Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாளை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய உயர்மட்டக் குழுவின் முக்கிய உறுப்பினரான இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை சந்திக்கவுள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இவ்விருவருக்கும் இடையில் இன்றுமாலை 5 மணியளவில் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் தமிழக முதல்வராக மூன்றாவது முறையும் தெரிவு செய்யப்பட்ட ஜெயலலிதா ஈழத்தமிழர்கள் விடயத்தில் தற்போது தீவிர கவனம் செலுத்தியுள்ளார். இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்க வேண்டுமென நேற்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய அவர், கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்க வேண்டுமென இன்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்…

  2. பிரித்தானியாவிலும் தமிழீழ தேசியக் கொடி பாவனைக்கு தடையில்லை! சட்டத்தரணிகள் குழு சட்டபூர்வமாக அறிவிப்பு. [Thursday, 2011-06-09 05:05:09] பிரித்தானியாவில் தமிழீழ தேசியக்கொடிக்கு தடை இல்லை என்பது சட்டரீதியான உண்மை. இவ்வாறு பிரித்தானியாவில் மிகவும் புகழ்பெற்ற சட்டத்தரணிகள் குழு உறுதி செய்து அறிக்கை வழங்கியுள்ளது. பிரித்தானியாவின் அதிகாரங்களுக்கு உட்பட்ட வேல்ஸ், ஸ்கொட்லாண்ட் மற்றும் நோதர்ன் அயர்லாந்து என எந்த பகுதியிலும் தமிழர்களின் தேசியக் கொடிக்கு தடை ஏதும் இல்லை என்பதும் தேசியக் கொடி வைத்திருந்தால் கைதுசெய்து தண்டனைக்கு உட்படுத்த முடியாது என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள். ஆனால் போராட்டங்களில் காவல்துறையும் ஆதரவு தரவேண்டுமானால் தேசியக் கொடியை அனைத…

  3. [ வியாழக்கிழமை, 09 யூன் 2011, 01:04 GMT ] [ தா.அருணாசலம் ] சிறிலங்கா அரசுக்கு ரஸ்யா ஆதரவளிக்கக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்மிடம் கோரவில்லை என்று கொழும்பிலுள்ள ரஸ்யத் தூதுவர் விளாடிமிர் மிக்கலோவ் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று நேற்று வெளியிட்ட செய்தி தொடர்பாக அவர் விளக்கமளித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடந்த திங்களன்று தன்னை சந்தித்துப் பேசியதாகவும், ஆனால் அவர்கள் சிறிலங்கா அரசுக்கான ஆதரவை நிறுத்திக் கொள்ளுமாறு கோரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கான ஆதரவை ரஸ்யா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியதாக செய்தி வெளியிட்டதன் மூலம் மக்க…

  4. இலங்கையில் தமிழர்களை தாக்கியவர்கள் போர்க் குற்றவாளிகள்: சட்டசபையில் ஜெயலலிதா தீர்மானம். தமிழக சட்டசபையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா ஒரு தனி தீர்மானத்தை தாக்கல் செய்து முன்மொழிந்து பேசினார். அதன் விவரம் வருமாறு: தமிழனின் பண்பு யாருக்கும் தாழ்ந்தவனாக இருப்பதல்ல. யாரையும் தாழ்த்துவதல்ல என்றார் பேரறிஞர் அண்ணா. இப்படிப்பட்ட உயரிய எண்ணத்தைக் கொண்ட தமிழர்கள் உலகெங்கும் பரவி இருக்கிறார்கள். மொழி மற்றும் கலாச்சார பாரம்பரியத்தில் ஒற்றுமையுடன் திகழும் இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் இடையே உள்ள தொப்புள் கொடி உறவு அனைவரும் அறிந்த ஒன்றாகும். இலங்கைக்கு விடுதலை கிடைத்து விட்டாலும், அங்கு வாழும் தமிழர்கள் அவர்கள் நாட்டிலேயே இரண்டாம் த…

  5. தனது தோல்வியை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் பிரயத்தனம் செய்கின்றது.அதாவது புளிப்பானாலும் அதனை அரசாங்க நரி பிடுங்குவதற்கே பாய்ந்து பாய்ந்து முயற்சிக்கின்றது என்று ஜே.வி.பி.சபையில் நேற்று முன்தினம் சுட்டிக்காட்டியது. பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பதிவு செய்யப்பட்ட பங்குத் தொகுதி மற்றும் பிணையங்கள் சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆளும் தரப்பை சேர்ந்தவர்கள் தனியார் ஓய்வூதிய நன்மைகள் நிதியச் சட்டலம் தொடர்பிலான கருத்துக்களை அவ்வப்போது முன்வைத்ததுடன் இந்த நன்மைகளை ஜே.வி.பி. தடுத்துவிட்டதாக குற்றஞ்சாட்டினர். இதேவேளை இந்த விவாதத்தில் கலந்து கொண்ட ஜே.வி.பி. எம்.பி. யான சுனில் ஹந்துநெத்தி தனியார் ஓய்வூதியத் திட்…

  6. வேலூர்: சென்னையிலிருந்து திருப்பூருக்குச் சென்ற கேபிஎன் ஆம்னி பேருந்து, வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே பாலத்தின் மீது விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த 23 பேர் உயிரோடு கருகி உருக்குலைந்து போய் பரிதாபமாக பலியானார்கள். பேருந்தின் டிரைவர் மட்டும் உயிருடன் தப்பினார். அதேபோல பயணிகளில் ஒருவர் மட்டும் உயிருடன் தப்பியுள்ளார். மற்ற அனைவருமே பலியாகி எலும்புக் கூடுகளாக காட்சி அளித்தது பார்க்கவே படு கோரமாக இருந்தது. உயிரிழந்த 23 பேரும் அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல் கருகிப் போய் விட்டனர். நேற்று இரவு சென்னையிலிருந்து இந்தப் பேருந்து திருப்பூருக்குக் கிளம்பியது. இரவு 11.30 மணியளவில் காஞ்சிபுரத்தை அடுத்துள்ள காவேரிப்பாக்கம் என்ற இடத்த…

  7. Started by புலவர்,

    மாற்றம்... ஏமாற்றம்! ஜெ. ஆட்சி... ஆவேச வைகோ ப.திருமாவேலன் ''கல்லறைகள் திறந்துகொண்டன மடிந்தவர்கள் வருகிறார்கள். மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு வந்துவிட்டன புகழ் மலர்களோடும் உருவிய வாளோடும் வருகிறார்கள் இதயத்தில் ஈழத்தின் விடுதலையை ஏந்தி வருகிறார்கள் ஈழ விடுதலை முரசு ஒலிக்கட்டும் ஈழம் உதயமாகட்டும் சுதந்திர ஈழக் கொடி பட்டொளி வீசிப் பறக்கட்டும் ஆம்; ஐ.நா. சபைக்கு முன் சுதந்திர தேசங்களின் கொடிகளோடு... எங்கள் தமிழ் ஈழத் தேசக் கொடியும் பறக்கட்டும்!'' -பிரஸ்ஸல்ஸ் மாநாட்டில் வைகோ பீறிட்டுக் கிளம்ப... அரங்கம் அதிர்ந்தது! இந்திய நாடாளுமன்றத்துக்குள் வைகோவை அனுப்ப இயலாமல், விருதுநகர் மக்கள் சிக்க னத்தைக் கடைப்பிடித்தாலும்... ஐரோ…

  8. [ வியாழக்கிழமை, 09 யூன் 2011, 00:40 GMT ] [ கார்வண்ணன் ] தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறிலங்கா அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பதிலளிக்க முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டது. நேற்றுப் பிற்பகல் சிறிலங்கா நாடாளுமன்றம் கூடிய போது, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்த தகவல் உறுப்பினர்களிடம் பரவியதால் பரப்பரப்பாக இருந்தது. இந்தநிலையில் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுந்து, தமிழ்நாடு சட்டசபையில் சிறிலங்கா மீது பொருளாதாரத் தடை விதிக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது தொடர்பாக அரசாங்கத்தின் கருத்து என்ன என்று வெளிவி…

  9. இலங்கை மீது மத்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியமைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பழ. நெடுமாறன் பாராட்டு தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தலைவர் போர்க் குற்றவாளி என ஐ.நா.விசாரணைக் குழு அளித்தப் பரிந்துரையை ஏற்று சர்வதேச நீதிமன்றம் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை நடவடிக்கைகளை எடுக்கவும் இந்திய அரசு முன் வரவேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்து நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை வரவேற்பதோடு அவரை மனப்பூர்வமாகப் பாராட்டுகிறேன். ஆறரைக் க…

  10. [Thursday, 2011-06-09 01:58:22] கடந்த ஜூன் 1-ம் தேதி, பெல்ஜியம் நாட்டில், ஈழத் தமிழர் இனப் படுகொலை தொடர்பான விவாதக் கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிய வைகோ, அதே சூட்டில் திருவாரூர் மாவட்டத்தில் முழங்கினார்! மன்னார்குடி பந்தலடியில் பெரியார் திராவிடர் கழகம் சார்பாக, 'ராஜபக்ஷே போர்க் குற்றவாளி - ஐ.நா அறிக்கை விளக்க பொதுக் கூட்ட�த்தில் சிறப்புரை ஆற்றிய வைகோ, "ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இருந்து ஈழத் தமிழர் இனப் பிரச்னை குறித்துப் பேச அழைப்பு வந்தபோது நான் சற்றுத் தயக்கத்துடன்தான் பெல்ஜியம் சென்று கலந்துகொண்டேன். ஈழக் கொடூரத்தை நாங்கள் சொல்லும்போது, 'மிகைப்படுத்துகிறார்கள்� என்றார்கள். இப்போது, ஐ.நா. மன்றமே, பக்கம் பக்கமாகத் தமிழர்கள் படுகொலை பற்றிச் சொல்கிறது. கொடியவன…

  11. 'பூச்சிய–பொதுமக்கள் இழப்புகள்' உடனான 'மனித நேய வலிந்த தாக்குதல்' மஹிந்தவின் கட்டுக்கதை -திசாராணி குணசேகர. தமிழில் குளோபல் தமிழ்ச்செய்திகள் : '..... பெரிய பொய்யொன்றில் எப்போதுமே குறிப்பிடத்தக்களவிலான நம்பகத்தன்மையின் வலு இருக்கும்.' ஹிட்லர் (எனது போராட்டம்) 'வரலாற்றை நான் தான் எழுதுவேன் என்பதால் வரலாறு உங்களை தவறாகத் தான் காணும் - 1930களில் மக்களவையில் நிகழ்ந்த வாதப் பிரதிவாதங்களின் போது பிரித்தானியப் பிரதமர் ஸ்ரான்சி போல்ட்வின்னுக்கு வின்ஸ்ரன் சேர்ச்சில் கூறியதாகக் கூறப்படுவது. ஸ்ரீலங்காவிலே ஈழப் போரின் வரலாறு அதில் வெற்றியாளர் ஆகிவிட்ட ராஜபக்ஷ சகோதரர்களால் எழுதப்படுகிறது. (மீள எழுதப்படுகிறது.) இந்த 'வெற்றியாளர் எழுதும் வரலாறு,' ச…

  12. இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான போரில் அரசாங்க உயர்மட்டங்களும் படை அதிகாரிகளும் குழுவாக இணைந்து கொள்வனவு மோசடிகளிலும் ஈடுபட்டனர் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இதில் கூடுதலாக மஹிந்த குடும்பமே கோலோச்சியது. ஆனால் இந்த ஆயுத மோசடிக்கு துணையாக இருந்து, முண்டு கொடுத்தவர்கள் உயர் இராணுவ அதிகாரிகளே. ஆகவே தான் உயர் அதிகாரிகளுக்கு மஹிந்த சகல துறைகளிலும் அதியுயர் பணிகளை வழங்கி வருகின்றார். . .ஆயுத மோசடி தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டுக்கள் தேர்தல் நேரங்களில் பின் உதைப்பினை ஏற்படுத்தும் என கருதியதால் மஹிந்த சம்பிரதாயத்திற்காக ஓர் விசாரணைக்குழுவையும் அமைத்திருந்தார். . இந்த வகையில் மஹிந்த அமைத்த, திருமதி ஷிராணி திலகவர்தன தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு சிறிலங்கா இராணுவம்,…

    • 0 replies
    • 373 views
  13. தமிழக அரசாங்கம் எம்மீது எந்தவிதமான தீர்மானங்களை நிறைவேற்றினாலும் மத்திய அரசாங்கத்துடனான உறவு சுமுகமானதாகவே இருக்கின்றது. இந்தியா மட்டுமல்ல, அந்நாட்டு மக்களும் கூட இலங்கை அரசாங்கத்தைப் புரிந்து வைத்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்துக் கொள்வதற்கான விவாதத்தில் பதிலளித்து பேசுகையிலேயே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், . பாராளுமன்றத்துக்குள் ஜனநாயகத்தை பாதுகாக்கும் பொறுப்பு எமக்கு இருக்கின்றது என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய சம்பவம் தொடர்பில் நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளனர். அங்கு இடம…

    • 0 replies
    • 987 views
  14. சிறையில் அடைக்கப்பட்ட முன் நாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் விசுவாசிகள் என கருதும் மூன்று பிரிகேடியர்களை கோத்தா வீட்டிற்கு அனுப்புகின்றார். இவர்களை ஓய்வு பெற்று செல்லுமாறு கோத்தா கடிதம் அனுப்பியுள்ளார். . அசோக அமுனுகம, தம்பத் பெனாண்டோ, பயல் விக்கிரமரட்ன ஆகிய பிரிகேடியர்களே இவ்வாறு வீடு செல்லவுள்ளனர். இதுவரை பொன்சேகாவின் ஆதரவாளர்களான 10 மேஜர் ஜெனெரல்கள் 05 கேணல்கள் உட்பட 19 பேர் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். . இவர்களே கோத்தா மற்றும் மஹிந்தவிற்கு எதிர்காலத்தில் குழுதோண்டும் ஆட்களாகவும் இருக்கலாம். ஈழ நாதம்

    • 0 replies
    • 448 views
  15. கணவர்மார்களை இழந்து வடக்கில் வாழும் பெண்களின் துயரங்களை நானும் உணர்கின்றேன். ஜனநாயகம் எனக் கூறி எமது கணவன்மார்களை சிறை வைத்தும், கொலை செய்தும், காணாமல் செய்யும் இந்த நாட்டின் கலாசாரத்திற்கு எதிராக அனைத்து பெண்களும் ஓரணியில் திரள வேண்டும் என்று அனோமா பொன்சேகா தெரிவித்தார். காணாமல் போனவர்களின் உறவினர்கள் நேற்று புதன் கிழமை லிப்டன் சுற்று வட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். இதில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அனோமா பொன்சேகா மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் கூறுகையில், இலங்கையில் ஜனநாயகம் எங்கே இருக் கின்றது. வடக்கிலும் சரி தெற்கிலும் சரி பல்வேறு காரணங்ளுக்காக கணவர்மார்களையும் ஏனைய உறவினர்களையும் இழந்து எத்தனை பெண்கள் நரக வேதனையை அனுபவிக்க…

  16. தற்போதைய நிலைமையில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம். அவருடன் ஒன்றிணைந்து செயற்படுவதுடன் எதிர்காலத்திலும் இணைந்து செயற்படுவோம். அவர் ஐ.நா. செயலாளர் பதவிக்கு இரண்டாம் முறை போட்டியிட போட்டியிடவுள்ளமை தொடர்பில் வாழ்த்துக்களை வெளியிடுகின்றோம் என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமாக பான் கீ.மூன் மீண்டும் போட்டியிட தயாராகிவருவதாக தெவிக்கப்படுகின்றமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ. மூனுடன் நாங்கள் ஒத்துழைப்புடன் செயற்பட்டு …

  17. புனர்வாழ்வு நிலையங்களில் முன்னாள் போராளிகளுடன் சந்திப்பு நடாத்திய வெளிநாட்டு இராணுவ அதிகாரிகள்: [Thursday, 2011-06-09 04:47:14] இந்தியா, பாக்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகள் சிலர் இன்று வட பகுதிக்கு விஜயம் செய்தனர். இதன்போது அவர்கள் வவுனியா, பூந்தோட்டத்தில் அமைந்துள்ள முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்படும் நிலையத்தினை சென்று பார்வையிட்டனர் என தெரியவருகிறது. மாலைதீவு, பங்களாதேஷ் மற்றும் ஆபிரிக்க நாடுகளின் இராணுவ அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டிருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். இவர்கள் புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வருபவர்களுடனும் கலந்துரையாடினார். புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மே…

  18. வடக்கு, கிழக்கில் யுத்தத்தில் கணவனை இழந்த தமிழ்ப் பெண்களின் எண்ணிக்கையைக் கூற 09 ஜூன் 2011 வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தின்போது கணவனை இழந்த தமிழ்ப் பெண்களின் எண்ணிக்கையைக் கூற அமைச்சர்கள் கால அவகாசம் கேட்டுள்ளனர். யுத்தம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. வெற்றிவிழாக்களும் கொண்டாடப்பட்டு ஓய்ந்துவிட்டன. இப்படியான நிலையில் வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தின்போது கணவனை இழந்த பெண்களின் எண்ணிக்கை எவ்வளவு?இவர்களுக்காக அரசு மேற்கொண்டுள்ள சேம நலத்திட்டங்கள் என்ன?தற்போது வழங்கப்படும் சேம நலத்திட்ட நிவாரணங்கள் போதுமானதா? என அம்பாந்தோட்டை மாவட்ட ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினரான சஜித் பிரேமதாஸ நேற்று நாடாளுமன்றத்தில் தனித்தனியாக இரண்டு கேள்விகளை எழுப்பினார்.…

  19. ஏதிலி முகாமில் இருக்கும் ஈழத்து மாணவிக்கு உதவிடுவீர் ! Thursday, June 9, 2011, 8:57 இந்தியா, சிறீலங்கா சிங்கள இராணுவ அடக்குமுறையை தாங்கமுடியாமல் ஈழதிருநாட்டை விட்டு தமிழகத்தில் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் மதுரை உச்சப்பட்டி ஏதிலி முகாமில் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் ஜீவன் விஷ்ணுதயா என்ற ஏழை மாணவி தனது படிப்பை மேற்கொண்டு 10 ஆம் வகுப்பில் 500 க்கு 479 நல்ல மதிப்பெண் பெற்று படித்து வந்தார் .அதனை தொடர்ந்து 12 ஆம் வகுப்பில் 952 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்த நிலையில் அவரது மேல் படிப்பு கேள்விகுறி ஆகி உள்ளது . அவரது குடும்ப சூழ்நிலையால் அவர் மேல் படிப்பை தொடர்ந்து படிப்தற்கு நிதி பற்றாக்குறையாக உள்ளது . எனவே நல்ல உள்ளகொண்ட எமது தமிழ் உறவுகள…

  20. கேணல் கஜனின் மனைவி சிறப்பு பேட்டி http://www.youtube.com/watch?v=jK5cUGnzsE8&feature=player_embedded http://www.youtube.com/watch?v=hpWOk2knKeU&feature=player_embedded

  21. வன்னியில் காணாமல் போன ஒரு இலட்சத்து 50 ஆயிரம் தமிழர்கள் எங்கே உள்ளனர்? உயிருடனா? வதைக் கூடங்களிலா? அல்லது சிறைச்சாலைகளிலா? என்பதனை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும். போலிக் காரணங்களைக் கூறி காணாமல் போனவர்களின் உறவுகளையும் உலகத்தையும் ஏமாற்றியது போதும் என்று காணாமல் போனோரை தேடியறியும் குழு தெவித்துள்ளது. அவசரகாலச் சட்டத்தையும் பயங்கரவாத தடுப்புசட்டத்தையும் உடனடியாக நீக்கி சிறை வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும். இந்த நாட்டில் காணாமல் போன ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், தமிழர்கள் அனைவருக்கும் தற்போதைய அரசே பொறுப்புக் கூறவேண்டும் என்றும் அக் குழு சுட்டிக் காட்டியுள்ளது. காணாமல் போனவர்களை தேடித் தர வலியுறுத்தி நேற்று புதன்கிழமை கா…

  22. கடத்தப்பட்டு காணாமல் போன சிங்களப் புலி ஒருவர் யாழ் நீதிமன்றில் விடுதலை விடுதலைப் புலிகளிடம் வன்னியில் பயிற்சி பெற்றதாக கூறி கடத்தப்பட்டு காணாமல் போன சிங்களப் புலிகளில் ஒருவர் நேற்று யாழ் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்தச் சிங்களப் புலிகளில் ஒருவர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் மிகுதி மூவரும் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அண்மையில் தமிழ் அரசியல் கைதிகளுடன் இணைந்து சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்திருந்தனர். எனினும் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. இந்த நிலையில் பிரியந்த நிஹால் குணரட்ன எனும் பதுளையைச் சேர்ந்த சிங்களப் புலி ஒருவர் யாழ்ப்பாண மேல் நீதிமன்றுக்கு வி…

    • 0 replies
    • 597 views
  23. இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதாவினால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்பதாக கூட்டடைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். இலங்கையில் உள்ள தமிழ் மக்களாகிய நாம் எமது சுயநிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும் என்பதற்காக ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக போராடி வருகிறோம் இலங்கை அரசு எமக்கு பல தடவைகள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை மாறாக எமது உரிமைகளை நசுக்கிக்கொண்டே வருகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு வன்னியில் இடம்பெற்ற உக்கிரமான யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன் பல இலட்சம் பேர் இடம்பெயர்ந்தார்கள் அவர்களின் வாழ்விடங்கள் தரைமட்டமாகி சொத்…

    • 4 replies
    • 774 views
  24. காணாமல் போனவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்களை கண்டுபிடித்துத் தருமாறு கோரியும் சிறைச்சாலை களிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரியும் கலந்துரையாடலுக்கான சுதந்திரம் அமைப்பு கொழும்பில் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நடத்தியது. இன்று புதன்கிழமை நண்பகல் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் நடைபெற்ற இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் காணாமல் போனவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்கள் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கலந்துகொண்டு தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட காணாமல்போனோரை தேடியறியும் குழுவின் இயக்குனர் சுந்தரம் மகேந்திரன் தெரிவிக்கையில், 'யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. ஆனாலும் கடத்தல் மற்றும் …

  25. பொதுமக்களின் ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதி என்பவற்றை பயன்படுத்தி அரசு கடனினை செலுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் பொதுமக்கள் கஷ்டப்பட்டு உழைக்கு பணத்தினை அரசு வெட்கமின்றி திருடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாளை திடீரென யாராவது அனைத்து ஊழியர் சேமலாப நிதிகளையும், நம்பிக்கை நிதிகளையும் திருப்பி தருமாறு கேட்டால், அரசினால் திருப்பிக்கொடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதுவரை செய்தவற்றை சட்டபூர்வமாக்கும் முயற்சியே தனியார்துறை ஓய்வூதியத் திட்டம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://akkinikkunchu.com/new/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.