ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
Published By: VISHNU 25 DEC, 2023 | 08:20 PM (நா.தனுஜா) இலங்கையில் கடந்தகாலங்களில் நியமிக்கப்பட்ட அனைத்து ஜனாதிபதி ஆணைக்குழுக்களும் 'என்ன நேர்ந்தது' என்பதைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டனவே தவிர, அவை 'யார் அதனைச் செய்தது' என்பதைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என சுட்டிக்காட்டியிருக்கும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம், எனவே தற்போதைய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும் அதனை ஒத்த நடவடிக்கையா எனக் கேள்வி எழுப்பியிருக்கின்றது. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துவரும் முயற்சிகள் பாதிக்கப்பட்டோர் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினரதும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில்…
-
- 0 replies
- 335 views
- 1 follower
-
-
25 DEC, 2023 | 07:07 PM தொழில் இல்லாத காரணத்தால் நத்தார் பண்டிகைக்கு பிள்ளைகள், மனைவிக்கு ஆடை வாங்கிக் கொடுக்க வழியின்றி, மனமுடைந்த நிலையில், 5 பிள்ளைகளின் தந்தை ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) இரவு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்துள்ளார். எனினும், அவர் அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மட்டக்களப்பில் நேற்றிரவு 11 மணிக்கு இடம்பெற்று, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இயேசு நாதரின் பிறந்த தினம் எனது இறந்த தினமான அமைய வேண்டும் என்று கருதியே இந்த தந்தை தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவரான 42 வயது…
-
- 2 replies
- 595 views
- 1 follower
-
-
25 DEC, 2023 | 12:01 PM வடக்கில் கொரோனா அச்சம் இல்லை எனவும், ஆனால் டெங்கின் தாக்கம் அதிகரித்து செல்வதனால், டெங்கு தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வடமாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளரும், யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளருமான த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கொரோனா தொற்று எவையும் நீண்டகாலமாக வடமாகாணத்தில் பதிவாகவில்லை. ஆனால் அண்மைய நாட்களாக டெங்கு நோய் தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றன. தினமும் சராசரியாக 100 பேர் வரையில் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்றனர். எனவே வடமாகாண மக்கள் கொரோனா தொற்று …
-
- 1 reply
- 296 views
- 1 follower
-
-
ஜே.என்-1 ஒமிக்ரோன் வகை புதிய கொரோனா வைரஸ் திரிபானது இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் ஆய்வுகூட தலைவரான சந்திம ஜீவந்திர தெரிவித்துள்ளார். தமது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் அவர் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார். கொவிட்-19 சோதனைகள் தற்போது குறைந்தளவிலேயே முன்னெடுக்கப்படுவதால், அதன் உண்மையான தரவுகளை பெற முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், கொரோனா வைரஸுக்கு எதிரான நோயெதிர்ப்பு தடுப்பூசிகள் இன்னும் வழங்கப்படுகின்றன. அதிக பாதிப்பினை எதிர்கொள்ளும் தரப்பினர் பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெறுவது முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக…
-
- 4 replies
- 602 views
- 1 follower
-
-
இந்த வருடத்தில் 21,953 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த விபத்துக்களில் 2,163 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார். மேலும், இந்த விபத்துக்களில் 5,206 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் நிரந்தரமாகவோ அல்லது பகுதியாகவோ ஊனமுற்றுள்ளார்கள் எனவும் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார். இலங்கை மருத்துவ சங்கத்தின் வீதி பாதுகாப்பு நிபுணர் குழுவின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். மேலும் கருத்து தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், டிசம்பர் மற்றும் ஜனவரி முதல் வாரங்களில் அதிகளவு வீதி விபத்துக்கள் பதிவாகி வருவதாகவும், இதற்கு குடிபோதைய…
-
- 8 replies
- 594 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, மஹிந்த ராஜபக்ஷ கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 24 டிசம்பர் 2023, 07:04 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ''நாங்கள் கோழைகள் என நினைக்க வேண்டாம். வீதியில் செல்லும் நாய் ஒன்றின் மீது கல்லை எறிந்து தாக்கினால், அது குரைத்துக்கொண்டு வேகமாக ஓடும். ஆனால், சிங்கத்தின் மீது கல்லை எறிந்தால், யார் கல்லை எறிந்தார்கள் என்று அது திரும்பிப் பார்க்கும். அதுபோலத்தான் நாங்கள். எம் மீது கல்லை எறிய வேண்டாம். நாம் திரும்பிப் பார்ப்போம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது கல் எறிய வேண்டாம். நாங்களும் திரும்பிப் பார்ப்போம்" என ஸ்ரீலங்கா பொதுஜன ப…
-
- 6 replies
- 971 views
- 1 follower
-
-
யாழில் போதைப்பொருட்களுடன் கைதாகும் பெண்கள் – பெருமளவான பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகளும் மீட்பு! adminDecember 22, 2023 யாழ்ப்பாணம், துன்னாலை பகுதியில் கடந்த மூன்று தினங்களில் போதைப்பொருட்களுடன் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்களிடம் இருந்து பெருமளவான பணம், கையடக்க தொலைபேசிகள் மற்றும் போதைப்பொருட்கள், என்பவை மீட்கப்பட்டுள்ளன. நெல்லியடி காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் துன்னாலை பகுதியை சேர்ந்த 43 வயதான பெண்ணொருவரை கைது செய்து, அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில். அவரிடம் இருந்து 620 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் , 16 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 06 இலட்சத்து 78 ஆயிரத்து 9…
-
- 3 replies
- 468 views
- 1 follower
-
-
14 இலங்கையா்கள் திருப்பி அனுப்பட்டுள்ளனா். adminDecember 25, 2023 சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக பிரான்சின் ரீயூனியன் தீவிற்கு செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்ட 14 இலங்கையா்கள் ரீயூனியன் தீவின் அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் UU 0050 என்ற விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் பேருவளை, சிலாபம் மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேசங்களைச் சோ்ந்த 21 – 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் இலங்கை காவல்துறையினா் இணைந்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளத…
-
- 0 replies
- 225 views
-
-
24 DEC, 2023 | 07:17 PM (எம்.நியூட்டன்) இனவாதம், மதவாதம், போர், இறப்பு, பசி, பட்டினி என நீண்டுகொண்டே செல்லும் காரிருளின் ஆட்சிக்கு பாலகன் இயேசுவின் பிறப்பு நிச்சயமாக முற்றுப்புள்ளி வைக்கும் என்பதை நம்புவோம் என யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார். தனது கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், காரிருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ளோர் மேல் சுடரொளி உதித்தது. ஒளி அல்லது பேரொளி என்பது இருளற்ற நிலையாகும். ஒளியற்ற நிலை என்பது பார்வையிழந்த நிலையாகும். பார்வையிழந்த நிலையில் ஒரு மனிதனோ மனி…
-
- 0 replies
- 415 views
- 1 follower
-
-
23 DEC, 2023 | 02:15 PM சட்டவிரோதமான முறையில் ரிவோல்வர் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் சிறிய கத்திகளை கொண்டு வந்த இங்கிலாந்து பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது. கைதுசெய்யப்பட்டவர் 54 வயதுடைய இங்கிலாந்து பிரஜையாவார். இவர் இங்கிலாந்திலிருந்து ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம் மூலம் நேற்று (22) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் அனுமதியின்றி ஆயுதங்களை கொண்டுவந்துள்ளதாக பொலிஸார் …
-
- 33 replies
- 3.2k views
- 1 follower
-
-
23 DEC, 2023 | 04:04 PM (நா.தனுஜா) இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் தமிழர்களுக்கான ஏற்றுக்கொள்ளத்தக்க இறுதித்தீர்வு இன்னமும் வழங்கப்படவில்லை என்ற உண்மையை இந்திய ஆட்சியாளர்களிடம் கொண்டுசென்று, அதனைப் பெற்றுக்கொடுப்பதற்கு அவசியமான அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு வழிவகை செய்யவேண்டுமென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் சந்தோஷ் ஜா வெள்ளிக்கிழமை (22) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தனது நற்சான்றுப் பத்திரத்தைக் கையளித்தார். …
-
- 6 replies
- 611 views
- 1 follower
-
-
யாழில் உள்ள மகிந்தவின் வீடு! பல வருடமாக கட்டப்பட்ட இரகசிய மாளிகை! குவிந்து கிடக்கும் தங்கம்
-
- 1 reply
- 689 views
-
-
வெளிநாட்டு ஆசை காட்டி யாழில் கோடிக்கணக்கில் மோசடி எம்.றொசாந்த் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி, கடந்த இரு வாரங்களில், யாழில் இரண்டரை கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தினை போலி முகவர்கள் மோசடி செய்துள்ளனர் என பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடந்த 2 வார காலப் பகுதிக்குள் 10 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றின் அடிப்படையில் சுமார் இரண்டரை கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களில் வந்த விளம்பரங்களை நம்பியே பணத்தினை இழந்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். வெளிநாடுகளுக்கு அனுப…
-
- 1 reply
- 535 views
- 1 follower
-
-
மியன்மாரில் பயங்கரவாதிகளினால் தடுத்துவைக்கப்பட்டுள்ள 56 இலங்கையர்களை மீட்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க அந்நாட்டு உள்துறை அமைச்சர் இணக்கம் வௌியிட்டுள்ளார். இந்த விடயத்தை மியன்மாருக்கான இலங்கை தூதுவர் உறுதி செய்துள்ளார். மியன்மாரின் தாய்லாந்து எல்லைக்கு அருகே பயங்கரவாத குழுவொன்றின் சைபர் அடிமைகளாக இலங்கை இளைஞர்கள் சிலர் பலவந்தமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல்கள் வௌியாகின. குறித்த பிரதேசம் கூகுள் வரைபடத்தில் “Cyber Criminal Area” எனப்படும் சைபர் குற்றப் பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மியன்மாரின் மியாவெட்டி (Myawaddy) நகரில் இருந்து 25 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள இந்த பகுதி முழுமையாக பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் காணப்ப…
-
- 2 replies
- 518 views
- 1 follower
-
-
தமிழ் மக்களை, ஜனாதிபதி தொடர்ந்தும் ஏமாற்றி வருகிறார்! adminDecember 23, 2023 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல்வாதிகளை பாவித்து தன்னுடைய அடுத்த தேர்தலின் வெற்றியை நோக்கியாக மட்டும் கொண்டு செல்லும் இந்த பாதையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்பதற்காகவே தமக்கு அழைப்பே விடுக்கப்படவில்லையெனவும் கூறியுள்ளார். ஜனாதிபதியை பாராட்டவேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், சரியான தரப்புகள் யார், ஏமாற்றக்கூடிய தரப்புகள் யார்? ஏமாற தயாரில்லாத தரப்புகள் யார் என்பதை அவர் சரியாக கண்டுபிடித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியு…
-
- 3 replies
- 265 views
-
-
கிழக்கின் பிரச்சினைகளுக்கு பேச்சளவில் இணக்கப்பாடு - கோவிந்தன் கருணாகரம் எம்.பி டிசம்பர் 22, 2023 பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டோரின் விடுதலை, மயிலத்தமடு மாதவணை பிரச்சனை போன்றவற்றிற்கு பேச்சளவில் இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். வடக்கு - கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி மேற்கொண்ட சந்திப்பு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், உள்ளூராட்சி மன்றங்களுக்கு அமைய தற்காலிக ஊழியர்கள் நிரந்தரமாக்கல்,13வது திருத்தம் முழுமையாக நடைமுறையாக்கல், வடகிழக்கில் அபிவிருத்தி செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஜனாதியுடன…
-
- 2 replies
- 558 views
-
-
முள்ளிவாய்க்கால் - காஸா ஒப்பிட்ட "யுனிசெப் பேச்சாளர்" (ஆதவன்) 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் முள்ளிவாய்க்காலில் தான் பெற்ற அனுபவங்களை காஸாவுடன் ஒப்பிட்டுள்ளார் 'யுனி செப்' பேச்சாளரான ஜேம்ஸ் எல்டர். "எம்மிடம் சுயாதீன ஆய்வுக் குழுக்கள் இருந்தன. எனினும் இலங்கை விடயத்தில் நாங்கள் தோல்வியடைந்துள்ளோம். முள்ளிவாய்க்காலில் இடம் பெற்ற மோதலில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் சிறுவர்கள் கொல்லப்பட்டதையும் காயமடைந்ததையும் நான் நேரில் பார்த்தேன். அப்போது நான் புலிகளுக்கு ஆதரவாக பரப்புரை செய்வதாக ஐ.நா. வுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி கருத்துத் தெரிவித்திருந்தார்." என்று எல்டர் கூறியுள்ளார். எல்டரை இலங்கை அரசாங்கம் வெளியேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்…
-
- 4 replies
- 728 views
-
-
23 DEC, 2023 | 04:42 PM சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு மகஜர் வழங்குவதற்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது. வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதிக்கு 28 வருடங்களாக சிறையில் வாடுகின்ற அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் மகஜர் ஒன்றைத் தயாரிக்கும் முகமாக குறித்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இடையேயான சந்திப்பு குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஒழுங்குபடுத்தியது. யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்ற சந்திப்பில் அரசியல் கைதிகளின் உறவினர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சிவில் சமூகத்தினர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். …
-
- 0 replies
- 414 views
- 1 follower
-
-
GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்! adminDecember 19, 2023 உலகத் தமிழர் பேரவையும், கனேடிய தமிழ் காங்கிரஸும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் சந்தித்து கலந்துரையாடியமைக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம் வெளியிட்டுள்ளார். பாரிய மனித உரிமை மீறல்களுக்காக மஹிந்த ராஜபக்ஸ மற்றும் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோர் மீது 2023 ஆம் ஆண்டு ஜனவரி கனேடிய அரசு தடைகளை விதித்தமையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள், இனப்படுகொலை என்பவற்றுக்கு பொறுப்புக் கூறலை வலியுறுத்தி பல வருட போராட்டத்திற்கு பின்னரே இந்த தடை விதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள், சமூக அமைப்புக…
-
- 70 replies
- 6k views
- 1 follower
-
-
பிரமிட் அமைப்புகளால் யாழிலும் பலர் ஏமாற்றம்! (ஆதவன்) தடைசெய்யப்பட்ட பிரமிட் அமைப்புகள் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றன. அவை கண்டறியப்பட்டு சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சட்டமா அதிபரிடம் மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது. தடைசெய்யப்பட்ட பிரமிட் நிறுவனங்களுள் குளோபல் லைப் ஸ்டைல் லங்கா லிமிட்டெட் முதலிடம் வகிக்கிறது. இந்த நிறுவனத்தின் வலையில் சிக்கி யாழ்ப்பாணத்திலும் பலர் ஏமாந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. (ஐ) https://newuthayan.com/article/பிரமிட்_அமைப்புகளால்_யாழிலும்_பலர்_ஏமாற்றம்!
-
- 0 replies
- 387 views
-
-
வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களுக்கு தற்காலிகமாக அனுமதி மறுப்பு வெளிநாடுகளிலுள்ள ஆய்வுக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் ஆய்வு நடவடிக்ைககளை மேற்கொள்வதற்கு வழங்கப்படும் அனுமதி மறுஅறிவித்தல்வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அதுதொடர்பில் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அறிவித்தல் விடுப்பதற்கு நடவடிக்ைக எடுக்கப்பட்டதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் இவ்வாறான ஆய்வு கப்பல்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்காக இலங்கை துறைமுகங்களில் அவற்றை நங்கூரமிட முடியுமென்றும் அதனை எவ்விதத்திலும் நிறுத்தமுடியாதெனவும் வெளிவிவகார அமைச்சு சுட்டி…
-
- 0 replies
- 233 views
-
-
மாகாண சபைகளுக்கு காவற்துறை அதிகாரம் தேவை! ஜனநாயக நாடு என்ற அடிப்படையில் மாகாண சபை அவசியம்.! adminDecember 23, 2023 மாகாண சபைகளுக்கு காவற்துறை அதிகாரம் தேவை என முன்னாள் தேர்தல் ஆணையாளரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஜனநாயக இளைஞர் காங்கிரஸ் மற்றும் பீபிள்ஸ் பவுண்டேசன் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து நடத்திய செயலமர்வொன்று கண்டி வரையறுக்கப்பட்ட கூட்டுறவு அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ஜனநாயக நாடு என்ற அடிப்படையில் மாகாண சபை அவசியம். மாகாண சபை இந்நாட்டுக்கு அவசியமில்லை என யாராவது குறிப்பிடுவார்கள…
-
- 0 replies
- 145 views
-
-
21 DEC, 2023 | 07:09 AM ஐனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஐனாதிபதியுடனான சந்திப்பில் தான் பங்கேற்கமாட்டேன் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பதிலளித்து அனுப்பிய கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது என்ற மிக முக்கியமான விடயம் தொடர்பில் ஜனாதிபதியால் ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அமுல்படுத்தாமல் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி குற…
-
- 6 replies
- 679 views
- 1 follower
-
-
ஜனாதிபதியிடம் இருந்து நல்லிணக்கம் தொடர்பில் சாதகமான பதில்! நல்லிணக்கம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் சாதகமான பதில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வடக்கு – கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் காணி, மீள் குடியமர்த்தல், நல்லிணக்கத்திற்கு அமைவாக சட்டத்தை நடைமுறைப்படுத்தல், தமிழக அகதி முகாம்களில் இருக்கும் இலங்கையரின் பிரச்சினைகள், வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பிலும் கலந்துரையாடல் இடம்பெற்றன . இந்தச் சந்திப்பில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீர…
-
- 1 reply
- 706 views
-
-
இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனையில் ரஷ்யா தலையிடாது! “இலங்கையில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் பிரச்சனை தொடர்பாக ரஷ்யா தலையிடவோ, விமர்சிக்கவோ போவதில்லை” என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் ஸகார்யன் (Levan Dzhagaryan) தெரிவித்துள்ளார். ரஷ்ய தூதரகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” இறையாண்மை கொண்ட நாடு என்ற வகையில் இலங்கையால் தனது வெளியுறவுக் கொள்கையை சுதந்திரமாகச் செய்படுத்த முடியும். இலங்கையில் உள்நாட்டு விவகாரங்களில் கருத்து தெரிவிப்பதை நான் தவிக்கின்றேன். முக்கியமாக இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் விமர்சிக்கவோ அல்லது தலையிட…
-
- 2 replies
- 533 views
-