Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Jul 8, 2011 / பகுதி: செய்தி / இலங்கை வங்கியும் மக்கள் வங்கியும் செட்டிகுளத்தில் சுருட்டிய பணம் எங்கே? வவுனியா, செட்டிகுளம் இடம் பெயர்ந்தோர் முகாம்களில் வாழ்ந்த மக்களின் அவல வாழ்வு பற்றிச் சற்றுறேனும் சிந்திக்காத இலங்கைத் தீவின் இரு முக்கிய அரச வங்கி அதிகாரிகள் பணம் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இலங்கை வங்கி (Bank Of Ceylon) மக்கள் வங்கி (People Bank) ஆகியவற்றின் உயரதிகாரிகள் பிரசார வாகனம் சகிதமாக செட்டிகுளம் கூடாரக் கிராமத்திற்கு வருவார்கள். அவர்களுடைய வாகனத்தில் ஒலி பெருக்கிகள் பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் அவர்கள் அப்பாவி மக்களை நோக்கிப் பின்வருமாறு அறைகூவல் விடுப்பார்கள். நீங்கள் மறைத்து வைத்திருக்கும் பணம், தங்க நகைகள் போன்றவற்றை எமது வங்கி…

  2. Friday, July 8, 2011, 0:44இந்தியா, உலகம், சிறீலங்கா வன்னியில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தில் ஒரு லட்சம் வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமை ஐ.நா. அறிக்கை மற்றும் சர்வதேச செஞ்சிலுவைக் குழு ஆகியன வெளியிட்ட அறிக்கைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக இந்திய பேராசிரியர் போல் நியூமன் தெரிவித்துள்ளார். ரைம்ஸ் ஒப் இந்தியா என்ற ஊடகத்திற்கு வழங்கிய தகவல் ஒன்றில் இந்தியாவின் பெங்களூர் பல்கலைக்கழகத்தின் அரசறிவியற்துறைப் பேராசிரியர் போல் நியூமன் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார். வன்னிப் போரின்போது இலங்கை இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்டிருந்த மோதல் தவிர்ப்பு வலயத்திலிருந்து காயமடைந்த சுமார் பதினான்காயிரம் பேரை தாம…

  3. பதிந்தவர்: ADMIN வியாழன், 7 ஜூலை, 2011 ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்தவுள்ள ஈழத் தமிழர் ஆதரவு இயக்கத்தில் தமிழர்கள் அனைவரும் முழுமையாகப் பங்கேற்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. இது தொடர்பில் நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கை. ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்த சிறிலங்க அரசு போர்க் குற்றம் புரிந்துள்ளது, தமிழர்களுக்கு எதிராக மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்துள்ளது என்று ஐ.நா.பொதுச் செயலர் அமைத்த நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியும், இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை இந்திய அரசு அறிவி…

  4. இலங்கைத்தமிழர்கள் தொடர்பில் தமிழ் நாட்டு மக்கள் உணர்ச்சியுடன் செயற்படுகின்றார்கள். தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளை நாம் மதிக்கின்றோம். அவர்களின் உணர்வுகள் குறித்து இந்திய மத்திய அரசாங்கம் உணர்ச்சியற்றிருக்க முடியாது என இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் கூறியுள்ளார். . இலங்கை, மாலைதீவு நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் குழுவொன்றை புதுடில்லியில் நேற்று முந்தினம் செவ்வாய்க்கிழமை சந்தித்து உரையாடியபோதே அவர் இவ்வாறு கூறினார். . இலங்கையில் நடைபெறும் விடயங்கள் குறித்து தமிழ் நாட்டு மக்களும் அரசியல் கட்சிகளின் அங்கத்தவர்களும் அவ்வப்போது கரிசனைகளை வெளிப்படுத்துவதாக நிருபமா ராவ் கூறினார். அங்கு தமிழ் பேசும் மக்கள் உள்ளனர். இலங்கையில் தமிழ் மக்களுக்கு கவலையளிக்கும் ஏதேன…

  5. அதிகரிக்கும் ஊடக வேகம் – ஜொனதன் மிலர் அமெரிக்காவில், இந்தியாவிற்கும் செல்வார் Thursday, July 7, 2011, 22:10 இந்தியா, உலகம், சிறீலங்கா பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சியின் படுகொலைக்களக் காணொளியை சிறீலங்கா அரசாங்கம் மறுத்தமை மட்டுமன்றி, அதற்குப் பதிலாக தமிழில் பேசும் காணொளியை தயாரித்து வெளியிட்டுள்ள பின்புலத்தில், சனல்-4 தொலைக்காட்சியின் வேகம் மேலும் அதிகரித்துள்ளது. இந்தத் தொலைக்காட்சியின் வெளிநாட்டு செய்தியாளரும், இலங்கை பற்றிய நிகழ்ச்சிகளை அடிக்கடி வழங்கி வருபவருமான ஜொனதன் மிலர் தற்பொழுது நியூயோர்க்கில் நிற்கின்றார். இவர் அங்கு தங்கியுள்ள சிறீலங்கா அரசாங்கத்தின் வதிவிடப் பிரதிநிதிகளும், போர்க்குற்ற நபர்களுமான பாலித கோஹொன, முன்னாள் படைத்தளபதி …

  6. புலம்பெயர்ந்த மக்கள் நடத்திய ஆர்பட்டங்களின் காணொளி மற்றும் புகைப்படங்களை இலங்கை அரசிடம் Thursday, July 7, 2011, 23:10 கட்டுரைகள், தமிழீழம் எமது தாயாக விடியலுக்க எமது மக்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் உணர்வு புர்வமாக பல போராட்டங்களை முன் எடுத்து அதை உலக நாடுகளிற்கும் தெரியபடுத்தி வந்தமை யாவரும் அறிந்ததே இவர போராட்டங்கள் இனவெறி இலங்கை அரசுக்கு பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியதி . குறிப்பாக ஜி.ஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் முதல் இடைநிறுத்துவதென ஐரோப்பிய சங்கம் முடிவு செய்தது .இலங்கை அரசின் மேல் போர்குற்ற விசாரணைகள் நடத்தவும் இவறன ஆர்பாட்டங்கள் வலுச்சேர்த்தன . இந்த நிலையில் தற்போது இலங்கை அரசுடன் சில புலம்பெயர்ந்த அமைப்புக்களு…

  7. இலங்கைப் போர்க்குற்ற விவகாரத்தில் நோர்வே அதீத அமைதி காப்பது ஏன்? Aftenposten நாளிதழ் கேள்வி! இலங்கை தொடர்பாக அதீத அமைதியைக் கடைப் பிடிக்கும் தெரிவினை நோர்வே கொண்டுள்ளது. சனல் 4இன் 'இலங்கையின் கொலைக் களங்கள்' ஆவணப்படம் முதன்முதலில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் காண்பிக்கப்பட்ட போது, நோர்வேஜிய இராஜதந்திரிகள் அங்கு பிரசன்னமாகி இருந்தனர். ஆனால் அதனைத் தொடர்ந்து சிறிலங்கா விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய அரசாங்கங்கள் குரல் எழுப்பின. நோர்வே அசையவேயில்லை. இவ்வாறு நோர்வேயின் Aftenposten நாளிதழில் அதன் அனைத்துலக அரசியல் கட்டுரையாளர் Kristoffer Ronemberg. நேற்று முன்தினம் (05.07.2011) எழுதிய கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு அரசாங்கத்திற்கும…

  8. தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச ஆயுத முகவர் மற்றும் தற்போது அரசால் கைது செய்து? தடுத்து வைக்கப்பட்டுள்ள கேபி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஓரளவு புனர்வாழ் பெற்றுவிட்டார் என அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல காமெடி பண்ணியுள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், புலர்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு ஈழம் என்பது வெறும் கனவு மாத்திரமே என்று கேபி தெரிவித்துள்ளமை, அவர் புனர்வாழ்வினை ஓரளவு பெற்றுக்கொண்டுவிட்டார் என்பதற்கு சான்று எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் கேபியின் சேவையினை நலன்புரிச் சேவைக் காரணங்களுக்காக…

  9. அணிசேர நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் பல இலங்கை குறித்து ஐநா நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இவ்வாறு 22 நாடுகள் ஐநா நிபுணர் குழு அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்ஸிலில் ஐநா நிபுணர் குழு அறிக்கையை தோல்வியடையச் செய்ய முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=8386:----22---&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

  10. [Thursday, 2011-07-07 18:25:14] இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளில் சீனா முதலிடம் பெற்றுள்ளதாக நிதி திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மொத்தமாக 1,385 மில்லியன் ஐ.அ.டொலர் பெறுமதியான புதிய கடன்களை இலங்கை பெற்றுள்ளது. இதில் சீனாவிடம் இருந்து மட்டும், 759.8 மில்லியன் ஐ.அ.டொலர் (மொத்த கடனில் 55%) பெறுமதியான கடன் பெற்றுக் கொண்டதாக நிதி திட்டமிடல் அமைச்சு வெளியிட்டள்ள நடு ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேகாலத்தில் 413.4 மில்லியன் ஐ.அ.டொலரை வழங்கிய (30%) ஐப்பான் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இது தவிர உலக வங்கி ($.105.8m), ஆசிய அபிவிருத்தி வங்கி ($.89.2m), ஐ.நா. நிறுவனங்கள் ($.8.8m), இதர கடன் வழங்கும் முகவர்கள் ($.208.8m)…

  11. கல்லூரி கல்லூரியாகச் சென்று மாணவர்களிடம் ஈழ அவலம் தொடர்பான குறுந்தகட்டை விநியோகித்தார் வைகோ மதிமுக பொதுச்செயலாளரும் உணர்வாளருமான வைகோ கடந்த ஒரு வாரமாக கல்லூரி கல்லூரியாக சென்று ஐ.நா அறிக்கை தொடர்பாகவும் ஈழத்தின் அவலம் தொடர்பாகவும் அவர் தயாரித்த குறுந்தகடை மாணவர்களிடம் இலவசமாக விநியோகித்து வருகிறார். ஒரு கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் அன்றி ஒரு உணர்வாளராக தானே முன்னின்று மாணவ மாணவிகளிடம் இதனைப் பரப்பி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை மாநிலக் கல்லூரியிலும் நேற்று பச்சையப்பா கல்லூரியிலும் இன்று லயோலா கல்லூரி முன்பும் இக்குறுந்தகடை அவர் நேரடியாக விநியோகித்தார். சென்னை மாநில கல்லூரி மாணவர்கள், 'நீங்கள் இக்கல்லூரி பழைய மாணவர்…

    • 0 replies
    • 903 views
  12. வாழ்வாதாரத்தை உயர்த்த தொழில் கொடுங்கள் புலம்பெயர் உறவுகளே…! திருமுறிகண்டிப் பகுதியில் குடியேறியுள்ள குடும்பங்களில் இருந்து 7குடும்பங்கள் தங்கள் தொழில் வாய்ப்பு வேண்டிய உதவிகளை வேண்டியுள்ளனர். இக்குடும்பங்கள் போரில் உறவுகளை இழந்தும் பிள்ளைகளை இழந்தும் காணப்படுகிறார்கள். இவர்களில் கணவன்மார் தடுப்புமுகாமில் உள்ள குடும்பத்துப் பெண்களும் உள்ளடங்குகின்றனர். இக்குடும்பங்கள் மலையகப்பகுதிகளிலிருந்து வன்னியில் வந்து குடியேறியவர்கள். ஆயினும் இவர்களது சந்ததி வன்னி திருமுறிகண்ணியிலேயே நீண்டகாலமாக வாழ்ந்து வருகின்றனர். இம்மக்கள் விவசாயத்தையும் கால்நடைகளையும் நம்பியே வாழ்ந்தவர்கள். தொடர் இடப்பெயர்வு யுத்தசூழல் இவர்களது வாழ்வாதாரத்தைச் சிதைத்துவிட்டது. இன்று யுத்தம் …

    • 2 replies
    • 939 views
  13. [Thursday, 2011-07-07 11:03:53] எதிர்வரும் யூலை 09 ஆம் நாள் தென் சூடான் குடியரசு என்ற ஒரு புதிய நாடு பிறக்கவுள்ளது. இலடச்சக்கணக்கான தென் சூடானிய மக்கள் அதன் பிறப்பைக் கொண்டாட இருக்கிறார்கள். தென் சூடானின் தலைநகரம் யுபா (Juba) விழாக் கோலம் பூண்டுள்ளது. தென் சூடான் அடக்குமுறைக்கு எதிராகப் பல ஆண்டுகள் போராடி வந்துள்ளது. ஆபிரிக்காவின் எண்ணெய் வளமிக்க நாடான சூடானுக்கு 1956 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. 1989 ஆம் ஆண்டு நடந்த இராணுவப் புரட்சியை அடுத்து ஒமர் அல் பக்ஷீர் ஆட்சியைப் பிடித்தார். இஸ்லாமிய சட்டத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தார். இதற்கு தென்பகுதியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இனக் கலவரம் வெடித்தது. வடக்கில் அரபு முஸ்லிம்களும், தெற்கில் பழ…

    • 6 replies
    • 839 views
  14. சிறிலங்காவின் கொலைக்களங்கள் - நாமும் மனிதர்கள்தானா ?? குமுறும் அவுஸ்திரேலிய வானொலி தொகுப்பாளர் அண்மையில் அவுஸ்த்திரேலியாவின் எல்லாப் பகுதிகளிலும் மூன்றுமுறை ஒளிபரப்பப்பட்ட சிறிலங்காவின் கொலைக்களங்கள் எனும் விவரணத்தைப் பார்த்து பலரும் கொதிப்படைந்திருக்கிறார்கள். தனியார் வானொலி ஒன்றின் நிகழ்ச்சித் தொகுப்பாளர், "மாடுகள் கொடூரமாகக் கொல்லப்பட்டதால் கொதிப்படைகிறோம், ஆனால் மக்களை ஆயிரக்கணக்கில் கொடூரமாகக் கொன்றுகுவிக்கிறார்கள், பெண்களிக் கூட்டாகக் கற்பழித்துக் கொலை செய்து மார்பகங்களை அறுத்தெறிகிறார்கள், வீதியில் அடிபட்டுக் கிடக்கும் நாய்களைப்போல வேட்டையாடப்பட்ட பெண்களி டிராக்டரில் தூக்கி எறிகிறார்கள், நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்"? என்று கொதித்துப் பேசுகிறார். அவரி…

    • 1 reply
    • 937 views
  15. [Thursday, 2011-07-07 17:53:36] அச்சுவேலி நாவற்காட்டுப் பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த ரவீந்திரன் கிருஷ்ணகுமாரி (வயது36) என்பவரின் சட லமே மீட்கப்பட்டுள்ளது. வவுனியா நலன்புரி முகாமில் இருந்து வந்து மீளக் குடியேறிய இந்தப் பெண்ணின் கணவர் அண்மையிலேயே விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவ இடத்தில் மல்லாகம் நீதிவான் விசாரனைகளை மேற்கொண்டு உடற்கூற்றுப் பரி சோதனைக்காக சடலத்தை யாழ். போதனா வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்குமாறு உத்தரவிட்டார். அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=461…

  16. வியாழக்கிழமை, 07 யூலை 2011, 00:18 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக இந்த ஆண்டு இறுதிக்குள் சிறிலங்கா அனைத்துலக நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள நேரிடலாம் என்று ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர எச்சரித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் முறைப்படி விசாரணை நடத்துவதற்குப் பதிலாக நகைப்புக்கிடமான செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த நடவடிக்கையால், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்கா நிறுத்தப்படும் ஆபத்து இருப்பதாகவும் மங்கள …

    • 1 reply
    • 538 views
  17. [ வியாழக்கிழமை, 07 யூலை 2011, 08:25 GMT ] [ தி.வண்ணமதி ] ஐ.நா வழங்கியிருக்கும் தகவலின் அடிப்படையில் மீள்குடியேற்றப்பட்ட மக்களில் 63 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் வறுமைக்கோட்டின் கீழேயே வாழுகிறார்கள். இவ்வாறு ஐநாவின் மனிதார்ந்த செயற்பாட்டிற்கான பணிகளை இணைக்கும் செயலகத்தின் இணையத்தளமான IRIN வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. சிறிலங்காவில் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த போர் முடிவுக்குவந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டபோதிலும் சிறிலங்கா அரசாங்கமும் அனைத்துலக நிறுவனங்களும் மீள்கட்டுமானப் பணிகளை முன்னெடுத்துவந்தாலும்கூட மீள்குடியேறிய மக்கள் வாழ்வினைத் தொடர்வதற்குத…

  18. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையிலான ஒன்பதாம் கட்டப் பேச்சுவார்த்தைகள் நேற்று இடம்பெற்றபோதும் எவ்விதமான உடன்பாடுகளோ முன்னேற்றங்களோ இன்றி பேச்சுவார்த்தைகள் முடிவடைந்தன. மிகவும் குறைந்தளவு நேரமே இந்தப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. . ஏழாம் கட்டப் பேச்சுவார்த்தையின் போது, எட்டாம் கட்டப் பேச்சில் சிறிலங்கா அரசு தரப்பால் வழங்கப்படுவதற்கு வாக்குறுதியளிக்கப்பட்டிருந்த ஒத்தியங்கல் பட்டியல் அதிகார விட்டுக் கொடுப்புத் தொடர்பிலான எந்த ஆவணங்களும் நேற்றைய ஒன்பதாம் கட்டப் பேச்சுவார்த்தைகளின் போதும் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கையளிக்கப்படவில்லை. ஆனால் மீண்டும் அடுத்த மாதம் நான்காம் திகதி பேச்சுவார்த்தையைத் தொடர்வதென்ற விடயத்தில் மட்டும் இருதரப்ப…

  19. இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று அதிகாலை கொழும்பை வந்தடைந்தார். ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீமூனைச் சந்தித்துப் பேச்சு நடத்திய ரணிலுடன் சவேந்திர சில்வா மற்றும் நம்பியார் ஆகியோரும் பங்குபற்றியுள்ளனர். இந்த சந்திப்பு நேற்று முன்தினம் பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெற்றது. இலங்கையில் யுத்தத்தின் பின்னரான நிலைமை குறித்தே இந்தச் சந்திப்பின்போது பேசப்பட்டது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மையில் இவர்கள் என்னதான் பேசினார்கள் என்பதனை அறிய பலரும் முயற்சி செய்தும் அவை வெளியிடபப்டவில்லை. கொழும்பை வந்தடைந்த ர|ணில் இடமும் பத்திரிகைகள் துழைத்துக்கொண்டு இருக்கின்றன. . ரணில் விக்கிரமசிங்கவுடன் ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்…

    • 1 reply
    • 997 views
  20. Will New Evidence of War Crimes Tip the Scales Against the Sri Lankan Government On June 14, the British television network Channel 4 broadcast a stunning hour-long documentary presenting footage of horrific abuses allegedly committed by Sri Lankan troops during the last months of the country's war against the Liberation Tigers of Tamil Eelam. The images are graphic and profoundly disturbing. They include the execution of naked, bound prisoners; soldiers laughing and making macabre sexual jokes about women who appear to have been raped before they were executed; and images of bodies in field hospitals and refugee camps, which eyewitnesses said had been deliberatel…

    • 0 replies
    • 816 views
  21. கொலைக்களம் ஆவணத்திரைப்படத்தை அடிப்படையாக வைத்து தமிழக முதலமைச்சர் பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டியொன்றை வழங்கத் தயாராகிறார். Thursday, July 7, 2011, 11:12 இந்தியா, உலகம் செனல் 4 நிறுவனத்தின் கொலைக்களம் ஆவணத்திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமொன்றுக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பேட்டியொன்றை வழங்க தயாராகி வருவதாக சென்னைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹெட்லைன் டுடே என்ற தொலைக்காட்சி ஆங்கில மொழி ஒளிபரப்பை மேற்கொண்டு வரும் நிலையில், அந்த தொலைக்காட்சி நிறுவனம் அமெரிக்கா, பிரித்தானிய ஆகிய நாடுகளில் இயங்கும் இலத்திரனியல், அச்சு ஊடகத் தகவல்களை வெகுவாக ஒளிபரப்பி வரும் தொலைக்காட்சி சேவையாகும். செனல் 4 நிறுவனம் வெளியிட்ட…

    • 1 reply
    • 894 views
  22. [ வியாழக்கிழமை, 07 யூலை 2011, 03:20.30 AM GMT ] இலங்கையின் வடபகுதிக்கு வெளிநாட்டவர்கள் தடையின்றி செல்லமுடியும் என்று நேற்று முன்தினம் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்த நிலையில், நேற்றைய தினம் சென்ற வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: இலங்கையின் வடக்குக்கு வெளிநாட்டவர்கள் தடையின்றி செல்லமுடியும் என்று நேற்று முன்தினம் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது. இந்தநிலையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் நேற்று வடபகுதிக்கு செய்தி சேகரிப்புக்காகச் சென்றனர். எனினும் அவர்களை வடபகுதிக்கு செல்லமுடியாது என்று வவுனியா சோதனைச் சாவடியில் வைத்து படையினர் தடுத்துள்ளனர். இதன…

  23. வியாழக்கிழமை, 07 யூலை 2011, 00:49 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்கா உள்ளிட்ட சில நாடுகளில் சிறுபான்மையினப் பெண்கள் மீது பாலியல் வல்லுறவு போரின் போதான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதாக அனைத்துலக சிறுபான்மையினர் உரிமைகளுக்கான குழு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த அமைப்பு நேற்று லண்டனில் வெளியிட்ட 2011ம் ஆண்டுக்கான அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. சுதேச மற்றும் சிறுபான்மை இனக்குழுமங்களைச் சேர்ந்த பெண்கள் பாலியல் வல்லுறவு மற்றும் ஏனைய வடிவங்களிலான பாலியல் கொடுமைகளையும் சித்திரவதைகள் , கொலைகளையும் சந்திப்பதாகவும் அனைத்துலக சிறுபான்மையினர் உரிமைகளுக்கான குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் மற்றும் சுதேச இனக்குழுமங்களைச் சேர்ந்தவர்கள் …

  24. போர்ச்சூழலினால் சிங்கள அரசின் ஒடுக்குமுறை தாங்காது தமிழகம் சென்ற ஈழமக்கள் நாளுக்கு நாள் அவலங்களை சந்திக்கின்றனர். அந்தவகையில்தான் தமிழகம் நெல்லை மாவட்டத்தில் வசித்த ஈழத் தமிழ்பெண் ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் புரிந்தபின்னர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது. . நெல்லை மாவட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. . நெல்லை பாரதியார் நகரை சேர்ந்தவர் மூர்த்தி என்பவரது மனைவியான 40 வயதுடைய தங்கம் என்ற பெண்ணே மர்ம நபர்களால் பாலியல்பலாத்காரத்தின் பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளார். Bookmark/Search this post with: Eelanatham

    • 4 replies
    • 1.6k views
  25. Posted by சங்கீதா on 07/07/2011 in செய்தி இலங்கையின் கொலைக்களம் வீடியோ காட்டிய உண்மைகளை ஆதாரமாகக் கொண்டு இலங்கை மீது அவுஸ்திரேலியா அரசு மனித உரிமை மீறலுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமா? இல்லையா? என்று அவுஸ்திரேலியா வானொலிச் சேவை ஒன்று கருத்துக் கணிப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளது. அவுஸ்திரேலியா அரச தொலைக்காட்சியான ஏ.பி.சி. நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு 4 கோர்னர் என்ற நிகழ்ச்சியில் இலங்கையின் கொலைக்களம் என்ற விவரணத் திரைப்படத்தை ஒளிபரப்பியது. இதை அடுத்து அவுஸ்திரேலியா 3 ஏ.டபிள்யூ என்ற வானொலிச்சேவை ஆஸ்திரேலியா முழுவதும் இந்தக் கருத்துக் கணிப்பை மேற்கொண்டுள்ளது. இலங்கையின் கொலைக்களம் என்ற விவரணத் திரைப்படம் இலங்கை தொடர்பான ஆஸ்திரேலிய கொள்கையில் பெரும் மாற்றத்தை ஏற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.