Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 10 DEC, 2023 | 05:05 PM இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும், பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (10) அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது இலங்கை - இந்திய நட்புறவை மேம்படுத்த இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். அதற்கு இந்திய உயர்ஸ்தானிகர், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு ஒருபோதும் மாற்றமடையாது என கூறியமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/171400

  2. Published By: VISHNU 10 DEC, 2023 | 03:15 PM யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி மீளவும் மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து அதற்கு எதிராக சமூக மட்ட அமைப்புகள் தொடர் நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளன. உடுப்பிட்டி விநாயகர் சனசமூக நிலையத்தில், நேற்று சனிக்கிழமை (9) உடுப்பிட்டி சமூகமட்ட அமைப்புக்கள் இவ்விடயம் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டன. கரவெட்டி பிரதேச செயலாளர் நேரடியாகவும், வாய்மொழி மூலமாகவும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், தனக்கு அறிவுறுத்தியதனால் தான் இடத்துக்கான சிபாரிசினை வழங்கியதாக குறிப்பிட்டதற்கு இணங்க சமூகமட்ட அ…

  3. மாஹோ சந்தி முதல் அநுராதபுரம் வரையான வடக்கு தொடருந்து பாதை திருத்தப் பணிகளுக்காக 6 மாதங்களுக்கு மூடப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, அடுத்த வருடம் ஜனவரி மாதம் 7 ஆம் திகதி முதல் எதிர்வரும் 6 மாதங்களுக்கு குறித்த தொடருந்து மார்க்கம் மூடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சந்தர்ப்பங்களில், கொழும்பிலிருந்து மாஹோ சந்தி வரையிலும், அநுராதப்புரத்திலிருந்து காங்கேசன்துறை வரையில், மாத்திரமே தொடருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு தொடருந்து மார்க்கத்தில் மாஹோ மற்றும் ஓமந்தை வரையில் இரண்டாம் கட்ட திருத்தப்பணிகளுக்காக இவ்வாறு மூடப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/284285

  4. கிளிநொச்சியில் இன்றைய தினம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இறுதி யுத்தம் நிறைவடைந்த பின்னர் விசாரணைகளுக்காக ஒப்படைத்த நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவினர்களுக்கு நீதி கோரி, கடந்த இரண்டாயிரத்து 485 நாட்களுக்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சுழற்சி முறையில் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்தநிலையில், சர்வதேச மனித உரிமைகள் தினமாக இன்றைய தினம், முற்பகல் கிளிநொச்சி ஏ-9 வீதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பொது அமைப்புகளின் …

  5. சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும். 1948 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்திற்கு அமைய வருடந்தோரும் டிசம்பர் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினம் நினைவுகூரப்படுகின்றது. சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டு இந்த வருடத்துடன் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்தநிலையில் எதிர்காலத்தில் மனித உரிமைகளையும் கலாசாரத்தையும் ஒருங்கிணைத்தல் மற்றும் நிலைநிறுத்துதல் என்ற தொனிப்பொருளின் கீழ் நினைவுகூறப்படுகின்றது. அனைத்து பிரஜைகளுக்கும் பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள உரிமைகளை உறுதிப்படுத்துவதே இந்த பிரகடனத்தின் முக்கிய நோக்கமாகும். அத்துடன் அனைவரும் சுதந்திரமானவர்கள் மற்றும் சமத்துவமானவர்கள் என்பதை இந்த ப…

  6. தமிழையும் சிங்களத்தையும் ஒரே நேரத்தில் கற்க முயன்று தோல்வியடைந்துள்ளேன் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகையொன்றிற்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நான் தமிழையும் சிங்களத்தையும் கற்க முயன்றேன். நான் இரண்டையும் ஒரேநேரத்தில் கற்க முயன்றேன் தவறுசெய்தேன். இரண்டு மொழிகளை ஒரேநேரத்தில் கற்கமுயல்வது சவாலான விடயம். எனது கடினமான வேலைப்பளுகாரணமாக இரண்டு மொழிகளையும் கற்கமுடியவில்லை. என்னால் அடிக்கடி பயன்படுத்தக்கூடிய் சில சொற்களை கற்கமுயல்கின்றேன் -எனக்கு தெரிந்த ஒரு சில சொற்களை பேசினாலும் மக்கள் உடனடியாக என்னை நோக்கி வருவதை அவதானித்துள்ளேன். எனக்கு மொழிகளை கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகம் பல மொழிகளை கற்றுக்கொள்ள முயல்கின்றேன் என…

  7. நாட்டில் இனி குற்றங்களுக்கு தண்டனை இல்லை ! : புது சட்டம்? வறுமை அல்லது வேறு காரணங்களால் சிறு குற்றங்களைச் செய்யும் நபர்களை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக வீட்டுக் காவலில் வைப்பது போன்ற தண்டனைகளை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. சிறு குற்றங்களைச் செய்யும் நபர்களை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக, அந்த நபரின் பெற்றோர் அல்லது உறவினர்களிடம் பத்திரத்தில் கையொப்பமிட்டு அவர்களை ஒப்படைக்க முடியும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிறிய தவறு செய்தவர்களை சிறையில் அடைப்பதற்கு பதிலாக, அவர்களின் உடலில் ‘சிப்’ பொருத்தி, வெளிநாடுகளில் உள்ளதைப் போன்று தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க எதிர்பார்க்கப…

  8. "எங்களுடன் இணையுங்கள்" - வட பகுதி மக்களுக்கு ஜே.வி.பி. தலைவர் அழைப்பு Published By: RAJEEBAN 10 DEC, 2023 | 01:09 PM எங்களுடன் இணையுங்கள் நாங்கள் உங்கள் தேவைகளைபூர்த்தி செய்வோம் என வடபகுதி மக்களிற்கு வேண்டுகோள் விடுத்துள்ள ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க ஊழல்மிகுந்த ஆளும்குழுவை தோற்கடிப்பதற்கான தேசிய விடுதலை இயக்கத்திலும் நீங்கள் இணைந்துகொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் இந்து நாளிதழிற்கான பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் எங்களின் நெருங்கிய அயல்நாடான இந்தியா மிகவும் வலுவான அரசியல் பொருளாதார மையமாக மாறியுள்ளமை எங்களிற்கு தெரியும். ஆகவே பொருளாதார அரசி…

    • 13 replies
    • 706 views
  9. கொழும்பில் இராஜதந்திர பணிகளை பொறுப்பேற்கும் சந்தோஷ் ஜா 10 DEC, 2023 | 11:32 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இந்தியாவின் மூத்த இராஜதந்திரியான சந்தோஷ் ஜா இலங்கைக்கான அடுத்த உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வார இறுதியில் கொழும்பில் பணிகளை பொறுப்பேற்கவுள்ளார். இலங்கையுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காற்றியிருந்த இராஜதந்திரி சந்தோஷ் ஜா, இலங்கையில் இறுதிப்போர் முடிவடைந்த பின்னரான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு இந்திய திட்டங்களுக்கும் தலைமை தாங்கியுள்ளார். அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய வகையில் இலங்கை - இந்திய புதிய இணைப்புகள் குறித்து ட…

  10. 10 DEC, 2023 | 09:04 AM யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பிராந்தியத்தில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இரு படகுகளுடன் 25 இந்திய மீனவர்கள் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் இலங்கை கடற்படை மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/171352

  11. 09 DEC, 2023 | 08:44 PM (ஆர்.ராம்) தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு உள்ளிட்ட அனைத்து விடயங்கள் சம்பந்தமாகவும், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்திப்பதற்கு கோரிக்கை விடுக்கும் கடிதம் தயார் நிலையில் இருக்கின்றபோதும் இலங்கை தமிழரசுக்கட்சி உட்பட ஏனைய ஆறு கட்சிகளின் தலைமைகளின் பின்னடிப்பால் அம்முயற்சி ஒப்பேறாதுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணயின் பொதுச்செயலாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இவ்விடயம் சம்பந்தமாக அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் எம்முடனான சந்திப்புக்களின் போது வழங்கிய உறுதி மொ…

  12. 10 DEC, 2023 | 11:03 AM நாடு முழுவதும் நேற்று (09) மாலை திடீரென மின் துண்டிக்கப்பட்டதற்கு, கொத்மலை – பியகம மின் விநியோக கட்டமைப்புக்கு மின்னல் தாக்கியமையே காரணம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மின்சக்தி அமைச்சும் இலங்கை மின்சார சபையும் இரு வேறு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த கூறியுள்ளார். நேற்று மாலை 5.15 மணியளவில் நாடு முழுவதும் திடீரென மின் துண்டிக்கப்பட்டு, பல பிரதேசங்களில் இரவு 11.30 மணியளவிலும், வேறு சில இடங்களில் நேரம் தாமதமாகவும் மீண்டும் மின் விநியோகிக்கப்பட்டு, நிலைமை இயல்புக்கு திரும்பியமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/1713…

  13. குழாய்க்கிணறுகள் யாழில் பூதாகரம்! [ஆதவன்] யாழில் அதிகரிக்கும் குழாய்க் கிணறுகளால் நிலத்தடி நீர் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது என்றும், நாள் ஒன்றுக்கு எவ்வளவு நீர் வெளியேற்றப்படுகிறது என்பதைக்கணிப்பிட முடியாத சூழல் உருவாகியுள்ளது என்றும் யாழ். பல்கலைக்கழகத்தின் விலங்கியல்துறை பேராசிரியர் திருமதி ஞானேஸ்வரன் இராஜேந்திரமணி தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- யாழ். மாவட்டத்தில் அதிகரித்துவரும் குழாய்க் கிணறுகளால் நிலத்தடி நீர் பெரும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. ஒரு நாளைக்கு குழாய்க் கிணறுகள் ஊடாக வெளியேற்றப்படும் நீரின் அளவைக் கணிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. யாழ். குடா மூன்று பக்கமும் நீரினால் சூழப்பட்டு ஒரு பகுதியில் நிலத்துடன் இணைக்கப்பட்ட பிரத…

  14. தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்று தருவீர்கள் என்று நம்பிக்கை இல்லை. நல்லை ஆதீனத்தின் செயலாளர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவிப்பு [இனியபாரதி] நல்லை ஆதீனத்திற்கு பலர் வருகை தந்து சந்திப்புகளை மேற்கொள்கின்றார்கள்.பிறகு அவ்வாறே போய்விடுவார்கள் ஆனால் எந்த முடிவோ எந்த தீர்வும் எட்டப்படுவதில்லை என உலக தமிழ் பேரவையினரிடம், தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் தலைவரும், நல்லை ஆதீனத்தின் செயலாளருமான கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்துள்ளார். உலக தமிழ் பேரவையினர், இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில், நல்லை ஆதீன முதல்வரை சந்தித்து கலந்துரையாடிய போதே , ஆறுதிருமுருகன் அவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், நீங…

  15. ரணில் பக்கம் சாய்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஐந்து பேர் தற்போது அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியில் அந்தக் கூட்டணியில் இருந்து ஐந்து எம்.பி.க்கள் மாத்திரமே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கில் எதனையும் செய்ய முடியாத நிலை எனவே எதிர்வரும் தேர்தலில் தமிழ் கூட்டமைப்பு வடக்கில் எதனையும் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சின் வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அ…

  16. கரையோர சுவீகரிப்பிற்கு எதிராக நாளை பொன்னாலையில் போராட்டம்! யாழ்ப்பாணம் – அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பிரதேசத்தையும் பொன்னாலை துருத்திப்பிட்டியையும் சுவீகரிப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் முயற்சி எடுத்துள்ள நிலையில் அதைக் கைவிடுமாறு வலியுறுத்தி பொன்னாலை சந்தியில் கடற்றொழிலாளர்களும் பொதுமக்களும் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். பொன்னாலை சந்தியில், நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணியளவில் முன்னெடுக்கப்படவுள்ள இப்போராட்டத்திற்கு பொன்னாலை தொடக்கம் அராலி வரையுள்ள கடற்றொழிலாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரைக் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்…

  17. சர்வதேச மனக்கணித போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த 6 வயது மாணவி சாதனை ! மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த 6 வயதுடைய தமிழ்செல்வன் அக்ஷதா என்ற மாணவி 3ஆம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். கடந்த ஒகஸ்ட் மாதம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற யுசிமாஸ் மனக்கணித போட்டியில் நாடளாவிய ரீதியில் பலர் பங்கு கொண்ட போட்டியில் முதலாம் இடத்தை பெற்ற தமிழ்செல்வன் அக்ஷதா சர்வதேச மனக்கணக்கு போட்டியில் தெரிவு செய்யப்பட்டார். சர்வதேச போட்டி கடந்த 3ஆம் திகதி மலேசியாவில் 80இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2500இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இலங்கையில் இருந்து 62 மாணவர்கள் கலந்து கொண்டனர…

    • 5 replies
    • 341 views
  18. இந்திய - இலங்கை பாலம் குறித்து த ஹிந்து வெளியிட்ட செய்தி இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை உள்கட்டமைப்பு மேம்பாடு, எரிசக்தி இணைப்புகள் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் மேம்படுத்த வேண்டும் என்று த ஹிந்து தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அண்மையில், இந்தியாவுடன் தரைவழி இணைப்பை ஏற்படுத்துவதற்கான முன்மொழிவை மேற்கொண்டிருந்தார். எனினும் அது உடனடியாக நடைமுறைக்கு வரப்போவதில்லை. முன்னதாக இருபது ஆண்டுகளுக்கு முன்னரும் அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, சென்னையில் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள தலைமானாருடன் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தை இணைக்கும் பாலம் கட்டும் யோசனையை முன்வைத்திருந்தார். இது பிராந்திய பொருளாதார ஒருங்கி…

  19. தந்திரமாக பறிக்கப்படும் உள்ளூராட்சி அதிகாரங்கள்! adminDecember 9, 2023 யாழ்ப்பாண மாவட்டத்தில் 11 பிரதேச சபைகளும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் சட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளமையால் , கட்டட அனுமதி உள்ளிட்டவற்றை பெறுவதில் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டு உள்ளதாக வலி. தென்மேற்கு பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர் அருள்குமார் ஜோன் ஜிப்பிரிக்கோ தெரிவித்துள்ளார். மாநகரசபைகள் மற்றும் நகரசபைகளிற்கு மட்டுமே அத்தியாவசியமாக்கப்பட்டு காணப்பட்ட நகர அபிவிருத்தி அதிகார சபை சட்ட வரம்பு, 2022ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி அதிகார சபையால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலினால் வடகிழக்கு மாகாணங்களிலுள்ள சில பிரதேசசபைகளும் அந்த சட்டத்தின் கீழ் வருவதாக பிரகடன…

  20. 08 DEC, 2023 | 06:04 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களை அடிப்படையாக கொண்டு சமூக விரோத செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. ஊடக நெறிமுறையை கடைப்பிடிப்பதற்கு ஊடகங்கள் நியாயமான முறையில் கண்காணிக்கப்பட வேண்டும். உத்தேச ஒளி மற்றும் ஒலிப்பரப்பு சட்டமூலம் அடுத்த ஆண்டு சட்டமாக்கப்படும் என போக்குவரத்து, ஊடகத்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வெகுஜன ஊடகம் மற்றும் துறைமுகம், கப்பற்றுறை, மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவா…

  21. 08 DEC, 2023 | 06:02 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) விசேட தேவையுடையவர்களின் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு வற் வரியை அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறான எண்ணம் இருக்குமானால் அதனை அரசாங்கம் நீக்கிக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27(2)இன் கீழ் விசேட தேவையுடையவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 2012 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட சனத் தொகை மற்றும் புள்ளிவிபரவியல…

  22. (எம்.மனோசித்ரா) பயங்கரவாதத் தடை சட்டம் அநாவசியமாகப் பயன்படுத்தப்படுவதை அங்கீகரிக்க முடியாது. இலங்கையில் தமிழ் மக்கள் கண்ணியத்துடன் வாழ்வதை எமது அரசாங்கம் உறுதி செய்யும். எனவே காசாவுக்கு ஆயுதம் வழங்கும் நாடுகள் மனித உரிமைகள் தொடர்பில் எமக்கு கற்பிக்கத் தேவையில்லை என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் வெள்ளிக்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கைக்குள் மனித உரிமைகளை பாதுகாப்பதை நாம் பார்த்துக் கொள்கின்றோம். எம்மை விமர்சிக்கும் நாடுகளில் என்ன மனித உரிமைகள் இருகின்றன? காசாவில் 14 000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதனை நிறுத்துமாறு கூறுகின்றார்களா? மாறாக ஜன…

    • 2 replies
    • 361 views
  23. தமிழர் தேசத்தை ஆக்கிரமிக்க அரச மரத்துடன் இணைந்தது கண்டல்! (புதியவன்) இதுவரை தமிழர் தேசத்தை ஆக்கிரமிக்கும் மரமாக வெள்ளரசு மரம் இருந்து வருகின்ற நிலையில், அதற்கு பக்கத் துணையாக இன்று கண்டல் தாவரங்களும் இடம்பிடித்திருக்கின்றன. அராலி தொடக்கம் பொன்னாலை வரையும் மற்றும் காரைநகர் பிரதேசம் போன்ற இடங்களில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கடற்படையினரால் கண்டல் தாவரங்கள் நாட்டப்பட்டன. தொடர்ந்து அரச திணைக்களங்கள் பிரதேசத்திலுள்ள கடற்றொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றலுடன் இந்த மரங்களை கடலுக்குள் மற்றும் கடற்கரையோரமாக நாட்டினர். அந்த மரங்கள் ஓரளவு வளர்ந்து தங்களை நிலைப்படுத்திக்கொண்ட தற்போதைய நிலையில், காடுகளை பராமரிக்கவேண்டிய வனவளங்கள் பாதுகாப்புத் திணைக்களம் குறி…

  24. வி.ரி.சகாதேவராஜா கொழும்பு, கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வளாகத்தில் நிறுவப் பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. கடந்த ஒரு தசாப்த காலமாக அங்கிருந்த சுவாமி விவேகானந்தர் சிலை இவ்வாறு திடீரென அகற்றப்பட்டுள்ளது. உலகம் போற்றும் வகையில் இந்து மதத்தை அமெரிக்காவில் முழங்கிய பின் 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி சுவாமி விவேகானந்தர் கொழும்பில் வந்து இறங்கினார். அப்பொழுது அங்கிருந்த பெரிய தனவான்களும் இன்னும் பலரும் பொன்னம்பலம் ராமநாதனின் தலைமையில் தம்பையாவின் உதவிகளுடன் சுவாமி விவேகானந்தரின் வருகையை இலங்கை முழுவதும் மாபெரும் வகையில் கொண்டாடினர். சுவாமி விவேகானந்தருடைய வருகையை ஒட்டி பல இடங்களில் வரவேற்கும் தோரணங்கள…

    • 8 replies
    • 1.3k views
  25. 08 DEC, 2023 | 05:57 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் மிகவும் குறைந்த மட்டத்திலான சம்பளத்தையே ஊடகவியலாளர்கள் பெறுகிறார்கள். ஊடகவியலாளர்களுக்கு எவ்விதமான நலன்புரி திட்டங்களும் தற்போது செயற்படுத்தப்படுவதில்லை.ஊடக நிறுவனங்களும் ஊடகவியலாளர்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை.தற்போதைய வாழ்க்கை செலவுகளுக்கு அமைய ஊடகவியலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வெகுஜன ஊடகம் மற்றும் துறைமுகம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.