ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
சுந்தரபுரம் கடையில் திடீர் தீ! உரிமையாளர் எரிந்து மரணம்! Published on June 10, 2011 No Comments வவுனியா சுந்தரபுரம் புதிய குடியிருப்பில் கடையொன்றில் வியாழனிரவு திடீரென தீப்பற்றியதில் உரிமையாளர் தீயில் கருகி மரணமானார். சுந்தரபுரத்தைச் சேர்ந்த வேலு பன்னீர்ச்செல்வம் என்ற 44 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. மின்சாரம் தடைப்பட்டதனால், மெழுகு திரி வெளிச்சத்தில் பெட்ரோலை அளந்து போத்தலில் ஊற்றிக்கொண்டிருந்த வேளை தீப்பற்றியதாக நம்பப்படுகின்றது. தீடீரென கடையில் தீப்பற்றியதையடுத்து, அவரது அவலக்குரலைக் கேட்டு விரைந்த அயலவர்கள் அவரை மீட்பதற்கு மேற்கொண்ட முயற்சி வெற்றியளிக்கவில்லை. சம்பவ…
-
- 0 replies
- 677 views
-
-
10 ஜூன் 2011 உயர்மட்ட இந்திய இராஜதந்திரிகள் இலங்கையை சென்றடைந்தனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ் சங்கர் மேனன், வெளிவிவகாரச் செயலாளர் நிரூபமா ராவ் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர். இலங்கையுடனான உறவுகள் குறித்து இந்த இரண்டு நாள் விஜயத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது. உயர்மட்ட இந்திய இராஜதந்திரிகள் வெள்ளிக்கிழமை இலங்கை விஜயம் 08-06-2011- 01:34am உயர்மட்ட இந்திய இராஜதந்திரிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரு தரப்பு உறவுகளை மீளாய்வு செய்யும் நோக்கில் இந்த விஜயம் அமையும் எனக் குறிப்பிடப்படுகிறது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ…
-
- 1 reply
- 431 views
-
-
பான் கீ மூனுக்கு இலங்கை ஆதரவு! போர்க்குற்ற விவகாரம் என்னவாகும்? கேள்வி எழுப்புகிறது இன்னர்சிற்றி Friday, June 10, 2011, 8:17 உலகம், சிறீலங்கா ஐ.நா.பொதுச் செயலாளராக இரண்டாவது தடவையாக பான் கீ மூன் தெரிவுசெய்யப்படுவதற்கு இலங்கை அரசாங்கம் ஆதரவளிக்க முன்வந்துள்ள நிலையில் இலங்கையின் போர்க்குற்ற விவகாரம் தொடர்பாக பான் கீ மூன் மெளனம் சாதிப்பதாக இன்னர்சிற்றி பிரஸ் சந்தேகம் வெளியிட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக இன்னர் சிற்றி பிரஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த 40 நாட்களாக இலங்கை விவகாரத்தில் ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கீ மூன் எவ்வித மீளாய்வு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. இலங்கை மனித உரிமைகள் மற்றும் இறுதிக் கட்டப் ப…
-
- 2 replies
- 456 views
-
-
10 ஜூன் 2011 ஏனையோர் எங்கே என்று அநுரகுமார அமைச்சரிடம் கேள்வி .. போரின் பின் 839 புலி உறுப்பினர்கள் மாத்திரமே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கொழும்பு, பூஸா மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க, வாய்மூல வினாவுக்கான நேரத்தின் போது நேற்று எழுப்பிய இது தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனை கூறிள்ளார். இவ்வாறு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளோரில் இரண்டு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் ஏனையோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அமைச்சர் கு…
-
- 1 reply
- 702 views
-
-
10 ஜூன் 2011 இறுதிக் கட்ட யுத்தத்தில் உயிர் நீத்த இலங்கைத் தமிழர்களுக்காக இந்தியாவில் நினைவுத் தூபியொன்று அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்கள் மற்றும் போராளிகளை நினைவு கூறும் வகையில் இந்த தூபி அமைக்கப்படவுள்ளது. தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்தத் தூபி அமைக்கப்படவுள்ளது. சோழப் பேரரசு காலத்தின் தஞ்சைப் பெருங்கோயில் கட்டிட நிர்மானக் கலையை ஒத்த அமைப்பில் இந்த நினைவுதூபி அமைக்கப்பட உள்ளது. 50 தொன் எடையுடைய பாரிய கிரணைட் கல் ஒன்றில் 100 சிற்பிகள் இணைந்து சிற்பங்களை செதுக்கி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த நினைவுத் தூபிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் என பெயரிடப்பட உள்ளதாகக் குறிப்பிடப்பட…
-
- 0 replies
- 777 views
-
-
June 9, 2011 உண்மையிலேயே கருணாநிதிக்கு தமிழக மீனவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால், கச்சத்தீவை கொடுப்பதற்கு, இந்திய – இலங்கை உடன்பாடு கையெழுத்தாவதற்கு முன், சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றி, மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யத் தவறிவிட்டார். திரை மறைவில் கச்சத்தீவை காவு கொடுப்பதற்கு ஒப்புதல் அளித்துவிட்டு, கண் துடைப்பு நாடகமாக தீர்மானத்தை முன்மொழிந்தவர் கருணாநிதி,” என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததை எதிர்த்து, 2008ல், அ.தி.மு.க., பொதுச் செயலர் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு வலு சேர்க்கும் விதமாக கச்சத்தீவு குறித்த அனைத்து ஆவணங்களையும், தன் வசம் வை…
-
- 4 replies
- 1.1k views
-
-
Posted by சோபிதா on 10/06/2011 in செய்தி விசர் நாய்களைக் கொல்வது ஒரு காருண்யமான செயல் அல்ல என அரசு கூறுகின்றது ஆனால் வடகிழக்கில் உள்ள தமிழர்கள் கொல்லப்படுகின்றபோது இந்த காருண்யம் எங்கே போய்விட்டது. இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (09.06.2011) விலங்கு தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்கான விவாதத்தில் உரையாற்றும்போதே மேலுள்ளவாறு தெரிவித்தார். அவர் மேலும் தொடர்ந்து உரையாற்றுகையில், வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழ்கின்ற தமிழ் மக்களை விலங்கு போன்ற மனப்பாங்குடன் இங்கு மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் நடாத்தியதன் காரணமாகத்தான் 61 வருடகாலமாக ஒரு உரிமையற்ற இனமாக நாம் வாழ்ந்துகொண்டிரு…
-
- 0 replies
- 654 views
-
-
வெள்ளிக்கிழமை, 10 ஜூன் 2011 08:31 | இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை மற்ற நாடுகளுடன் இணைந்து இந்திய அரசு முன்னெடுக்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமிழர்கள் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்று கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை: இலங்கைக்கு எதிரான பொருளாதார தடையை முன்னெடுப்போம்: சீமான் ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை இனப்படுகொலை செய்ததது மட்டுமின்றி, இன்றுவரை ஈழத் தமிழின அழிப்பில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் இலங்கை அரசை வழக்குக் கொண்டுவர அதற்கு எதிராக பொருளாதாரத் தடையை கடைபிடிக்க வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப் பேரவை நிறைவேற்றியத் தீ…
-
- 0 replies
- 535 views
-
-
Friday, June 10, 2011, 8:13தமிழீழம். தமிழக சட்டப் பேரவையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றச் செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்களை ஈழத் தமிழர் தேசத்தின் சார்பில் வாழ்த்துவதிலும் பாராட்டுவதிலும் நாம் பெருநிறைவடைவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து பிரதமர் விசுவாநாதன் ருத்திரகுமாரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக சட்டப் பேரவையில்; நிறைவேற்றப்பட்டுள்ள இத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப் படும் வகையில் தமிழகம் தொடர்ந்து செயற்படவேண்டும் என நாம் பணிவுடன் வேண்டுகிறோம் எனவும் தமிழக முதல்வர் இதற்கு ஆவன செய்வார் எனவும் உறுதியாக நம்புவதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்…
-
- 0 replies
- 513 views
-
-
Friday, June 10, 2011, 8:52தமிழீழம், மாவீரர்கள். 10.06.1998 அன்று வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள சுதந்திரபுரம் என்ற கிராமத்தின்மீது சிங்களப்படையால் தாக்குதல் நடத்தப்பட்டது. அதுவரை அக்கிராமம் எவ்வித தாக்குதலுக்கும் ஆளாகவில்லையென்றுதான் நினைக்கிறேன். யுத்த முனையிலிருந்து நன்கு பின்னுக்குத் தள்ளியிருந்த அழகிய அமைதியான கிராமம். அன்று காலை சிங்கள வான்படைக்குச் சொந்தமான இரு கிபிர் விமானங்கள் அக்கிராமத்தில் குறிப்பிட்ட இடத்தின்மீது குண்டுகள் போட்டன. அவை தாண்டவமாடி முடிந்து போனதும் அம்பகாமத்தில் நிலைகொண்டிருந்த ஜெயசிக்குறு இராணுவம் ஏற்கனவே தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தின்மேல் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலை நடத்தின. இத்தாக்குத…
-
- 0 replies
- 570 views
-
-
இன்று இரவு இந்திய குழு வந்து இறங்குகின்றது அதற்குள் ரம்புக்வெல அவசர அவசரமாக தமிழர்க்கு 13வது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரம், பெற்றுக் கொடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வல தெரிவித்துள்ளார். யாருக்கு யாரிடம் இருந்து பெற்றுக்கொடுப்பது என்பது வேறு விடயம். . இன்று பத்திரிகையாளர் மா நாட்டில் பேசிய ரம்புக்வெல;தமிழ் மக்களை பாதுகாக்கக் கூடிய கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரம் அல்லவெனவும். . 13வது சீர்திருத்தத்தின் கீழ் காவல்துறை அதிகாரம் வழங்கும் போது, பிரச்சனை தோன்றியுள்ளதாகவும் கூறியுள்ளார். . இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டும் என இந்திய மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தும் யோசனை ஒன்று தமிழக முதலமைச்சரினால், நே…
-
- 8 replies
- 1.9k views
-
-
வெள்ளிக்கிழமை, யூன் 10, 2011 ஜேவிபி இயக்கத்தினர் விடுதலைப்புலிகளைவிட ஆபத்தானவர்கள் என அரசாங்க அமைச்சரும் பாதுகாப்பு கண்காணிப்பு குழு தலைவருமான துமிந்த சில்வா கூறியுள்ளார். விடுதலைப்புலிகள் வன்செயலில் ஈடுபட்டார்கள் ஆனால் ஜேவிபி கட்சியினரோ போதை வஸ்துகடத்தல்,பாவித்தல், பாதாள உலக நடவடிக்கை உட்பட அனைத்து சமூக விரோத நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் தமது இனத்தையே வகை தொகை இன்றி கொலை செய்தனர். இப்படியானவர்களே இன்ரு ஜனனாயகம் பேசுகின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார் துமிந்த சில்வா. நேற்று முந்தினம் நடந்த அரசு சார்பு ஆர்ப்பாட்டத்திலேயே இவ்வாறு குற்றம் சாட்டினார் துமிந்த சில்வா. http://www.eelanatham.net/story/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE…
-
- 0 replies
- 506 views
-
-
வெள்ளிக்கிழமை, யூன் 10, 2011 வற்றாப்பளை அம்மன் கோயில் திருவிழாவிற்கு செல்ல வெளிமாவட்டத்தவர்களும், புலம்பெயர்ந்து நாட்டில் இருந்து செல்லும் தமிழர்களும் (இந்தியா உட்பட) பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி பெறவேண்டும் என படைத்தரப்பு கூறியுள்ளது. இந்த அனுமதியினை மின்னஞ்சல் மூலம் பெற முடியும் என கூறபப்ட்டுள்ளது. இதனை முல்லை அரச அதிபரும் உறுதிப்படுத்தியுள்ளார். http://www.eelanatham.net/story/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%…
-
- 0 replies
- 466 views
-
-
உலகில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ள நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 22 ஆம் இடம் கிடைக்கப் பெற்றுள்ளது. அமெரிக்க பொருளாதார கூட்டுறவுத் திணைக்களம் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வலிமை, மகிழ்ச்சியான வாழ்கைக்கான உத்தரவாதம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த பட்டியலில் 35ம் இடத்தை இந்தியா பெற்றுள்ளதுடன் பாகிஸ்தான் 24ம் இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. முதலிடம்: டென்மார்க் இரண்டாமிடம்: கனடா மூன்றாமிடம்: நோர்வே நான்காமிடம்:அவுஸ்ரேலியா ஐந்தாமிடம்: நெதர்லாந்து ஆறாமிடம்: சுவீடன் ஏழாமிடம்: சுவுஸ்லாந்து எட்டாமிடம்: பின்லாந்து ஒன்பதாமிடம்: இஸ்ரேல் பத்தாமிடம…
-
- 0 replies
- 742 views
-
-
வெள்ளிக்கிழமை, யூன் 10, 2011 மேற்குலகை மடக்கும் இறுதி முயற்சியாக மீண்டும் மஹிந்த இராஜபக்ஷ நோர்வேயிம் தயவை நாடுகின்றது. போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அனைத்துலக அரங்கில் இலங்கை அரசு கடும் நெருக்கடியை எதிர்கொண்டுவரும் நிலையில் நோர்வேயுடன் மீண்டும் உறவுகளைப் பலப்படுத்திக்கொள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசு தயாராகி உள்ளது. . இந்த முயற்சி மூன்று நோக்கங்களைக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. . 1. மேற்குலகுடன் வியாபாரம் பேசி தம்மீதான அழுத்தத்தினை குறைப்பது. 2. புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களை முடிந்தால் நோர்வேயுடன் பேசி தணிப்பது. 3. இந்திய அழுத்தங்கள் அதிகரித்து வருவதால் மேற்குலகை நாடுவதன் ஊடாக இந்தியாவிற்கு எரிச்சலை அல்லது நாசூக்கான அழுத்தத்தினை ( Cold Press…
-
- 0 replies
- 448 views
-
-
சற்று முன்னர் கொழும்பை வந்தடைந்துள்ள டில்லி உயர்மட்ட அணி மஹிந்த குடும்பத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் எனகூறப்படுகின்றது. இந்த பேச்சுவார்த்தை எவ்வாறு அமையும் என்பது தொடர்பில் கேகலிய ரம்புக்வெல கருத்துக்கூறினார். இதில் முக்கியமானது நேற்று முந்தினம் தமிழ் நாட்டு சட்டசபையில் நிறைவேற்றபப்ட்ட இலங்கைக்கு எதிரான பொருளாதாரத்தடை தொடர்பான தீர்மானத்திற்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவிக்கப்படும் என கூறினார். ஆனால் இது சிங்கள மக்களை ஏமாற்ற ரம்புக்வெல கூறியுள்ளதாகவே தெரிகின்றது. ஏனென்றால் இந்தியாவிற்கு அடிபணிந்து போவதாக எதிரணிகள் அரசியல் நடத்த தொடங்கியுள்ளனர். . இலங்கைத் தரப்பின் சார்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சுச் செயலர் கோத்தபாய ராஜபக்…
-
- 0 replies
- 864 views
-
-
கோத்தாபயவின் குண்டர் படையணியால் – அதிர்கிறது யாழ் குடாநாடு:- 10 ஜூன் 2011 யாழ்ப்பாணத்தில் திடீரென முளைத்திருக்கும் கோத்தாபய ராஜபக்சவின் குண்டர் படையணியால் குடாநாடு அதிரத் தொடங்கியுள்ளது. தற்போது சாதாரண வேலிப் பிரச்சினைக்குக் கூட கோத்தபாய அலுவலகத்தில் இருந்து வருவதாகக் கூறி மிரட்டல்; சம்பவங்கள் பல பகுதிகளிலும் இடம்பெறத் தொடங்கியுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் இனந்தெரியாத நபர்கள் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு குடாநாட்டில் அச்சுறுத்தும் பணியில் ஈடுபடத் தொடங்கியிருக்கின்றனர். கடந்த காலங்களில் இராணுவ துணை ஆயுதக் குழுக்கள் அல்லது படையினரின் புலனாய்வுப் பிரிவுகாரர்களே பொதுமக்கள் அல்லது பொது அமைப்புப் பிரதிநிதிகள் அச்சுறுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது கோத்தபாய அலுவலகத…
-
- 0 replies
- 887 views
-
-
சிறிலங்கா கடற்படைக்குத் தொடர்ந்து உதவத் தயார் அமெரிக்கக் கடற்படைத் தளபதி Friday, June 10, 2011, 8:48 போருக்குப் பின்னரான சூழலில் அமெரிக்கா தொடர்ந்தும் சிறிலங்கா கடற்படைக்கு உதவிகளை வழங்கும் என்று அமெரிக்கக் கடற்படையின் பசுபிக் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் றொபேட் எவ்.வில்லாட் உறுதியளித்துள்ளார். சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்கவை சிங்கப்பூரில் சந்தித்துப் பேசிய போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். சங்கிரிலா கருத்தரங்கு என்ற பெயரில் சிங்கப்பூரில் நடத்தப்பட்ட ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்கச் சென்றிருந்த போதே, அமெரிக்க- சிறிலங்கா கடற்படைத் தளபதிகளுக்கு இடையிலான இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. விடுதலைப் புலிகள…
-
- 0 replies
- 410 views
-
-
Channel 4 to show its 'most horrific footage ever' of executions and sexual violence secretly filmed during Sri Lankan civil war By Liz Thomas Channel 4 is to show 'the most horrific footage it has ever broadcast' in a documentary about atrocities committed during the civil war in Sri Lanka. The programme Sri Lanka's Killing Fields will be presented by broadcaster Jon Snow. It investigates the final weeks of the 26 year-long battle between the government and Tamil Tiger rebels. Killing Fields: Channel 4 has said it will broadcast the most horrific footage it has ever broadcast The broadcaster initially said the images were 'too gruesome' to show o…
-
- 1 reply
- 630 views
- 1 follower
-
-
யுத்தத்தால் சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்த வடபகுதி தமிழ் மக்களுக்கு நியாயமான அதிகாரப் பரவலாக்கலுடன் அரசியல் தீர்வை அரசாங்கம் வழங்காததன் பின்னணியிலேயே இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டு மென்றும்,யுத்தக் குற்றவாளியாக பிரகடனப்படுத்த வேண்டுமென்றும் தமிழக சட்ட சபையில், ஏகமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெவித்தார். விடுதலைப் புலிகள், கேட்டதை தமிழ் அரசியல் கட்சிகள் கேட்கவில்லையென்றும் அவர் கூறினார். இது தொடர்பாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மேலும் கருத்து தெவிக்கையில், அன்றைய தமிழக தி.மு.க. அரசின் மறைமுக ஒத்துழைப்புடனும், இந்திய மத்திய அரசாங்கத்தின் நேரடி உதவிகளை பெற்றுக் கொண்டே இலங்கை அர…
-
- 1 reply
- 517 views
-
-
யாழ்ப்பாணத்தில் தமிழக அரசுக்கு எதிராக சிறிலங்கா திட்டமிட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தோல்வி தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுகின்றனர் என்ற போர்வையின் கீழ் தமிழ்நாடு அரசாங்கத்திற்கு எதிராக வடபகுதியில் சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது. சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் பணிப்பிற்கு அமைய யாழ் படைத்துறைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தலைமையில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக யாழ் படைத்துறையை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்க் கட்சிகள் இம்முயற்சிக்கு ஆதரவளிக்காத நிலையில், யாழ் படைத்துறைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந…
-
- 1 reply
- 608 views
-
-
யாழ் மாவட்டத்தில் சிவில் உடையில் வரும் இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று புதிய முறையில் இராணுவபப் பதிவுகளை மேற்கொள்வதனாலும், வீட்லுள்ளவர்களை வித்தியாசமான கோணங்களில் விசாரணை செய்து வருவதனாலும் மக்கள் மத்தியில் பீதியும் பதற்றமுமானதொரு நிலை காணப்படுகின்றது. இராணுவத்தினர் வீட்டில் உள்ளவர்களை குடும்பமாக புகைப்படம் எடுப்பதுடன் தனித்தனியாகவும் குடும்ப உறுப்பினர்களைப் புகைப்படம் எடுத்து வருகின்றார்கள். இன்று உடுவில், தெல்லிப்பளை, கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள சில பகுதிகளில் இத்தகைய நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளன. இது சம்பந்தமாக யாழ் மாவட்டத்தின் நிர்வாகத்திற்குப் பொறுப்பாக இருக்கும் யாழ் மாவட்ட அரச அதிபரோ அன்றி யாழ் மாவட்ட படைகளின் கட்டளைத்தளபதியோ பொது அறிவித்தல…
-
- 2 replies
- 688 views
-
-
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இன்று மாலை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் சந்தித்து பேசினார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’’இந்த சந்திப்பின்போது தமிழக முதல்வர் கச்சத்தீவை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து தனது கவலையை தெரிவித்து இரு நாடுகளுக்கிடையேயான உறுதிமொழிகள் கடைபிடிக்கப்படுவதில்லை என்பதையும், தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது நிறூத்தப்படவேண்டும் என்று தெரிவித்தார். மேலும், கச்சத்தீவை சுற்றியுள்ள பகுதிகளில் சுதந்திரமாக மீன் பிடிக்க அனுமதிக்க தமிழக மீனவர்கள் அனுமதிக்கப்படவேண்டும் என்பதையும், கச்சத்தீவில் ஏற்கனவே தமிழக மீனவர்களுக்கு இருந்த உரிமைகள் தரப்ப…
-
- 4 replies
- 1.3k views
-
-
தமிழகத்தின் சட்டசபை நிறைவேற்றிய தீர்மானம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-06-10 07:11:38| யாழ்ப்பாணம்] இலங்கை மீது பொருளாதாரத் தடையை இந்திய மத்திய அரசு விதிக்கவேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் எடுக்கப்பட்ட இத்தீர்மானத்தின் பிரகாரம் இந்திய மத்திய அரசு செயற்பட வேண்டும் என்ற தேவை எதுவும் கிடையாது. அப்படியானால் தமிழக சட்டசபையில் எடுக்கப்பட்ட தீர்மானம் ஈழத்தமிழ் மக்களுக்கு எத்தகைய நன்மையைத் தரும் என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததே. இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக சட்டசபை மேற்கொண்டதன் மூலம் இந்திய மத்திய அரசுக்கு ஒரு மறைமுகமான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, இலங்கை விடயத்…
-
- 1 reply
- 1.4k views
-
-
இலங்கை அரசாங்கம் தவறுகளை உணர்ந்து செயற்படாவிடின் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப்போல் வேறு நாடுகளிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் நிலை ஏற்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முதலமைச்சர் ஜெயலலிதாவின் விடையும் யதார்த்தமான சிந்தனையையே வெளிக்காட்டியுள்ளது. எனவே இந்தத் தீர்மானத்தினை தவறு என்று கூற முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கை மீது பொருளாதாரத் தடையினை விதிக்க வேண்டும், இலங்கை அரசு போர்க்குற்றவாளியாக ஐ.நா. பிரகடனப்படுத்துமாறு இந்தியா கோர வேண்டும் என்ற தீர்மானங்கள் நேற்று முன்தினம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப…
-
- 0 replies
- 689 views
-