ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143327 topics in this forum
-
பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்: அரசாங்கம் நாட்டில் இதுவரை காலமும் அமுலில் இருந்த அவசரகாலச் சட்டம், உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்ட போதிலும் பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் அமுலிலேயே இருக்கும் என்று அமைச்சரவையின் பதில் பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். பாதுகாப்புத் தடைச் சட்டமானது தனியாக உருவாக்கப்பட்ட சட்டமாகும். இதற்கும் அவசரகாலச் சட்டத்துக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, இந்தியாவினதோ அல்லது எந்தவொரு சர்வதேச நாட்டினதோ அழுத்தம் காரணமாக அவசரகாலச் சட்டம் நீக்கப்படவில்லை. நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டும் மக்களின் நலன் கருதியுமே அரச…
-
- 0 replies
- 645 views
-
-
மகிந்தவை சர்வதேச நீதிமன்றம் தண்டிக்க வேண்டும்! - இந்திய நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு உரை!! தமிழினப் படுகொலையை மேற்கொண்ட சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிறுத்தி கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் இன்று (25.08.11) இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதம் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சனைகள் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று விவாதம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஊழல் பிரச்சனைக்கு முன்னுரிமை கொடுத்து விவாதிக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியதால் இவ்விவாதம் இன்று வ…
-
- 2 replies
- 662 views
-
-
[Thursday, 2011-08-25 12:29:01] 36,000 குடும்பங்கள் உயர்பாதுகாப்பு வலயங்களில் மீள் குடியேற்றப்பட்டுள்ளதாக அரசாங்கம், உச்ச நீதிமன்றில் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தை அண்டிய பிரதேசங்களில் காணப்படும் உயர் பாதுகாப்பு வலயங்களில் இவ்வாறு மீள் குடியேற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விவசாயிகளினால் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பான விசாரணைகளின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்த காலத்தில் உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட தமது பூர்வீக நிலங்களில் மீளக் குடியேறுவதற்கு அனுமதி அளிக்கப்பட வேண்டுமென குறித்த விவசாயிகள் நீதிமன்றில் மனுத் தாக்கல்…
-
- 0 replies
- 440 views
-
-
[Thursday, 2011-08-25 12:46:42] கிறீஸ் பூதங்கள் விவகாரம் தொடர்பாகப் பாதுகாப்புத் தரப்பினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் மக்கள் தமது கைகளில் சட்டத்தை எடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது எனத் தெரிவித்துள்ளார் நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண. யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபைத்தேர்தலில் படுதோல்வியடைந்த அரசு அங்குள்ள மக்களைப் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்துள்ளது. நாவாந்துறையில் இடம்பெற்ற சம்பவம் இதனையே எடுத்துக்காட்டுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நாவாந்துறையில் இடம்பெற்ற மோதல் சம்பவம், கிறீஸ் பூதம் சர்ச்சை ஆகியவற்றால் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகள் தொடர்பாகக் கருத்து வெளியிடு…
-
- 0 replies
- 619 views
-
-
மர்ம மனிதனின் செயற்பாட்டினால் பெண்கள் தனித்திருக்க அஞ்சுகின்றனர். ஆண்கள் வீட்டில் இருப்பதனால் அவர்களின் தொழில்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றது. மர்ம மனிதனின் செயற்பாடு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இடம்பெறுகின்றது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட எம்.பி.யான எஸ். யோகேஸ்வரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் கட்டளைகள், தேயிலை சிறு பற்று நில அபிவிருத்தி சட்டத்தின் கீழான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஏற்றுமதி துறை பற்றி உரையாற்றிக் கொண்டிருக்கின்றோம். என்றாலும் மக்கள் நிம்மதியாக வேலைகளுக்கு செல்ல முடி…
-
- 0 replies
- 648 views
-
-
[ வியாழக்கிழமை, 25 ஓகஸ்ட் 2011, 02:11 GMT ] [ கார்வண்ணன் ] யாழ்ப்பாணம் நாவாந்துறையில் இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து பெருமளவு பொதுமக்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பான செய்திகளுக்கு அனைத்துலக ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியா, சீனா, பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் முக்கிய ஊடகங்கள் அனைத்தும் நாவாந்துறையில் 100இற்கும் அதிகமான பொதுமக்கள் சிறிலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகளை வெளியிட்டுள்ளன. அனைத்துலக செய்தி முகவரகங்களான, ரொய்ட்டர், ஏபி, எஎவ்பி போன்றனவும் இந்தச் செய்தியை முதன்மைப்படுத்தி வெளியிட்டுள்ளன. நாவாந்துறையில் மர்மமனிதர் விவகாரத்தை …
-
- 1 reply
- 872 views
-
-
வியாழக்கிழமை, 25 ஓகஸ்ட் 2011, 01:29 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] புத்தளத்தில் மர்மமனிதர்கள் விவகாரத்தினால் ஏற்பட்ட பதற்றத்தின் போது பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட சிறிலங்கா காவல்துறை அதிகாரியின் இறுதிச்சடங்கு நேற்று அவரது சொந்த இடமான நொச்சியாகமவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழலாம் என்ற அச்சத்தினால் பெருந்தொகையான் சிறப்பு அதிரடிப்படையினரும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. நொச்சியாகமவில் உள்ள முஸ்லிம்களின் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு அவற்றுக்கு அருகே சிறப்பு அதிரடிப்படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். அதேவேளை இறுதிச்சடங்கில் பற்கேற்ற…
-
- 0 replies
- 883 views
-
-
"நாம் ஒரு புண்பட்ட சமூகம்"- உ.த. பேரவை சிங்கள மக்களை ஓர் ‘ஒதுக்கப்பட்ட வகுப்பாக’ அனைத்துலகச் சமூகம் பார்ப்பதை நாம் விரும்பவில்லை என்று உ.த. பேரவையின் பேச்சாளர் கூறியுள்ளார். ஈஸ்வரன் இரத்தினம் - சண்டே லீடர் செய்தித் தாள் அண்மையில் சேனல் 4 வெளியிட்ட ஒளிநாடாக்களைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் இலங்கை அரசுக்கு எதிரான செயற்பாடுகளை வண. எஸ். ஜே. இமானுவேல் அடிகளாரின் தலைமையிலான உலகத் தமிழர் பேரவை (உ.த.பே.) முனைப்பாகச் செயற்படுத்தி வருகின்றது. இலங்கை அரசானது உ.த. பேரவையை ஒரு தீவிரவாத நோக்குடைய விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்பாகவே பார்க்கின்றது. உ.த. பேரவையின் உண்மையான நோக்கம் என்ன என்பதை அறியும் பொருட்டு அதன் பேச்சாளரான சுரேன் சுரேந்திரன் அவர்களுடன் சண்டே லீடர் உரையா…
-
- 2 replies
- 780 views
-
-
[ வியாழக்கிழமை, 25 ஓகஸ்ட் 2011, 00:03 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்கா அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்களும், தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளும் ஒரே நேரத்தில் தொடர்ந்து இடம்பெறும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களுக்கு மாற்றீடாக நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சில் நேற்று கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் இராஜதந்திரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இவ்வாறு கூறியுள்ளார்…
-
- 0 replies
- 506 views
-
-
[Wednesday, 2011-08-24 23:27:55] கிளி நொச்சி பாரதி புரத்தில் மர்ம மனிதர்கள் ஆயுதங்களுடன் நிர்வாணமாக உலாவுகின்றனர். இதனால் மக்கள் பீதியிலும் குளப்பத்திலும் உள்ளனர். என்று பாராளுமன்றத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்ததை அடுத்து ஆளும் தரப்பினர் அக்கூற்றுக்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர். பாராளுமன்றத்தில் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை துறைமுக விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பியான எஸ். ஸ்ரீதரன் மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டினார். மலையகத்தில் ஆரம்பித்த மர்ம மனிதனின் பீதி கிழக்கிற்கு சென்று தற்போது வடக்கிற்கு வியாபித்துள்ளது. மர்ம மன…
-
- 1 reply
- 1.9k views
-
-
தமிழ் கட்சிகளின் டில்லிக் கூட்டம் சுதர்சனம் நாச்சியப்பன் இந்திய நாடாளுமன்றத்தைச் சேர்ந்த மனித உரிமைகள் மற்றும் உலக வளர்ச்சிக்கான குழு, இலங்கைப் பிரச்சினை தொடர்பாக, இலங்கையில் உள்ள எட்டு தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு நாட்களும் ஆலோசனை நடத்தியது. சுதர்சன நாச்சியப்பன் எம்.பி. தலைமையிலான அந்தக் குழு ஏற்பாடு செய்திருந்த சந்திப்பில், நேற்று தங்களுக்குள் ஆலோசனை நடத்திய இலங்கைப் பிரதிநிதிகள், இன்று இந்திய எம்.பி.க்களுடன் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். சுதர்சனம் நாச்சியப்பன் நேர்காணல் இலங்கை தமிழ் கட்சிகளுடன் பேசிய விடயங்கள் இந்திய நாடாளுமன்றத்தில் அலசப்படும் என்று கூறுகிறார் இந்திய நாடாளுமன்ற உற…
-
- 2 replies
- 1.4k views
-
-
[Wednesday, 2011-08-24 12:56:26] தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பெயர்களில் �ஈழம்� என்ற சொல்லை உள்ளடக்கியதான கட்சிகளைத் தடை செய்யப் போவதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஈழம் என்ற சொல்லானது இலங்கை என்ற சொல்லின் இன்னொரு பொருள் என்பதனால் அதனைத் தடை செய்ய வேண்டிய தேவை இல்லை. இதேவேளை, தேர்தல் திணைக்களத்தினால் அங்கீகரிப்பட்ட சில அரசியல் கட்சிகள் தேர்தல்களில் போட்டியிடாமை மற்றும் தங்களது கட்சிகள் தொடர்பான தகவல்களை வழங்காமை காரணமாக அவற்றை நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது தேர்தல் திணைக்கள சட்ட விதிகளுடன் சம்பந்தப்பட்ட விடயம் எனவும் அவர் தெரிவித்…
-
- 2 replies
- 1.2k views
-
-
முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர் மீண்டும் ஒரு போர்ச்சூழல் போன்ற நிலைமை தாயகத்தில் உருகியுள்ளது. மக்கள் மீது சிங்கள அடக்குமுறை மீண்டும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இந்த அடக்குமுறை அதிகரித்து செல்லுகின்றது. அவர்களின் பொருளாதார வாழ்வாதாரம் மறுக்கப்பட்ட நிலையில் அந்த மக்கள் மீண்டும் ஒரு சூனிய வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த மக்கள் செய்ததாக குற்றம் எதுவும் இல்லை. ஆனால் இவர்கள் அனாதைகளாக விடப்பட்டது போன்ற ஒரு உணர்வே உள்ளது. இந்த அவலத்தில் இருந்து மக்களை மீட்க வேண்டிய கடமை, பொறுப்பு புலம்பெயர் மக்களுக்கு, அமைப்புக்களுக்கு நிறையவே உண்டு.
-
- 6 replies
- 1.2k views
-
-
நாவாந்துறை இராணுவ முகாமையும், காவல்துறை நிலைகளையும் தாக்க முயன்ற போதே 102 பேரைத் தாம் கைது செய்ததாக சிறிலங்கா படைகளின் யாழ்ப்பாணத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார். படையினரை குவித்து யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக கூறிய அவர், காவல்துறைக்கு உதவியாக அந்தப் பகுதியில் கால்நடை மற்றும் வாகன ரோந்துகளை அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார். அதேவேளை, கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு செவ்வி அளித்துள்ள மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, இதனை பொங்கு தமிழ் பாணியிலான தாக்குதல் என்று வர்ணித்துள்ளார். நாவாந்துறை இராணுவ முகாமுக்குள் பொல்லுகள், துவிச்…
-
- 1 reply
- 1.1k views
-
-
அரசியல் தஞ்சம் கோரி அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அகதிகள் சிலரை பொறுப்பேற்க நியூசிலாந்து இணக்கம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் உள்ள அகதி முகாம்களில் இருந்து, வருடாந்தம் 750 அகதிகளை கோட்டா முறையில் பொறுப்பேற்க தீர்மானித்துள்ளதாக நியூசிலாந்து கூறியுள்ளது. ஆனால் இந்தோனேசியாவில் உள்ள 88 இலங்கை அகதிகளை பொறுப்பேற்க முடியாதென நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார். குறித்த 88 பேரும் நியூசிலாந்து நோக்கித்தான் பயணித்தார்கள் என்பதற்கு எதுவித ஆதாரமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நியூசிலாந்தில் அகதி முகாம்களை நடத்திச் செல்லும் திட்டம் எதுவும் தம்மிடம் இல்லை என நியூசிலாந்து பிரதமர் குறிப்பிட்டுள்ளார். http://www.eeladhesa…
-
- 2 replies
- 701 views
-
-
சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புகள் நியாயமற்றவை: இலங்கை யுத்தத்திற்குப் பின்னரான சூழ்நிலையில் சில விடயங்களை இலங்கை குறுகிய காலத்தில் பூர்த்தி செய்ய வேண்டுமென சர்வதேச சமூகம் எதிர்பார்ப்பது நியாயமற்றது என இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. உதாரணமாக, இலங்கையில் யுத்தம் முடிந்து வெறும் இரு வருடங்களில் அடைய வேண்டுனெ எதிர்பார்க்கப்படும் தரநிலையை ஸ்பெய்ன், கம்போடியா, பங்களாதேஷ் போன்ற நாடுகள் அடைவதற்கு பல வருடங்கள் எடுத்தன. வேறு சில நாடுகளில் ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் சென்றது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறினார். சர்வதேச மன்றங்களில், அவை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையாகவோ, ஐ.நா. பொதுச்சபையாகவோ, பாதுகாப்புச் சபையாக இருந்தாலும் அவை தொடர்பான நடைமுறைகள், குறித்…
-
- 2 replies
- 582 views
-
-
அம்பாந்தோட்டைத் துறைமுக வாயில் கடற்பாறை - ஒப்புக்கொள்கிறது சிறிலங்கா அரசு [ புதன்கிழமை, 24 ஓகஸ்ட் 2011, 04:47 GMT ] [ கார்வண்ணன் ] புதிதாக அமைக்கப்பட்ட அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் நுழைவாயிலில் காணப்படும் பாரிய கடற்பாறையை அகற்றுவதற்கு சீனாவிடம் 40 மில்லியன் டொலர் கடனுதவியை கோரியுள்ளதாக சிறிலங்காவின் துறைமுக அதிகாரசபை கூறியுள்ளது. 1.4 பில்லியன் டொலர் செலவில் அமைக்கப்பட்டுள்ள அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் நுழைவாயிலில் காணப்படும் பாரிய கடற்பாறையினால், துறைமுகத்துக்குள் பாரிய கப்பல்கள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை முன்னர் ஐதேக அம்பலப்படுத்திய போது, அதனை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்திருந்தது. …
-
- 1 reply
- 737 views
-
-
விடுதலைப்புலிகளை சிறிலங்கா அரசாங்கம் தோற்கடித்து இருக்கலாம். ஆனால் போரினை அரசாங்கம் வெல்லவில்லை என்றே கூறுவேன். இவ்வாறு கூறியுள்ளார் இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்புஆலோசகர் எம். கே. நாராயணன். . தான் சொல்லும் இந்த விடயம் சிறிலங்காவிற்கு மகிழ்ச்சியினைத்தராது ஆனால் அதுதான் உண்மை. சிறிலங்கா அரசு பக்கம் தமிழர்கள் இல்லை. அவர்களை தம் பக்கம் இழுப்பதால் தான் போரை வென்றதாக கருத முடியும். தமிழ் மக்களை தம் பக்கம் இழுக்க வேண்டும் என்றால் மிகப்பெரியதொரு அதிகாரப்பரவலாக்கலை செய்யவே|ண்டும் எனவும் கூறியுள்ளார். தமிழினப்படுகொலைக்கு உறுதுணையாக இருந்த ஊழல் பெருச்சாழி நாராயணன். இவர் Strait Times என்ற இணையத்திர்கு வழங்கிய நேர்முகத்திலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். . நாங்கள் சிறிலங்…
-
- 5 replies
- 1.9k views
-
-
காத்தான்குடிக்குள் நுழைந்த மூன்று இராணுவத்தினர் மாயம் முஸ்லீம்கள் அதிகமாக வாழும் காத்தகுடி பகுதிக்குள் நுழைந்து காணாமல் போன மூன்று 'மர்மனிதர்களை' தேடி இராணுவம் விரைந்துள்ளது. கண்ணில் காணப்பட்ட இளையவர்களை இராணுவம் தாக்கியது, கடைகளை அடித்து நொறுக்கியது. அதேவேளை இவர்கள் இரமதான் முடிந்த பின்னரே விடுவிக்கப்பவர் என இவர்களை பிடித்து வைத்துள்ளோர் கூறியுள்ளனர். 3 Sinhala ‘intruders’ reported missing in Muslim town in Batticaloa [TamilNet, Wednesday, 24 August 2011, 16:09 GMT] A combined search operation has been launched by the Sri Lanka Army and Sri Lanka Police to trace three Sinhalese persons who are reported to be missing in Muslim dominated …
-
- 0 replies
- 1.1k views
-
-
மன்னார் கஜபா கடற்படை முகாமில் இருந்து ரி56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கான 120 ரவைகளுடனும் தப்பிச்சென்ற கடற்படை அதிகாரி ஒருவரை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர். தற்போது பொலிஸ் காவலில் உள்ள கடற்படை அதிகாரி ஏன் தனது பதவியினைவிட்டு ஆயுதத்துடன் தப்பிச் சென்றார் என அறியமுடியவில்லை என கடற்படை தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கடற்படை தலைமையகத்தில் இருந்து மன்னார் கடற்படை முகாமுக்கு சென்ற கடற்படை அதிகாரிகள் குழுவொன்று விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளதாக கடற்படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது. http://www.eeladhesam.com/index.php?option
-
- 0 replies
- 1.1k views
-
-
நல்லூர்ப் பெருந்திருவிழாவின் 21ம் நாள் வேல்விமானத் திருவிழா என அழைக்கப்படும் தங்க ரதத் திருவிழா மிகவும் சிறப்பாக இன்று இடம் பெற்றது. குழந்தைகள் ரதத்தை இழுத்துவர முருகன் வள்ளி தெய்வயானையுடன் வெளி வீதி உலா வந்து பத்தர்களுக்கு அருளாசி வழங்கினார் மேலும் படங்களுக்கு இதனைகிளிக்செய்யவும் நல்லூர் தேர்த்திருவிழா தீர்த்தத்திருவிழா நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது மேலும் புகைப்படங்களை எமது புகைப்படப் பிரிவில் பார்வையிடலாம்
-
- 0 replies
- 613 views
-
-
-
[Wednesday, 2011-08-24 14:11:15] இருபது நாடுகளின் விமானப்படை அதிகாரிகள் பங்கேற்கும் பசுபிக் வான் மீட்பு ஒத்திகையின் ஒரு கட்டமாக இன்று அம்பாறை மாவட்டத்தில் வான்பரப்பில் விநியோகப் பொதிகளை போடும் ஒத்திகைப் பயிற்சி மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது . இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமான பயிற்சி மாலை 4 மணிவரை நீடிக்கும் எனவும் சி-130 இராட்சத விமானங்களில் இருந்து அம்பாறை மாவட்டத்துக்கு மேலாக பொதிகளை போடும் பயிற்சிகள மேற்கொள்ளப்படுவதாகவும் இந்த ஒத்திகைப் பயிற்சியில் சிறிலங்கா, அவுஸ்ரேலியா, மலேசிய விமானப்படைகளின் தலா ஒரு விமானமும், அமெரிக்க விமானப்படையின் மூன்று விமானங்களும் பங்கேற்பதாகவும் தெரிவிக்கப்டுகிறது. அதேவேளை நாளையதினம் சிறிலங்கா மற…
-
- 1 reply
- 914 views
-
-
[Wednesday, 2011-08-24 12:41:38] மர்ம மனிதன் தொடர்பான உண்மைத் தன்மையினை பாதுகாப்புத் தரப்பினர் உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுறை சந்திரகாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். பாதுகாப்பு தரப்பினருக்கும் நாட்டின் இளைஞர்களுக்கும் என அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த கோரிக்கை முன்வைத்துள்ளார். அவர் விடுத்தள்ள அறிக்கை: கிழக்கு மாகாணத்தில் கடந்த ஓரிரு வாரங்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற மர்ம மனிதன் தொடர்பான மிக குழப்பகரமான நிலையினை ஓர் பொறுப்புமிக்க அரசியல் கட்சி என்ற வகையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது ஆழ்ந்து உற்று நோக்கி வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் தொடர்…
-
- 0 replies
- 736 views
-
-
[Wednesday, 2011-08-24 13:30:12] தங்களின் சிறப்பு கவனத்தை ஈர்த்து தமிழர்களின் வேதனையை தீர்க்க வேண்டி விடுக்கப்படும் வேண்டுகோள் இது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் கொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்ட 26 பேர்களுக்கும் மூடிய நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர் விசாரணை நீதிமன்றத்தால் மரண தண்டனை அளிக்கப்பட்டது தாங்கள் அறிந்ததே. பின்னர் அவ்வழக்கு மரணதண்டனையை உறுதி செய்ய அன்று இருந்த தடா சட்டத்தின் படி நேரடியாக இந்திய உச்ச நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு 26 பேர்களில் நால்வருக்கு மரண தண்டனையும்இ நால்வருக்கு ஆயுள் தண்டனையும்இ மீதி பேர்களுக்கு தண்டனை குறைக்கப்பட்டு விடுவிக்கப் பட்டனர். அவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களின் மீதான குற்றச்சாட்டுக்கள் …
-
- 0 replies
- 437 views
-