கும் சொந்தமானவர்கள். இவர்கள் தாங்கிய வேதனைகள் துயரங்கள் இவர்களது பிள்ளைகளாகப் பிறந்ததற்காகவே இவர்களது பிள்ளைகளும் அனுபவிக்கிற துர்ப்பாக்கியம் மிக்க பிள்ளைகளாக உள்ளார்கள் இவர்கள். 1) ராதிகா ஏஎல் உயர்தரம். (மாதம் 10.00€) 2) சுகன்யா ஏஎல் உயர்தரம். (மாதம் 10.00€) குடும்ப நிலமை :-தந்தையார் 2009யுத்தத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுக்கொண்ட நேரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தாயாருடன் தற்போது வாழ்கிறார்கள். குடும்பம் வறுமை. 3) விக்னேஸ்வரி ஓஎல் சதாரணதரம். (மாதம் 10.00€) தகப்பன் இறுதியுத்தத்தில் சரணடைந்து சிற…

  11. எனது இசையில் கிளிநொச்சி மக்கள் பூரித்துப் போனார்கள் : 09 அக்டோபர் 2011 மக்களின் உண்மை நிலையை இந்திய இசைக்கலைஞர் கிருஷ்ணா மறைக்க முயல்கிறாரா?செம்மணச் செல்வன் எனது இசையை ரசித்த கிளிநொச்சி மக்கள் பூரித்துப்போனார்கள் என்றும் முப்பது வருடங்களாக அவர்கள் எந்த இசை நிகழ்ச்சியையும் பார்த்தில்லை என்றும் இந்திய இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இவர் கிளிநொச்சியில் கர்நாடக இசை நிகழ்ச்சியை நடத்தியதோடு யாழ் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவர்களையும் சந்தித்தாக இந்தியப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இதை ஒரு மேன்மையான அனுபவமாக மிகுந்த மகிழ்ச்சியுடன் எஸ்.எம் கிருஷ்ணா சித்திரித்துள்ளார். இவரது கருத்துக்கள் கிளிநொச்சியிலும் தமிழகத்திலும் பலரிடையே வேதனையை …

  12. அங்கொட வெல்லம்பிட்டிய பகுதியில் இன்று இரவு இரு குழுக்களுக்கிடையில் பாரிய மோதலொன்று இடம்பெற்றுக்கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, அப்பகுதியில் ஸ்ரீ.ல.சு.கட்சியின் அலுவலகமொன்று எரிந்து கொண்டிருப்பதாகவும் இதனால், அப்பகுதி பெரும் புகை மண்டலமாகக் காட்சியளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அப்பகுதியில் இராணுவத்தினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ளதாகவும் - கலவரத்தில் ஈடுபட்ட பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://www.pathivu.c...ticle_full.aspx

  13. அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புற்ரெனிசுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர எச்சரித்துள்ளார். அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புற்ரெனிஸ் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பிய தகவல் ஒன்றில், 2010ம் ஆண்டு நடைபெற்ற சிறிலங்கா அதிபர் தேர்தலின் போது, தேர்தல் முடிவுகளை முதலில் அலரி மாளிகைக்கு அனுப்பி வைக்குமாறு அம்பாறை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தாக கூறப்பட்டிருந்தது என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டிருந்தது. அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரே தம்மிடம் இந்தத் தகவலை வெளியிட்டதாகவும் புற்ரெனிஸ் கூறியுள்ளார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்று கூறி…

  14. வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட சிறிலங்கா படைத்தரப்பின் முக்கிய அதிகாரிகள் சிலர், வீரச் சாவடைந்த விடுதலைப் புலிகளின் இயக்கப் போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். இது தற்செயலாக நடந்த நிகழ்வுதான் ஆனால் செய்வதறியாது படை அதிகாரிகள் நின்றனர். வவுனியா செந்தில்நாதன் நற்பணி மன்ற மாணவர்களின் இசை நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டிருந்த போதே அவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். குறிப்பிட்ட இசை நிகழச்சி ஆரம்பமாவதற்கு முன்னராக இடம்பெற்ற, தாயக மீட்புப் போரில் வீரமரணமடைந்த போராளிகளுக்கும் மற்றும் கொலையுண்ட பல்லாயிரக் கணக்கான அப்பாவித் தமிழ் மக்களுக்கும் அஞ்சலி செலுத்துவோம் என விழா ஆரம்பிப்பாளரால் தைரியமாக சொல்லப்பட்டது. உடனடியாக அனைவரும் எழுந்து நின்று அகவணக்…

  15. வெளியுறவு செயலர் இலங்கையில்- கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்! மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய் இலங்கைக்கு போயுள்ள நிலையில், கச்சத்தீவு அருகே இந்திய எல்லைப் பகுதிக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை அடித்து விரட்டி தாக்கியுள்ளது இலங்கை கடற்படை. மத்திய வெளியுறவு அமைச்சர் ரஞ்சன் மத்தாய் இலங்கை போயுள்ளார். போவதற்கு முன்பு சென்னை வந்த அவர் முதல்வர் ஜெயலலிதாவை அவர் சந்தித்தார். அப்போது இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களைத் தாக்கி வரும் செயல் குறித்து கடுமையாக பேசிய முதல்வர் ஜெயலலிதா, இந்தப் பிரச்சினையை இந்திய அரசு தேசியப் பிரச்சினையாக அணுக வேண்டும். இந்தப் பிரச்சினையில் இலங்கைக்கு கடும் எச்சரிக்கை விடுக்க வேண்ட…

  16. சிறீலங்காவின் அடிமைகளில் ஒன்றாகக் கருதப்படும் டக்ளசின் கோமாளித்தனங்கள் பற்றி பலமுறை பார்த்திருக்கின்றோம். இப்போது இன்னொரு கோமாளிக் கருத்தை தனது வாயாலேயே டக்ளஸ் உதிர்த்துள்ளார். யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உறையாற்றிய டக்ளஸ் தேவானந்தா, மகிந்தவிற்கு மாம்பழக்கதை சொன்ன கதையை அவிழ்த்துவிட்டுள்ளார். டக்ளஸ் சொன்ன நாரதர் மாம்பழக் கதை இதுதான். தான்தான் பிள்ளையாராம்! தமிழ் தேசியக்கூட்டமைப்பு முருகனாம்! மகிந்த ராஜபக்சவை சுற்றிவந்தால் மாம்பழம் போன்ற தமிழர்களின் அரசியல் தீர்வு கிடைத்துவிடுமாம். சுலபமாக பெறக்கூடிய அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்ளாமல் மாம்பழக் கதையில் முருகன் மாம்பழத்தை பெறுவதற்கு மயில் ஏறி உலகை சுற…

  17. கிளிநொச்சி, பரந்தன் பிரதேசத்தில் இராணுவ வீரர் ஒருவர் நேற்று முன்தினம் துப்பாக்கிக் துப்பாக்கி ரவைகள் துளைத்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். நுவரெலியாவைச் சேர்ந்த குமார (வயது 22) என்பவரே மரணமானவர். இவர் இராணுவத்தின் 66 ஆவது பிரிவின் 18 ஆவது கஜபாகு றெஜிமன்ட் பிரிவைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சடலம் எடுத்து வரப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். http://www.tamilthai.com/?p=28211

    • 2 replies
    • 1.2k views
  18. வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று விட்டு, மனச்சாட்சியே இல்லாமல், ஒருவரைக் கூட தாம் கொல்லவில்லை என்று கூறும் சிங்கள அரசு, இப்போது ஆடு,மாடுகள் கொல்லப்படுவதற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளது. கடந்தவாரம் சிலாபம் முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் வேள்விக்குத் தயாராக இருந்த ஆடுகள், கோழிகளை எல்லாம் சிங்கள அரசின் அமைச்சர் மேர்வின் சில்வாவும் அவரது அடியாட்களும் வாகனங்களில் அள்ளிக் கொண்டு போயினர். மேர்வின் சில்வா யார் என்றோ அவரது குணவியல்பு என்னவென்றோ யாருக்கும் விபரிக்கத் தேவையில்லை. மகிந்த ராஜபக்சவின் அரசில் உள்ள அடிதடி அமைச்சர் என்ற சிறியதொரு விளக்கமே போதுமானது. அவரது அடாவடித்தனங்களை அறியாத யாரும் இருக்க முடியாது. அதிகாரத்தில் இருக்கின்ற திமிரில் …

  19. A POLITE REQUEST FOR SIGNATURE ____________________________________________________________________________________________________________________ Not long to go until the Commonwealth Heads of Government Meeting (CHOGM) at the end of this month! If you have time please help by signing and forwarding this petition which calls on CHOGM members to support justice in Sri Lanka to both your contacts and anyone you believe may not have seen it yet: <http://www.thepetitionsite.com/1/Sri-Lanka-CHOGM/> Please sign and get family and friends to sign

  20. அன்றாடம் உணவிற்கே வடபகுதி மக்கள் கஸ்டபப்டுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வு அண்மையில் சுட்டிக்காட்டியது. ஆனால் சிறிலங்கா அரசாங்கம் வெளி நாடுகளிடம் மீழ் குடியேற்றத்திற்கு நிதிகளைப்பெற்று வடபகுதியில் மீழ் குடியேறியுள்ள மக்களுக்கு கடன் அடிப்படையில் வீடுகளை அமைத்துக்கொடுக்கின்றது. மீள்குடியேற்ற அமைச்சினால், வடக்கில் மீள்குடியேற்றப்படும்மக்களுக்கு வழங்கப்படும் ஜனசெவன வீடமைப்புத் திட்டத்தின் கீழ்வழங்கப்படும் இரண்டு லட்சம் ரூபா, மீள செலுத்த வேண்டிய கடன்அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புவெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீள் குடியேற்ற அமைச்சினால், தேசிய வீடமைப்பு நிர்மாணஅபிவிருத்தி அதிகாரச் சபையின் ஊடாக ஒரு மாவட்டத்திற்கு 20 வீடு…

    • 6 replies
    • 1.1k views
  21. இலங்கை அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பிரச்சாரங்களினால் நாட்டுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. யுத்தம் வெற்றிக்கொள்ளப்பட்ட போதிலும் புலி ஆதரவு பிரச்சாரங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதகாக் குறிப்பிடப்படுகிறது. வெளிநாடுகளில் இயங்கி வரும் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்கள் குறித்து அரசாங்கம் விழிப்புடன் கண்காணித்து வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை நிரந்தரப் பிரதிநிதி டொக்டர் பாலித கொஹணே தெரிவித்துள்ளார். விடுதலைப் புலி ஆதரவாளர்கள் பாரியளவு பொருட் செலவில் இலங்கைக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும், சில சர்வதேச நாடுகளின் அனுதாபத்தை திரட்டியுள்ளதாகவும…

    • 1 reply
    • 1.1k views
  22. சவீந்திர சில்வாவுக்கு இராஜதந்திர விதிவிலக்கு – அமெரிக்கா உறுதிப்படுத்துகிறது Sunday, October 9, 2011, 10:40 நியுயோர்க் நீதிமன்றத்தில் போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள சிறிலங்கா இராஜதந்திரியான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு இராஜத்தந்திர விதிவிலக்கு இருப்பதை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவிருப்பதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இராஜதந்திர உறவுகள் தொடர்பான 1961ம் ஆண்டின் வியன்னா உடன்பாட்டின் அடிப்படையில் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு இராஜத்தந்திர விதிவிலக்கு இருப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வழங்கும் சான்றிதழை, சவீந்திர சில்வாவின் சட்டவாளர் தெற்கு நியுயோர்க் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ள…

  23. சவேந்திரா சில்வா மீது வழக்கு தொடுத்த எலியாஸ் உடன் சந்திப்பு காணொளி

    • 0 replies
    • 952 views
  24. [ ஞாயிற்றுக்கிழமை, 09 ஒக்ரோபர் 2011, 00:56 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] கொழும்பு மாநகரசபைக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் ஐதேக அதிகளவு வாக்குகளைப் பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் உள்ளது. கொழும்பு மாநகரசபையின் தொகுதி வாரியான முடிவுகள் அனைத்தும் அறிவிக்கப்பட்டுள்ள போதும் இன்னமும் இறுதியான முடிவும், ஆசன ஒதுக்கீடும் அறிவிக்கப்படவில்லை. எனினும் ஐதேக அதிக ஆசனங்களுடன் ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகியுள்ளது. இங்கு மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி 26 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. மத்திய கொழும்பில் ஐதேக 40,369 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2…

  25. [ ஞாயிற்றுக்கிழமை, 09 ஒக்ரோபர் 2011, 00:03 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சிறிலங்காவில் நேற்று 23 உள்ளூராட்சி சபைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே வெற்றி பெற்றுள்ளது. கல்முனை, கொழும்பு மாநகரசபைகள் தவிர்ந்த ஏனைய சபைகள் அனைத்தையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே கைப்பற்றியுள்ளது. கொழும்பு மாநகரசபைக்கான தேர்தலில் ஐதேகவே முன்னணியில் இருப்பதாக ஆரம்ப கட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன. கொழும்பு மாநகரசபையை ஐதேக கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது. கல்முனை மாநகரசபையை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. இங்கு 4 ஆசனங்களுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சி பிரதான எதிர்க்கட்சியா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.